மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
காலை வேளை வந்ததை
பூக்கள் விரியத் தொடங்குது
தேனை உண்ண வண்டுகள்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 10/02/2025 - 16/02/ 2025 தமிழ் 15 முரசு 45 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
காலை வேளை வந்ததை
பூக்கள் விரியத் தொடங்குது
தேனை உண்ண வண்டுகள்
அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முழுவதையும்
" திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அம்கண் உலகு அளித்த லான்"
என்று தொடங்கும், சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல், பின்னணிப் பாடகர்களின் கணீரென்ற குரலும், பக்கவாத்தியங்களின் இசையும் கலந்து இனிமை ததும்ப மண்டபத்தில் எழுந்து, பார்வையாளர்களை இருக்கைகளில் நிமிர்ந்து உட்காரவைத்தது. பாடலுக்குப் பொருத்தமாக மேடையின் பின்னணியில் தோன்றிய அழகான காட்சி, இது நடப்பது திரையிலா அல்லது தரையிலா என்று அடையாளம் காண்பதற்கு அரியதாக, இனிமையான பாடலுக்குப் பொருத்தமாக இருந்தது. முறையான நல்ல தொடக்கம்!
NSW மாநிலத்தின் தமிழ் மொழிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் குறித்துக் கல்விச் சமூகத்தில் இருந்து திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கும் விரிவான பகிர்வைக் கேட்கலாம்.
சிட்னியில் தோழர் சி.மகேந்திரன் வழங்கிய "தமிழரின் பண்பாட்டு அரசியல்" பகிர்வும், உரையாடலும்
- சங்கர சுப்பிரமணியன்.
மாலைஆறு மணிக்கு ஒடுக்கத்தூர் மு
கோவிலுக்கு வருமாறு மெஸேஜ் இரு
ஏரிக்கரையில் சிவாஜி நகருக்கு அ
காட்சி அளித்தது. ஐந்தே முக்கால் மணிக்
காத்திருந்தேன்.
சரியாக ஆறு மணிக்கு ஆட்டோவில் வ
இறங்கியவள் ஓடோடி என்னிடம் வந்து,
"சிவா! வந்து நேரமாகி விட்டதா?"
"பதினைஞ்சு நிமிடம்தான் ஆச்சு.
அவசரமா வரச்சொன்னியே என்ன கா
"அவசரம் தான். அப்பாவுக்கு எதிர்பாரா விதமா
டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. இன்னும் ஒரு மாதம் கூ
இருக்க மாட்டோம். அதனால் சீக்கி
நம்மைப் பற்றி பேசிடுங்க. இனிமே
அவுஸ்திரேலியாக்கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் குடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008 ஆம் ஆண்டு, ஆதிக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்தக் கட்டுரை மெல்பேர்ணில், டண்டினோங் மலைச்சாரலில்
வில்லியம் பில் றிக்கெற்ஸ்…
மெல்பேர்ணில் சனத்தொகைப் பெருக்கம் மிகவும் குறைவாக இருந்த காலப்பகுதியில், தங்கவேட்டை காரணமாக பலர் புலம்பெயர்ந்து வரத் தொடங்கியிருந்தார்கள்.
இவரது தாத்தா வில்லியம் றிக்கெற்ஸ் 1857 ஆம் ஆண்டளவில் தனது மனைவி மேரி ஆன் சகிதம் பிரித்தானியாவில் இருந்து மூன்று நான்கு மாத கடல் பிரயாணத்தின் பின்னர் மெல்பேர்ண் வந்து சேர்ந்தார். இவர்களுக்கு 12 பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அல்பிரட் என்பவர் சுசான் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசிப் பிள்ளையாக பில் 1898 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்கள் றிச்மண்ட் என்னும் பகுதியில் குடியிருந்தார்கள்.
பில் தனது ஆரம்பக்கல்வியில் பெரிதும் நாட்டம் கொள்ளவில்லை. பாடசாலையை விடுவது என்று தீர்மானித்ததும் தமது உறவினரின் நகை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயிலுனராகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதின்னான்கு. இசையில் ஆர்வம் கொண்ட இவர் வயலின் வாசிப்பதில் கெட்டிக்காரர்.
வில்லியம் பில் றிக்கெற்ஸ், 1935 ஆம் ஆண்டளவில் மவுன்ற் டண்டினோங் பகுதியில் நாலரை ஏக்கர் நிலப்பரப்பை வாங்கினார். அது முதற்கொண்டு அங்கேயே வசிக்கலானார். இயற்கை எழில் கொஞ்சும் சரிவுப்பாங்கான அந்தப்பகுதியின் பாதை மருங்கிலும் குகைகளிலும் களிமண்ணினால் ஆன உருவங்களைச் செய்து வைத்தார்.
ஆதிவாசிகளின் நம்பிக்கை வாழ்க்கை முறைகளினால் ஈர்க்கப்பட்ட மிகச்சில வெள்ளை இனத்தவர்களில் இவரும் ஒருவர். விலங்கு தாவரம் மனிதன் இயற்கை – இந்தப்பின்னணியில் இவரது படைப்புகளின் தொனி அமைந்திருக்கும். இவரது கற்பனையில் உருவாகும் படைப்புகளிற்கு பூர்வீகக்குடிகளின் சின்னங்களை குறியீடாகப் பாவித்துள்ளார். இவரது காப்பகத்தின் முக்கியமான படைப்புகள் ஆதிவாசிகளின் உருவங்களாகும். அவை ஆதிவாசிகளினதும், அவர்களுக்கும் பூமிக்குமிடையேயான பரிசுத்தமான தொடர்புகள் பற்றியனவுமாகும்.
வீரகத்தி தனபாலசிங்கம்
பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு புதுடில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது திருத்தம் குறித்து எதையும் கூறிப்பிடத் தவறியதை அடுத்து அது குறித்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் காட்டிய அளவுக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அதில் அக்கறை காட்டவில்லை.
இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை அரசாங்கம் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தவறாமல் வலியுறுத்திவந்த மோடி இந்த தடவை அதை தவிர்த்துக்கொண்டது பிரத்தியேகமான வித்தியாசமாக தெரிந்தது.
ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி கூறியிருப்பதால் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து கூறாதது ஒரு பிரச்சினை அல்ல என்றும் அரசியலமைப்புக்குள் தான் அந்த திருத்தமும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமர் வேறு எந்த நாட்டினதும் தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்களிடம் தங்களது நாடுகளின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட்பதில்லை. சொந்த அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மற்றைய நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு நாட்டின் தலைவர் கூறவேண்டியதுமில்லை.
ஆனால், இலங்கை ஜனாதிபதிகளிடம் இந்திய தலைவர்கள் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் கேட்பதற்கு 1987 ஜூலை இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு மாகாணசபைகளை அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13 வது திருத்தம் மாத்திரமே காரணம். அதனால் ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் அந்த திருத்தம் பற்றி குறிப்பிடுவதை மோடி தவிர்த்தமைக்கு ஒரு பிரத்தியேக காரணம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ராஜ்குமார் ராஜீவ்காந்
2006ம் வருடம் மாலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை திருகோணமலை ஒரு திகிலான அனுபவத்தை சந்தித்தது.
அதே இடங்களில் எம் நண்பர்களில் பலர் இருந்தார்கள் எத்தனையோ சாட்சிகள் இருந்தது.
கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அப்பாவி 5 மாணவர்களை, எந்த அர்த்தமும் இல்லாமல் வெறித்தனமாக கொன்றது இலங்கை இராணுவம்.
அதி காலையில் வைத்தியசாலையில் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட அந்த உடல்களைப் பார்த்தது நான் இறக்கும் வரை மறக்காது.
அன்று முழு நகரமும் பேரதிர்ச்சியில் மூழ்கிப்போயிருந்தது, அதன் பின் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் இறுதிச் சடங்கு இடம்பெற்றது.
இதன் பின்னர் நீதி கேட்ட பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள், இந்த கொலை நிகழ்ந்து 31வது நாள் நிகழ்வில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெளத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த எம் அன்பின் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை முன் எடுத்துச் சென்ற பெற்றோரில் ஒருவரான வைத்தியர் மனோகரன் அவர்கள் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
சென்ற வருடம் இந்த வழக்கின் நிலையும் அடுத்த கட்டமும் தொடர்பாக மீண்டும் சர்வதேச மன்னிப்பு சபையிடம் பேசியிருந்தேன்.
மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் நீழ்கிறது.
கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலையாகியிருந்தனர்.
இலங்கை அரசின் கொலைகள் ஆயிரக்கணக்காக இருந்தாலும் இந்த கொடூரக் கொலை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், யுத்தம் கூட இடம்பெறாத பகுதியில் இடம்பெற்றது.
இதற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யாரை நாம் நோவது.
;
(லியோ நிரோஷ தர்ஷன்)
ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாக பல்வேறு கிசு கிசுக்கள் தேசிய அரசியலில் உலா வருகின்ற நிலையில், அரசாங்கமும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சவால் மிக்கதொரு ஆண்டாக இருக்கும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் உட்பட சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேசப்பட்டது.
ரணிலின் இந்திய விஜய கிசுகிசுக்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புகள் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பினை ருவன் விஜேவர்தன மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரிடம் கையளித்து விட்டு ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து மேலதிக தகவல்களை அறியும் வகையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தொலைபேசி ஊடாக வஜிர அபேவர்தனவை தொடர்புக் கொண்டு கேள்வியெழுப்பியிருந்தனர்.
'என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுப் பேருரையை நடத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார். ஏனெனில் வாஜ்பாயிக்கும் ரணிலுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் கடந்த காலங்களில் இருந்துள்ளன. கடந்த வருடமும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அத்தியாவசிய காரணிகளின் அடிப்படையில் செல்ல முடியாமல் போனது. தற்போது ஓய்வில் இருக்கின்ற நிலையில் இம்முறை தவிர்க்காமல் சென்றுள்ளார். எனினும் இனிவரும் நாட்களில் சற்று அதிகமாக அரசியல் சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளார். அப்போது ஓய்வு எடுப்பது கடினம்' என தொலைப்பேசியில் கேள்வியெழுப்பியவர்களுக்கு பதிலளித்திருந்தார்.
Published By: Digital Desk 3
கலாநிதி ஜெகான் பெரேரா
கிறிஸ்மஸ் பிறந்த நள்ளிரவில் கொழும்பிலும் குறிப்பாக வசதிபடைத்த உயர்வர்த்தக பகுதிகளிலும் தொடங்கிய ஜொலிப்பு புத்தாண்டு பிறப்பையும் கடந்து தொடருகிறது. தலைநகரின் இந்த இரவு வெளிச்சத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் அது படுமோசமான பொருளாதார வீழ்ச்சியை கண்டது என்பதற்கான எந்த அறிகுறியையும் காணமுடியவில்லை.
அரசாங்கத்தை பதவி கவிழ்த்து ஜனாதிபதியை நாட்டைவிட்டு தப்பியோட வைத்த 'அறகலய ' போராட்டத்தின் குவிமையமாக அன்று விளங்கிய கொழும்பு கோட்டை காலிமுகத்திடல் புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையமாக மாறியது. அந்த மையத்தை நோக்கி ய வீதிகளின் வாகன நெரிசல் அன்று எரிபொருட்களை பெறுவதற்காக பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வெளியே காணப்பட்ட நீண்ட வரிசைகளை கிரகணம் செய்துவிட்டது.
தலைநகரின் ஆடம்பரமான பகுதிகளில் ஹோட்டல்களும் இரவுவிடுதிகளும் நிரம்பிவழிந்தன. இந்த கொண்டாட்டங்களுக்கான செலவு மிகப்பெரியது. ஆனால், அங்கெல்லாம் கூடிய பெருமளவானோரினால் குறைந்தபட்சம் எப்போதாவது ஒரு தடவையாவது அவ்வாறு செலவழிக்கக்கூடியதாக இருக்கிறது. நீர்நிலைகளை நோக்கி அமைந்திருக்கும் ஐ.ரி.சி. ரத்னதீப மற்றும் சிறாறி ஒஃவ் ட்றீம் போன்ற புதிய ஹோட்டல்கள் இரவில் துபாயில் காணக்கூடிய தோற்றத்தை கொழும்பில் தோற்றுவிக்கின்றன.
40 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டு.வில் புதிய பஸ் சேவை! : மாவலையாறு, மாவடிச்சேனை முதலான கிராமங்களின் ஊடாக 28 கி.மீ. பயணம்
நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்பு !
10 ஆயிரத்து 400 மெற்றிக்தொன் அரிசி முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் ; அரச வாணிப கூட்டுத்தாபனம்
தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு
தமிழினப்படுகொலை குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் ; தமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்கிறது கனேடிய கன்சர்வேட்டிவ்
40 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டு.வில் புதிய பஸ் சேவை! : மாவலையாறு, மாவடிச்சேனை முதலான கிராமங்களின் ஊடாக 28 கி.மீ. பயணம்
சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்
ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வாகனத்தை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் - நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்
நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம்
சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம். )
அறிமுகவுரை – லெ முருகபூபதி. -
அவுஸ்திரேலியா
முத்துலிங்கம்
சிறுகதைகள்
அனோஜன் பாலகிருஸ்ணன் - பிரித்தானியா
முத்துலிங்கம்
நாவல்கள்
கேசநந்தன் அகரன் ( பூமிநேசன்) பிரான்ஸ்
முத்துலிங்கம்
புனைவுசாரா எழுத்துக்கள்
ஜிஃப்ரி ஹாஸன்- இலங்கை .
அவுஸ்திரேலியத்
தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக
நடத்திய ( 2023 ) இலக்கியப்போட்டி முடிவுகள்:
அறிவிப்பு : பாடும்மீன் சு. சிறிகந்தராசா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : நோயல் நடேசன்.
அவுஸ்திரேலியா நேரம் மதியம் 12.00 மணி
நியூசிலாந்து : மதியம் 2.00 மணி
இங்கிலாந்து : அதிகாலை 1.00 மணி
ஜெர்மனி : அதிகாலை 2.00 மணி
பிரான்ஸ் : அதிகாலை 2.00 மணி
இலங்கை – இந்தியா : காலை 6.00 மணி
கனடா : இரவு 8.00 மணி (Saturday 18th)