பூக்களோடு ஒரு கைகுலுக்கல்

.

புன்னகை விற்கும் சந்தை என்னும்
பூங்கா வனத்தில் நின்ற நேரம்
மின்னிடும் வண்ணம் மெல்ல இழந்து
மெல்லிய இதழ்கள் உதிர்ந்த சோகம்
தன்னை எண்ணி வருந்திய பூக்கள்
தன்மை கண்டு கலங்கியே அவைக்கு
என்னிரு கையால் ஆறுதல் வழங்க  
இதமாய் நீட்டி வாழ்த்துச் சொன்னேன்

உதிர்வை பார்த்து வாழ்த்துக் கூறும்
உள்ளம் கொண்ட மனிதா மனிதா
உதிரும் எமக்கு  கைகள் நீட்டி
உதிர்த்த வாழ்த்தால் என்ன உணர்ந்தாய்?
அதிர வைத்தது  பூக்களின்  கேள்வி.
அடடா என்னக் கொடுமை செய்தேன்
புதிராய் வந்து புயலாய் தாக்கி
பூக்கள் சாய்த்து விட்டதே என்னை.

ஆறுதல் என்பது வாழும் போதில்
அளிக்க வேண்டும். .சாவில் அல்ல.
மாறுதல் காண்பாய் மனிதா நீயும்
மறுபடி வந்து கூறிய பூக்கள்  
சோறுடன் உப்பை சேர்த்தே உண்பாய் 
சூடு சொரணை வரலாம் என்றே
கூறிய படியே கைகள் நீட்ட
கொடுத்துக் கையை குலுக்கிய நானும்
உதிர்ந்தேன் பூக்களின் காலில் சருகாய்.!

 *மெய்யன் நடராஜ் (இலங்கை)

சிட்னி முருகன் ஆலய சைவநெறி மாநாட்டின் நிகழ்வுகள் 2014

.

கேட்பதற்கு கீழே உள்ள முகவரியை அழுத்துங்கள்



https://www.youtube.com/user/raviglory/videos

துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா 24/09 - 03/ 10 -2014

.

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு!‏

.

இந்தியாவின்  பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சென்னையில் 19.09.2014 அன்று காலமானார். 45 வயதான இசைக் கலைஞர் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வெள்ளி  காலை 9.30 மணிக்கு காலமானார்.
ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்த ஸ்ரீநிவாஸ், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

அற்பாயுளில் மறைந்த அற்புதக்கலைஞன் மண்டலின் ஸ்ரீநிவாஸ் -முருகபூபதி

.
    
                                 
பிறநாட்டு    நல்லறிஞர்    சாத்திரங்கள்   தமிழ்  மொழியில்  பெயர்த்தல்  வேண்டும்
இறவாத   புகழுடைய  புதுநூல்கள்   தமிழ்மொழியில்  இயற்றல் வேண்டும்
மறைவாக  நமக்குள்ளே   பழங்கதைகள்   சொல்வதிலோர்   மகிமை இல்லை
திறமான   புலமையெனில்   வெளிநாட்டோர்   அதை வணக்கஞ்செய்தல்  வேண்டும்
என்று   மகாகவி  பாரதி    பல்லாண்டுகளுக்கு   முன்னர்   சொன்னார்.
அவரது   வாக்கிற்கு   சிறந்த   இலக்கணமாக  வாழ்ந்த   மெண்டலின் இசைமேதை   ஸ்ரீநிவாஸ்  தனது   45   வயதில்  ஆயுளை முடித்துக்கொண்டார்.
ஸ்ரீநிவாஸ்  என்றால்   எந்த   ஸ்ரீநிவாஸ்..?     என்றுதான்    கேட்பார்கள். மெண்டலின்    என்ற   மேலைத்தேய    இசைக்கருவியுடனேயே   தனது    வாழ்நாளை    செலவிட்ட    இந்தக்கலைஞருடன்   அந்த இசைக்கருவியின்    பெயரும்    இணைந்தமையால்  இன்று  அவரது மறைவு    என்றைக்குமே    அஸ்தமிக்காத   அந்த    இசையுடன் பேசப்படுகிறது.
மேதாவிலாசம்  மிக்க    பலருக்கு   அற்பாயுள்தானா? எனக்கேட்கச்செய்கிறது    அவரது    மறைவுச்செய்தியும்.

தரங்கிணி 2014 27.09.2014

.

காணாமல் போகும் பாரம்பரிய விளையாட்டுகள் - ச. சுந்தர பெருமாள்.

.
     
                           
  பாட்டுக்கு ஒரு புலவன்  பாரதி  ஓடி விளையாடு பாப்பா  என்று பாடி மறைந்தாலும் காலத்தால் அவர் வாழ்கிறார் .
 ஆனால், அவரது பாடலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டுகள் நம்மிடையே இருந்தும் காலத்தால் மறைந்து 
வருகிறது .விளையாட்டு மைதானத்திலேயே பொழுதை கழித்த  காலம் மாறி வீட்டில் உட்கார்ந்த இடத்திலே 
   விளையாடும் பிலாண்டேசன் , வீடியோ கேம் போன்றவைகளில் குழந்தைகள் கவனம் செலுத்துகின்றன .     
டெலிவிசன்  இண்டர்நெட்டும் குழந்தைகளை இருக்கைகளிலேயே முடக்கி  உடல் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த நிலைமையினை மாற்ற பாரம்பரிய விளையாட்டுக்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

                                                              கிராம மக்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றும் விளையாடி வருகிறார்கள் .
அத்தி பூத்தார் போல ஒரு சில பெரு நகர பகுதிகளிலும் இந்த விளையாட்டுகளை பார்க்கலாம் . இவை மனபக்குவத்தை 
கொடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளாகும். அதனால் அதனை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன்

.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 27 வது ஆண்டு நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளது.
இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை தாயகம் இழந்து 27ஆண்டுகள் கடக்கின்றன.
பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேறவில்லை.

.தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2014 28.09.14

.

இலங்கைச் செய்திகள்


இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி

வடமாகாண காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

விபத்தில் ஒருவர் பலி: செந்தில் தொண்டமான் உட்பட 31 பேர் வைத்தியசாலையில்

 'இலங்கை சிங்கள பௌத்தர்களின் தேசம் என்பதை ஏற்போருக்கே வாக்களிக்க வேண்டும்"

ஆசிரியையின் சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டது

===================================================================

இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி


16/09/2014  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீன ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி.டிம். ஜயரத்ன மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை, இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்குமிடையில் சுமார் 20 இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கான விஜயத்தை 28 ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி 


இலக்கியச் சந்திப்பு 21 28.09.2014

.


சங்க இலக்கியக் காட்சிகள் 24- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


வீணாகிப் போனது வீதி உலா!

பண்டைத் தமிழகத்தில் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களிலே இளம் கணிகையர்கள் தழையாடை உடுத்துக்கொண்டு ஆண்களை மயக்குவதற்காக வீதிகளில் வலம் வருவது வழக்கமாயிருந்திருக்கிறது. அந்நேரங்களில் தங்கள் கணவன்மார் கணிகையர்களின் கவர்ச்சியில் மயங்கிவிடாதபடி மனைவிமார் வீட்டு யன்னல்களைப் பூட்டிவைத்தும்ää கணவன்மாரை வெளியே போகவிடாமலும் பலவழிகளால் காவல்செய்து பாதுகாப்பார்கள். இந்தத் தகவல்களை எடுத்தியம்பும்படியான காட்சியொன்றைக் கீழ்க்காணும் பாடல் தருகின்றது.

அவள் ஒரு பரத்தை. அவளோடு நெடுங்காலமாக உறவாடிய ஒருவனிடம் அவள் தன் உள்ளத்தையும் பறிகொடுத்தாள். தன்னைவிட்டு அவன் வேறு பெண்களை நாடிவிடக்கூடாது என்பது அவளது கவலையாக இருந்தது. ஆனால்ää ஒருநாள் அவன் வேறொரு இளம் பரத்தையின் பின்னால் சென்றுவிட்டான். அதனை இவளால் தாங்க முடியவில்லை. அதேவேளை அவனோடு கோபித்துவிட்டு. வேறொருத்தனோடு உறவுகொள்ளவும் அவளது மனம் இடந்தரவில்லை. அந்த அளவுக்கு அவள் அவனை விரும்பினாள்.

நாவலில் இருந்து உருவாகும் சினிமா

.

நாவலில் இருந்து உருவாகும் சினிமா என்பதற்கும், ஒரு இயக்குநர் தானாகவே உருவாக்கும் கதைப் படத்திற்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கிறது. சினிமா, நாவல் எல்லாமே படைப்புகள்தான். நாவல் என்பது எழுத்து வடிவிலான ஒரு படைப்பு. சினிமா என்பது காட்சிகளாலான படைப்பு.
நாவலை வாசிக்கும்போது ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளும் பிம்பங்கள் முற்றிலும் அவனது கற்பனை உலகத்துக்கு சொந்தமானது. ஒவ்வொரு வாசகரும் ஒரு நாவலில் சொல்லப்பட்டுள்ள காட்சிகளை அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்கிறார்கள். நாவலை வாசிக்கும்போது நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காட்சிப் படிமங்கள், அதை வேறொருவர் படமாக்கும்போது, நாம் உருவாக்கி வைத்திருந்த காட்சிப் படிமங்களில் இருந்து மாறுபடும்போது நாம் “நாவலின் திருப்தி படத்தில் இல்லை” என்கிறோம்.
நாவலை வாசிக்கும்போது, ஒன்றை காட்சிப்படுத்திக் கொள்ள நமக்கு எந்தவித தடைகளும் இல்லை. தவிர, ஒரு நாவலை நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. நாம் நமது வசதிக்கேற்ப ஒரு நாவலை வாசிக்க முடியும். ஆனால் ஒரு திரைப்படம் நிச்சயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையை பார்வையாளனுக்கு அதன் மொழியில் சொல்லியாக வேண்டிய அவசியத்தில் உள்ளது. நாவலில் நாம் கட்டற்ற சுதந்திர வெளியில், நாம் நினைத்தவற்றை கட்டமைத்துக் கொள்ளும் சுதந்திரம் பெற்றுள்ளோம். மேலும் நாம் அத்தகைய தடைகளை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மாறாக நாம் நமது கற்பனைத் திறனை இன்னமும் அதிகப்படுத்திக் கொண்டே நாவலை வாசிக்க தொடங்குகிறோம்.

வாய் துர்நாற்றமும் தடுக்கும் முறைகளும்:

.
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் (plaque)  நம் வாயில் சேர்ந்து கொண்டே இருப்பது, உணவு உண்ட பின் வாயை சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணங்கள். பல்லில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் ஈறுகளில் வரும் நோய்கள் போன்றவை மற்ற காரணங்கள்.
மிகவும் அரிதாக நுரையீரல் அல்லது இரைப்பையில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் வாய் துர் நாற்றம் ஏற்பட கூடும். பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகளை உண்பதும் ஒரு காரணம். பூண்டு, வெங்காயம் இவைகளை உண்டவுடன் இவற்றில் இருக்கும் மிகக் கடுமையான வாசனை இரத்த ஓட்டத்துடன் கலந்து நுரையீரல் வழியாக மூச்சுக் காற்றுடன் வெளியே வருகிறது. ஆல்கஹால் மற்றும் புகையிலை மெல்லுவதும் கூட வாய் துர் நாற்றம் வர காரணம்.

உலகச் செய்திகள்

.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஆனல்ட்

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்தன

சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்

மேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஆனல்ட்

15/09/2014 சென்னை வந்துள்ள ஹொலிவூட் நடிகர் ஆனல்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்துள்ளார்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
இலங்கைத்தமிழர்களும்       இந்தியத்திரைப்படங்களும்
பல்வேறு   சவால்களுக்கு   மத்தியில்  குத்துவிளக்கு  திரைப்படம்   வெளியிட்ட    கட்டிடக்கலைஞர்  
வி.எஸ். துரைராஜா
     
                                                                                          இலங்கையில்    நீடித்த    போர்  முடிவுக்கு  வந்த  பின்னர் - இலங்கை த்தமிழர்கள் சார்ந்த    எந்தவொரு    பொது   நிகழ்வாகவிருந்தாலும்   அதற்கும்     இலங்கையின்   தற்போதைய அரசின்    ஆதரவும்     ஆசியும்    இருக்கிறதா   என்று   பூதக்கண்ணாடி வைத்துப்பார்க்கும்     தமிழினக்   காவலர்கள்  எனச்சொல்லிக்கொள்ளும்   தமிழ்    ஆர்வலர்கள்    தமிழ்   நாட்டில் அதிகரித்துவிட்டனர்.
ஆளுக்கொரு    அமைப்புகளை   உருவாக்கிக்கொண்டு   ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது   -   முற்றுகைப்போராட்டம்   தொடர்வது     -  கொடும்பாவி எரிப்பது    -  ஆக்ரோஷமான    அறிக்கைகள்  வெளியிடுவது  - மேடைகளில்   சூழுரைப்பது    முதலான    அறிவுக்கு   அப்பாற்பட்ட உணர்ச்சிகரமான     செயல்கள்   அங்கே   நடந்தேறிவருகின்றன.
அண்மைக்காலத்தில்   முருகதாசின்    இயக்கத்தில்   விஜய்   நடித்த கத்தி   படம்    பெரும்   சர்ச்சைக்குள்ளாகியது.     தமிழகத்தில்   பல அமைப்புகள்   (?)   களமிறங்கி   பேராடிய    சூழ்நிலையில் அந்தத்திரைப்படத்தயாரிப்பில்  சம்பந்தப்பட்ட   சர்வதேச   பிரசித்தி பெற்ற    லைக்கா    நிறுவன  அதிபர்  சுபாஷ்கரன் - சென்னையில் பத்திரிகையாளர்     சந்திப்பு     நடத்தி   விளக்கம்   அளித்து தெளிவுபடுத்தும்   வரைக்கும்   சென்றிருந்தார்.
ஏற்கனவே   இலங்கை   அரசுக்கு   எதிரான   போராட்டங்களில் உண்ணாவிரதம்     உட்பட  பல  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள்தான்    நடிகர்   விஜய்யும்   அவரது  தந்தை இயக்குநர்    சந்திரசேகரனும்.

ராஜினி ராஜசிங்கம் திரணகம

.
ராஜினி ராஜசிங்கம் திரணகம: ஸ்ரீலங்கா தமிழர்களின் துயரத்தில் மறக்கமுடியாத அடையாளம் (2)
-  டி.பி.எஸ்.ஜெயராஜ்
முறிந்த பனைமரம்
தனது பங்குக்கு அவர் ஒரு கையெழுத்துப் பிரதியையும் வைத்திருந்தார், இறுதியposter-of-university-teacher-rajani-thiranagama-shot-in-jaffna-1990ில் அதை ஒரு புத்தகமாக முறிந்த பனைமரம் என்கிற தலைப்பில் அதை பிரசுரித்தும் இருந்தார். எனக்கு சுவராஸ்யமாக தோன்றிய சில பகுதிகளை போட்டோ பிரதி செய்வதற்கும் அவர் என்னை அனுமதித்தார். அவைகள் இந்திய இராணுவத்துடனான போராட்டத்தின்போது பெண்களின் நிலையை பற்றியதாக இருந்தன. பின்னர் அந்த பகுதிகளை நான் ரொன்ரோவில் சுருக்கமாக தொகுத்த ஒரு இதழில் பிரசுரிக்கவும் செய்திருந்தேன்.
எங்களது கடைசிச் சந்திப்பின்போது, அந்த நேரத்தில் புது தில்லிக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் நான் மேற்கொண்ட சிறிய பாத்திரத்தை பற்றிய அவரது மறுப்பை பற்றிய மற்றொரு விடயத்தை பற்றியும் அதில் நாங்கள் விவாதித்ததாக எனக்கு நினைவிருக்கிறது. அதில் நான் தலையிட்டது ஏனெனறால் அந்த நகர்வு தமிழ் மக்களின்  சிறந்த நலன்களுக்கு உதவியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அது ஒரு அமைதியான முயற்சியாகும் ஆனால் இந்திய செய்தி இதழான “இந்தியா ருடே” சில விவரங்களை வெளிப்படுத்தியதுடன் எனது பெயரையும் குறிப்பிட்டு விட்டது. எல்.ரீ.ரீ.ஈ நேரத்துக்கு ஏற்றபடி விளையாடுவதாகவும் மற்றும் நான் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதாகவும் இருந்தது ராஜினியின் கருத்து.

​ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க 
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!
ஜனனமும் பூமியில் புதியது இல்லை 
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை 
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கேபாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?தேசம் அளாவிய கால்களும் எங்கே?தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் 
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
Norway Nackeera 

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்: மின்னி மறைந்த இளம் நட்சத்திரம்!

.

வி. ராம்நாராயண்,‘ஸ்ருதி’ மாத இதழின் முதன்மை ஆசிரியர்.‏

மகனின் உடலைப் பார்த்து கதறியழும் தந்தை சத்திய நாராயணா
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயரைக் கேட்டாலே அவருடைய அதிசய மேதாவிலாஸத்துக்கும் மேலாக நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய குழந்தை முகமும், மாறாத புன்சிரிப்பும்தான். அக்டோபர் 1983-ல் வெளிவந்த ‘ஸ்ருதி’ பத்திரிகையின் முதல் இதழில், 13 வயது ஸ்ரீநிவாஸ் பற்றிய கவர் ஸ்டோரியை ஆசிரியர் என். பட்டாபிராமன் இவ்வாறு முடித்திருந்தார்...
‘‘விண்கற்கள் கணத்தில் தோன்றி மறைபவை; அவை விண்ணில் தீக்கதிராக வீசி தம்மைத் தாமே அழித்துக் கொண்டு விடும். நட்சத்திரங்களோ நம்முடனே வாழ்ந்து, நம் வாழ்க்கைக்கு உயிரூட்டும். ஸ்ரீநிவாஸின் சங்கீதத்தின் ஒளியை அனுபவித்த நாம் எல்லோருமே அவர் கர்நாடக இசை வானில், அவர் நட்சத்திரமாக பிரகாசிக்க வேண்டுவோம்.’’
சிறு வயதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அசாத்திய திறமை கொண்ட குழந்தைக் கலைஞர்கள் எல்லோருமே பிற்காலத்தில் நட்சத்திரமாக ஒளிவீசிவிடுவதில்லை. பலரும் விண் கற்களாகவே பிரகாசித்து சட்டென்று மறைந்து விடுகிறார்கள். ஸ்ரீநிவாஸைப் பொறுத்தவரை ஸ்ருதி பட்டாபிராமனின் பிரார்த்தனை பலித்தது. குழந்தைப் பருவத்தில் அவரது கச்சேரி எவ்வளவுக்கு எவ்வளவு பிரமிப்பூட்டியதோ அதுபோல், அதற்கு பல மடங்கு ஆண்டுதோறும் அவரது ஆற்றல் பெருகி உலகமெங்கும் ரசிகர்களை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தது.

தமிழ் சினிமா


சிகரம் தொடு

அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன் எடுக்கும் ஆக்சன் அவதாரமே சிகரம் தொடு. 
வேலையில் இருக்கும்போதே ஒரு காலை இழந்ததால் போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார் சத்யராஜ். 
ஆனால், துளியும் விருப்பம் இல்லாத விக்ரம் பிரபு அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது. 
விக்ரம் பிரபுவுவை போலவே மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்ன செய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறார். 
அங்கே மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனலின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். அவர் விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால் விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார். 
இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். 
அதன்பின் மோனலுடன் படத்திற்கு விக்ரம்பிரபு போகிறார். அந்தநேரத்தில் சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள். இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் தனது போலிஸ் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். முதன்முதலாக போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள விக்ரம் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். தல அஜித் கெட்டப்பை பார்த்து பாராட்டியுள்ளார். இன்று வெளியான வானவராயன் வல்லவராயன் படத்தில் கிராமத்து நாயகியாக வந்த மோனல் கஜ்ஜார் இதில் மாடர்ன் அழகியாக தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். காமெடியன்களாக வரும் மகேஷ், சதீஷ் ஸ்கோர் செய்துள்ளனர். தூங்கா நகரம் படத்திற்கு இயக்குனர் கௌரவ் இயக்கியிருக்கும் இப்படத்தில் கொள்ளையராக நடித்திருக்கும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. பின்னணி இசையில் பட்டைய கிளப்பியிருக்கிறார் இமான். பாடல்களும் ஓ.கே ரகம். மொத்தத்தில் சிகரம் தொட தொடங்கி விட்டார் சிங்கத்தின் பேரன். - நன்றி cineulagam