மரண அறிவித்தல்





திருமதி பவளரத்தினம் திருநாவுக்கரசு



மறைவு : 26 - 06 - 2011

ATBC யின் கலை ஒலி மாலை 2011

.
மதன மாளிகையில் என்ற பாடல் இந்துவுடன் இணைந்து ரகுநாதன்



(வீடியோ காட்சியை தந்துதவிய கானா பிரபாவிற்கு  நன்றி - தமிழ்முரசு)


சின்னம் சிறிய வண்ண பறவை ரேகாவுடன் இணைந்து ரகுநாதன்




உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!! (கவிதை)


  .

                                                                                வித்யாசாகர்!!


நீ பிறந்தாய் 
எனக்குள் ஒரு பூ பூத்து
அப்பா எனும் வாசமாய்
உடலெங்கும் கமழத் துவங்கியது..


பின் - நீ வளர வளர
அந்த அப்பாயெனும் வாசத்தால்
நானும் உலகெங்கும் மணம் பரப்பி
மதிப்பால் நிரம்பி நின்றேன்;


இன்றும் -
உன்னிடம் நான் பெற்ற -
பெரும் -
பாடங்கள் ஏராளம், ஏராளம்;

ATBC யின் கலை ஒலி மாலை 2011 என் பார்வையில் - ரசிகா

.
சனி மாலை பழைய பாடல்களை கேட்கும் ஆவலுடனும்
எம் சமூக வானொலியாம்ATBCயை ஆதரிக்கும் நோக்குடனும்
அவசர அவசரமாக ST Benedicts college  ஐ நோக்கி பெருந்திரளான மக்கள் படையெடுத்தனர்.
அதே ஆவலுடன் சென்றவர்களில் நானும் ஒருத்தி. இந்த மண்டபத்தில் ஒரு நிகழ்வை பார்ப்பது இதுவே முதல் தடவை. மண்டபம் நன்றாகவே இருந்தபோதும் அது அமைந்த இடம் ஒரு பிரதான வீதியாக இருந்தமையும் வாகனதரிப்பு போதாமையும் பலருக்கும் விசனத்தை உண்டாக்கியது என்னவோ உண்மைதான். பெரும் திரளாக மக்கள் வந்து மண்டபம் நிறைந்து போதாமைக்கு வாசலில் நின்று கொண்டும் நிகழ்ச்சியை கண்டு களித்துக்கொண்டு இருந்தமை எல்லோருக்கும் பெரிய மன நிறைவை அளித்தது.இது இந்த வானொலிக்கு எம் சமூகத்தில் இருக்கும் ஆதரவை காட்டுவதாக அமைந்திருந்தது. வாகன தரிப்பு போதாமைக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.


மனுஷ்ய புத்திரன் மற்றும் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளுக்கு இயல் விருதுகள்
-
கனடாவில் இருந்து செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் ஒரு வாழ்நாள் சாதனையாளருக்கும் சில தலைசிறந்த நூல்களுக்கும் ஆண்டுதோறும் இயல் விருதுகளை வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டிற்கான விருதுகள் ஜூன்1ஆம் தேதி டொரொண்டோவில் வழங்கப்பட்டதுஇந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும்கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.




ETA யின் உணவுடன் ஒன்றுகூடல்

.


இலங்கை இந்திய செய்திகள்

.

த.தே.கூ தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு: வாசுதேவ _

உடனடியாகத் தேவைப்படுவது தமிழ்ப்பகுதிகளில் இராணுவமயத்தளர்வே


இலங்கையின் இன ஒற்றுமைக்காக அமைச்சர் ராஜித உரைத்த மகா தத்துவம்


தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இன்னொரு பிரபாகரன் வரும் வரை காத்திருக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்தக் கருத்து மிகவும் மரியாதைக்குரியதும், சரியான நேரத்தில் சொல்லப்பட்டதுமாகும். அதிலும் அமைச்சராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியமை அவரின் நேர்மையையும் யதார்த்தமான சிந்தனையையும் எடுத்துக்காட்டும்.

பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் - முருகபூபதி


.
வீரகேசரி முன்னாள் ஆசிரியர் பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம்
தமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்

         

 எண்பது ஆண்டுகால விருட்சம் வீரகேசரி. எத்தனையோ காலமாற்றங்களையும் சந்தித்தவாறு வளர்ந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் இத்தினசரியின் முதல் இதழ் வெளியாகிய 1930 ஆண்டு கடந்து ஐந்து ஆண்டுகளில் பிறந்தவர்தான் திரு. கந்தசாமி சிவப்பிரகாசம்.
 எண்பது அகவையை வீரகேசரி பூர்த்திசெய்யும் இத்தருணத்தில் தமது எழுபத்தியைந்து வயதினை பூர்த்தி செய்துள்ளார் எங்கள் வீரகேரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம். இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக இவர் ‘சிவப்பி;’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில் இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர். ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது முன்னாள் ஆசிரியர். மற்றவர் து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின் முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர்.


மட்டுநகரில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நூல் வெளியீடு


.

மட்டுநகரில் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நூல் வெளியீடு
கடந்த மே மாதம் 21 ஆம்திகதி அவுஸ்திரேலியாவில் வாழும் சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் “சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்” என்ற நூலின் வெளியீட்டுவிழா மட்டக்களப்பு பொதுநூலக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செல்வன். மு.புருN~hத்தமனின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவில் மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் திரு. செ.தவராசா வரவேற்புரை நிகழ்த்தினார்.


பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

பாகம் 4


நன்மை:

நான் சொல்வதெல்லாம் உங்கள் நன்மைககாகத்தான். உங்களை தெய்வீகத்தை உணரவைக்கத்தான். எனது செயல்களும், அறிவுரைகளும், ஆழ்ந்த உள்ளர்த்தம் பொதிந்தவை. நமது கல்லு}ரி மாணவர்கள் அனைவரும் வெள்ளை நிற உடையே யூனிஃபார்ம் ஆக அணிகிறார்கள். அதன் உள்ளர்த்தம் என்ன? வெண்மை து}ய்மையைக் குறிக்கிறது. அதைப்போல யாரையாவது காவி உடையில் பார்த்தால் உனக்குத் துறவுநிலை நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் நீங்கள், து}ய்மையானவர்களாக, எல்லா பந்தங்களையும் விட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியை அறிவிக்கத்தான். ஏனேனில் அப்போதுதான் உங்களால் தெய்வீகத்தை அடையமுடியும்.
சுமைகள்:

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்


.
யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார்.

THE TRIBUTE


.
Date – 2nd July 2011
Time – 7.00pm. Doors open 6.30pm
Venue – C3 Church hall/auditorium, Cnr Egerton & Silverwater road, Silverwater
Tickets – Single $25, Family $45 (admits 4), VIP $50
For details, please contact: Ratheepan 0401 597 906, Janu 0410 458 208





சிலி எரிமலை வெடிப்பு: அவுஸ்திரேலியாவில் விமான சேவை ரத்து


.

சிலியில் எரிமலை வெடித்து சாம்பல்கள் வான்பகுதியில் பரவி வருவதால் வர்த்தக விமானங்கள் அவசரமாக தரை இறங்கின. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர்.

சிலியின் ஆண்டஸ் மலைப்பகுதியில் ஜுன் 4ம் திகதி எரிமலை வெடித்தது. இதன் எரிமலைச் சாம்பல் பரவி வருவதால் அவுஸ்திரேலியாவின் 10 நகரங்களில் இன்று விமானங்கள் அவசரமாக தரை இறக்கப்பட்டன.

எரிமலை சாம்பல் ஆலோசனை மையத்தின் அறிவுரையின் பேரில் விமானங்கள் தரை இறக்கப்பட்டன. சிலி எரிமலை வெடிப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

உலகச் செய்திகள்

டுனீசிய முன்னாள் ஜனாதிபதிக்கு 35 ஆண்டுகள் சிறை

6/21/2011

டுனீசிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜி‌னி-அல்-அபிடின் பென்அலி மற்றும் அவரது மனைவிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்கள் சேர்த்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமா

.
அவன் இவன்

 தாமகன் சீயானை தட்டி ஒட்டியது விஷால் காதாபாத்திரம். சூர்யாவின் சாமர்த்தியத்தை மட்டும் உருவினால் அது தான் ஆர்யா கதாபாத்திரம்.

நந்தா ரா‌ஜ்கிரணை அப்பாவியாக அசமந்தாக காட்டினால் அவன் இவன் ‌ஜி.எம்.குமார். திரையங்கு அதிர அதிர சி‌ரிப்பொலி. இப்படியொரு சி‌ரிப்பொலி கேட்டு நாளாச்சு.



ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்: அமிதாப் பச்சன்


.
கடந்த 2007 ஏப்ரல் 20 ம் திகதி ஐஸ்வர்யா ராய்க்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் இடம்பெற்றது.

திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்க மாமனார் வீட்டில் சம்மதித்ததைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அழகு கெட்டுப் போய்விடும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.