மரண அறிவித்தல் - இரத்தினபூபதி கதிரையாண்டி

.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் Strathfield, Sydney, Australia வை வசிப்பிடமாகவும் கொண்ட "அத்தை" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இரத்தினபூபதி கதிரையாண்டி 08.12.2016 வியாழக்கிழமை அன்று காலமானார் . அன்னார் முன்னால் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி தலைமை ஆசிரியர் அமரர் கதிரையண்டியின் அன்பு மனைவியும், Dr.வாமதேவன், அமரர்களான  மகாதேவன், சற்குருநாதன், சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், இரத்தினராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஸ்ரீதேவி ராதாகிருஷ்னன், ஸ்ரீரஞ்சன், தேவகி, சுரேஷ், கீதா, துஷ்யந்தன் ஆகியோரின் பண்பான மாமியாரும் ஆவர் . அன்னாரின் பூதவுடல் Rookwood  South Chapel மயானத்தில் 10.12.2016 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக் கிரிகைகள் நடைபெற்று பின்னர் மதியம் 12 மணிக்கு தகனம் செய்யப்படும் . இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் . 

தகவல் :

ராதாகிருஷ்னன் : +61402001261

ஸ்ரீதேவி             : +61296460337

ஸ்ரீரஞ்சன்          : +61404847441

சுரேஷ்               : +61412839169

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

.

கவிஞர் இன்குலாப் 


ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் 
பறவைகளோடு எல்லை கடப்பேன் 
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் 
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் 

நீளும் கைகளில் தோழமை தொடரும் 
நீளாத கையிலும் நெஞ்சம் படரும் 
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் 
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் 

கூவும் குயிலும் கரையும் காகமும் 
விரியும் எனது கிளைகளில் அடையும் 
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் 
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! 

எந்த மூலையில் விசும்பல் என்றாலும் 
என் செவிகளிலே எதிரொலி கேட்கும் 
கூண்டில் மோதும் சிறகுகளோடு 
எனது சிறகிலும் குருதியின் கோடு! 

சமயம் கடந்து மானுடம் கூடும் 
சுவரில்லாத சமவெளி தோறும் 
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன் 
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!

முத்தமிழ் மாலை 2016 இசை நிகழ்வு

சனிக்கிழமை 03 12 2016  இரவு Black town Bowman Hall  மண்டபத்தில் Australian Medical Aid Foundation  வழங்கிய முத்தமிழ் மாலை  2016 நிகழ்வில் இன்னிசை மாலை நிகழ்வு இடம்பெற்றது மெல்பேர்ன் நிரோஷன் சத்தியமூர்த்தியின் புதிய பூபாளம் இசைக்குழுவினரின் இசை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்காக இலங்கையின் சக்தி தொலைக் காட்சியின் 2014 ஆண்டுக்கான   "ஜூனியர் சுப்பர் ஸ்டார்"  விருதினைத் தட்டிக் கொண்ட செல்வி வைசாலி யோகராஜனும் கர்நாடக இசைப்பாடகியும் வைசாலியின் தாயாருமான ஸ்ரீமதி நீதிமதி  யோகராஜனும் சிறப்பு பாடகர்களாக வருகை தந்து பாடல்களை பாடினார்கள் . இவர்களோடு உள்ளூர் இசைக்கலைஞர்களும்  இணைந்து அருமையான பாடல்களை பாடினார்கள் . பாடல்கள் முடியும் வரை ரசிகர்கள் இருந்து பார்த்தார்கள்.  வைசாலி  "ஜூனியர் சுப்பர் ஸ்டார்"  விருதினைத் தட்டிக் கொண்டபோது பாடிய பாடலான   “என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே”  என்ற பாடலைப் பாடியபோது சபை அதிர கரவொலி எழுந்தது. 

ATBC யின் அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள்

.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்  அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு டிசெம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மாலை  ஏழு மணிக்கு Toongabbie Community மண்டபத்தில் நடை பெற்றது . வழமை போல் நான்கு நடுவர்களை கொண்டு  பார்வையாளர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதலில் 10 வது பரிசுக்கான சீட்டுளுப்பில் ஆரம்பித்து  பலத்த கரகோசத்தின் மத்தியில் 1 வது பரிசுக்கான சீட்டுளுப்புடன் நிகழ்வு  நிறைவடைந்தது. இயக்குனர்களில் ஒருவரான சிவசம்பு பிரபாகரன் அறிவிப்பாளர்கள் தொண்டர்கள் நேயர்கள் மற்றும் இந்த சீட்டுக்களை வாங்கி ATBC யின் வழர்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவடைந்தது. பரிசு பெற்றவர்களோடு  நிர்வாகம் தொடர்பு கொண்டு பரிசில்களை வழங்க உள்ளது .

பரிசு விபரம் 

1 வது பரிசு இலக்கம்   1550
2 வது பரிசு இலக்கம்   1563
3 வது பரிசு இலக்கம்   2568
4 வது பரிசு இலக்கம்   2748
5 வது பரிசு இலக்கம்   1625
6 வது பரிசு இலக்கம்   1829 
7 வது பரிசு இலக்கம்   1103
8 வது பரிசு இலக்கம்  1882
9 வது பரிசு இலக்கம்   1518
10 வது பரிசு இலக்கம்  1059

தொடர்புகளுக்கு ஈசன் கேதிசன் தொலைபேசி 0409 407 684


அழிவை நோக்கி அவுஸ்ரேலியாவின் அதிசய பவழப்பாறைகள்


.
உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ஒன்று.கடலுக்கு அடியில் அதன் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக்கவரும்.ஆனால் இதுவரை இல்லாத வகையில் அது பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு முடிவுவொன்று கூறுகிறது.நீரின் வெப்பம் உயர்வதால் சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பவழப்பாறைகள் அங்கு அழிந்துள்ளன.

விஞ்ஞானிகளுடன் சென்று நீருக்கு அடியில் இருக்கும் நிலையை பார்க்க பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு கிடைத்தது.
விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இலங்கையில் பாரதி --- முருகபூபதி

.


( முக்கிய  குறிப்பு:   இலங்கையில்  பாரதி  என்னும்  எனது இந்தப்புதிய  தொடர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த நவம்பர்  மாதம் முதல்  வெளிவரத்தொடங்கியிருக்கும் காலைக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாகின்றது.  புகலிட வாசகர்களின் கவனத்திற்காக இங்கு மீள் பதிவாகின்றது. இதனைப்படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதன் மூலம்  இத்தொடர் நூலுருவாகின்ற சமயத்தில்  மேலும்  செம்மையுறலாம்.)
முன்னுரை
எனது பால்யகாலத்தில் ஆரம்பப்பாடசாலையிலும் வீட்டிலும் கேட்டு ரசித்து பாடிய பாடல்கள் பாரதியிடமிருந்தே  தொடங்கியது. குறிப்பாக ஓடிவிளையாடு பாப்பா, தீராதவிளையாட்டுப்பிள்ளை என்பனவற்றின் ஆழ்ந்த அர்த்தம் புரியாமலேயே பாடியிருக்கின்றேன். மனனம் செய்துள்ளேன்.
எனது அக்கா, நடனம் பயின்றவேளையில் தீராதவிளையாட்டுப்பிள்ளைக்கு  அபிநயம் பிடித்து ஆடியபோது ரசித்திருக்கின்றேன். இவ்வாறுதான் எனக்கு மகாகவி பாரதியிடத்திலான உறவும் ஈர்ப்பும்  படிப்படியாகத்தொடங்கியது.
பாடசாலை நடத்திய பேச்சுப்போட்டியில் வகுப்பு ஆசிரியை எழுதிக்கொடுத்த பாரதி பற்றிய உரையை மனனம் செய்து ஒப்புவித்திருந்தாலும்,  பாரதியின் ஞானத்தை கண்டறிவதற்கு எவரும் துணைக்கு வரவில்லை.

துபாயில் டிசம்பர் 9-ஆம் தேதி எஸ்.பி.பி. 50 சிறப்பு இசை நிகழ்ச்சி

.


துபாய் : துபாயில் டிசம்பர் 9-ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பங்கேற்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி துபாய் டூட்டி பிரி டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. 
எஸ்.பி.பியின் 50 ஆண்டு கால இசைப்பயணத்தை நினைவு கூறும் வகையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாயில் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. 
அமீரக ரசிகர்களை தனது குரல் வளத்தால் கட்டிப்போட்டுள்ள எஸ்.பி.பி பங்கேற்கும் இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் கே.எஸ். சித்திரா, எஸ்.பி. சைலஜா, எஸ்.பி. சரண், ஸ்வேதா மோகன் மற்றும் கார்த்திக் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 
இந்திய திரையுலகுக்கு தனது குரல் வளத்தால் மிகப்பெரிய பங்களிப்பினை அளித்துள்ள எஸ்.பி.பி-க்கு இந்த நிகழ்ச்சி மேலும் கௌரவம் சேர்க்கும் வகையில் அமையும். ஒவ்வொரு பாடகரும் தனக்கு பிடித்த எஸ்.பி.பியின் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்த இருக்கின்றனர். 
தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார் எஸ்.பி.பி. 
இப்படிப்பட்ட சாதனை நாயகனின் இசை நிகழ்ச்சியைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை பெற 056 7605166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.   

கவி விதை - 19 -- விழி மைந்தன் --

.
சுழன்றும் ஏர்ப்பின்னது  உலகம் 



அந்த ஊரின் மத்தியில் என்றும் பசுமையாக நின்றது, வானுற ஓங்கி   வளர்ந்திருந்த ஓர் அரச மரம். அரச மரத்தின் கீழே, பெரும்பாலான நேரம்  மரத்தைப் போலவே அசையாமல், நேர்கொண்ட பார்வையுடன் வீற்றிருந்தார் ஒரு சாமியார்.

மரத்தின் வயசு அவ்வூரில் யாருக்கும் தெரியாது.  சாமியாரின் வயதும் தெரியாது.

அவ்வூரில் இருந்த  முதியவர்கள், தாம் பிறந்த காலத்திலிருந்தே அவர் அங்கே  இருந்ததாகச் சொன்னார்கள். தம் தகப்பன்  பாட்டன் கூட அரசமரத்தடிச் சாமியாரைப் பற்றிக் கூறியிருந்ததாகவும்  சொன்னார்கள். அப்படிச் சொன்ன முதிவர்களில் பலர் இப்போது போய் விட்டார்கள். சாமியார் இன்னும் அங்கேயே இருந்தார்.

சாமியாரின் தோற்றம் கொஞ்சம் முதியவர் போலவே   இருந்தது.  ஆனால்  அவரது முதுமை  அதிகரித்து வந்ததற்கான அறிகுறி  எதுவுமில்லை. பெரும்பாலும் நரைத்திருந்த தலையிலும்  நீண்ட தாடியிலும்  மிஞ்சியிருந்த கறுப்புக் கேசங்கள் பல தசாப்தங்களாக அப்படியே  இருந்தன. சுருங்கியிருந்த கண்களில் இருந்த தீட்ஷண்யமும்  கொஞ்சமும் குறைவதாக இல்லை.

துர்க்கை அம்மன் ஆலய இராப்போசன ஒன்றுகூடல் 11 12 2016

துர்க்கை அம்மன் ஆலய நிதி உதவி இராப்போசன ஒன்றுகூடல்  11 12 2016
6 மணிக்கு துர்க்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபத்தில் இடம் பெறுகின்றது.


கவிஞர் இன்குலாப் மறைவு - தமிழ்முரசின் அஞ்சலி

.
தமிழக உழைக்கும் மக்களின் மகத்தான கவிஞர் இன்குலாப் 1.12.2016 இயற்கையோடு கலந்தார். உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் காலமானார்.



உலகச் செய்திகள்


துருக்கியில் பயங்கர தீ : பாடசாலை மாணவிகள் உட்பட 12 பேர் பலி

பிரபாகரனின் ஆசை என்ன? ; வைகோ சொல்லும் இரகசியம்

ஜேர்மனியின் இன்றைய‌ தொழில்நுட்பமும் எதிர்காலமும்

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : தமிழகத்தில் பரபரப்பு 



துருக்கியில் பயங்கர தீ : பாடசாலை மாணவிகள் உட்பட 12 பேர் பலி

30/11/2016 துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OM SAI RAM "SUFI MUSICAL EVENING" 10 12 2016

.

ஒரு சகாப்தம் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது.....அப்துல் ஹமீத்

.

எங்கள் தாய்வீடாகிய இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' என அழைக்கப்பட்டவர்கள் பலருண்டு.
ஆனால் ஒரே ஒரு 'வானொலி அக்கா' மட்டுமே இருந்திருக்கிறார்.
அவரும் இன்று மறைந்துவிட்டார் என்ற இழப்புச்  செய்தி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து நம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை......
கவி பாரதி, 'புதுமைப்பெண்ணை' வர்ணித்த இந்த வரிகளை நினைக்குந்தோறும், எமது மனக்கண்ணில் தோன்றும் உருவத்தின் பெயர்தான்-
"பொன்மணி குலசிங்கம்"
1960 ம் ஆண்டு 'சிறுவர் மலர்' நிகழ்ச்சிக்குப் போனபோது அந்நிகழ்ச்சியின் 'நிலையத் தயாரிப்பாளராக' அவரை சந்தித்த நாள்முதல் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் வந்தபின்னும்.....  ஏன் கடைசியாக அவுஸ்திரேலியாவில், நடைதளர்ந்த நிலையில் ( ஆனால் கம்பீரம் சற்றும் குறையாத நிலையில்) சந்தித்தபோதும், அந்த அன்னையை 'அக்கா' என்றுதான் உரிமையோடும் பாசத்தோடும் அழைத்திருக்கிறேன்.

இலங்கைச் செய்திகள்


  'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் :  9 வருடங்களின் பின்  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்

'வாழும் உரிமையை பறிக்காதே'  : கண்டியில் ஆர்ப்பாட்டம்

 கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோஷம்

கருணாவுக்கு விளக்கமறியல்

கரு­ணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கில் பல கொலை­களை செய்தேன்.!

 பாராளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்?

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை : 32ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு!



உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் ! - எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ...

.
image1.JPG

  உடல்குறையை உளமிருத்தா
         ஊக்கமதை உளமிருத்தி
         செயற்கரிய பலவாற்றி
          திறலுடனே விளங்கிநின்று 
          நலமுடனே இருக்கின்றோம்
          என்றுலகை வியக்கவைக்கும் 
           மாற்றுத்திறன் மிக்காரை
           மனமார வாழ்த்திநிற்போம் !

           ஆண்டவன் படைப்பினிலே
           அரைகுறையாய் பிறந்தாலும்
           ஆண்டவனே வியந்துநிற்க
            அவர்செயல்கள் ஆற்றுகிறார்
            வேண்டாதார் எனவொதுக்கும்
             நிலையதனைத் தகர்த்தெறிந்து
             வியக்கவே  வைத்துநிற்கும்
             மேனிலையை வாழ்த்திடுவோம் !

            ஊனமுற்றார் எனவழைக்கும்
            வார்த்தைதனை பொய்யாக்கி
            வானமென உயர்ந்துநின்று
             வகைதொகையாய் பலவாற்றி 
             தேர்ந்தெடுத்த வாழ்க்கைதனை 
             சிறப்புடனே வாழவெண்ணி
              சீராகவாழும் அவர்
              செம்மையினை வாழ்த்திடுவோம் !

ஞானா கானம் 10 12 2016

.





இன்குலாப் பேசுகிறார்-- நான் இன்குலாப் ஆனேன்...

.

நான் இன்குலாப் ஆனேன்...
மத்தியக் கிழக்கு ஆசியாவில் இன்குலாப் என்ற சொல், காலனியத்துவத்தை எதிர்த்து போராடக்கூடிய மக்களுடைய சொல்லாக இருந்தது. தமிழ்நாடு, இந்தியா எனும் எல்லைகளைத் தாண்டியும் போராடும் மக்கள் உச்சரிக்கும் பொதுச் சொல்லாக ‘இன்குலாப்’இருப்பதால் என் மகனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினேன்.
ஒரு கவிஞனாக அந்தப் பெயரை நண்பர்கள் எனக்குப் பரிந்துரைத்தபோது, அந்தப் பெயருக்கு நான் தகுதியுடையவனா என்பதில் தயக்கமும் அச்சமும் இருந்தது. அதற்குரிய புரட்சிகரமான வாழ்க்கையை இன்றும் என்னால் அமைத்துக்கொள்வதற்கு இயலவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை எனக்கு லட்சியமாக இருந்தது. நண்பர்கள் அந்தப் பெயரைப் பாதுகாப்பானது இருக்கட்டும் என்று கூறினார்கள். ஆனால், அந்தப் பெயரிலேயே என்னுடைய ‘விடியல் கீதங்கள்’ கவிதைகளை நண்பர்கள் வெளியிட்டும்விட்டார்கள். அதனால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
என்னைச் செதுக்கியவர்கள்
ஒருவகையில் நான் பள்ளிக்கூடத்தில் உருவாக்கப்பட்டவன். பள்ளியில் உள்ள பாடங்களால் அல்ல. ஆசிரியர்களுடைய சிந்தனை முறைகளினால்தான் நான் ஈர்க்கப்பட்டேன். சங்கரவள்ளிநாயகம் என்ற ஆசிரியர் என் வகுப்புக்கே வந்தது கிடையாது. ஆனால், விழா நாட்களில் அவர் மேடையில் சிறப்பாகப் பேசுவார். அவர் நிகழ்த்திய உரைகள் என்னை மாற்றின. இப்படிதான் சுப்பையா என்ற ஆசிரியர் எனது தன்மான உணர்வை வளர்த்தெடுத்தார்.

'கிட்டுவின் தியாகம், ரசிகர்களை ஈர்த்ததா..?' - மாவீரன் கிட்டு விமர்சனம்

.


கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்சியும்தான் மாவீரன் கிட்டுவின் கதை. 
கதை முழுக்கவும் 1987ல் நடக்கிறது. பொதுவழியில் பிணத்தைக்கூட கொண்டு செல்லவிடாமல் தடுக்கிற ஆதிக்கசாதியினர் ஒருபக்கம், கல்விகற்று முன்னேறி தங்களுடைய வாழ்வை மாற்றிக்கொள்ள துடிக்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இன்னொருபக்கம். என்றாவது ஒருநாள் அந்தப் பொதுவழியில் நிமிர்ந்து நடப்பது ஒன்றுதான் ஒடுக்கப்பட்டமக்களின் ஒரே லட்சியம். 
பனிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, முதல்தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்குச் செல்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைசேர்ந்த விஷ்ணு விஷால்.அவரை படிக்கவைப்பவர் ஊர்மக்களின் பிரச்னைகளுக்கெதிராகவும் குரல்கொடுக்கும் பார்த்திபன். தம் மக்களின் நிலை மாற வேண்டுமானால், விஷ்ணு விஷால் படித்து கலெக்டராக வேண்டும் என்ற பார்த்திபனின் வார்த்தைகளை சிரமேற்கிறார் விஷ்ணுவிஷால்.  

சிறைபட்ட மழை..வித்யாசாகர்

.

ழைபெய்த மறுநாள்
சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும்
இன்று பள்ளிக்கூடம் உண்டென்று..
விடாது பெய்த பேய்மழை
அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல
ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்..
தெருவோரம் தவளைமீன்கள்
பாதி இறந்திருக்கும், தவளைகள்
மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்..
சாலையோரமெலாம் தேங்கிய நீரில்
முகமெட்டிப் பார்த்து, காலலைய – விடுமுறை
விடாத மழையை மிதித்தவாறே செல்வோம்..
வேலிமுள் துளிர்களை
சாலையோர புங்கைமரக் கிளைகளை இழுத்துஇழுத்து
இலையுதிரும் மழைத்துளியை நெஞ்சுக்குள் சேமிப்போம்..
பச்சைபசேல் மரந் தாண்டி தாண்டி
உதிர்ந்தப் பூ வாசம் கடந்து
உள்ளே தேசியகீதம் ஒலிக்கத் துவங்கும்..

தமிழ் சினிமா


கவலை வேண்டாம்



ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் கவலை வேண்டாம். இப்படம் ஜீவா-காஜலுக்கு ஹிட் கொடுத்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஜீவா-காஜல் ப்ரேக் அப்புடன் தொடங்குகின்றது. ஜீவா சொந்த ஊரில் இதையெல்லாம் மறந்து நண்பர்களுடன் ஜாலியாக இருக்கின்றார்.
காஜல் தன் ஸ்டேட்டஸுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக பாபி சிம்ஹாவை தேர்ந்தெடுக்கின்றார், அதற்காக ஜீவாவிடம் விவாகரத்து வாங்க செல்கின்றார்.
நண்பர்கள் கொடுக்கும் யோசனையால் ஜீவா ஒரு வாரம் என்னுடன் மனைவியாக சேர்ந்து வாழ் என்று சொல்ல, அதன் பிறகு காஜல் எடுக்கும் முடிவு என்ன? என்பதே இந்த கவலை வேண்டாம்.

படத்தை பற்றிய அலசல்

ஜீவா இது தான் நம்ம ரூட்டுன்னு பல வருஷம் கழிச்சு பிடிச்சிருக்கிறார். பெரும்பாலும் என்றென்றும் புன்னகை சாயல் நிறையவே தெரிகின்றது, என்ன சந்தானம் மட்டுமே மிஸ்.
காஜல் முதன் முதலாக படம் முழுவதும் ‘நடித்துள்ளார்’. ஆம், வெறும் பாட்டு மட்டுமில்லாமல் தன் குண்டு கண்களை உருட்டி ரசிகர்களை கவர்ந்து செல்கின்றார்.
பாலாஜி போன வாரம் என்ன பார்த்தோம், கடவுள் இருக்கான் குமாரு, அந்த வசனத்தின் அப்கிரேட் தான் இந்த கவலை வேண்டாம். சந்தானத்தை மிஸ் செய்கின்றோமோ என தோன்ற வைக்கின்றது.
படம் அடல்ட் ஒன்லீ என கூறிவிடலாம், ஏனெனில் பல இடத்தில் கத்திரி விழுந்துள்ளது. அதிலும் போலிஸ் ஸ்டேஷனில் செய்யும் அட்டகாசம் சிரிப்பு கேரண்டி.
படத்தின் ஒளிப்பதிவு ஏதோ பாலிவுட் படம் போல் உள்ளது. கலர்புல்லாக இருக்க, அனைவரும் அழகாகவும் நடித்துள்ளனர், லியோன் ஜேம்ஸ் இசையும் ரசிக்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்

ஜீவா-காஜலின் கலர்புல் ஜோடி.
மயில்சாமி எல்லாம் நிறைய கதாபாத்திரம் கொடுங்கப்பா..என்று கூறும் அளவிற்கு கலக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாதி, ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

கொஞ்சம் இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது போல் பீலிங்.
பாபி சிம்ஹா உங்களுக்கு என்ன தான் ஆச்சு?
மொத்தத்தில் எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் ஒரு முறை கவலையை மறந்து ஜாலியாக சென்று வரலாம்.
Direction:
Production:
Music:

நன்றி  cineulagam