தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

சிட்னி முருகன் ஆலய 7ம் திருவிழா

.
Image may contain: 3 people, indoor
Image may contain: one or more people, people on stage, basketball court and indoor

மரண அறிவித்தல் - திருமதி சாந்திமலர் சுரேஷ்குமார்

.


மரண அறிவித்தல் - திருமதி சாந்திமலர் சுரேஷ்குமார்

சாந்திமலர் சுரேஷ்குமார்  (ரதி) சிட்னி ஆஸ்திரேலியா (ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்) வலிவடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் சிட்னி ஆஸ்திரேலியா வை வதிவிடமாகவும் கொண்ட சாந்திமலர் சுரேஷ்குமார் அவர்கள் 18/03/2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலம் சென்ற சண்முகதாஸ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலம் சென்ற பாலசுப்ரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும், ஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தாயாரும், ஸ்ரீராம்   அவர்களின்  அன்பு மாமியாரும், சிட்னி ஆஸ்திரேலியா - சந்திரமலர் (பபி) , மகேந்திரன்  அவர்களின் அன்பு சகோதரியும், சிட்னி ஆஸ்திரேலியா - சிவஞானசுந்தரம், சாரதாதேவி, சூரியகுமார், செந்தில்குமார், சிவகுமார் (சிவம் போட்டோ சுன்னாகம்), 
கனடா - சந்திரகுமார் , சூரியகலா, சக்திகலா, காலம்சென்ற சசிகலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

ஈமைக் கிரியைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு
மக்கள் - ஐஸ்வர்யா - (+61) 0430208484
மருமகன் ஸ்ரீராம்  - (+61) 0435607262
மைத்துனர் சிவஞானசுந்தரம் - (+61) 0405227578
மைத்துனர் செந்தில்குமார் - (+61) 0431243639

சிட்னி முருகன் ஆலய 6ம் திருவிழா பகல், இரவு நிகழ்வுகள்

.


No photo description available.

Image may contain: 1 person, standing and indoor


சிட்னி முருகன் ஆலய 5ம் திருவிழா

.


Image may contain: 4 people, indoor


Image may contain: 9 people, outdoor

கழுவேற்ற வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


            பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
               வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார் 
           தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார் 
image1.JPG                 நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார் 

           மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
                மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே  
           இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால்  
                எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி 

           பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
                 பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது 
           நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
                 நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது 

           செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும் 
                 நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
          பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
                 தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

          வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
               வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார் 
          ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று 
                இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார் 

பொள்ளாச்சி - ருத்ரா


மின்னணு உலகம்
உருவாக்கிய‌
குகைகளில்
மீண்டும் ஒரு கற்காலம்.
தொலைபேசி என்றாலே
பணக்கார வர்க்கத்தின்
அடையாளமாய் இருந்ததை
தூக்கியெறிந்தது
அந்த "பூலியன் அல்ஜீப்ரா."
ஆனால்
கைபேசிக்குள்
இந்த காமத்தின்
காண்டாமிருகங்கள்
குடியிருக்க‌
காரணமாய் இருந்தது
கார்ப்பரேட் மிருகம்.
ரூபாய்க்கு இத்தனை ஜிபி ஃப்ரீ
என்று
வியாபாரத்தைக்குவித்தது அது.
இந்த ஈசல்களும்
பட்டாம்பூச்சிகளும்
அவர்களின் "லாபத்தீயில்"
கருகி விழுகின்றன.
காமப்பசியை காசாக்கும்
இந்த மனித மிருகங்களுக்கு
எத்தனை எத்தனை
பாதுகாப்புகள்?

இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் உலகை வென்றார்

.

13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.

The World's Best என்ற அமெரிக்க நாட்டின் பல்துறை இசை வித்தக நிகழ்ச்சியில் தனி நபர் பிரிவில் தன் அசாத்திய பியானோ வாசிப்புத் திறனால் நடுவர்களையும், வந்திருந்த இசை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தி இறுதிச் சுற்றில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசினை வென்று சாதனை படைத்திருக்கிறார். இது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் சாதனையாளர்கள் அரங்கேறும் போட்டிக் களமாகும்

லிடியன் நாதஸ்வரம் இதற்கு முந்திய பல சுற்றுகளை வெற்றிகரமாகத் தன்னுடைய இசைத் திறமையால் கையகப்படுத்தி சாம்பியன் பிரிவில் நுழைந்த போது ஹாலிவூட் பிரபலங்களோடு, இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ரஹ்மானின் ஆச்சரியம் கலந்த பாராட்டையும் பெற்றவர்.

காலங்கள் செய்யும் கோலங்கள் - முருகபூபதி


தொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது.
நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.
1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து,  பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது.
அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள்.
அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.
மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார்.  அத்துடன் நில்லாமல், தனது மகளை  கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.
ஒரு அச்சுக்கோப்பாளர் மலையகத்திலிருந்து பூக்களை வரவழைத்து பூமாலை கட்டி திருமணவீடுகளுக்கும் இதர வைபவங்களுக்கும் கொடுப்பதுடன்,  மலர்களினாலேயே அழகிய மணவறைகளும் செய்து வாடகைக்கு விடுகிறார்.

பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் வலதுசாரி பயங்கரவாதி – அவுஸ்திரேலிய பிரதமர்


16/03/2019 நியூசிலாந்தில் முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கைதுசெய்யப்பட்டுள்ள நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

முருகபூபதியின் “சொல்ல வேண்டிய கதைகள் “ வாழ்வியல் அனுபவங்களைப் பதிவுசெய்யும் கதைகள் ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம் -இலங்கை


அவுஸ்திரேலியப் புலம்பெயர் எழுத்தாளர்களுள் ஒருவரான லெ.முருகபூபதி அவர்கள் இலங்கையின் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். படைப்பாளியாகவும் பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் முருகபூபதி,  பத்திரகையில் செய்தி மற்றும் அறிக்கை எழுதுவது நேர்காணல்களைப் பதிவு செய்வது முதலான பணிகளில் ஈடுபடுபவர்.
 இலக்கியப் படைப்பிலும் முருகபூபதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1975இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘சுமையின் பங்காளிகள்’ வெளிவந்தது. நாவல், சிறுகதை தொகுப்புக்கள் , புனைவுசாரா இலக்கியம் என்ற வகையில் இவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் புனைவுசாரா இலக்கியம் என்ற வகையில் இவரது சொல்ல வேண்டி கதைகள் தொகுப்பு’ காணப்படுகிறது.
ஜீவநதியின் 82வது வெளியீடாக முருகபூபதியின் சொல்ல வேண்டிய கதைகள் (2017) பத்தி கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்தது. இப்பத்தி கட்டுரைகள் 2013 தைமாத ஜீவநதியில் வெளிவரத் தொடங்கி, ஜீவநதியின் 20 இதழ்களில் தொடராக வெளியானவையாகும்.
 முருகபூபதி தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, தன்வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை,  சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவாரசியமான மொழியில் மனதில் பதிந்து நிற்கும் வகையில் இப்பத்தி கட்டுரைகளில் எழுதியுள்ளார்.
பொலிஸ்காரன் மகள், குலதெய்வம், யாதும் ஊரே, நாற்சார் வீடு, ஊருக்கு புதுசு, மனைவி இருக்கிறாவா…?, திசைகள், காவியமாகும் கல்லறைகள், எங்கள் நாட்டு தேர்தல், தனிமையிலே இனிமை, படித்தவற்றை என்ன செய்வது?, வீட்டுக்குள் சிறை, நடைப் பயிற்சி, கனவுகள் ஆயிரம், நம்பிக்கை, ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு, துண்டு கொடுக்கும் துன்பியல், பேனைகளின் மகத்மியம், இயற்கையுடன் இணைதல், இலக்கியத்தில் கூட்டணி ஆகிய 20 பத்திக் கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.
இத்தொகுப்பில் இடம்பெறும் ‘பொலிஸ்காரன் மகள்’ அவரது தாயுடனான நினைவுகளை ஞாபகப் படுத்துகின்றன. முருகபூபதியின் அம்மாவின்  வீட்டு பெயர் பொலிஸ்காரன் மகள் என்பதாகும். அம்மாவின் தந்தை பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் பொலிஸில் இருந்தவர் என்பதால் இவ்வாறு அழைத்தனர். தனது தாயை மையப்படுத்தி எழுதியமையால் அக்கட்டுரைக்கு தாயின் வீட்டு பெயராகிய பொலிஸ்காரன் மகள் எனத் தலைப்பிட்டுள்ளார்.
 தலைப்புக்கு பொருத்தமான சம்பவங்கள் கட்டுரையில் ஊடுருவுகின்றன. வீட்டுத் தலைமைப் பொறுப்பை முருகபூபதிக்கு கொடுத்த தாய், அவர் 1987இல் அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து செல்ல இருக்கும் போது குடும்ப பொறுப்புக்களை நினைவுபடுத்தி அழுதமையையும், அவுஸ்ரேலியாவுக்கு செல்ல ஆயத்தமான போது எழுந்த அயலவர்களின் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளது.

சிட்னி முருகன் - விசேட தவில் நாதஸ்வர கச்சேரி 24/03/2019


உலகச் செய்திகள்


"737 மேக்ஸ் 8 ரக" விமான விநியோகத்தை நிறுத்திய போயிங் 

இடைத்தேர்தலையும் சந்திக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்..!

போயிங் 737 மேக்ஸ் 8 தரையிறக்கம்- இன்று 35 விமானங்களை ரத்து

போயிங் 737  மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை:ட்ரம்பின் இறுதி தீர்மானம்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வியை சந்திந்தது  பிரெக்ஸிட் ஒப்பந்தம்

 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் சரண்


"737 மேக்ஸ் 8 ரக" விமான விநியோகத்தை நிறுத்திய போயிங் 

15/03/2019   "737 மேக்ஸ் 8 ரக" விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 

20 - 03 - 2019 Wed  : சிட்னி முருகன் தேர் 

30-03-2019 Sat : சிட்னி  தமிழ்  அறிவகத்தின்  - வசந்தமாலை2019 
                                   @ Bowman  Hall, Blacktown.

31-03-2019 Sun : ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன்   
                                            போட்டி - 2019 at 2pm தமிழர் மண்டபம் ,    
                                             சிட்னி துர்க்கை  அம்மன் கோயில் வளாகம் 

06-04-2019 Sat: Anbaalayam Ilam Thendral - Sydney Bahai Centre, Silverwater

08-06-2019 Sat:   Sydney Music Festival 2019 (13th year).

09-06-2019 Sun:  Sydney Music Festival 2019

10-06-2019 Mon:  Sydney Music Festival 2019

22-06-2019 Sat: Arangaadal 2019 Jaffna University Graduates Association in Bahai hall. 

27-07-2019 Sat:  Sydney Youth Music Festival 2019


04-08-2019 Sun: இசை வேள்வி 2019- பஹாய் மண்டபம், சில்வர் வாட்டர் 
                             -    அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் 

12-10-2019 Sat: கம்பன் விழா 2019 (முதல் நாள், காலை 9:30மணி) - ரெட்கம்                                     மண்டபம், வென்ற்வேர்த்வில் - அவுஸ்திரேலியக் கம்பன்                                     கழகம்

13-10-2019 Sun: கம்பன் விழா 2019 (இரண்டாம் நாள், காலை 9:30மணி) -                                             ரெட்கம் மண்டபம் -அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்

14-10-2019 Mon: ஞான வேள்வி 2019 (முதலாம் நாள், மாலை 7:00மணி) -                                                 இலக்கியப் பேருரை நிகழ்வு   ரெட்கம்   மண்டபம்,                                                       வென்ற்வேர்த்வில் - அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்

15-10-2019 Tue: ஞான வேள்வி 2019 (இரண்டாம் நாள். மாலை 7:00மணி) -                                            இலக்கியப் பேருரை நிகழ்வு - ரெட்கம் மண்டபம்  -                                                     அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்


16-10-2019 Wed: ஞான வேள்வி 2019 (மூன்றாம் நாள், மாலை 7:00மணி) -                                                இலக்கியப் பேருரை நிகழ்வ- ரெட்கம் மண்டபம் -                                                       அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்

Melbourne ல் நடைபெறும் நிகழ்வுகள்

 16-03-2019 Sat :  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்                                               சர்வதேச மகளிர் தினம்