குளிரவன் போவதெங்கே?

.





தோ… குளிரவன்!
தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
வழியில் பார்த்தவன்வெளிறிய தன் முகத்தை
வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
திரும்பிப் பாராமல் போகிறான்.

ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
அவன் சென்ற வழி எதுவென்று
அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
எவரும் முயன்றாராவென்று

இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2014


அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2014 நிகழ்வு சென்ற 5ம் திகதி போமன் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடை பெற்றது . முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வு இது என்பது குறிப்பிடக் கூடிய ஒன்றாகும். ஒரு சில நிகழ்வுகளின் படங்களை கீழே பார்க்கலாம்.


சிட்னியில் SUPPER SINGER 4 - 26.04.14

.
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் வழங்கும்  SUPPER SINGER 4

சிட்னியில் Riverside theatre இல் April  26







திரும்பிப்பார்க்கின்றேன் எழுத்தாளன் நெல்லை க.பேரன் -முருகபூபதி

.
மனைவி    பிள்ளைகளுடன்     எறிகணை  வீச்சுக்குப்பலியான     எழுத்தாளன்  நெல்லை க.பேரன்
துளிர்க்கத்துடித்த      ஒரு    மனிதனின்     ஓலம்
                                                                                                    


சங்கத்  தமிழாலே  தாலட்டுப்பாடி  எந்தன்
தங்கக்  குழந்தையை  நான்   நித்திரையாக்கிவிட்டால்
திடீரென்று   கேட்கும்   வெடிச்சத்தம்    எங்கோ---
அர்த்த    ராத்திரியில்    ஆசையாய்   மணம்   முடித்த
அன்பு    மனையாளைக்   கட்டியணைத்து
ஒரு  முத்தம்   தரவென்று
சிந்தையில்   நினைத்திட்டால்   கேட்கும்  ஒரு  குண்டுச்சத்தம்
நெஞ்சு   கலங்கி   என்   வேட்கையும்   கலைந்து   மிக்க
வேதனையோடு   நான்    முகத்தைத்   திருப்பிடுவேன்
குண்டுகள்   வந்து   கூரையைத்   துளைத்தாலும்   என்று
கட்டிலின்    அடியினிலே   பிள்ளையை    பெண்டிலை    நான்
தள்ளியே   சாக்கால்    மூடிப் பதுங்கியே    பதகளிப்பேன்
கறுப்புக்    கழுகுகள்   ஆகாயத்தில்   வட்டமிட்டால்
ஐயோ வென்று   அலறும்  இதயம்
எப்பெப்ப    என்னென்ன ---  எங்கேயோ   என்றெல்லாம்
எண்ணி   ஏங்கித்   தீய்ந்து   கருகி
உருகி   வாடும்   பாழும்   இதயம்
துளிர்க்கத்    துடிக்கும் -   ஆனால்   நாட்டிலோ
ஈரளிப்பு    இல்லையே ---
1987 ஆம்   ஆண்டு   எங்கள்   பேரன்     எமக்களித்த   கவிதை   இது.    நான்கு ஆண்டுகளில்  - அதாவது   15.7.1991  ஆம்   திகதி    நள்ளிரவில்   பேரன் - இந்தக் கவிதையை    நினைத்திருப்பாரா?    தனது   அன்பு    மனையாள்  உமாதேவியையும்  -  செல்வமகன்   உமாசங்கர்    மற்றும்   செல்வமகள்    சர்மிளாவையும்    சாக்கால்   மூடி  கட்டிலின்   அடியிலே    தள்ளிக் காப்பாற்ற    முனைந்திருப்பாரா---?
எவருமே    அறிந்திருக்க மாட்டார்கள்.
படையினரின்   ஆட்லறி   எறிகணைத்   தாக்குதலின்போது    தனது  மனைவி  மக்களையும்   தன்னுடன்    அழைத்துக் கொண்டு   போய்விட்டார்   எங்கள்   நெல்லை க. பேரன்.     இரத்தத்தை    உறையவைத்து – நெஞ்சமதை   அடைக்க வைத்து   வெடித்துச்   சிதறிய  விம்மல்கள்   எத்தனை ---  எத்தனை?
செய்தி கேட்டு – கலங்கிப் போனேன்.
ஆறுதல்   தெரிவித்து    கடிதம்   எழுதவும்    மனைவி   மக்களை   விட்டுச் செல்லாமல்   உடன்   அழைத்துச்    சென்று விட்டார்    எங்கள்    நெல்லை க. பேரன்.
அப்பொழுது   எம்மையெல்லாம்   உலுக்கிய   சம்பவம்   அந்த முழுக்குடும்பத்தின்   அகால    மறைவு.

திருக்குறள் மாநாடு - 26, 27 .04 .2014

.

பண்ணிசை விழா 2014 - 25.04.14





இலங்கைச் செய்திகள்




தேர் குடைசாய்ந்ததில் ஆலய பிரதமகுரு படுகாயம் : யாழில் சம்பவம்

பிள்ளையார் ஆலய மூல விக்கிரகங்கள் திருட்டு : காரைநகரில் சம்பவம்

ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்

கோபி, தேவியன், அப்பன் ஆகி­யோரின் உடல்கள் நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அனு­ரா­த­பு­ரத்தில் அடக்கம்

பயங்கரவாதப் பட்டியலில் பொது பலசேனா

====================================================================

தேர் குடைசாய்ந்ததில் ஆலய பிரதமகுரு படுகாயம் : யாழில் சம்பவம்


15/04/2014  யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றபோது தேர் தேர்குடை சாய்ந்ததில் பிரதம குரு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆலயத்தின் பிரதம குரு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புது வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சைவ சமய அறிவுத் திறன் தேர்வு 6,13,26 /4 /14

.

ஸ்ரீ ராம நவமி விழா வளசரவாக்கம் ஸ்ரீ காமகோடி பக்த சமாயில் இடம் பெற்றது

.

ஸ்ரீ ராம நவமி விழா 14.04.2014 அன்று வளசரவாக்கம்  ஸ்ரீ காமகோடி பக்த சமாயில்  இடம் பெற்றது . இந்தவிழாவில் குமுதம் ஆசிரியர் A .M .ராஜகோபாலன் அவர்களுக்கு ஜோதிடசர்கரவர்த்தி என்ற பட்டத்தை கலை இயக்குனர் G .K .Lion  அவர்கள் வழங்கினார் . இந்த வைபவத்தில் டெல்லி பாபு அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார் .இந்த நிகழ்வை வலசை ஜெயராம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார் .


சங்க இலக்கியக் காட்சிகள் 4 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
காட்சி 4

சொந்த வீட்டுக்குக் கள்வனைப்போல
வந்துபோகும் தலைவன்


இல்லறத்தில் இணைந்து நல்லதொரு மனைவியுடன் வாழ்ந்தாலும் அந்தக்காலத்தில் கணிகையர் என்று சொல்லப்படும் பரத்தைகளிடம் தொடர்புவைத்துக்கொள்வது ஆண்களில் பெரும்பாலானோரின் வழக்கமாக இருந்திருக்கிறது. அதிலும் அரசர்கள் பெரும் வணிகர்கள் தனவந்தர்கள் கலைஞர்கள் முதலிய அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் வாழ்வில் பரத்தையர்களின் தொடர்பு என்பது இன்றியமையாததோர் அம்சமாக இருந்திருக்கிறது என்றே சொல்லலாம். சில ஆண்கள் பல பரத்தையர்களுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். சிலரோ ஒரு பரத்தையை நிரந்தரமாகத் தமது வைப்பாட்டியாக வைத்திருப்பார்கள். அவள் வேறு சிலருக்கும் வைப்பாட்டியாக இருக்கக்கூடும். மனைவியோடு சேர்ந்து வாழும் அதேவேளை பரத்தையிடமும் அடிக்கடி சென்று உடலுறவுக்காக அவளோடு தங்குவார்கள். அத்தகைய ஆண்களின் மனைவிமார் தங்கள் கணவன்மார்களுடன் ஊடல் கொள்வதும்  கோபம் கொள்வதும் சண்டையிடுவதும், ஊடல் தணிந்து கூடலில் முடிந்து  இன்பம் காண்பதும்,இல்லறம் தொடர்வதும் பண்டைத் தமிழகத்தின் வாழ்க்கை முறையில் சாதாரணமாகும். அத்தகைய நிலைமைகளை எடுத்துக்காட்டும் காட்சிகள் சங்க இலக்கியங்களில் நிறையவே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பாரதிரஜாவின் கனவு 1

.
சென்னைத் தெருக்களில் அலைந்த நூற்றுக்கணக்கானவர்களில் பாரதிராஜாவும், இளைய
ராஜாவும் அடக்கம். "மயில்' என்ற திரைக்கதைய உருவாக்கிய பாராதிராஜா அதனை
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கழகம் சிறந்த
திரைக்கதைகளுக்கு நிதி உதவி செய்து வந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு
அனுப்பிய விண்ணப்பப்படிவத்தில் கதை இயக்கம் பாரதிராஜா, கமரா நிவாஸ்,
இசை ராஜா என்று குறிப்பிட்டிருந்தார். ராஜா வேறு யாருமல்ல அவர் தான் இளைய
ராஜா.

நிதி உதவி கிடைக்கும். படம் வெளியாகும். அதன்பின்னர் தயாரிப்பாளர்கள் தேடிவ
ருவார்கள் என்று பாரதிராஜா காத்திருந்தார். அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.
அவருக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. தெலுங்கு இசையமைப்பாளரான பெண்டி
யாலா சீனிவாசன் என்பவர் "பட்டாம்பூச்சி' என்ற படத்துக்கு இசை அமைப்பாளராகப்
பணிபுரிந்துவந்தார். மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உதவி இசைய
மைப்பாளராகப் பணி புரிந்த கோவர்த்தன் பட்டாம் பூச்சிக்கு உதவியாளராக பணிபுரிந்தார்.

வேப்பமரத்தின் மனம்

.

ப்ஊ.. ப்ஊ... தூசியை வாயால் ஊதினேன். அப்பப்ப்ப்பா.. மேஜையில் எவ்வளவு தூசு. ஒருவழியாக சுத்தம் செய்தபின் மேஜையையும் நாற்காலியையும் இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.

ஜன்னலின் ஓரம் அமர்ந்து கவிதை எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
கவிதையா..! 
என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது.
கவிதை மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
வேப்பமரத்தின் ஒரு சிறிய கிளை ஜன்னலின் அருகே என்னையே உற்று பார்ப்பதுபோல் இருந்தது. அதை சட்டை செய்யாமல் எழுதினேன். மீண்டும் மனசுக்குள் ஒரு உறுத்தல். என்னைத்தான் பார்க்குமோ என்று சற்று நிமிர்ந்து பார்த்தேன். தலையைத் திருப்பிக்கொண்டது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் எழுதத்துவங்கினேன். இப்போது மெல்லிய குரலில் சத்தம் கேட்டது. 
யாரது? என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தேன். 
மரமேதான்... ஆச்சரியம் மேலிட என்ன என்று புருவம் உயர்த்தினேன்.
எப்போது பார்த்தாலும் எழுதுகிறாயே..! அப்படி என்னதான் எழுதுவாய் என்று கேட்டது.
என் தனிமையை போக்கவும், எனக்குள் தோன்றும் சில கருத்துக்களையும் எழுதுவேன் என்றேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற வேப்பமரம்..
நீ கருக்கொண்டிருப்பாயோ!
இத்தனை வார்த்தைகள்
உனக்குள் பிறக்கின்றன.
என்று கூறியது.
வேப்பமரத்தின் பேச்சு எனக்கு வியப்பினை தந்தது.
என் மனதில் வார்த்தைகள் ஊறிக்கொண்டிருக்கும் என்றேன்.
உடனே அது மனத்தினை எப்போதும் குப்பைபோல நிறைத்திருப்பாயோ என்று கேட்டது.
எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.
காலியான மனம் ஒன்று உண்டா? என்று கேட்டது.
கண்டிப்பாக இருக்க முடியாது என்றேன்.
அது சிரித்தபடியே பொருட்களை வாங்கி வீட்டினை நிரப்புகிறீர்கள். சொற்களை வாங்கி மனசை நிரப்புகிறீர்கள் என்றது.
எண்ணங்களும் மனசை நிரப்பும் என்றேன்.
எதை எண்ணுவீர்கள்?
காதலி, குடும்பம், ஊர், வேலை பார்க்கும் இடம், அன்றாட நிகழ்வுகள் இப்படி எதையாவது எண்ணுவேன். மனம் எப்போதும் எதையாவது அசைபோட்டுக்கொண்டு இருக்கும்.
நடந்தவை
நடந்துகொண்டிருப்பவை
நடக்கப்போகின்றவை
யோசித்துக்கொண்டேயிருக்கும்
மனம்.
அதற்கு ஓய்வில்லை என்று சொன்னவுடன்…
வேப்பமரம் ஆமோதிப்பதுபோல் கிளையை அசைத்தது.
மனிதன் மட்டுமே இப்படி மனசை உலட்டியபடி அலைகிறான். அவனுக்குள் எப்போதும் திராவகம்போல் எண்ணங்கள் அரித்துக்கொண்டே இருக்கவேண்டும். மனம் வெறுமையாய் இருந்தால் அவன் இறந்துபோய்விடுவான். அவன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் மனம் மட்டுமே என்றது.
வெறுமையான மனம் என்று ஒன்று கிடையாது. மனிதர்கள் குப்பைகள் என்றது.
நான் என்னுடைய எண்ணங்களை இலைகளாக முளைக்கச்செய்து, தேவையில்லாதவற்றை உதிரச்செய்வேன் என்றது. நாங்கள் அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக்கி மனசுக்குள் புதைத்துவைக்கிறீர்கள். அவை கை கால்களுடன் முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டிருந்தது.
அப்போது ஓங்கி வீசிய காற்றில் அந்தக்கிளை முறிந்து விழுந்தது.
நான் அமைதியானேன்.
மனம் மீண்டும் யோசிக்கத்தொடங்கியது.


Nantri : http://alaiyallasunami.blogspot.com/#ixzz2zRCPLnuR

இலங்கைத் தமிழ் சினிமாவும், அடுத்தகட்ட வளர்ச்சியும் -இயக்குநர் விமலராஜ்

.
இதற்கான வேண்டுகோள்களை முன்வைத்து....
2005 ஆம் ஆண்டு 'கிச்சான்' குறும் படத்தைத் தயாரித்து உலகம் பூராகவும் உள்ள தமிழர்களை ஒருகணம் திரும்பிப் பார்க்க வைத்ததன் மூலம் அடுத்த கட்டச் செயற்பாடுகளை பல முறைகளில் முன்னெடுக்க முனைந்தோம். அடுத்த ஆண்டே 'அம்பி'என்கின்ற குறும் படத்தை திருகோணமலையில் எடுக்கத் திட்டமிட்டபோது அங்கு இடம்பெற்ற புத்தர்; சிலை பற்றிய அரசியல் சர்ச்சைகள் பாதுகாப்பு கெடுபிடிகளால் படத்தை ஒளிப்பதிவு செய்ய முடியாது குழம்பிப்போக அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் சில முயற்சிகள்.. இவ்வாறு தொடர்ச்சியாக முயற்சிகளும் ஏமாற்றங்களும் கைவிடுதலும் என்கின்ற போக்குகள் என் கனவுகளை சிதைத்துக் கொண்டு வந்தன..
இருந்தாலும் இலங்கையில் ஒரு நல்ல தமிழ் சினிமாவுக்கான அடித்தளத்தை இடவேண்டும் என்ற வேட்கை இன்னும் சற்றும் குறையவில்லை.. தமிழ்நாட்டு தமிழ்ச் சினிமாவின் வர்த்தகத் தனமும் யதார்த்தமற்ற வாழ்வியலும் எம் மக்களுக்குப் பழகிப்போக,எங்கள் வாழ்வியலையும்,எங்கள் பிரச்சினைகளையும்,உலகத்துக்குக் காட்ட வேண்டிய தேவைப்பாடுடன் காத்திருக்கின்றோம். 
இன்று இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் அதிகளவான சினிமா வேட்கையைக் காண முடிகின்றது.. இது சந்தோசத்தைக் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் கவலையையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. தமிழ்நாட்டு வர்த்தக சினிமாவின் காதலையும், வன்முறையையும், நட்சத்திரஅந்தஸ்தையும் தங்கள் இலட்சியமாகக் கொண்டு இன்றைய எங்கள் உறவுகள் சினிமாவை கையில் எடுக்கும் போது மிகவும் கவலை ஏற்படுகின்றது. 

யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

.
யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்demo mandaitivuறில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில்,

ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தும், மிக நெருக்கமான முறையில் தம்முடன் இருக்குமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த யுவதி அவரது பெற்றோர்களிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தினை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!

.
'தங்க மீன்கள்' படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறThangameengalைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரைப்படத் துறைக்கான 61-வது தேசிய விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது. அதில், மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.

மேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார்.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்' தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்படுகிறது.

SKY Creation Presents,"அடிவானம்" குறுந்திரைப்படம்

.

உலகச் செய்திகள்


ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு இடைக்கால அதிபர் ஆதரவு

மாயமான மலேசிய விமானி செல்போனில் அவசர அழைப்பு; உறுதிபடுத்த மலேசியா மறுப்பு

475 பயணிகளுடன் கப்பல் கடலில் மூழ்கி விபத்து

காணா­மல்­போன MH370 விமா­னத்தை தேடும் நட­வ­டிக்­கையில் ரோபோ நீர்­மூழ்கிக் கப்பல்


====================================================================

ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு இடைக்கால அதிபர் ஆதரவு 


15/04/2014  உக்ரைனில் தேசிய அளவிலான பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டின் இடைக்கால அதிபர்  அலெக்சாண்டர் துர்ச்சினோவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில், டொனெட்ஸ்க் நகர் உள்ளிட்டவற்றில் அரசு கட்டடங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ஆதரவாளர்கள் பொது வாக்கெடுப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

தமிழ்வழிபாட்டுப்பயிற்சிக்கூடம்

.

தமிழைப் பாடு துயரம் போகும்.தமிழைப் பாடு இன்பம் பெருகும்.தமிழைப் பாடு ஒழுக்கம் சிறக்கும்
தமிழைப் பாடு அருள் கொழிக்கும்
என்றனர் நாயன்மார்கள்ஆழ்வார்கள்
நேற்று வெள்ளிக்கிழமைஈழத்திழ் பண்டைத் துறை சம்புகோளப்பட்டினம் (மாதகல்)சிங்களப் பெயர் தம்பகொலபடுண
(
சம்பு = தம்பகோள = கொலபட்டினம் = படுண)

21 
அடி உயரச் சிவனார் திருவுருவச் சிலை முன்னிலையில்
காலை 0900 மணி தொடக்கம்
36 
அருட்சுனைஞர் தீக்கை பெற்றனர்.தமிழ் வழிபாட்டுப் பயிற்சியில் ஒரு படிநிலை இத்தீக்கை.தமிழ்நாடு ஈந்த தவத்திரு முபெசத்தியவேல்முருகனாரின் திருவருட்பணி.மருத்துவர் நந்தகுமாரின் அயரா உழைப்பு.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி

.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்
பாட்டுக்கோட்டையார் என்றும், பட்டுக்கோட்டையார் என்றும் தமிழர்களால் அன்புP.Kalyanasundaramடன் நினைவுக் கூரப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும், சிந்தனையாளராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும் திகழ்ந்தவராவார்.

இவரது பெரும்பாலான பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி இயற்றப்பட்டவையாகும். இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச சித்தாந்தத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கவுரவாம்பாள்.

தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டிய இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் கொட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் ஒருசேர சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக வடித்துத் தந்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆஸி.பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்


17/04/2014 இலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலிய பிரஜைகள் பாதுகாப்புடன் செயற்படுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இலங்கையில் பாதுகாப்பு நிலைகள் மோசமாக காணப்படுவுதாகவும் தமது பிரஜைகள் அங்கு கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை, இலங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துகொள்வதுடன், இலங்கையில்  டெங்கு உட்பட நுளம்புகளினால் பரவக்கூடிய நோய்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலிய பிரஜைகள் அனைவரும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சில் கட்டாயமாக தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  நன்றி தேனீ

லண்டனில் ஒரு யாழ்ப்பாணம்



.
புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது.
தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல 
வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெருத்த வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்தப் பாடசாலைக்கு நிர்வகிக்கின்ற நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை அப்படியே திரும்ப நினைவுபடுத்துகின்றனர். அதுவும் 80களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்றனர். ஆண் வாத்தியார்களுக்குப் பிரம்பையும், பெண்களுக்கு சுடுதண்ணிப் போத்தலையும் களட்டிவிட்டால் யாழ்ப்பாண வாத்திமார்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது.
பெரும்பாலானவர்கள் "பாட்டி வடை சுட்டு விற்ற" கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆர 
ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை"ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா"? என்று நான் கேட்டு வைத்தேன். "கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும்" என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.
அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் 'பிளாஷ் பாக்கில்' வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.
இன்னொரு குழந்தை தீபாவளி நாளில் எப்படி எல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்று கூறி வைத்தது. இன்னும் ஒரு குழந்தை தமிழின் பெருமையையும், ஆறுமுக நாவலரையும் பற்றிப் பேசியது.

தமிழ் சினிமா

நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது.
.
நிமிர்ந்து நில்

இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.
ஆசிரமத்தில் நேர்மையாக வாழ போதிக்கப்பட்டு படிப்பு முடிந்து வெளிவரும் ஜெயம்ரவி சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்ற நிஜமே புரிய மறுக்கிறது.
அப்பாவியாக ஒரு சிக்னலில் டிராபிக்  பொலிசிடம் மாட்டும் ரவி 100 ரூபாய் லஞ்சம் தர மறுக்கிறார், அதனால் ஏற்படும் சிக்கலில் பொலிசில் மாட்டி நீதிபதியிடம் சிக்கி தண்டனை பெறுகிறார். வெளி வரும் ரவி எல்லா அதிகாரிகளையும் பற்றி மேலிடத்தில் புகார் தருகிறார்.
சிக்கலுக்கு உள்ளாகும் அதிகாரிகள் ரவியை தாக்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாழ்வதற்காக ஊரை விட்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் எதிர்த்து நிற்கும் ரவி சமூகத்தையே திருத்த நினைக்கிறார்.
அதற்காக நல்ல அதிகாரிகளின் உதவியுடன் இல்லாத ஒரு ஆளுக்காக அனைத்து அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் பெறுகிறார்.
நீதிபதி, டாக்டர், பொலிஸ், எம்.பி என 147 பேர் இந்த ஊழலில் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும் சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ரவி. அனைத்து அதிகாரிகளும் சிக்கிக் கொள்கிறார்கள்.

இடைவேளை வரை இவ்வளவு தான். ஊழலில் மாட்டிய அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ரவியை எதிர்க்கிறார்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது தான் படம்.
இந்தியன், சாமுராய், சிட்டிசன் போன்ற படங்களின் நினைவுகள் அவ்வப்போது வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.
முதல் பாதியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இரண்டாம் பாதி திணறி விட்டது. க்ளைமாக்ஸ் தான் படத்தின் மைனஸ்.
ஜெயம்ரவிக்கு கேரியரில் இந்த படம் மிக முக்கியமான படம் தான். சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயலாமையில் பொறுமும் போதும், விட்டேத்தியாக காதலிக்கும் போதும் அந்நியன் அம்பியை நினைவுபடுத்துகிறார். நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜிலும் அசத்தியிருக்கிறார்.
அமலாபால் அழகாக தெரிந்தாலும் படத்தில் அவருக்கு பெரிய நடிப்பேதும் இல்லை. நாயகனின் நண்பனாக வந்த சூரி காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக செய்து போகிறார். கோபிநாத்தின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
சரத்குமார் இன்டர்வெல் பிளாக்குக்கு மட்டும் தேவைப்பட்டு இருக்கிறார். கு.ஞானசம்பந்தனும் நகைச்சுவை நடிகராக அசத்துகிறார். பாடல்கள் எல்லாமே ஸ்பீடுபிரேக்கர்கள் தான்.
ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.
ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.
லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது.
ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது, சற்றே மிஸ்ஸாகி ஆவரேஜ் படமாகிவிட்டது.
கொமடி படங்களையும், ஆக்ஷன் படங்களையும் மட்டும் கொடுக்க நினைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் மக்களுக்காக நல்ல படம் எடுக்கநினைத்திருக்கும் சமுத்திரக்கனிக்கு வாழ்த்துக்கள்.
நடிகர் : ஜெயம் ரவி.
நடிகை :அமலாபால்.
இயக்குனர் :சமுத்திரகனி.
இசை :ஜீ.வி.பிரகாஷ்.
ஓளிப்பதிவு :சுகுமார்.