.
“தாயிற்
சிறந்த கோயில் இல்லை” இது மூத்தோர் வாக்கு,
தாய் என்பவள் பத்து மாதங்கள் குழந்தை தன் உள்ளே வளர்த்து இந்த உலகுக்கு கொணர்பவள்.
குழந்தை ஆகாரம் அருந்தும் வரை தனது உதிரத்தையே ஆகாரமாக அளித்து குழந்தையை
வழர்க்கிறாள். அதன் பிறகும் அந்த குழந்தை ஆழாகும் வரை கண்ணின் மணியென குழந்தையை
வளர்க்கிறாள். எத்தனை எத்தனையோ தியாகங்கள். தாய் என்பவள் கொடுக்கும் அன்பு ஒப்பு
உயர்வற்றது. தன் உதிரமும் தசையுமாக பெற்றெடுத்த குழந்தை என்பதா இதற்கு
காரணமாகிறது. இந்த தாய்மை என்ற குணம் பெண்ணுக்கு இயற்கையாகவே அமைந்ததா?
ஏன்
மிருகங்கள் கூட தாய்மை அடையும் போது தான் பெற்ற செல்வங்களை கண்ணின் மணியென
காப்பாற்றுவதை நாம் காண்கிறோம். வீட்டில் வளரும் பூனை குட்டி போட்டதும் குட்டிகளை
எத்தனை பத்திரமாக காலி இடங்களை மாற்றி பாதுகாப்பாக வழர்ப்பதை பார்த்தால் அட நாம்
மட்டுமா பெற்ற பிள்ளையில் பாசம் பொழிகிறோம். இந்த நான்கு கால் மிருகம் பாவம்
அதிலும் வெகு சிறிய மிருகம் இதுவும் பெற்றெடுத்த குட்டியை வளர்க்க எத்தனை முயற்சி
எடுக்கிறது. இதை பார்க்கும் போது தான் தாய்மை என்பது இயற்கையாக ஏற்படும் குணமோ என
எண்ணத் தோன்றுகிறது.
வீட்டில்
வளரும் பசு பாலூட்டி தன் கன்றை வழர்க்கிறது. பால் பருவம் கடந்ததும் வீட்டின்
சொந்தக்காரர் கன்றை எங்கோ விற்று விடுகிறார்கள். ஆனால் கன்றை பிரிந்த பசு துயர்
தாளாது கண்ணீர் வடிப்பதை காண்கிறோம். அன்றெல்லாம் அது சரியாக உணவருந்தாது கண்ணீர்
வடித்தபடியே இருக்கும். இதை பார்க்கும்போது “உன்கண்ணில் நீர் வளிந்தால் என்
நெஞ்சில் உதிரம் கொட்டுதெடி” என
பாரதி பாடியது மனிதனுக்கு மட்டுமா? இந்த பசுவிற்கும் பேசும் திறன் இருந்தால்
எத்தனை ஒப்பாரியை பாடுமோ என எண்ணத் தோன்றும்.
யானைகளோ
மிருகங்களிலேயே கூர்மையான அறிவை உடையவை. தனது கன்றுகளை 12 வருடங்கள் காப்பாற்றி
வழர்க்கின்றன. இவற்றின் தாய் பாசத்தையும் இன உணர்வையும் பின்வரும் சம்பவம் மூலம்
அறியலாம். இது வடஇந்தியாவில் நடந்தது. ஒரு சமையம் காட்டுப்பாதையால் போகும் ரெயில்
வண்டி தண்டவாளத்தில் போய் கொண்டிருந்த யானை கன்றை அடித்து கொன்று விட்டது. அதன்பின்
குறிப்பிட்ட அந்த நேரத்தில் போகும் ரெயில்வண்டி கூட்டமாக வரும் யானைகள்
தண்டவாளத்தில் நின்று மறித்து தாக்க முற்பட்டனவாம். மற்றநேரத்தில் போகும் ரெயிலை
எதுவும் தாக்கப்படவில்லை. எத்தனையோ வெடிகள் வைத்தும் இந்த யானை கூட்டத்தை விரட்ட
முடியவில்லை. பல நாட்கள் இவ்வாறு நடக்க செய்வதறியாது இந்திய ரெயில் நிர்வாகம்
இந்திய படையின் உதவியை நாடியது. பல நாட்கள் போராட்டத்தின் பின்பே அந்த யானை
கூட்டத்தை விரட்ட முடிந்தது. யானை கன்று ஒன்று கொல்லப்பட்டதால் யானைகள் நடத்திய
போராட்டமே இது.
மிருகங்களிடம்
இருக்கும் தாய்மை உணர்வை பார்க்கும்போது தாய்மை என்பது மனித குணம் மட்டுமல்ல
எனவும் எண்ணத் தோன்றுகிறது.
தாய்மையின்
உன்னத பாசத்தை மனிதனிடம் மட்டுமல்ல மிருகங்களிடமும் கண்டோம். அதே சமயம் எமது
நாகரீகம் அடைந்த மனித சமுதாயத்திலே குப்பை தொட்டியில் இருந்து குழந்தைகளை
கண்டெடுக்கப்படுகின்றன. கோவில் வாசலிலே யாராவது வழர்க்கட்டுமே என விட்டுப் போன
குழந்தைகள் அனாதை இல்ல வாசலிலே குழந்தை இப்படி எத்தனை எத்தனை. ஏன் இந்த குழந்தையை
பெற்றவள் தாயில்லையா? அவளுக்கு பாசம் கிடையாதா மிருகங்களிலும் மோசமானவளா அந்த
தாய்? இல்லை அவளை அந்த நிலைக்கு ஆழாக்கியது இந்த நாகரீக மனித சமுதாயமே. ஒருவன்
திருமண பந்தத்திற்கு உட்பட்டு கருதரிப்பதோ, குழந்தையை பெற்றுக் கொள்வதோ சமுதாயம்
ஏற்றுக்கொள்ளாத ஒன்றே. அவ்வாறு ஒருவள் கருத்தரித்தால் அவளை சமுதாயம்
ஏளனப்படுத்தும். அவளை மட்டுமா? அவளது குடும்பமே அந்த வசையை இகழ்ச்சியை எதிர்கொள்ள
வேண்டும். இதற்கும் அப்பால் அந்த குழந்தை பிறந்து வளரும் போது வாழ்வு பூராவும்
அவள் அந்த பழியை தாங்கவேண்டும். இத்தனைக்கும் முகம் காட்ட பயந்தே குழந்தைகள் அறியா
பருவத்திலே அனாதரவாக விடப்படுகிறார்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட கதையல்ல எமது
இதிகாசங்களே இதற்கு எடுத்துக்காட்டு. பாண்டவரின் தாயாக பாண்டுவின் பட்டத்து
மகிஷியாக வாழ்ந்த குந்தி தேவியரோ திருமணத்தின் முன் சூரியனுடன் கொண்ட உறவால்
கருத்தரிக்கிறாள். பெற்ற பிள்ளையான கர்ணன் அனாதாரவாக ஆற்றிலே மிதக்க விடுகிறாள்.
தேர்பாகன் மகனாக வாழ்கிறான். அதேசமயம் மாவீரனானவன் தந்தை தாய் யார் என தெரியாது.
சமூகத்தின் இகழ்ச்சியை தாங்கி வாழ்கிறான். பின்பு நடந்தது நாம் அறிந்ததே. அரச
பரம்பரையில் வந்த குந்திக்கே இக்கதியானால் சாதாரண மனிதர் எம்மாத்திரம். அத்தனையும்
சமூகத்தின் இழி சொல்லை தாங்கமுடியாத மனித மனம் அறிந்து செய்த கொடுமை இவை.
காளிதாசனின்
நாடகங்களிலே பிரபலமானது சாகுந்தலம். சாகுந்தலை என்ற காவிய நாயகியோ குழந்தை
பருவத்திலே அன்னப்பட்சியால் பராமரிக்கப்படுகிறாள். கண்ணுவ முனிவர் அவளை
கண்டெடுத்து தனது செல்ல மகளாக வழர்க்கிறார். அன்னம் பட்சி வடமொழியிலே சாகுந்தலம்
எனப்படும். அன்னப்பட்சியால் வழர்க்கப்பட்ட பெண் ஆதலால், சாகுந்தலை எனப் பெயரிட்டு
வழர்க்கப்பட்டாள். என்ன அன்னப்பட்டி வழர்ப்பது வெறும் கற்பனை என எண்ணத்
தோன்றுகிறதா? மனித குழந்தையை பட்சிகள் மிருகங்கள் பராமரிப்பதா? அழகான கற்பனை என
எண்ணுகிறோம். ஆனால் சாகுந்தலை அன்னப்பட்சி வழர்ந்ததோ இல்லையோ யான் அறியேன். ஆனால்
மனித ஜென்மங்களால் அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளை மிருகங்கள் பராமரித்த நிஜ கதையை
யான் அறிவேன். அவற்றை தான் உங்களுடன் பகிரப் போகிறேன். அண்மையில் இவற்றை
காட்டினார்கள்.
பழய
ரஷ்ஷிய (U.S.S.R.)
நாட்டில் இருந்து பிரிந்த நாடே யுக்ரேன். இங்கு நடந்த சம்பவமே இது. குடிபோதைக்கு
அடிமையாகிறார்கள். பெற்றோர் இவர்கள் மகள் நட்டாலியாவை பெற்றோர் கவனியாது விட்டு
விடுகிறார்கள் இவளோ சிறு குழந்தை. இவள் நாய்கள் அணைப்பிலே ஆதரவிலே நாய்களுடன்
வளர்கிறாள். தனக்கு விவரம் தெரியும் வரை தான் நாய்களுடன் படுத்து அவற்றின் அணைப்பிலும்
ஆதரவான அதன் சூட்டிலும் வழர்ந்தாளாம். அந்த நாய்கள் தன்னை அன்பாக நக்கி விட்டதாக
கூறுகிறாள். இவை தனக்கு கிடைத்த ஆதரவு என்கிறார். இந்த 16 வயது பெண். இவள் கைகளை
பாவிக்கத் தெரியாது. நாய் மாதிரி குனிந்து வாயால் உணவு அருந்தினாள். அவள்
வளர்ந்ததெல்லாம் நாயுடனேயே. 6 வயதாக இருக்கும்போது சமூக சேவையாளரால்
கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் பராமரிப்பில் மனிய பழக்க வளக்கங்களை படிப்படியாக
கற்றாள். அதுவரை அவளுக்கு பேசவும் தெரியாதே வளர்ந்தாள். நாய்க்கு இருக்கும்
அன்புகூட இல்லாத பெற்றோருக்கு பிள்ளையாக பிறந்ததால் நேர்ந்த கொடுமை இது. இப்போளுது
அவள் பாடசாலையிலே படிக்கிறாள் அவளே நிகழ்ச்சியில் இவற்றை கூறினாள். அவளை உற்று
நோக்கும்போது அவள் மற்ற சிறுவரில் இருந்து மாறுபட்டவளாக எமக்கு தெரிகிறாள். 6 வளது
வரை மனிதராய் வழர்க்கப்படாமல் நாயிடம் வளர்ந்ததால், குழந்தை இயற்கையாக மனித சமவாசத்தால்
அறிய வேண்டியவையை, அதன் மூலம் பெறும் முளுமையான வளர்ச்சி, அத்தனையையும் அவள்
பெறாமையே காரணமாகும். ஒரு குழந்தையின் மூளை 5 வயதுக்கு முன் மிக துரித
வளர்ச்சியடைகிறது. மனித மூளை அதன்பின் அத்தனை வேகமாக வளர்வதில்லை. இதையே
நட்டாலியாவில் காணமுடிகிறது.
தென்ஆப்பிரிக்க
காட்டில் ஒரு சிறுவன் குரங்கு கூட்டத்துடன் காணப்பட்டான். அவனுக்கு அப்பொளுது வயது
8 இருக்கும். அவனை கண்ட விக்டர் அவனை தன் வீட்டிற்கு அழைத்து போகிறார். அதுவரை
அவனுக்கு பேச தெரியாது. குரங்குகளில் ஒன்றாகவே வளர்ந்தவன். விக்டரின் மனைவி மேரி
அந்த பையனை கண்டு திடுக்குற்றாள். எந்தவித மனி சுபாவமும் அற்ற அவனை எவ்வாறு
வீட்டிலே வைத்திருப்பது. இதை ஏன் இங்கு கொண்டு வந்தாய் என கணவனிடம் வாதிட்டாள்.
இருந்தும் ஒரு மனித பையனை அனாதியாக விட அவள் மனம் இடம் தரவில்லை. காலப்பேரக்கிலே
அவன் மொழியை கற்று மனிதராக வாளப்பழகுகிறான். தொலைகாட்சியில் காட்டியபோது அவன் 16
வயது இளைஞன். இவனுக்கு பேச்சு சரியாக வரவில்லை. சிறிது திக்கி பேச முடிந்தது.
ஆனால் Citter
வாசிக்க
கற்றுவிட்டான். வயித்திய பரிசோதனையில் கண்டறிந்தது இவனது தலையில் பலத்த
அடிபட்டதால் இவனது பேச்சு பாதிக்கப்பட்டுள்ளது என்பதே. படிப்பும் பின்தங்கியே
காணப்படுகிறான்.
இவன்
குரங்குகளே தன்னை வழர்ந்தாக கூறுகிறான். இவன் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு
ஆய்வாளர்கள் இவனை அழைத்துச் செல்கிறார்கள் அந்த இடத்தை கண்டதும் உணர்ச்சி
வசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் கணிப்பில் இவன் குரங்குகளால் வளர்க்கப்படவில்லை.
ஆனால் குரங்கு கூட்டம் இவனை தம்முடன் இணைத்துக் கொண்டன. இவனை அவை விரட்டி
அடிக்கவில்லை. அவை தின்ற மீதி காய்கனிகளை இவன் உண்டு வாழ்ந்திருக்கலாம் என
கணிக்கின்றனர். இவர்கள் ஆய்வு எப்படியே குரங்கு கூட்டத்துடன் வாழாவிட்டால் இவன்
என்றோ மடிந்திருப்பான். அவையே அவனுக்கு ஆதரவு வழங்கிய தெய்வங்கள். மேலும் இவன்
மூன்று வயது பையனாக இருந்தபோது மாற்றம் தாயால் வீட்டை விட்டு
விரட்டப்பட்டிருக்கிறார். காட்டிற்கு ஓடிய குழந்தை குரங்கு கூட்டத்துடன் வழர்ந்ததே
உண்மை. மேலும் வீட்டில் மாற்றத்தால் கொபிக்கவேண்டிய ஆதரவை அந்த குரங்குகள் அல்லவா
அவனுக்கு கொடுத்திருக்கின்றன.
1920களில்
இந்தியாவில் வாழ்ந்த கத்தோலிக்க பாதிரியார் இரட்டை குழந்தைகளான பெண் குழந்தைகள்
ஓநாயால் வளர்க்கப்பட்டன. அக்குழந்தைகளை பாதிரியார் மீட்டு எடுத்து வந்து பவானி
கமலா எனப் பெயரிட்டு வழந்தார். அக் குழந்தைகளின் புகைபடங்களும் உண்டு. ஆனால்
ஆய்வாளர்களோ அவ்வாறு குழந்தைகளை ஓநாய்கள் வளர்க்க முடியாது. பாதிரியாருக்கு
இந்தியாவிலே நாதி அற்ற குழந்தைகளை வளர்க்க பணம் தேவையாக இருந்திருக்கும், அதற்காக
இப்படி ஒரு கதையை சோடித்து படங்களை மேற்கு நாட்டு பத்திரிகையிலே பிரசுரித்தமையால்,
அவருக்கு நாதி அற்ற குழந்தைகளை வழர்க்க பணம் கிடைத்திருக்கும் என ஆய்வாளர்கள்
விமர்சித்தார்கள்.
ஆனார்
இந்தியாவிலே குழந்தை ஓநாயால் வளர்க்கப்பட்டதாகவும் அக் குழந்தை கிராமவாசிகள் கண்டு
எடுத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வாசித்துள்ளார். என் வாழ்நாளிலே இருமுறை
இத்தகைய செய்தியை வாசித்துள்ளேன். ஆய்வாளர் ஆய்வுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இவை
இருக்கலாம். ஆனால் இந்திய பெருங்கூடத்தில் இவை நடைபெற்றவையே.
வடஇந்தியாவில்
இருந்து வந்த ஒரு ஆடற்குழுவால் இது போன்ற ஒரு கதையை மையமாக கொண்டு ஒரு நடன நாடகம்
மேடை ஏற்றப்பட்டது. நாட்டிய நாடக படைப்பு இதுதான். ஓநாயால் வழர்க்கப்பட்ட ஒரு
இளைஞனை மையமாக கொண்டது. ஓநாய்களால் வளர்க்கப்பட்ட குழந்தை இளைஞனாக வளர்ந்துள்ளான்.
அவனோ மனித சுபாவம் எதையும் அறியாதவன். ஓநாய் போன்றே நான்கு காலங்களில் நின்று
தண்ணீர் அருந்தினால் உணவருந்தினான். அவன் நடவடிக்கை அத்தனையும் ஓநாய் போன்றே
இருந்தது.
No comments:
Post a Comment