நேற்று நான்...

.



நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்ன சொன்னாலும்
புரியப் போவதில்லை மனையாளுக்கு!
எனவேதான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!


சிட்னி முருகன் ஆலயத்தில் சேக்கிழார் விழா

.




ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் லலிதா சகஷ்ட நாம கோமம்

.
ஸ்ரீ துர்க்கா  தேவி தேவஸ்தானத்தில் இடம் பெற்ற லலிதா சகஷ்ட நாம கோமத்தின் போது  எடுக்கப்பட்ட படங்கள் .



திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

இலக்கிய  விமர்சனங்களை  எழுதினாலும் - தன்மீதான விமர்சனங்களை  மௌனமாகவே  எதிர்கொண்ட பேராசிரியர்     கைலாசபதி
                                                   
நம்மிடத்தில் - நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு.
அவருக்கு    கடிதம்    எழுதினேன் -  பதிலே இல்லை.
கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம்.
கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி.
இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    பார்த்திருக்கின்றோம்.
எப்பொழுது?
மி.மு.   காலத்தில்.     அதென்ன   மி.மு?    மின்னஞ்சலுக்கு     முன்னர்   நாம் வாழ்ந்த     காலத்தில்.     தற்பொழுது    மி.பி.  காலத்தில்    வாழ்கின்றோம்.  அதாவது    மின்னஞ்சலுக்கு   பிற்பட்ட    காலத்தில்.      மின்னஞ்சல்  தந்த  கொடைகள்    முகநூல்  -   டுவிட்டர்  -  ஸ்கைப்.   இனிவரும்    காலத்தில்   மேலும்    புதிய    சாதனங்கள்  வரலாம்.
ஆனால்  -   இந்த மென்பொருள்    சாதனங்கள்    எல்லாம்    வருவதற்கு   முன்பே   இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட   சமாதானங்களைக்  கூறி  தப்பிப் பிழைக்காமல் -  தனக்கு   வரும்   கடிதங்களுக்கெல்லாம்   தளராமல்   பதில் கடிதம்   எழுதிய   ஒருவர்   நம்   மத்தியில்   வாழ்ந்து   மறைந்தார்   என்பதை எத்தனை பேர்   அறிந்திருப்பார்கள்?.
அவர்தான்    பேராசிரியர்   கைலாசபதி.

மெல்பனில் கலை இலக்கிய விழா 2014 - 26.07.14

.
அவுஸ்திரேலியா    தமிழ்    இலக்கிய  கலைச்சங்கத்தின்    வருடாந்த  தமிழ் எழுத்தாளர்   விழா   இம்முறை    கலை  -  இலக்கிய    விழாவாக நடத்தப்படவிருப்பதாக    சங்கத்தின்     செயற்குழு    அறிவித்துள்ளது.
எதிர்வரும்   ஜூலை   மாதம்  26  ஆம்  திகதி   (26-07-2014)    சனிக்கிழமை பிற்பகல்   2  மணிக்கு   மெல்பனில்   St.Benedicts College மண்டபத்தில்     (Mountain  Highway ,  BORONIA , Victoria)         தொடங்கும்    கலை  - இலக்கிய விழா    இரவு  10   மணிவரையில்    நடைபெறும்.
பகல்   அமர்வில்   இலக்கிய   கருத்தரங்கு   மற்றும்    நூல்களின்    விமர்சன   அரங்கும்    மாலை  6    மணிக்கு    தொடங்கும்    நிகழ்வில்   இசை நிகழ்ச்சி    மற்றும்    நாட்டியநாடகம்    முதலான    பல்சுவை    நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
இவ்விழாவில்   மெல்பன்   -   சிட்னி   -    பேர்த்   -   பிரிஸ்பேர்ண்    ஆகிய நகரங்களிலிருந்து     எழுத்தாளர்களும்    கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.     பகல்    பொழுதில்   நடைபெறவுள்ள இலக்கிய    கருத்தரங்கில்    பார்வையாளர்களும்    கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக     நிகழ்ச்சி     ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா    தமிழ்    எழுத்தாளர்களின்    நூல்கள்    மற்றும்     இங்கு முன்பு    வெளியான   தற்பொழுது     வெளியாகும்     இதழ்களின் கண்காட்சியும்     இடம்பெறும்.
இவ்விழாவில்    கலந்துகொண்டு    சிறப்பிக்குமாறு    அன்பர்கள்   -   கலைஞர்கள்   -   கவிஞர்கள்   -   படைப்பாளிகள்   -   ஊடகவியலாளர்கள்  -  தமிழ் ஆசிரியர்கள்    -   உயர்தர வகுப்பில்    தமிழையும்    ஒரு    பாடமாகப்பயிலும் தமிழ்   மாணவர்களும்    அன்புடன்    அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக    விபரங்களுக்கு:   திரு. ஸ்ரீநந்தகுமார்   -   செயலாளர்   அவுஸ்திரேலியா    தமிழ்   இலக்கிய கலைச்சங்கம்.
தொலைபேசி:   04 15 40 5361

மின்னஞ்சல்:  atlas2001@live.com

சங்க இலக்கியக் காட்சிகள் 13 - செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 13
இன்பமெல்லாம் எனக்குத் துன்பமயம்!

அலைகடல் தாலாட்டும் அழகானதொரு கிராமம் அது. நல்ல வளமானதும் கூட. “காண்ட வாயில்” என்பது அந்த ஊரின் பெயர். காலம் தவறாமல் வானம் பொழிகின்ற மழை வளம்மிக்க அந்த ஊரிலே மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுவார்கள். வற்றாத நீர் நிறைந்த குளங்கள் அங்கே உள்ளன. தோட்டங்களும் துரவுகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. தோட்டங்களைச் சுற்றி மரங்களாலான வேலிகள் உள்ளன. மக்களின் குடிமனைகள் பனையோலைகளையும் முட்களையும் கொண்டு அமைக்கப்பட்ட வேலிகளால் சூழப்பட்டிருக்கின்றன. அந்தப் பனையோலைகள் அடிக்கடி சரசரவென்ற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.

இலங்கைச் செய்திகள்


மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 62 பேர் கைது

அளுத்கம பிரதேச பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் : ஆசிரியர், மாணவர்களின் வரவு வீழ்ச்சி

' நானே என்னை வெட்டிக் கொண்டேன்':வட்டரெக விஜித்த தேரர் வாக்கு மூலம்'

புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி வெள்ளவத்தையில் பணம் கொள்ளை:இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

வட்டரக்க விஜித்த தேரர் கைது

 வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு இல்லை : யாழ்.பிரதிப்பொலிஸ் மா அதிபர்

புலிகள் இயக்கத்தை சார்ந்த இருவர் கைது

அளுத்கம சம்பவம் தொடர்பில் 68 பேர் கைது:அஜித் ரோஹண

புலிகள் இயக்கத்தின் ரவிச்சங்கருக்கு எதிராக சிவப்பு அறிக்கை
==================================================================

வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டு பிடித்த ஈழத் தமிழனை உலகம் பாராட்டுகிறது

.

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.
மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார். 2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.
கேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல் பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு தென்மராட்சியைச் சோந்த சிவநாதனை அதியுயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா அழைத்துப் பாராட்டினார். இந்த ஆண்டு அதேபோல சபேசனைப் பிரித்தானியா பாராட்டுகிறது.

ராயப்பேட்டையில் குவியும் ஆயிரக்கணக்கான கிளிகள்

.


சென்னையின் மைய பகுதியான ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ, மணிக்கூண்டுக்கு அருகில், பரபரப்பான பாரதி சாலையில், காலை 6:00 முதல் 8:30 மணிவரையும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரையும், ஆயிரக்கணக்கான கிளிகள், 30 கி.மீ., தூரம் பயணித்து வந்து ஒரு வீட்டில், பசியார வருகின்றன.
பசியாற்றுபவர், கேமரா சேகர்.

அவரிடம் பேசியதில் இருந்து...
*உங்களை பற்றி?
நான், கேமராக்களின் காதலன்; பறவைகளின் காவலன். தர்மபுரி, என்னைப் பெற்றெடுத்தது; சென்னை, என்னை வளர்த்தெடுத்தது.பழைய, தனித்துவமான கேமராக்களை தேடி சென்று வாங்கி, சேகரிக்க துவங்கினேன். இப்போது, மகாத்மா காந்தியை படமெடுத்த, ஜெர்மனி கேமரா, இந்தியசீன போரை படமெடுத்த வீடியோ, ஸ்டில் கேமரா, தண்ணீருக்குள் இருந்து படம் எடுக்கும் தனித்துவமான கேமரா, 160 வயதான பல கேமராக்கள் உட்பட 4,500க்கும் மேற்பட்ட கேமராக்கள் என்னிடம் மட்டுமே இருப்பதாக, பி.பி.சி., செய்தி நிறுவனம், சான்று அளித்துள்ளது.

அவுஸ்றேலியாவில் அனந்த் வைத்தியநாதன்

.


' தானே கள்வன் ' - கி.வா.ஜகந்நாதன்

.

சல சலவென்று ஓடும் நீர்அதன் கரையிலே அவனும் அவளும் காதல் பூண்டார்கள்அங்கே ஒரு வரும்இல்லாத தனிமையிலே அவ்விருவரும் இருந்தனர்ஆயினும் அவளுக்கு எல்லாம் நிரம்பி யிருந்ததுபோலத் தோன்றியதுஇன்றோஅவள் தன் வீட்டில் தன் தாய் தந்தையரும் சுற்றத்தாரும் தோழியரும் சூழஇருக்கின்றாள்ஆனால் அவளுக்கு எல்லாம் சூன்யமாக இருக்கின்றது.

அவன் அவளைப் பிரிந்தான். 'சிலநாளே இந்தப் பிரிவுவிரைவில் வந்து உன்னை மணப்பேன்அதுவரையிலும் பொருத்திருஎன்று அவன் உறுதி மொழி கூறிப் பிரிந்தான்அவள் அவனை நம்பினாள்.உளமறியக் காதல் புரிந்தவன் மீண்டுவந்து உலகறிய மணம் புரிவானென்று ஆர்வத்தோடு காத்திருந்தாள்.

காதலின்ப நினைவிலும் காதலனை எதிர்பார்க்கும் ஆர்வத்திலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள்.ஒரு கணம் போவது ஒரு யுகமாகத் தோற்றியதுபிரிவுத் துன்பத்தைப் பொறுத்திருந்தாள்அந்தத் துன்பமுடிவிலே இணையற்ற இன்பம் இருக்கிறதென்ற நினைவு அதனைப் பொறுக்கும் மன வலியைத் தந்தது.

உலகச் செய்திகள்


ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயார் : உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு

எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த 183 பேருக்கு மரணதண்டனை : நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளிப்பு

சிரிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் பலி

எகிப்தில் 3 நிலக்கீழ் புகையிரத நிலையங்களில் குண்டு வெடிப்புகள்

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு:21 பேர் பலி

காணாமல்போன மலேசிய விமானத்தை தேடுவதற்கான புதிய பிரதேசம் அறிவிப்பு

சாய்மானகதிரை

.


எங்கள் வீட்டில் இப்போதைக்கு
வயதானது இதுதான் 
இதன்  பின்னல்களோடு சேர்த்து
எங்களின் பல நூறுகதைகள் பின்னப்பட்டிருக்கும்.

அம்மப்பாவுக்கு அரியாசனமாய்
அம்மம்மாவுக்கு சரியாசனமாய்
அம்மாவுக்கு  சிம்மாசனமாய்
அப்பாவுக்கு பொன்னாசனமாய்
 என பல அவதாரங்களை இது சுமந்திருக்கும்.

அதன் பின்னலின் ஓட்டைகளில்
வெளிப்பட்டுபோனது
அதுக்கு வயதாகிய விசயம்.

தன்னை சீண்டுவார் யாருமில்லை எனும்
கோபத்தில் தன் ஒற்றைகையை உடைத்துவைத்திருக்கிறது.

ஓய்வுக்காக கொஞ்சம் உட்காந்த போது அதன் ஓட்டைபின்னலோ என் காற்சட்டை
பொத்தானை இழுத்துபிடித்து இன்னமும்
கொஞ்சம் உட்காந்து போவேனன
கையை நீட்டி கதறுவதாய் தோனியது 

78 ஆணிகள் - அ.முத்துலிங்கம்

.


33 நாள் பயணம். குடிவரவு அதிகாரி கேட்கிறார் ‘என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ ‘3000 ஆண்டு சிலுவை.’ ‘வேறு என்ன?’  ‘30 ஆணிகள்.’ ‘அப்படியா, உள்ளே வா.’ சிலுவையில் தன்னை அறைந்துகொள்ள அவனுக்கு புது நாடு ஒன்று கிடைத்துவிட்டது. செல்வம் அருளானந்தம் எழுதிய கவிதை இது. இப்படி 78 கவிதைகள் தொண்ட தொகுப்பு நூல் கனடாவில் வெளியாகியுள்ளது. உலகத்து சமகால தமிழ்க் கவிகளின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து IN OUR TRANSLATED WORLD ( எமது மொழிபெயர் உலகினுள் ) என்ற தலைப்பில் நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் சிறப்பு அதில் தமிழ் கவிதையும் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் பக்கத்து பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பதுதான். 
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான இந்நூலில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகள் அடங்கியுள்ளன. இந்த நூலுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து கவிதைகள் தெரியப்பட்டுள்ளன. எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

விஷ்ணுவின் 10 அவதாரங்கள்

.
1)மச்ச அவதாரம் இது மீன் வடிவம்


சிந்தனைக்கான கதை - கலீல் ஜிப்ரான்

.

நான் ஒருதுறவியை சந்திக்க சென்றபோது அங்கு ஒரு திருடன் வந்தான். களைத்திருந்தாலும் துறவியை திருடன் பார்த்ததும் பரவசத்துடன் அவர்முன் மண்டியிட்டு,''ஐயா,நான் செய்த பாவங்கள் பெரும் பாரமாக என்னை அழுத்துகின்றன.என்னைக்  காப்பாற்றுங்கள்.''என்றான்.துறவி புன்னகை புரிந்தவாறே,''மகனே,நானும் பாவங்கள் செய்துள்ளேன் .அவை என்னையும் அழுத்துகின்றன.''என்றார்.திருடன் முகத்தில் அதிர்ச்சி.அவன் பதட்டத்துடன் சொன்னான்,''ஐயா,அப்படியெல்லாம் பேசாதீர்கள்.நீங்களும் நானும் ஒன்றா?நான் ஒரு திருடன்;பொல்லாதவன்.''உடனே துறவி, ''மகனே, நானும் ஒரு திருடன்தான்;பொல்லாதவன்தான்.''என்றார்.திருடன்,''ஐயோ,நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை.நான் ஒரு கொலைகாரன்.நான் கொலை செய்தவர்களின் கதறல் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.'' என்றான்.துறவி,''நானும் கொலைகாரன் தான்.உன் அனுபவம் எனக்கும் உள்ளது,''என்றார்.இதைக் கேட்ட திருடன், ஆச்சரியத்துடன்  எழுந்து நின்றான்.பின் அவன் நடையில் ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வெளியே சென்றான்.அவன் பார்வை மறைந்ததும் நான் துறவியிடம் ,''ஏன் இப்படி நீங்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்ததாக சொன்னீர்கள்?அவனுக்கு வரும்போது உங்கள் மீது இருந்த மரியாதையும் நம்பிக்கையும் போய் விட்டன மறுபடியும் அவன் தறுதலையாகத் திரியப் போகிறான்,''என்றேன்.துறவி மெலிதாகப் புன்னகைத்தவாறே சொன்னார்,''மகனே அவனுக்கு என் மீது நம்பிக்கை போய் விட்டது என்பது உண்மைதான்.ஆனால் அவன் இங்கு வரும்போது இருந்ததை  விட அதிக மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் திரும்ப சென்றிருக்கிறான்.''அப்போது தூரத்தில் எங்கோ,அந்தத் திருடன் பாடிய பாடலிலிருந்த மகிழ்ச்சி அந்த மலையையும் பள்ளத்தாக்கையும் நிறைத்தது.

தமிழ் சினிமா


முண்டாசுப்பட்டி


தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த மூடநம்பிக்கைகள், இன்றளவும் சில கிராமங்களில் கடைபிடிக்க படுகிறது. தலையில் தேங்காய் உடைப்பது கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பது போன்ற விநோதமான மூட நம்பிக்கையில் மக்கள் எவ்வாறு மூழ்கிப் போயுள்ளனர் என்பதை கொஞ்சம் காதல் நிறைய காமெடி, கொஞ்சம் சாமி, நிறைய த்ரில்லிங் என்று பல்சுவையாக கலந்து வந்துருக்கும் படம் இந்த முண்டாசுபட்டி. ஏற்கனவே குறும் படமாக வந்து இணையதளத்தில் கலக்கிய படம் தற்போது முழு பொழுதுபோக்கு அம்சமாக வந்து உள்ளது 

கதை என்ன ? 

1947 பிரிட்டிஷ் காலத்தில் ஒரு வெள்ளையன் முண்டாசுபட்டி பட்டி கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள கிராம மக்களை தன்னுடைய கேமரா முலம் படம் பிடிக்கிறான், அவன் எதற்சையாக படம் பிடிக்க அதற்கு பிறகு அங்கு வாழும் சில மக்கள் நோய் வாய் பட்டு இறக்கிறாகள். இந்த வெள்ளையன் புகை படம் பிடித்ததால் தான் மக்கள் இறக்கிறார்கள் என்று நம்புகின்றனர், இந்த நிலையில் ஊரில் எல்லோரும் சாக கிடக்க அந்த ஊரில் ஒரு அதிசய கல் வானத்தில் இருந்து விழுகிறது.அந்த கல் விழுந்த நேரம் ஊரில் எல்லாம் நன்மையாக நடக்க, அந்த கல்லை சாமியாக வணங்குகிறார்கள் அந்த மக்கள், ஆனால் அதே வெள்ளையன் சாமியாக வணங்கும் அந்த கல்லில் ஒரு அதிசய வைர கற்கள் இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறான். பிறகு காலங்கள் கடக்க பக்கத்து ஊரான சத்தியமங்களத்தில் ஹாலிவுட் போட்டோ கடை வச்சுருக்காரு ஹீரோ விஷ்ணு (கோபி) அவருக்கு அசிஸ்டெண்ட்டா இருக்காரு காளி (அழகுமணி). முண்டாசுப்பட்டி ஊர் தலைவரோட அப்பா செத்து போயிடுறாரு (செத்ததுக்கு அப்புறம் தான் அந்த ஊர்ல போட்டோவே எடுப்பாங்க) அவர போட்டோ எடுக்க போற விஷ்ணுவுக்கு ஊர் தலைவர் கஜராஜின் மகள் நந்திதா கலைவானி) மீது காதல். போட்டோவ சரியா எடுக்காததால கோபியையும், அழகுமணியையும் தண்ணி வர வரைக்கும் கிணறு வெட்டுமாறு கட்டளை போடுகிறார் ஊர்தலைவர். ஒருபுறம் கலைவானிக்கு அவங்க மாமா பையன் கூட கல்யாணம் பண்ண முடிவு செய்கிறார் கலைவானியின் அப்பா. கோபி கலைவானி காதல் கல்யாணமாக மாற கோபி செய்த சதி வேலை என்ன என்பது படத்தின் ஃக்ளைமேக்ஸ். 

நடிகர், நடிகைகளின் நடிப்பு விஷ்ணு 

எப்பொழுதும் வித்தியாசத்தை விரும்பும் விஷ்ணு, இந்த தடவையும் வித்தியாசமான கதை களத்துடன் களமிறங்கி இருக்கிறார். சிறப்பான நடிப்பு, ரொம்பவும் சிரமப்படாமல் அசால்ட்டாக நடித்துள்ளார். 

காளி

 இதே குறும்படத்தில் ஹீரோவாக நடித்து இதில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்து உள்ளார். அவர் பேசும் ஒவ்வொறு வசனுமும் செம டைமிங். பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறார். 


நந்திதா 

யதார்த்தமான நடிப்பு, அடுத்த வீட்டுப்பெண் போன்ற அழகி நந்திதா. தனியாக வரும் சில ஷாட்களில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். ஒரு கிராமத்துப்பெண்ணாக, கேமிராவுக்குப் பயப்படுபவராக நல்ல நடிப்பு. 

முனீஸ்காந்த்

 படத்தின் மிகப்பெரிய தூண் என்றால் அது இவர் தான் சாதாரணமாக அறிமுகம் ஆகி, போகப் போக படத்தையே தன் கண்ட்ரோலில் கொண்டுவந்துவிடுகிறார். ‘அவர் பேசும் ஒவ்வொறு வசனமும் வயிற்றை பதம் பார்ப்பது உறுதி, பிணத்துக்கு பினாமியாக வந்து அந்த பிணம் போட்டோ முன்னாடியே அழுது புரல்வது போட்டோ மட்டும் என் போட்டோ.ஆனால் படையல் ரத்தக்கறி எனக்குக் கிடையாதா?’ என பொங்கும்போது செம காமெடி. ’துருப்பிடிச்ச துப்பாக்கி....துப்பாக்கி கலாச்சாரம்’ என வசனங்களிலும் கமல்-ரஜினிக்கு செய்வினை வைக்கும் சினிமா வெறியிலும் மனிதர் பின்னுகிறார். அவர் நடிப்பை பார்த்து ஆனந்த் ராஜ் விட்டு நாய் செத்துபோவது செம. 

பலம் 

எந்த ஒரே இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை அமைப்பு, மூடநம்பிக்கையை புத்திசாலித்தனமான புரிய வைத்து போன்ற காட்சிகள், வாய் மூடி பேசவும் பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் முத்தமிழின் பாடல்கள். ராசா மகாராசா பாடல் சூப்பரோ சூப்பர். முனீஸ்காந்த், காளி போன்றவர்களின் பங்களிப்பு பலம். 


பலவீனம் 

பெரிசா ஒன்னும் இல்லை, இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் ஒத்து போகவில்லை, நந்திதாவுக்கு அப்பாவாக வரும் கதாபாத்திரம் அவ்வளவு அழுத்தமாக இல்லை (ஊரு தலைவர்னு சொல்றாங்க அதனாலே பெரிசா எதிர்பார்த்தோம் அறிமுக இயக்குனர் ராம் முதல் படத்திலே நான் ஒரு வித்தியாசமான படைப்பாளி என்று நிரூபித்து உள்ளார்.மூட நம்பிக்கையும் முட்டாள் ஜனங்களும் எந்த அளவு இருக்கிறது என்று ஆணி அடிச்சது போல் சில காட்சிகளில் சொல்லி நம் பாராட்டுக்களை பெறுகிறார், தயாரிப்பாளர் சிவி குமார் கண்டுபிடிப்பு ஆச்சே தப்பாதே. மொத்தத்தில் முண்டாசுபட்டி - மூடநம்பிக்கையின் கலகலப்பு - 




நன்றி cineulagam