துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 6ம் நாள்

படங்கள் கீழே



துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 5ம் நாள்

படங்கள் கீழே


துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 4ம் நாள்


.
துர்க்கை அம்மன் ஆலயத்தில் 4ம் திருவிழா இன்று கோலாகலமாக இடம் பெற்றது. . மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் கண்ணன் செல்வம் ஆகிய நாதஸ்வர தவில் கலைஞர்களுடன் ரூபதாஸ் குழுவினரும் இணைந்து அருமையான இசையை வழங்கினார்கள்

துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 3ம் நாள்


துர்க்கை அம்மன் ஆலயத்தில் 3ம் திருவிழா இன்று கோலாகலமாக  இடம் பெற்றது. மீனாட்சி அம்மனாக கையில் கிளியுடன் அலங்கரிக்கப்பட்டு அன்னப்பட்சி வாகனத்தில் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் கண்ணன் செல்வம் ஆகிய நாதஸ்வர தவில் கலைஞர்களுடன் ரூபதாஸ் குழுவினரும் இணைந்து அருமையான இசையை வழங்கினார்கள் மழை தூறிக்கொண்டிருந்தபோதும் பக்தர்கள் பலர் இணைந்திருந்தார்கள்.

படங்கள் கீழே

துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 2ம் நாள்

2ம் நாள் திருவிழா 28 .02 .2012 செவ்வாய்க்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது. துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு  வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் .

படங்கள் கீழே

துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 1ம் நாள்




.
முதலாம் நாள் திருவிழா 27 .02 .2012  திங்கட்கிழமை பக்தி பூர்வமாக இடம் பெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும்.  துர்க்கை அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு லலிதாம்பிகையாக வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது .திருவிழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்திருக்கும் தவில் வித்துவான் உள்ளூர் கலையர்களுடன் அருமையான இசையை தந்தார் . 

நாளை செவ்வாய்க்கிழமை 28 .02 .2012  லிட்கம், பெரேலா வாழ் மக்களின் திருவிழாவாக இடம்பெற உள்ளது . 

படங்கள் கீழே 

அரங்கேறும் நாடகம் - செ.பாஸ்கரன்


.

நாடகம் அரங்கேறுவதற்கான
மணி ஒலித்துவிட்டது
நெறியாளரோ
வல்லமை படைத்த அமரிக்கா
நாடகத்தின் கருப்பொருள் 
பழகிப்போன பாசிசம் 
வல்லரசென்ற பெயரை 
தக்கவைக்கும்; மேலாதிக்கம்
தாளம் தப்பி ஆடுகின்ற 
அதன் கூட்டாளிகளும் 
நடிகர்களாய் அணிவகுப்பு
திரைவிலகி காட்சி விரிகிறது
ஈரானின் முகத்தில் கறுப்புத்துணியும்
மண்டையோட்டில் இரண்டு கொம்புகளும் 
வைத்தாகிவிட்டது

”அன்பு வாழும் கூடு” - நிகழ்வின் பார்வை

.
நமது westmead parramatta நிருபர் 

25.Feb மாலை 7 மணிக்கு தமிழ் மணம் கமழ, பூரண கும்பம், குத்து விளக்கு வரவேற்க, Red Gum மண்டபத்தின் உட் சென்றோம். அலங்கரிக்கப்பட்ட மண்டபம்! அமைதியும் அழகும் எம்மை ஒன்றுசேர வரவேற்றது. எம்மவரின் வருகை நிஜமாகவே “அன்பு வாழும் கூட்டை” நோக்கி மாலை நேரத்தில் பறவைகள் பறந்து சென்று அடைவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

The Hill Holroyd Parramatta Migrant Resource Center குடும்ப வாழ்வை  வளம்படுத்த, புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி அவர்களின் பிரச்சினைகளில் பங்கு கொண்டு கை கொடுக்கவே இந் நிகழ்ச்சியை நடத்தியது. அதனால் அன்பு வாழும் இல்லமே “அன்பு வாழும் கூடு” என்பது அதன் தலைப்பாக அமைந்தது.



Conscila.Jerome மிகச் சுருக்கமாக அழகாக வந்தோரை வரவேற்றார்.தமிழருக்கு என்றும் உதவும் (Federal Member Of Parliament) Julie.Owens, ( Executive Director THHPMRC) Melissa.Monteiro தமிழர் பிரதி நிதியான (Holroyd city councilor) வசி(வசீகரன்.ராஜதுரை) ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.



சிட்னியில் நடந்த நா.மகேசனின் நூல் வெளியீடு



. நமது   ஹோம்புஷ் நிருபர்
                                 

வானொலிமாமா என அன்போடு அழைக்கப்படும் நா.மகேசன் அவர்களின் இரண்டு நூல்களான கேதீசர் முதுமொழி வெண்பா, மற்றும் குறளில் குறும்பு ஆகியன சென்ற சனிக்கிழமை 25.02.2012 அன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரத் பீல்டில் அமைந்திருக்கும் யுனைட்டிங் சேர்ச் மண்டபத்தில் அவுஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவில் இடம்பெற்றது.


மெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்


வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்:- மெளனம் கலைகிறது 5 -

Bookmark and Share
மெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்
வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்:-

மெளனம் கலைகிறது என்னும் எனது தொடரின் ஐந்தாவது பகுதியை எழுத முனைந்த போது நேற்று ( 23.01.12)  ஜனரள என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியானதொரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம்: 
"வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.  பிணங்களை எரியூட்டப் பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டு,  எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், மற்றும் வடக்கு, கிழக்குக்கின் மாவட்டங்களுக்கும் தலா ஒரு வாகனம் என்ற வகையில், இந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் ரகசியமான முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எரிவாயு வசதிகளைக் கொண்ட வாகனங்களில் பிண எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத துணை ராணுவக் குழுக்களுக்கு விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைச் செய்திகள்

வெற்றி பெற"கலாசாரம் மிக மிக முக்கியம்
இலங்கை விவகாரம்; ஜெனீவாவில் பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் அமெரிக்காவிடம் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கோரிக்கை




வெற்றி பெற"கலாசாரம் மிக மிக முக்கியம்

Wednesday, 22 February 2012
இலங்கையில் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம் என்பனவற்றுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மூத்தப் பிரஜைகள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர். சமூகமொன்றின் அல்லது தனிநபரின் பழக்க வழக்கங்கள், கலைகள், எழுத்துக்கள், அறிவுசார்ந்த விடயங்கள் தொடர்பானவற்றை அடிப்படையாகக் கொண்டே கலாசாரத்துக்கு வரைவிலக்கணத்தை வகுத்துக் கொண்டுள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளில் உள்ள பிரத்தியேகமான அம்சங்கள், கலைகள், படைப்புகள் யாவுமே கலாசாரப் பரிமாணத்துக்கு உட்பட்டவையாகும். மானிட வரலாற்றில் இவை காலத்துக்கு காலம் கூர்ப்படைந்து வந்திருக்கின்றன.

ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன்


.

ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
உலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப் பார்த்துக் கொண்டு வாழாவிருந்த அமரிக்காவையும் யுத்தத்திற்கான அழிவு ஆயுதங்களை வழங்கிய மேற்கு நாடுகளையும் மீண்டும் ஒரு முறை நம்புங்கள் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மேற்கு நாடுகள் ராஜபக்ச அதிகாரத்திற்குத் தண்டனை வழங்கும் என மக்களின் உணர்வுகளில் அறைந்து சொல்லப்படுகின்றது.

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா - திருமுறை முற்றோதல்- (69வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)-

04.03.2012 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்
WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC
Postal Address: 6 Dudly Street, Auburn NSW 2144
Tel: 612-96425406
உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 04.03.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திரு மா. அருச்சுனமணி அவர்கள்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “தொண்ணூறாவது பதிகம் - கோயில் (சிதம்பரம்);” இற்கு பொருள் விளக்கம் கூறவுள்ளார். தொடர்ந்து ஏழாம் திருமுறையில் எழுபத்திமூன்றாம் பதிகம் (திரு ஆரூர்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.
சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.
இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(Cnr Burlington Rd & Rochester St), Homebush
நேரம்: 04.03.2012 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

ஏழாம் திருமுறை 90வது பதிக விளக்கம்
“கோயில் (சிதம்பரம்);”
                   (திரு மா. அருச்சுனமணி அவர்கள்)
காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்  மேலதிக விபரங்களுக்கு:

திரு சி சிவஞானசுந்தரம் Tel:  96425406
திரு க சபாநாதன்  Tel:  96427767
திரு மா அருச்சுனமணி Tel:  87460635

வட அமெரிக்க தமிச்சங்கப் பேரவை வெள்ளி விழா


சர்வதேச தாய் மொழி தினம் _ 21 .02. 2012 -

.

 படவிளக்கம் : உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி

சர்வதேச தாய் மொழி தினம் (International Mother Language Day) இன்று 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்தத் தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இவ் வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. இதை அமுல்படுத்தவும் இதிலுள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்குப் பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு

தமிழ்திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி முதல் சிம்பு - தனுஸ் வரை நான்கு தலைமுறை நடிகைகள், நடிகர்களுடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி இன்று (20.02.2012) காலமானார்.

தமிழ், தெலுங்கு என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அண்மையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.என். லட்சுமி இன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.

சிட்னியில் இலக்கிய சந்திப்பு


.
இலக்கிய சந்திப்பு ஒன்று சிட்னி பரமட்டா பூங்காவில் 26.02.2012 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த முதலாவது இலக்கிய சந்திப்பை யசோதா பத்மநாதன் முன் எடுத்து ஒழுங்குபடுத்தியிருந்தார். சிட்னியில் உள்ள சில ஆர்வலர்கள் கலந்த கொண்டு சங்க இலக்கியம் தற்கால இலக்கியம் நல்ல கவிதைகள் பற்றிய அலசல் போன்றவற்றை மேற்கொண்டிருந்தார்கள்
அடுத்த இலக்கிய சந்திப்பு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான பங்குனி 25 அன்று 25.03.2012 பரமட்டா பூங்காவில் இடம்பெறும் . இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

சிட்னி நாதஸ்வர வித்வான் சத்தியமூர்த்தி யுடன் ஒரு கலந்துரையாடல்

பேட்டி கண்டவர் திரு ரவீந்திர ராஜா


Sydney Music Circle நிகழ்வு - 26th February 2012





SYDNEY MUSIC CIRCLE வழங்கிய நிகழ்வு 26. 02 .2012 அன்று DUNDAS COMMUNITY CENTRE ரில் இடம் பெற்றது. அந்நிகழ்வின் போது பங்கு கொண்டவர்களில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம்.








உலகச் செய்திகள்

 ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது

கிரேக்கத்துக்கு கடன் உதவி வழங்க யூரோ நிதி அமைச்சர்கள் இணக்கம்

அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி _



ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது

Tuesday, 20 செப்டம்பர் 2011 

லண்டன்: ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது.இதில் கடந்த வாரம் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிவெற்றிகரமாக நடந்துள்ளது.லண்டனில் 30 ஆவது ஒலிம்பிக் போட்டி,வரும் 2012 இல் நடக்கவுள்ளது.இதற்கான புதிய கட்டுமாணப்பணிகள் ஒவ்வொன்றாக முடிந்து வருகின்றன.இவற்றில் சோதனை போட்டிள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு ஒலிம்பிக் தொடங்கிவிட்டது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக லண்டன் ஹார்ஸ் கார்ட் பரேட் என்ற கடற்கரை கரப்பந்தாட்ட மைதானம் தயாரானது.இதில் சர்வதேச அணிகள் பங்கேற்ற கடற்கரைக் கரப்பந்தாட்டச் சோதனை தொடர் சமீபத்தில் நடத்தப்பட்டது.இதில் ஸ்பெயின் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த 24 பெண்கள் அணிகள் பங்கேற்றன.

அந்த நாளைய அழகியல் நினைவுகள்

.

தமிழ் சினிமா

மெரினா

 உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினா திரைக்கதை.

கொலிவுட்டில் பசங்க திரைப்படத்தின் மூலம் சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்கள், அவர்களின் மூலமாக குடும்பங்களில் ஏற்படும் உறவுகள் போன்ற விடயங்களை திரையின் மூலமாக எடுத்துக்காட்டிய இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் சிறுவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மெரினா.

உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினாவின் திரைக்கதை.

மெரினா கடற்கரையோடு தொடர்புள்ள காதலர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒன்றாக சேர்த்து இயக்குனர் பாண்டிராஜ் மெரினா திரைப்படத்தில் காட்டியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். நாயகி ஓவியாவுக்கு மெரினாவின் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி (பக்கடா பாண்டி) மெரினாவில் தங்குகிறான். அங்கு அவனைப் போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என்று பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

அவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள்.

இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தபால்காரர், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன்)-சொப்பன சுந்தரி(ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.

படத்தின் நாயகன் பக்கடா பாண்டி தான். மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும், பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும், நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான்.



சிறுவர்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது என்று உறுதியா சொல்லலாம். எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.



பல பாத்திரங்கள் மெரினாவில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சை எடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார். பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது.

மெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும், ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள். இவர்களுடைய காதலை நேரம் போவது தெரியாமல் சுவையாக இயக்குனர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.

நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இனி இவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குவியும் என்று கொலிவுட்டில் தகவல் வந்துகொண்டேயிருக்கின்றன.

களவாணி திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போன நாயகி ஓவியா மெரினாவில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

பல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று பலரை மெரினாவில் இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். " வாழ வைக்கும் சென்னை " பாடலும் நண்பன் " பாடலும் முனுமுணுக்க வைக்கின்றன.

5 டி கமெராவில் படம்பிடித்து தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்க்கு பாராட்டுக்கள்.

மெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம், நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை, ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு, தாத்தா, தபால்காரர், குதிரைக்காரன் இவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு, காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும்(கள்ள) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன.

ஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சினைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை.

இருப்பினும் திரைப்படம் போன்ற எந்தவொரு நினைவுகளும் இல்லாமல் இயல்பான முறையில் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை.

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஓவியா, சிறுவன் அம்பிகாபதி, ஜெயப்பிரகாஷ், பாண்டியன், கௌதம் புருஷோத், செந்திகுமாரி, ஜித்தன் மோகன்.

சிறப்பு நடிகர்கள்: சீயான் விக்ரம், சினேகா, விமல், அமீர், சசிகுமார், பிரகாஷ்ராஜ்.

இசை: ஜி.கிரிஷ்

ஒளிப்பதிவு: விஜய்

தயாரிப்பு, இயக்கம்: பாண்டிராஜ்

நன்றி விடுப்பு


முப்பொழுதும் உன் கற்பனைகள்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார்.

கான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆருதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.

இந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும் என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.

அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அப்படி அவர் என்ன பார்த்தார்? அமலா பாலை காதலிக்கும் அதர்வா, அவரை தனது அலுவலகத்தில் பார்த்தும் கூட எந்தவிதமான உணர்வையும் ஏன் வெளிப்படுத்தி கொள்ளவில்லை. அவர் எதற்காக கொலை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'.

சில படங்களின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த படத்தை பொறுத்தவரையில் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை மிகப்பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கருவை சுமந்துகொண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளின் மூலம் படத்தை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அடுத்த நொடியிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கவும் முடிகிறது.

பானா காத்தாடியில் பார்த்த பள்ளி பருவ அதர்வாவை இந்த படத்திலும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. பாடல் காட்சிகள், சண்டைகாட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அதர்வா, வசனம் உச்சரிப்பதில் மட்டும் ஏன் தான் வட இந்தியர் போல் பேசுகிறாரோ.

அமலா பாலை சுற்றி கதை நடப்பதாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. அதர்வாவுடன் காதல் செய்யும் காட்சிகள்தான் அதிகம். அதை நன்றாகவே செய்திருக்கிறார்.

சந்தானத்தின் வரும் சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ்க்கு டைலர் மேட் ரோல் என்று சொல்லலாம். அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சில காட்சிகளில் வந்தாலும் பாராட்டு பெறும் அளவுக்கு தனது பணியை செய்திருக்கிறார். சிறு வயது அதர்வாவாக நடித்திருக்கும் சிறுவன் ரொம்பவே கியூட்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் துல்லள் ரகம். தாமரையின் வரிகளில் பாடல்களும் புரியும் விதத்தில் இருக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களைப் போலவே காஸ்ட்யூம் டிசைனர் தீபாலி மற்றும் சண்டைபயிற்சியாளர் ராஜசேகரும் தங்களது பணியை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த ரகம் தான் என்றாலும், தனது திரைக்கதையின் மூலம் அதை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குநர். வெவ்வேறு கதைகளங்களை ஒன்றாக இணைப்பது போன்ற முயற்சியை செய்திருக்கும் இயக்குநர் அந்த இடங்களில் ரசிகர்களை சிறிது குழப்பமடைய செய்திருக்கிறார்.

படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதை அமைத்த விதம், லொக்கேஷன், சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கும் விதம், பாடல்கள், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி என ஒட்டு மொத்த படமும் ஒரு தரமான படமாக உள்ளது.


நன்றி விடுப்பு