வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்.. - வித்யாசாகர்

.

வெள்ளிமுளைக்கும் தலையில் 
மரணம் சொல்லாமல் அமரும் நிலம் 
இந்த வேனல் நிலம்.. 

வெளிச்சம் தந்தப் பகலவன் 
படுசுடும் விழிச் சுடர்களால்
எரித்த 
ஆடைக் கிழிந்தோருக்கு 
ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்..

கல்லுசுமக்கும் தலைவழி 
இரத்தம் உறிஞ்சி
மூளை சுட்டு
நரம்பறுத்து
இயற்கைக் கூட பழிகேட்கும்
பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்..

உறிஞ்சும் தாய்ப்பாலில்
உப்பு கரிக்கும் வியர்வையாய் ஒழுகுமென்
கருப்புத்தோல் தாயிக்கு
நிழலையும்
கொஞ்சம் நிம்மதியையும் தந்திடாத 
வெடிப்பூரிய நிலமிது, இந்த வேனல் நிலம்.. 

ஆரண்யா இளங்கோவின் நடன அரங்கேற்றம்


இனிமையான மாலைப்பொழுது 26 September 2015 சிட்னியில் இருந்து பல தமிழர்கள் Wollongong கில் அமைந்திருக்கும் The Illawara performing Arts Centre மண்டபத்தை நோக்கி விரைகின்றோம்.  இன்றுதான் ஆரண்யா இளங்கோவின் நடன அரங்கேற்றம் .

தாயாகவும் குருவாகவும் தன் மகளை பயிற்றுவித்து மேடைக்கு கொண்டுவருகின்றார் ஸ்ரீமதி சந்திரகலா இளங்கோ அவர்கள் . Kalalaya School of Dance and Music பள்ளியின் முதலாவது அரங்கேற்றம். அதுவும் குருவின் மகளே அந்த நடன அரங்கேற்றத்தை  செய்கின்றார்.


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'ஞான வேள்வி'

.

அன்பர்களுக்கு வணக்கம்,
கடல்கடந்து வந்து அவுஸ்திரேலியக் கம்பன் விழாக்களில்,
கலந்து சிறப்பிக்கவுள்ள ‘கம்பவாரிதி’ இ ஜெயராஜ் அவர்களின்,
இலக்கிய நயம் சிந்தும் சிறப்பான சொற்பொழிவுகளை
பலரது வேண்டுகோளுக்கிணங்க,
சிட்னியில் ஒழுங்கு செய்துள்ளோம் -  "ஞான வேள்வி 2015".
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
இம்முறை, முதலாம் நாள் ஞான வேள்வி நிகழ்வில்,
‘கம்பவாரிதி’ இ ஜெயராஜ் தலைமையில்,
பேராசிரியர்கள் ஞானா குலேந்திரன் மற்றும் கா. அரங்கசாமி அவர்களும்,
கலாநிதி ஸ்ரீ பிரசாந்தனும் இணைந்து வழங்குகின்ற பக்தி இலக்கிய ஆணைக்குழுவும்,
சிறப்பாக இடம்பெறவுள்ளது.



அவுஸ்திரேலியா கம்பன் கழகத்தின் கம்பன் விழா

.

சிட்னியில் 3 ம் 4 ம் திகதிகளில் இடம் பெற்ற கம்பன் விழா வில் கம்ப வாருதியும் இன்னும் பல பேச்சாளர்களும் வந்திருந்தார்கள் அத்தோடு ஆஸ்திரேலிய  தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் பெருமளவில் பங்குகபற்றியிருந்தர்கள் . அந்த நிகழ்வில் இருந்து சில காட்சிகள்.


எழில் பூக்கள் - கவிதைத் தொகுப்பு, இசைக் குறுந்தகடு வெளியீடு - 11/10/2015



சிவலோஜினி சிவராமன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம். -அல்லமதேவன்

.

மெல்பேண் மக்களை வியக்க வைத்த செல்வி.சிவலோஜினி சிவராமன் அவர்களின் அற்புதமான பரத நாட்டிய அரங்கேற்றம்.
மெல்பேண் Ringwood George wood Performing Arts Centre மண்டபத்தில் கடந்த 12.09.2015 சனிக்கிழமை கலாஞ்சலி நடனப்பள்ளியின் ஸ்தாபகரும் நடன ஆசிரியையுமான ஸ்ரீமதி.ரேணுகா ஆறுமுகசாமி அவர்களின் மாணவி செல்வி.சிவலோஜினி சிவராமன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த பார்வையாளப் பெருமக்கள் முன்னிலையில, சிறப்பாக நிறைவேறியது.
இனிய இளவேனிற் காலத்தின் மாலைப் பொழுது கலாஞ்சலி நடனப் பள்ளி மாணவிகளும், மற்றும் திரு.திருமதி.சிவராமன் குடும்பத்தினரும் தமிழர் தம் பாரம்பரிய முறைப்படி அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அரங்கத்தின் அமைப்பு, பின்புறத்தை அலங்கரித்த திரை அமைப்பு என யாவுமே மக்கள் மனதைக் கவர்ந்தவையாக இருந்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்து மதப்பூசை நடைபெற்ற பின் சிவலோஜினி மாதா,  பிதா, குரு,தெய்வம் ஆகியோரின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.


தமிழே……….. அழகே…… …திருமலை மூர்த்தி

.

தென்னையதன் ஓலைக் கீற்றுத்
திரையூடு முழு நிலவு

தெரிவதைக் காணும் போதும்


திரைகடலின் மீது படும்
நரையொளியி னூடு தோணி
செல்வதைக் காணும் போதும்



Bangkok Hilton (1989) Paskaran with Nicole Kidman

.

அவுஸ்திரேலியாவின் பிரபல நடிகையான நிக்கோல் கிட்மனின்  bangkok Hilton படத்தில் பாஸ்கரன் நடித்த சிறு காட்சி

இலங்கைச் செய்திகள்

.
தந்தையர்களை விடுதலை செய்யுங்கள்: பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்

ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி

ஆயுதங்களுடன் ஐவர் யாழில் கைது

அரசியல் கைதிகளாகவுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்யக்கோரி சிறுவர்கள் போராட்டம்

தந்தையர்களை விடுதலை செய்யுங்கள்: பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்

28/09/2015 தமிழ்  அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 


அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதை போட்டி

.
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்

1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும்ää எழுதும் எவரும்    இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைகள் மின்னஞ்சலூடாக பாமினி எழுத்துருவில்
  அல்லது பீடிஎவ் வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும்.
4. அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.
6. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும்ää நூலாக வெளியிடவும்ää வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
8. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.


சக்திக்கூத்து: காணக்கிடைத்த பேரனுபவம் - பிரளயன்

.
ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘சக்திக்கூத்து’ நாடகம், சென்னை அலியான்ஸ் பிரான்சேஸ், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலை யிலுள்ள ‘ஸ்பேஸஸ்’ சென்னை அய்யப்பா நகரிலுள்ள கூத்துப்பட்டறையின் அரங்கம் ஆகிய மூன்று இடங்களிலும் நிகழ்த்தப்பட்டது.
இருமுறை இந்நிகழ்வினைகாணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முத்துசாமி தீட்சிதர், பாரதியார் எனத்தொடங்கிச் சமகாலக் கவிஞர்கள் சுகுமாரன், சேரன், அகிலன், திருமாவளவன், அவ்வை ஆகியோரது கவிதை வரிகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருந்தது இந்நிகழ்வின் பிரதி.
‘கவிதா நிகழ்வு’, இசையிடைப்பட்ட கவிதை வாசிப்பு அல்லது இசை, நடனம், ஒருங்கிணைந்த அசைவுகள், நடிப்பு இவற்றின் மூலம் எழுதப்பட்ட கவிதைகள், கீர்த்தனங்கள், இசையுருக்கள் இவற்றிற்குக் காட்சி வடிவமளிப்பது என்பதாகக்கூட இதனை வரையறுக்க வியலுமெனினும் இவ்வரையறைகளின் எல்லைகளையெல்லாம் கலைத்துப்போட்டுக் கொண்டே வளர்ச்சி பெறுகிறது என்பதுதான் இந்நிகழ்வின் தனித்துவம்.

உலகச் செய்திகள்

.
துருக்கிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து படகு 5 சிறுவர்கள் உட்பட 17 குடியேற்றவாசிகள் பலி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது

 படகில் குண்டு வெடிப்பு : உயிர் தப்பிய மாலைத்தீவு ஜனாதிபதி

தாய்­லாந்தைத் தாக்­கிய சூறா­வளி

மும்பை தொடர் குண்டு வெடிப்பு : 5 பேருக்கு மரண தண்டனை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

துருக்கிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து படகு 5 சிறுவர்கள் உட்பட 17 குடியேற்றவாசிகள் பலி

28/09/2015 துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற பட­கொன்று ஞாயிற்­றுக்­கி­ழமை கவிழ்ந் ­ததில் 5 சிறு­வர்கள் உட்­பட குறைந்­தது 17 சிரிய பிர­ஜைகள் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர்.


ஆசிட்வீச்சு அவலங்கள் - தி. சுவாமிநாதன், நாமக்கல்.

.


உலகம் முழுவதும் பெண்கள் மீது ஆசிட் வீசும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த வருடங்களில் காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா ஆகியோர் ஆசிட் வீச்சால் கொடூரமாக பாதிக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தனர். முன்பு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னால் அமைச்சர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. மனிதாபிமானமற்ற குற்றங்களைச் செய்யும் மனித விலங்குகள், மன நோயாளிகள் சிலர் நம்மிடையே வெளியில் தெரியாமல் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஆசிட் வீச்சு சம்பவங்கள் திரும்ப திரும்ப நிகழ்வது குற்றவாளிகள் குறைந்து விடுவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதையுமே காட்டுகிறது. தான் ஆசையாய் காதலித்த பெண்ணின் மீதே ஆசிட் வீசி துடிக்க துடிக்க அவள் முகத்தை சிதைப்பது, அழிப்பது என்ன வகையான காதலென்று தெரியவில்லை. சமீப காலங்களில் பெண்கள் சந்தித்து வரும் இன்னல்களில் முக்கியமானதாக ஆசிட் வீச்சு கருதப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை. படுபாதக வன்முறையில் ஈடுபடும் கொடூர உள்ளங்கொண்ட வஞ்சகர்கள் களை எடுக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு, நீதிமன்றத்திற்கு காவல்துறைக்கு அஞ்சாமல் பெண்ணினத்தை காலில் போட்டு மிதிப்பவர்களை தண்டிக்க சட்டங்கள் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. அதிகச் சட்டங்கள் மட்டும் குற்றங்களை குறைத்து விடும் என்பதும் நடைமுறையில் உண்மையாக இருப்பதில்லை. தண்டனை  பற்றிய அச்சமே இல்லாமல் தாக்குதல்கள் நடக்கின்றன.

மலரும் முகம் பார்க்கும் காலம் 16 - தொடர் கவிதை

.

கவிதை 16  எழுதியவர்: இளைய அப்துல்லாஹ் (எம்என்எம்.அனஸ்,கனடா)
கவிதையை எழுதியவர் ஊடகவியலாளரும், படைப்பாளியுமான திரு.இளைய அப்துல்லாஹ் அவர்கள்(எம்என் அனஸ்,தீபம் தொலைக்காட்சியின்; முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஊடகவியலாளர்,  ஐபிசி தொலைக்காட்;சியின் செய்தி வாசிப்பாளரும் ஊடகவியலாளரும்)

மலரும் முகம் பார்க்கும் காலம்

கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்.
அது ரசனையின் காலம் பூக்களின் ஓவியத்தை நானாகவே
ரசிக்கத்தொடங்கினேன். ஒற்றை உணர்வு
எனக்கு மட்டுமே தோன்றிடும் ஒன்றா?

பரந்த கிளை மரம்போல அவள் படர்ந்த
பார்வை வாசம் நிறம் எல்லாமே தோன்றின.
எப்போதும் உணர்வுதானே எசமான்.
பிடிபடாத நீர்த்தோற்றத்தில் ஒரு கவிதை பிறந்தது.

சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள் 01.10 2015

.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார்.
சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி!
ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்புகிறேன். அதற்கு என் தாய்மொழிதான் சிறந்தது. உனக்குத்தான் ஆங்கிலமும் தமி ழும் தெரியுமே, நான் சரியாக பதில் சொல்கிறேனா… என்று நீதான் பார்க்கவேண்டும்” என்றார். கச்சித மாக இருந்தன அவரது பதில்கள்.
கற்பனையில்
ஒரு கதாபாத் திரத்தை உள்வாங்கிக் கொண்டு, அதை இயக்குநர் விரும்பும் வகையில் நடிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! இதை அவரிடமே ஒருமுறை கேட்டேன். அப்போது அந்த அறையில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம். உடனேயே ஒரு கதாபாத்திரத்தை சொல்லி, அந்தப் பாத்திரம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் எப்படி நடிக்கும் என்று எனக்கு நடித்துக் காட்டினார். அவரது விஸ்வரூப தரிசனத்தை அங்கே நேரில் பார்த்தேன்... ரசித்தேன்... பிரமித்தேன். தான் ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு என்னை மதித்து எனக்காக மட்டுமே நடித்து காண்பித்தார்.

ஆய கலைகள் 64

.

தமிழ் சினிமா குற்றம் கடிதல்



குற்றம் கடிதல்


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ போல, எப்போதாவது இதுபோல் ஒரு சில நல்ல படங்களே தமிழ் சினிமாவை வாழ வைக்கின்றது. அதிரடி, மாஸ், பாடல், டான்ஸ் என கமர்ஷியல் பஞ்சாமிர்தத்தை பார்த்து சலித்துப்போன நம் மக்களுக்கு ஒரு தரமான படத்தை நாட்டிற்கு தேவையான நல்ல கருத்துடன் சொல்ல வந்திருக்கின்றது குற்றம் கடிதல்.
குற்றமே பகையை உண்டாக்கும் என்ற ஸ்லோகனுடன் தான் படத்தின் தலைப்பே வருகின்றது, அப்படி என்ன குற்றம், அதன் விளைவு என்ன, அதற்கு தீர்வு தான் என்ன? என்று 2 மணி நேரத்தில் பல உணர்ச்சிப்பூர்வமான காட்சி அமைப்புகளுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் பிரம்மா.
கதைக்களம்
மெரிலின் (ராதிகா பிரசித்தா), மணிகண்டன் (சாய் ராஜ்குமார்) கலப்பு திருமணத்துடன் ஆரம்பிக்கின்றது படம், மெர்லின் பள்ளி ஆசிரியை, எப்போதும் முகத்திலும், மனதிலும் ஒரு வகை பதட்டம் நிறைந்தவர். மணிகண்டன் ஒரு சாப்ட்ஃபேர் இன்ஜினியர் கலங்காத மனம், நிதானமாக செயல்படுபவர். வீட்டார் சம்மதம் இல்லாமல் திருமணம் முடிக்கின்றனர்.
திருமணம் முடிந்த முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மெர்லின், தன் தோழிக்காக, அவர் எடுக்கவேண்டிய வகுப்பை இவர் எடுக்கின்றார். செழியன் என்ற சுட்டி மாணவன் ஒரு மாணவிக்கு முத்தம் கொடுத்துவிட்டான் என்பதற்காக அவனை மன்னிப்பு கேட்க சொல்கிறார் மெர்லின். அவன் அதெல்லாம் முடியாது என நக்கலாக பதில் சொல்ல, மெர்லின் கோபத்தில் அவனை அடிக்க, மயங்கி விழுகிறான்.
இதன் பிறகு செழியனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல, மெர்லின், மணிகண்டனும் பிரச்சனை முடியும் வரை வேறு ஊருக்கு செல்ல, செழியன் பிழைத்தானா? மெர்லின் தன் தவறை உணர்ந்தாரா? என்பதை உணர்ச்சிப்போராட்டங்களாக வடிவமைத்துள்ளார் பிரம்மா.
படத்தை பற்றிய அலசல்
தமிழ் சினிமா உலக அரங்கில் காலரை தூக்கி விடும் காலம் போல இது, காக்கா முட்டையை தொடர்ந்து இப்படி ஒரு தரமான படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்த பிரம்மாவிற்கும் இப்படத்தை தயாரித்த சதீஸ் அவர்களுக்கும் முதல் பாராட்டு. படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் நடித்தார்கள் என்று ஒரு இடத்தில் கூட சொல்ல முடியாது, பள்ளியில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவன் கூட வாழ்ந்திருக்கான் கதாபாத்திரமாகவே.
மிஷ்கின் படங்களையே மிஞ்சும் சிம்பாளிக் காட்சிகள், அந்த பையனை அடித்து விட்டு, வீட்டிற்கு அழுது கொண்டே வரும் மெர்லின் காலில் ஒரு பாலிதீன் பை ஒட்டி வருகின்றது. செய்த தவறு காலை சுற்றி வருவதாக காட்டியுள்ளாரா இயக்குனர் என்று தெரியவில்லை.
இதேபோல் செழியன் ஆட்டிசம் குழந்தை என்று நினைத்தால் மிக புத்திசாலி பையனாகவே காட்டியிருக்கிறார்கள். ’இதெல்லாம் சாப்பிடாதீங்க சார், வாய்வு வந்திடும்’ என்று வாத்தியரை கிண்டல் செய்து, அம்மாவிற்கு தெரியாமல் அவர் ஆட்டோவ எடுத்து ஓட்டுவது என செம்ம வாலு.
படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் சிம்மசொப்பனமாக விளங்குவது பாவெல் நவதீகன் தான்.(மெட்ராஸ் படத்தில் கார்த்தியிடம் வம்பு செய்வாரே அவரே தான்). செழியன் மாமாவாக கம்னியூசம் பேசி, முரட்டு அன்பு நிறைந்த இளைஞனாக செம்ம ஸ்கோர் செய்கிறார்.
முதல் காட்சியிலேயே ஒரு குருக்களிடம் விதாண்டவாதம் செய்து, மெர்லின் அம்மாவிடன் சண்டைப்போடும் போது அங்கு ஜெபம் நடக்கும் போது கடைசி வரை காத்திருக்கிறார் பாவெல். இதெல்லாம் பெரியார் கட்சிக்கே உண்டான கொள்கை போல.
வெள்ளைத்தோல், கண்ணாடி, ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களை மட்டும் நல்லவர்களாக பார்த்து வரும் இந்த சமூகத்தில், நடு இரவில், ஒரு லாரியில் பயணிக்கும் மெர்லின், மணிகண்டன், ‘ஏன் இந்த லாரியில் ஏறினாய், அவன் யார், பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு’ என்று மணி திட்ட, அடுத்த நிமிடம் லாரி ட்ரைவர் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி தரும் காட்சி செம்ம சவுக்கடி.
அதேபோல் திருடனை நாங்கள் அடிப்பதும், குழந்தைகளை நீங்கள் அடிப்பது ஒன்றாமா? என்று கேட்கும் பெண் போலிஸ் அடுத்த காட்சிகள் தன் மகனிடம் ‘என்னப்பா சாப்பிடுகிறாய்’ என கேட்பது கிளாஸ். கொலைவெறியுடன் இருக்கும் பாவெல், தலைமை ஆசிரியரை சந்தித்து, உங்களுக்கு ஒரு பையன் இருந்தால் இப்படி செய்வீர்களா? என்று கேட்க, ஏதும் பேச முடியாமல் தலைமை ஆசிரியர் அழுக, தலைமை ஆசிரியர் மனைவி உடனே, எங்களுக்கு ஒரு பையன் இருந்தான் அவன் இறந்துவிட்டான் என்று அந்த நிகழ்வை கூறும் இடத்தில் கண்டிப்பாக இரண்டு கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்கும்.
படத்தின் ஆரம்பித்திலேயே செக்ஸ் கல்வி எத்தனை முக்கியம் என்று பேசும் அந்த ஆசிரியை கதாபாத்திரம் செம்ம போல்ட். எப்படி நான் பிறக்கிறோம் என கிளாஸ் எடுக்க வரும் போது, ஆசிரியை கிண்டல் செய்யும் மாணவனிடம், அவர் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி பாடம் எடுத்து, அதே மாணவனை கைத்தட்ட வைக்கும் காட்சி, ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டலில் அதிர்கிறது.
க்ளாப்ஸ்
தற்போது உள்ள பள்ளி சூழலுக்கு ஏற்ற கதைக்களம், ஒவ்வொரு மாணவர்களும், ஆசிரியர்களும் பார்க்க வேண்டும் என்று படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பிராச்சாரம் செய்ய வைக்கும். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும். ஷங்கர் ரங்கராஜன் இசையில் பின்னணி இசை, பாடல் என்று அனைத்து நன்றாக இருந்தாலும், கடைசியில் வரும் அந்த பாரதியார் பாட்டு....என்றும் பாரதி பாரதி தான். மணிகண்டன் ஒளிப்பதிவு சென்னையின் பகல், இரவை நம் கண்களிலேயே பார்த்தது போல் உள்ளது.
பல்ப்ஸ்
எதுக்குங்க சொல்லனும், 10 வருடத்திற்கு ஒரு முறை தான் இப்படி ஒரு படம் வருகின்றது, அதிலும் குறை கண்டுப்பிடிக்க வேண்டுமா?
மொத்தத்தில் குற்றம் கடிதல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம், தமிழ் சினிமா ரசிகர்கள் தவிர்க்க கூடாத படம்.
ரேட்டிங்- 4/5   நன்றி cineulagam