தலைநிமிர்ந்து நிற்கின்றார் !" ஞானமிதழின் " ஆசிரியர்
பவளவிழா நாயகர் " ஞானமிதழின் " ஆசிரியர்
திரு ஞானசேகரன் அவர்களை வாழ்த்திப்பாடிய
பிறந்தநாள் வாழ்த்துப்பாமாலை
எழுபதைத் தாண்டினாலும் இளமையாய் இருக்குமெங்கள்
முழுநிறை ஞானமண்ணா முன்நிலை செல்வோமானால்
அழகுடை சிரிப்பைப்பார்ப்போம் அறிவுடை பேச்சைக்கேட்போம்
விழிகளில் கருணைபார்ப்போம் வியந்துமே நிற்போமங்கே !
வைத்தியம் பார்த்தபோதும் வண்ணமாய் தமிழைப்பார்த்தார்
எழுத்திலே பலதும்சொல்லி எல்லோரும் நினைக்கவைத்தார்
அழுத்தமாய் கதைகள்சொல்லி அளவிலாபரிசும் பெற்றார்
அவர்வாழ்வு சிறந்துநிற்க அன்பினால் வாழ்த்துகின்றேன் !
தமிழிலே ஞானம்தந்து தலைவனாய் உயர்ந்தேவிட்டார்
தமிழிலே எழுதுவார்க்குத் தக்கதோர் துணையுமானார்
அளவுடன் எழுதுகின்றார் அமுதமாய் அனைத்தும்சொல்வார்
புவியிலே நிலைத்துநின்று புகழுடன் வாழ்கவாழ்க !
ஏழைகளின் துயர்கண்டு எழுச்சியுடன் எழுதிநின்றார்
சாதிமதம் பாராமல் சமத்துவமாய் உலவுகின்றார்
போதிமரம் போலவவர் பொறுமையுடன் நிற்பதனால்
சாதனையின் நாயனாய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் !
ஞானத்தின் தலைவாவாழ்க நற்றமிழ்ப் புதல்வாவாழ்க
ஈனத்தை எதிர்த்துநிற்கும் எழுதுகோல் உடையாய்வாழ்க
வானத்துத் தேவரெல்லாம் வாழ்த்தவுன் பிறந்தநாளை
வையத்தில் மக்களோடு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன் !
பிரம்ம ஸ்ரீ எம் . ஜெயராமசர்மா மெல்பேண்
15 - 04 - 2016 அவுஸ்திரேலியா.
சித்திரையை வரவேற்போம் ! - எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..
.
உள்ளமெலாம் உவகை கொள
ஊரெல்லாம் மகிழ்ச்சி பொங்க
வெள்ளமென மக்கள் எலாம்
வீதியிலே நிறைந்து நிற்க
உள்ளூரின் கோவில் தனில்
ஊர்வலமாய் தேர் அமர்ந்து
வண்ண மயில் வாகனார்
வடிவாக வலம் வருவார் !
எண்ணம் எலாம் இனிப்பாக
எல்லோரும் இணைந்து அங்கே
இழுத்து நிற்போம் தேரதனை
எங்கள் ஊரே திரண்டுநிற்கும்
புத்தாடை தனை உடுத்தி
புதுத்தெம்பு மனத் திருத்தி
அத்தனை பேர் கைகளுமே
அத்தேரின் வடம் பிடிக்கும் !
அன்பாலய நிகழ்வுகl 09 04 2016
.
சென்ற சனிக்கிழமை அன்பாலயத்தின் இளம் தென்றல் 2016 நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . வழமைபோலவே நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது . பாடல், ஆடல் ,போட்டி என்று இறுதிவரை மிகவும் ரசிக்கக் கூடியதாக நிகழ்வு அமைந்திருந்தது .
சென்ற சனிக்கிழமை அன்பாலயத்தின் இளம் தென்றல் 2016 நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . வழமைபோலவே நிகழ்வு சரியான நேரத்திற்கு ஆரம்பித்தது . பாடல், ஆடல் ,போட்டி என்று இறுதிவரை மிகவும் ரசிக்கக் கூடியதாக நிகழ்வு அமைந்திருந்தது .
திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி
.
மல்லிகையில் அட்டைப்பட அதிதி கௌரவம் பெறாத மல்லிகையின் தொண்டன் ரத்தினசபாபதி
சிங்கள இலக்கிய மேதை மஹகமசேகரவின் துணைவிக்கு நினைவு முத்திரை
தேடிக்கொடுத்தவர்
சிகையலங்கார நிலையங்களில் பரவிய மல்லிகைவாசம்
காரணம்; இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் குடியரசு இதழ்கள் தென்படும். எடுத்துப்படிப்பார்கள். அவ்வாறு தமது சமூகச்சீர்திருத்தக்
கருத்துக்களையும் பகுத்தறிவுவாத சிந்தனைகளையும் பெரியார் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் பரப்பினார்.
எங்கள் மல்லிகை ஜீவாவுக்கும் பெரியார் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை முன்மாதிரியாகக்கொண்டு, தாம் வெளியிட்ட மல்லிகையை இலங்கையில் பல தமிழ் அன்பர்கள் நடத்திய சிகை
அலங்கரிப்பு நிலையங்களுக்கும் விநியோகித்தார்.
யாழ்ப்பாணத்திலும்
கொழும்பிலும் இவ்வாறு மல்லிகையை அவர் விநியோகம் செய்ததை நேரில் பார்த்திருக்கின்றேன். தொடக்கத்தில் அவருடைய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் அமைந்த ஜோசப்சலூனின் பின்னறையிலிருந்து மல்லிகையின் பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன.
ஊரோச்சம் : சோ ப - ஜே கே
.
படலையில் வெளிவந்த ஜேகே யின் அருமையான எழுத்தை முரசு வாசகர்களுக்காக தருகின்றோம்
http://www.padalay.com/2016/04/blog-post.html
படலையில் வெளிவந்த ஜேகே யின் அருமையான எழுத்தை முரசு வாசகர்களுக்காக தருகின்றோம்
http://www.padalay.com/2016/04/blog-post.html
கவி விதை - 14 - நாயிற் கடையாய்க் கிடந்து.......-- விழி மைந்தன் --
.
சின்னஞ்சிறு கிராமந்தான் அது. ஆனால், உலகத்துச் செல்வங்கள் எல்லாம் கொட்டிக் கிடந்த கிராமம்.
பொன்னை அள்ளிச் சொரிந்தன, பூத்துக் குலுங்கிய கொன்றை மரங்கள்.
வெள்ளிப் பந்தல் போட்டன, வேலியில் படர்ந்த முல்லைச் செடிகள்.
மாணிக்கக் கம்பளம் விரித்தன, காற்றில் அசைந்த கடம்ப மரங்கள்.
மரகதப் போர்வை போர்த்தின, வயலில் விளைந்த பச்சைப் பயிர்கள்.
பொன்னையும் வெள்ளியையும் மாணிக்கத்தையும் மரகதத்தையும் கொடுத்துப் பெற முடியாத செல்வமும் இருந்தது அங்கே - அது அந்தக் கிராமத்து மக்களின் மனங்களில் இருந்த நிறைவு.
இலங்கைச் செய்திகள்
Jetwing Jaffna ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
புத்தர் சிலையை கடலில் நிர்மாணிக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கவில்லை.!
ரத்துபஸ்வல சம்பவம் : நஷ்ட ஈடாக 4.68 மில்லியன் ரூபா
இலங்கையை பாராட்டிய அவுஸ்திரேலியா
பனாமா ஆவணக்கசிவில் மஹிந்த குடும்பத்தாரும் சிக்கினரா ?
பனாமா ஆவணக்கசிவில் இலங்கை அரசியல்வாதிகள் மூவர்
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
மீண்டும் நீரில் மூழ்கின்றது விகாரை
ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.!
ஊடகவியலாளர்களிடம் சந்திரகாந்தன் வேண்டுகோள்..!
இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம்
பிரதமர் ரணில் சோ தாவோவை சந்தித்தார்
கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் இரகசிய 'டீல்' : 100 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் : அதிர்ச்சி தகவல்
பயங்கரவாத தடைச் சட்டம், ஏனைய சட்டங்களின் கீழ் 18 படைவீரர்கள் கைது
செங்கை ஆழியான்!! - வி.ஜீவகுமாரன்
.
ஒரு வளரும் வடலியை வாழ்த்திய
வளந்த அந்த ஒற்றைப் பனை!
வளந்த அந்த ஒற்றைப் பனை!
செங்கை ஆழியான்!!
இயல்விருந்து மறந்து போன இலங்கை எழுத்தாளன்!!!
வாடைக்காற்று – வாசனையும் மக்களின் வாழ்வும்…
காட்டாறு – பிரதேச வாசனையும் மக்களின் எழுச்சியும்…
இரவின் முடிவில் – தொழிலாளர் குடும்பங்களின் அன்றாடப் போராட்டங்கள்…
காட்டாறு – பிரதேச வாசனையும் மக்களின் எழுச்சியும்…
இரவின் முடிவில் – தொழிலாளர் குடும்பங்களின் அன்றாடப் போராட்டங்கள்…
எனது 9ம் 10ம் வகுப்புகளில் என் மனதில் பதிந்து விட்ட நாவல்கள்.
வரலாற்று நாவல்கள்….நகைச்சுவை நாவல்கள்… சாதிய நாவல்கள்… புலம் பெயர் நாவல்கள்… அரசியல் நாவல்கள்… தமிழ் தேசிய இன நாவல்கள்… போர்க்கால நாவல்கள்… என 34 நாவல்களின் சொந்தக்காரன்.
பல ஆராய்ச்சித் தொகுப்புகளின் நூலகம்…
மொத்தத்தில் சாகித்திய ரத்னா, சாகித்திய விருது போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரனான அவருக்கு உலக அரங்கில் ஒரு கௌரவம் கிடையாமை மனக்கவலையான விடயமே!
ஆனால் இலங்கையில் அவரைத் தொடர்ந்து எழுத எத்தனையோ எழுத்தாளருக்கு அவரின் எழுத்துகள் ஒருவகையான இன்ஸ்பிரேசனை (Inspiration – அருட்டுணர்வை) கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.
அன்னாரை என் வாழ்வில் ஒரேயொரு தடவை இந்தியாவில் மித்ரா அலுவலகத்தில் திரு. எஸ். பொ.வுடன் சந்தித்தேன்.
உலகச் செய்திகள்
எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் சிதைவுகள் மொரிஷியஸில் கண்டுபிடிப்பு
'பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில்
உலகத்தையே உலுக்கிய பனாமா ஆவணங்கள் ; விசாரணை தீவிரம்
மதுபானங்கள் விற்பனை செய்ய முழு தடை
பயங்கர தீ விபத்து : 86 பேர் பலி, 350 காயம்
உண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்
எம்.எச். 370 விமானத்தினுடையது என நம்பப்படும் சிதைவுகள் மொரிஷியஸில் கண்டுபிடிப்பு
தமிழ் சினிமா
ஜீரோ
நாம் பயன்படுத்தும் எண்களில் ஜீரோ (zero) விற்கு என தனி முக்கியத்துவம் உள்ளது. அதேபோல் பல வகை படங்களுக்கு மத்தியில்romantic thriller என டாக் லைனோடு ஒரு வித்தியாசமான கதையை கையாண்டுள்ள இந்த ஜீரோ திரைப்படம், அதேபோல் முக்கியத்துவம் பெறுமா? என இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
கதைக்களம்
அஷ்வின், ஷிவதா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். நாயகனின் தந்தைக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை. காரணம் நாயகியின் அம்மாவிற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மனநல பாதிப்பும் அதனால் அவர் மரணம் அடைந்ததும், அதேபோல் ஷிவதாவிற்க்கும் மனநலம் பாதிப்பு ஏற்படுமோ என பயம். இவரின் ஐயத்திற்கு ஏற்ப நாளடைவில் நாயகிக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் தனக்குள் நடக்கும் மாற்றங்களை ஷிவதாவும் உணர ஆரம்பிக்கிறார். ஆனால் இப்பிரச்சனையால் தனது காதலுக்கு எதுவும் ஆகி, தன் அம்மாவை போல தன் வாழ்க்கை மாறக் கூடாது என இவர் நினைக்க முதல் பாதி நகர்கிறது, ஆனால் இக்கதைக்கு இரண்டாம் பாதியில் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒரு திருப்பத்தை வைத்து கதை வேறு பாதையில் நகர்கிறது.
இதில் நாயகிக்கு என்ன ஆகுகிறது அவர்களின் திருமண வாழ்க்கை முறிகிறதா, தொடர்கிறதா? என ஓரு சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷிவ் மோஹா.
படத்தை பற்றிய அலசல்:
அஸ்வின், ஷிவதா இருவருக்கும் தான் நடிப்பதற்கான அதிக இடம் உள்ளது. இருவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர், JD சக்கரவர்த்தி ஒரு முக்கியமான பாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
இவர்களை தவிர படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களது பங்கை குறையில்லாமல் செய்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த படத்தையும் யாரும் எதிர்பாராத விதத்திலும் வித்தியாசமான அணுகுமுறையிலும் கையாண்டுள்ளார் இயக்குனர்.
குறிப்பாக முதல் பாதியில் ஷிவதாவிற்கு ஏற்படும் மாற்றத்தை காட்டும் காட்சி நமக்கே மனநல பாதிப்பு ஏற்பட்டால் இப்படித்தான் இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. பல இடங்களில் நம்மை மிரட்டி சீட்டின் நுனிக்கு இழுத்து செல்கிறது படம். ஆனால் இதற்க்காக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் கொஞ்சம் அதிகமோ என யோசிக்க வைக்கிறது. அதேபோல் சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை.
சில கேள்விகளுக்கான பதில் கடைசிவரை தெரியவில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யமான பல கேள்விகளை எழுப்பி ”அடுத்தது என்ன” என்று யோசிக்க வைத்துவிட்டு பிற்பாதியில் அதற்கான காரணம் தெரிந்தவுடன் படத்தின் சுவாரஸ்யம் சற்று குறைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, CG, படத்தொகுப்பு என அனைத்தும் படத்தின் பலம் என்றாலும் தனித்து தெரிவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். பல காட்சிகளை சென்சூரி அடிக்க வைத்ததே இவ்விரண்டு அம்சங்கள்தான்.
க்ளாப்ஸ்:
சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு (குறிப்பாக கற்பனையான பல விஷயங்கள்) மற்றும்அனைத்து நடிகர்களின் நடிப்பும் பலம், ஆனால் மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.
பல்ப்ஸ்:
இக்கதை எடுத்துக்கொண்ட நேரம், CG சில இடங்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என சொல்ல தோன்றுகிறது. சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை. அதேபோல் இப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்துமா என்பது கேள்விக்குறி.
மொத்ததில் ஜீரோ ஒரு வித்தியாசமான த்ரில்லர். கண்டிப்பாக ‘டக் அவுட்’ம் அல்ல அதே சமயம் ‘சென்சூரியும்’ அல்ல.
ரேட்டிங் : 2.75 / 5 நன்றி cineulagam
Subscribe to:
Posts (Atom)