அவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி

.
சென்ற வாரம் நடை பெற்ற அவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபப்பு கூட்டுத் தாபனத்தின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி மிக கோலாகலமாக இடம் பெற்றது . அந்நிகழ்வின் படங்களை கீழே காணலாம் . நிகழ்வு பற்றிய பார்வை அடுத்த வாரம் வருகின்றது வாசகர்களே 

ராக சங்கமம் 14/7/12

.

அரங்காடல் 2012 - 15 July 2012

.
யாழ்பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் பெருமையுடன் வழங்கும்


அலை அறிந்தது…


Sதெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்தி பழுப்பேறிய வெள்ளைத்துண்டு நிறத்தில் நரைத்த தலைமுடியும் தாடியும் முழங்கால் வரை சரிந்து காற்றில் ஆடிய நீலநிறமான பெரிய ஜிப்பாச்சட்டையுமாக ஒரு கிழவர் பெட்டியுடன் என்னை நோக்கி வந்தார். வர வர வெற்றிலைக்காவிச்சிரிப்பு துலங்கியபடியே வந்தது. தாடி அசைய கன்னங்கள் உருள என்னைப்பார்த்து சிரித்து ‘’யா ரஹ்மான்… புள்ளே, அம்மை இருக்காஹளா? கூப்பிடுங்க..கூப்பிடுங்கப்பா, ராசால்ல, சுல்தான்ல? ’’ என்றார்

நான் ‘’எனக்கு சீனி முட்டாய் குடுப்பீங்களா?’’ என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும்? ‘’அய்யாஅவுஹ தப்பா நினைச்சிட்டீஹகளே…நாம சீனி முட்டாயி விக்யலே. அத்தர் பன்னீர் செண்டு விக்கறோம்…அம்மைய கூப்பிடுங்க’’ என்றார். நான் மூக்குக்குள் கையை விட்டுக்கொண்டு யோசித்தேன். அவர் ஏழடி உயரம் இருந்தார். பெரிய மூக்கு பெரிய கண்கள் பெரிய கைகால்கள். நல்ல சிவப்பு நிறம். பெட்டிக்குள் இருந்து எடுத்த பழைய பட்டுமாதிரி ஒரு வழவழப்பு அவர் நெற்றியிலும் கன்னங்களிலும் இருந்தது.


அவர் தன் அலங்காரபெட்டியை தரையில் வைத்தார். அது விசித்திரமான பெட்டி. மரத்தாலான பெட்டிதான். அதன் மூடிமட்டும் வளைவாக மேலெழுந்திருந்தது. பெட்டியின் மரப்பரப்பின்மீது பட்டுப்புடவையை வெட்டி ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டிலேயே உள்ளே அதைப்போல ஒன்று இருந்தது. அதற்கு முருக்குபெட்டி என்று அம்மா பெயர் சொன்னாள். மென்மையான முருக்கு மரத்தால்செய்யபப்ட்டது. எடை இருக்காது. வெளியே பட்டுப்புடவையும் உள்ளே வெல்வெட்துணியும் ஒட்டப்பட்டு பளபளவென இருக்கும். அதற்குள்தான் ராமாயணம் மகாபாரதம் ஜாதகங்கள் எல்லாம் இருந்தன. இந்தப்பெட்டி மீது பட்டுப்புடவை நன்றாக நரைத்திருந்தது. ஆங்காங்கே கிழிந்து உள்ளிருந்து மரம் தெரிந்தது

ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 328 ஜூன் 2012

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா
ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 3


ஈழத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களையும் துயரங்களையும் மூட்டையாக முதுகில் சுமந்து கொண்டு புலம் பெயர்ந்த படைப்பாளிகள் புலம் பெயர்ந்த சூழலில் தமது கடந்த கால அனுபவங்களை  நின்று நிதானித்துப் புறநிலையாகப் புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படுகிறது. உலகம் இவர்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பு வேறுபட்ட கலாசாரங்களுடனான இடைத்தாக்கம் என்பனவும் இங்கு இவர்களது  ஆளுமையை வளர உதவி செய்கின்றன.  
புலம் பெயர்ந்த தமிழர்களின் சிந்தனையும் வாழ்வியல் தளமும் புதிய கலாசார அதிர்வுகளை எதிர்கொள்கின்றன  இந்தவகையில் ஈழத்துக் கலை இலக்கியவாதிகளுக்கு இல்லாத உலகம் ஒன்று புலம்பெயர்தமிழர்களுக்கு திறந்துள்ளது. அனேகமான புலம் பெயர்தமிழர்கள் முதலாளித்துவ கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஐரோப்பிய கலாச்சாரத்துள் அல்லது அமெரிக்க கலாசாரத்துள் (பொதுவில் மேற்கத்தைய கலாசாரத்துள்) வாழ்கிறார்கள். இலங்கை போன்ற அரைக்காலனித்துவ அரைப்பிரபுத்துவ நாடுகளில் இல்லாத சனநாயகத்தைப் புலம்பெயர்ந்த நாடுகள் கொண்டிருக்கிறன. இது முதலாளித்துவ சனநாயகம் எனப்படுகிறது. ஒரு அமைப்பு(system) பொருளாதார ரீதியிலும் கலாசாரரீதியிலும் நன்றாக ஆழமாக வேரூன்றி இருக்கிற போது அதனை இலகுவாக அசைக்க முடியாதென்கிற நம்பிக்கை வரும்போது வழங்கப்படுகிற சுதந்திரம் என இதனைப்பார்க்கலாம். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பும் கலாசாரமும் இன்றைக்கு நிலவுகிற உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதன் காரணமாக தமது வேர்கள் ஆட்டம் காணுவதைக் கண்டு அச்சம் மொண்டு தமது உண்மையான கோர முகத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆனாலும் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு சுதந்திரம் நிலவுகிறதென்பதை உணரமுடியும்.

தமிழ் கலை மற்றும் பண் பாட்டுக் கழகம் Educatin Seminar

.


உலகச் செய்திகள்

 .
 உலகின் பாரிய கடற்படை பயிற்சி பேர்ள் துறைமுகத்தில் ஆரம்பம்

பிரிட்டன் பிரஜைகளாக விரும்புவோர் “தேசப்பற்று’ பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் ராணியை கடவுள் காப்பார் என்றும் உச்சாடனம் செய்ய வேண்டும்

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?

வானொலி மாமாவின் குறளில் குறம்பு 39 – எங்கே பாயிரம்
ஞானா:        அப்பா…..அப்பா…. உங்களை ஒண்டு கேக்கவேணும். தயவுசெய்து பதில்  சொல்லுவியளே?

அப்பா:        ஞானா, நீவந்து ஒண்டெண்டு சொல்லிக் கொண்டு ஒன்பது கேப்பாய். உன்ரை கேள்வியளுக்கு மறுமொழி சொல்லி நான் களைச்சுப்போனன். அங்கை அம்மா வாறா, அவவிட்டையே உன்ரை கேள்வியளைக் கேள்பிள்ளை.

சுந்தரி:      ஏனப்பா அவள் பிள்ளையைத் தட்டிக் கழிக்கிறியள். நாலும் தெரிஞ்ச மனிசன என்டுதானே உங்களைக் கேள்விகேக்க வாறது…. நீ என்ன கேக்கப்போறாய், கேள் தெரிஞ்சால் நான் சொல்லிறன் ஞானா.

ஞானா:    அதுவந்தம்h, பாயிரம் என்டால் என்ன எண்டு கேக்கத்தான் வந்தனான். ஆனால் அப்பாவுக்கு கருத்து எங்கையோ போட்டுது. பேச மனமில்லை.

சுந்தரி:        பாயிரம் எண்டால் ஞானா புத்தகங்களிலை உள்ள முன்னுரை. பழைய காலத்திலை இந்த முன்னுரையைத்தான் பாயிரம் எண்டு சொல்லியிருக்கினம்.

ஞானா:        அப்பிடி எண்டால் அம்மா, திருக்கறளுக்குப் பாயிரம் இருக்கே அம்மா?

அப்பா:  
      சுந்தரி, எப்பிடி இருக்கு விளையாட்டு, இனிச் சொல்லுமன் உந்தக் கேள்விக்குப்  பதிலை. பிறகு அடுத்த கேள்விக்கும் பதிலை ஆயித்தப் படுத்தும்.

ஞானா:        அப்பா, விளங்காதைக் கேட்டால் ஏன் வில்லங்கத்துக்கு நிக்கிறியள்.

மறுவாசிப்புக்குள்ளாகும் புராண - இதிகாச பாத்திரங்கள்
காட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்த இராமபிரான்

முருகபூபதி

இந்துசமயமும் வைணவசமயமும் புராணக்கதைகளினாலும் உபகதைகளினாலும் ஐதீகங்களினாலும்  மற்றும் அற்புதங்கள் நிறைந்ததுமான சுதந்திரமான சமயங்கள் என்பதனால் இலக்கியப்படைப்பாளிகளிடத்தில் அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்ப மறுவாசிப்புக்குட்பட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.
சிறுவயதில் நாம் படித்த பாடப்புத்தகத்தில் சத்தி-முத்தி புலவர்கள் பற்றிய கதையொன்று படித்திருக்கிறோம்.
ஒரு குளந்தங்கரையில் அரசமரநிழலில் எழுந்தருளியிருந்த ஒரு பிள்ளையார் சிலைக்கு அருகில் தமது உடைகளை வைத்துவிட்டு இரட்டையர்களான சத்தி - முத்துப்புலவர்கள் குளத்திலிறங்கி நீராடிவிட்டு கரைக்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த அவர்களது உடைகள் மாயமாக மறைந்துவிட்டிருந்தன.
அரசமரப்பிள்ளையாருக்குத்தெரியாமல் அவை திருட்டுப்போயிருக்கமாட்டாது என நம்பிய அந்தப்புலவர்கள் உடனே இப்படிப்பாடினார்களாம்.
தம்பியோ பெண் திருடி
தயாருடன் பிறந்த வம்பனோ
நெய்திருடும் மாமாயன்....
இதெல்லாம் கோத்திரத்துக்குள்ள குணம்.

கிறிஸ்மஸ் தீவை நோக்கி 180 அகதிகளுடன் செல்லும் படகு: விபத்தில் சிக்கலாமென அச்சம்


 _
5/7/2012
  சுமார் 180 அகதிகளை ஏற்றிய மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகு விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு மூன்று மீற்றர் உயரமுடைய அலைகளுக்கு மேல் பாய்ந்து செல்வதால் விபத்தில் சிக்கக்கூடும் என இந்தோனேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். படகு விபத்துக்குள்ளாகலாம் என படகில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் (இந்தோனேசிய நேரம்) தமக்கு அறிவித்துள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து படகு பயணித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வணிகக் கப்பல் ஒன்றையும் விமானத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பலகையால் செய்யப்பட்ட அகதிகள் படகு விபத்து அபாயத்தை அடுத்து இந்தோனேசிய கடற்பக்கம் திரும்பியதாகவும் படகில் உள்ளவர்கள் இந்தோனேசியா செல்ல விருப்பம் கொள்ளாததால் படகு தற்போது கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரி 

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்” ருத்ரா

.

மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று

குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு

கொடுத்த புனிதனே!ஜனாதிபதி

உன் கவிதைக்குழந்தைக்கு

விருது என்று கொடுத்தார்

ஒரு கிலு கிலுப்பையை!

அத்தனயும்

எத்தனை வரிகள் உன் வரிகள்.

அத்தனையும்

உன் எழுத்துக்குள் இனித்த வலிகள்.


தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2012

.
2012 ம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து வெளிவந்துவிட்டது.
ஒவ்வொரு வயதுப் பிரிவுக்குரிய விபரக் கொத்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்குரிய போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 12, 19, 26 ஆகிய திகதிகளில் சிட்னியில்  நடைபெறும்.
தேசியப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 29 ம் திகதியில் சிட்னியில் நடைபெறும்.
மறுநாள் சிட்னியில் பரிசளிப்பு விழா நடைபெறும். 

போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி: 14/07/2012

தமிழ் சிறார்கள், இளையோர்களை இந்தப் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளைக் காண்பிக்க எமது வாழ்த்துக்கள்.

தொடர்புகளுக்கு: டாக்டர் பிரவீனன் மகேந்திரராஜாவை ( இணைப்பாளர்) 0420 627 162 என்னும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

- தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக் குழு -

இலங்கைச் செய்திகள்

.
வடக்கு தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம்: அமெரிக்கா 


இந்துக் கோவில் இடிப்பு

வலி வடக்கில் மீள்குடியேறியவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் மக்கள் வேறிடங்களில் தஞ்சம்

5000 முன்னாள் புலி உறுப்பினர்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்க அனுமதி நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

 இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியம் கவலை

அவுஸ்திரேலியா செல்வதற்கு கதிர்காமம் விடுதியில் தங்கிருந்த ஐவர் கைது

வவுனியா சிறைக் கைதிகளில் 27 பேர் மஹர சிறை வைத்தியசாலையில் அனுமதி
  
நிமல் ரூபனின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்: ஜயலத்
  
முத ல் தடவையாக ஒரே நாளில் வடக்கில் 11 இலங்கை வங்கிக் கிளைகள் திறப்பு !
  
வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் திருடர்கள் கைவரிசை
 

இன்றைய நாள் (நாட்குறிப்புகள்)- 2012-06-28


அ .முத்துலிங்கம் 
இன்று முதலைகளைப் பற்றி படிக்கும் நாள். காலையிலிருந்து அதைத்தான் செய்கிறேன். புத்தகத்தில் படிப்பதும் ஏதாவது புது சந்தேகம் ஏற்பட்டால் கம்புயூட்டரில் தேடுவதுமாக நீண்ட நேரம் என் ஆராய்ச்சி நடந்தது. நான் ஒருமுகமாக வேறு கவனம் இல்லாமல் இந்த ஆய்வில் மூழ்கியிருந்ததைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ முனைவர் பட்டத்துக்கு தீவிரமாகப் படிப்பதாக நினைத்திருப்பார்கள்.

முதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அவை சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நாட்கள் எடுக்கும். மீன்களைச் சாப்பிடும். நீர்நிலைகளில் காத்திருந்து தண்ணீர் குடிக்கவரும்  விலங்குகளை தாக்கி அவற்றை நீரிலே மூழ்கவைத்து கொன்று பின்னர் உண்ணும். எலும்புகளைக் கரைக்கும் திரவம் வயிற்றிலே உண்டாகி செரிப்பதற்கு உதவும். சில முதலைகள் கூழாங்கற்களை விழுங்கி செரிப்பதை துரிதப்படுத்துவதும் உண்டு.

தமிழ் சினிமா சகுனி - விமர்சனம்
Sakuni-movie-stills-11அடிச்சு 'தூள்' கிளப்பப் போகிறார்கள் என்று தியேட்டருக்குள் நுழைந்தால், நிஜமாகவே 'தூள்' படத்திலிருந்து கொஞ்சத்தை அடித்திருக்கிறார்கள்?! கிராமத்திலிருக்கும் இவரது சொந்த வீட்டை
இடித்துத் தள்ளிவிட்டு அங்குதான் ரயில்வே டிராக் போட திட்டமிடுகிறது அரசு. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற பொதுநல நோக்கத்தோடு (?) முதல்வரை சந்திக்க வருகிறார் ஹீரோ கார்த்தி. வந்த இடத்தில் இவர் பண்ணும் சகுனி வேலைகள்தான் முழு படமும்.

கோட், சூட் சகிதமாக வந்திறங்கும் கார்த்தியை 'வெயிட் பார்ட்டி' என்று கருதி அவருக்கு செலவு செய்யும் சந்தானம், கடைசியில் ஏமாந்து தொலைப்பது ஜாலி துவக்கம். ரஜினி கமல் ரசிகர்களையும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள துடிக்கும் இவர்களது யுக்தி, காலத்திற்கேற்ற சமயோஜித புத்தி! அப்புறம் திடீரென்று தான் வந்த வேலை கார்த்தியின் நினைவுக்கு வர, அவர் வைக்கும் ஸ்டெப்புகள் அத்தனையிலும் கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் வறட்சி.
ஆப்பக்கடை ராதிகாவை அந்த ஊருக்கே மேயராக்குகிறார். எலக்ஷன் நேரத்தில் தன் வீட்டில் கை நனைத்து பின்பு நன்றி மறந்த முதல்வர் பிரகாஷ்ராஜை ஆட்சி கட்டிலில் இருந்து தள்ளிவிடுகிறார். ஜெயிலில் ஜால்ரா வாத்தியத்தில் மெய் மறந்து கிடக்கும் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசராவை முதல்வராக்குகிறார். இறுதியில் டில்லிக்கே ராஜாவாக துடிக்கிறார். இப்படியாக கார்த்தியின் டிரேட்மார்க் எண்ட் சிரிப்போடு படத்திற்கு எண்ட் போடப்படுகிறது.
முதல் படத்திலிருந்து, சகுனிக்கு முந்தைய படம் வரைக்கும் கார்த்தியின் கதை கேட்கும் இலாகாவிலிருந்த முக்கிய நபர் தலைமறைவாகியிருக்கிறார் போலும்... ஆனால் அவரை தேடிப்பிடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு கார்த்தி.
அரசியல் படம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஊசியை வளைத்து வளைத்து குத்துவதற்குதான் இங்கு ஆயிரமாயிரம் சம்பவங்கள் இருக்கிறதே, அப்புறம் என்ன தயக்கம்? மற்றபடி கார்த்தியின் சிரிப்பும், அந்த நக்கலும் என்றும் மாறா இளமையோடு துள்ளித்திரிகிறது படம் முழுக்க.
சந்தானத்தின் ட்ரிப்பிள் மீனிங் பஞ்ச்சுகளை புரிந்து கொண்டு, 'அடக்கடவுளே' என்று அதிர்வதற்குள் அடுத்ததை போட்டுத் தாக்குகிறார் மனிதர்.
மசாலா படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிசாக வேலை இருந்துவிடப் போகிறது? ப்ரணிதாவின் கோழிமுட்டை கண்களும், கொழுக் மொழுக் சமாச்சாரங்களும் நாலைந்து டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. நடிப்பை பொழிஞ்சாதான் பார்ப்போம்னு யாரும் துடிக்காத போது அவரும்தான் என்ன செய்வார் பாவம்?
மேயராகிவிட்ட ராதிகா, ஒவ்வொரு படியேறும்போதும் தனது வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எண்ணிப் பார்க்கிற காட்சியில் டைரக்டரின் சரக்கு பளிச்சிடுகிறது. ஆனால் அவ்ளோ பெரிய ஸ்டோரிக்கு இவ்ளோ சரக்கு போதுமா பிரதர்?
அட... கொஞ்சம் அழகாக, மெருகு குலையாமல் கிரண்! ஹ்ம்ம்... ஜெமினியில் அறிமுகமாகி தமிழ்சினிமாவில் பிழிந்தெடுக்கப்பட்ட அதே கிரண்தான். பிரகாஷ்ராஜின் தயவால் மேயராக நினைத்தவர் குண்டுக்கு தப்பி எதிரி முகாமில் சரணடைந்து படத்தின் 'கொண்டை வளைவு' திருப்பத்திற்கும் உதவியிருக்கிறார்.
Sakuni_Movie_New_Photos_17
நாசர் 'பேஷா' நடித்து அந்த ஜீன்ஸ் சாமியாரை தோற்றப்படுத்துகிறார். பீடியில் ஆரம்பித்து கோடியில் புரளும் அவரது ஆன்மீக பிசினெஸ் கடைந்தெடுத்த உண்மை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் சில மெலடிகளுக்கு உயிர் இருக்கிறது. பூ படத்தின் மூலம் அறிமுகமாகி 'கெத்தய்யா'வாக வலம் வந்த ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இப்படத்தை பொறுத்தவரை வெறும் வெ...!
சூரிய நமஸ்காரத்தை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு மினுக்கட்டாம் பூச்சியின் வெளிச்சமே மிச்சம்! நன்றி தினக்குரல்   மறுபடியும் ஒரு காதல்
Marupadiyum Oru Kadhal
'மறுபடியும் ஒரு காதல் கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். 'ஈயடிச்சான்...' விஷயத்தில்தான் அப்படியொரு ஒற்றுமை. பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி, சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
லண்டனில் படிக்கும் பணக்கார பெண் ஜோஷ்னா, இந்தியாவிலிருக்கும் அனிருத்தை காதலிக்கிறார். ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக இருவரும் கவிதை எழுதி அனுப்ப, இரு கவிதைகளின் சாயலும் ஒரே மாதிரியாக அமைகிறது. பய புள்ளைங்க லவ்வுக்கு இந்த ஒரு காரணம் போதாதா? மெயிலேயே காதல் ரயில் விட்டுக் கொள்கிறார்கள் இருவரும்.
மருத்துவரான அனிருத் நாட்டின் ஜனாதிபதிக்கே வைத்தியம் பார்க்கிற அளவுக்கு உயர்கிறார். லண்டனிலிருந்து இந்தியாவுக்கு படிக்க வரும் ஜோஷ்னா, அனிருத்தின் மெயில் அட்ரஸ் மற்றும் இன்னபிற ஆவணங்களை லண்டனிலேயே தவறவிட்டு விடுவதால், இங்கு வந்து தவியாய் தவிக்கிறார். இந்த நிலையில் அனிருத்துக்கும் ஜோஷ்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. பெயரளவில்தான் புருஷன் பெண்டாட்டி. மற்றபடி காதல் தோல்வியால் சரக்கடிக்க துவங்கிவிடும் அனிருத், வாந்தியும் பிராந்தியுமாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்.
க்ளைமாக்ஸ் நடைபெறும் இடம் மருத்துவமனை. புரிந்திருக்குமே?
அனிருத்துக்கு இது முதல் படம் என்றால் நம்பவே முடியாது. நடிப்பை பொறுத்தவரை து£க்கல், ஆள் வில்லனுக்குரிய விசேஷ தகுதிகளுடன் இருப்பதால் இவரது லவ்வில் ஒரு லைவ்வே இல்லை.
முதல் படம், கதையை பற்றி கவலைப்பட முடியாது. அட்லீஸ்ட் சதையை பற்றியாவது கவலைப்பட்டிருக்கலாம் புதுமுகம் ஜோஷ்னா. கிள்ளியெடுக்க முடியாத ஒல்லி. நல்லவேளை, நடிப்பில் மட்டும் கில்லி!
தாரை, தப்பட்டை, பேண்டு, வாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட வேண்டிய வடிவேலு, இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி. எப்பவோ துவங்கிய படம் என்றாலும் வடிவேலு தரிசனம் அமையத் தந்த ஒரே காணத்திற்காகவே டைரக்டர் வாசு.பாஸ்கருக்கு நன்றி. போலி டாக்டராக வரும் வடிவேலு ஒரு நோயாளி வயிற்றுக்குள் ஹெல்மெட்டை வைத்து தைத்துவிடுகிறார். இன்னொரு நோயாளியிடம் தருவதற்கு மீதி சில்லரை இல்லை என்பதற்காகவே நன்றாக இருக்கும் வேறொரு பல்லை பிடுங்கிவிட்டு 'சில்லரை சரியாப் போச்சு' என்கிறார். குதிரை இளைத்தாலும் ஓட்டத்துக்கு குறையேது?
மிக சோகமான காட்சிகளில் ஒய்.ஜி.மகேந்திரனின் பர்பாமென்ஸ் வொய் ஜி வொய்? என்று நம்மை கதற வைக்கிறது. முடியல பாஸ், சினிமாவையே விட்ருங்க. பொழச்சி போகட்டும்...
ஒரு குத்தாட்டம் இருக்கிறது. தாடி தேவராஜும் லேடி சஞ்சனாவும் ஆடுகிறார்கள். செம என்ஜாய்மென்ட். பாடல்களில் தனி கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ர.கண்ணனின் ஒளிப்பதிவில் லண்டன் அழகோ அழகு. நேரில் பார்த்த மாதிரி சந்தோஷம்.
மெயிலில் முதல் எழுத்தை டைப் செய்தாலே நமக்கு பழக்கமான மெயில்கள் வரிசை கட்டி நிற்குமே, ஜோஷ்னா குழம்புவது ஏன்? குறிப்பிட்ட லண்டன் வானொலியின் போன் நம்பரை நெட்டில் தேடினால் சட்டென்று கிடைக்குமே, பிறகென்ன சிக்கல்?
இப்படி நொண்டியடிக்கிற கேள்விகள் நமக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வருவதால், இந்த அமர லவ்வு ஒரே ஜவ்வு...
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா