பாக்ஸ் ஆபிஸின் சூறாவளி என்றால் அது சல்மான் கான் தான். படம் நன்றாக இருக்கிறதா? இல்லை மொக்கையாக இருக்கிறதா? என்று ஒருவரும் பார்ப்பது கிடையாது, கிங் கானின் சாதனையை முறியடிக்க முதல் நாளே அனைத்து திரையரங்குகளையும் நிரப்பி விடுவார்கள் சல்லு பாய்ஸ்.
பஜிரங்கி பைஜான் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சல்மான் அடுத்து ப்ரேம் ரதன் தான் பாயோ என்ற தோல்வி படத்தை கொடுத்தார். ஆனால், அந்த படமும் ரூ 400 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்பதை நிரூபிக்க சுல்தானாக களம் இறங்கியுள்ளார்.
கதைக்களம்
டெல்லியில் ஒரு முரட்டுத்தனமான சண்டை ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்தியாவில் இருந்து யாருமே இதற்கு சண்டைப்போட வரவில்லை, இந்த போட்டியை நடத்தும் இளைஞர் ஒருவருக்கு சுல்தான் என்பவர் ஹரியானா மாநிலத்தில் இருக்கிறார், அவர் தான் இதற்கு சரியான ஆள் என்று தெரிய வருகிறது.
ஆனால், சுல்தானை போய் பார்த்தால் அங்கு பேர் அதிர்ச்சி அவருக்கு, ஏனெனில் இனி மல்யுத்தமே செய்வதில்லை என சுல்தான் முடிவு செய்துள்ளார், சில குடும்ப பிரச்சனைகளால்.
இதன் பிறகு சுல்தான் இந்த போட்டியில் விளையாட ஒரு வழியாக சம்மதிக்க, அவருக்கு முற்றிலும் வேறுபட்ட தளமான, இந்த முரட்டுத்தனமான சண்டையில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கும் படம் தான் சுல்தான்.
படத்தை பற்றிய அலசல்
சுல்தானான சல்மான் கான், இவரை தவிர வேறு யாரும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை செய்ய முடியுமா? என்று தெரியவில்லை. இந்தியன் ஹல்க் போல உள்ளார், போட்டியை நடத்தும் இளைஞர் இவரை பார்க்க வரும் போது இவனா? அந்த சுல்தான் என கேலியாக பார்க்கும் இடத்தில், குழியில் மாட்டிய ட்ராக்ட்ரை வெளியே எடுத்துவிடும் இடத்திலேயே சல்லு பாய் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
இத்தனை பெரிய உருவமாக இருந்தாலும் அப்பாவியாக நடிப்பதில் சல்மானை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அனுஷ்கா ஷர்மாவை பார்த்தவுடன் காதல், அவருக்காக மல்யுத்த போட்டியில் இறங்குவது, பின் வெற்றி பெற்று திமிருடன் பேசுவது என ஒன் மேன் ஷோ.
அனுஷ்கா ஷர்மா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம், அவரும் ஒரு மல்யுத்த வீராங்கனையாக கலக்கியிருக்கிறார். தன் கணவனிடம் சண்டைப்போட்டு பேசாத இடத்திலும், அவர் போட்டியை டிவியில் கூட பார்க்காமல் இருந்தாலும் சல்மானுக்காக அவர் உருகும் காட்சி சூப்பர்.
இப்படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் இதுவரை 3 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இதில் இரண்டுமே வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து எடுத்துள்ளார். மூன்றாவது படமே கபாலி ரஞ்சித் ஸ்டைலில் ஒரு இமாலய நடிகன் கிடைத்துள்ளார், அவரை எப்படி ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என ஒவ்வொரு நொடியும் யோசித்து திரைக்கதை அமைத்துள்ளார் போல.
விஷால் சேகரின் இசையில் ஓப்பனிங் சாங் மட்டுமே ரசிக்க வைக்கின்றது, அதுவே படம் முழுவதும் பின்னணியிலும் ஒலிப்பது சூப்பர்.
க்ளாப்ஸ்
சல்மான் ஒன் மேன் ஆர்மி, படம் முழுவதையும் தாங்கி செல்கிறார். சல்மான் - அனுஷ்கா காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை, மல்யுத்த போட்டிகள் யதார்த்தம் மீறாமல் எடுத்தது. படத்தின் வசனம் கவணிக்க வைக்கின்றது, ”ஒரு ஆணின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே பெண் தான் கூட இருப்பாள், அதை வெற்றியாக்குவதும், தோல்வியாக்குவதும் உன் கையில்” போன்ற வசனம் கவர்கிறது.
பல்ப்ஸ்
படத்தின் நீளம் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், என்ன தான் சல்மான் ஹீரோ என்றாலும் இப்படியா எல்லோரையும் அடித்து தும்சம் செய்துக்கொண்டே போய்கிட்டே இருப்பார்.
இயக்குனர் தென்னிந்திய சினிமாவின் ரசிகர் போல, பல தென்னிந்திய சினிமாவை ஒரு கலவையாக பார்த்த அனுபவம்.
மொத்தத்தில் சுல்தான் எவனாலும் வெல்ல முடியாதவன் என நிரூபித்து விட்டான்.
ரேட்டிங்- 2.75/5 நன்றி cineulagam