மரண அறிவித்தல் - திருமதி பானு பத்மஶ்ரீ

.

மரண அறிவித்தல்



திருமதி பானு பத்மஸ்ரீ

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி பானு பத்மஸ்ரீ அவர்கள் 07 /01/2020 செவ்வாய் கிழமையன்று சிட்னியில் இறைவனடி  சேர்ந்தார்.

 அன்னார் பத்மஸ்ரீ மகாதேவா (பப்பு) அவர்களின் ஆருயிர் மனைவியும், அபிசாயினியின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னபூரணி வைரவநாதன் தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தன், திருமதி புனிதவதி (கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான  மகாதேவா, பரமேஸ்வரி தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,

சண்முகலிங்கம், திலகவதி, காலஞ்சென்ற
Dr அமிர்தவதி மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகளும்

பவானி, சங்கர், சாந்தா, Dr துளசி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயராம் கனகரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ராஜ்குமார், பவானி, சாமுவேல், ஜெகதீசன், உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, குகஸ்ரீ, லயஸ்ரீ ஆகியோரின் மைத்துனியும்,

Dr தீபிகா, மதுமிதா, பவுஸ்ரின், மேர்சின், அபிலாஷ், அபிஷான் ஆகியோரின் சிறிய தாயாரும்,

அபிதேவ், அபிநயனி ஆகியோரின் பெரியம்மாவும்,

நரேஷ், ஷனாயா, Dr. அபிஷேக், Dr. அபிராம், அபினேஷ்  ஆகியோரின் அன்பு அத்தையும்,

யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட 88ம் வருட முன்னாள் மாணவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்

11/01/2020 சனிக்கிழமை அன்று மதியம் 12.30 – 1500 மணிவரை பார்வைக்காக Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi and Plassey Rd, North Ryde இல் வைக்கப்பட்டு  பின்,

12/1/2020 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 - 12 மணிவரை Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi and Plassey Rd, North Ryde இல் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் - பத்மஸ்ரீ மகாதேவா (பப்பு)   +61 416 102 294

எரிந்து காயும் அவுஸ்திரேலிய காடுகளும் ஈரமான மனங்களும் - செ .பாஸ்கரன்

.
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

தீயில் தனது பயணம் தடைப்பட்டு மூன்று நாட்கள் அந்த மக்களுடன் 
வாழ்ந்த ஈசன் கேதீசன் ( ATBC நிர்வாகிகளில் ஒருவர்) எழுதிய குறிப்பு 
கீழே ஆங்கிலத்தில் தரப்படுகிறது. 



பாரதியின் பாடல் 
"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" 

தன் உக்கிரகங்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இன்று அவுஸ்திரேலிய மண்மாதாவின் காடுகளையும் வீடுகளையும் நக்கித் துடைத்துக்கொண்டிருக்கிறது அக்கினிக் குஞ்சு. பல்லாயிரம் வீரர்கள் இரவு பகல் பாராது நீரோடும் நெருப்போடும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உலகக் கழிவுகளால் ஓட்டை விழுந்திருக்கும் வான்பரப்பினூடாக வைடடமின்களை கொடுக்கும் சூரியக் கதிர்கள் வெப்பத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றது. நீலவானம் என்று பார்த்து ரசித்த வான்மண்டலம் புகையும் நெருப்பும் கலந்து அஸ்மா நோயினை அள்ளித் தெளிக்கிறது. எங்கும் நெருப்பின்  அனர்த்தம் பற்றிய பேச்சு. கிசுகிசுக்களை கொளுத்திப் போட்டுக்கொண்டிருந்த ஊடகங்களெல்லாம் காட்டுத்தீயைக் காட்டுவதற்கே நேரமின்றி தவிக்கிறது. அடுத்த தீ எங்கு பற்றப் போகிறது என்று தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டுவிட்டது. சொத்துக்கள் தீயில் கருகும்போது ஒரு மனித உயிர், ஒரு விலங்கு அல்லது ஒரு பறவை இறந்து விடக் கூடாது என்பதற்காக தம் உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்கு தலை சாய்த்து வணங்குகிறோம். இன்று 45 பாகை வெய்யில் என்று ஆரவாரப்பட்டு குளிரூட்டியை போட்டுவைத்து அதுவும் காணாது இது என்ன கொடுமை என்று முணுமுத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்தான் அந்த வீரர்கள் காட்டுத்தீயின் உக்கிர ஜுவாலைக்கு முன்னின்று எம்மைத் தீ அண்டாமல் தடுக்கின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய தியாகம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

அதி உயர் வெப்ப நிலைக்கு முகம் கொடுக்கும் ஆஸி - கான பிரபா



சைவ மன்றம் சேகரித்த $21,000ஐ நியூ சவுத் வேல்ஸ் தீ அடைப்புப் படைக்கு அன்பளித்தது



நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது.
இந்த காட்டுத்தீயில் இதுவரை இரண்டு தீயணைப்பு வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலா கரடிகள் தீயில் கருகி செத்ததாக  பாராளுமன்றம் சமீபத்தில் கூறியது.

பெருமை ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா


  சான்றோனாய் தனயன் வந்தால்
 
தந்தைக்கு நற் பெருமை
 
தலைவனாய் பிள்ளை வந்தால்
 
தாய்க்கு நற் பெருமை
 
சான்றாண்மை யோடிருப்பின்
 
சகலருக்கும் பெருமை
 
சரித்திரத்திரத்தில் நிற்பதே
 
சாதிப்பார் பெருமை


  ஓயாமல் உழைத்து நின்றால்
  உழைப்புக்கே பெருமை
  உலகுக்கு உதவிவிடின்
  உயர்திடும்உன் பெருமை
  வீழாமல் இருந்துவிடின்
  வீரத்துக்கே பெருமை
  வாழ்நாளை வளமாக்கு
  வாழ்வுதரும் நல் பெருமை

'அமிர்த வருஷினி' - அன்பால் உயர்த்தினர் சிட்னித் தமிழர்கள்


அருள்: "தொடர்புடையார் மாட்டு பாராட்டுவது அன்பு தொடர்பிலார் மாட்டு பாராட்டுவது அருள்.
தொடர்பு பற்றாது இயல்பாக எல்லாவுயிர் கண்மேலும் செல்வதாகிய கருணை" - பரிமேலழகர்

அமிர்த வருஷினி 
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்
பல வாரங்களாகக் காடு தீய்ந்தெரியும் நிலையில்,
இயற்கையையும் விலங்குகளையும் மக்களையும் மனைகளையும்
காக்கும் பணியில், தம்மைப் பூரணமாக அர்ப்பணித்து செயற்பட்டுவரும்
நியூ சவுத் வேல்ஸ் புறநகர் தீயணைப்புப் படையினரை வாழ்த்தி வணங்கும் நிகழ்வு!
இவ் அமிர்த வருஷினியானது, இப்படையினருக்கான நிதியுதவி  வழங்கும் நிகழ்வாக - இராப்போசனம் ஒன்றை,
சிட்னிவாழ் தமிழ்ச் சமூகத்தினரை, மிகவும்  குறுகிய காலப்பகுதியில் அழைத்து,
சென்ற சனிக்கிழமை நான்காம் திகதி மாலை நடாத்தாயிருந்தனர் அவுஸ்திரேலியக் கம்பன் கழத்தினர்.
"இந்நிகழ்வு சிறப்புற - காலத்தின் தேவைகருதி அமைக்கப்பட்டிருந்ததும், மக்கள் அனைவரும் நன்கு  ஒத்துழைத்து,
உதவியிருந்தார்கள்" எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

கடவுள் வாழ்த்து
'உலகம் யாவையும்...' எனும் கம்பனின் கடவுள் வாழ்த்தை, செல்வி ப்ரணீத்தா பாலசுப்பிரமணியன் இசைக்க,
இந்நிலத்தில் வாழவழிதந்த 'தரூக்' பூர்வகுடிமக்களுக்கு நன்றி கூறி;
தொடர்ந்து, தேசிய மற்றும் பூர்வகுடி மக்களுக்கான கொடிகளை,
வருகை தந்திருந்த தீயணைப்புப் படைத் தொண்டர்கள் ஏற்றி வைக்க,
நல் எண்ணத்தோடு தொடங்கியது 'அமிர்த வருஷினி'. 
நிகழ்வுகளைச் சிறப்புற ஒருங்கிணைத்திருந்தார் கம்பன் கழக உப தலைவர் செல்வி பூர்வஜா நிர்மலேஸ்வரக் குருக்கள்.

சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் நடவடிக்கை அவசியம்


04/01/2020  அரசியலமைப்பில்  திருத்தங்கள் செய்யப்படும்,  நிலையான பாராளுமன்றம்  அமைக்கப்படும்  என்றும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் அவசியம் எனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ   தெரிவித்திருக்கின்றார்.  எட்டாவது பாராளுமன்றத்தின்   நான்காம்  கூட்டத் தொடரை   நேற்றைய தினம்   ஆரம்பித்து வைத்து  ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரையிலேயே  இவ்வாறு   தெரிவித்திருக்கின்றார். 
ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர  நிலைமைக்கு   அரசியலமைப்பு சட்டமே காரணமாகும்.  1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட  எமது அரசியலமைப்பில்  உள்ள  உறுதியற்ற தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன.  எமது நாட்டின் பாதுகாப்பு,  இறையாண்மை,  நிலைப்பாடு   மற்றும்  ஒற்றையாட்சியை   பாதுகாப்பதற்கு  தற்போது இருக்கின்ற   அரசியலமைப்பில்   சில மாற்றங்களை செய்யவேண்டும்.   விகிதாசார   தேர்தல் முறையில்  உள்ள  சிறந்த  விடயங்களை  பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளையில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின்  நேரடி  பிரதிநிதித்துவத்தையும்  உறுதிப்படுத்துவதற்காக  தற்காலிக தேர்தல் முறையில்  மாற்றங்கள்  தேவைப்படுகின்றன என்றும்   ஜனாதிபதி   தனது  உரையில்  சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எப்போதும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றிருத்தல் நன்றல்ல - பரமபுத்திரன்

.




இந்த உலகில் தோன்றி விருத்தி அடைந்த மக்களை இரண்டு வகையுள் மட்டும் அடக்கிவிடலாம். ஒன்று காசுக்காக வேலை செய்பவர்கள். மற்றது காசினைக்கொண்டு வேலைசெய்பவர்கள். இந்த உலகில் காசுக்காக வேலை செய்பவர்கள்தான் அதிகம்பேர் வாழ்கின்றனர். அவர்கள்  எப்போதும் காசுக்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். காசு நிறைந்து விட்டதாய் திருப்தி பெறுவதே  இல்லை. காசு தேவைப்பட்டபடியே இருக்கும்.  வேலை செய்வது அவர்களின் வேலை. எப்போதும் காசு உழைக்க ஒரு வேலை செய்த வண்ணமே இருப்பர். அதாவது வேலைக்குள் தம்மை திணித்து வைத்திருப்பர். அதுமட்டுமல்ல,  ஏதோ ஒரு வகையில் கடனுடன் இருப்பார்கள். அதுவும் பெரும்கடன் அல்ல சிறுகடன். ஆனால் காசினைக்கொண்டு வேலை செய்பவர்களைப் பொறுத்தவரை காசு அவர்களுக்காக வேலை செய்யும். காசுபற்றி எந்தக்கவலையும் அவர்களுக்கு இருக்காது. காசுக்காக வேலை  செய்பவர்கள் அவர்களுக்காக உழைப்பார்கள். காசினைக்கொண்டு வேலை செய்பவருக்கு சிறுகடன் அல்ல பெரும்கடன் இருக்கும். தங்கள் காசை பயன்படுத்தி எல்லோரையும் தமக்காக  வேலை செய்ய வைப்பார்கள். காசுக்காக வேலை செய்பவர்களும், காசினைக் கொண்டு வேலைசெய்பவர்களும் எப்படி பொருளாதார உலகினை  நகர்த்துகின்றது என்று பார்க்கலாம்.

புவி உயிர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்களும் நிறைந்துள்ள இடம். இது கடவுளால் படைக்கப்பட்டதோ இல்லை தானாக தோன்றியதோ என்ற வழக்காடல்களை நிறுத்திவைத்துவிட்டு, சுயமாக சிந்தித்துப் பார்த்தால் பூமியானது ஆற்றல்மிக்கவனாக மனிதனைப்படைத்து, புவி  நிலைத்து வாழ தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என்பவற்றையும் படைத்து, நீர், வளி மற்றும்  பிற வளங்களையும் தந்துள்ளது. ஆனாலும் இந்த வளங்களை ஆளுகை செய்யக்கூடிய மனித ஆற்றலின் கீழ் மற்றவை  கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று  கருத்தல்ல. இருப்பினும்  மனித ஆற்றல் அவற்றை கட்டுப்படுத்திவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.  உண்மையில் மனிதனும் மற்ற உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயற்கையை காத்து, அனுபவித்து வாழந்தால் புவி நிலைக்கும் உயிர்வாழ்வு சுகமாகும். இல்லையேல் மக்கள் அனுபவிக்க கூடிய விளவுகள் என்ன என்று இயற்கை காட்டுகின்றது. அதாவது வெள்ளப்பெருக்கு, வெப்பநிலை ஏற்றம், காட்டுத்தீ, புவிநடுக்கம், வரட்சி போன்றவற்றை குறிப்பிடலாம். இருப்பினும் புவியின் நிலைப்பாடு தொடர்பான எண்ணமின்றியே நாம் வாழ்கின்றோம் என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டிய செய்தி.  


தமிழில் தேசிய கீதம் பாடப்படாதென்பது நாட்டில் இன நல்லிணக்கம், ஐக்கியத்தை ஏற்படுத்த தடைக்கல்லாக அமையும்


01/01/2020  தமிழில் தேசிய கீதம் பாடப்­ப­ட­மாட்­டாது என்ற பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரின் அறி­வித்தல் அர­சியல் அரங்கில் பெரும் வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் உரு­வாக்கி உள்­ளது.
ஒரு ஜன­நா­யக நாட்டின் தேசிய கீதத்தை, அந்த நாட்டின் குடி­மக்­க­ளா­கிய மற்­றுமோர் இனத்­தவர் தமது மொழியில் பாடக்­கூ­டாது. அவ்­வாறு பாடப்­ப­ட­மாட்­டாது. அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஓர் அமைச்சர் அறி­வித்­தி­ருப்­பது ஓர் அர­சியல் கேலிக் கூத்­தா­கவே நோக்­கப்­பட வேண்டும்.

ஏனெனில் தேசிய கீதம் என்­பது பொது­வா­னது. நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது. அனைத்து மக்­களும் சொந்தம் கொண்­டா­டப்­பட வேண்­டி­யது. உரி­மை­யுடன் அதனை நேசித்து, மரி­யாதை செலுத்திச் செயற்­பட வேண்­டி­யதே தேசிய கீத­மாகும்.


அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள், அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருப்­பதன் கார­ண­மாக தேசிய கீதத்தை ஒரு சாரார் தமது மொழியில் பாடக் கூடாது என்று வரை­ய­றுப்­ப­துவும், அதற்குத் தனித்து உரிமை கொண்­டா­டு­வதும் ஏற்­பு­டை­ய­தல்ல. அது தேசி­ய­மா­காது. தேசிய உணர்­வா­கவும் அதனைக் கருத முடி­யாது. மொத்­தத்தில் புனி­த­மாகப் போற்றிப் பாது­காக்­கப்­பட வேண்­டிய தேசிய கீதத்­துக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற அவ­ம­திப்­பா­கவே அதனைக் கருத வேண்டும்.

திருவெம்பாவையும் மார்கழியும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc ,Dip.in Com, M.Phil Edu ,SLEAS முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் .... அவுஸ்திரேலியா

     
    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி -சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்." பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.

சிறு­பான்­மை­யின மக்­களின் மனங்­களை வெல்­ல­வேண்டும்


02/01/2020  புத்­தாண்டுப் பிறப்­புடன் மக்­களின்  மனங்­களில் ஏற்­பட்­டுள்ள   புத்­து­ணர்ச்­சி­யா­னது  புதி­ய­தொரு  தேசத்தை  கட்­டி­யெ­ழுப்பும்   ‘‘சுபீட்­சத்தின்  நோக்கு’’  செயற்­றிட்­டத்தை  இல­கு­ப­டுத்தும் என்­பது  எனது   உறு­தி­யான நம்­பிக்­கையும்  பிரார்த்­த­னை­யு­மாகும் என்று   ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  தெரி­வித்­துள்ளார்.
புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு  அவர் விடுத்­துள்ள   வாழ்த்து செய்­தியில்   பொரு­ளா­தாரம்,  அர­சியல்,  சமூக, கலா­சாரம் மற்றும்  தொழில்­நுட்பம்   ஆகிய அனைத்து துறை­க­ளிலும் புதி­யதோர்  யுகம்  நமது தாய்­நாட்டில்   மல­ர­வேண்டும் என  சகல  இலங்­கை­யர்­களும்  எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற ஒரு தரு­ணத்­தி­லேயே   இந்தப் புத்­தாண்டு  பிறந்­தி­ருக்­கி­றது. அந்­த­வ­கையில்   மலர்ந்­துள்ள   இப்­புத்­தாண்டை  புதிய அர­சாங்கம்    ‘‘ சுபீட்­சத்தின் ஆண்­டாக’’ ஆக்கும்  திட உறு­திப்­பாடு   மற்றும்  அர்ப்­ப­ணிப்­பு­ட­னேயே  வர­வேற்­கின்­றது என்றும் ஜனா­தி­பதி  தனது வாழ்த்து செய்­தியில் கூறி­யி­ருக்­கின்றார்.
இத­னை­விட  நாட்டை நேசிக்கும் மக்­களின் ஐக்­கி­யத்­திற்கு கிடைத்த வெற்­றியே  இந்த புதிய  அர­சாங்­க­மாகும். மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு எதி­ரான எந்­த­வொரு சக்­திக்கும் இந்த நாட்டில்  நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அனைத்து மக்­களும்  ஒற்­று­மை­யா­கவும்  மகிழ்ச்­சி­யா­கவும்  வாழக்­கூ­டிய  சிறந்த சூழலை  நாட்டில் உரு­வாக்­கு­வதே   எமது நோக்­க­மாகும் என்றும் ஜனா­தி­பதி   கோத்­த­பாய ராஜ­பக் ஷ  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

மாபெரும் தைப்பொங்கல் விழா - Paramatta Pongal 2020


எதிர் வரும் தைத்திங்கள் 18ம் நாள் சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் மதியம் 12:00 மணி வரை 
--> Parramatta Centenary Square  இல் இடம் பெறும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உங்கள் எல்லோரையும் புலம்பெயர்ந்தோர் சமூக வள நிலையமும்  --> (Community Migrant Resource Centre) Parramatta    பொங்கல் குழுவினரும் அன்போடு அழைக்கின்றனர்.
-->
Community Migrant Resource Centre இன் பேராதரவோடு 8வது வருடமாக அவுஸ்திரேலிய தமிழ்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ATBC),  சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினர் - அன்பாலயம்  -  கம்பன் கழகம் - தமிழ் முரசு அவுஸ்திரேலியா  - தமிழ் மகளீர் அபிவிருத்தி குழுவினர் (TWDG) இணைந்து நடாத்தும் விழாவில் பங்குபற்ற குடும்பாக வாருங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். 
புல அரசியல் பிரமுகர்களும் தமிழ் சமூக நிறுவனங்களும் பொது மக்களும் இணைந்து கொள்ளும் இந்நிகழ்வினூடாக பாரம்பரிய விவசாய பூமியாகிய பரமற்றாவில் எமது வரலாற்றை நிலை நிறுத்துவோம்.
புலம் பெயர்ந்து வந்த எங்களை வாழ வைக்கும் இந்த புண்ணிய பூமிக்கு நன்றி செலுத்தும் நாளாக இது அமையட்டும்.
உழவர் திருநாள.;... தமிழர் பெருநாள்..... சிறக்கட்டும் பரமற்றா மாநகரில்....





-->