சிட்னியில் திருக்குறள் அனைத்துலக மாநாடு

.
மேற்கு சிட்னியில், பல்கலையில் திருவள்ளுவர் சிலையும் , பல்கலையில் தமிழ்  இருக்கையும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர்  ஹியூ மெக் டெர்மெட்   உறுதி.


‘இலக்கியங்களில் ஊடாக  அமைதியும் நல்லிணக்கமும்’ என்ற பரந்த தலைப்பின் கீழ் ‘திருக்குறள் ஓர் அனைத்துலக இலக்கியம் ‘ என்ற சிறப்புத் தலைப்பில் தமிழ் வளர்ச்சி மன்றம் , சிட்னி  ஷ்ரேமாயா அமைப்பு, அனைத்துலக திருக்குறள் அமைப்பு மொரீஷியஸ்ஆசியவியல் கல்வி நிறுவனம் சென்னை ஆகிய அமைப்புக்கள் ,  சிட்னி பல்கலைக் கழகத்துடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கம்  ஒன்றை நடத்தியது . ஜூலை மாதம் 31 காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை  சிட்னி பல்கலைக் கழக , சட்டத்துறை அரங்கில் அனைத்துலக அறிஞர்களும் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிற மாநில அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

வான் புகழ் கொண்ட வள்ளுவத்தை அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான உலகப் பொது மறையாக , ஆய்வு நோக்கில் உலக அளவில் தமிழர் அல்லாதோர்க்கும்  அறிமுகப்படுத்தும் முயற்சி இது ஆகும்.

எங்கள் தமிழால் வாழ்த்துவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


image1.JPG        ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
        கால மதை மாற்றுவோம்
        கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
        கலகலப்பை ஊட்டு வோம்
        அம்மா பாலில் எமக்குதந்த
        அன்னைத் தமிழைப் பாடுவோம்
        அன்னியத்தை அணைத்து நிற்கும்
        அவலம் அதைப் போக்குவோம் !

           கேக்கை வெட்டி விளக்கணைக்கும்

           கேளிக்கையை விரட்டு வோம்
           நாக்கில் இனிமை சொட்டசொட்ட
            நல்ல தமிழைப் பாடுவோம்
           வீட்டில் உள்ள பெரியவரை
           வீழ்ந்து வணங்கி நின்றுமே
           வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
            வளமாய் தமிழில் பாடுவோம் !

             அப்பா அம்மா அருகணைத்து
             அக மகிழ்ந்து பாடுவோம்
             அக்கா அண்ணா தம்பியோடு
             அழகு தமிழில் பேசுவோம்
             பக்குவமாய் இனிப்பு வழங்கி
             பலரும் மகிழப் பாடியே
             செப்பமாகப் பிறந்த நாளை
              சிறப்பாய் செய்து மகிழுவோம் !

கறை படிந்த அத்தியாயம் கறுப்பு ஜுலை - 01 பி.மாணிக்கவாசகம்


அது ஒரு பொல்லாத இரவு. அந்த இரவு தலைநகராகிய கொழும்பில் ஆரம்பித்த வன்முறைகள் நாடெங்கிலும் பரவலாகி ஏழு தினங்களுக்கு மேலாக தொடர்ந்தன. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களின் தமிழர்;கள் மீதான தாக்குதல்கள் தணியவில்லை


ஊரடங்கு உத்தரவின்போது, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய பொலிசாரும் இராணுவத்தினரும், கடற்படையினரும் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை

காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் தமிழர்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்திருந்தனர். சில இடங்களில் இடம் பெற்ற தாக்குதல்களைப் பார்த்து; முறுவலுடன் ரசித்துக்  கொண்டிருந்தனர். பல இடங்களில் வன்முறைக் கும்பல்களுக்குப் படையினரும் பொலிசாரும் உதவியாகவும் செயற்பட்டிருந்தனர்.

தடிகள், கம்புகள், கத்திகள் உள்ளிட்ட கையிலகப்பட்ட ஆயுதங்களுடன் பெட்ரோல் கேன்களையும் கையில் கொண்டிருந்த அந்தக் கும்பல்கள் தமிழர்களைத் தேடித் தேடி தாக்கின

வாகனங்களை நிறுத்தி தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடிய அந்தக் கும்பல்கள், நாட்டையும் சிங்களவர்களையும் காப்பதற்காக உதவுங்கள் என்று கோரி சிங்கள வாகன சாரதிகளிடம் பெட்ரோலை பெற்றுக் கொண்டார்கள்

கேன்களில் இருந்த பெற்றோலைக் கொண்டு, தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பவற்றிற்கு தீ வைத்தார்கள். கையில் அகப்பட்ட தமிழர்களை உயிரோடு எரிப்பதற்கும் அந்தக் கும்பல்களில் இருந்தவர்கள் தயங்கவில்லை

இருப்புக்கான போராட்டம்


03/08/2019 தமிழர் தரப்பு அர­சி­ய­லுக்கு வெளி­யிலும் முட்­டுக்­கட்­டைகள். உள்­ளேயும் பல முட்­டுக்­கட்­டைகள். இந்த முட்­டுக்­கட்­டை­களைக் கடந்து நாட­ளா­விய அர­சியல் வெளியில் உறு­தி­யா­கவும் வலு­வா­கவும் அது காலடி எடுத்து வைக்க வேண்­டி­யது அவ­சியம். இது காலத்தின் தேவை­யும்­கூட.
ஏழு தசாப்­தங்­க­ளாக மறுக்­கப்­பட்டு வந்­துள்ள தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்தி, அவற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மறுத்து வரு­கின்­றனர். தொடர்ச்­சி­யாக அதனை அவர்கள் உதா­சீனம் செய்­வதே வர­லா­றாக உள்­ளது. 
தமிழ் மக்­களும் இந்த நாட்டின் குடி­மக்கள், அவர்கள் சகல உரி­மை­க­ளுக்கும் உரித்­து­டை­ய­வர்கள், அவர்கள் சிறு­பான்­மை­யாக இருந்த போதிலும், இந்த நாட்டின் தேசிய இனம் என்­பதை ஆட்­சி­யா­ளர்கள் அங்­கீ­க­ரிக்கத் தயா­ராக இல்லை. 
நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்ற காலத்தில் இருந்து சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­க­ளு­டைய உரி­மை­களைக் கப­ளீ­கரம் செய்து அவர்­களை அடக்கி ஒடுக்கி இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக வைத்­தி­ருப்­ப­தி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் குறி­யாக இருந்து செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். அந்த நிலை­மை தொடர்­கின்­றதே அல்­லாமல், இன்னும் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. 
தமிழ் மக்கள் சிங்­கள மக்­க­ளுடன் சம உரிமை உடை­ய­வர்க­ளாக இந்த நாட்டின் சக குடி­மக்­க­ளாக வாழ வேண்டும். அதற்­கு­ரிய அர­சியல் வச­திகள் செய்­யப்­பட வேண்டும் என்ற உரி­மைக்­குரல் தொடர்ந்து ஒலித்து வரு­கின்­றது. 
உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுப்­ப­துடன் நின்­று­வி­டாமல் அந்த உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காகப் பல்­வேறு வழி முறை­களில் அந்த உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதற்­கான போராட்­டங்­களும் சாத்­வீக வழி­க­ளிலும், இறு­தி­யாக ஆயுதப் போராட்ட வழி­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. 
திசை­மா­றிய நிலைமை ஆனால் தந்­தி­ரோ­பாய ரீதி­யிலும், சர்­வ­தே சத்தை வ ைளத்துப் போட்ட நரித்­த­ன­மான செயற்­பா­டு­களின் ஊடா­கவும் அந்தப் போராட்­டங்கள் அனைத்­தையும் தோற்­க­டித்த ஆட்­சி­யா­ளர்கள், தமிழ்­மக்­களை தோல்­வியைத் தழு­விய ஒரு தரப்­பாக்­கி­யுள்­ளார்கள். 

கைவிடப்பட வேண்டிய இனத்துவப் பார்வை!


03/08/2019முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இராஜி­னாமா செய்து எதிர்ப்பை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­திய முஸ்லிம் அமைச்­சர்கள் நால்வர் தங்­க­ளது முன்­னைய அமைச்­ சுப்­ப­த­வி­களை மீண்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் கடந்த 29ஆம் திகதி பொறுப்­பேற்­றுக்­கொண்­டுள்­ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக் கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யு தீன் உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அப்­துல்லா மஹ்ரூப் ஆகிய இரு­வரும் ராஜாங்க அமைச்­ச­ரா­கவும் மற்றும் பிரதி அமைச்­ச­ரா­கவும் பதவி ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.
இதே­வேளை இராஜி­னாமா செய்த ஒன்­பது பேரில் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த கபீர் ஹாசிமும் எம்.எச்.ஏ.ஹலீமும் ஏற்­க­னவே அமைச்­சுப்­ப­த­விகளை பொறுப்­பேற்­றி­ருந்த நிலையில் மேற்­படி நால்­வரும் மீண்டும் பொறுப்­பேற்­றுள்­ளனர். இதே­ வேளை முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சுப் பத­வியை பொறுப்­பேற்க மறுத்த நிலையில் இன்னும் இரு­வரும் பத­வி­களை பொறுப்­பேற்க மறுத்­துள்­ளனர்.
முஸ்லிம் அமைச்­சர்கள் கூட்­டாக இராஜி­னாமா செய்­த­தற்கு ஒரு காரணம் மட்­டுமே பின்­னணி வகித்த போதும் அமைச்சுப் பத­ வி­களை ஏற்­றுக்­கொண்­ட­தற்கும் ஏற்­காமல் இன்னும் இருப்­ப­தற்கும் பல கார­ணங்கள் இருக்­க­லா­மென ஊகிக்க முடி­கி­றது.

உறவுகளை தேடி 10 வருடங்களாக போராடும் மக்கள்



03/08/2019 தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை தொலைத்­து­விட்டு  அவர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி  போரா­டிக்­கொண்­டி­ருக்கும்   காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வுகள்   தற்­போது பாரிய விரக்­தி­நி­லையை நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கின்­றனர்.  தமது  காணா­மல்­போன உற­வு­களை  மீண்டும் காணவே முடி­யாதா, அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறிய முடி­யாதா, அவர்கள்  உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா போன்ற கேள்­வி­க­ளுக்கு பதில் தெரி­யாமல்   இந்த மக்கள் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். 
யுத்­த­கா­லத்­திலும்  அதன் முடி­விலும் இவ்­வாறு பலர்  காணா­மல் ­போ­ன­தாக முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் இவ்­வாறு காணாமல் போன­வர்கள் தொடர்பில்  சுமார்   19ஆயிரம் முறைப்­பா­டுகள் எழுத்­து­மூலம்    காணப்­ப­டு­கின்­றன. கடந்த காலங்­களில்  இவ்­வாறு  காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக  நிய­மிக்­கப்­பட்ட    அமைப்­புக்­க­ளுக்கு  எழுத்­து­மூலம் கிடைக்­கப்­பெற்ற  முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­யவே 19ஆயிரம் என்ற எண்­ணிக்கை    வெளிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. 

அஞ்சலிக்குறிப்பு: தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு பாலமாக விளங்கிய உபாலி லீலாரத்ன ! புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் ஈழத்து - புகலிட தமிழ் படைப்புகளையும் சிங்களத்திற்கு வரவாக்கிய இலக்கியத் தொண்டன் ! ! - முருகபூபதி


புன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்!
இனிமேல்  நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார்.
தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை முன்னர் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்தப்பாதையை இருவழிப்பாதையாகவும் இருகை ஓசையாகவும் மாற்றியவர்களில்  குறிப்பிடத்தகுந்த ஒருவர் உபாலி லீலாரத்ன.
அவரது மறைவுச்செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மலையகம்,   உயிர்த்தியாகங்களினால் பசுமையானது மட்டுமல்லாமல்,  இலங்கைப் பொருளாதாரத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியையும் ஈட்டித்தந்தது.
ஆனால், அதற்குக் காரணமாக இருந்த மக்கள்  அவலமான வாழ்க்கைதான் வாழ்ந்தனர். இன்றும்கூட  ஒரு ஐம்பது ரூபாவுக்காகவும் போராடவேண்டி நிலையில் வாழ்கின்றனர்.
  1977 இல் பதவியிலிருந்த அம்மையாரின் ஏகபுதல்வனுக்காகவே நுவரேலியா – மஸ்கெலிய என்ற புதிய தேர்தல் தொகுதி சிங்களப்பேரின ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தமிழ்மக்கள் வாழ்ந்த மலையகக் காணிகளை அபகரித்து, பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கும் சதியை அன்றைய அரசு மேற்கொண்டதால் வெடித்த போராட்டத்தில்  பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்தான் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி.
அந்த டெவன் தோட்டப்போராட்டம் குறித்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. தி. ஞானசேகரன் எழுதிய குருதிமலை அந்தப்பின்னணியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த நாவல்.
இனநெருக்கடி உச்சம் பெற்ற அந்தப்பிரதேசத்தில் பிறந்து இலக்கியப்பிரவேசம் செய்தவர்தான் அண்மையில் மறைந்துவிட்ட உபாலி லீலாரத்ன.
ஆனால், அவரிடம் இனக்குரோதம் இருக்கவில்லை. அப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் – சிங்கள மக்களிடத்தில் தோன்றிய இனமுறுகளினால் அவருக்குக்கிடைத்த புத்திக்கொள்முதல் இன ஐக்கியம்தான்.
அங்கு நீண்டகாலம் வாழ்ந்தமையால், தமிழை பேசுவதற்கும் வாசிப்பதற்கும்  கற்றுக்கொண்டார்.  ஆனால், தனது தனிப்பட்ட தேவைக்காக அவர் கற்கவில்லை. அவரிடத்தில் சமூகம் சார்ந்த ஆழமான பார்வை இயல்பிலேயே இருந்திருக்கிறது.
மலையக தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டமையால்தான் அவரால்  தே கஹட்ட – தேயிலைச்சாயம்  என்ற நூலையும் எழுதமுடிந்தது.
தனது தொடக்ககால வேலையை தலவாக்கலையில் ஒரு அச்சகத்தில் ஆரம்பித்திருக்கிறார். இங்கு மலையகத்தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் தெரிவாகின்றனர். சி.வி. வேலுப்பிள்ளையிலிருந்து  சந்திரசேகரனிலிருந்து இன்றைய மல்லியப்பூ திலகர் வரையில் அதனை நாம் அவதானிக்கலாம்.
உபாலி லீலாரத்ன பணியாற்றிய  அச்சகத்தில் தமிழ்ப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டமையால்  அவரால், தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது.
அதிர்ந்து பேசத்தெரியாதவர். அதனால் எளிமை அவரது இருப்பிடமாகியது. பின்னாளில் அவரது வாழ்க்கை தலைநகரில் மருதானையில் அமைந்துள்ள கொடகே புத்தகசாலையிலும்  அதன்பதிப்பகம் சார்ந்தும்  தொடங்கியதும் தென்னிலங்கையில் வசித்த தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களதும் நண்பரானார்.
``நீ சுத்தமாயிட்டே. ஆமா, தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலால மிதிச்சுடுறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடுறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெரட்டவா செய்றா? எல்லாம் மனசுதாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும். உனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத்துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா. ஆனா, அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனால்தான் ராமரோட பாதத்துளி அவ மேலே பட்டுது. கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை. எதுக்குச் சொல்றேன்னா, வீணா உன் மனசும்
கெட்டுப்போயிடக் கூடாது பாரு... கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை “ 
இந்த வரிகள் இலக்கியவாசகர்களுக்கு நினைவிருக்கிறதா?  நாமெல்லாம் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் நாம் படித்த வைரவரிகள்
1966 ஆம் ஆண்டில் நவீன தமிழ் இலக்கிய உலகையே விழியுயர்த்திப்பார்க்க வைத்த வரிகள்.
அதனை ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் தனது அக்கினிப்பிரவேசம் சிறுகதைக்காக எழுதியிருப்பார்.

விக்கிபீடியா வில் வந்த ஒரு உண்மை மனிதரின் கதை - பாலம் கல்யாணசுந்தரம்

.



பாலம் கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகத்து 1940) நூலகரும்சமூக சேவகரும் ஆவார். பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார்.[1]. ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.
கல்யாணசுந்தரம் திருநெல்வேலிமேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940 ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர்.[2] செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் அதிலே பிடிவாதமாக இருந்தார். பின்னர் கருமுத்து தியாகராஜ செட்டியார் பணம் கொடுத்துப் படிக்க உதவினார்[3]. 1963ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது இந்திய சீனப் போரின் போது சவகர்லால் நேருவின் வானொலிப் பேச்சைக் கேட்டு தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் மைனர் தங்கச் சங்கிலியை காமராசரிடம்கொடுத்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி 1998 இல் ஓய்வு பெற்றார்.

ஒரு புளியமரத்தைச்சுற்றி நடந்த கதை ! அரைநூற்றாண்டுக்குப்பின்பும் பேசப்படும் கதையாக்கிய மெல்பன் வாசகர் வட்டம் ! ! சுந்தர ராமசாமியின் படைப்பாளுமையும் தீர்க்கதரிசனமும்! ! ! - முருகபூபதி


இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழகத்தின் நாகர்கோயிலில் விருட்சமாக வளர்ந்து நின்ற ஒரு புளியமரத்தைச்சுற்றி நிகழும் கதையை இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் சுந்தரராமசாமி.
இக்கதை விஜயபாஸ்கரன் சிறிது காலம் நடத்திய சரஸ்வதி இதழில் தொடராக சில அத்தியாயங்கள் வௌிவந்தது. சிற்றிதழ்களுக்கு வழக்கமாக நேர்ந்துவிடும் இழப்பிலிருந்து அந்த சரஸ்வதியும் தப்பவில்லை.
அதனால், சுந்தரராமசாமி அதனை முழுநாவலாகவே எழுதி முடித்து 1966 இல் வெளியிட்டார். அதன் முதல் பிரதி வெளியானபோது கல்கி இதழில் சிறந்த நாவல்களின் வரிசையில் ஒரு புளியமரத்தின் கதை பற்றிய சிறிய அறிமுகத்தை படித்திருக்கின்றேன்.
அப்பொழுது நான் பாடசாலை மாணவன். உடனே அதனை  கொழும்பில் வாங்கி வாசித்தேன். அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், காட்சிகள் மனதில் மங்கிப்போன சித்திரமாகவே வாழ்ந்தன. அதில் வரும் ஆசாரிப்பள்ளம் சாலையை ஏனோ மறக்கமுடியவில்லை.
அதன்பின்னர் சுந்தரராமசாமியின் கதைகள், நாவல்கள், கட்டுரைகளையும் நேர்காணல்களையும் படித்திருந்தாலும், அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை கனவாகவே மனதில் நீண்டிருந்தது.
மெல்பன் வாசகர் வட்டத்தை கடந்த இரண்டு வருடகாலமாக ஒருங்கிணைத்துவரும் தீவிர இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவகுமார், தொலைபேசியில் அழைத்து,  “இந்த மாதம் சு.ரா.வின் புளியமரத்தின் கதை பற்றி பேசப்போகின்றோம் “ எனச்சொன்னதும் வியப்படைந்தேன்.