லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்.


.
பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த 
நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணை பற்றிய பதாதைகளும் மற்றும் தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் மாணவர்கள் கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய இளவரசர் அவர்களும் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார் .



 பிரித்தானியாவிலுள்ள 10 க்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.இவ் ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னதாக பிரசித்தி பெற்ற சுற்றுலா பயணிகள் கூடுதலாக காணப்படும் இடமான Piccadly Circus இல் மாணவர்கள் பலர் சேர்ந்து மேற்கத்தைய நடனத்துடன் சார்ந்த பாணியில் திடிரென்று வேற்றின மக்கள் முன்னால் தோன்றி நடனமொன்றை இடம்பெற செய்து அதன் மூலமாக ஈழப்பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை பரப்பினர். அவர்களின் நடன நிகழ்வை ஒட்டி மற்றும் சில மாணவர்கள் சுற்றியுள்ள சுற்றுலா பயணிகளிற்கும் மற்றும் வேற்று இன மக்களிற்க்கும் ஈழப் பிரச்சனையைப் பற்றிய துண்டு பிரசுரங்களை அளித்தனர்.ஆர்பாட்டத்தின் போது தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப்பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் மற்றும் சிறுவர்களின் கைப்பட உருவாகிய மனுக்களும் பிரதமர் மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நன்றியுரையுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வீர வசனத்துடன் நிறைவேறியது...

மரண அறிவித்தல்

.

கோபாலகிறிஸ்ணனின் நான்குபெண்கள் - செ .பாஸ்கரன்

.
 சென்ற ஞாயிற்றுக்கிழமை 16 .06.2013 மாலை 5 மணிக்கு சிட்னியில் தரமான திரைப்படங்களை திரையிட விரும்பிய சிலர் ஒன்று கூடுவதாகவும் கலந்துரையாட உள்ளதாகவும் நண்பர் ரஞ்சகுமாரிடம் இருந்து கிடைத்த குறும் தகவலும் தமிழ்முரசுஒஸ்ரேலியா இணைய பத்திரிகையில் பிரசுரிக்க அனுப்பிய விளம்பரத்தையும் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பல முறை பலருடன் இது பற்றி கதைத்திருந்தும் நடைமுறைப்படுத்த முடியாது போய்விட்டது. தற்போது அது நடக்க இருக்கின்றது. விளம்பரத்தைப்பார்த்தேன் சகாஸ் அமைப்பு  அழைக்கிறார்கள் அடூர் கோபாலகிறிஸ்ணனின் நான்குபெண்கள். என்றிருந்தது. 

தங்கத் தாரகையே !

.

தூக்கி முடித்த குழலழகில்
     சொக்கிப் போகும் என்மனமே!
தேக்கி வைத்த அழகெல்லாம்
     தேவன் உனக்குத் தந்தானோ?
ஆக்கி வைத்த சுவையுணவை
     அடியேன் உண்டு மகிழ்வதுபோல்
நாக்கில் எச்சில் ஊறுதடி
     நற்றேன் கனியைச் சுவைத்திடவே!

அருகே நீயும் நிற்கையிலே
     அணைக்க நெஞ்சம் துடிக்குதடி!
பெருகி ஓடும் வெள்ளமெனப்
     பெண்ணே காதல் பொங்குதடி!
உருகிக் குலையும் மெழுகாக
     உள்ளம் குன்றி நோகுதடி!
பருவம் மிளிரும் இளமாதே
     பசியைத் தந்து வாட்டாதே!

என்னை முறைத்துப் பார்க்காதே!
     இதயம் தன்னைத் தாக்காதே!
கண்ணைத் திறந்து வித்தைகளைக்
     காட்டி உயிரை மயக்காதே!
உன்னை நினைந்தே இரவெல்லாம்
     உறக்கம் இன்றித் தவிக்கின்றேன்!
பொன்னை நிகர்த்த நிறமுற்றுப்
     பொலியும் தங்கத் தாரகையே!

29.8.1984

நன்றி bharathidasanfrance 

சிட்னி முருகன் கோவிலில் சேக்கிழார் விழா



அகதிகள்


 ஆஸ்திரேலிய அரசின் நம்பிக்கையும் உலகம் காணும் நிதர்சனமும்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் மற்றும் பாரிஸ்டர் உச்ச நீதிமன்றம் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா உலக அகதி வாரம் கொண்டாடிக்  கொண்டு இருக்கும் வேளையில் ஆஸ்திரேலியா அகதி வருகையை சரியாக கையாளுகின்றதா என்பதே உலக அளவில் கேள்விக் குறியாகி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதி மாநாட்டு ஒப்பந்தத்தின்  கையொப்பதாரியாக  ஒரு பொம்மை போல தன் கடமையை செய்யத் தவறவில்லை என்பது போல மாயை ஆக ஒரு செயல்பாட்டு நடவடிக்கையே இங்கு நடக்கும் அகதி நிர்ணய செயல்பாடு என்று தோன்றுகிறது.
 அகதிகளாக , குறிப்பாக படகுகளில் வரும் மக்கள் மீது பெரும் வெறுப்பை அள்ளி வீசுகிறார்கள் இங்குள்ள மக்கள் என்பதே உண்மையாகும்.அகதிகளுக்கெதிரான பல நடவடிக்கைகள் மறைமுகமாக  தோன்றியுள்ளன என்பது அகதிகள்மீது  சட்டப் படும் குற்றங்களின் மூலம் விளங்குகிறது.குறிப்பாக குற்றவியல் வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் அகதி விண்ணப்ப தாரிகளுக்கு  குற்றவாளி என்ற காரணத்தினால் அகதி விசா வழங்கப் படுவது மறுக்கப் பட்டு விடுகிறது.இது தவிர இலங்கை அகதிகளுக்கு குற்றப் பட்டியல் விபரம் கொழும்பில் இருந்து அவர் குற்றங்களுக்கு உட்படாதவர் என்று வர வேண்டும்.இது சாத்தியமா என்று சொல்லக் கூடியவர் எவரும் இல்லை. இந்த விபரம் வந்து சேராத படியால் அகதி அங்கீகாரம் நிர்ணயிக்கப் படாமல் ஒரு தொகை விண்ணப்பதாரிகள் நிலையில்லா வாழ்க்கையைக் கொண்டு இருக்கின்றனர்.


இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தட்டு வெளியீட்டு விழா!


சிட்னியில் இனியவளே காத்திருப்பேன் திரைப்படத்தட்டு வெளியீட்டு விழா 2-6-2013 அன்று பென்டல்ஹில் யாழ் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது!


கோபி நடராஜா தொகுத்து வழங்க, திரு கருணாகரன் நடராஜா அவர்கள் வரவேற்புரை வழங்க, பிரபல எழுத்தாளர் திரு எஸ் போ அவர்கள் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் திரு மாத்தளை சோமு அவர்கள் டாக்டர் கௌரிபாலன் அவர்கள், திருமதி துரைராஜா அவர்கள், இயக்குனர் தனபாலசுந்தரம் அவர்கள், இயக்குனர் புதியவன் அவர்கள் மற்றும் இனியவளே காத்திருப்பேன் திரைப்பட இயக்குனர் ஈழன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினார்கள்.

கவியரசர் கண்ணதாசனின் 86 ஆவது பிறந்த நாள் - முருகபூபதி

.
இன்று 24.06.1927 கவியரசர் கண்ணதாசனின் 86ஆவது பிறந்த நாள்
கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்
  குருவின்றி வித்தை கற்ற கவிஞன்



‘ஆலையமணியின்   ஓசையை   நான்   கேட்டேன்ää   அருள்மொழி   கூறும் பறவையின் ஒலி கேட்டேன்’-  இந்தப்பாடலை  எங்கள் மூத்ததலைமுறையினர்   மறந்திருக்கமாட்டார்கள்.


1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல்.


 ஒரு சிறிய பூங்காவில்தான்ää இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது.

அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவிääகலைääதிரைää அரசியல் வாழ்க்கைச்சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம்.


 சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது.  இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம்ää கலைஞன் பதிப்பகம்ää மணிமேகலை பிரசுரம்ää நர்மதா பதிப்பகம்ää தமிழ்ப்புத்தகாலயம்ää தாமரை- ஜனசக்தி காரியாலயம்ää  கணையாழி அலுவலகம்…இப்படியாக பல.

இலங்கைச் செய்திகள்


மலையகத்தில் தொடர்ந்தும் அடைமழை; காசல்ரீ நீரத்தேக்கத்தின் கதவுகள் திறப்பு

மூவின மக்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றியமைக்கலாம் - சங்கரத்ன தேரர்

13ஆவது திருத்தம் தொடர்பில் தீவிர கரிசனை ,இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது : மன்மோகன் சிங் தெரிவிப்பு

13ஐ ஒழிப்பதற்கான தெரிவுக்குழுவில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெறக்கூடாது- முபாறக்

13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானை - லலித் வீரதுங்க

 13ஐ திருத்தாமல் வடக்கில் தேர்தல் நடந்தால் வீதியில் இறங்குவோம்:
=========================================================================

மலையகத்தில் தொடர்ந்தும் அடைமழை; காசல்ரீ நீரத்தேக்கத்தின் கதவுகள் திறப்பு

18/06/2013   மலையகப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கதவு ஆறாவது நாளாகவும் திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நீரேந்துப் பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்துவருவதால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் என்று மில்லாதவாறு உயர்ந்துள்ளது. இதனால் மவுசாகலை நீர்த்தேக்க்த்தில் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலம் வரையும் ஒரு வான் கதவு 12 அங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளதாவும் லக்ஷபான நவலக் ஷபான விமலசுரேந்திர, பொல்பிட்டிய, கெனில்வோன் ஆகிய நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றினை பயன்படுத்தி உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாகவும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதேவேளை மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்தி என்பனவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  நன்றி வீரகேசரி   

முடக்கப்பட்ட முதல் சினிமாவின் கதை - இ.பா.சிந்தன்

  • .
    1913இல் இந்தியாவின் முதல் திரைப்படத்தை தாதா சாகேப் பால்கே உருவாக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்தவொன்று. முதல் திரைப்படத்தை அவர் உருவாக்கிய வரலாற்றினை சமீபத்தில் "ஹரிச்சந்திரா சி ஃபாக்டரி" என்கிற திரைப்படமாக வங்காள மொழியில் எடுத்திருக்கிறார்கள். பால்கேவைப் போன்றே, 1920இல் தமிழின் முதல் "வாய்மொழியில்லாப்படத்தினை" இயக்கிய நடராஜ முதலியாரையும், 1931இல் வெளிவந்த தமிழின் முதல் பேசும்படமான காளிதாசை இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியையும் சினிமாவுலகம் நன்கறியும்.




    இதேபோன்று மலையாளத்தின் முதல் திரைப்படம் "பாலன்" என்றும் அதனை மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் என்பவர் தயாரித்தார் என்றும் நீண்ட நெடுங்காலமாக அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சமீபத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகம், 1930 வெளிவந்த "விகதகுமாரன்" என்கிற திரைப்படத்தையே மலையாளத்தின் முதல் திரைப்படமாகவும், அதன் இயக்குனரான ஜே.சி.டேனியலை மலையாளத்தின் முதல் இயக்குனராகவும், பி.கே.ரோசி என்பவரை முதல் நாயகியாகவும் மாற்றி அறிவித்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அத்திரைப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்கிற கேள்விக்கான விடையளிக்கும் விதமாக"செல்லுலாயுடு" என்கிற மலையாளத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தின் முதல் திரைப்படமான விகதகுமாரனை இயக்கிய ஜே.சி.டேனியலின் வாழ்க்கைதான் இத்திரைப்படத்தின் கதை. "இது பி.கே.ரோசியின் கதை" என்கிற பெயரில் ஏற்கனவே ஓர் ஆவணப்படமும் இதுகுறித்து எடுக்கப்பட்டிருக்கிறது.

NO FIRE ZONE THE KILLING FIELDS OF SRI LANKA




நாகரீகமான நாட்களில் அநாகரிகமான காட்சிகள்

.

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 5 கீதா மதிவாணன்

.


அரசனின் அரண்மனையைத் தேர்ந்த அனுபவமும் தொழிலறிவும் வாய்ந்த கலைஞர்கள் அமைத்த விதத்தை அழகுபட விவரிக்கும் வரிகள்...

நெடுநல்வாடைப் பாடல் (72-81)
……………………………………மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டுதெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து
ஒருங்குஉடன் வளைஇஓங்குநிலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்துசெவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு


விரிந்த கதிர் பரப்பும் கதிரவன்
மேற்கு நோக்கி மேற்செல்கையில்
ஒருபக்கம் நிழல் சாரா வேளையில்
இருகோலினை நிலத்தில் ஊன்றி
வருநிழல் மாறாதிருக்கும்
நல் உச்சிப்பொழுதொன்றில்

சாரங்கன் ஸ்ரீரங்கநாதனின் இசை

.
This video features Sarangan Sriranganathan, Lady Kasha and Krissy who sang with Ar. Rahman in the film Enthiran in which Rajinikanth and Aishwarya Rai acted.

உலகச் செய்திகள்


உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 60 பேர் பலி

ஜி20 மாநாட்டில் உளவு பார்த்த பிரித்தானியா!

இந்தியாவின் வடமாநிலங்களில் பலத்த மழை: 130 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரகாண்டில் பேரழிவு: 1000 இற்கும் மேற்பட்டோர் பலி

========================================================================

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 60 பேர் பலி


17/06/2013   இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 பல மாவட்டங்களில் வீதிப்போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கனமழை காரணமாக உத்தர்காசியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 60க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயிரக்கணக்கானவர்கள் நிலச்சிரிவில் சிக்கிக் கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, யாத்ரீகர்கள் யாரும் உத்தர்காசி வர வேண்டாம் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கனமழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள பக்தர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், தர்மசத்திரங்கள் நிரம்பி வழிகின்றன. மோசமான வானிலை காரணமாக கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது     நன்றி விரகேசரி             

அற்பாயுளும் மேதாவிலாசமும் முருகபூபதி



எமது  தமிழ்  சமுதாயத்தில்  எம்மவர்   மத்தியில்   அடிக்கடி  உதிர்க்கப்படும்  வார்த்தைகள் :  எல்லாம்  தலைவிதிப்படிதான்  நடக்கும்,   எல்லாம்  தலையெழுத்து.
அதாவது   இறைவன்   ஓர்   உயிரைப்படைக்கும்பொழுதே   அதன்  தலையில்  அதன் விதியை  எழுதிவிடுவானாம்.  அதன்   பிறகு  அந்தவிதிப்படிதான்  யாவுமே  நடக்குமாம் என்பது  நம்பிக்கை.
அதேசமயம்   விதியை  மதியால்  வெல்லமுடியும்   என்றும்   ஒத்தடம்தரும் வார்த்தைகளையும்    சொல்லிக்கொள்வார்கள்.
இந்த  ஆண்டின்   தொடக்கத்தில்   எதிர்பாராதவிதமாக   இரண்டாவது   தடவையும்;   சென்னைக்குச்     செல்லநேர்ந்தபோது    கன்னிமரா   நூல்நிலையத்தில்   அமைந்துள்ள   நிரந்தர     புத்தகக்கண்காட்சிக்குச்சென்று     சில   நூல்களை   வாங்கினேன்.

தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கம்



தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்திற்காக தன்னையையும் இணைத்துநின்ற தமிழ்த்திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் மரணச்செய்தி அனைவரையும்  கலங்கவைக்கின்றது.
அவலங்களையே சுமந்துநிற்கின்ற ஒரு தேசத்தின் விடிவிற்காக குரல் எழுப்புகின்ற அனைவருமே அம்மக்களின் ஆழ்மனதில் எப்போதும் உயிர்ப்புடனே இருப்பார்கள்.
ஆனால் அத்தேசத்தின் பெருமகனாம் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்று, அம்மக்களுக்காகப் போராடி மடிந்திருப்பேன் என வெளிப்படையாகச் சொல்லிவந்தவர் மணிவண்ணன் அவர்கள்.
தனது வாழ்வின் மூலமும் சாவின் மூலமும் தனது மக்களுக்கு விடுதலைக்கான செய்தியை எடுத்துச்செல்பவன் ஓர் உன்னதமான போராளியாகின்றான்.
அந்தவகையில் தமிழீழ மக்களின் விடுதலைக்காக தமிழ்நாட்டின் வீதிவீதியாக ஓங்கியொலித்த அந்தக்குரல், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் ஓடிச்சென்றது. தமிழீழத் தாயகத்திற்கும் வருகைதந்த அவர், நவம் அறிவுக்கூடம், காந்தருபன் அறிவுச்சோலை என்பவற்றைப் பார்வையிட்டு அமையப்போகும் தமிழீழத்தினை நினைத்துப் பெருமைகொண்டார்.
தனது சாவின் போதும், தமிழர்களின்  தேசியக்கொடியைத் தன்மீது போர்த்துமாறு கோரினார். அதன்முலம் தமிழீழ விடுதலைக்கான அடையாளங்கள் தன்னைப் பெருமைப்படுத்துவதாக நம்பினார். அவ்வாறான தேசப்பற்று ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் எனக் கருதினார்.
இவ்வாறு எம்மோடு எப்போதுமே இணைந்துநின்ற தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் மறைவிற்காய் அகவணக்கம் செய்வதோடு, அவரது கனவுகளை எமது நெஞ்சங்களில் சுமப்போம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோறியா - அவுஸ்திரேலியா

பாரிஸ் மாநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுகவிழா..!




பாரிஸ் மாநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுகவிழா கடந்த சனிக்கிழமை (15 - 06 - 2013) மாலை சிறப்புற நடைபெற்றது.
பாரிஸ் 'மார்க்ஸ் டோர்முவா" (Marx Dormoy) தேவாலயக் கலையரங்கில் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நடன நிகழ்ச்சிகளையடுத்து கவிஞர் பாலகணேசன் வரவேற்புக் கவிதையை வழங்கினார். கல்லூறு சதீஸ் வாழ்த்துரை வழங்கினார்.

ஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்

.

கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற பேசும் படம் திரைப்படம் சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழாவுக்குப் போகிறது..25 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம். கடந்த 1988-ம் ஆண்டு வெளியானது. கமல் ஹாஸனுடன் அமலா நடித்திருந்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.படத்தில் காதாபாத்திரங்களுக்கு வசனம் கிடையாது. பிண்ணனி இசைமட்டுமே உண்டு. படத்தில் யாரும் பேசாவிட்டாலும் கூட படம் பேசும். சைகையிலேயே பேசி காதல் செய்யும் கமல்,அமலா, அரை டம்ளர் டீ கிளாஸில் நாணயங்களை போட்டு கிளாஸ் நிறைந்ததும் குடிக்கும் கமல்,

ஜஸ் கத்திகளை வைத்து கொலைசெய்ய அலையும் வில்லன்கள் என படத்தின் காதாபாத்திரங்களுக்கு வசனம் தேவைப்படமலேயே  நகைசுவையாக காட்சியை அமைத்திருப்பார்கள். இந்தப் படம் இந்தியில் புஷ்பக் என்ற பெயரிலும், தெலுங்கில் புஷ்பக விமானம் என்றும் வெளியானது    அன்றைக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் குவித்தது பேசும் படம். வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து இப்போது ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.கால் நூற்றாண்டு கழித்தும் பேசும் அளவுக்கு தரத்தில் சிறந்த படமாக பேசும் படம் திகழ்வதைத்தான் இது காட்டுகிறது

நன்றி indrayavanam
கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது.
இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.
எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை.
இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
.

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர்.
இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும்.
இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

சிட்னியில் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டு மலர் கட்டுரை


உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிட்னிஆஸ்திரேலியா மலர்

கட்டுரை
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
( பொறுப்பாளர் - விழா மலர்க்குழு மற்றும் மக்கள் தொடர்பு  )

கட்டுரை விதி முறைகள்

·       கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளுக்குள் ஒன்றாக அடங்க வேண்டும.
·       அரசியல்,  இனத்துவேசத்தை  தூண்டும் கட்டுரைகள் நிராகரிக்கப்படும்.
·       கட்டுரைகளின் தரம், அடங்கல், எழுத்து ஆகியவை நடுவர் குழு பரிந்துரைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
·       நடுவர்களின் முடிவே கட்டுரை பிரசுரமாவதை  தீர்மானிக்கும்.
·       A 4 -5 பக்கங்களுக்கு மிகை படாமல்.
·       10 அளவு ஒற்றை குறீயீட்டு எழுத்துரு.(Unicode).
·       மின்னஞ்சலில் உடல் பகுதியில் ஒட்டி அனுப்பவும். இணைப்பாக அனுப்ப வேண்டாம்.
·       கட்டுரைகளின் கருத்துக்கள்  படைப்பாளியின் பொறுப்பாகும்.
·       நடுவர்களின் பார்வையில் கட்டுரைகளின் கருத்துக்களில் சில பகுதிகள் அகற்றப் பட வேண்டும் எனப் பட்டால் அகற்ற வேண்டியது  படைப்பாளியின் பொறுப்பாகும்.
·       கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2013

இரகசியங்களை வெளியுலகத்திற்கு அறியத்தருவதற்கு பின்னாலிருந்த 29 வயதுக்காரன்

எட்வர்ட் ஸ்நோவ்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கண்காணிப்பு இரகசியங்களை வெளியுலகத்திற்கு அறியத்தருவதற்கு பின்னாலிருந்த 29 வயதுக்காரன்
-ஹொங்காங்கிலிருந்து கிளென் கிறீன்வால்ட்,ஈவன் மக்அஸ்கில் மற்றும் லௌரா பொய்ற்ராஸ்
edward-snowdenமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க இரகசியக் கசிவு ஏற்படுத்துவதற்கு தனிப்பட்ட வகையில் பொறுப்பாக இருந்துள்ளார், 29 வயதான எட்வர்ட் ஸ்நோவ்டன் என்பவர், இவர் முன்னாள் அமெரிக்க குற்றவியல் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ யின் தொழில்நுட்ப உதவியாளரும், பாதுகாப்பு ஒப்பந்தகாரரான பூஸ் அலென் ஹமில்டனில் தற்போது பணியாற்றி வருபவருமாவார். ஸ்நோவ்டன் தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தில் கடந்த நான்கு வருடங்களாக பூஸ் அலென் மற்றும் டெல் உட்பட்ட பல்வேறு வெளி ஒப்பந்தகாரர்களின் பணியாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
கார்டியன் பத்திரிகை பல நாட்கள் நடத்திய நேர்காணல்களின்பின் அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. உயர் இரகசியங்களடங்கிய எண்ணற்ற ஆவணங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்த அந்தக் கணமே அநாமதேய பாதுகாப்பினை தெரிவுசெய்வதில்லை என்று அவர் முடிவு செய்திருந்தார். ”நான் யார் என்பதனை மறைத்து வைக்கும் நோக்கம் எனக்கிருக்கவில்லை, ஏனெனில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன்” என்று அவர் சொன்னார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்த இருவர் கைது




20/06/2013 இந்தியா-இலங்கை அணிகள் மோதிய சாம்பியன் கிண்ண தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியின் போது புலிக் கொடிகளை ஏந்திய இருவர் மைதானத்துக்குள் ஓடினர்.


 



தமிழ் சினிமா

MailPrint

மூன்று பேர் மூன்று காதல்

பல வித்தியாசமான படங்களை இயக்கிய வசந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்திருக்கும் திரைப்படம் தான் "மூன்று பேர் மூன்று காத‌ல்".
ஊட்டியில் மென்பொருள் பொறியாளராக இருக்கும் விமல் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் லாசினியை காதலிக்கிறார்.
லாசினிக்கு ஏற்கனவே ஒருவருடன் நிச்சயமாகி திருமணம் நின்று விடுகின்றது. அதை சாதகமாக்கி காதலை ஏற்க வருகிறார்.
ஒரு கட்டத்தில் வெளியூர் செல்லும் விமல் அங்கு இரு காதல் ஜோடிகளின் தியாகமயமான வாழ்க்கையை அறிந்து தனது காதல் சுயநலமானது என்று முறிக்கிறார். யார் அந்த காதல் ஜோடி என்பது பிளாஷ்பேக்.
ஒரு காதல் ஜோடி சேரன்-பானு, மற்றொரு ஜோடி அர்ஜுன்-ரித்விக். இனி அவர்கள் கதை... சேரன் சமூக சேவகர். கஷ்டப்படுவோருக்கு ஓடோடி உதவுகிறார்.
திருட்டு தம்பி, அவனுக்கு உடந்தையாக இருக்கும் தந்தை என்று தவிக்கும் பானு குடும்பத்தில் புகுந்து இருவரையும் திருத்துகிறார் சேரன். இது அவர் மேல் பானுவை காதல்பட வைக்கிறது.
ஆனால் சேரனுக்கு அதில் விருப்பமில்லை. சமூக சேவை பணிகளுக்காக வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார். காதல் தோல்வியான பானுவும் அந்த இயக்கத்தில் சேர்கிறார்.
நீச்சல் பயிற்சியாளர் அர்ஜுனும், அவரிடம் நீச்சல் படிக்கும் சுர்வினும் காதலிக்கின்றனர். சுர்வினை சர்வதேச போட்டிக்கு அனுப்ப கடும் முயற்சி எடுக்கிறார் அர்ஜுன். அது நிறைவேறியதா என்பது படத்தின் இறுதி முடிவு.
மூன்று காதலிலும் சேரன்-பானு காதல் முந்துகிறது. சமூக சேவகர் கதாபாத்திரத்தில் சேரன் வாழ்கிறார். பொலிஸ் அடியை தொலைக்காட்சியில் காட்டி பானு தந்தையை திருத்துவது, தந்தையை வெறுக்கும் மகளை அவரோடு சேர்த்து வைக்க முயன்று அவமரியாதைகள் சுமப்பது என்று மனதில் வியாபிக்கிறார்.
விபத்தாகி மருத்துவமனையில் படுக்கையிலும் காதலியை சர்வதேச போட்டிக்கு அனுப்ப துடிக்கும் அர்ஜுன் ஈர்க்கிறார்.
காதலனுக்காக சாதிக்க துடிக்கும் சுர்வினிடம் லட்சிய வெறி. ஆனால் இவர்கள் காதல் மட்டும் சத்தமின்றி நகர்கிறது.
லாசினியை காதல் வயப்படுத்த செய்யும் விமலின் சிறு சிறு சேஷ்டைகள் ரசனை. தம்பி ராமையா, அப்புக்குட்டி, சத்யன், ஜான்விஜய், ஆடுகளம் நரேன் கதாபாத்திரங்களும் நேர்த்தி.
மூன்று காதலின் வெவ்வேறு தன்மைகளை அழுத்தமான திரைக்கதையில் நகர்த்துகிறார் இயக்குனர் வசந்த். சுவாரஸ்யங்கள் இல்லாதது குறை.
யுவன் சங்கர் ராஜாவின் இரைச்சல் இல்லாத பின்னணி இசை நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. போஜன் கே. தினேஷ் கமெரா மருதம், முல்லை, நெய்தல் நிலங்களின் வித்தியாசம் காட்டுகிறது.
ஆகமொத்தத்தில், "மூன்று பேர் மூன்று காதல்" படத்தை, "முடிந்தால், முடிந்தவரை பார்"க்கலாம்!நன்றி விடுப்பு