உலகச் செய்திகள்


டில்லியில் பாலியல் வன்செயல் 

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உலக அழகிப் பட்டம்..! 

ரஷ்யா வான்வழி தாக்குதல் :சிரியாவில் 200 பொதுமக்கள் பலி

டில்லியில் பாலியல் வன்செயல் 

21/12/2015 இந்தியத் தலைநகர் டில்லியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் ஐவர் கொண்ட குழு பெண் ஒருவரை  பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதில் ஒருவரின் விடுதலைக்கு எதிராக இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் குற்றச்செயல் இடம் பெற்ற போது, அந்த நபருக்கு 17 வயது என்பதால், இந்திய சிறார் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் அமைப்பு ஒன்று மேல்முறையீடு செய்தது.


இலங்கைச் செய்திகள்


நாடு திரும்பிய எனது மகனை  காணவில்லை : பரிதவிக்கும் தந்தை


நாடு திரும்பிய எனது மகனை  காணவில்லை : பரிதவிக்கும் தந்தை

21/12/2015 கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த தந்தையான சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 கடந்த 12ஆம் திகதி தனது மகன் நவரெட்ணம் குணராஜா கட்டாரிலிருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தார். அவருடன் வந்த நண்பரை விட்டுவிலகி வெளியில் சென்றுள்ளார்.
இதுதொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்து போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் தனது மகன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியமை தொடர்பான சி.சி.டிவி. காட்சி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில்  கட்டாருக்கு  தொழிலுக்காக சென்ற என்னுடைய மகன் புத்தி சுவாதீனமாகியுள்ளதாகவும் அவர் நாட்டுப்கு திருப்பி  அனுப்பப்படவுள்ளதாகவும் அவருடைய நண்பர் மூலம் அறிந்தேன். அதன் பின்னர் கடந்த  வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அவர் தொலைபேசியில் அழைத்து என்னுடைய மகன் நாடு திரும்பியுள்ளதாக அறிவித்தார்.
நான் அன்றிரவு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கே விமான நிலையம் செல்ல முடிந்தது. அப்போது என்னுடைய மகன் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறி விட்டார் என மூலம் தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் விமான நிலையப் பொலிசார், அதிகாரிகளிடம் விசாரித்த போது எவ்வித பயனில்லாமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். 
பின்னர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தேன். இருந்த போதும் என்னுடைய மகன் இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே கொழும்பிலோ வேறு எங்காவது என்னுடைய மகனைக் கண்டால் எனக்கு என்னுடைய 0779424185 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
கூலித் தொழில் செய்யும் நான் என்னுடைய குடும்ப நிலைமை காரணமாகவே மகனை வெளிநாட்டுக்குத் தொழிலுக்காக அனுப்பினேன் என்று தெரிவித்தார்.
நன்றி வீரகேசரிதமிழ் சினிமா


தங்கமகன் 
தனுஷிற்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைய ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.
தனுஷ், எமி, சமந்தா, கே,எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஸ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைய வேல்ராஜ் இயக்கியுள்ளார்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே கணவன், மனைவியான தனுஷ்சமந்தாமற்றும் தனுஷின் அம்மாவான ராதிகா மிகவும் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகின்றது. அங்கிருந்து படம் ப்ளாஸ் பேக் செல்கிறது.
அன்பான குடும்பம் அழகான அப்பா, அம்மா, நல்ல நண்பர்கள் என தனுஷின் வாழ்க்கை சந்தோஷமாக செல்கின்றது. இவரின் வாழ்க்கையை மேலும் சந்தோஷப்படுத்த எமி ஜாக்ஸன் வருகிறார். தனுஷிற்கு பார்த்தவுடன் காதல்.
பின் என்ன வழக்கம் போல் எமி செல்லும் இடமெல்லாம் சென்று அவர் மனதில் எப்படியோ இடம்பிடிக்கிறார். எல்லா விஷயத்தையும் தன் அப்பா, நண்பர்களிடம் சொல்லும் தனுஷ் இதை மட்டும் மறைக்கின்றார். இவர்கள் காதலிப்பது சதீஸுக்கு மட்டும் தெரிய மற்றொரு நண்பருக்கு சொல்ல மறுக்கின்றார்.
இதனால் நண்பர்களுக்குள் சண்டை வந்து பிரிய, அதே நேரத்தில் எமி, நமக்கு திருமணமானால், தனியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அப்பா, அம்மாவை விட்டு உன்னுடன் தனியாக வர முடியாது என்று தனுஷ் சொல்ல வாக்குவாதம் பெரிதாகி இருவரும் பிரிய நேரிடுகிறது.
இதை தொடர்ந்து அனைத்தையும் மறந்து தனுஷ், சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கின்றார். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அவருடைய உயர் அதிகாரி ரூ 5 கோடி கொடுத்து வைக்கின்றார்.
அவருக்கு மறதி அதிகம் என்பதால் பணத்தை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதன் பிறகு தனுஷ் பொறுப்புணர்ந்து அந்த பணம் எங்கு சென்றது, தன் அப்பா நல்லவர் அவர் அந்த பணத்தை திருடியிருக்க மாட்டார் என நிரூபிக்க போராடுவதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் இனியும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொரு அம்மாவும் இப்படி ஒரு பையன் வேண்டும் என்கின்ற அளவிற்கு திரையில் வாழ்கின்றார். அவர் சிரித்தால் ஆடியன்ஸ் அனைவரும் சிரிக்கிறார்கள், அழுதால் அனைவரும் அழுகிறார்கள் அந்த அளவிற்கு தன் திரை ஆளுமையை வளர்த்துள்ளார்.
எமி காதலியாக முதல் பகுதியில் வருகிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் 3 படத்தையே தூக்கி சாப்பிடும் ரொமான்ஸ் காட்சிகள், அதிலும் அவர் நிறத்திற்கு கூட ஒரு விளக்கம் கொடுத்து, ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்திருப்பது சூப்பர். இரண்டாம் பாதியில் கதையின் திருப்பத்திற்கு உதவுகிறார்.
சமந்தா, தனுஷின் மனைவியாக கதாபாத்திர பொருத்தம். தன் கணவரின் பெயர் கெடக்கூடாது என்பதற்காக அம்மா வீட்டில் இருந்து வெளியேறும் காட்சியில் இருந்து, தனுஷிற்கு முதல் காதலி இருப்பது தெரிந்தும் ஜாலியாக அரட்டை அடிப்பது என நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கேரக்டர்.
கே.எஸ்.ரவிக்குமார் இத்தனை அப்பாவியாக அவர் நடித்த எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம். காமெடி, வில்லன் கலந்து தான் அவர் நடித்த ஒரு சில படங்களிலும் தான் பார்த்திருப்போம். இதில் செம்ம ஸ்கோர் செய்கிறார். ராதிகாவும் அப்பாவி அம்மாவாக தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
சதீஸ் கவுண்டர் கொடுப்பதும், கலாய் வாங்குவதும் என லிட்டில் சந்தானமாக வளர்ந்து வருகிறார். இத்தனை சிறப்பு இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் வில்லன் கதாபாத்திரம் தான்.
ஒரு படத்தில் ஹீரோ வெற்றி பெற்றால் அதை நாம் ரசித்து கைத்தட்ட வேண்டும், ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய போராட்டம் இருக்க வேண்டும். ஆனால், இதில் வில்லன் மிகவும் அமுல்பேபியாக இருப்பதால், தனுஷ் வெற்றிபெறும் போது ரசிகன் கூட கைத்தட்டவில்லை.
க்ளாப்ஸ்
தனுஷ்-எமி காதல் காட்சிகள், இன்றைய ட்ரண்ட் இளைஞர்களுக்கு செம்ம விருந்து. அதே போல் தனுஷ்-சமந்தா திருமண உறவுகள் நிஜ தம்பதியினர்களே அசந்து போகும் யதார்த்தம். குடும்ப உறவுகள் பற்றி பேசும் காட்சிகள்.
அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதிலும் அறிமுக ஒளிப்பதிவாளர் குமரன் செம்ம கலர்புல்லாக காட்டியுள்ளார்.
படத்தின் முதல் பாதி. வில்லன் கதாபாத்திரம் டுவிஸ்ட் அவிழும் காட்சி.
பல்ப்ஸ்
வில்லன் கதாபாத்திரம் வலுவாக இல்லாமல் இரண்டாம் பாதி மிகவும் தடுமாறுகிறது.
தனுஷ் படத்திற்கு இசை என்றாலே அனிருத் புகுந்து விளையாடுவார், ஆனால், இதில் என்னவோ பின்னணி இசையில் சொதப்பியுள்ளார். அதற்காக வேலையில்லா பட்டதாரி இசையை அப்படியேவா போடுவது. சுவாரசியம் இல்லாமல், மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.
மொத்தத்தில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த தங்கமகன் மின்னுவான்.

ரேட்டிங்- 2.5/5    நன்றி cineulagam


நத்தார் வாழ்த்துக்கள்மலரும் முகம் பார்க்கும் காலம் 24 - தொடர் கவிதை

.

கவிதையை எழுதியவர்  திரு. வெற்றிவேலு வேலழகன்  -பண்ணாகம் -யேர்மனி     இவர் சிறந்த கவிதைகளை  பல இணையங்களிலும் சமூகத் தளங்களிலும் வெளியிட்டு வரும் ஒரு நல்ல எழுத்தாளன் ஆக உள்ளார்.
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும்.
உலக வல்லரசுகளே!
விண்வெளிக்கு சென்றவர்களே!!
விஞ்ஞான மேதைகளே!
குளாயில் குழந்தை உண்டாக்கியோரே!!
மெஞ்ஞானம் போதிப்போரே!
அணுவை ஆய்வு செய்வோரே!!
கணணிக் கனவான்களே!
உலக மயமாக்கலின் உத்தமர்களே!!
தரவரிசைப் பணக்காரர்களே!!!
இருபத்தியோராம் நூற்றாண்டில்
இது நாம் வாழும் தேசம். பார்த்தீர்களா?
என் தேசத்தை பாளைகள் நிறைந்த பனைமரம் போலே
ஏழைகள் நிறைந்த எம் தேசத்தைப் பாருங்களேன்
விதைகளற்ற வெள்ளரியையும்,
கத்தரியையும் விற்றுப் பிளைக்கும்
விலை மாதைவிடக் கேவலமான வியாபாரிகளே!
கொஞ்சம் பாருங்கள் நம் தேசத்தை!
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும் என்ற
நம்பிக்கை சாகாதவனின் ஏக்கம்.

மறைந்த அருண் விஜயராணிக்கு கண்ணீர் அஞ்சலி.

.


  
நீண்ட காலம் அவுஸ்ரேலியா மெல்பேனில் வாழ்ந்துவந்த இலங்கை எழுத்தாளர் அருண் விஜயராணி அவர்கள் இன்று காலமாகி விட்டார் என்று முருகபூபதி தந்த துயரச்செய்தி நம்மை வாட்டுகின்றது. சமுதாய சீர்கேடுகளை தயங்காது தன் சிறுகதைகள் மூலம் வன்மையாக கண்டித்து வரும் நேர்மையான, சமூக அக்கறை உள்ள எழுத்தாளரின் மறைவை கேட்டு  கலங்கி நிற்கிறோம் . கன்னிகாதானங்கள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. துயரத்தால் வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது .

சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை - முருகபூபதி (20-12-2015)

.     

           
மேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர்.  இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.
ஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.
அந்தக்கவிஞரே  மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம்.
அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்

.

டிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.

ஈழத்தில் நானும் (நாமும்) வாழ்ந்து கழித்த அந்த நாட்களின் "கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்" மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற என் முதல் குழந்தை வலைப்பதிவினூடாகப் பதிவேற வேண்டும் என்ற முனைப்பில் அப்போது எழுத ஆரம்பித்தேன். மடத்துவாசல் பிள்ளையார் எங்கள் கிராமத்துக் கோயில் அந்த ஆலயத்தின் வாசல் படிகளில் எனது நண்பர் குழாமுடன் பேசிக் கழித்த் இளமை நாட்களின் நீட்சியே இந்த இணைய உலகப் பதிவு.

அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் (எழுத்து, நாடகம், சினிமா, மரபுவழிக் கூத்து) குறித்த விரிவான பகிர்வுகளைக் குறித்த ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டி செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரெண்ணமும் எழவே அவற்றையும் சேர்த்துக் கொண்டேன். ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் குறித்து தமிழகத்து நண்பர்களோடு ஈழத்தின் இன்றைய தலைமுறையும் அவற்றைப் பயன்படுத்தி வருவதைக் கண்டு இந்தப் பணியில் நிறைவை உண்டு பண்ணியிருக்கிறது.
குறிப்பாக நவீன நாடக மரபை ஈழத்தமிழ் தமிழ் உலகிற்குச் செய்து காட்டிய திரு தாசீசியஸ், ஈழத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூலம் தமிழ் உலகை ஒன்றிணைத்த தனிநாயகம் அடிகளார் போன்றோர் குறித்த விரிவான ஒலி மற்றும் எழுத்து ஆவணப் பதிவுகள் எதிர்கால இணையத் தேடல்களில் புதையல்களாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

ஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கான பிரபா

.


எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்றுக் காலை எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இன்று காலை சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன். 
சிட்னி விமான நிலையம் நோக்கி விடிகாலை ஐந்து மணிக்கு எனது காரை முடுக்கி விட்டு கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணைய ஒலிபரப்பை மொபைல் போனில் தட்டினேன். சத்யசாயி பாபாவின் பாடல் ஒன்றை P..சுசீலா பாடிக் கொண்டிருந்தார். விஜயராணி அக்காவின் ஆன்மிகத் தேடலுக்கு சாயி பஜன் தான் வழிகாட்டி. அவரின் இறுதிப் பயணம் காணப் போய்க் கொண்டிருக்கும் எனக்கு சாயி பாடல் ஒலித்தது ஏனோ அந்த நேரம் இடம், பொருள், ஏவல் கண்டு ஒலித்ததாகப் பட்டது.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் அருண் விஜயராணி அக்காவின் தொடர்பில் இருந்திருக்கிறேன். எத்தனையோ நண்பர்களோடும், கூடப் பிறந்த சகோதரரோடும் கூட முரண் பட்டிருக்கிறேன். ஆனால் விஜயராணி அக்கா எது சொன்னாலும் தட்டாமல் கேட்டிருக்கிறேன், நடந்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் இடையில் வந்து வழிகாட்டி விட்டுப் போயிருக்கிறார் என்று அவரின் இறந்த நாள் அன்று என் மனைவிடம் சொல்லி நொந்தது ஏனோ மீண்டும் நினைப்புக்கு வந்தது.

திருச்சி புத்தக கண்காட்சி 2014

.
திருச்சி சிவா ஆற்றிய உரை

மாமழையும் மாந்தர் பிழையும்! - மேகலா இராமமூர்த்தி

.
mekala

தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப் பெய்திருக்கின்றது.

விளைவு…? சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன; மக்களோ கண்ணீரில் மிதக்கின்றனர். ’அமிழ்தம்’ என்று வள்ளுவரால் வர்ணிக்கப்பட்ட பெருமைமிகு மழைக்குச் சிலநாட்கள்கூடத் தாக்குப்பிடிக்க இயலாமல் தடுமாறும் தமிழகத்தின் அவலநிலையை என்னென்பது?

மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீரைச் சரியான முறையில் தேக்கிவைப்பதும், அதனைப் பாதுகாப்பதும் அரசின் தலையாயக் கடனாகும். இதற்காக இன்றைய ஆட்சியாளர்கள் ஒன்றும் கரிகாற்சோழனைப்போல் புதிதாய்க் ’குளம்தொட்டு வளம்பெருக்க’ வேண்டியதில்லை. ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கும் ஏரிகளையும், ஆறுகளையும், குளங்களையும் ஒழுங்காய்த் தூர்வாரிப் பராமரித்திருந்தாலே போதும். அவற்றின் நீர்க்கொள்ளளவு அதிகரித்திருக்கும்; கனமழையின் தாக்கத்தால் அவை உடைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கும். அரசாங்கம் இத்தகைய செயல்களில் போதிய கவனம் செலுத்தியதாய்த் தெரியவில்லை.

சங்கடமான இச்சூழலில், நம் பண்டை மன்னர்களைக் குறித்துப் ’பழம்பெருமை’ பேசாதிருக்க முடியவில்லை. அவர்கள் எதில் திறன்வாய்ந்தவர்களோ இல்லையோ நீர்நிலைகளைத் தேக்கிவைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதிலும் திறன்வாய்ந்தவர்களாகவே திகழ்ந்திருக்கின்றனர்.

எனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார் - தாமரைச்செல்வி .

.
இலக்கியப்பயணத்தில்   இணைந்து  வந்த எனதருமைத்தோழி  பாதிவழியில்  விடைபெற்றார்

  
                         
என் இனிய தோழி ! அருண் விஜயராணியின் மறைவுச்செய்தியை திரு முருகபூபதி அவர்களின் மின் அஞ்சல் மூலம்
அறிந்து கொண்டேன்.   மனதுக்குள் தாங்கமுடியாத துயரம் நிரம்பிக்கொண்டது. அவரது சிரித்த முகமும் மலர்ந்த விழிகளும் மிடுக்கான தோற்றமும் கண்களுக்குள் நிழலாடியது .எங்களுக்குள் இருப்பது நாற்பதுக்கும் மேற்பட்ட கால நட்புஎழுபத்துமூன்றாம் ஆண்டு இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் பேனா நண்பர்களாகத்தான் அறிமுகமானோம் .எங்களுடைய ஆக்கங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அபிப்பிராயம் சொல்லிக்கொள்வோம் .அந்த விமர்சனங்கள் நாம் இலக்கிய உலகில் எம்மை வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது .
                    நாம் கடிதங்கள்  மூலம் அறிமுகமாகி  ஒரு வருடத்தின் பின் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது . அந்நேரம் விஜயாவின் சிறியதந்தை எங்கள் பரந்தன் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்தார் .அவர் வீட்டுக்கு வந்த விஜயா அவர் மகள்
மஞ்சுவுடன் என்னைச்சந்திக்க எம் வீட்டுக்கு வந்திருந்தார் .
" உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் தாமரைச்செல்வி ." என்று என் கை பிடித்து  சொன்ன அந்த வினாடியிலிருந்து எம் நட்பு இன்னும் இறுக்கமாகியது.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
சிங்காரிதான்  காவேரி -    காவேரிதான்  சிங்காரி
 ( கடந்தவாரத் தொடர்ச்சி )
நனவிடை  தோய்தலில்  வீரகேசரி - தினக்குரலின் ஊடகவியலாளர்  தனபாலசிங்கம்
                                                    
   
                                     

என்னையும் தனபாலசிங்கத்தையும்   செய்தி    ஊடக வாழ்க்கைக்கு  திசை   திருப்பிய ஒருவரும்  இருக்கிறார்.
அவர்தான் நண்பர் . சிவநேசச்செல்வன். தற்பொழுது கனடாவில் வதியும் அவர் 1983 இல்  வீரகேசரியில்  பிரதம  ஆசிரியருக்கு வெற்றிடம்   வந்தபொழுது,  யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தின் நூலகராக  இருந்துவிட்டுவந்து  இணைந்துகொண்ட  விரிவுரையாளர்.
அவரை  எனக்கு  ஏற்கனவே  கைலாசபதி  யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவராக   இருந்தபொழுது  நடத்திய  தமிழ்  நாவல்  நூற்றாண்டு ஆய்வரங்கு    காலத்திலிருந்து  நன்கு  தெரியும்அவர் வீரகேசரியில்   இணையும்பொழுது  நானும்  ஆசிரிய பீடத்திலிருப்பதாகத்தான்  நம்பிக்கொண்டு  யாழ்ப்பாணத்திலிருந்து  புறப்பட்டார்.   ஆனால்,  அவர்  பதவியேற்ற  முதல்  நாள்  ஒரு திங்கட்கிழமை.   அன்று  எனக்கு  விடுமுறைநாள். என்னைத் தேடியிருக்கிறார்.