புரட்சி செய் !! புரட்சி செய் !!

புரட்சி செய் !! புரட்சி செய் !! - வாழ்க்கை கவிதை

அகிலமாளும் ஆற்றலுடையவள் 
அஞ்சியதால் தானோ ? உனை 
அழிக்கிறார்கள் கருவிலே - நீ 
அறியாமையை நீக்கி !! 

அணுவைப் போல பிளந்து 
ஆற்றல் பிழம்பாகி 
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி 
ஆளுமை புரட்சி செய் !! 

கருக்கலைப்பைக் கடந்தாலும் 
கள்ளிப் பாலாபிசேகமிட்டு 
கொல்லுகிறார்கள் உன்னோடு உன் 
குலத்தின் ஈராயிரம் சிசுவையும் !! 

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி 
அக்கயவர்களின் சிரத்தை சீவி 
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து 
அறிவியலிலே புரட்சி செய் !! 

இனிய தமிழ் மாலை 2013 - திருநந்தகுமார்

.
சிட்னி பெரும்பாகத்தில் உள்ள ஆறு பாடசாலைகள் ஒன்றிணைந்து உருவாக்கிய நி.ச.வே தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இனிய தமிழ்மாலை 2013 நிகழ்வு ஒக்ரோபர் 5ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் 10.30 மணிவரை ஜேம்ஸ் ரூஸ் உயர் பாடசாலை மண்டபத்தில் நடந்தேறியது.  தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகிகள், கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாகிகள், சமூகப் பெரியார்கள் எனப் பலரும் மண்டபத்தில் கூடியிருந்தனர். .

மாநிலத்தின் முதல் தமிழ்ப் பாடசாலையாகிய ஆஸ்பீல்ட் பாலர் மலர் தமிழ்ப் பள்ளியின் ஆரம்பகால ஆசிரியர்களுள் ஒருவராக விளங்கிய மருத்துவர் முத்துக்கிருஸ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு பதிவு பெற்ற பின்னால் பொறுப்பிலிருந்த தலைவர் பேராசிரியர் சிறீரவீந்திரராஜா, மற்றும் ஈஸ்ட்வூட் தமிழ்க் கல்வி நிலையத்தின் முதல் தலைவர் திரு பகீரதன், கூட்டமைப்பின் பாடநூல் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா, சமூகப் பெரியார் முனைவர் கௌரிபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2013 (சிட்னி: ஒக்ரோபர் 26ம் 27ம் திகதி)

.


அன்பார்ந்த தமிழ் முரசு நண்பர்களே, வணக்கம்,

இவ்வருடம் சிட்னி - மெல்பேர்ண் என இரு மாநிலங்களிலும், கம்பன் விழா சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். கம்பன விழாக்களில் கலந்து சிறப்பிப்பதற்காக உலகப் புகழ்பூத்த பேச்சாளர்கள் கடல் கடந்து வருகை தரவுள்ளனர். இவர்களோடு எம் அவுஸ்திரேலியக் கம்பன் கழகப் பேச்சாளர்களும், அவுஸ்திரேலியத் தமிழறிஞர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிட்னியில் சனி - ஞாயிறு என இம்மாதம் 26ம் 27ம் திகதிகளில், காலையும் மாலையும் என நான்கு அமர்வுகளில் இவ் விழா இடம்பெறவுள்ளது. இவ்வருடத்திற்கான உயர் 'மாருதி' மற்றும் சான்றோர் விருது வழங்கல் சிறப்பாக, விழாவின் முதலாம் நாள் மாலை நிகழ்வில் நடைபெறவுள்ளது.

எம் தமிழ் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். திரளென வருகை தந்து விழாவைச் சிறப்பித்தருள்க. விபரங்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் பார்க்க.

வெங்கடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா 13.10.2013

.

ஞாயிற்றுக் கிழமை பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருக்க தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

.

'மாருதி' விருதாளர் 2013 - 'மாருதி' சிசு நாகேந்திரன்.



அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினரின் இவ்வருடத்திற்கான உயர் 'மாருதி' விருதுச்  செய்திகளை தமிழ் முரசோடு பகிர்ந்து கொண்டனர்.



நவராத்திரி - ஒரு விளக்கம் - க. கணேசலிங்கம்

.

நவராத்திரி நாட்கள் முடிவுக்கு வருகின்றன. இந்த நேரத்தில் இவை குறித்த சில கேள்விகள் எழுகின்றன.
ஏன் இந்த நாட்களை துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு மூன்று மூன்று நாட்களாக ஒதுக்கி ஒன்பதாகக் கொள்ள  வேண்டும்ஏன் இவை  ஒன்பது இரவாக (நவராத்திரியாக) இருக்கவேண்டும்ஒன்பது நாட்களாக ஏன் கொள்ளக் கூடாது?  
இத்தகைய கேள்விகளை எவரும் எழுப்புவதாகவோ அவற்றுக்குப் பதில் சொல்வதாகவோ காணோம்.
கால ஓட்டத்தில் நவராத்திரி போன்றவை குறித்த தத்துவ விளக்கமும் வழிபாட்டு முறைகளும் மாறியுள்ளன. தமிழ் நிலத்தின் சிவ சக்தி வழிபாடு குறித்து அறிவதற்கு சைவத்தின் தத்துவம் துணை செய்யும்.
உயிர்களை உய்விக்கும் பொருட்டு சிவன் பல அருள் திருமேனிகளை எடுக்கிறான். அவனின் சக்தி பேதங்களான இவற்றை ஒன்பதாக சைவ சித்தாந்தம் கொள்கிறது. சிவஞான சித்தியார் என்னும் சித்தாந்த நூல், நவம் தரு பேதமாக ஏக நாதனே நடிப்பான் என்று கூறி விளக்குகிறது. பரசிவன்,பராசக்தி, அபரசிவன்அபரசக்தி, சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன்,. விஷ்ணு, பிரமா ஆகிய மூர்த்தங்களே  (நவந்தரு பேதமான) இந்த ஒன்பது வேறுபட்ட வடிவங்களுமாகும். இவற்றுள் பரசிவன் தவிர்ந்த மற்றைய வடிவங்கள் சக்தி பேதங்கள்.
மேற்கண்டவற்றில் பரசிவன்பராசக்தியைத் தவிர்த்து மற்றைய ஏழு வடிவங்களும் சுத்த மாயா தத்துவங்களில் நின்று சிவன் எடுக்கும் திருவடிவங்களாகும். சைவம் கூறும் முப்பத்தாறு தத்துவங்களில் நாதம் விந்து சாதாக்கியம் மகேஸ்வரம் சுத்தவித்தை என்பன சுத்த மாயா தத்துவங்கள். அபரசிவன், அபரசக்தி, சதாசிவன், மகேஸ்வரன் ஆகிய வடிவங்கள் முறையே முதல் நான்கு தத்துவங்களிலும், மற்ற மூன்று வடிவங்களும் சுத்தவித்தையிலும் நின்று தோன்றுகின்றன.   பரசிவன், பராசக்தி தத்துவத் தொடர்பில்லாதவர்கள்.
மேற்கண்ட ஒன்பது சிவ சக்தி  வடிவங்களுடன் தொடர்புடைய வழிபாடாக ஒன்பது நாட்களும் இருப்பதால் நவராத்திரி எனப்படுகிறது. அவற்றை ஏன் ஒன்பது பகலாக அல்லது நாளாகக் கொள்ளாமல் இரவாகக் கொள்ளவேண்டும்?
உயிர்கள் எதனையும் அறிய முடியாமல், அவற்றுக்கு அறியாமை போன்ற ஒரு மறைப்புத்திரை (a veil of ignorance) செயற்படுகிறது. திரோதானம் எனும் இம்மறைப்பு  திருவருள் ஞானம் வரும்வரை நீடிக்கும். இந்த அறியாமை இருளைக் குறிப்பதாக நவ ராத்திரி உள்ளது.    
எனவே நவராத்திரி  என்பது உயிர்களை உய்விக்க இறைவன் கொண்ட ஒன்பது மூர்த்தங்களை ஒன்பது இரவில் தொழுதிடும் வழிபாடு என்பது பெறப்படும்.
[மேற்கண்ட கருத்தை, பல ஆண்டுகளின் முன்னர் சென்னைப் பல்கலை கழகத்து சைவ சித்தாந்தத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வை. இரத்தினசபாபதி அவர்களின் நவராத்திரி பற்றிய சொற்பொழிவில் கேட்டுள்ளேன். ]
க. கணேசலிங்கம்

இலங்கைச் செய்திகள்


பத்திரிகையாளர் நடராஜா பணத்துக்கும் பொருளுக்கும் துணை போனது கிடையாது: அஸ்வர் எம்.பி. அனுதாபம்


பொதுநலவாய மாநாட்டில் கனேடிய பிரதமர் பங்கேற்க மாட்டார்

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் விபரம்

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை

தனியார் பஸ்களில் கப்பம்பெறும் கும்பல்



--------------------------------------------------------------------------------------------------------------
பத்திரிகையாளர் நடராஜா பணத்துக்கும் பொருளுக்கும் துணை போனது கிடையாது: அஸ்வர் எம்.பி. அனுதாபம்

08/10/2013   பத்திரிகைத்துறையில் நல்ல அனுபவமும் திறமையும் நிறைந்தவர் அமரர் செல்லையா நடராஜா.அவரது பிரிவு பத்திரிகைத்துறைக்கு பாரிய இழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ெதரிவித்தார்.வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் நடராஜாவின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பத்திரிகைத்துறை மூலம் அவர் ஆற்றிய சேவை மிகவும் பாராட்டுக்குரியது. எவரது மனமும் நோகும் வண்ணம் தனது பேனாவைப் பிடிக்காது அனைவரையும் அரவணைத்துக் கொண்டே சென்றார்.அது மாத்திரமல்ல, இளம் பத்திரிகையாளர்களையும் உருவாக்கி செயற்பட்டார்.

அ.முத்துலிங்கம் - நேர்காணல்

.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூசை 7ம் நாள்

.




அடுப்பங்கரை கைதிகள் - கி.நடராசன்


.

திரும்ப திரும்ப நிகழும் ஆழ்ந்த உறக்கச் சுற்றுகளில் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சுற்றில் வரலட்சுமி இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள். மலரினும் மெல்லிய தீண்டலும், குழலின் இசையிலும் மெல்லிய சிணுகங்க‌ல்களும் அவளின் ஆழ்மனதினைச் சலசலத்துப் புத்துயிர்ப்பை துளிர்க்கச் செய்தது. அவளின் ஒரு வயது குழந்தை அவளின் மங்கல நாணை மெல்ல வருடிக் கொண்டிருந்தது. மெல்ல கண் விழித்தாள். செல்லமகள் பூவாய் அரும்பி புன்முறுவல் செய்ததை குளிர்ந்த பசும் ஒளி மேலும் அழகாக அலங்கரித்தது.
சரியாய் தினமும் 4.30க்கு விழித்துக் கொள்ளும் அம்மு குட்டியை அணைத்து பால் புகட்டினாள். வயிறு நிரம்பியதும் கண், காது, மூக்கு, கன்னம்…. என்று எங்கும் செல்ல மகள் தளிர்க் கரங்களை தவழ விட்டாள். அந்த சில நிமிடங்கள் வரலட்சுமியை தாய்மைப் பரவசம் நாடி நரம்பெங்கும் பரவி சிலர்க்கச் செய்தது. குழந்தை மீண்டும் உறங்கி விட்டது. இது வாடிக்கையாக நடப்பதுதான்.
அவள் சிரித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள். இப்பொழுது வேலையை ஆரம்பித்தால் தான் பதட்டம் இல்லாமல் எல்லா வேலைகளையும் இயல்பாய் செய்ய இயலும். வரலட்சுமிக்கு உடம்பு கச கசவென்று அசதியாய் இருந்தது. அவள் கணவனைப் பார்த்தாள். இன்ப கிளுகிளுப்பு முகத்தில் அரும்பியிருக்க மெய்மறந்து தூங்கிக் கொண்டு இருந்தான். வழக்கத்தை விட அரை மணி நேரமோ, ஒருமணிநேரமோ கழித்துதான் இன்று எழுந்திப்பான் என்பது அவளுக்குத் தெரியும்!
குளியல் அறைக்குச் சென்று குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி ஆசைத் தீர குளித்தாள். அசதி நீரோடு வழிந்து சென்றது. புத்துணர்வும், சுறுசுறுப்பும் உடம்பில் தொற்றிக் கொண்டது. பணிகளை குறுக்கீடு இல்லாமல் செய்வதற்கு வசதியான ஆடையைத் தரித்தாள்.

தலைநகரில் கலை வளர்க்க நாட்டுக்கூத்து கலையே கைகொடுத்தது

.

பன்முக பரிமாணங் கொண்ட கலைஞர் அம்புறோஸ் பீட்டர்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பாடற்குழுவின் பிரதான உறுப்பினராக நாற்பத்தைந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதோடு பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பாடல்களை எழுதி வெளியிட்டுள்ள பெருமையைச் சார்ந்தவர்தான் அம்புறோஸ் பீட்டர். இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞர். ஆன்மீகம், கலையுணர்வு கொண்ட இவரது நினைவலைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தகத்தைப் பற்றி கூறுகையில்...
யாழ் புங்குடுதீவில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். தந்தையார் அம்புறோஸ். தயார் பிரகாஷி. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டிருந்த என் தந்தையார் மதப்பற்று நிறைந்தவர். ஊர் தேவாலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று திருத்தொண்டாக நினைத்து செயலாற்றுவார். அந்த ஆன்மிக உணர்வின் இரத்த பந்தம்தான் என்னுள்ளும் உள்வாங்கியுள்ளது. என் தந்தையார் ஆன்மீகத் தொண்டன் மாத்திரமல்ல நல்லதொரு நாட்டுக்கூத்துக் கலைஞரும் கூட. தந்தையின் தந்தை வழி வந்த மரபு கலையாக நாட்டுக் கூத்து எங்கள் குடும்பத்தில் விளங்கியது.
தேவாலயத்தில் பாஸ்கு காலங்களில் இடம்பெறும் கிறிஸ்தவ நாடகங்களை நாட்டுக் கூத்து பாணியில் அரங்கேற்றுவார்கள். அவ்வாறு அரங்கேற்றிய ஞானசெளந்திரியில் பெண் வேடமிற்று நடித்துள்ளேன். இதே கதையில்.
சில்லையூர் செல்வராஜனுடன் இணைந்தும் பாத்திரங்களேற்று நடித்துள்ளேன்.

உலகச் செய்திகள்

அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை

எகிப்தில் மீண்டும் மோதல்கள்: 50 பேர் பலி

 மகளின் மரணத்துக்கு காரணமான சவுதி மதகுருவுக்கு 8 ஆண்டுகள் சிறை

லிபிய பிரதமர் ஆயுததாரிகளால் கடத்தல்

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் விருது
---------------------------------------------------------------------------------------------------------------

 

அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை

04/10/2013   அமெ­ரிக்க குடி­ய­ரசு கட்­சியின் ஒரு பழை­மை­வாத பிரி­வொன்று நாடு கடனில் மூழ்­கு­வதை அனு­ம­திப்­ப­தற்கு விருப்பம் கொண்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்ளார்.

அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் வரவு, செலவுத் திட்­ட­மொன்று தொடர்பில் இணக்கம் காணத்­த­வ­றி­ய­தை­ய­டுத்து அந்­நாட்டு அர­சாங்க நிறு­வ­னங்கள் பகு­தி­யாக மூடப்­பட்­டுள்­ளன.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூசை 8ம் நாள்

.

தமிழியல் விருது விழா - 2013 - 20-10-2013

.

ஆசிரியர்  குழு
அவுஸ்திரேலியா  தமிழ்முரசு   இணைய   இதழ்
அன்புடையீர்   இந்தவாரம்  வெளியாகியிருக்கும்  தங்கள்  தமிழ்முரசு  இணைய  இதழில் நான்  எழுதிவரும்  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரின்  10  ஆவது  அங்கத்தில்   பதிவுசெய்யப்பட்டுள்ள  குத்துவிளக்கு  திரைப்படம்   தொடர்பாக  வாசகர்களுக்கு  தவறான  தகவலை  தந்திருப்பதாகவும்   தற்பொழுது  உயிரோடு  இல்லாதவர்கள்  பற்றி எழுதுவதில்  அவதானம்தேவை  என்ற  குரலோடு   தமது கருத்தினை   ஒரு  வாசகர் பதிவுசெய்துள்ளார்.
எனது  தொடரை  படித்துவரும்  அந்த  வாசகருக்கு   முதலில்   எனது மனமார்ந்த  நன்றி.  குறிப்பிட்ட  தொடர்   இருப்பவர்களையும்   எம்மைவிட்டு   மறைந்தவர்களையும்  பற்றியதுதான்.   உண்மையான   தகவல்கள்  ஆதாரங்களுடன்தான்  அதனை  எழுதிவருகின்றேன்.   எனது  தொடரின்  உண்மைத்தன்மை  பற்றி  என்னுடன்  தொலைபேசி   ஊடாகவும்   மின்னஞ்சலூடகவும்   நேரில்  சந்தித்தும்  ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளமுடியும்.
மறைந்தவர்களைப்பற்றி  எழுதும்பொழுது  அவர்களின்  மேன்மையான  பக்கங்களை  பதிவுசெய்வதே   எனது  பண்பும்   பழக்கமும்  ஆகும்.  பலமும்  பலவீனங்களும்  நிரம்பியவர்கள்   மனிதர்கள்.  எனினும்   அவற்றின்  ஊடாக  தெரிவுசெய்வது  மேன்மையான   பக்கங்களை  மாத்திரமே.
குத்துவிளக்கு   தொடர்பாக  தாய்வீடு   என்ற  இணையத்தில்   இலங்கையின்  பிரபல  எழுத்தாளர்  திரு.  தெளிவத்தை ஜோசப்  அவர்கள்    சில்லையூர்  செல்வராசன்  பற்றி  எழுதியிருக்கும்  கட்டுரையை  குறிப்பிட்ட  வாசகர்  படிக்கவேண்டும்  என்பதே  எனது  பதிலாகும்.  தாய்வீடு  இணையம்:  றறற.வாயiஎநநனர.உழஅ
முருகபூபதி

தமிழ் சினிமா

பொன்மாலைப் பொழுது

கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் பொன்மாலைப் பொழுது.
ஆதவ் கண்ணதாசனும் காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.
காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகத்தோடும், கண்டிப்பாகவும் இருப்பவர்.
ஆதவின் அப்பா கிஷோர் இதற்கு நேர்மாறானவர். மகன் சிகரெட் அடிப்பதைக்கூட தட்டி கேட்க தயங்குபவர்.
ஆதவ், காயத்ரியிடம் நட்பாக பழகுவதை கண்டு அடித்து அவமானப்படுத்தி விடுகிறார் அருள்தாஸ்.
அதன் பின்பு அப்பாவை பழிவாங்க வேண்டும் என ஆதவ்வை காதலிக்கிறார் காயத்ரி.
பள்ளி பருவத்து தீவிர காதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதற்கு கிஷோர் என்ன முடிவு எடுத்தார் என்பதையும் இயக்குனர் யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
அப்பாவின் தட்டிக்கொடுத்தலை தவறாகவும் பயன்படுத்தாமல், சரியாகவும் புரிந்துகொள்ளாமல் பள்ளியில் உடன் படிக்கும் காயத்ரியுடன் காதலில் விழும் அப்பா(வி) பிள்ளையாக ஆதவ் கண்ணதாசன்.
அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவிற்கு அர்ஜுன் பாத்திரத்தில் அப்பா(வி) பிள்ளையாக அசத்தியிருக்கிறார்.
காதலி காயத்ரியுடன் நிஜமான நெருக்கம் கிறக்கம் காட்டி நடித்திருக்கிறார்.
‘கண்ணதாசன் வீட்டு கட்டுத்தரியும் காதல் பாடும்தானே!’ என நிரூபித்திருக்கிறார்.
காயத்ரி, திவ்யாவாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘18 வயசு’ படங்களைக் காட்டிலும் இவரின் நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது.
ஆதவ்வின் அப்பாவாக கிஷோர். தன் சிறு பிராய காதலையும் ப்ளாஷ்பேக்கில் நினைத்தபடி, மகனையும் அவனது காதலையும் முள்ளின் மீது பட்ட சேலையாக கையாளும் விதத்தில் ‘ஹேட்ஸ் ஆப் கிஷோர்’ சொல்ல வைக்கிறது.
பழைய இரும்பு வியாபாரியாகவும் புதிய நாயகி காயத்ரியின் அப்பாவாகவும் அருள்தாஸ் அலற வைக்கிறார்.
அனுபமா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட அம்மா கதாபாத்திரங்களும் பளிச்சிட்டிருக்கின்றனர்.
பாடல்கள் சுமார் ரகம் தான். ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு உண்மையாகவே அவரை ஒளிவீரன் என ஒப்புக்கொள்ள வைக்கும் பலம்!
ஏ.சி.துரை எழுதி இயக்கி இருக்கும் பொன்மாலைப் பொழுது - இசை, பாடல்கள் மாதிரி ஒரு சில குறைகள் இருந்தாலும் பள்ளி மாணவப்பருவ காதல் விழிப்புணர்வு ப(பா)டமாகும்.
நடிகர்கள்: ஆதவ் கண்ணதாசன், காயத்ரி, கிஷோர், அருள்தாஸ், அனுபமா
இயக்குனர்: ஏ.சி.துரை
ஒளிப்பதிவு: சி.சத்யா
தயாரிப்பு: அமிர்தா கௌரி
நன்றி விடுப்பு


வருத்தப்படாத வாலிபர் சங்கம்

கவலைகளை மறந்து குடும்பத்துடன் சேர்ந்து முகம் சுழிக்காமல் பார்க்கக்கூடிய ஜாலியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கொமெடி படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த அழகான ஊர்தான் சிலுக்குவார்பட்டி.
அங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக சிவகார்த்திகேயனும், செயலாளராக சூரியும் இருக்கின்றனர்.
இதே ஊரின் தலைவராக சத்யராஜ் வருகிறார். இவருக்கு 3 பெண்கள் உள்ளனர்.
ஊரில் ஏற்படும் வாய்தகராறில் சத்யராஜ், தன்னுடைய பெண்கள் யாரையும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் காதை அறுத்துக் கொள்வேன் என சபதம் கொள்கிறார்.
இதனால் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் அவசர அவசரமாக அவர்கள் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.
3வது பெண்ணான நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணம் செய்து முடித்துவைக்க முடிவு செய்யும் வேலையில், சிவகார்த்திகேயன் நுழைந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
இதனால், சிவகார்த்திகேயனுக்கும் சத்யராஜுக்கும் மோதல் ஏற்படுகிறது.
மறுபுறம், சிவகார்த்திகேயனை ஸ்ரீதிவ்யா ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால், சிவகார்த்திகேயனோ, அதே ஊரில் டீச்சராக வேலை பார்க்கும் பிந்துமாதவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
பிந்துமாதவியோ இவரது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார்.
காதல் தோல்வியில் மனம் நொந்து வாடும் சிவகார்த்திகேயன், கோவில் திருவிழாவின்போது ஸ்ரீதிவ்யாவை சேலையில் பார்த்ததும் சொக்கிப் போகிறார். இதனால், அவள்மீது காதலிலும் விழுகிறார்.
இருந்தாலும் காதலை மறைத்து சிவகார்த்திகேயனை சுத்தலில் விடுகிறார் நாயகி. இவர்கள் காதல் தெரிந்ததும் சத்யராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
பின்னர், சிவகார்த்திகேயன்- ஸ்ரீதிவ்யா காதல் என்னவாயிற்று? சத்யராஜ் இவர்களை ஒன்று சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பாணியில் நக்கல், நையாண்டி, டைமிங் கொமெடி என்று படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சிவகார்த்திகேயனுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சமஅளவு பங்கு ‘பரோட்டா’ சூரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து செய்யும் ரகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
"வாழ்க்கைல டீட்டிகாஷன் ரொம்ப முக்கியம் டேய், அது டெடிக்கேஷன் டா கோபத்துல எனக்கு அப்படித்தாண்டா வரும்." இதுபோன்று இவர் பேசும் ஒன்லைன் வசனங்களில் கைதட்டல் வாங்குகிறார்.
சத்யராஜ் ‘சிவானாண்டி’யாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படம் முழுவதும் கெத்தாக வலம் வருகிறார்.
ஸ்ரீதிவ்யா அழகான கிராமத்து பெண்ணாக படம் முழுக்க வலம் வருகிறார்.
படத்தில் இவரது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாவிட்டாலும் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்.
காதல் காட்சிகளில் இவருடைய கண்கள் அலைபாயும் அழகை ரசிக்கும்படியாக இருக்கிறது. பிந்துமாதவி டீச்சராக வருகிறார். சில சீன்களை வந்துவிட்டு மறைந்து போகிறார்.
சிவா மனசுலசக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் ஹிட் அடிச்ச எம்.ராஜேஷின் உதவியாளர் பொன்ராம் இயக்குகிறார் என்றதும் படத்தின் மீது ரொம்பவும் எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் முழுமைப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமான கதை என்றாலும் திரைக்கதையை ரசிக்கும்படியாக வைத்ததில் கைதட்டல் பெறுகிறார்.
படத்தோட கதையை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்து பரோட்டா சூரியின் நகைச்சுவையுடன் படத்தை நகர்த்தியதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட் அடித்திருந்தாலும் அவற்றை காட்சிப்படுத்திய விதமும் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இனி பாடகராகவும் ஒரு ரவுண்டு வரலாம்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கிறது. ஊரின் அழகை இவரது கமெரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அனைவரையும் சந்தோஷப்படுத்தி வெளியே அனுப்புகிறது.
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி
இயக்குனர்: பொன்ராம்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்
நன்றி விடுப்பு