அவுஸ்திரேலியாமலேசியா புதிய உடன்படிக்கை சர்வதேச அகதிகள் சட்ட விதிகளை மீறியுள்ளது நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு
.
அவுஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் புகும் படகு அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளமையிலுள்ள சட்டத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. அவுஸ்திரேலியக் கரையை வந்தடைய முயற்சிக்கும் படகு மக்களின் பிரச்சினையை கையாள்வதற்குரிய அவுஸ்திரேலியாவின் புதிய திட்டத்தின் சட்டத் தன்மை குறித்தே ஐ.நா.மனித உரிமை
ஒரு புல்லாங்குழல் அரங்கேற்றம்
.
சென்ற சனிக்கிழமை 28.05.2011 அன்று சிட்னி பரமட்டா றிவர்சைட் தியேட்டரில் ஒரு புல்லாங்குழல் அரங்கேற்றம். ரம்மியமான மாலைப்பொழுதில் வண்ண விளக்குகள் அலங்கரிக்க வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த அரங்கில் மண்டபம் நிறைந்திருந்த சபையின் முன்பாக தலைசிறந்த வாத்திய கலைஞர்களின் பக்க வாத்திய இசையோடு செல்வன் பிரதீஸ் குருநாதனுடைய வேணுகானம் காதில் இசை வெள்ளத்தைப் பாச்சியது.
இந்த நிகழ்வு பற்றிய பார்வை அடுத்த வாரம் விரிவாக இடம் பெறுகின்றது.
"அழகர்சாமியின் குதிரை" என்பார்வையில் - செ.பாஸ்கரன்
.
பரட்டைத்தலை குள்ள உருவம் குதிரை ஒன்றை கையில் பிடித்தபடி நிற்கும் போஸ்ட்டர்கள் புதிய படத்தின் வருகையை அறிவித்து நிற்கிறது. இரண்டு டொலர் DVD யை ஸ்பைஸ் கடையில் கையில் தூக்கி பார்க்கின்றபோது அழகர் சாமியும் தெளிவாக தெரியவில்லை அவன் குதிரையும் தெளிவாகத்தெரியவில்லை. யாராவது தெரிந்த நடிகர்கள் நடிக்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி யாரையும் காணவில்லை போல் தெரிகிறது.இந்த படம் பற்றி கேள்விப்படவும் இல்லை பார்ப்பதா விடுவதா என்ற மனப்போராட்டம். மினக்கெட்டு எடுத்துக்கொண்டு போய்ப் பார்கின்ற போது சினிமா என்ற பெயரில் குப்பைகளை கொட்டியிருப்பார்கள். அதைப்பார்க்க ஆரம்பித்து இடையில் கோபத்தோடு அன்றைய நல்ல இரவை பழுதாக்கிய கவலை மிஞ்சுகின்ற நாட்கள் பலமுறை இடம்பெற்றிருக்கிறது. இதனால்தான் பலமுறை யோசிக்க வேண்டியிருந்தது. DVD கவர்கூட ஒழுங்காக இல்லை படத்தின் பிறிண்ட் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் வந்துபோனது. ஒரு முறை கடைக்காரரிடம் கொப்பி எப்படித் தம்பி எண்டு கேட்டுவைக்க. அண்ண ரெண்டுடொலர் கொப்பி எப்பிடியண்ண இருக்கும் என்று அவர் திருப்பிக் கேட்ட கேள்விக்கு பிறகு அதைப்பற்றி கதைப்பதே இல்லை. இந்தியப் படங்களுக்கு குறிப்பாக தமிழ்ப்படங்களுக்கு மட்டும்தான் இப்படியொரு நிலமை. படம் வெளிவந்த உடனேயே கள்ளக் கொப்பி போட்டு கடைகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள் நாமும் மூன்று மாதம் நல்ல கொப்பிக்கு பொறுக்க முடியாது
தன்னம்பிக்கை சிந்தனைகள் -வித்தகக் கவிஞர் பா.விஜய்
.
தொகுப்பு -கவிஞர் இரா.இரவி
புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்து விட்டுப் போகாதே
நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு
நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு
நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்
உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை
உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்
நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்
அதைத் துப்பி விடாதே

மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா
.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகரமண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரையில் நடைபெறவுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த வருடாந்த நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள்ää கலைஞர்கள்ää ஊடகவியலாளர்கள் சந்தித்து கலந்துரையாடுவர்.
இம்முறை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தற்போதைய தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள பதினொராவது விழா பல்சுவை அரங்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இங்கு பிறந்த தமிழ்க்குழந்தைகளின் தமிழ் ஆற்றலை வளர்க்கும் ;அனுபவப்பகிர்வு’ நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன. இளம்தலைமுறை தமிழ் மாணவர்களின் சுயவிருத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை இயல்பாகவே பேசவைக்கும் பாடவைக்கும் பல்சுவை அரங்கு , மற்றும் கவியரங்கு, இலக்கிய கருத்தரங்கு, தாளலய நாடகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

உலகச் செய்திகள்
.
*கடைசித் தொலைக்காட்சி நிகழ்ச்சி
*போர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது
*அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 116 பேர் பலி
*ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது: எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து
*பாகிஸ்தானில் கடற் படைத்தளத்தின் மீது பாரிய தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிரிட்டிஷ் விஜயம் _
5/24/2011
அமெரிக்க - பிரிட்டிஷ் உறவு எமது நாட்டிற்கும் உலகிற்கும் முக்கித்துவம் வாய்ந்ததொன்றாகும் என இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
3 நாள் விஜயமாக இங்கிலாந்து சென்றுள்ள பராக் ஒபாமா எலிஸபெத் மகாராணியாரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோனையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
புதன்கிழமை நடைபெறும் இச்சந்திப்பில் லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அறவழியா? ஆயுதவழியா? அமரர் மு.தளையசிங்கம் நினைவுகள் - முருகபூபதி
.
‘எழுத்தாளர்கள் Activist ஆக இருத்தல் தகுமா? தகாதா?’ என்னை நீண்டகாலமாக அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது.
பேப்பரும் பேனையும் கற்பனையும் இருந்தால் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் குவிக்கலாம். எழுதியவற்றை பிரசுரிக்க பத்திரிகை உலகத் தொடர்பும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாகி விடலாம்.
“ஒரு எழுத்தாளனின் கடமை அவ்வளவுதானா? வெறுமனே பெயரும் புகழும் தேடுவது மாத்திரம்தானா அவனது வேலை. தானும் சிந்தித்து மாற்றவர்களையும் சிந்திக்கச் செய்வதும் எழுத்தாளனின் வேலை” என்பார் ஜெயகாந்தன்.

அரசியல் குருபெயர்ச்சி - புதியமாதவி, மும்பை.
.
தேர்தல் முடிவுகள் வந்த நாள்..
மறக்க முடியாத நாளாக இருந்தது.
முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.
வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனது
ஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.
எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.
இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு
தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை.
அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்
கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்
சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழியின் கணவர் வரை
போன் செய்து விசாரித்தார்கள்.
எங்கள் கணிப்பு இதுதான் என்று சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டு
இருக்க வேண்டியதுதானே. காரண காரியங்கள் எல்லாம் கேட்பார்கள்,
அவர்கள் திருப்தி படுகிறமாதிரி பதில் சொல்லியாக வேண்டும்.
இல்லை என்றால் நாங்கள் செய்த கருத்துக் கணிப்பு வேலை எல்லாம்
மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா
76. பஞ்ச பூதங்களைப் பயன்படுத்தும் முறை
இந்தப் பிரபஞ்சமும், இதனுள் இருக்கும் நீ வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடும், அதாவது இந்த உடம்பும் ஐந்து பூதங்களால் ஆனவை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பவையே அந்தப் பஞ்சபூதங்கள். இவை ஐந்தும், புலன்களில் சுவை (நா) ஒளி (கண்) ஊறு (தோல்) ஓசை (காது) நாற்றம் (மூக்கு) அக விளங்குகின்றன. இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் ‘தெய்வீக வெளிப்பாடுகள்’ ஆகும். இவை ஒவ்வொன்றையும் நாம் பயபக்தியுடனும், விழிப்பாகவும் கையாள வேண்டும். உதாரணத்திற்கு, ‘நிலம்’ என்ற பூதத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் விதைகளை நிலத்தின் மேல் - மண்ணின் மேல் - மேலாகத் து}வினால் அவ்விதைகள் முளைக்காது போகலாம்!
கீதவாணி விருதுகள் 2011
.
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னி
பெருமையுடன் வழங்கும்
கீதவாணி விருதுகள் 2011
பாடல் போட்டியும் இசை விருந்தும் கலந்த மாபெரும் இன்னிசை இரவு
கடந்த ஐந்து வருடங்களாக சிட்னியில்;நடாத்தப்பட்டு வரும் இந்த பிரபல தமிழ் பாட்டுப் போட்டிஇ இவ்வருடம் ‘Vishwaas Productions’ நெறியாழ்கையில் மீண்டும் புது ஆக்கங்களுடன் இவ்வருடம் இடம்பெறவுள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த பாடகரா?
இதோஇ ஒர் அரிய சந்தர்ப்பம்!
இந்த மாபெரும் தமிழ்ப்
பாட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
இப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
மஹாத்மா பாதம் பட்ட மண் -சிறுகதை -ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
.
தாத்தா, ஒங்களுக்கு ஒரு கவர் வந்திருக்கு என்று ஓட்டமாய் ஓடி வந்தான் கொள்ளுப் பேரன். உறையை வாங்கிப் பிரித்துப் பார்த்த பெரிய தாத்தாவுக்குக் கண்கள் அகலமாய் விரிந்தன.
உள்ளே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு. புத்தம் புதிய சலவை நோட்டு.
ஒங்ககிட்டக் காட்ட வேண்டாம்னு இருந்தேன். இந்த முந்திரிக் கொட்டப்பய கவரத் தூக்கிட்டு ஓடி வந்துட்டான் தாத்தா என்று பின்னாலேயே வந்த பேரனிடம், “கவர்மேல என்னோட பேர் எழுதியிருக்கு, அத ஏன் என் கிட்டக் காட்டக் கூடாதுன்னு இருந்தே?’ என்று புதிர்மயமானார் தாத்தா.
“ஆமா, என்னடா உள்ளே ரூவா நோட்டு இருக்கு, ஒண்ணும் புரியலியே?’’
அடுத்த வாரம் எலக்ஷன் வருதுல்ல தாத்தா, வோட்டுப் போடறதுக்கு ரூவா தர்றாங்களாம். வீடுவீடாப் போய்த் தர்றாங்களாம்.
“யாரு தர்றாகளாம்?’’................
“வூட்டுக்கு ஐநூறுன்னா, தொகுதிப் பூராக் குடுக்கறதுன்னா, கோடிக் கணக்குல பணம் செலவாகுமேடா...’’
தப்பு தாத்தா, வூட்டுக்கு ஐநூறு இல்ல.
“அப்ப?’’

தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2011
.
அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம்
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2011
இவ்வாண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிக்கான விபரங்கள்,
விண்ணப்பப் படிவம், மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து விபரங்களும்
எமது இணையத்தளத்தில் ((www.tamilcompetition.org) )
இணைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் உங்கள் தமிழ்க் கல்வி நிலையங்களினூடாகவும்,
தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி
வைக்கப்படவிருக்கின்றன.
இவ்வாண்டுப் போட்டிகளின் விண்ணப்ப முடிவு தினம் இம்மாதம் ஜுலை
9ம் திகதி என்பதை அறியத்தருகின்றோம்.
மற்றைய முக்கிய திகதிகள்:
இலங்கைச் செய்திகள்
நடைமுறைச் சாத்தியமான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை அவர்கள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
-மெலனி மானல் பெரேரா
19 மே,2011ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) எதிரான போரில் வெற்றி பெற்றதன் இரண்டாவது ஆண்டு நிறைவை ஸ்ரீலங்கா கொண்டாடி மகிழ்ந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 19 மே, 2009ல் கொன்றதின் பின்னர் அரசாங்கம் மூன்று தசாப்தங்களாக நடந்த உள்நாட்டு யுத்தத்தை முடித்துவைத்து தனது வெற்றியை அறிவித்திருந்தது.
இங்கு பெரும்பான்மையோர், சிறுபான்மையோர் என்கிற பேதம் எதுவும் இல்லை, ல்லோரும் சமமானவர்களே மற்றும் இங்கு தாய்நாட்டை நேசிப்பவர்கள் தாய்நாட்டை நேசிக்காதவர்கள் என இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன என அரசாங்கம் தெரிவித்தது.
மேலும் ஜனாதிபதி தெரிவித்தது. சமத்துவம் மற்றும் நீதி’ என்பன எல்லோருக்கும் பொதுவானது என்று. தென்பகுதியில் உள்ள மக்கள் இவற்றை அனுபவிக்கிறார்கள் ஆனால் வடபகுதியில் வாழும் மக்களுக்கு அவை கிடைப்பதில்லை. பல வகையான ஆட்களைத் தொடர்பு கொண்டதில் இன்னமும் அவர்கள் பேசுவதற்குக் கூட அச்சப்படும் நிலையில்தான் வாழ்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
பாதல் சர்க்காரை நினைவுகூர்வோம்
.
பாதல் சர்க்கார் (Badal Sircar) இறந்துவிட்டார் என்ற செய்தியை முதன்முதலாக கீற்றுவில் வந்த “பாதல் சர்கார் (15.07.1925 – 13.05.2011) – பண்பாட்டு நெறியாளர்” என்ற கட்டுரையின் மூலமாக அறிந்தேன். அதன் பிறகுதான் அந்த ஞாயிற்றுக்கிழமை ஹிந்துவின் பிரத்தியேக பக்கங்களில் சில நாடகத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் கருத்துக்களை படித்தேன்.
அதனைத் தொடர்ந்து பழைய அனுபவங்களை மனம் அசைபோடத் துவங்கியது.
நாடகம் என்ற சொல் நமக்கு எப்பொழுது அறிமுகமாகியது? புதிய வித்தியாசமான நாடகங்கள் யாரால் எத்தகைய சூழல்களில் எனக்கு அறிமுகமாகியது? அவை எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? பாதல் சர்க்காரின் நாடகம் எனத் தெரியாமலே பார்த்த நாடகம் எது? என இவ்வாறாக பள்ளிப்பருவ காலத்திலிருந்து ஞாபகங்கள் பின்னிலிருந்து முன்னோக்கி வரத்துவங்கின.
தமிழ் சினிமா
பாசக்கார நண்பர்கள்
கருணை இல்லத்துக்கு இலவசமாய் வழங்கிய இடத்தை ராதாரவி திருப்பி கேட்கிறார். இதனால் அங்கு தங்கி இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் தெருவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
அருண் சிறு வயதில் இருந்தே குத்துச் சண்டையில் ஆர்வமாய் இருக்கிறான். பக்கத்தில் பெரோஸ்கான் நடத்தும் குத்துச்சண்டை பயிற்சி மையத்துக்கு போய் மறைந்திருந்து பயிற்சி பெறுகிறான். அப்போது தேசிய குத்துச் சண்டை போட்டிக்கான அறிவிப்பு வருகிறது. வெற்றி பெறுபவருக்கு வீடு பரிசாக வழங்கப்படும் என்கிறார்கள்.
கருணை இல்லத்துக்கு அவ்வீட்டை பெற்றுத் தர குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க தயாராகிறான் அருண். அவன் ஆர்வத்தை புரிந்து பெரோஸ்கான் குத்துச்சண்டை பயிற்சி அளிக்கிறார். அருண் ஆசை நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்...
கருணை இல்லவாசிகளின் உருக்கமான வாழ்க்கை, அம்மா சென்டிமெண்ட், பள்ளி மாணவர்களின் நட்பு விஷயங்களை கோர்த்து காட்சிகளை கச்சிதமாக நகர்த்துகிறார் இயக்குனர் பெரோஸ்கான். ஆதரவற்றோர் இல்லவாசிகளுக்கு துணையாக இருக்கும் அனாதை சிறுவன் அருண் பாத்திரத்தில் அஜ்மல்கான் அம்சமாய் பொருந்துகிறார்.
மாணவியின் கையை பிடித்து இம்சை செய்யும் ரவுடி மாணவனை ஓட ஓட விரட்டி நொறுக்குவதில் வேகம். கடலில் விழுந்து நண்பன் பலியாவது கண்டு கதறுகையில் மனதில் இறங்குகிறார். குத்துச் சண்டை போட்டியில் வீரர்களுடன் மோதுவதில் ஆக்ரோஷம்.
நாயகி திவ்யா நாகேஷ் பிரியமான தோழி. அவர்களுக்குள்ள நட்பு பிரசமற்று நகர்வது ஜீவன். குத்துச் சண்டை பயிற்சியாளராக வரும் பெரோஸ்கான் ஈர்க்கிறார். ராதாரவி, பாலா சிங், பாய்ஸ் ராஜன், ரிஷிராஜ், ஆதித்யா, நீலன் போன்றோரும் உள்ளனர்.
காட்சியோட்டத்தில் நாடகத்தனம் எட்டி பார்ப்பது நெளிய வைக்கிறது. கிளைமாக்ஸ் குத்துச்சண்டை விறுவிறுப் பின் உச்சம். தினா இசையில் அம்மா சென்ட்மெண்ட் பாடல் மனதை தொடுகிறது. கிளைமாக்ஸ் சண்டையை மோகனராமன் கேமரா பரபரவென பதிவு செய்துள்ளது.
நன்றி தினக்குரல்
கரீனாவுக்கு கிடைத்த முத்தம் இலியானாவுக்கு கிடைக்குமா ?
24.05.2011
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இலியானா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'நண்பன்".
இப்படம் ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "3-இடியட்ஸ்" படத்தின் ரீ-மேக் ஆகும். '3-இடியட்ஸ்" படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அமீர்கானும் கரீனா கபூரும் முத்தமிடுவது போன்ற காட்சியிருக்கும்.
மிகநீண்ட முத்தக்காட்சியான இது ஹிந்தி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் அதே காட்சிகள் இப்போது தமிழில் உருவாகி வரும் நண்பன் படத்திலும் இருக்குமா...? விஜய் இலியானாவுக்கு முத்தம் கொடுப்பாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே நண்பன் படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் படத்தின் கதையில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளாராம் ஷங்கர்.
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு குறிப்பாக விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக சண்டைக் காட்சிகளை எல்லாம் ஷங்கர் சேர்த்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது...!! கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!!!!!!
நன்றி வீரகேசரி

Subscribe to:
Posts (Atom)