தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்

.


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்

வெளுப்பது உனது விடியலில்லை

முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
– அப்துல் ரகுமான் (தொகுப்பு – சுட்டுவிரல)
Nantri Nathiyalai 

சிட்னி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள்


இலங்கைச் செய்திகள்


வாக்குறுதிகளை நிறைவேற்ற  கனடா அழுத்தம் கொடுக்கும் : பிரதமர்  ஜஸ்டின்

43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை

தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை

 கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

ஊதியம் இன்றி அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள் : அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண பல்­கலை மோதல் சம்­பவம்; 7 மாணவர்களுக்கு அழைப்பாணை

 பொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் நவீன ஜப்பான் தொழில்நுட்பத்தை  அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்

பாதயாத்திரை  ; சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த தலைமையிலான எதிரணியினர்

ஸ்டீபன் டையோன் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கிறார்

“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்”

கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்


சிட்னி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் ஆடிப்பூரம் 07/08/2016




சைவ மகா சபை (மேற்கு அவுஸ்திரேலியா ) பேர்த் பாலமுருகன் கோவில்




அவுஸ்திரேலியா மருத்துவ உதவி நிதியம் AMAF Health Expo 07/08/2016



உலகச் செய்திகள்


இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஜப்பானில் இடம்பெற்ற பாரிய கொலை சம்பவம் 

பங்களாதேஷில் பொலிஸார் தாக்குதல் ; 9 இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் பலி, ஒருவர் கைது

சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம் ; பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் சுட்டுக் கொலை!

லிபியக் கடற்கரையில் கரையொதுங்கிய 87 சடலங்கள்

நேபாளத்தில் 54 பேர் பலி

சிரியா இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது









சைவ மகா சபை (மேற்கு அவுஸ்திரேலியா ) பேர்த் பாலமுருகன் கோவில் Canteen




தமிழ் சினிமா


கபாலி

கபாலி (வீடியோ இணைப்பு) - Cineulagam
வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது.
அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது...இதோ...

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல்.
அவர் சிறையிலிருந்து வந்த உடனே ஒரு சண்டைக்காட்சியுடன் டீசரில் வரும் கபாலிடா காட்சி வருகிறது. சிறை சென்ற பின்னால் அவர் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது, அங்குள்ள மக்கள் என்ன சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்து அதை சரி செய்ய முயலுகிறார். இடைவேளைக்கு பின்னால் படத்தின் கதைப்போக்கு மாறுகிறது.
க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா என்ற ஒரு சஸ்பென்ஸோடு முடிகிறது.

நடிகர், நடிகைகளின் நடிப்பு

படத்தின் மொத்த பலமே சூப்பர்ஸ்டார் தான். வழக்கமான மாஸ் சீன்கள் மட்டுமல்லாது ரஜினியின் இன்னொரு பக்கமான செண்டிமெண்ட் காட்சிகளிலும் பின்னி எடுத்துள்ளார்.
பழைய கெட்டப்பில் பார்க்கையில் பில்லா பட ரஜினியை நினைவுபடுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் இன்னும் தன்னுடைய அதே ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம் தான் ஞாபகம் வருகிறது., பள்ளி நிகழ்ச்சியில் தான் எப்படி டானாக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும், தனது மகளிடம் பேசும் காட்சியிலும் அசத்துகிறார்.
ஜான் விஜய் ரஜினியின் நண்பராக வருகிறார். உடன் வரும் அட்டக்கத்தி தினேஷும் தன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். தன்ஷிகா பில்லா நயன்தாரா மாதிரியான ஸ்டைலான பெண்ணாக வருகிறார். சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார். ரித்விகாவின் கதாபாத்திரம் பாராட்டும்படியாக உள்ளது. சூப்பர்ஸ்டாரை எதிர்த்து பேசும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார். ராதிகா ஆப்தே தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணாகவும், சூப்பர்ஸ்டாரின் மனைவியாகவும் வருகிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ரஜினியுடனான காதல்காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.
வில்லனாக கிஷோர், லிங்கேஷ் ஆகியோர் வந்தாலும் முக்கிய வில்லனான வின்ஸ்டன் சா அசத்துகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

பாடல்கள் ஏற்கனவே ஹிட் தான். பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.
ரஞ்சித் சூப்பர்ஸ்டாரை தன்னுடைய கதைக்கேற்ப முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் தன்னுடைய வழக்கமான பல சிம்பாளிக் காட்சிகளை வைத்துள்ளார். வசனங்களில் அசத்தியுள்ளார். ரஜினியின் படமாக மட்டுமல்லாமல் ரஞ்சித் படமாகவும் மாற்றியிருக்கிறார்.
படத்தின் பல காட்சிகள் செட் ஒர்க் தான் என்றாலும் தெரியாத அளவுக்கு மலேசிய, தாய்லாந்து தெருக்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலைஇயக்குனர் ராமலிங்கம். எதார்த்தமான ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளனர் இரட்டையர்களான அன்பறிவ். இரண்டரை மணி நேரத்துக்கேற்றபடி விறுவிறுப்பாக கதையை கட் செய்துள்ளார் பிரவீண் கே.எல்

கிளாப்ஸ்

ரசிகர்கள் விரும்பும் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், நாசர் காட்சிகள், ரஜினி யாரை நம்புவது என்ற சஸ்பென்ஸ் காட்சிகள்
ரசிக்க வைக்கும் படத்தின் வசனம், சூப்பர்ஸ்டார் மட்டுமல்லாமல் மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பு
மிரட்டும் பின்னணி இசை

பல்ப்ஸ்

ஒரு கேங்ஸ்டர் படம் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சண்டை குறைவு தான்.
மொத்தத்தில் கபாலி முந்தைய படங்களின் தோல்வியை உடைத்தெறிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

ரேட்டிங் - 3.5/5  நன்றி   cineulagam