சிட்னியில் இந்து மகளிர் கல்லூரி OGA நடாத்திய மலரும் மாலை 2023 - செ .பாஸ்கரன்

 .யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் நடாத்திய மலரும் மாலை 2023. கடந்த சனிக்கிழமை 11 3 2019 இல் அவுஸ்ரேலியா சிட்னியிலே Silver Water இல் அமைந்திருக்கும் பகாய் சென்ரர் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. வருடம் தோறும் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் நடத்துகின்ற நிகழ்வுகள் பல வருடங்களாக சினியிலே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பழைய மாணவிகள் தலைமை தாங்கி நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருப்பார்கள். இம்முறை இந்த பழைய மாணவிகள் சங்கத்தை தலைமை தாங்கிச் சென்றவர் திருமதி ஸ்ரீமாதங்கி சாந்தகுமார் அவர்கள்.


நிகழ்ச்சி குறிப்பிட்டது போல் சரியாக ஆறு மணிக்கு இடம்பெற்றது. அதற்கு முதலிலேயே வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சியை செல்வி அபர்னிகா ஜதி சிவசாமி யும் செல்வன் ஆதித்தன் கிரிந்தன் அவர்களும் ஆரம்பத்தில் அழகாக தொகுத்து வழங்கினார்கள். மங்கள விளக்கு ஏற்றலை மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளில் ஒருவரும், ஆசிரியரும், இந்த மன்றத்தின் போசகருமான திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தேசிய கீதம் என்பவற்றை பழைய மாணவிகளின் பிள்ளைகளான செல்வி அபர்னிகா ஜதி சிவசாமி , செல்வி பிரணவி சண்முகதாஸ் செல்வி தாரகா சண்முகராஜன் ஆகியோர் மிக அருமையாக பாடி ஆரம்பித்தார்கள். கல்லூரி கீதத்தை இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகளான திருமதி கீதா ரட்ணசீலன் , Dr பூர்ணிமா முருகன் , சுதா சிவசாமி மற்றும் கலைச்செல்வி குகஸ்ரீ ஆகியோர் பாடினார்கள் அதனை தொடர்ந்து வரவேற்பு உரையை திருமதி ஸ்ரீமாதங்கி சாந்தகுமார் அவர்கள் சுருக்கமாகவும் பல விடயங்களை பற்றியும், சங்கம் செய்து கொண்டிருக்கின்ற சேவைகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

மரண அறிவித்தல்

 .

                   திருமதி தெயவந்திரராணி (ராணி) வேலாயுதர் 

 

கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும் கைதடியைப் புகுந்த இடமாகவும் கலாவெவ இலங்கை, வெலிங்டன் நியூசிலாந்து, Toongabbie அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  ராணி என்றழைக்கப்படும் திருமதி தெய்வேந்திரராணி வேலாயுதர்  07.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைபதமெய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம்மாவின் அன்பு மகளும் சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் திரு வேலாயுதர் சரவணமுத்து (தொழிநுட்ப உத்தியோகத்தர், இலங்கை) அவர்களின் அன்பு மனைவியுமாவார்.
இவர்  பவானி(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி, யசோதினி(சிட்னி), சிவகுமார்(சிட்னி)
, நந்தினி(சுவிஸ்), பாமினி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாலசுப்பிரமணியம், தர்மகுலசிங்கம், விக்டர், ஜெயதேவி, இந்திரன், நந்தன் ஆகியோரின் அன்புமாமியும் கிருஷாந்தி, பார்த்தீபன், கீர்த்திகன், ஏஞ்சலா, அஸ்வினி, ஆருனி, சேந்தன், சுவேதா, ஆரூரன், அஜந்தன், நிஷங்கா மற்றும் முகுந்தன், ஸ்டெவி , அருண், மெதுலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் நவீனா, ஜஸ்வின், யோசான், ஜொகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
காலஞ்சென்ற சற்குணபூபதி,  மோகனலீலா, சௌந்தரலீலாவதி, தர்மலிங்கம், யோகாம்பிகை, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற கணேசு, காலஞ்சென்ற குணரட்ணம், சுப்ரமணியம், புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான விமலாம்பிகை, பாலசிங்கம், அன்னமுத்து, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் வீரகத்தி, செல்வரத்தினம் ஆகியோரின் சகலியுமாவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் :
 அன்னாரது பூதவூடல் 15.03.2023 புதன்கிழமை அன்று 86, Targo Road, Girraween அவரது இல்லத்தில் பி.ப 6 மணியிலிருந்து  8 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
16.03.2023 வியாழக்கிழமை அன்று  மு.ப 11.45க்கு  அன்னாரின் இறுதி ஊர்வலம் 21 Bulli road துங்கபியில் இருந்து  ஆரம்பமாகி North chapel, Pinecrove, Minchinbury மயானத்தை சென்றடையும். பி.ப 1.00 மணிக்கு அங்கு  இறுதிக்கிரியைகள் நடைபெற்று பி.ப 3 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்  , உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டப்படுகின்றார்கள்.
தகவல் : பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
Victor   0400 478 363
Nanthan  0413 895 294
Sivakumar 0413685056

சுருதி தயாசீலனின் நாட்டிய அரங்கேற்றம் - சௌந்தரி கணேசன்பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்று நினைத்துச் சென்றவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக்

கொடுத்த ஓர் அரங்கேற்ற நிகழ்வைப்பற்றிய பதிவு இது.

02/04/23 அன்று சிட்னியில் நைடா கலையரங்கில் செல்வி சுருதி தயாசீலன் அவர்களது அரங்கேற்ற

நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக திருமதி சுகந்தி

தயாசீலனின் குரு கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவநேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக

கௌரவிக்கப்பட்டிருந்தார். அனைத்து முயற்சிகளையும் செய்தபோதும், இலங்கையிலிருந்து குறித்த

தினத்தில் திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களால் வரமுடியாமல் போனதற்காக மிகவும் மனவருந்தி

தனது குருவின் ஆசியை ஒலி வடிவில் தந்து, தனது குருவை தனது தாய் ஸ்தானத்தில் வைத்து

அவருக்காக சுகந்தி தயாசீலன் எழுதிய ஓர் கவிதையும் அரங்கத்தில் வாசிக்கப்பட்ட போது மிகவும்

நெகிழ்ச்சியான தருணம் ஒன்று அரங்கத்தில் அரங்கேறியது.


ஒரு தரமான நாட்டிய நிகழ்ச்சியை இரசிக்கும்போது ஏற்படுகின்ற மனநிலை எப்படி இருக்கும்

என்பதை அன்று என்னால் உணரமுடிந்தது. நேரம் போவதே தெரியாமல் இரசித்துக்

கொண்டிருந்தேன். என்னைப்போல் பலரும் ஓர் சிறந்த அனுபத்தைப் பெற்றுக் கொண்டதாக

நிழ்ச்சியின் நிறைவில் கூறினார்கள்.

2001 ம் ஆண்டிலிருந்தே சிட்னியில் “சிட்னி கலாபவனம்” என்னும் ஆடற் கலையகத்தை நிர்மானித்து

நாட்டியப் பயிற்சிகள், நாட்டிய நிகழ்வுகள், அரங்கேற்றங்கள் போன்றவற்றை மேடையேற்றி பெரும்

கலைத்தொண்டினை ஆற்றிப் பல போற்றத்தக்க விருதுகளைப் பெற்ற திருமதி சுகந்தி தயாசீலன்

அவர்களது மாணவியும் மகளும்தான் செல்வி சுருதி தயாசீலன். இந்த நாட்டியத் தாரகை தனது நடன

நிகழ்வுகளின் மூலம் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை கட்டிப்போட்டிருந்தார் என்றால்மிகையாகாது. நிகழ்ச்சி முடிந்த பின்பும் அரங்கேற்ற அதிர்வுகள் பலரது மனதிலும் அலை

வீசிக்கொண்டிருந்திருக்கும்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 56 “ பனியும் பனையும் “ தொகுப்பின் முன்கதைச் சுருக்கம் ! “ படைப்பாளிகள் சோர்ந்துவிடாமல் உயிர்ப்புடன் திகழவேண்டும் “ முருகபூபதி


எழுத்தாளர்  எஸ். பொ. வுக்கு  அன்று நான் தயாரித்து அனுப்பிய ஈழத்து மூத்த – இளம் தலைமுறை எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியலுடன் இனி அடுத்த அங்கத்தில் சந்திக்கின்றேன் என முன்னைய 55 ஆவது அங்கத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா…?

அங்கிருந்து இந்த அங்கத்தை தொடருகின்றேன்.

நான் அவருக்கு அனுப்பிய பெயர் பட்டியல் பின்வருமாறு:

( 1941 – 1950 )

நவாலியூர் சோ. நடராசன்

1936 ஆம் ஆண்டிலேயே எழுதத் தொடங்கியவர்.  கற்சிலை என்ற சிறுகதையை இவர் எழுதியுள்ளார்.  நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன்.  பல மொழிபெயர்ப்புகளும் இவரது கைவண்ணம்.  இவர் பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டிருப்பதாக அறியப்படுகிறது.

சி. வைத்திலிங்கம். 


இவர் எழுதியிருக்கும் உள்ளப்பெருக்கு, மூன்றாம் பிறை, கங்கா கீதம், பாற்கஞ்சி, நெடுவழி – ஆகிய சிறுகதைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

இலங்கையர்கோன் ( இயற்பெயர் : ந. சிவஞானசுந்தரம் )

இவரது கடற்கரைக்கிளிஞ்சல், வஞ்சம், வெள்ளிப்பாதசரம் ஆகியனவற்றில் ஒன்றை தெரிவுசெய்யலாம்.

சோ. சிவபாதசுந்தரம்:

காஞ்சனை, தோட்டத்து மீனாட்சி, அழைப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று.  ( தமிழில் சிறுகதை – வரலாறும் வளர்ச்சியும் நூலின் இணை ஆசிரியர்.

க. தி. சம்பந்தன்:

விதி, புத்தரின் கண், மனிதன் முதலான இவரது சிறுகதைகளில் ஒன்றை தெரிவுசெய்யலாம்.

கே. கணேஷ்: ( தலாத்து ஓயா, கண்டி )

இவரது ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்ற சிறுகதை சிறந்த சிறுகதை என அறியப்படுகிறது.

குல. சபாநாதன்:

ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்று இரசிகமாணி கனகசெந்திநாதன் குறிப்பிடுகிறார். இவரது கதைகள் ஏதும் கிடைத்தால் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

இராஜ . அரியரத்தினம்:

இவரது வெள்ளம் என்ற சிறுகதை.

அ.செ. முருகானந்தன்:

மறுமலர்ச்சி இலக்கிய இயக்க காலத்தைச் சேர்ந்தவர்.  மனித மாடுகள் என்ற கதைத்தொகுதி வெளியாகியிருக்கிறது.  இவரது  கதைகள் எச்சிலிலை வாழ்க்கை, வண்டிச்சவாரி இவற்றில் ஒன்றை சேர்க்கலாம்.

மார்ச் 08 : அனைத்துலக பெண்கள் தினம் ! படித்தோம் சொல்கின்றோம்: முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய பெண் நூறு - பெண் எனும் நான் நூல்கள் சொல்லும் செய்திகள் ! முருகபூபதி


 “ வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும்


பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன.

அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை.

என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம் 

மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது,  முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல்.

ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம், இதே 08 ஆம் திகதி ஒரு


மேல் நிலைப்பள்ளியில்  பெண்கள் தினத்துக்காக சந்திரிக்கா பேச அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு பெண்ணாக தான் சந்தித்த அனுபவங்களை அன்று பேசியிருக்கிறார். அதற்கு சிறந்த வரவேற்பு கிட்டியிருக்கிறது. அப்போதே அவரது மனதில் தோன்றிய தலைப்பு: Challenge the challenges.

வீடு  திரும்பியதும் தனது முகநூலில்  இந்தத் தலைப்பில் தொடர்ந்து  வாழ்வியல் அனுபவம் சார்ந்து  நூறு நாட்கள் நூறு பதிவுகளை எழுதியிருக்கிறார்.

அதற்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட  அந்த 2021 ஆம் ஆண்டே அவற்றை தொகுத்து நூலுருவாக்கியிருக்கிறார்.

என்னிடம் முகநூல் கணக்கு இல்லை. அதனால், அவரது குறிப்பிட்ட இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு  இறுதிப்பகுதியில் சிட்னியில் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய  இலக்கிய சந்திப்பில்,  தான் எழுதிய பெண் நூறு,  பெண் எனும் நான் ஆகிய நூல்களுடன்  மேலும்  தனது சில நூல்களையும் எனக்குத் தந்தார்.

முன்பு சந்திரிக்கா சோமசுந்தரம் என ஒரு பத்திரிகையாளராகவே  இவரது எழுத்து மூலம்  எனக்கு அறிமுகமானவர், பின்னர் சட்டத்தரணி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனாக   பல வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் நேருக்கு நேர் அறிமுகமானவர்.

சந்திரிக்காவும் எங்கள் வீரகேசரி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  நான் அறிந்தவரையில் இலங்கையில் சில  பத்திரிகையாளர்கள் இதழியலுக்கு அப்பால் சட்டத்துறையில்  தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதழியலில் பணியாற்றியவாறே    சட்டக் கல்லூரிக்குச்சென்று சட்டத்தரணிகளாகிய வீரகேசரி   முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன்   சிவகுருநாதன், வீரகேசரி கண. சுபாஷ் சந்திரபோஸ், வீரகேசரியில் பணியாற்ற வந்து, சட்டம் படிக்கச்சென்ற தேவன் ரங்கன் ஆகியோரை நன்கறிவேன்.

அவ்வாறே இதழியலில் இருந்து, சட்டவல்லுனராக  மாறியவர்தான் சந்திரிக்கா.  இது அவருடைய அயராத  முயற்சியின் வெளிப்பாடு. தன்னை   தேங்க வைத்துக்கொள்ளாமல், படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்ட  ஆளுமைப்பண்பை கொண்டிருப்பவர்.

இலங்கையில் தமது இளமைக்காலத்தில் படித்துவிட்டு,  சென்னை சென்று, ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.   அத்துடன் நில்லாமல், சென்னைப் பல்கலைக்கழகத்தில்   இதழியல் மற்றும் பொதுசன தொடர்பியல் துறைகளில்     முனைவர் பட்டமும் பெற்றவாறு, அவுஸ்திரேலியாவுக்கு வந்து ,  இங்கு சிட்னி  மற்றும் பிறிஸ்பேர்ணில்  சட்டத்துறையில் தேறி,   வழக்கறிஞரானார்.  உயர் நீதிமன்றங்களில்  பணியாற்றியவாறு இலக்கிய ஆய்வுத்துறையிலும்   ஈடுபடுகின்றார்.

எமது தமிழ் சமூகத்தில் ஒரு பெண், இவ்வாறு  அயராமல்,  தொடர்பயிற்சிகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டு நூல்களும் எழுதுவது அரிதான செயல். ஆனால், சந்திரிக்கா ஒரு குடும்பத்தலைவியாக,  வெளி உலகில் தனது இருப்பை   காத்திரமாகவும் தனித்துவமாகவும் தக்கவைத்திருப்பது ஏனையோருக்கு முன்மாதிரியானது.

பெண் நூறு என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் நூலின் முதலாவது குறிப்பிலிருந்து, இந்தப்பதிவின் தொடக்கத்தில் சந்திரிக்காவின் வார்த்தைகளில்   சொல்லப்பட்ட விடயத்திலிருந்தே சந்திரிக்காவின் வளர்ச்சியை எம்மால் இனம் கண்டுகொள்ள முடிகிறது.

பெண் எனும் நான் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது கவிதையில் இவ்வாறு சொல்கிறார்:

நான் காளியுமில்லை, சீதையுமில்லை.

முதல் சந்திப்பு தன்முனைப்பற்ற கலாரசிகை பராசக்தி சுந்தரலிங்கம் முருகபூபதி


இலக்கியம்,  நாடகம், நடனம்,  கூத்து, இசை , ஓவியம், சினிமா, ஒளிப்படம், கைவினை முதலான துறைகளில் எவர் ஈடுபட்டாலும், அவர்களின் செயற்பாடு சமூகப் பயன்மிக்கதாகவிருந்தால்தான், அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும்.

அவ்வாறு நிலைத்திருப்பதற்குரிய அங்கீகாரத்தை தருபவர்கள் கலா ரசிகர்களே. ரசிகர்கள் இல்லையெனில், கலைஞர்களும் இல்லை.

ஆனால்,  கலைஞர்களை வாழவைக்கும் கலா ரசிகர்கள் பற்றி யாராவது பேசுகிறார்களா..? எழுதுகிறார்களா…?

சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் பற்றியும் அதில் நான் சந்தித்த ஒரு கலாரசிகை பற்றியும் இந்த முதல் சந்திப்பு தொடரில்  குறிப்பிடுவதற்கு முன்வந்துள்ளேன்.

நான் இலக்கிய உலகில் ஈடுபடத்தொடங்கியிருந்த  1970 


காலப்பகுதியில், என்னை அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஒவ்வொரு மாதமும் கொழும்புக்கு வருவதற்கு முன்னர், தனது வருகையை ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பிவிடுவார்.

புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் ஒரு வர்த்தக நிலையத்திற்கு  வடக்கிலிருந்து  பொருட்கள்  ஏற்றிவரும்  லொறியில்  மல்லிகை பிரதிகள் பொதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனைப் பெற்று , கொழும்பில் விநியோகிக்கவும் எனவும்  அதில் எழுதியிருப்பார்.

1975 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் வெளியான மல்லிகை பிரதிகளையும்  அவ்வாறே கொழும்பில் விநியோகித்தேன்.  அவ்விதழின் ஆசிரியத்தலையங்கம், அனைத்துலக மாதர் ஆண்டும் நவ இலங்கையின் உதயமும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது.  அந்த ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை மாதர் ஆண்டாக பிரகடனம் செய்திருந்தது.

மல்லிகையில் சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆக்கம், இவற்றுடன் சோவியத் கலை, இலக்கிய, அரசியல் செய்திக்குறிப்புகளும்  இடம்பெற்றிருக்கும்.

அந்த ஏப்ரில்  இதழில் கைப்பணியில் இது ஒரு கலைப்பணி என்ற தலைப்பில் ஒரு பக்கத்தில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. எழுதியவர் பரா. சுந்தரலிங்கம் எனப்பதிவாகியிருந்தது.

எழுதியவர் ஆணா, பெண்ணா என்பதும் தெரியவில்லை. சொல்லப்பட்டிருந்த செய்தி முக்கியமானது.

அதனை எழுதியவர் ஒரு திருமண வைபவத்திற்கு சென்றிருக்கிறார்.  அங்கு  வந்திருந்த விருந்தினர்களுக்கு    திருமண வைபவம் முடிந்ததும் சுவையான கேக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். ஆனால், எதில் என்பதுதான் அதிசயம். வழக்கமாக அழகிய வண்ணக் காகிதத்தில் சுற்றி, அதற்குப்பொருத்தமான அலங்கார வடிவமைப்புக்கொண்ட சிறிய காகிதப்பெட்டியில்தானே கொடுத்திருப்பார்கள் என நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. அன்று விருந்தினர்களுக்கு சுவையான கேக், ஒரு சின்னஞ்சிறிய பனைஓலைக்குட்டான் பெட்டிக்குள் வைத்து தரப்பட்டிருக்கிறது.

வழக்கமாக என்ன  நடக்கும், அதனை விநோதமாகப்பார்த்து சிரித்துவிட்டு, கேக்கை சாப்பிடுவோம்.

ஆனால், அந்த அழகிய  கைவினை பற்றிய அறிமுகத்தையும் எழுதி,  உள்நாட்டில் பனை அபிவிருத்திக்காக  எமது  சமூகம்  எவ்வாறு இதுபோன்ற  சிறிய விடயங்களிலும் அக்கறை செலுத்தவேண்டும் எனவும்  சுட்டிக்காண்பித்து, விழிப்புணர்வூட்டும் வகையிலும் எழுதியிருந்தார், பரா. சுந்தரலிங்கம்.

அந்த ஒரு பக்க பதிவைப்பற்றி ஜீவாவிடம்  “ எழுதியவர் ஆணா…?  பெண்ணா…? எங்கே இருக்கிறார்..?  “ எனக்கேட்டேன்.   “ வாரும் அழைத்துச்சென்று காண்பிக்கின்றேன்.  “ என்றார்.

ஒருநாள் மாலை ஜீவா என்னை கொழும்பு  பாமன்கடைப்பக்கம் ஒரு வீதியில் ஒரு  அழகான மாடி வீட்டுக்கு  அழைத்துவந்தார்.  அங்கிருந்தவர்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள்.

கொஞ்சும் குமரி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நடிகையாக போற்றப்படுபவர்

மனோரமா. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் ரசிகர்கர்களை கவர்ந்தவர். பொம்பளை சிவாஜி என்று பலராலும் அங்கீகரிக்கப் பட்ட இவர் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றவர். பெருபாலான படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்த மனோரமா இளம் நடிகையாக கொஞ்சும் குமரியாகத் திகழ்ந்த காலத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்தார். அப்படி அவர் நடித்த படம்தான் கொஞ்சும் குமரி.

இந்திய சினிமாவில் சாதனை மன்னனாகத் திகழ்ந்த மாடர்ன்

தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் தான் தயாரித்த 97வது படமான கொஞ்சும் குமரியில் மனோரமாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். இளமையும், அழகும் , துடிப்பும் மிளிரும் வண்ணம் திகழ்ந்த மனோரமா கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடவில்லை. அவருக்கு ஜோடியாக கதாநாயகனாக பிரபல வில்லன் நடிகர் ஆர் எஸ் மனோகர் நடித்தார். இப்படியொரு ஜோடிப் பொருத்தத்தை சுந்தரத்தினால்தான் உருவாக்க முடிந்தது.

காட்டில் துணிச்சலுடனும், துடுக்குத்தனத்துடனும் வாழும் அல்லி எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தை சந்திக்கிறாள். அவனின் கம்பீரமும், வீரமும் அவளை கவரவே அவன் மேல் காதல் வசப்படுகிறாள். ஆனால் ராஜாவோ தன் குடும்பத்தை சீரழித்த ஜமீன்தார் ஜம்புலிங்கத்தை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறான். அல்லியின் காதலை நிராகரிக்கிறான். ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவனை அல்லியின் கிராமத்திலேயே தங்கச் செய்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அல்லியின் சாமர்த்தியத்தால் அவளை திருமணம் செய்கிறான் ராஜா.

இப்படி அமைத்த படத்தின் கதை ஆடல், பாடல், மோதல், என்று பல காட்சிகளுடன் நகர்கிறது. மனோரமா குறும்பு, துடிப்பு என்று நடிக்க, வீரம், கோபம், முரட்டுத்தனம் என்று தன் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்தார் மனோகர். எப்போதாவது கிடைக்கும் ஹீரோ வாய்ப்பை அவர் தவறவிடவில்லை.

இவர்களுடன் ஏ கருணாநிதி , சி எஸ் பாண்டியன், ஆழ்வார் குப்புசாமி,புஷ்பமாலா, கே கே சௌந்தர் என்று ஒரு நகைச்சுவை கோஷ்டியே நடித்தது. படத்தின் நகர்வுக்கு இவர்களின் பங்களிப்பும் இருந்தது. குமாரி ருக்மணி, கே ஆர் இந்திராதேவி, மோகன், வி பி எஸ் மணி ஆகியோரும் நடித்தனர். படத்தில் வில்லனாக நடித்தவர் எஸ் வி ராமதாஸ். ஜமீன்தாரின் மிடுக்கு, கொடியவனின் கொடூரம் இரண்டும் கலந்து காட்சியளித்தார்.

தரை மேல் பிறந்து, தண்ணீரில் பிழைத்து, கண்ணீரில் வாழவைக்கும் கடல் அரசியல் ! அவதானி


இலங்கையையும் இந்தியாவையும் சில மைல் தூரங்கள்தான் பிரிக்கின்றது.  இரண்டுக்கும் இடைப்பட்ட  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடலை நம்பி வாழும் மக்களின் பிரச்சினைகள் தீர்வையே காணமுடியாதவாறு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

இந்திய மீனவர்கள்,  இலங்கை கடல்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடித்துசெல்வதனால்,  தங்கள் பொருளாதார வளம் சூறையாடப்படுவதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகின்றனர்.

ரோலர் படகுகளின் சட்டவிரோத பிரவேசத்தை தடுத்து


நிறுத்தவேண்டும் என்று இவர்கள் தரப்பில் சொல்லப்பட்டுவந்தாலும் அக்கரையில் வாழும் இந்திய மீனவர்கள் கேட்பதாயில்லை.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்களும் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளன.  அவர்கள் கைதுசெய்யப்படுவதும், பின்னர் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான காட்சிகளுக்கும் குறைவில்லை.

இரண்டு தரப்பிலும் எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகள் கடந்த காலத்தில் நடந்திருந்தபோதிலும்,  அர்த்தமுள்ள தீர்வு  காணப்படவில்லை.

இந்திரா காந்தி, அன்றைய இலங்கைப் பிரதமர் ஶ்ரீமாவோவுடன்  செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கையின் வசம் வந்தமைதான் தங்களது பிரச்சினைக்கு மூலகாரணம் என்று இந்திய மீனவர்களும் தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி வருகின்றனர்.

 285 ஏக்கர் பரப்பளவுகொண்டிருக்கும் கச்சதீவு, 1974 ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்திற்கு முன்னர், இந்திய ஆளுகைக்குட்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலம் முதல், கடந்த ஆறு தசாப்த காலமாக இந்திய – இலங்கை மீனவர்களின் விவகாரம் எரிந்துகொண்டேயிருக்கிறது.

அத்துமீறிவந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் பாரிய ரோலர் படகுகள், அள்ளிக்கொண்டு செல்லும் கடல் வளம் குறித்த கரிசனையோடுதான் இலங்கை மீனவர்கள் போராடுகிறார்கள்.

இவர்களின் கோரிக்கை வடபுலத்தில் அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளின் வாக்குகளின் எதிர்காலத்திலும் தங்கியிருக்கிறது.

இலங்கை அரசு, இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏழாம்பொருத்தமாகவிருக்கும் ஒரு தமிழரையே மீன்பிடித்துறை அமைச்சராக்கியிருக்கிறது.

அவரும் தன்னாலியன்ற வழிமுறைகளை மேற்கொண்டாலும்,  வடபுலத்து மீனவர் சங்கங்கள் சில அவர்மீது கோபத்திலிருக்கின்றன.

தங்கள் பிரச்சினையை அமைச்சரிடமல்ல, நேரடியாக ஜனாதிபதியிடமே பேசவேண்டும் என்கின்றனர் மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள். 

இவர்களின்  குரலை  தங்களுக்கு சாதகமாக்குவதற்காக  ஒரே குரலில் ஒன்றிணைந்திருக்கிறார்கள் வடபகுதி  தமிழ் அரசியல் தலைவர்கள்.

அதனை வரவேற்கிறார்  மீன்பிடித்துறை அமைச்சர். 

இவ்வேளையில் எமக்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படகோட்டி திரைப்படத்தில்  இடம்பெற்ற தரைமேல் பிறக்கவைத்தான் என்ற கருத்தாழம் மிக்க பாடல்தான் நினைவுக்கு வருகிறது.   

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 11 - தீராவெறி

 

விடுமுறை முடித்து எல்லாரும் வேலைக்குத் திரும்பினார்கள்.

 அதன் பிறகு ஒருநாள் நட்டாஷா வேலையை றிசைன்


பண்ணிவிட்டுப் போய்விட்டாள். போகும்போது எல்லாரிடமும் வந்து கதைத்துவிட்டுப் போனாள்.

 “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று நந்தனிடம் சொன்னாள்.

 அவள் அப்பாலே போனதும்,

“நட்டாஷாவின் வயிற்றைப் பார்த்தாயா நந்தன்? வீங்கி இருக்கின்றது. உள்ளே குட்டி எட்றியான் இருக்கின்றான்” என்றான் ரான்.

 நட்டஷா வேலையை விட்டுப் போனதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை என்பதால் ரான் சொன்னதை நம்பவேண்டி இருந்தது.

 புங் ஜோசுவாவுடனான தொடர்புகளைக் குறைத்து, மெதுவாக அவனை வெட்டிவிட வேண்டுமென நினைத்தாள். தனது பிள்ளைகளின் தோல் தொடர்பான ஒவ்வாமை முற்றுமுழுதாகக் குணமடைந்துவிட்டதாக ஒருவரும் கேட்காமலே புங் சொல்லித் திரிந்தாள்.

 ஜோசுவாவுடனான தொடர்பைத் துண்டிக்கும்போது, தனது ஆத்ம நண்பன் நந்தனுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாள்.

 ஆனால் ஜோசுவாவை வெட்டுவதென்பது அவ்வளவு எளிதான விடயமாக இருக்கவில்லை. புங் ஒருபோதும் அவனைத் தேடிப் போனது கிடையாது. அவன் வழமை போல வந்து கதைத்துக் கொண்டிருந்தான். சக தொழிலாளி என்றால் வெட்டிவிடலாம். ஜோசுவா ஒரு குறூப்லீடர்.

 அவனுக்கு அவளை ஹோட்டலில் சந்தித்தது முதற்கொண்டு அவள் மீது பித்துப்பிடித்தது போலானான். அவளுக்கு விருப்பம் இருந்தாலும் கணவனிற்குத் தெரிந்துவிட்டதனால் தொடர்பை இனியும் நீடிக்க அவள் விரும்பவில்லை. தொடர்ந்தும் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என வலியுறுத்திச் சொன்னாள்.

அவன் வருவதைக் குறைத்துக் கொண்டான். ஆனால் பிரச்சினை வேறு உருவில் வந்தது. புங்கின் மொபைல் போனிற்கு குறுஞ்செய்திகள், செக்ஸ் வார்த்தைகளைத் தாங்கி பாய்ந்து வந்தன. சிறுசிறு செக்ஸ் வீடியோக்கிளிப்புகளையும் அனுப்பினான்.

 ’உன்னோடு நான் இருந்த நேரம் எல்லாம் சொர்க்கம்’ என்றான்.

 பிரச்சினை வலுத்துவருவதாக உணர்ந்தாள் புங். இதனை யூனியனுக்குச் சொன்னால் விபரீதமாகிவிடும் என நினைத்து,ஜோசுவாவுக்கும் மேலான அதிகாரி எட்றியனிடம் முறையிட்டாள். அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எட்றியன் புன்முறுவல் பூத்தார். தான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு அவளின் தோள்களை மெதுவாகத் தடவிச் சென்றார் எட்றியான்.

இலங்கைச் செய்திகள்

 "கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது" செய்தியில் உண்மையில்லை

ஒரு தசாப்தத்திற்குப் பின் கோப் குழு முன் ஆஜரான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம்

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் நாளைய தினம் நடத்தப்பட்டாலும் ரணிலுக்கே வெற்றி "கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது" செய்தியில் உண்மையில்லை


குறித்த குற்றச்சாட்டை மறுத்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந் உண்மையும் இல்லை என்றும் திரிபுபடுத்தப்பட்டு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

இம்ரானை கைது செய்யும் பொலிஸ் முயற்சி தோல்வி

ஐ.எஸ் தாக்குதலில் தலிபான் ஆளுநர் பலி

ஜெர்மனியின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: எழுவர் பலி

3ஆவது தவணைக்கு தெரிவானார் ஜின்பிங்

அமெரிக்காவின் நீர்மூழ்கிகளை வாங்குகிறது அவுஸ்திரேலியா

நேபாள ஜனாதிபதியாக ராம் சந்திர பவுடல் தெரிவு


இம்ரானை கைது செய்யும் பொலிஸ் முயற்சி தோல்வி

பல வழக்குகளுக்கு முகம்கொடுத்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் பொலிஸாரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விடுதலை’

 Friday, March 10, 2023 - 10:18am

சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும், வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தின் ட்ரெய்லர் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மக்களின் உரிமைகளுக்காக போராடும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) வேட்டையாடும் மூத்த பொலிஸ் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை சகிக்க முடியாமல்,சூரி படத்தில் கான்ஸ்டபிள் குமரேசனாக விரக்தியையும் அநீதியைப் பற்றி ஏதாவது செய்ய இயலாமையையும் இத்திரைபடம் சித்தரிக்கிறது. 
நன்றி தினகரன்