நியூ சவுத் வேல்ஸ் தமிழ் பாடசாலை கூட்டமைப்பு - இனிய தமிழ் மாலை 01/10/2012

அவள் - மலைகள் இதழில்..

.

நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து

அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்

மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை

சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக

காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது

கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.
***

18 ஆகஸ்ட் 2012 மலைகளின் எட்டாவது இதழில்.., நன்றி மலைகள்.காம்!


அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்று கூடல்


.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்று கூடல் ஞாயிறு மாலை  Carlingford இல் அமைந்திருக்கும் Don  Moore  Community  Center ரில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில் நுட்பவல்லுனர்கள் என்று  ஒரு குடும்பமாக இணைந்து உணவோடு ஒன்று கூடி மகிழ்ந்தார்கள்.
வருடம் முழுவதும் மக்களுக்காக ஒலிபரப்புத்துறையில் தொண்டர் அடிப்படையில் செயலாற்றும் இவர்கள் குடும்பம்போலவே ஒன்றுகூடியதைக் காணக்கூடியதாக இருந்தது.


இலங்கைச் செய்திகள்

“சட்டவிரோத கைதுகளை உடன் நிறுத்துக”

கிழக்கு முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

இரண்டரை வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி: ஹக்கீம்

25 பேர் மாத்திரமே இலங்கை வருகை: குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம் இலங்கைப் பிரச்னை

தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்

ஸ்ரீ நாரத பக்தி சூத்திரங்கள்


படப்பிடிப்பு ராஜேந்திரன்

ஸ்ரீமத்  பாகவதம், ஸ்ரீமத் இராமயணம், ஸ்ரீநாரத பக்தி சூத்திரங்கள் பக்தி வெள்ளத்துக்கு கலங்கரை விளக்காக விளங்கும் மிக உன்னதமான பொக்கிஷங்கள். இவற்றை நாம் நேரடியாகப் படித்து விளங்கிக் கொள்ள இயலாது. பொக்கிஷப்பெட்டகங்களைத் திறவுகோல் போட்டுத் திறந்து காட்டினால்தான் அவற்றுளுள்ள மதிப்பான தங்கம், வைரம், மாணிக்கம் முத்து ஆபரணங்கள் முதலியவற்றைக் காணலாம். அதேபோலத்தான் எமது சமய சாஸ்திர நூல்களை இறை அனுபவம் உள்ள ஞானசாரியர்கள்தான் எமக்கு விளக்கிக் கூறலாம். இந்த வகையில் ஆச்சாரியார் ஸ்ரீசச்சிதானந்தசாயியும் எமக்கு நாரத பக்தி சூத்திரங்களை சிட்னி மெரிலன்ட்சில் இரு நாட்கள் விளக்கிக் கூறி பக்தி வெள்ளத்திலாழ்த்தி விட்டார்.

தியாக தீப நினைவு அஞ்சலி
சொல்ல மறந்த கதைகள் --11 - முருகபூபதி

.
எதிர்பாராதது
  எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.
  இந்த வசனத்தை எனது எழுத்துக்களில் பல சந்தர்ப்பங்களில் பதிவுசெய்வதற்கு கால்கோள் இட்டதுதான் நான் முதல்முதலில் மாஸ்கோவுக்கு செல்வதற்காக விமானம் ஏறிய சம்பவம்.
 airport           வானத்தில் பறக்கும் விமானங்களை பார்த்து வியந்த பருவத்தில் எங்கள் ஊருக்கு சமீபமாக கட்டுநாயக்காவில் சர்வதேச விமானநிலையம் 1965 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டட்லிசேனநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டபோது அந்த விழாவைப்பார்க்க பாடசாலை நண்பர்களுடன் சென்றிருக்கின்றேன்.
           அன்றுதான் என் வாழ்நாளில் முதல்தடவையாக ஒரு விமான நிலையத்தையும் பார்த்தேன். அதன் பிறகு பல தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் விமானம் ஏறுவதற்காக அல்ல, யாரையாவது ஐரோப்பாவுக்கோ மத்திய கிழக்கிற்கோ இந்தியாவுக்கோ வழியனுப்பத்தான் வந்திருப்பேன்.
           அவர்கள் ஏறிய விமானம் ஓடுபாதையில் ஒரு சுற்றுச்சுற்றிவந்து மேலே ஏறி பறக்கத்தொடங்கி கண்ணிலிருந்து மறையும் வரையில் பரவசத்துடன் பார்த்த பின்புதான் வீடு திரும்புவேன். அப்பொழுது மனதில் ஏக்கம் குடியேறும். எனக்கும் அப்படி ஒரு விமானப்பயணம் எப்போது சித்திக்கும் என்பதுதான் அந்த ஏக்கம்.
           வீரகேசரியில் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த (1985) வேளையில் ஒரு மதியம் கொழும்பிலிருக்கும் சோவியத் ரஷ்யாவின் தகவல் பிரிவில் பணியாற்றிய நண்பர் ராஜகுலேந்திரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

கெலன்ஸ்பேக் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய பிரம்மோத்சவம் ஆறாம் திருவிழா

 படப்பிடிப்பு ஞானி


சிலப்பதிகார விழா


கெலன்ஸ்பேக் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய பிரம்மோத்சவம் ஆரம்பம்.

.
BRAHMOTSAVAM 2012 PROGRAM (8am-12 noon, 4pm-8pm)

Day 0: MONDAY 17th SEPT, 2012: Anugai, Ganesa Pooja, Akurarpanam, Utsavam of Sri Viswaksena Day 1: TUESDAY 18TH SEPT, 2012: Dwajarohanam Sesha Vahanam
Day 2: WEDNESDAY 19th SEPT, 2012: Pallakku Procession Hamsa Vahanam
Day 3: THURSDAY 20TH SEPT, 2012: Pallakku Procession Mutthu Pandal Vahanam
Day 4: FRIDAY, 21ST SEPT, 2012: Pallakku Procession Sarva Boopala Vahanam
Day 5: SATURDAY, 22ND SEPT, 2012: Mohini Avataram Garuda Vahanam
Day 6: SUNDAY, 23RD SEPT, 2012: Hanumantha Vahanam Gaja Vahanam (also, GANESH  
             VISARJAN)
Day 7: MONDAY, 24TH SEPT, 2012: Chorna Vahanam Surya Brabhai Vahanam
Day 8: TUESDAY, 25TH SEPT, 2012: Pallakku Procession Aswa Vahanam
Day 9: WEDNESDAY, 26TH SEPT, 2012: CHARIOT Festival (Rathostsavam) Chakra Snanam
Day 10: THURSDAY, 27TH SEPT, 2012: Kalyana Utsavam Pushpa Pallakku
               Dwaja Avarohanam


 Like last year, the Festival will have daily Yagasala Poojas with family-Sankalpam, Vahana Processions, Annadhanam, Cultural Programs and of course, our beautiful Temple Chariot for all devotees to pull on a special day (Wed, 26th Sept).சிட்னியில் நடைபெற்ற உங்களின் கதையைச் சொல்லுங்கள் (Tell Your Story)என்ற நிகழ்வு

.

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழர்களின் குரல்(Voice of Tamils) என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'உங்களின் கதையைச் சொல்லுங்கள்' (Tell Your Story) என்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன். பொதுவாக சிட்னியில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் நிகழ்ச்சி என்றால் தென்னிந்தியா தமிழ் திரைப்படப் பாடல்கள், வட இந்திய திரைப்படப்பாடல்களுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்து ஆடும் குத்தாட்டங்கள், இதிகாச நாடகங்கள், இராமர்,காந்தி என்று தான் இருக்கும். ஈழத்தமிழர்களின் அவலங்கள் இருக்காது. சென்ற வருடமும் தமிழர்களின் குரல் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு நுளைவுச்சீட்டினை வாங்கியும், தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. அந்நிகழ்வுக்கு சென்ற நண்பன் ஒருவரை அந்நிகழ்வு பற்றி அபிப்பிராயம் கேட்டேன். ஈழத்தமிழர்களும், வேற்று நாட்டவர்களும் தங்களது நாட்டின் பிரச்சனைகளை நடன வடிவில் கொண்டுவந்தார்கள். பல வெளினாட்டவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். நடுவர்களாக அவுஸ்திரெலியர்கள் கலந்து கொண்டார்கள். சேகரிக்கப்பட்ட பணம் உலகத்தமிழர் பேரவை உட்பட சில அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டதாக நண்பன் எனக்கு சொன்னார். இம்முறை, சென்றமாதம் 8ம்திகதி சிட்னியில் உள்ள சில்வர்வோட்டர் என்ற இடத்தில் இருக்கும் சி3 அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஈழத்தமிழர் ஒருவரும், மேற்கிந்தியா தீவுகளில் ஒன்றான ஐமேக்கா நாட்டினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

நேசிக்கத்தகுந்த மனிதர் சோமா அண்ணர் தமிழ் சமூகப்பணியில் அயராது உழைத்தவர் நினைவஞ்சலிக்குறிப்பு முருகபூபதி                     
அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் மறைந்த முன்னாள் விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் தமிழ் சமூகப்பணியாளருமான சோமசுந்தரம் அவர்களுக்கும் எனக்குமிடையிலான நட்புறவுக்கு இருபத்தியைந்து வருடங்களும் ஏழுமாதங்களும் என்பதை தெளிவாகவே சொல்லிவிடமுடியும். இக்காலப்பகுதியில் அவருடன் பழகிய தருணங்கள் மறக்கமுடியாத நிகழ்வுகளாகவே மனதில் பதிந்துள்ளமையால்தான் இந்தப்பதிவை எழுதமுடிகிறது.
அவர் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை நண்பர் நடேசன் எனக்குச்சொல்லும்பொழுது, தொலைதூரப்பயணத்திலிருந்தேன். அதன்பிறகு, சில மணிநேரங்களில் நண்பர் சபேசன், கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம்


.
இலங்கை மாணவர் கல்வி நிதியம்
 (,iz)
Ceylon Students Educational Fund (Inc)
           P.O.BOX- 317, BRUNSWICK, VICTORIA-3064, AUSTRALIA
           E.Mail: kalvi.nithiyam@Yahoo.com   Web: www.csefund.org          இலங்கை மாணவர் கல்வி நிதியம்
        23ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்

இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு கல்வியை தொடரும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பலவருடங்களாக உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்
 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணிக்கு நிதியத்தின் தலைவர் மருத்துவக்கலாநிதி மதிவதனி சந்திரானந்த் அவர்களின் தலைமையில் நடைபெறும்.


உயர்திணையின் இலக்கியச்சந்திப்பு 30.09.2012

.

சிட்னி முருகன் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா படப்பிடிப்பு ஞானி


சிட்னி முருகன் கோவிலில் பாட்டும் பரதமும் 23/09/2012

படப்பிடிப்பு ஞானி 


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

 AUSTRALIAN TAMIL LITERARY & ARTS SOCIETY (Inc)  
        P.O.BOX 620 Preston, Victoria-3072,Australia
   மின்னஞ்சல்: atlas2001@live.com

                                                                                                                                      03-09-2012

 அன்புடையீர் வணக்கம்.

 எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பின்வரும் முகவரியில் நடைபெறவுள்ளது.

 Darebin Intercultural Centre

 59 A Roseberry Avenue, Preston, Victoria 3072


இக்கூட்டத்திற்கு  வருகைதருமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

UNIFUND DINNER—2ND SEPTEMBER 2012 - SYDNEY
அஸ்வத்தாமன், என்றொரு யானை!

.


அஸ்வத்தாமா.... அஸ்வத்த்....தாமா..
துரியனின் குரல் மெலிந்து  மிகுந்த வேதனையுடன் வெளிப் பட்டது. பதினெட்டாம் நாள் போர் முடிந்தது. வீமனிடம் துரியன் தன் தொடை பிளந்து  விழுந்து கிடக்கிறான். துரியோதனனின் வெற்றிப் பாதைகள் அனைத்தையும் மாயக் கண்ணனின் சூழ்ச்சிகள் தடுத்து நிறுத்திவிட்டன. யாவற்றையும் இழந்து இதோ துரியன் வீழ்ந்து கிடக்கிறான். அவன் கண்கள் அஸ்வத்தாமனை நோக்கி நிலைத்து நின்றது.
அஸ்வத்தாமன் சமந்தப் பஞ்சகத்தின் அருகில் அமர்ந்திருந்தான்.  தன் மடியில் தலை  தாழ்ந்து தவித்த துரியோதனனின் கண்கள்அவனைக் கொன்று தின்றன. மஹாரதன் நான்,  என் தந்தைக்கு அடுத்து சேனையின் அதிபதியாக ஆகவேண்டியவன்.   துரியோதனன் என்னை  ஒரு  பொருட்டாக மதிக்கவில்லையே? என்ன நட்பிருந்து என்ன பயன்?.  துரோணரின் மாணாக்கர்களில் யாவருக்கும் சளைத்தவனல்ல இந்த  அஸ்வத்தாமன். ஆனால்.. துரியோதனா நீயும் என்னை வஞ்சித்தாயே?
‘‘உன்னை என் சேனையின் அதிபனாக நியமிக்கிறேன்’’
"நான் போரில் என்  முழு வலிமையுடன்  ஈடுபட மாட்டேன் என்று உன்னிடம் சபதம் செய்திருக்கிறேனே துரியோதனா"
நீ என் உற்ற நண்பனல்லவா?  முழுதாய் போரில் ஈடுபடவில்லை என்றாலும் என்னை விட்டு விலகாதவன் அல்லவா?"
"நான் பாண்டவருக்கு ஆதரவாய் செயல் படுவேன் என்று நினைத்து என்னை நீ சந்தேகித்த போது என்னுள் எழுந்த வலியினும் பெரியதா இந்த வலி  துரியோதனா?"
துரியோதனன் முகத்தில் வலியின் வேதனை அதிகரித்தது. மௌனமானான்.

ஓடியே வந்தது ஓய்வு நிலை - நவாலியூரான்


  .
   அன்னையின் வயிற்றில் பத்து மாதம்
   அடி உதை கொடுத்து ஆட்டிவைத்தோம்
   பாரினில் பிறந்தோம் பாலராக
   பலபெயர்கள் பெற்றோம் பலவிதமாய்
   ஆடி அடிவைத்தோம் அன்னை முன்பு
   ஆதங்கமாய் அணைத்தாள் அம்மை எம்மை
   நாடி ஓடினோம் தந்தையிடம்
   நல்லன புகட்டினான் நண்பனாக
   பாடிப்படிக்கவைத்தான் பள்ளியிலே
   பார்ப்பவர் புகழவைத்தான் பள்ளியிலே
   வேலை தேடினோம் வேண்டுமென்று
   வேலவன் வழங்கினான் வேலையதை
   வாழ்வுதனைத்தேடினோம் வாழ்வதற்கு
    வாரி அணைத்திட்டோம் வாழ்வதனை
   தேடியே வந்தன தேன்மொழிச்செல்வங்கள்
  தேற்றியேவைத்தோம் பல தேர்வுகளில்
 ஓடியே வந்தது ஓய்வு நிலை
 ஓய்வு எடுக்கின்றோம் உன்னதமாய்

உலகச் செய்திகள்

  ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!


மெக்சிகோ சிறையிலிருந்து 132 பேர் சுரங்கம் தோண்டி தப்பியோட்டம்


உகாண்டா பாராளுமன்றத் தேர்தலில் 19 வயது மாணவி வெற்றி


தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் 30 09 12

.கணபதியே காப்பாய்..

.

#1. கைவினைத் திறனில் உருவான வினை தீர்க்கும் விநாயகர் 

வேழ முகத்தோனின் ஆசிகள் வேண்டி சதுர்த்தி தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.

 #2. கணபதியே அருள்வாய் 


பண்டிகைக்கு முன்னாலிருந்தே பெங்களூர் மாநகராட்சியும்(BBMP) மாநில மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் (KSPCB) வண்ணம் தீட்டிய விநாயகர் உருவச் சிலைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதுடன் சிலை செய்பவர்களையும் அதிக அளவில் களிமண் சிலைகளை விற்பனைக்குக் கொண்டுவர ஆணையிட்டிருந்தது. ஆனால் விற்ற பத்து சிலைகளில் எட்டு வண்ணப் பிள்ளையார்களே. வண்ணப் பிள்ளையாரை செய்ய உபயோகிக்கும் மண்ணை விட களிமண் சிலைகள் உயர்தர மண்ணில் செய்ய வேண்டியிருப்பதால் இவற்றின் விலை அதிகமென்றும், சம அளவில் இரண்டும் கிடைக்குமாறு செய்திருந்தும் மக்கள் அதை வாங்கவில்லையென்றும் விற்காத களிமண் பிள்ளையார்களைக் காட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். மக்களைக் கவர கிரீடம், நகைகளுக்கு மட்டும் பொன் வண்ணம் தீட்டியிருந்தும் பயன் இருக்கவில்லை.


இந்த ஏரியைத் தவிர - கவிதை - தேவதேவன்

.
இந்த ஏரியைத் தவிர
பிறிதொரு  அழகிய அற்புதமுண்டோ
இந்தப் பூமியில்?
எல்லையில்லாத வானம்,
சுற்றி விரிந்திருக்கும் வனம்,
ஆராதித்து நிற்பதன் இரகசியம்:
அதன் அமைதி,
நிச்சலனம்,
ஒளியுடன் அதற்குள்ள
அத்துணை நெருக்கமான உறவு,
ஒளிவு மறைவற்ற தைரியம்.
அதாவது தூய்மை,
ஆற்றைப் போலவோ
ஆழியைப் போலவோ
ஆர்ப்பரிக்காத எளிமை,
அடக்கம்,
வானமே தன் அகம் பார்த்துக் கொள்ள உதவும்
ஆடிமை,
நிலவும் இயற்கையின்
அனைத்துப் படைப்புக்களினதும்
ஆசான்மை.
அன்பே,
நம் வீட்டு மூலையிலே
வானமே வியந்து போற்றும்
ஒரு ஏரியைப் போல வந்தமர்ந்திருக்கும்
அந்தப் பேர்யாழை மடியெடுத்து மீட்டு,
உலகில் மறைந்து கிடக்கும் பேரிசையை
அது மீட்கட்டும்.

Nantri : vadakkuvaasal.com

தமிழ் சினிமா

.

சுந்தரபாண்டியன் 

சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’ படவரிசையில் நண்பர்களுக்காக எதுவும் செய்யத் துணியும் ஹீரோவின் கதைதான் ‘சுந்தரபாண்டியன்’.
நண்பனின் காதலுக்காக தான் ஏற்கனவே பின்னால் சுற்றிய கதாநாயகி லட்சுமி மேனனிடம் தூது போகிறார் சசிகுமார்.
போன இடத்தில் லட்சுமி மேனன் சசிகுமாரை இப்போது விரும்புவதாக கூறுகிறாள். சசிகுமாரும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அப்புக்குட்டி லட்சுமிமேனனை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் அப்புக்குட்டியுடன் ஏற்படும் மோதலில், தவறுதலாக அப்புக்குட்டி இறந்துவிட, கொலைப்பழியை சசிகுமார் ஏற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில், சசிகுமாரின் காதல் விவகாரம் லட்சுமி மேனனின் வீட்டுக்கு தெரிந்துவிட, அவளது முறைப் பையனான விஜய் சேதுபதிக்கு திருமணம் முடித்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், லட்சுமி மேனன் முறைப் பையனை மணமுடிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சசிகுமாரின் ஆழமான காதலை புரிந்து கொண்ட லட்சுமி மேனனின் அப்பா இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இதனால் கோபமடைந்த லட்சுமி மேனனின் முறைப்பையனும், இறந்து போன அப்புக்குட்டியின் நண்பனும் சேர்ந்து சசிகுமாரை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இவர்களோடு சசிகுமாரின் நண்பனும் சேர்ந்து கொள்கிறான்.
இவ்வளவையும் சமாளித்து ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.
சசிகுமார் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாதியில் ‘புரோட்டோ’ சூரியோடு இவர் செய்யும் கலாட்டாக்கள் நம் வயிற்றை பதம் பார்க்கின்றன. ரஜினி ரசிகராக பஸ்சில் இவர் செய்யும் அலப்பறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹீரோயின் ‘கும்கி’ லஷ்மி நாயர், பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்ற அழகு. தமிழ் சினிமாவுக்கு கிராமத்துப் பெண்ணாக, நன்றாக நடிக்கத் தெரிந்த மற்றொரு ஹீரோயின் கிடைத்திருக்கிறார். பஸ்சில் தன் பின்னால் சுற்றும் சசிகுமாரை முறைப்பதில், தன் பார்வையிலே பேசுகிற தொனி அருமை.
படத்தில் இடைவேளை வரை சூரி கலகலப்பூட்டியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின் தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.
ஹீரோயின் பின்னாலேயே சுற்றும் ‘ரோமியோ’வாக அப்புக்குட்டி. இவர் வலிந்து வலிந்து தனது மேனரிசம்களை காட்டி ஹீரோயினை வளைக்க நினைப்பது கலகலப்பூட்டும் நகைச்சுவை.
விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலும், கதைக்கு பலம் கூட்டும் கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், ஹீரோயினின் அப்பாவாக வரும் தென்னவன், சசிகுமாரின் நண்பன் இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டியின் நண்பன் சௌந்தர ராஜா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் படத்தின் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது. கதை நடக்கும் உசிலம்பட்டி ஏரியாவை பிரேம்குமாரின் ஒளிப்பதிவு நேரில் பார்த்தது போன்ற உணர்வை நமக்கு தருகிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சிகளிலும், பைக்கில் பயணம் செய்யும் காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை.
படத்தின் ஆரம்பத்திலேயே உசிலம்பட்டி ஏரியா பற்றிய ஒரு சிறு தொகுப்பை ரசிகர்களுக்கு யதார்த்தம் தவறாமல் பதிவு செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். இடைவேளைவரை சினிமாத்தனம் இல்லாமல் கலகலப்பாக கதை நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப்பின் அது கொஞ்சம் தலைதூக்குகிறது. இருந்தாலும், முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் அதனை பதிவு செய்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

நடிகர் : சசிகுமார்,
விஜய் சேதுபதி
நடிகை : லஷ்மி மேனன்
இயக்குனர் : எஸ்.ஆர்.பிரபாகரன்
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு : பிரேம்குமார்

நன்றி விடுப்பு