மரண அறிவித்தல்

.
                                                         திரு .சேனன் செந்திவாசன் 



சேனன் செந்திவாசன் காலமானார் , கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் 23, Palace Road, Baulkham Hills, Sydney  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாபு என்றழைக்கப்படும் சேனன் செந்திவாசன் 27 ம் திகதி காலை காலமானார்.
அன்னார் Dr. சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும், அஸ்வினி, அனூஜன் ஆகியோரின் அருமைத் தந்தையும், காலஞ்சென்ற   கணேசபிள்ளை, சாந்தநாயகி (கொழும்பு) அவர்களின் அருமைப் புதல்வரும், கயிலைவாசன் (கொழும்பு), யாழினி (கனடா), கிரிவாசன் (லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும், இளைப்பாறிய விரிவுரையாளர் சண்முகலிங்கம் (சுதுமலை), இளைப்பாறிய ஆசிரியை குணபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
Dr. வசந்தி (லண்டன்), ஜெயந்தி (சுதுமலை), ஸ்ரீதயாளன் (New Zealand) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக Liberty Funeral Parlour, 101 South St, Granville NSW 2142  மலர்ச்சாலையில் ஜூன் 2ம் திகதி செவ்வாய் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணி வரை வைக்கப்பட்டு,  ஈமைக்கிரியைகள் அதேயிடத்தில் 3ம் திகதி புதன் காலை 10.00 மணியிலிருந்து 12.00 மணிவரை நடைபெற்று தகனக்கிரியைகள் பிற்பகல் 12.30 மணிக்கு Rookwood  மயானத்தில்   நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.



தொடர்பு: Dr. சுகந்தி 0401 146 206,  பகி 0411 770 617
மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்

அவதியும் அமைதியும் மிகுதியாய் !



எச். . அஸீஸ்
முட்டையொன்றை  மனதுக்குள்ளே
மறைத்து  வைத்து
மறைத்து  வைத்து
மறந்து  போவேன்
தூங்கப் பாய்  விரித்து  தலை  சாய
இரவில்
மீண்டு  வரும்  முட்டை
முழு  வடிவில்
மூச்சு  ஓடும்  பாதையிலே
முடிச்சு  ஒன்று  போட்டது  போல்
வந்து  அது  அமர்ந்திருக்க
வலி  என்  நெஞ்சுக்குள்ளே
சித்தாந்தம்  தத்துவங்கள்
சிந்தனைகள்   இன்னும்  பல 
சொல்லத்  தொடங்கும்  முட்டை
என்  நெஞ்சுக்  குழிக்குள்
நீட்டி  நிமிர்ந்து  உட்கார்ந்து
வித்தகர்    எவரும்  சொல்ல
விளையாத  கருத்துகளை
தர்க்கிக்கும்

உலகச் சைவ பேரவை ஆஸ்திரேலியா 07/06/2015 Homebush




ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவில் சம்பந்தர் குரு பூஜா 07/06/2015





இலங்கைச் செய்திகள்


வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறினார் ஜனாதிபதி..!

வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்

கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை

அத்தே ஞானசார தேரருக்கு பிணை

சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷிராந்திக்கு அழைப்பு

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்


Sydney Music Festival 2015 June 6,7,8

.
Swara - Laya  வழங்கும் சிட்னி இசை விழா ஜூன் மாதம் 6ம் 7ம் 8ம் திகதிகளில் Reverside  Theatre  இல் இடம் பெற இருக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு கீழே பார்க்கவும் 

சிட்னியில் நடாத்தப்பட்ட Ping Sari நிகழ்வு

.
CMRC இனால் அன்னையர் தினத்தன்று சிட்னியில் நடாத்தப்பட்ட Ping Sari  நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை காணலாம்.

உலகச் செய்திகள்


ஐ.எஸ்.ஸுக்கு எதி­ரான சண்­டையில் கள­மி­றங்­கி­யது ஈரான்

ஆப்­கா­னிஸ்­தானில் பொலிஸ் தலை­மை­யகம் மீது தலிபான் தீவி­ர­வா­திகள் தாக்­குதல் ; 20 பேர் பலி

படங்கள்: இந்தியாவில் கடும் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக அதிகரிப்பு

படு­கொலைத் தாக்­கு­தலில் மயி­ரி­ழையில் உயிர்தப்­பிய லிபிய பிர­தமர் அல்– தின்னி : மெய்ப்­பா­து­கா­வலர் காயம்












ஐ.எஸ்.ஸுக்கு எதி­ரான சண்­டையில் கள­மி­றங்­கி­யது ஈரான்

25/05/2015 ஈராக்கில் இஸ்­லா­மிய தேச (ஐ.எஸ்.) பயங்­க­ர­வா­தி­க­ளுடன் சண்­டை­யிட்டு வரும் அந்த நாட்டுப் படை­யி­ன­ருக்குப் பக்­க­ப­ல­மாக ஈரான் வீரர்கள் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.


தமிழ் சினிமா


புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை  





தமிழ் சினிமாவில் சமூக புரட்சி கதைகளை கையாளுபவர்கள் மிகவும் குறைவு. அப்படியே அந்த கதைக்களத்தை தொட்டாலும் முழுமையாக மக்களுக்கு புரியும் படியாகவும், பிடிக்கும் படியாகவும் கொடுக்கும் இயக்குனர்கள் மிக அரிது.

இதில் ஈ, பேராண்மை என தொடர்ந்து வெளிநாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க என்ன சதி திட்டம் செய்கின்றது என்பதை தோல் உரித்து காட்டியவர் எஸ்.பி.ஜனநாதன். இவரின் அடுத்த படைப்பாக வெளிவந்துள்ள படம் தான் புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை.
கதைக்களம்
வெளிநாடுகளின் ஆயுத கழிவுகளை அவர்கள் நாடு நன்றாகவும், வளமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, வளரும் நாடான இந்தியாவின் ஆசையை தூண்டி, இங்கு அனுப்புகிறார்கள். இதனால், எண்ணற்ற சீரழிவுகள் இந்தியாவில் நடக்க, இதையெல்லாம் தடுத்து நிறுத்தும் கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா வருகிறார்.
ஆனால், படத்தின் முதல் காட்சியிலேயே அவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கின்றனர். இவரை தூக்கில் இடும் பொறுப்பு காவல்துறை அதிகாரியாக வரும் ஷாமிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அவர் ஆர்யாவை தூக்கில் போட, அனுபவம் வாய்ந்த ஒருவர் வேண்டும் என்று விஜய் சேதுபதியின் உதவியை நாடுகிறார். ஆனால், விஜய் சேதுபதிக்கு இதில் துளிகூட விருப்பம் இல்லை.
இந்த உண்மை ஆர்யாவின் கூட்டத்தில் ஒருவரான கார்த்திகாவுக்கு தெரிய வர, விஜய் சேதுபதியையும் தன் கூட்டத்தில் ஒருவராக இணைத்து, ஆர்யாவை காப்பாற்ற முயற்சிக்கிறார். இவர்கள் திட்டப்படி ஆர்யா காப்பாற்றப்பட்டாரா? இல்லை ஷாம் திட்டப்படி தூக்கிலிடப்பட்டாரா? என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக கூறியிருக்கிறார் ஜனநாதன்.
படத்தை பற்றிய கண்ணோட்டம்
ஆர்யா, விஜய் சேதுபதி, என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருந்தாலும், படத்தில் முழு பலத்தையும் தாங்கி செல்வது ஷாம் தான். இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் படத்தை போன்று ஷாமின் திரைப்பயணத்தில் மைல் கல் தான் இந்த புறம்போக்கு.
ஆர்யாவை ஜாலியான பையனாக பார்த்து போராளியாக பார்க்க வித்தியாசமாகவும், ரசிக்கும் படியாகவும் உள்ளது. விஜய் சேதுபதியும் தான் செய்யும் தவறை உணர்ந்து அழுது புரளும் இடத்தில் கண் கலங்க வைக்கின்றார்.
வழக்கமான ஜனநாதன் படத்தை போல கம்யூனி
ஸ்ட் வசனங்கள் கொஞ்சம் தூக்கல் தான். படத்தில் எத்தனை கதாநாயகன்கள் இருந்தாலும் முதல் கதாநாயகன் கலை இயக்குனர் தான். இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சிறைச்சாலையை தத்ரூபமாக யாரும் பார்த்திருக்க முடியாது. ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்
ஷாம் ஒரு போலிஸ் அதிகாரியாக கனகச்சிதமாக தன் நடிப்பை தந்திருக்கிறார். ஹீரோயின் என்றாலே ஆடல், பாடல் என்றில்லாமல் பல கஷ்டமான காட்சிகளில் நடித்து கலக்கியிருக்கிறார் குயிலியாக வரும் கார்த்திகா. படத்தின் இரண்டாம் பாதி மிகவும் வேகமாகவும், எதிர்ப்பார்க்காத கிளைமேக்ஸ் மனதை உருக்கும்படியாகவும் உள்ளது.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது சில இடங்களில், இத்தனை புரட்சிகரமான ஒரு படத்தில் தேவையில்லாத இடத்தில் எதற்கு பாடல்கள். அது கமர்ஷியல் விஷயம் என்று நினைத்தால், இயக்குனர் செய்த முதல் தவறு அது தான்.
மொத்தத்தில் தலைப்பிலேயே கூறிவிட்டனர் புறம்போக்கு அனைவருக்கும் பொதுவுடமை என்று, அதேபோல் தான் அனைவரும் பார்க்க வேண்டிய பொதுவுடமையான திரைப்படம் இந்த புறம்போக்கு.
ரேட்டிங்-3.5/5   நன்றி cineulagam