திலீபன் – மொழிபெயர்ப்புக் கவிதை - ரிஷான் ஷெரிப்

.

புன்னகைக்கும் இதயம் 
கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
அழத் தோன்றும் முகத் தோற்றம் 
நேசத்தை யாசிக்கும்
யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து 
இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! 
திலீபன் ! காற்றில் உதித்தவன் !
நெஞ்சங்களில் 
அநேகமானவற்றை விட்டுச் சென்ற
முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
ஒரு ‘கமா’வாக மறைந்த
விலைமதிப்பற்ற யௌவனத்தை 
கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
நேர்மையான புன்னகையும்
தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்
அன்றிலிருந்து இன்று வரை 
கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
கைகளிலில்லா ஐவிரல்களையும் 
தேடியலையும் தந்தையர்
ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் 
புதல்வர்களின் சடலங்களின் மீது 
ஓலமிட்டழுபவர்கள் 
எல்லா இடங்களிலிலும் 
இருக்கிறார்கள் திலீபன்

இனிய தமிழ் மாலை 2014 - 05.10.14

.

சுக்குபக்கு சுக்குபக்கு கூ......! - கானா பிரபா

.


சின்ன வயசில இருக்கக்கூடிய சில பேராசைகளில ஒண்டு இந்த ரயில் பயணம். சீனிப்புளியடிப் பள்ளிகூடத்தில பாலர் வகுப்பு படிக்கும் காலங்களில் எங்களுக்குப் பன்னண்டு மணிகெல்லாம் பள்ளிகூடம் முடிஞ்சுடும், ஆனால் ரீச்சரா இருந்த அம்மா எங்களை வீட்டுக்குத்திரும்பிக் கூட்டிக்கொண்டு போக ரண்டு மூண்டு மணி ஆகிவிடும். இந்த இடைப்பட்ட வேளைகளில் என்னைப் போலவே காத்திருக்கும் அருமைமணி ரீச்சரின் மகன் ரூபனுக்கும் விளையாட்டுக் களமாக இருப்பது பாலர் வகுப்பு அறைகள் தான். சின்னதாக இருக்கும் மரக்கதிரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி முன் கதிரையை மட்டும் பிறப்பக்கமாகத்திருப்பி அடுக்கிவிட்டு முன்கதிரையில் நான் உட்கார்ந்து றெயின் சாரதியாகப் பாவனை செய்வேன். ரயில் பெட்டிகளில் கடப்பது போலப் பாவனை செய்து பின்னால் இருக்கும் கடைசிக்கதிரையில் இருந்து முதல் கதிரை வரை ரூபன் தாவித்தாவி வருவான். பின்னர் என்முறை. ரீச்சர்மாரின் பிள்ளைகள் என்பதால் இப்படியான எங்கள் அடாவடித்தனங்களை மற்ற ரீச்சர்மார் கண்டு கொள்வதில்லை.

ஆரம்பகாலக் கல்வியின் பாட இடைவேளை நேரத்திலும் சிலசமயம் ரயில் விளையாட்டு இருக்கும். அது சற்று வித்தியாசமானது. ஒருவரின் தோளில் மற்றவர் தன் இருகைகளையும் நீட்டிப் பிடித்து நீண்ட வரிசையாகத் தயார்படுத்திக் கொண்டு
" சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி கடுகதி வண்டி போகுது பார், சுக்குபக்கு கூ" என்று ஒருசேரப் பாடிக்கொண்டே பள்ளிக்கூட மைதானத்தில் வட்டமடிப்போம்.
இரண்டாம் வகுப்புப் புத்தகம் என்று நினைக்கிறேன். நமது நாட்டுப் பொதுப் பாவனைச் சொத்துக்களை நமது உடமை போல நினைக்கவேண்டும் என்ற கருப்பொருளில் ஒரு ரயில்வண்டிச் சம்பாஷணை இருந்தது. அதில் பெரியவர் ஒருவர் பொதுப் பொருட்களை நம்கண் போற் பாதுகாப்பது நம் உரிமையும் கடமையுமாகும் என்று சொல்லவும் அறிவுரைக்கேட்ட அந்தக் கதையில் வரும் சிறுவன் யன்னல் பக்கமாகக் காதைவைக்கவும்,அச்சிறுவனுக்கு அந்த ரயில் எழுப்பும் ஓசை "உரிமை, கடமை" என்று கேட்பதாகவும் கதை முடிகின்றது. அந்த நேரத்தில் எனக்கு அந்தக் கதை கூறிய அறிவுரையை விட ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்ற அவாவைத் தான் அதிகம் கிளப்பியிருந்தது. 

நாகை முகுந்தனின் இந்து சமய சொற்பொழிவு

இந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் முதல் முறையாக பதவியிழந்த முதல்வர்


கோப்புப் படம்.

.
இந்தியாவில் மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தின்கீழ் பதவியிழக்கும் முதல் முதல்வராகவும், முதல் பெண்மணியாகவும் ஜெயலலிதா ஆகியிருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை அவர் இவ்விதியின் கீழ் பதவியிழக்கும் இரண்டாவது அரசியல்வாதியாவார்.
கடந்த 1991-96 ஆட்சிக் காலத்தில் ஊழல் முறைகேடு களில் ஈடுபட்டதாகக் கூறி ஜெயலலிதா மீது, அடுத்து வந்த திமுக ஆட்சிக்காலத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் மிக முக்கியமான வழக் காக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு கருதப்பட்டது. இந்த வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தொடர் புடைய அரசியல்வாதிகள், அந்த வழக்குகளில் குற்றவாளி என்பது நிரூபணமானால், உடனடி யாக பதவியிழப்பார்கள் என்று கடந்த ஆண்டு ஜூலையில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

விஜய் பிரகாஸ் MUSICAL NIGHT 05. 10 2014

.


திரும்பிப்பார்க்கின்றேன் (கடந்த வாரத்தின் தொடர்ச்சி) - முருகபூபதி

.
பல்வேறு   சவால்களுக்கு   மத்தியில்  குத்துவிளக்கு  திரைப்படம்   வெளியிட்ட    கட்டிடக்கலைஞர்  
வி.எஸ். துரைராஜா
தென்னிந்திய  தமிழ்  சினிமாவின்  இராட்ச  ஒளிவெள்ளத்தால்   மங்கிப்போன  ஈழத்தின்   அகல்விளக்குகள்.

                                        
 குத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.     டட்லி சேனா  நாயக்கா    தலைமையிலான    ஐக்கிய தேசியக்கட்சி    படுதோல்வியடைந்து    ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க)  -  என். எம். பெரேரா   (சமசமாஜி) -   பீட்டர்    கெனமன்    (கம்யூனிஸ்ட்) கூட்டணியில்    அரசு    அமைந்த   பின்னர்   பல   முற்போக்கான திட்டங்கள்    நடைமுறைக்கு    வந்தன.
உள்நாட்டு     உற்பத்திக்கு   மிகவும்    முக்கியத்துவம்   தரப்பட்டது. வடக்கில்    வெங்காயம் - மிளகாய்   பயிர்செய்கையாளர்களின் வாழ்வில்    வசந்தம்   வீசியது.
உள்நாட்டு    ஆடைத்தொழிலுக்கு  ஊக்கமளிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து    தரமற்ற    வணிக   இதழ்கள்   மீதான  கட்டுப்பாடு வந்தது.
உள்நாட்டுத்திரைப்படங்களை   ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம்    தோன்றியத




திருமுறை முற்றோதல் 05.10.2014

.

உலகச் செய்திகள்


வெள்ளை மாளிகையில் 24 மணி நேரத்தில் இரு அத்துமீறல் சம்பவங்களால் பரபரப்பு

156 நாடுகளில் காலநிலை தொடர்பில் ஊர்வலங்கள் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் யாழிற்கான புகையிரத சேவை பரீட்சார்த்தம்

கையெடுத்துக் கும்பிட்டும் கடித்து குதறியது புலி: இளைஞர் பரிதாபமாக பலி

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: ஒருவர் பலி, அமைச்சர்களின் பிடிவாதம், சுப்பிரமணியன் சுவாமியின் கிண்டல்,நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் சமூக வலைத்தளங்களில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும், மேலும் விறுவிறுப்பான தகவல்கள்

வெள்ளை மாளிகையில் 24 மணி நேரத்தில் இரு அத்துமீறல் சம்பவங்களால் பரபரப்பு

22/09/2014 24 மணி நேரத்­துக்குள் அமெ­ரிக்க வெள்ளை மாளி­கைக்குள் இருவர் அத்துமீறி பிர­வே­சிக்க முயற்­சித்­ததையடுத்து அதன் பாது­காப்பு தொடர்பில் பரந்­த­ள­வான மதிப்­பீட்டை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க பாது­காப்பு சேவை தெரி­விக்­கின்­றது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை கத்­தி­யுடன் நப­ரொ­ருவர் வெள்ளை மாளிகைக் கட்­ட­டத்­துக்குள் நுழைந்­தமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த ஓமர் கொன்­ஸாலெஸ் என்ற அந்த நபர் வெள்ளை மாளிகை வேலியை தாண்டிக் குதித்து கத்­தி­யுடன் மாளி­கையின் புல்­வெ­ளியை நோக்கி நடப்பது அங்­கி­ருந்த 'சி.சி.ரி.வி' கண்­கா­ணிப்பு கரு­வியில் பதி­வா­கி­யி­ருந்­தது.


முப்பது நாளும் பௌர்ணமி 06.10.2014

.

சங்க இலக்கியக் காட்சிகள் 25- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


நோயும் அவளே! நோய்க்கு மருந்தும் அவளே!!


புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுது. வீடுகளிலே உள்ள மாட்டுத் தொழுவங்களிலே அடைத்துவைக்கப்பட்டுள்ள எருமை மாடுகளை ஆயர்கள் ஒவ்வொன்றாக வெளியே சாய்த்துக்கொண்டு வந்து மரங்களிலே கட்டுகிறார்கள். பின்னர் அவற்றின் கன்றுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எருமைக் கன்றுகள் எம்பிக் குதித்து ஓடிச்சென்று தத்தமது தாய் எருமைகளின் முலைகளை மோதி மோதிப் பால் குடிக்கின்றன. தாய் எருமைகள் தங்கள் தலைகளை வளைத்துத் பால் குடிக்கும் கன்றுகளை நாவால் நக்கி அன்பு காட்டுகின்றன. கன்றுகளின் கடைவாய்களிலிருந்த பால் வடிகின்றது.

சில நிமிடங்களின் பின்னர் ஆயர்கள் கன்றுகளை இழுத்து மரங்களிலே கட்டிவிட்டு எருமைகளில் பால் கறக்கின்றார்கள். பால் கறந்து முடிந்ததும் எருமைகளையும் கன்றுகளையும் அவிழ்த்துவிட்டு, மேய்ச்சல் தரைகளுக்கு அவற்றைச் சாய்த்துச் செல்கின்றார்கள். மாடு மேய்க்கும் சிறுவர்கள் எருமைகளின் மேல் ஏறியமர்ந்து அவற்றை ஓட்டிச் செல்கின்றார்கள். மெல்லிய இருளும் மெல்லமெல்ல நீங்கிப் பொழுது தெளிவாகப் புலர்ந்து வருகிறது. அந்த அதிகாலை நேரத்திலே தலைவன் தலைவியைத் தேடி வருகிறான். தழை ஆடைகளையும், மாலைகளையும் அவளுக்கு அன்புப் பரிசாகத் தருகிறான்.

ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ் - வீயெஸ்வி

.
ஓவியம்: ம.செ

ரோஜா மாலைகளும் மலர் வளையங்களும் பாதி உடலை மறைத்திருக்க, கண்ணாடிப் பெட்டிக்குள் கண்கள் மூடிப் படுத்திருந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். தனது வாசிப்பால் ஆயிரமாயிரம் பேரைக் கவர்ந்த 45 வயது நாயகன்.
நிஜமான ஜீனியஸ்களை, காலம் நீண்ட நாட்கள் விட்டுவைப்பது இல்லையோ? மழலை மேதையாக மேடையேறி, குறுகிய காலத்தில் உலகம் சுற்றி உச்சம் தொட்டவரை, கலைத் தாய் அவசரகதியில் தன்னிடம் திருப்பி அழைத்துக்கொண்டுவிட்டாள்.
ருடம் 1982... டிசம்பர் மாதம் 29-ம் நாள், புதன்கிழமை, நேரம்: பகல் 3:45.
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி அமைப்புக்காக சென்னை, சங்கரதாஸ் கலை அரங்க மேடையில் பால் வடியும் முகத்துடன் 12 வயது சிறுவனாக ஸ்ரீனிவாஸ். வசீகரக் கண்கள் கொண்டவனின் கையில் மாண்டலின் என்கிற மேல்நாட்டுக் கருவி. ஆரம்ப காம்போதி வர்ணம் முடிவதற்குள்ளாகவே குழுமியிருந்தவர்கள் அவனது இசையில் மயங்கி, திறமையில் வியந்து, 'என்ன வாசிப்பு இது... அபாரமா இருக்கே!’ எனச் சிலிர்த்தனர்.
.


கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.
இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது.
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக் கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நதியைப்பாடும் நந்தவனங்கள்' 50 கவிஞர்களால் பாடப்பட்ட கவிதைத்தொகுதி

.


50 கவிஞர்களால் பாடப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதைத்தொகுதி 'நதியைப்பாடும் நந்தவனங்கள்'

ஈழத்து இலக்கிய உலகில் ஒரு புதுமை நிகழ்ந்திருக்கிறது...

அதுதான் மாங்காய்த்தீவின் 50 பிரசித்தி பெற்ற கவிஞர்கள் இணைந்து ஒரு காத்திரமான கவிதை நூலை வெளியிட்டுள்ளனர்.அதுதான் 'நதியைப்பாடும் நந்தவனங்கள்' எனும் கவிதை நூலாகும்
.
மூத்த முஸ்லிம் அரசியில் தலைமையும் 25 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்துவரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்அவர்களின் 50தாவது அகவையை ஒட்டி 50 கவிஞர்கள் இணைந்து இக்கவிதை தொகுதியை வெளியீடு; செய்துளளனர் 
மூத்த ஊடகவியலாளரும் சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனை தொகுத்துள்ளார்.

கிழக்குமண் பதிப்பகம் இதனை வெளியீடு செய்துள்ளது



அதன் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழம (26.9.2014) அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு: அடுத்து என்ன?

.


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. வாசகர்கள் கேள்வி எழுப்ப தி இந்து (ஆங்கிலம்) இதழின் கே.வெங்கடராமன் பதில் அளித்துள்ளார்.

மேல்முறையீடு செய்யலாமா? அல்லது இதோடு அனைத்தும் முடிந்ததா?

அவர் மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றமே.

அடுத்த முதல்வர் யார்?

இதனை யார் வேண்டுமானாலும் ஊகிக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். இப்போது விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் பட்டியலில் முதலில் இருக்கிறது.

ஜெயலலிதா உடனடியாக காவலில் வைக்கப்படுவாரா?

தண்டனை 3 ஆண்டுகள் வரை கிடைத்தால், தீர்ப்பளித்த நீதிமன்றமே குற்றவாளி மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கும் விதமாக சிறையில் தள்ளப்படுவதை சற்றே ஒத்திவைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் இது நீதிமன்றத்தின் முழு விருப்பம் சார்ந்ததே. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்படுமெனில் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஜாமீன் அளிக்கும் அதிகாரம் கிடையாது. குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி!

.



        ர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல்லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத்தில் உண்மையாக போராடியவர்களின் வாழ்க்கையை சிதைத்து அது சினிமாவாக உருவெடுக்கிறது என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒருநாள்” படமும் ஓர் உதாரணம். ஹிதேந்திரனின் இதயத்தை சுமந்துகொண்டு மருத்துவமனைக்கு போய் ஆபரேஷன் செய்து அபிராமியை காப்பாற்றும் வரையிலான ரியல் ஸ்டோரி இதுதான்! (நக்கீரன் 2008 அக்டோபர்-1 இதழில் வெளியானது) 






திருக்குறளால் வந்த தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்

.

மிழகத்தின் உணவுக் களஞ்சியமான தஞ்சாவூருக்கு செல்பவர்கள் அங்குள்ள புகழ் பெற்ற பெருவுடையார்(சமற்கிருதத்தில் பிரகதீஸ்வரர்) கோயிலையும், மன்னர் சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தையும் பார்க்காமல் வரமாட்டார்கள். தமிழகத்தின் மிளப்பெரிய வரலாற்று சான்றாக விளங்கும் இந்த நூலகம் 12-ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டாலும், முழுமையான வளர்சியில்லாமல் பெயரளவில் இன்றுள்ள அரசு நூலகங்களை போலவே கவனிப்பார் இல்லாமல் இருந்துள்ளது. இதை மாற்றியமைத்து முழுமையான நூலகமாகவும், ஆராய்ச்சி மையமாகவும் மாற்றியர் மன்னர் இரண்டாம் சரபோஜி ஆவார்.
சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி மொழிகளில் இருந்த நூல்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த அந்த நூகலகத்தில் தமிழ் எப்படி உள்ளே வந்தது. பண்டைய தமிழ் அறிஞர்கள் எழுதிவைத்திருந்த ஓலைச் சுவடிகள் எப்படி சரஸ்வதி மகால் நூலகத்துக்கு வந்து சேர்ந்தது என்பது பற்றியும், மானார் சரபோஜியை பற்றியும் சில வரலாறுகளை பார்போம்.

தஞ்சை ஆண்டு வந்த மராட்டிய வம்சத்து போன்சுலே பரம்பரையில், ஐந்தாவதாக வந்தவர் இரண்டாம் சரபோஜி(கி.பி-1777-1832 ). இவரது இயற்பெயர் சரபோஜி ராசா போன்சுலே சத்ரபதி என்பதாகும். இவர் தஞ்சை இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் மன்னராக இருந்து மக்கள் பணி செய்யாமல் போனாலும், தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்ததன் மூலம் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுள் முக்கியமான ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

இலங்கைச் செய்திகள்


பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்

மஹிந்த ராஜபக்ஷ ஹிலாரி கிளின்டனை சந்தித்தார்

வள்ளம், வலைகள் தீயில் எரிந்து நாசம் - சவுக்கடி கடற்கரை பகுதியில் சம்பவம்

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்

22/09/2014  மட்டக்களப்பு முகத்துவாரம் வீதியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை நேரம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக கிழக்கு 


பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் ஹட்டன் பகுதியை சேர்ந்த சோதிவேல் டொனால்ட் (வயது 22) மற்றும் கதுறுவெலயைச் சேர்ந்த எம். இஷட் முஹம்மத் ஜறூல் (வயது 22) ஆகிய மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.


வாலிவதை - ஒரு சமகால நோக்கு” இலக்கியப் பேருரையும் நுால் வெளியீடும்: (முள்ளிவாயக்காலின் பின்புலத்தை தேடும் நூல்வெளியீடு

.

News Service
வாலிவதை - ஒரு சமகால நோக்கு” என்ற தலைப்பிலான ஒரு ஒப்பீட்டாய்வு நூல் இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது . இது வாலி மறைந்திருந்து அன்று கொல்லப்பட்டதன் அன்றைய உலக ஆதிக்க சக்திகளின் பின்னணிகளையும் தேவைகளையும் தேடி , அவற்றை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும் . வீரத்தை விதைக்கும் சங்க கால இலக்கியங்கள் தந்திரத்தை கையாளும் ஆரிய இதிகாசங்களுடன் ஒப்பிடப்படும் இந்நூலை , தமிழத்திலிருந்து இதற்காக நூலாசிரியரினால் அழைத்து வரப்பட்ட முனைவர் பேராசிரியர் திரு மு பி பாலசுப்பிரமணியன் வெளியிட்டுவைக்கவுள்ளார்.
   
நமது ஈழத்து மஹாகவியான திரு உருத்திரமூர்த்தி அவர்களின் புத்திரரும் , கனடா வினசர் பல்கலைக்கழக பேராசிரியருமான கலாநிதி திரு சேரன் அவர்கள் நூல் ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார்; கனடா நேரப்படி செப்ரம்பர் 27 சனிக்கிழமை மாலை 5 30 இற்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது இதே நிகழ்ச்சியின் ஈற்றில் திரு “மு பி பா” அவர்களின் இலக்கியப் பேருரையும் இடம் பெறவுள்ளது.
தமிழகத்திலிருந்து வெளியாகும் தமிழாலையம் இதழின் அறிமுகமும் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வை கனடா தமிழ் எழத்தாளர் இணையம் நடாத்திவைக்கிறது தொடர்புகளுக்கு தலைவர் 416 267 6712 , 416 292 4109 , நூலாசிரியர் 647 241 1448 இனஅபிமானிகள், இலக்கிய ஆர்வலர்கள் , தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
(இடம் - அன்மையில் இடம் மாறியுள்ள கனடா கந்தசாமி ஆலய பண்பாட்டு மண்டபம் 1380 போர்ஜ்மவுன்ற் றோட் ஸ்பாபறோ கனடா)

மஹாளயபட்ச நன்னாள் : ஒரு புதிய சிந்தனை - – ரஞ்சனி நாராயணன்.

.
புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனபடுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.
பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?
இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு - வெங்கட் சாமிநாதன்

.

நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.

என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார்.  அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா,  மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள். 

அகிலத்தில் அமைதி காப்போம் ! -எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
சமயத்தின் பெயரால் சண்டை 
சாதியின் பெயரால் சண்டை
குமைகின்ற உள்ளங் கொண்டார்
குழப்பமே செய்வார் நாளும்

அமைதியை எண்ணிப் பாரார்
ஆரையும் மனதில் கொள்ளார்
அழித்தலை மட்டும் நாடி
அனைத்தையும் ஆற்ற வந்தார்

வெறி தலை கொண்டதாலே
நெறி தனை மறந்தேவிட்டார்
அறி வெலாம் மங்கிப்போக
அரக்கராய் மாறி விட்டார்

தமிழ் சினிமா


ஆடாம ஜெயிச்சோமடா

தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்ட் டார்க் ஹுயுமர் தான். இதை மையமாக கொண்டு வெளிவந்த மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதே பாணியில் வெளி வந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா.



கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகன் கருணாகரன், பத்து லட்சத்திற்கும் மேல் கடனில் இருக்கிறார். பிறந்ததில் இருந்து காமன் பாத்ரூமில் காலை கடன்களை முடிக்கும் காலனி குடித்தனத்தில் காலம் தள்ளும் கதாநாயகி விஜயலட்சுமி.



வீட்டுக்குள்ளேயே பாத்ரூம் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக தன் தள்ளுவண்டி கடையில் நாஷ்டா திண்ண வரும் கருணாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், முதல் இரவு முடியும் தருவாயில் கருணா பெரும் கடன்காரன், அவர் வீட்டில் தான் வட்டிக்கு கொடுத்த கடன்காரர்கள் எல்லாம் வந்து போவார்கள்...எனும் விஷயம் தெரிந்து விவாகரத்து வாங்காத குறையாக கடனை அடைத்து விட்டுவா...என விலகி போகிறார்.



இந்நிலையில் கருணாவின் கால்டாக்ஸியில் பை நிறைய பணத்துடன் வந்து ஏறும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் பாலாஜி, தன்னை சரியாக கவனித்துக் கொண்டால் நடக்க இருக்கும் 20-20 மேட்ச் முடிந்ததும் உன் கடனை நான் அடைக்கிறேன் என வாக்குறுதி தருகிறார்.



ஆனால் பாலாஜி கத்தி குத்துபட்டு மேட்ச்க்கு முன்பே மர்மமாக மரணமடைகிறார். கால்டாக்ஸி டிரைவர் கருணாகரன் தான் குற்றவாளி என போலீஸ் இன்ஸ்பெக்டர் சிம்ஹா, கருணாவை கைது பண்ண, அவரை சிம்ஹாவிடம் தான் மும்பை போலீஸ் என ஏமாற்றி அழைத்து போகிறார் ஆடுகளம் நரேன்.




சிம்ஹா ஏமாந்தது தெரிந்ததும் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரும் எண்ட்ரி ஆகிறார். போலீஸ் எல்லோரும் சேர்ந்து கருணாவையும், ஆடுகளம் நரேனையும் பிடித்தார்களா? கருணா தான் கொலையாளியா? கருணாவை நரேன் கடத்த காரணம் என்ன? கருணாவிற்கு பத்து லட்சம் கிடைத்ததா? பல கோடி கிடைத்ததா? சிம்ஹா சிறப்பான போலீஸ் என பெயர் எடுத்தார்? கருணா, விஜயலட்சுமி ஜோடி சேர்ந்ததா? என பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்த்து விடை தெருகிறார் இயக்குனர் பத்ரி.




ஐந்தாம் படை, தில்லு முல்லு போன்ற கமர்ஷியல் படங்களுக்கு பிறகு பத்ரி கொஞ்சம் இப்படத்தை வித்தியாசமாக எடுக்க மெனக்கெட்டுள்ளார். படத்தின் பலமே நடித்த அனைத்து நடிகர்களும் மிக அழகாக யதார்த்தமாக நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையில் 1 பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை நன்றாக உள்ளது.




டைரியில் உள்ள கதையை சிம்ஹா சொல்லும் காட்சி, படத்தின் வசனங்கள் போன்றவை படத்தின் பலமாக உள்ளது.“தமிழ்ப்படம்” சிவா இப்படத்தின் மூலம் வசனகர்த்தமாக அறிமுகமாகி வெற்றி பெற்றுள்ளார்.



கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்துள்ளனர். பலவீனம் சொல்லி கொள்ளும் படி ஏதும் இல்லை.ஆடாம ஜெயிச்சோமடா என்று டைட்டிலிலேயே படத்தின் ரிசல்ட்டையும் அவர்களே கூறிவிட்டார்கள்.