பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்



.


பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  காலமாகியுள்ளார். 
 பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் (67) உடல் நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

 கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த மலேசியா வாசுதேவன், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்


.
எனது இலங்கைப் பயணம் - பகுதி 10


முல்லைத்தீவு நகருக்கு செல்லும்போது முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் கண்ணில் பட்டது. கட்டிட அழிவுகள் திருத்தப்பட்டு செயலாற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு அண்மையில் இராணுவ முகாம்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் காணப்படுகிறது. வீடுகள் கடைகள் என்பன உடைந்து சிதைந்து காணப்படும்போது இந்த இராணுவ முகாம்கள் குவாட்டஸ் என்பன புதிய பொலிவோடு காட்சி தருகின்றன. அதை அடுத்து பெரிய காணியில் விளையாட்டுத் திடல்; காணப்படுகின்றது அதில் இராணுவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு நகரம் இழவுநிகழ்ந்த வீட்டைப்போல் காட்கியளிக்கின்றது. கடைகள் அவசர அவசரமாக கட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.

திருவேங்கடம் பார்வதி அம்மா காலமானார்



.
அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஊடக அறிவிப்பு


மேதகு தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள், 20 – 02 -2011 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு சாவடைந்துள்ளார், என்ற சோகச்செய்தி உலகத்தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழீழ தேசியத்தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள், சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இறந்து ஓராண்டு கடந்த நிலையில் அன்னையின் மறைவு மிகவும் கவலையளிக்கின்றது.

இலங்கை செய்திகள்





*
காதலர் தின வாழ்த்து குறுந்தகவலாக கணவனுக்கு வந்ததை அடுத்து மனைவி தற்கொலை

காதலர் தின வாழ்த்து கைத் தெலைபேசியில் குறுந்தகவலாக கணவனுக்கு வந்ததை அடுத்து மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழப்பாணத்தைச் சேர்ந்த இத் திருமணமான பெண் கணவருடன் கொழும்பில் வசித்து வந்ததாகவும் கணவர் கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் இப் பெண் காதல் செய்தே திருமணம் புரிந்தவர் ஆவர். கணவனின் கைத் தொலைபேசிக்கு காதலர் தின வாழத்து வந்ததை பார்த்த மனைவி கணவரை விளக்கம் கேட்டு சண்டை பிடித்ததாகவும் அதன் பின்னரே தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளார்கள். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
நன்றி பாடுமீன்.கொம்

சிட்னி துர்க்கை அம்மன் மாசி மகத் திருவிழா

.
சிட்னி துர்க்கை  அம்மன் மாசி மகத்  திருவிழா சென்ற வெள்ளிக்கிழமை மக்கள் நிறைந்த திருவிழாவாக காணப்பட்டது.   தீர்த்தோற்சவ திருவிழாவான இந்தத் திருவிழா பகல் 12.30 மணிக்கு அம்மன் தீர்த்தமாடும் நிகழ்வாக இடம் பெற்றது. வேலை நாளாக இருந்த போதிலும் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


சபிக்கப்பட்ட உலகு ---துவாரகன் -கவிதை-


.

மீளவும் பூச்சிகளும் பறவைகளும்

வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது

'காலத்தைச் செதுக்கும் கவிதை வரிகள்

.
ஜியோதிஸ்மன்

சி.சிவசேகரத்தின் “கல்லெறி தூரம்” கவிதைத் தொகுதியின் உள் நுழைந்து


என்னிடம் மகிழ்ச்சியில்லை
என்னிடம் வார்த்தைகளில்லை
கண்ணீர் இல்லை
எனக்குள் இருக்கும் இதயம்
கல்லைப் போல
அதில் நம்பிக்கையும்
அச்சமும் பூசப்பட்டுள்ளது
நம்பிக்கையை கையிலெடுத்துப்
புறப்படுகிறேன் நான்

- சில்வியா பிளாத்


அதே நம்பிக்கையை கையிலெடுத்துக் கொண்டு “கல்லெறி தூரம்” என்ற கவிதைத் தொகுதியூடாகப் புறப்பட்டிருக்கிறார் கவிஞர் சி. சிவசேகரம்.

ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு கதவு திறக்கப்படுகிறது. இதன் உண்மையை “கல்லெறி தூரம்” கவிதைத் தொகுதியை வாசித்த போது நான் உணர்ந்து கொண்டேன். இன்று மாலை வெளியிடப்படுகின்ற சி. சிவசேகரத்தின் “கல்லெறி தூரம்” என்ற கவிதைத் தொகுதி ஆசிரியரது எட்டாவது கவிதை நூலாகும். இவர் நான்கு மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களையும் “About Another Matter” என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுதியொன்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

உலகச் செய்திகள்

*
எகிப்தில் முபாரக்கின் ஆட்சி கலைப்பு ஜனநாயகத்துக்கு வழிசமைக்கவேண்டும்

ஒன்றுபட்ட மக்கள் சக்தியினால் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு எகிப்து சிறந்த உதாரணமாகிவிட்டது. எந்தவொரு வழி காட்டலோ அரசியல் தலைமைத்துவமோ இன்றி இணையத்தளங்களையும் பேஸ்புக் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி உருவான மக்கள் புரட்சி 18 நாட்கள் தொடர்ந்த நிலையில் இறுதியில் மூன்று தசாப்த கால ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு கடந்த வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன் புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.

அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்தியமை, எதேச்சதிகார ஆட்சிமூலம் மக்களை அடக்கி ஒடுக்கியமை, ஊழல், முறை கேடான ஆட்சிக்கு வழி வகுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் ஹொஸ்னி பாரக்கிற்கு எதிராக தொடர்ந்த நிலையிலேயே மக்கள் கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. இருந்தபோதிலும் அதன் பாரதூர தன்மையை அவர் அந்தளவு தூரம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.

கவனயீர்ப்புப் பேரணி 24.02.2011

.




சும்மா --அப்துல் கையூம்-


.

சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா எழுத ஆரம்பிச்சுட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது. இந்த உலகத்துலே எல்லாமே “சும்மா”வை சுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. அத நாம மொதல்லே புரிஞ்சுக்கணும். அம்மாவுக்கு அடுத்தபடியா எல்லாரும் அதிகமா உபயோகப் படுத்தற ஒரு வார்த்தை இந்த உலகத்துலே ஒண்ணு இருக்குதுன்னா சொன்னா அது “சும்மா”தான்.
மாடுகூட “அம்மா”ன்னுதான் கத்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க.

பேராதனை குறிஞ்சிக்குமரன் புலம்பல்


.
                                                                        பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


இருபுறமும் மனைவியரை இருத்திவைத்து இன்பமுறும்
குறிஞ்சிக் குமரனுக்கு கூறவொண்ணா மனக்குறையாம்
அருகிருந்து நாமிருவர் அணைத்தன்பு செய்கையிலே
பெருங்கவலை யாஎன்று தெய்வானை கலங்கி நின்றாள்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா

.
CEYLON STUDENTS EDUCATIONAL FUND-Australia (INC)
இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா
P.O.Box: 317, Brunswick,Vic- 3056, Australia
E.Mail: kalvi.nithiyam@yahoo.com Web: www.csefund.org


இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த டிசம்பர் 2010 ஜனவரி 2011 காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை.

இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 23 வருடகாலமாக நிதிப்பங்களிப்பின் ஊடாக உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (C.S.E.F) சமீபத்திய அறிக்கை.

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு


.

நம்மில் பெரும்பாலோர், மேற்கத்திய பானியின் தாக்கத்தால் இன்று இந்நவீன உலகில் சிக்குண்டு இருக்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ ஒருவகைமனப்பாதிப்புக்கும், சில சமயம் உளைச்சலுக்கும் ஆளாகிறோம். சில சமயம் என்ன இது செக்கு மாட்டு வாழ்க்கை ? என்று நொந்துகொள்கிறோம். ஏன் ?
நமக்குப் பல கடமைகள். நம் பணி, நம் குடும்பம், நம் நண்பர்கள் வட்டம், நம் சமூகக்கடப்பாடு மற்றும் அரசியல் என்று தொடர்பு ஏற்படுத்தி விரிவுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். சாதாரண பொழுது போக்குக் காரியங்களில் கூட நம் செயல்பாடும் சக்தியும் மிகுதியாகத் தேவைபடுகிறது.

தமிழ் சினிமா

வர்மம்



சரக்கும் சைட் டிஷ்ஷ§மாக ஆரம்பிக்கிறது படம். சம்பந்தமில்லாமல் என்ட்ரி கொடுக்கும் அரவாணிகளும், அவர்களின் அனர்த்த பேச்சுகளும் சீட்டில் சரியவிடுகிறது நம்மை. சரியாக முக்கால் மணிநேரம். சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று அலுக்க வைக்கிறவர்களையெல்லாம் விரட்டியடித்துவிட்டு கதைக்குள் கை பிடித்து இழுத்துச் செல்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன். வேறொன்றுமில்லை, பழிவாங்கல் கதைதான் வர்மம். (வன்மம் என்று வைத்திருக்கலாமோ?)

கிரிக்கெட் மட்டையின் கதை -பத்ரி சேஷாத்ரி-



.

தெருவில் உள்ள நாய்கூட கிரிக்கெட் விளையாடும் காலம் இது! தெருக்குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பார்க்கப் பரவசம் தருவது. அதுவும் கிராமங்களில் கையில் கிடைத்ததை எல்லாம் கிரிக்கெட்டுக்கான கருவிகளாக்கி கோர்ட்னி வால்ஷ் போலத் தங்களைப் பாவனை செய்துகொண்டு ஓடிவந்து வீசும் கை விக்கெட்டுக்கு மேலே வரப் பந்துவீசி, அதனை விவியன் ரிச்சர்ட்ஸ் போல முன்காலை மடக்கி மிட்விக்கெட் திசையில் ஒய்யாரமாக ஒரு புல் ஷாட் அடித்து விளையாடி யாஹூ என்று இந்தக் குழந்தைகள் கத்திக் குதூகலிப்பதைப் பார்ப்பதே ஆனந்தம்தான்!
நம் காலத்தில் நாம் என்னென்னவோ செய்து கிரிக்கெட் விளையாடியிருப்போம்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

வாரம்தோறும் இந்தக் கோவை தொடர்ந்து வெளிவரும்



6. பூமொட்டுகள்

ஒரு சிறப்பான மகிழ்ச்சியினை நான் மாணவாகளுடன் இருக்கும் போது பெறுகின்றேன். அவர்கள் ஒரு பூந்தோட்டத்தில் இருக்கும் மொட்டுக்கள் போன்றவர்கள். அவர்கள் இளைய நாயகர்கள். ஓரு நாட்டினை மட்டுமன்று, அனைத்துலக நாடுகளையும் மீண்டும் கட்டமைக்கும் - புனரமைக்கும் - மிகக் கடினமான பணியினை அவர்கள் ஏற்றுள்ளார்கள்!






கிரிக்கெட்


முரளியின் சுயசரிதை"800'

கிரிக்கெட் சரித்திரத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகசாதனை படைத்த முத்தையா முரளிதரன் சுயசரிதையை வெளியிட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் "800' விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய உலகசாதனை படைத்ததன் நினைவாகத் தனது சுயசரிதைக்கு "800' என்று பெயரிட்டுள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே அவர் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். எனினும்இந்தப் புத்தகம் ஆகஸ்ட் மாதமே விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.

38 வயதான முரளிதரன் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.


ஆங்கிலத்தில் பகவத் கீதை வகுப்புக்கள்


ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுடைய மாணவராகிய ஸ்ரீ வாசுதேவாசர்யா அவர்களால் பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயகங்களைப் பற்றிய விளக்கவுரை ஆங்கிலத்தில் நடைபெறவுள்ளது. மாதத்தின் நாலாவது ஞாயிற்றுக்கிழமைத் தவிர மற்றய ஞாயிற்றுக்கிழமைகளில் டார்சி வீதி ஆரம்ப பாடசாலையில் (வென்ற்வேர்த்வில்) பிற்பகல் 3 மணி தொடக்கம் 5.30 மணிவரை 18 வகுப்புக்கள் மார்ச் மாதம் 13ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். அன்பளிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலதிய விவரங்களுக்கு:
வெங்கட்    0422 315 957  குமார்  0407 108 372
ஷோபனா 0422 732 907     மகா 0425 235 181