2013 சிறப்பாக அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.
 தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2013 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குழு


ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா 27.12 2012

.
கெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா சென்ற வியாழக் கிழமை 27ம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் நிறைந்து காணப்பட்ட இந்த தேர்த்திருவிழாவிலே எம்பெருமான் ஆரோகணம் செய்த காட்சியை கீழே காணலாம்


அபத்த நாடகம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
ஒரு சில வாரங்கட்கு முன் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் “முத்தமிழ் மாலை 2012” என்ற நிகழ்ச்சியை நடாத்தி இருந்தது. முதல் நிகழ்ச்சியே  Dr J ஜெயமோகனின் தயாரிப்பில் “கம்பனும் கவிராயனும்” இசைசித்திரம். அருணாசல கவிராயரின் பாடல்கள் கதை கோவையாக இடம் பெற்றது.   Dr J  ஜெயமோகனே கதையை கூற பாடல் இடம் பெற்றது. கதையின் பாத்திரத்தை சந்தர்ப்பத்தை விழக்கிய Dr J ஜெயமோகன் தனக்கே உரிய பாணியில் நகைசுவையை கலந்து கூறினார். பலர் இரசித்தனர். சிலர் இது தேவைதானா எனவும் வினாவினார்கள்.

மறுபடியும் பிறந்தெம்மை இரட்சிக்க மாட்டீரோ?

.


"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"

பைபிளது வழிகாட்ட வருடங்கள் காத்திருந்தோம்

கடல்கடந்த பலமதங்கள் கண்கலங்கி நின்றிடவே

உலகெங்கும் பாவங்கள் பலவாகப் பெருகியதேன்?



சொல்லுக் கடங்காத கொடுமைகள் தலைதூக்க

பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச

தள்ளாடும் மனித இனம் தவறான வழி போக

இல்லாது போனதேன் உன்கருணை என் தேவா?


சைவமன்றம் வழங்கும் சரவணபவ சங்கீத சமர்ப்பணம்

.

புத்தாண்டு கொண்டாட்டம்(?????)-

.
                             முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் 

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

நொண்டி --புதுமைப்பித்தன்

.
     இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.

     ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, சௌகரியமாகப் படுக்கையை விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.

     "ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது ஒரு குரல்.

     "அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது மற்றொரு குரல்.
     கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.


     மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம் வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன.

     "சரிதானே ஸார்" என்று வெளியே யிருந்த குரல் கேட்டது.

     "ஆமாம் அப்பா" என்றார் வந்தவர்.

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக 4 அம்சத் திட்டம்: அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் பொப் கார் அறிவிப்பு


Bob Carஅவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார்.

நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சர் உயர்திரு கக்கன்

.
ஒரு அன்பர் அனுப்பியது - பகிர்வு


உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல். 

உயர் திரு .கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .
மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். 

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

உலகச் செய்திகள்

.
நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ஒபாமா!
 
தீவுக்காக மோதும் ஜப்பான் - சீனா: தொடரும் பதற்றம்!

உக்ரைனில் கடும் பனி: 37 பேர் மரணம்

சோதனை என்ற பெயரில் இளம்பெண்களிடம் சில்மிஷம்: மருத்துவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி : கணவர் தற்கொலை

 பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா

தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்


தமிழர்களும்... பருவக் காற்றும்..



தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன.மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டுதாய்லாந்தில் சங்க கால நாணயங்கள்கம்போடியக் கல்வெட்டில்தமிழ் மன்னனின் பெயர்சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம்ஜாவாவில் கப்பல்சிற்பம்சங்கஇலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள்ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டியமன்னனின் தூதன்தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள்டாலமி,பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரீகர்களின் பயணக்குறிப்புகள்யுவான் சுவாங் பாஹயான் முதலியசீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

கொழும்பில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

.


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களுமான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் முருகபூபதி ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் செயற்குழுக்கூட்ட அறையில் (இலக்கம் 08) நடைபெறும்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல் சமணலவௌ என்ற பெயரில் வெளியாகிறது. இதனை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரியே விஜயரத்தின சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். வண்ணாத்திக்குளம் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்தில் டீரவவநசகடல டுயமந என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் குமாரசாமி.
நடேசனின் மற்றுமொரு நாவலான உனையே மயல்கொண்டு டுழளவ in லழர என்னும் பெயரில் வெளியாகிறது. இதனை இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜித்த யாப்பா பதிப்பகத்தினர் வெளியிடுகின்றனர்.
முருகபூபதியின் பத்து சிறுகதைகள் சிங்களத்தில் மதகசெவனெலி (ளூயனழறள ழுக ஆநஅழசநைள) என்றபெயரில் வெளியாகிறது. இக்கதைகளை ஏ.சி;.எம் கராமத் மொழிபெயர்த்துள்ளார். தோதன்ன பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.
இந்நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளிகள் பத்திரிகையாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்நிகழ்வை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது.


இலங்கைச் செய்திகள்

.
சீரற்ற காலநிலையால் 11 பேர் பலி: 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வடகிழக்கு தமிழ் அதிகாரிகளின் 'மௌனவிரதம்'

சந்தர்ப்பவாத அரசியலை மற்றொருமுறை தோலுரித்துக் காட்டிய குற்றப் பிரேரணை
எம்.எஸ்.எம்.ஐயூப்
நாடு(நட்டுக்)கழண்ட தமிழீழ பாராளுமன்றத்தின் பிரித்தானிய அலைவு- 2
அருளம்பலம்.

சீரற்ற காலநிலையால் 23 பேர் பலி : 36 பேர் காயம்

செம்மணி, சூரியகந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தும் மாத்தளை எலும்புக்கூடுகள்

வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் அதிக சேதம்: பணிச்சங்கேனி பாலமும் சேதம் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு

யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது

14 வயது சிறுமி கர்ப்பம்: சந்தேகத்தில் 42 வயதுடைய நபர் கைது

 சிலாபத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

நாவலர் விழா

.
  உ
சிவமயம்


                            
  நல்லைநகர் தந்த
ஆறுமுகநாவலர்
 நவாலியூர் தந்த
சோமசுந்தரப்புலவர்


 சைவத்திற்கும் தமிழிற்கும் அளப்பரிய  பணிபுரிந்த பெரியோர்களான
ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களையும் 
சோமசுந்தரப் புலவர் அவர்களையும் 
நினைவுகூரும் விழா 
9 – 3 – 2013  சனிக்கிழமை மாலை 5மணி
 இடம் - 23 றோஸ் கிறசென்ற் - றீயன்ஸ்பார்க் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபம்             

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல்

.

கணிதம் மற்றும் அறிவியல் ஆளுமைகள் பற்றி நண்பர் பாஸ்கர் லட்சுமண் சிறப்பான கட்டுரைகளை  எழுதிவருகிறார்,  அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதிய இக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று
•••
ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி
பாஸ்கர் லட்சுமண்
ஃப்ளோரென்ஸ்  நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது ஒளி பாய்ச்சிப் பார்ப்போம்.
ஃப்ளோரென்ஸ் இத்தாலியிலுள்ள ப்ளோரென்ஸ் என்ற ஊரில் உயர்தர நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அப்போது நிலவிய சமுதாயக் கருத்துக்களுக்கு மாறாக ஃப்ளோரென்ஸின் பெற்றோர்கள் பெண்கள் படிப்பதை ஆதரித்தனர். ஆசிரியரை வைத்து பிரெஞ்சு, தாவரவியல் மற்றும் பூகோளம் ஆகியவற்றை நைடிங்கேலுக்குக் கற்பித்தார்கள். ஃப்ளோரென்ஸ் மீது மிக்க பாசம் கொண்ட தந்தை, கல்லூரிப் பாடங்களை தாமே வீட்டிலேயே கற்றுக் கொடுத்தார்.

ஓலைப் பெட்டிகளை தெரியுமா உங்களுக்கு ...

.


உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம்.

பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

சிட்னியில் சித்திரைத் திருவிழா -2013 21.04.2013


தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சிட்னி தமிழர்களின் பேராதரவுடன் நடத்தும்
சிட்னியில் சித்திரைத் திருவிழா -நாள் முழுக்க தமிழர்களின்கொண்டாட்டம் !!
நாள்: 2013 ஏப்ரல் மாதம் 21ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இடம்: காசில் ஹில் லோயர் ஷோ கிரௌண்ட், காசில் ஹில் 
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி இந்த நிகழ்வில் உள்ளூர் கலைங்கர்களின் கலை நிகழ்சிகள்,குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள்உணவுஅரங்கங்கள்விற்பனை அரங்கங்கள் என பல சிறப்புஅம்சங்கள் இடம் பெறுகிறது.

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை.. வித்யாசாகர்-

.


நான் அன்றும் இறந்திருக்கவேண்டும்
இருப்பதைத் தொலைத்த அந்த வலி
அத்தனை கனமானது;
விமானமேறி நாடுகடந்து
நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு
வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும்
அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய
ஓட்டமும் தவிப்பும்
எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும்
வானம் கிழிவதைப் போல அன்று
அறுபட்ட மனதில்
அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை
காதாழம் சிதைக்கும் மேளசப்தத்தை நிறுத்திக் கொண்டு
அவளை உயிரோடு தேடும் அழையை
என்னால் அடக்கவே இயலவில்லை
அவளின் மூடிக் கிடக்கும் கண்கள் திறந்து
ஒரேயொரு முறை எனைப் பார்க்காதா எனக் கெஞ்சிய
தருணம்  வாழ்வின் அகோர முகத்தைக் கொண்டது
கண்ணடைத்து வாய்கோணி ஐயோவென்று
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுத அழையில்
நான் குடித்துவளர்ந்தப் பாலின் வாசம்கருகி எனை உயிரோடு கொன்றது

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்


.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கிற நிலையில் கடந்த ஒரு வருட நினைவுகளை மறந்துவிடுகிற ஹீரோவின் சிந்தனையை சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன்.
'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'N.k.P.K.’ கூட்டணி!
கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் நண்பர்கள்களின் ரூமிற்கு வருகிறார் ஹீரோ விஜய் சேதுபதி.
கிரிக்கெட் ஆடலாம் என்று கிளம்புகிறார்கள். பந்தை கேட்ச் பிடிக்கிற நேரத்தில் பின்னால் சாயும் விஜய் சேதுபதிக்கு பின் மண்டையில் நல்ல அடி விழ அப்புறம் அரை சேதுவாகி நண்பர்களை அல்லாட வைக்கிறார்.
அதுவும் எப்படி? ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்லி...
நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன்.
அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம் என்னாச்சி? என்று கேட்டபடியே "பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? மெடுலாவில அடிபட்டிருக்கும் அதான். இப்ப ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்" ஐந்து நிமிடத்திற்குகொரு முறை இதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார் இவர்.
இந்த அடியில் சுமார் ஒரு வருட சம்பவத்தை அப்படியே மறந்தும் விடுகிறார் விஜய் சேதுபதி.
அதுவும் ஒரு வருடத்திற்குள் காதலித்து கல்யாணம் செய்யப் போகிற வருங்கால மனைவியையும் கூட.
கல்யாணத்திற்கு இன்னும் இரண்டே தினங்கள் இருக்கிற நிலையில் நண்பர்கள் அதே காதலிக்கு கல்யாணம் செய்து வைத்தார்களா? விஜய் சேதுபதி குணமடைந்தாரா? நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் க்ளைமாக்சோடு முடிகிறது படம்.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் டூயட் இல்லை. படம் துவங்கி சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அறிமுகமாகிறார் ஹீரோயின்.
ஒரே ஒரு பாட்டுதான். இப்படி தமிழ்சினிமாவின் ரெகுலர் ஃபார்முலாவை கிழித்து காயப் போட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர் பாலாஜி.
இந்த சம்பவம் அப்படியே உண்மைக்கதை என்று கடைசியில் விளக்குகிறார்கள். அதுவும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் வாழ்வில் நடந்த சம்பவமாம் இது.
தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சுந்தரபாண்டியன் என்று கதை தேர்வில் மெனக்கெடுகிற ஆள் போலிருக்கிறது விஜய் சேதுபதி.
இந்த படமும் அவரது கதைகேட்கும் திறனுக்கு ஏற்றார் போலதான் அமைந்திருக்கிறது.
முகத்தில் பெரிய ரீயாக்ஷன் ஏதுமின்றி, அதே நேரத்தில் ரசிகர்களை குலுங்க வைக்கிற வித்தையும் தெரிந்திருக்கிறது இவருக்கு.
விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம்.
'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல.
இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!
தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!)
படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை.
நிஜ சம்பவத்தில் தொடர்புடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே!
முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த கொமெடி எக்ஸ்பிரஸ்.
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள்
ஒளிப்பதிவு: பிரேம் குமார்
இசை ஷங்கர், சித்தார்த்
இயக்கம் பாலாஜி தரணிதரன்
நன்றி விடுப்பு 

மரண அறிவித்தல்

.

                                       மரண அறிவித்தல்                                                                 
             
    திரு. ராஜசிங்கம் அரியரட்ணம் மக்கன்ரையர்






                             மறைவு  14 .12 .2012




Rajasingham Ariyaratnam Macintyre passed away on 14 December 2012.
 
He is the father of  Rabindranath and Yohan. Jennifer Joseph is his former wife.
 
He is the brother of Ernest Macintyre, Gandhi Macintyre, the late Chelvasingham

Macintyre, and Evelyn Macintyre

The funeral will be at South Chapel, Rookwood Cemetery between 3:30pm and 4:15

pm on Wednesday 19 December.




 

அழிக்கப்பட முடியா தேசம் - -தமயந்தி -

.

சிறுவயதுக் கரையோரம்
கட்டிய மணல் வீட்டை அலை
வந்து வந்து அழித்துப் போனது.
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு
பின், 
என்சிறு கிராமக்கோடியில்
வியர்வையாலுங் குருதியாலும்
கட்டிய என்சிறு குடிலை
சிதைக்க முடிந்தது உங்களால்
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு

இப்போ
நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும்
கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை
எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும்
அழித்துவிட முடியாது என்பதை
அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால்.
ஏனெனெல்,
ஓர் அகதியின் கனவுகளாலனவை
எனது தேசம்.

Nantri:piraththiyaal.com

திருவெம்பாவை - 19/12 - 27/12

.

இந்திய சிதார் மேதை ரவிசங்கர் காலமானார்

.
.




சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் சாண்டியாகோ நகரில் காலமானார். அவருக்கு வயது 92.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லா ஜோல்லாவில் உள்ள ஸ்கிர்ப்ஸ் நினைவு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத்திணறல் கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில், இவர் செவ்வாய் மாலை அவர் காலமானார்.
இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்தவர் பண்டிட் ரவி சங்கர். இந்திய இசையின் தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர்.

ஓபன் தமிழர் கழகத்தின் நத்தார் பண்டிகை

.

ஷோபாசக்தி - நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி.

.


1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்?
மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி்ட்டது.  அரசியல் முழக்கங்களை உருவாக்கி சுவர்களில் எழுத ஆரம்பித்து, அரசியல் துண்டறிக்கைகள், கவிதைகள், நாடகம் எனப் பரப்புரை எழுத்துகளை எழுதியவாறே நான் எழுத்துத் துறைக்குள் நுழைந்தேன். பரப்புரை எழுத்துகள் என்பதற்கு அப்பால் தீவிர இலக்கியம் நோக்கி நகருவதற்கு ஏதுவான நிலைமைகள் அப்போது என் சூழலில் இருக்கவில்லை.

இலங்கைச் செய்திகள்

.
கைதுசெய்த மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை

காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

நீதியரசர் மீதான குற்றப்பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்

ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்புச் சின்னமாக ஷிராணி பண்டாரநாயக்க மாறிவருகிறார்.
   தாரிஷா பஸ்ரியன்ஸ்

பிரதம நீதியரசருக்கு ஆதரவாக வடக்கு சட்டத்தரணிகள் போராட்டம்

கண்டியில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு பேரணி

பிரதம நீதியரசருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்

இராணுவம் குறித்து கூட்டமைப்பின் நிலை!
என் சத்தியமூர்த்தி

அமைச்சர் கெஹலியவை படுகொலை செய்யத் திட்டமிட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத்தண்டனை

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு

super singer T20 யில் நிகில் மத்தியு அற்புதம்

.



கேக் வகைகளுக்கு

.


தகவம் பரிசளிப்பு விழா நிகழ்வுகளும் புகைப்படங்களும்

.

தகவம் பரிசளிப்பு விழா சென்ற 09.12.2012 ஞாயிறு மாலை கொழு்ம்பு தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.


எமது தமிழ் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றுதலுடன் ஆரம்பித்தது. தகவத்தின் தலைவர் திரு.மாத்தளை கார்த்திகேசு மற்றும் பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றினர்.

உலகச் செய்திகள்

.
சூடானின் துறைமுகத்திற்கு மீண்டும் விரைந்த ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

மலாலாவை சந்தித்த சர்தாரி

ஜப்பானில் மேலுமொரு அணு மின் நிலையம் மூடப்படுகின்றது!

சூடானில் உளவுபார்த்த இஸ்ரேலிய கழுகு

மலாலா 'தேசத்தின் மகள்': பாக். பாராளுமன்றத்தில் தீர்மானம்

உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம்

அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி




சூடானின் துறைமுகத்திற்கு மீண்டும் விரைந்த ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு


செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டின் போர்ட் சூடான் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் விரைந்துள்ளன.

இராக சங்கமம் விண்ணப்ப முடிவு திகதி 29.12.2012

.
 

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு - 49 மனைத்தக்க மாண்பு


                       
ஞானா:        ….ம்…திருவள்ளுவர் வந்து எப்போதும் பெண்களிலைதான் அழுத்தம் போடிறது வழக்கம்.                இப்ப பாருங்கோ வாழ்க்கைத் துணைநலம் எண்ட 6 வது அதிகாரத்திலை முதலாவது                 குறளிலையே “மனைத்தக்க மாண்புடையளாகி எண்டு பெம்பிளையிலை தானே அழுத்தத்தைப்            போடிறார். அந்த அதிகாரம் முழுக்கப் பெண்ணிலைதான் preassure.

அப்பா:        (வந்து) என்ன மேனை ஞானா  ஆருக்குப் preassure? ஏன் ஆருக்கும்
blood pressure ஆமே.            அப்பிடி எண்டால் டாக்குத்தரிட்டைப் போக வேண்டியது தானே.

ஞானா:        Blood Pressuer இல்லை அப்பா. இது திருக்குறள் pressure.

அப்பா:        எனக்கு விளங்கேல்லையே ஞானா.

ஞானா:        திருக்குறள் வந்தப்பா பெண்களிலை கன அழுத்தங்களைப் போடுது எண்டு தான் சொல்ல                வாறன்.

அப்பா:        நீ மகளே பழையபடி திருக்குறளிலை பிறெஷர் போட வாறியே. எந்தக் குறள் உன்னிலை                அழுத்தத்தைப் போடுது?


'இராக சங்கமம்' - புதியதோர் இன்னிசைப் போட்டி.


.
சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் பெருமையுடன் வழங்கும்,
 'இராக சங்கமம்' புதியதோர் இன்னிசைப் போட்டி.
 சிட்னிபுகழ் சப்தஸ்வராஸ் இசைக்குழுவினரோடு,
இசையமைப்பாளர் சதீஷ் வர்சன் இணைந்து வழங்கும் இசைத் திருவிழா.
 இவ்விசைப்போட்டிகள், இராகங்களை அடிப்படையாகக் கொண்ட மெல்லிசை மற்றும் திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் போன்ற தெரிவுகளை நான்கு பிரிவுகளாகக் கொண்டு அமையவிருக்கின்றது.
 அப்பிரிவுகளாவன:
1. சிறுவர் பிரிவு (12 வயதிற்குட்பட்டவர்கள்).
2. இளையோர் பிரிவு (13-21 வயதிற்குட்பட்டவர்கள்).
3. திறந்த போட்டியாளர் பிரிவு (வயதெல்லை இல்லை).
4. ஜோடிப் பாடகர் பிரிவு (வயதெல்லை இல்லை).



மு.தளையசிங்கத்தை வாசித்தல் - பகுதி 01

.
“இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே formula கலை மக்களுக்காக - நானும் கை தூக்குகிறேன். ஆனால், மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தன்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை ஒரு formulaவைக் கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது, முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்.”
(மு.த‌ளைய‌சிங்க‌ம், ‘முற்போக்கு இல‌க்கிய‌ம்‘)
1.
மு.த‌ளைய‌சிங்க‌ம், ஈழ‌த்தில் முகிழ்ந்த‌ முக்கிய‌ ப‌டைப்பாளி ம‌ட்டுமில்லாது க‌வ‌னிக்க‌த்த‌க்க‌தொரு சிந்த‌னையாரும் கூட‌.  அவ‌ருக்கு எழுத்தில் இருந்த‌ ந‌ம்பிக்கையைப் போல‌ க‌ள‌ப்ப‌ணியாற்றுவ‌திலும் அக்க‌றையிருந்த‌து. எழுத்து என்ப‌து உன்ன‌த‌மான‌து என்றும் அத‌ற்கு த‌னிம‌னித‌ர் ஒவ்வொருவ‌ரின் நேர்மையும், த‌னித்த‌ன்மையும் முக்கிய‌மான‌து என்றும் தொட‌ர்ந்து வ‌லியுறுத்திய‌வ‌ர். அவ்வாறு ப‌டைப்பில் நேர்மை அற்ற‌வ‌ர்க‌ளையும், க‌ட்சி/கொள்கை என்ற‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளுக்கு அட‌ங்கிப்போன‌வ‌ர்க‌ளையும், அதிகார‌ மைய‌ங்க‌ளாக‌ மாறுப‌வ‌ர்க‌ளையும் தொட‌ர்ச்சியாக‌ விம‌ர்சித்து வ‌ந்திருக்கின்றார். தானொரு ஆக்க‌ இல‌க்கிய‌வாதியே அன்றி ஒரு விம‌ர்ச‌க‌ன் அல்ல‌ என்று த‌ளைய‌சிங்க‌ம்  கூறிவ‌ந்தாலும், அவ‌ரை அறியாம‌லேயே ஈழ‌த்துச் சூழ‌லில் ஒரு த‌னித்துவ‌மான‌ திற‌னாய்வுச்செல்நெறியை உருவாக்கியிருக்கின்றார் என்ப‌தைக் க‌வ‌னித்தாக‌ வேண்டும்.
ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ளைப் போல‌ எழுத்தில் ஒரு க‌ற்ப‌னாவாத‌ புர‌ட்சியை உருவாக்கி த‌மக்குப் பின் ஒளிவ‌ட்ட‌ங்க‌ளையும், ப‌க்த‌ கோடிக‌ளையும் உருவாக்காது, தான் விரும்பிய‌/ந‌ம்பிய‌ மாற்ற‌ங்க‌ளுக்காய் க‌ள‌த்திலும் தளையசிங்கம் இற‌ங்கிய‌வ‌ர். அன்றைய காலத்து தமிழ் அரசியல் கட்சிகளோடு முரண்பட்டு ‘சர்வோதய’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர். மாற்றங்கள் பிறரால்/பிறதால் உருவாகும்வரை காத்திருக்காது தாம் விரும்பும் மாற்றங்கள் தம்மிலிருந்து முகிழவேண்டும் என நினைத்து சர்வோதயத்தை ஒரு அரசியல் முன்னணியாக்கி, தேர்தலில் தம் இயக்கம் சார்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியவர்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதற்கு -சாதி வெறிய‌ர்க‌ளுக்கு எதிராக- உண்ணாவிரதப் போராட்டத்தை தளையசிங்கம் தொடங்குகின்றார். இதனால் இவரும், அன்றைய காலத்தில் மாணவராய் இருந்த கவிஞர் சு.வில்வரத்தினமும் பொலிசால் மிக‌க்க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப்படுகின்றனர், இதன் நீட்சியில் தளையசிங்கம் நோயில் வீழ்ந்து, இரண்டு வருடத்திற்குள் த‌ன‌து இள‌வ‌ய‌திலேயே (38) ம‌ர‌ண‌ம‌டைகின்றார். தளையசிங்கம் அவ‌ர‌து கால‌த்தில் இல‌க்கிய‌ அதிகார‌ம் ஒரு குறிப்பிட்ட‌ க‌ட்சியிட‌ம்/முகாமிலும் குவிவ‌தை மிகக் கடுமையாக எதிர்த்த‌தைப் போல‌, நிஜ வாழ்விலும் அதிகார‌த்திற்கு/சாதிவெறியர்களுக்கு எதிராக‌ நின்ற‌ ஒரு சமூகப்பணியாளர் என்ப‌தையும் நாம் நினைவுகூர்ந்து கொள்ள‌லாம்.

காவி நிறக்காதல் கொடிமர வேர்களில்

.

மீண்டும் காதல் என்ற சங்கீதத்தில் சில சுருதிகளை மீட்டுப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு. வாழ்க்கையை வாசித்த யாசித்த பண்பாட்டு மாற்றங்களை தன்பாட்டுக்குள் கொண்டுவந்த அந்த சாமி. காதலை மறப்பதற்காக ஒரு கோழைத்தனமாய் தன் காதலி பிரிகிறாள் என்ற எண்ணத்தில் காவியுடுத்திய காதலன் அந்த சாமி.

தன் கண்முன்னமே தன் காதலி யாருக்கோ மனைவியாகிவிடுவாள் என்று எண்ணி தாங்கொணா துயரம்தலையில் அழுத்த சாமி தேடி சாமியாகிறான். ஆனால் அங்கே யாரை மறக்கவேண்டும் மனதில் பதிந்த அந்த முகத்தை அழிக்க அழிக்கவேண்டும் என்று எண்ணி காவியுடை தரித்தானோ அதே அவளைத் தவிர அவள் முகத்தைத் தவிர அவன் பிரார்த்தனையும் மறக்க முடியாத தன்மையும் நின்று அவனை உலுக்கி எடுத்தது. முடியாமல் மீண்டும் மலையிலிருந்து காட்டிலிருந்து அந்த காவி இறங்குகிறது. கொடுமை என்னவென்றால் அதே உடையில் சில சில்லிடும் சிலிர்ப்புக்கு அந்த பழைய நினைவுகள் மட்டும் நிலைத்து நிற்க அந்த பழைய இடமும் புளிக்காத காதல் என்ற உணர்வும் மட்டும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் 18 வருசங்கள் கடந்த பின்னும் இன்னும்.......

பாவம் காதல் காதலிக்கவிடவில்லை இல்லை காதலித்த காதல் வாழவைக்கவில்லை அந்த சாமியை. பச்சைக் காடுகளில் பச்சையானவர் இங்கு பழைய இச்சைக்கான காதலை கச்சையில்(காவியில்) தேக்கிக்கொண்டு அலையலையாய் புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு நிகழ்கால நிகழ்வுகளையும் கடந்தகால அவரது நிஜங்களையும் ஒப்பிட்டு காதலிக்கிறார் இப்போதும் அந்த பழங்காதலை.


பாரதி- பாருக்கு ஓர் உதாரணம்

.

  காத்திரமான எழுத்தினால் சமுதாயத்தைச் சிறப்பாக சீர்திருத்த முடியும் என்பதையும் சீரிய கையாள்கைத் திறன் மொழியாற்றலுக்கு அவசியம் என்பதையும் உலகுக்கு பறைசாற்றிய கவித்தலைவன் பாரதி. எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் மகாகவி என போற்றப்பட்ட பாரதியின் 130 ஆவது ஜனன தினம்.(11/12/2012)

கண்மூடித்தனம்!

.
.

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் காற்றில் பறப்பதாகவும், தண்ணீர் மீது நடப்பதாகவும் அந்த ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள். தாங்களும் அவரை போல காற்றில் பறக்கவும், தண்ணீரில் நடக்கவும் வேண்டும் என்பதற்காக நிறைய பேர் அவரிடம் சீடர்களாக சேர்ந்தார்கள்.
துறவி ஒவ்வொருநாளும் தனது குடிசையிலிருந்து வெளியே வந்து நதியின் மீது நடந்து பக்கத்து ஊருக்கு போவார். இதை பார்த்த சீடர்கள் தங்களுக்கும் நதியின் மீது நடக்கும் ரகசியத்தை சொல்லித்தருமாறு கேட்டனர்.

அதற்கு துறவி அதற்கான காலம் வரும் போது கற்றுத் தருவதாக சொன்னார். அதில் ஒரு சீடன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுநாள் துறவி நதியின் மீது நடந்து சென்றதும், அவர் பின்னாலேயே அந்த சீடனும் நடக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, நதி அவனை இழுத்து சென்றுவிட்டது. மற்ற சீடர்கள் துறவியிடம் சென்று நீங்கள் மட்டும் நதியில் நடக்கும் போது அவனால் ஏன் முடியவில்லை என கேட்டார்கள். 

 அதற்கு துறவி நதியில் எங்கெங்கு பாறைகள் இருக்கும் என எனக்கு தெரியும், அதனால் அதன் மீது கால்வைத்து நடந்து செல்கிறேன் என்றார். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றும் போது உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தேன்,
அதற்குள்... அந்த சீடன் நதியில் நடக்க முயற்சித்ததால் அவனை நதி இழுத்துசென்றுவிட்டது என்றார்.

தமிழ் சினிமா



நீர்ப்பறவை

துப்பாக்கி, இரத்தமில்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை காதலோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
நீண்ட நாட்களுக்கு பின்பு தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கும் நந்திதாதாஸ், தன் கணவரின் வாழ்க்கையை ப்ளாஷ்பேக் மூலமாக தொடங்குகிறார்.
வீட்டிற்கு வரும் நந்திதாவின் மகன் வீடை விற்க அனுமதி கேட்க, இது என் கணவன் வாழ்ந்த வீடு என்றும் 25 வருடங்களுக்கு முன்பு கடலுக்கு சென்றவர் கண்டிப்பாக திரும்பி வருவார் என கூறுகிறார்.
அன்று இரவே தன் வீட்டு தோட்டத்தில் "சமாதியில் பாடும் பாடலை" நந்திதா பாட, இதைப்பார்த்த மகன் மறுநாள் காலை அந்த இடத்தை தோண்டுகிறார்.
அந்த இடத்தில் எலும்புக்கூடுகள் கிடைக்க இது, தனது தந்தை தான் என உறுதி செய்யும் மகன், தாய் நந்திதாவை பொலிஸில் காட்டிக்கொடுக்கின்றார்.
பொலிஸ் விசாரணையில் தன் கணவனை தானே கொலை செய்து வீட்டிற்கு பின்புறம் புதைத்ததாக கூறினாலும் ப்ளாஷ்பேக்கை சொல்லும் போது நீர்ப்பறவை பறக்க தொடங்குகிறது.
பெற்றோர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கிளிநொச்சியிலிருந்து அகதியாக வந்த விஷ்ணு(அருளப்பசாமியை) "பூ"ராம்- சரண்யா பொன்வண்ணன் தம்பதியினர் தத்து வளர்க்கின்றனர்.
பெரும் குடிகாரனாக திரியும் விஷ்ணு, அப்பழக்கத்திற்கு அடிமையாகி கை, கால் நடுங்கும் நேரத்தில் ஊர் ஊராக கடன் வாங்கி குடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த சமயத்திலேயே கிறிஸ்தவ ஊழிய பெண்ணாக வரும் சுனைனாவை (யஸ்தர்) சந்திக்கிறார்.
தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணம் வாங்கிவிட்டு செல்லும் நாயகன் விஷ்ணு, அதையும் குடித்துவிடுகிறார்.
பின், விஷ்ணு குடிகாரன் என்கிற விடயம் அறிந்த சுனைனா விஷ்ணு தலை மேல் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய நாயகனுக்கு காதல் சிறகடிக்கிறது.
இருப்பினும் குடியை மறக்க முடியாமல் சிக்கித்தவிக்கும் நாயகனை பெற்றோர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கின்றனர்.
அங்கிருந்து தப்பித்து வரும் விஷ்ணு, தேவாலய விழாவை முடித்துக்கொண்டு அனைவரும் உறங்கும் சமயம் சுனைனா பக்கத்தில் படுத்துத்தூங்க மறுநாள் காலை நாயகனுக்கு அடி உதை கிடைக்கிறது.
இந்த சம்பவத்தால் மிகவும் அசிங்கப்பட்ட விஷ்ணு, மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து குடியை மறக்கிறார்.
குடியை மறந்து விட்டு சொந்த ஊர் திரும்பும் விஷ்ணு சுனைனாவை காதலிக்க முற்படுகிறார்.
இந்த சமயத்தில் வேலையில்லாத வெட்டிப்பயலுக்கு என் மகளை எப்படி கொடுப்பது என்று? நாயகி அம்மா கேள்வி கேட்க வேலை தேடி அலைகிறார்.
மீனவ சமுதாயத்தில் பிறந்து வெளியில் தொழிலாளியாக வேலை செய்வதை விட "கடலில் நீ தான் முதலாளி" என்று சுனைனா சொல்லும் யோசனைகள் விஷ்ணுவிற்கு ஆறுதலாக அமைகின்றன.
ஆனால் ஊரில் ஒரு கும்பல், மீனவ ஜாதி அல்லாதவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என விஷ்ணுவை விரட்டியடிக்கின்றனர்.
இந்த பிரச்னை தேவாலய நீதிமன்றத்திற்கு செல்ல, அங்கு விஷ்ணுவுக்கே சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது.
இருப்பினும் எதிர் தரப்பினர், யாரும் வேலைக்கு சேர்க்கமாட்டோம் என தெரிவிக்க சொந்த படகு வாங்கி மீன் பிடிப்பேன் என சபதமிடுகிறார் நாயகன்.
இந்த படகை வாங்க உப்பளத்திற்கு போய் வேலை செய்யும் விஷ்ணுவிற்கு எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கிறது.
கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சமுத்திர கனி, முன்பணம் பெற்றுக்கொண்டு தவணையில் படகொன்றை கட்டிக்கொடுக்கிறார்.
படகு தயாரானதும் சுனைனாவை திருமணம் செய்து கொள்ளும் நாயகன், தினமும் கடலுக்கு செல்கிறார்.
இந்த சமயத்தில் ஒரு நாள் கடலுக்கு சென்ற நாயகன், இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை.
குடும்பமே பதற்றத்தில் இருக்கும் அந்நேரம், மகனை தேடி தந்தை ராம் கடலுக்கு செல்கிறார்.
அங்கே இலங்கை கடற்படை விஷ்ணுவை துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்ததை கண்டு அதிர்ச்சியுடன் தனது மகனின் பிணத்தை கரைக்கு மீட்டு வருகிறார்.
வீட்டோடு இருந்த பையன் வீட்டிலேயே புதைத்து விடுவோம், பொலிசுக்கு தெரிந்தால் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உடம்பை போஸ்ட் மார்டம் பண்ணி நாசம் செய்து விடுவார்கள் என புலம்பும் சமயம் இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களை அழ வைக்கிறார்.
இந்த கதையை சுனைனா(சின்ன வயது) அதாவது நந்திதா தாஸ்(பெரிய வயது) பொலிசாரிடம் சொல்கிறார்.
இறுதியாக இவ்வழக்கு நீதிமன்ற வாசலை அணுகிய போது, இவ்வளவு நாளாக இதை ஏன் மறைத்தீர்கள் என? நீதிபதி கேள்வி கேட்க, சொன்னால் மட்டும் நியாயம் கிடைத்துவிடப் போகிறதா? என நந்திதா பதிலளிக்க இந்திய நீதித்துறையின் அவலம் வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது.
இலங்கை கடற்படை நடத்தும் துப்பாக்கிச்சூடு நாட்டில் மழை பெய்வது போல் ஆகிவிட்டது என்றும் மீனவர்களுக்கு சட்ட சபையில் இட ஒதுக்கீடு என அடிக்கடி பஞ்ச் வசனங்கள் பேசும் சமுத்திரகனிக்கு கைதட்டுக்கள் ஏராளம்.
தமிழ்வாத்தியாராக வரும் தம்பி ராமய்யா, சாரயம் விற்கும் வடிவுக்கரசி, ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்நந்தனின் இசை என அனைத்தும் படத்துக்கு வலுசேர்ப்பதுடன் பார்வையாளர்களை படம் பார்க்க தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.
கதாநாயகன்: விஷ்ணு
கதாநாயகி: சுனைனா
இயக்குனர்: சீனுராமசாமி
ஒளிப்பதிவு: சுப்ரமணியன்
இசை ஏ.ஆர்.ரஹ்நந்தன்.
நன்றி விடுப்பு