மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 24/03/2024 - 30/03/ 2025 தமிழ் 15 முரசு 51 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
வாழ்க்கைதனின் ஓட்டமதில் வளமதுவும் வந்துபோகும்,
வழக்கமிதை உணர்ந்துநீயும் வாழ்வாய் – அன்றேல்
வளம்குன்றி வாழ்வினிலே தாழ்வாய்!
தாழ்ந்தவரும்
வாழ்விலோர்நாள் தன்னிறைவும் பெறுவர்தான்,
தவறாமல் அதற்கெனவே உழைப்பாய் – அந்நாள்
தகுதியுள்ள வாழ்வுபெற்றே தழைப்பாய்! (1)
வாழ்க்கையதோ
பேரலையில் தடுமாறும் ஓடம்போல்
வழியொன்றும் தெரியாமல் நோக்கும் – துணிவே
வழியொன்றைக் கண்டெடுத்துக் காக்கும்!
தாழ்வான
இடம்நோக்கிப் பாயுமந்த ஆறுபோல
தத்தளிக்கும் உன்னையுமே காக்கும் – மாந்தம்
தளிர்விட்டே வாழ்வுதனை நோக்கும்! (2)
நியூ சவுத் வேல்ஸில் மாநிலத்தில் வெளிவந்த ஆண்டு நான்கு முதல் ஆண்டு எட்டு வரையான தமிழ்ப் பாடநூல்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கினை ஆய்வு செய்வதுதான் இந்தக் கட்டுரை.
பொதுவாகவே சமுகமொழிக் கல்வி அல்லது பாரம்பரிய மொழிக்கல்வி பற்றி ஆராய்பவர்கள் மாணவர் பெற்றோர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே ஆராய்வர். ஆசிரியர் குலம் அவர்களுடைய ஆய்வு, பாடநூல்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளமை சிறப்பானது என்று பல்கலைக்கழகத்தின் வெளியகப் பரீட்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் சமூகமொழிப் பாடநூல்களின் அடிப்படையில் வெளிவந்த முதலாவது ஆய்வுக் கட்டுரை இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு தமிழ்ப் பாடநூல்களின் உண்மைப் பயன்பாட்டை எமது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமன்றி, பரந்த அவுஸ்திரேலிய சமூகத்திற்கும் எடுத்துரைப்பதில் பெரிதும் பயன்படும்.
தமிழ் சமூக மொழிப் பள்ளிகளின் தமிழ்ப் பாடநூல்கள
நியூ சவுத் வேல்ஸில் உள்ள தமிழ் சமூக மொழிப் பள்ளிகளின் தமிழ்ப் பாடநூல்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கு
இணைக்குறள் ஆசிரியப்பா!
'அசோகனின் வைத்தியசாலை' என்ற நாவல் மூலமே நொயல் நடேசன் என்கிற படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். ஒஸ்ரேலியா மெல்போனில் இயங்கும் ஒரு மிருக வைத்தியசாலையை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை அது. ஆசிரியரும் ஒரு மிருக வைத்தியர் என்பதால் அவரால் சிறப்பாக எழுத முடிந்துள்ளது. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் மேம்பட்டு நின்ற அந்நாவல் என்னைக் கவர்ந்திருந்தது. ஆகையால் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரின் 'கானல் தேசம்' நாவலைப் படித்த போது ஏமாற்றமே எஞ்சியது. உருவத்தில் நன்றாக இருக்கும் இந்நாவல் உள்ளடக்கத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது. ஆசிரியர் தனது சுய அரசியல் நிலைப்பாட்டின் மீது அடையாளப்பட்டதன் விளைவாக பிரதியானது விடுதலைப்புலிகள் மீதான காழ்ப்பாக வெளிப்பட்டுள்ளது.
01. கதைச்சுருக்கம்
இந்தியா ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீர் கோட்டைக்கு முன்னால் கதை ஆரம்பிக்கிறது. அசோகன் ஒஸ்ரேலியாவிலிருந்து உல்லாசப் பயணியாக அங்கு வந்திருக்கிறான். ஜெனி என்றழைக்கப்படும் ஜெனிபர் என்ற ஜிப்சிப் பெண்ணை அங்கு சந்திக்கிறான். காமலீலைகளில் இருவரும் ஈடுபடுகிறார்கள். மறுநாள் அசோகன் சென்னை செல்கிறான் . பின்னோக்கு உத்தியில் அவனது சிறுபிராயம் கதையில் வருகிறது. யாழ் கொக்குவிலில் பிறந்தவன் 1987ல் அமைதி காக்கும் படையினரால் பெற்றோர்கள் கொல்லப்பட, சிறுவனான அசோகன் அம்மாச்சியுடன் வாழ்ந்து வந்து, 1995இல் வலிகாம இடப்பெயர்வின் போது சாவகச்சேரிக்கு வருகிறான். அங்கு அம்மாச்சி சாவடைய, பெரிய தந்தை தாயின் அரவணைப்பில் வன்னி வந்து, வவுனியா வருகிறான். பெரிய தந்தையின் மகள் கார்த்திகா தங்கைக்குரிய பாசத்தோடு இருக்கிறாள். அவன் கல்வியில் மிகவும் திறமைசாலியாக விளங்குகிறான். அதனை அடையாளங்கண்ட அருட்தந்தை அகஸ்ரின் அவனை வளப்படுத்திவிடுவதாகக் கூறி பெரியதந்தையிடம் (சதாசிவம்) அனுமதி பெற்று மலேசியாவிலிருக்கும் சிற்றம்பலத்திடம் அனுப்பி வைக்கிறார். அந்த சிற்றம்பலம் அவனை ஒஸ்ரேலியாவிலிருக்கும் டொக்ரர் ஒருவரிடம் அனுப்பி வைக்கிறார்.
2024-ஆம் ஆண்டிற்கான ‘சங்கீத கலாநிதி’ விருது
இசைக்கலைஞரும் எழுத்தாளருமான T.M.கிருஷ்ணாவிற்கு
வழங்கப்பட்டது. வருடாவருடம் மார்கழி இசைவிழாவில் மியூசிக் அகடமி, சிறந்த இசைக்கலைஞர்க்கு
இவ்விருதினை வழங்கி கௌரவிக்கும். இவ்விருதை அவருக்கு வழங்குவது முறையல்ல
என கர்நாடக சங்கீத சகோதரிகள் ரஞ்சனி, காயத்ரி எதிர்ப்பைத்
தெரிவிக்க இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. சகோதரிகளின் வெறுப்புக்குக்
காரணம், அவர் மரபை மீறினார் என்பதே. பார்ப்பனிய
மரபான கர்நாடக இசையை இவர் யாவருக்கும் பொது என்கிறார் என்பதே பெரிய குற்றம். கிருஷ்ணாவோ
இசையில் புனிதமானது என ஒன்றில்லை என்கிறார். கிருஷ்ணா
இசையை
ஜனரஞ்சகப்படுத்துகிறார். சங்கீத அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கும் இசையை அவர் பொது இசையாக மாற்றுகிறார். குறிப்பிட்ட ஒரு சாராருக்கானது அல்ல இசை எனக் கூறி செயல்படுத்துகிறார். சேரிகளுக்குச் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
T.M.கிருஷ்ணா இசைக்கலைஞராக இருப்பதுடன் தான் பயிலும் இசையில் பல ஆய்வு நூல்களை எழுதியவர். அவர் நூல்களில் மனிதநேயத்தைக் காணமுடியும்.
கர்நாடகம் என்றால் மிகப் பழமையானது என்று பொருள்படும்.
Published By: Digital Desk 2
சதீஷ் கிருஷ்ணபிள்ளை
டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று.
உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான் செய்வார்.
பதவியேற்ற நாளில், காஸா அற்புதமான இடம் என்றார். ஆறு நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில், காஸாவை கையகப்படுத்தப் போவதாக சென்னார்.
'ட்ரம்ப் உளறல்'களாக இதையும் பார்த்த உலகம், கடந்த வாரம் உறைந்து நின்றது.
அடாவடியுடன், இன்னொரு அடாவடியுடன் சேர்ந்து கொண்டு, காஸாவை கையகப்படுத்துவோம், காஸாவாசிகளை வேறு நாடுகளுக்கு அனுப்புவோம் என்று பேசினார், ட்ரம்ப்.
மற்றைய அடாவடியின் உள்ளம் குளிர்ந்திருக்க வேண்டும். “இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களில், நீங்கள் தான் மிகச் சிறந்தவர் என்று சொன்னது. நெருங்கிய நண்பரென பாராட்டியது.
ரி. இராமகிருஷ்ணன்
யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு தெய்வப்புலவர் வள்ளுவரின் பெயரைச் சூட்டுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை இலங்கையுடனான பிரிக்கமுடியாத பிணைப்பை வலுப்படுத்துவதற்கான அடையாளபூர்வமான ஒரு சைகையாகும். மையத்தின் பெயரில் இருந்து 'யாழ்ப்பாணம்' என்ற சொல் நீக்கப்பட்டது தொடர்பாக இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியபோது உடனடியாகவே அதில் திருத்தத்தைச் செய்தார்கள். மையம் இப்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவான வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்ட இரு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எவரும் வலியுறுத்திக் கூறவேண்டிய தேவையில்லை.
தமிழ் தயாரிப்பாளர்களுக்குள்ளே தனித்துவம், திட்டமிடல், உறுதி,
அறுபது ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் பிரபலமாக விளங்கிய
Published By: Digital Desk 2
தயாரிப்பு கீதா ஆர்ட்ஸ்
நடிகர்கள் : நாக சைதன்யா , சாய் பல்லவி, 'ஆடுகளம்' நரேன், கருணாகரன், திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், மைம் கோபி, பிரகாஷ் பெலவாடி மற்றும் பலர்.
இயக்கம் : சந்து மொண்டேட்டி
மதிப்பீடு : 2.5 / 5
தெலுங்கு திரையுலகிலிருந்து பான் இந்திய அளவிலான படைப்புகள் தயாராகி ரசிகர்களை வந்தடையும் போது அதற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் உண்மை சம்பவத்தை தழுவி தயாரான இந்த 'தண்டேல்' திரைப்படத்திற்கு இயல்பான அளவைவிட கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக் குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகா குளம் எனும் பகுதியிலுள்ள மீனவரான ராஜு( நாக சைதன்யா) அதே பகுதியில் வசிக்கும் சத்யா( சாய் பல்லவி)வை காதலிக்கிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு காதலித்து வருகிறார்கள். ஒன்பது மாதம் கடல் சார்ந்த தொழில் முறையிலான வாழ்க்கை- மூன்று மாதம் குடும்பம் சார்ந்த நிலவியல் வாழ்க்கை- எனும் வாழ்வியல் முறையை கொண்டிருக்கும் அப்பகுதி மீனவர்களுக்கு ராஜு தலைவனாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
“தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது; கஜேந்திரகுமாருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்”
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகம் : Govpay திட்டம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்
மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது
Published By: Vishnu
ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் யென் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு பரிமாற்றக் ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டது.
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை
யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?
பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப்
அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம் !
கொங்கோவின் கிழக்கு பகுதி நகர மோதல்கள் - 775 பேர் பலி
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை
Published By: Rajeeban
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
ஒருங்கிணைப்பு: கலாநிதி சு.குணேஸ்வரன்
சிறப்புப் பேச்சாளர்கள்:
கவிஞர் சு. முரளிதரன்
கலாநிதி எம்.எம்.ஜெயசீலன்
ஆய்வாளர் சி.ரமேஷ்
எழுத்தாளர் சு. தவச்செல்வன்
திரு. விஜயகுமார் சுதர்சன்
மேலதிக விபரங்களுக்கு: - அகில் 001416-822-6316