கவிதை - சேத்துவச்ச ஆசை - மெல்போர்ன் அறவேந்தன்

 


முதுபெரும்தமிழறிஞர் அவ்வை நடராசன் நினைவேந்தல்

 மூத்த தமிழ் ஆளுமை அவ்வை நடராசன் அவர்கள் தனது 86 வது


அகவையில் 21.11.2022 இவ்வுலகை விட்டு மறைந்தார் என்ற செய்தி தமிழுலகத்தை மிகுந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழுணர்வாளர்கள், அரசுத் தலைவர்கள் வரிசையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவ்வை நடராசன் அவர்களது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களோடு பழகி, இலக்கியம் பேசித் தொடர்ந்த நட்பைப் பேணிய வாழ்நாள் நட்பு திரு நந்தகுமார் அவர்கள் அவ்வை நடராசனார் குறித்து ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கிய நினைவேந்தலை இங்கு பகிர்கிறேன்.

 

https://www.youtube.com/watch?v=ssZezA8Wc3o

 


 

அவ்வை நடராசன் அவர்களது இழப்பில் துயருறும் குடும்பத்தவர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஐயாவின் ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறோம்.

 

கானா பிரபா

22.11.2022

ரமேஷ் மகரிஷி யுடன் தமிழ் முழக்கம் வானொலிக்காக ஒரு கலந்துரையாடல் - செ பாஸ்கரன்

 .அறிஞர் அவ்வை நடராசன்


நம் வாழ்விலே நாம் எத்தனையோ பேர்களைப் பார்க்கின்றோம்.  பழகுகின்றோம்.  ஆனால் ஒரு சிலரே நம் உள்ளத்தில் அழுத்தமாகப் படிந்து விடுகின்றார்கள்.  என் உள்ளத்திலே அப்படி அழுத்தமாகப் படிந்து விட்டவர் அறிஞர் அவ்வை நடராசன் அவர்கள்.

அவரை முதன் முதலிலே சந்திக்கும் வாய்ப்பு நாம் நியுசிலாந்தின் ஓக்லண்ட் நகரத்திலே வசித்த போது கிட்டியது.  அறிஞர் ஐயா அவர்கள் அங்கு வசித்துக் கொண்டிருந்த தனது மகனைப் பார்க்க வந்திருந்தார்.  தமிழிலே இருந்த பேரார்வம் என்னை அவர்பால் ஈர்த்தது.  அவருடைய தமிழறிவு என்னைப் பிரமிக்க வைத்தது.

அதன் பின் நாம் சிட்னி, அவுத்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து வந்து விட்டோம். அதனால் அவரது தொடர்பு விட்டுப் போயிற்று. 

சிட்னியிலே தமிழ் இலக்கியக் கலை மன்றம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடத்திய


போது அதிலே முக்கிய பங்கேற்று அவர் சிட்னி வந்திருந்தார்.  அவரை மீண்டும் அங்கே பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

அவருடைய அறிவின் வீச்சையும், தமிழின் ஆழத்தையும் அவர் பேசிய பல பேச்சுகளில் இருந்து அறிந்து கொண்டேன்.  இத்தகைய அறிஞர் ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கின்றோமே, அவரது அறிமுகம் எமக்குக் கிடைத்ததே என்றெல்லாம் எண்ணி மன நிறைவுற்றேன்.

அறிஞர் அவ்வை நடராசன், அவரது மனைவியுடன் நாம் ------------>

அந்த மாநாட்டில் மதிய உணவுக்குப் பின் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் அவர் பேசி முடித்துவிட்டு அந்த நிகழ்வின் நிறைவில் மேடையில் இருந்து இறங்கினார்.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அடுத்த நிகழ்விலும் அவர் பேச இருக்கின்ற தகவலைச் சொன்னார்.  அதற்கு அவர் “அப்படியா!” என்று சற்று வியப்போடு கேட்டு விட்டு மீண்டும் மேடையில் ஏறினார்.  எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த விதக் குறிப்புகளும் இல்லாமல் ஆற்றொழுக்காக அவர் அன்று மீண்டும் பேசிய பேச்சு இன்னமும் எமது நினைவில் நிற்கின்றது. 

அந்த மாநாட்டின் நிறைவிலே தமிழே வாழி! என்னுந் தலைப்பிலே நான் எழுதிய நீண்டதோர் ஆசிரியப்பாவைப் படித்தேன்.  அவர் அதனை முழுமையாக இரசித்துக் கேட்டார்.  மேடையில் இருந்து இறங்கிய போது மனதாரப் பாராட்டினார். 

ஆஸியில் ஆன்மிகத் தொடர் பேருரை நிகழ்த்த வரும் "சித்தாந்த கலாநிதி" திரு கி.சிவகுமார் பேசுகிறார்

 "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E


அவர்களது தொடர் பேருரைகள் 

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பெர்த் ஆகிய ஆஸ்திரேலிய மாநகரங்களில் 04-12-2022 முதல் 25-12-2022 வரை
நிகழவுள்ளது.எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 41 “ கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது “ முருகபூபதி


மல்லிகை ஜீவா, தனது மகன் திலீபனின் ஸ்ரூடியோவுக்கு என்னை அழைத்துச்சென்று சில கோணங்களில் படங்கள் எடுத்தார் என்று கடந்த அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

ஏன் அவ்வாறு எடுக்கிறார்..? என்பதை அவர் அப்போது சொல்லவில்லை. ஆனால், அதற்கான காரணம் எனக்கு 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் தெரிந்தது.

எனது பிறந்த திகதி குறிப்பிட்ட ஜூலை மாதம்தான் வருகிறது.  1972


ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான மல்லிகையில் எனது முதலாவது சிறுகதையை ( கனவுகள் ஆயிரம் ) வெளியிட்ட ஜீவா, 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட மல்லிகை இதழில் எனது படத்தையும் பதிவேற்றி அட்டைப்பட அதிதியாக கௌரவித்திருந்தார்.

என்னைப்பற்றிய குறிப்புகளை அதில் எழுதியவர் எழுத்தாளர் ஆப்தீன். தற்போது ஜீவாவும் ஆப்தீனும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட மல்லிகை இதழை நூலகம் ஆவணகத்தில் பார்க்க முடியும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் மாதா, பிதா, குரு, தெய்வம் முக்கியமானவர்கள் என எமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.

தெய்வத்தை நேருக்கு நேர் பார்க்காது போனாலும் , நாம் மனித உருவிலும் ஜீவராசிகளின் வடிவத்திலும்தான் தெய்வத்தை பார்த்திருக்கின்றோம். 

ஆனால், மாதா, பிதா, குருவுடன் நாம் எமது வாழ்க்கையை கடந்து வந்திருக்கின்றோம்.

எனது வாழ்நாளில் நான் நான்கு பாடசாலைகளில் படித்திருக்கின்றேன்.

அவை: நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம்                                  ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி )  யாழ். ஸ்ரான்லி கல்லூரி ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி ) நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயம், பலாங்கொடை புனித ஜோசப் பாடசாலை.

 இவற்றுள் எனது முதலாவது பாடசாலை விவேகானந்தா வித்தியாலயம் எனது உயிரிலும் உணர்விலும் இரண்டக் கலந்திருப்பதற்கு காரணம், இவ்வித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டபோது  நான்தான் அங்கே முதலாவது மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டேன். ( எனது சேர்விலக்கம் : 01 ) 

பிற்காலத்தில்,  இவ்வித்தியாலயம் ஸ்தாபகரின் பெயரில்  மாற்றமும் கண்டு,  அதன் தரமும் உயர்ந்தபோது, 1972 ஆம் ஆண்டு பழையமாணவர் மன்றத்தை அங்கே உருவாக்கினோம்.

இந்த ஆண்டில்தான் நான் இலக்கிய மற்றும் ஊடகத்துறைக்குள் தீவிரமாக  நுழைந்தேன்.

வாழ்த்துப்பா - இயற்றியவர் ‘சிவஞானச் சுடர்’ பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் (சமாதான நீதவான் - அவுஸ்திரேலியா)

 கயிலைமணி’ ‘சிவஞானச் சுடர்பஞ்சாட்சரம் பரமசாமி அவர்கள்

எண்பதாவது அகவையை அடைந்ததையிட்டுக் கொண்டாடப்பெற்ற

அமுத விழாவிலே

கம்பலாந்து தமிழர் கழகம்

அன்புடன் அளித்த

வாழ்த்துப்பா

 

மணிலங்கை நாடதனில் பிறந்து நல்ல

                மாண்புடனே நற்கல்வி கற்று யர்ந்து

பணிவுமிகு பொறியியலா ளராகப் பணி

                            பலர்போற்ற இயற்றிப்பின் புலம்பெ யர்ந்து

                தணியாத விருப்புடனே அவுஸ்திரே லியாவில்

                            தடம்பதித்துப் புகழீட்டி இன்றுநல் லன்பர்

அணிசெய்ய எண்பதாம் அகவை கண்ட

                            அமுதவிழா நனிசிறக்க வாழ்த்து கின்றோம்!

 

நூல் விமர்சனம் - ஸ்ரீரஞ்சனியின் "ஒன்றே வேறே " சௌந்தரி கணேசன் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில் சிட்னியில் ஐந்து நூல்களின் அறிமுக விழா நவம்பர் 5 அன்று இடம்பெற்றது. மெல்பேர்ண் எழுத்தாளரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகருமான திரு முருகபூபதி அவர்களின் முயற்சியால் இந்நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் Sriranjani ன் ஒன்றே வேறே என்ற சிறுகதைத் தொகுதியை ஆய்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 16 சிறுகதைகள் அடங்கிய இந்த நூல் வாசிக்கும்போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. கற்பனையும் யதார்த்தமும் கலந்து எழுதியிருப்பதால் கதைகளை தொடாந்து வாசிக்க வேண்டும் என்ற ஓர் தூண்டுதல் இருந்துகொண்டிருந்தது. 

 இந்தச் சிறுகதைக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார் என்ற காரணத்தைத் தேடிப்பார்த்தபோது ஒன்றே வேறே என்று தொல்காப்பியரின் ஓர் பாடல்தான் கண்ணில் பட்டது. எனக்கு தொல்காப்பியர் மற்றும் அவரின் தத்துவங்கள் குறித்த பரிச்சயம் அதிகம் இல்லை. அந்தப் பக்கத்தை ஓய்வு பெற்றபின் திறக்கலாம் என்று யோசித்திருக்கிறேன். ஆனாலும் தேவை கருதி ஒரு கையேடாக அதை வாசித்துப்பார்த்தேன். 

 ஒன்றே வேறே என்றிரு பால்வயின் 
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் 
 ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப 
 மிக்கோ னாயினும் கடிவரை யின்றே 

 இதுதான் அந்தப் பாடல். இந்த சிக்கலான பாடலின் முழுமைக்குள் நான் செல்லவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது. ஒன்றுபடுவதற்கும் வேறுபடுவதற்கும் விதியை நொந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர். ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப அதாவது ஒத்த சிந்தனையுள்ள ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதில் அல்லது காதல் கொள்வதில் ஊழின் பங்கு அல்லது விதியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்கிறது. இங்கே பால் என்பது ஊழ் அதாவது விதி. ஊழது ஆணையின் என்று அங்கு அழுத்திச் சொல்லப்படுகிறது. ஆனால் சிவரஞ்சினி சொல்லியிருக்கிற ஒன்றே வேறே என்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்கிறது என்பதை அவரது கதைகளை வாசித்தபோது அறிந்து கொண்டேன். 

நினைத்துப் பார்க்க வேண்டிய பெருமகன் பொன்.இராமநாதன் அவர்கள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .. அவுஸ்திரேலியா

 

  மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தப் பெருமான்


நமக்கெல்லாம் நம்பி க்கையினை விதைத்திருக்கிறார்.அந்த நம்பிக்
கையினை எத்தனை பேர் உண்மையாக்கி இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்பது மிகவும் அவசியமல்லவா ! " மனித்தப் பிறவி யும் வேண்டுவதே இந்த மாநிலத்தே " என்று அப்பர் பெருமான் பிறப்பின் முக்கியத்தை அதாவது மனிதாக இந்த மாநிலத்தில் பிறப்பதையே வியந்து பார்ப்பதையும் மனமிருத்து வதும் முக்கியமாகும்.மாநிலத்தில் பிறக்கின்ற அத்தனைபேரும் - தங்களின் வாழ்வினை எப்படி அமைத்துக் கொள்ளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் பிறப்பின் உன்ன தம் வெளிப்பட்டு வெளிச்சமாய் அமைகிறது எனலாம்.பிறந்த பிறப்பினைப் பயனுடைய தாக்கி சமூகத்தால் இன்று வரை போற்றி மதிக்கப்பட்டு கெளரவிக்கப்படும் நிலையில் ஒரு பெருமகன் வாழ்ந்தார். அவரை நினைத்துப் பார்ப்பது மிகவும் அவசியமேயாகும். அப்படி நினைத்துப் பார்க்க வேண்டிய பெருமகானார்தான் ஈழத்தின் சொத்தாகிய பொன் னம்பலம் இராமநாதன் அவர்கள்.

  தலை நகராம் கொழும்பில் பிறக்கின்றார்.கற்றறிந்தவர்கள்


குடும்பம். வசதிகள் நிறைந்த குடும்பம்.செல்வாக்கு மிக்க குடும்பம். வசதிகள் நிறைந்து இருந்தும் - கல்வியைக் கருத் தில் கொண்ட குடும்பமாக அவரின் குடும்பம் இருந்தது என்பதைக் கருத்திருத்தல் முக்கிய மாகும். வசதிகள் நிறைந்தால் அதில் மூழ்கி அதனை அனுபவித்து  வாழ்வினை வாழ்பவ ர்கள் பலர் இருப்பதையே காணமுடிகிறது. ஆனால் பொன் . இராமநாதன் வசதிகளைப் பெற்றிருந்தும் வாழ்க்கைக்குக் கல்விதான் சிறப்பினை அளிக்கும் என்ற நிலையில் - கல் வியைக் கண்ணாய்க்கருதி இலங்கையிலும் கற்றார். இந்தியாவிலும் கற்றார்.

  அன்னைத் தமிழினை அரவணைத்தார். ஆங்கிலத்தைக் கற்றார். சைவத்தைப் போற்றி னார். வேத.  உபநிடதம் ,  நிறைந்த வடமொழியையும் கற்றார்.சிங்களம் கிரேக்கம் லத்தீன் எனப் பல மொழிகளையும் கற்றவராகவும் விளங்கினார்.சட்டம் பயின்றார். கூடவே தத்து வமும் பயின்றார். அவரின் சிந்தனைசெயற்பாடுகள் யாவும் பரந்து விரிந்ததாகவே அமை ந்தது எனலாம். கற்ற கல்வியையும் பெற்ற பதவியையும் - சமூகத்துக்குப் பயனுடைய தாக்கிட வேண்டும் என்னும் உயரிய உன்னத எண்ணமே அவரிடம் குடிகொண்டிருந்தது என்பதால்த்தான் அவரை நினைத்துப் பார்ப்பது அவசியமாயிருக்கிறது.

  பொன். இராமநாதனுடைய காலம் 1851- 1930 ஆண்டுகளாகும். அவர் அறியும் வண்ணம் அவருக்கு முன்பாக நல்லைநகர் நாவலர் பெருமான்வள்ளலார், இராமகிருஷ்ண பரமஹ ம்சர்ஷீரடிபாபா ஆகியோரும் - அவருக்குப் பின்னால் இரவீந்திரநாத் தாகூர்சுவாமி விவே கானந்தர்காந்திஜி அரவிந்தர்ரமண மகிரிஷிபாரதியார்சுவாமி விபுலானந்தர் ஆகியோ ரும் வருகின்றார்கள்.இவர்கள் அனைவருமே சமூகத்தை நேசித்தவர்கள். கல்வியையும் நேசித்தவர்கள். அதே வேளை கல்வியினை  ஆன்மீகத்துடன் இணைத்தே பார்த்தவர்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.ராஜாராம் மோகன்ராய் இந்தியாவில் துணிந்து சீர்தி ருத்தத்தில் ஈடுபட்டவர். அவரால் அக்காலத்தில் சமூகத்தில் பல புரட்சிகரமான மாற்றங் கள் ஏற்பட வழி ஏற்பட்டது. ஆனால் அவர் பொன். இராமநாதன் பிறக்க முன்பே மறைந்து விட்டார்.

படித்தோம் சொல்கின்றோம்: மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில் வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை ! முருகபூபதி


ருஷ்ய இலக்கிய மேதைகள் மாக்ஸிம் கோர்க்கி எழுதிய மூன்று தலைமுறைகள், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி  எழுதிய கரமசோவ் சகோதரர்கள் முதலான நாவல்களை படித்திருப்பீர்கள்.

மேற்கு ஐரோப்பாவில்  ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் கதையை பேசிய  புதினங்கள் அவை.

எமது தாயகத்தில் வன்னி பெருநிலப்பரப்பு, விவசாயத்திலும் அரசியலிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.  காடாக இருந்த  அந்தப்  பிரதேசத்தை  வளம்கொழிக்கும் மண்ணாக மாற்றியவர்களின் கதையை அறிய விரும்புகிறீர்களா…?

மகாலிங்கம் பத்மநாபன் எழுதி, கடந்த ஆவணி மாதம் வெளிவந்திருக்கும் அது ஒரு அழகிய நிலாக்காலம் நாவலை அவசியம் படிக்கவும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும்


அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் ஆசிரியப் பெருந்தகை மகாலிங்கம் பத்மநாபன், இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார்.

440 பக்கங்கள் கொண்ட  இந்த நூலைப் படிக்கும்போது,  எம்மை அறியாமலேயே நாம் அந்த அழகிய நிலாக்காலத்தில் பயணிக்கின்றோம். வாசகர்களை கைப்பிடித்து உடன் அழைத்துச்செல்லும் தன்மையில் மகாலிங்கம் பத்மநாபன் எழுதியிருக்கிறார்.

கடந்து செல்லும் கதைக்குப் பொருத்தமான ஓவியங்களும்  பதிவேற்றப்பட்டுள்ளன.  நூலின் இறுதிப்பக்கங்களில் சில ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன.  அதனால்,  இந்தப்புதினம் வெறும் கற்பனை அல்ல என்ற தீர்மானத்துடன் வாசிக்கலாம்.

கனரக வாகனங்கள் ஓடும்  அகலமான விரைவு வீதிகளில் நாம் பயணிக்கும்போது, அவை ஒரு காலத்தில் யாரோ முகம் தெரியாத - பெயர் தெரியாத மூதாதையர்களினால் செப்பனிடப்பட்ட  ஒற்றையடிப் பாதைதான் என்பதை நம்மில் எத்தனைபேர் நினைத்துப் பார்க்கின்றோம்.

வெய்யில் மழை குளிர் கோடை பார்க்காமல் இரவு பகலாக அம்முன்னோர்கள் செப்பனிட்ட பதைகளில்தான் நாம் இன்று உல்லாசமாக பயணிக்கின்றோம்.

அது ஒரு அழகிய நிலாக்காலம் புதினத்தை படித்தபோது  காடு மண்டிக்கிடந்த  வன்னி பெருநிலப்பரப்பினை பசுமை பூக்கும் மண்ணாக மாற்றி, உழவுத் தொழிலின் மூலம்  மக்களின் பசியை போக்கிய அம்மக்களின் கடும் உழைப்பு தெரியவருகிறது.

அவர்கள் காலத்தில்  மின்சாரம் இல்லை.   சீரான வீதிகள் இல்லை.  மருத்துவமனைகள் இல்லை. பாடசாலைகளே இல்லை. இவ்வாறு இல்லை எனத் தொடர்ந்தவற்றை  இல்லாமல் ஆக்கிய பெருந்தகைகள் பற்றிய கதைதான் இந்தப்புதினம்.  மூன்று தலைமுறைகளின் வாழ்வுக்கோலங்களை இந்தப் புதினம் பேசுகிறது.

தம்பையர் – விசாலாட்சி – ஆறுமுகத்தார் – கணபதி – மீனாட்சி என கதையின் முக்கிய மாந்தர்களின் அன்றாட வாழ்வுடன், வன்னிமண், எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை சித்திரிக்கிறார் மகாலிங்கம் பத்மநாபன்.

கனவுகள் சுமந்த காலங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளரும் வன்னியாச்சி என பேசப்படுபவருமான தாமரைச்செல்வி இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்,  அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லப்படும் அரிய பதிவு என்ற தலைப்பில் இந்நூலின் வரலாற்றுப்பின்புலத்தை பதிவுசெய்துள்ளார்.

நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் ஆசிரியராகவும் திகழ்ந்தமையினால்,  ஒவ்வொரு அங்கத்தின் தொடக்கத்திலும் உள்நாட்டு மற்றும் உலக நாடுகளின் வரலாற்றுச்செய்திகளையும் பதிவுசெய்துள்ளார்.

முதலாவது அங்கம் இவ்வாறு தொடங்குகிறது:

வசந்த மாளிகை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய படத் தயாரிப்பாளராகத்


திகழ்ந்தவர் டி . ராமாநாயுடு.தமிழிலும் படம் தயாரிக்கத் தொடங்கிய இவர் ஆரம்பத்தில் குழந்தைக்காக,நம்ம குழந்தைகள் ஆகிய படங்களை தயாரித்தார்.குழந்தைகளை அடிப்படியாக கொண்ட கதைகளை படமாக்கிய ராமாநாயுடு 1972ல் குடிகாரன்,பெண் மோகம் கொண்ட ஒருவனின் கதையை படமாக்கினார்.அந்தப் படம் தான் வசந்த மாளிகை.


ஆரம்பத்தில் தெலுங்கிலும்,பின்னர் தமிழிலும் வந்த இந்தப் படம் வசூலை வாரிவழங்கியது.நீண்ட காலம் ஓடித்தள்ளியது.சிவாஜி கணேசனின் வெற்றி பட வரிசையில் இணைந்தும் கொண்டது.

தேவதாஸும்,பார்வதியும் சிறுவயது முதல் ஒன்றாய்

வளர்ந்தவர்கள்.ஆடிப் பாடியவர்கள்.ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்த தேவதாசும்,ஏழை குடும்பத்தை சேர்ந்த பார்வதியும் காதலிப்பதை ஜமீந்தார் எதிர்க்கிறார்.பார்வதியோ தன்னை கை விட வேண்டாம் என கெஞ்சுகிறாள்.ஆரம்பத்தில் தன் தந்தைக்கு பயப்படும் தேவதாஸ் பிறகு பார்வதியை மணக்க தயாராகிறான்.ஆனால் வீண் அகம்பாவத்தால் , பிடிவாதத்தால் பார்வதி அவனை எடுத்தெறிந்து பேசி விடுகிறாள்.போதாக் குறைக்கு ஒரு வயோதிபனை மணந்தும் கொள்கிறாள்.காதல் தோல்விக்கு ஆளான தேவதாஸ் முழு நேர குடிகாரனாகிறான்.

இந்த கதையை மாற்றி யோசி,அதுதான் வசந்த மாளிகை.தேவதாஸில் காதல் தோல்விக்கு பிறகு குடிகாரன்,வசந்த மாளிகையில் ஆரம்பம் முதலே குடிகாரன்,பெண் பித்தன்.அங்கு பார்வதியின் ஆணவம் காதலுக்கு தடையானது,இங்கே லதாவின் ஆணவம் காதலை நிராகரித்து ஆனந்தை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஒரே சாயல் கொண்ட கதை என்றாலும் தங்க மூலம் பூசப் பட்டு வசந்த மாளிகை பளபளத்தது.படத்தின் தயாரிப்புக்கு ராமாநாயுடு பணத்தை வாரி இரைத்திருந்தார்.இதனால் பிரம்மாண்டமான படமாக உருவானது.

படத்திற்கு பலம் சேர்த்து சிவாஜியின் நடிப்பு.அலட்சியம்,ஆணவம்,கருணை,காதல்,துயரம் என்று பலவித குணச்சித்திரங்களையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி.அவருக்கு இணையாக வாணிஸ்ரீ தனது நடிப்பை வழங்கியிருந்தார்.படம் முழுதும் சேலை அணிந்து பாத்திரத்தின் தன்மை கெடாவண்ணம் வாணிஸ்ரீ படம் முவதும் வருகிறார்.நிறைவாக நடிப்பையும் வழங்குகிறார்.தனி அறையில் குளிருக்கு நடுங்கிய வண்ணம் அவரும் சிவாஜியும் இருக்கும் காட்சியில் இருவரும் காட்டும் முக பாவனை ரசிக்கத்தக்கது. அதே போல் மணப் பெண் கோலத்தில் இருக்கும் வாணிஸ்ரீயை சந்திக்கும் சிவாஜியின் விரக்தி,வேதனை கலந்து காட்டும் முக பாவம் நடிப்பின் உச்சம்.

ஓமானில் ஓலமிடும் பெண்களின் குரல் கேட்டிலையோ…? அவதானி

 “ ஒவ்வொரு பெண்ணின் கடின உழைப்புக்குப் பின்னாலும்


பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கிறான்  “ எனச்சொல்லப்படுவதுண்டு.

தற்போது ஓமானில் எமது இலங்கைப் பெண்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைக்குப் பின்னாலும், பொறுப்பற்ற ஆண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு – குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்லும் பெண்கள் தொடர்பாக காலத்துக்கு காலம் அதிர்ச்சியான செய்திகள் வந்தவாறே இருக்கிறது.

ஆனால், இந்த அதிர்ச்சிகளுக்கு இதுவரையில் முற்றுப்புள்ளி


இடப்படவில்லை.  நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றுவதனாலும்,  விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாத துன்பத்திற்கு ஏழைக்குடும்பங்கள் ஆளாவதனாலும்தான் பெண்கள் வேலை தேடிச்செல்கின்றனர்.

வெளிநாட்டு வேலை வாயப்பு பணியகங்கள் பல சட்டபூர்வமாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் இலங்கையில் இயங்கிவருகின்றன.

அண்மையில் ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாகச் சென்ற பல பெண்கள் ஏலத்தில் யார் யாருக்கோ விற்கப்பட்டுள்ள அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக பாரபட்சமற்றமுறையில் நீதிவிசாரணைகள் நடைபெறும் எனவும், உண்மைகளை கண்டறிவதற்கு ஒரு குழு அந்த நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்பதரை  இலட்சம்  இலங்கைப் பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவுபெற்றவர்கள்  மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்வதாகவும்,  ஆனால் 16 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குறிப்பிட்ட பணியகத்தில்  பதிவுசெய்யாமல்,  முறையற்றவிதத்தில் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த எண்ணிக்கை அதிர்ச்சியைத்  தருகிறது.  இவர்களுக்கு ஏதும் நடந்தால், இவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் யார் பதில் சொல்வது? என்ற கேள்விதான் மேலெழும்.

இவ்வாறு சட்ட விரோதமாக முறையற்றவகையில் பெண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் சூத்திரதாரிகள் இதன் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள்.

தமக்கு அங்கே எத்தகைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற உத்தரவாதம் எதுவுமின்றி, தங்கள் குடும்பத்தின் கஷ்டத்தை தங்களது உடல் உழைப்பின் மூலம் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்தப்பெண்கள் விமானம் ஏறுகின்றனர்.

மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கவிருக்கும் பணிப்பெண் வேலைகளுக்காக புறப்பட்டுச்செல்லும் பெண்களை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பார்த்திருப்பீர்கள்.

இலங்கைச் செய்திகள்

இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் 2000 டொலர்கள்

மனித உரிமை என்ற போர்வையில் வன்முறை அராஜகத்துக்கு இடமில்லை

தமிழ் மக்கள் அனுபவிக்கும் அமைதி சூழலை மேலும் வலுப்படுத்த வேண்டும்

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவுப் பேருரையில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில்

இ.தொ.கா. முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

காலஞ் சென்ற முத்து சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இ.தொ.கா. மரியாதை

யாழ். பல்கலையில் முதன் முதலாக கணனி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்

மன்னாரில் மாவீரர் தினம்; தடையுத்தரவு கோரிய வழக்கை வாபஸ் பெற்ற பொலிஸார்


இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் 2000 டொலர்கள்

டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்

வரவு-செலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

உலகச் செய்திகள்

 இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசிய பூகம்பம்: உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

மலேசிய பொதுத் தேர்தலில் 53 வருடங்களின் பின் மஹதீர் மொஹமட் தோல்வி

பல தசாப்த காத்திருப்புக்கு பின் மலேசிய பிரதமரானார் அன்வர்

அமெரிக்க – இந்திய போர் ஒத்திகை ஆரம்பம்


இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் நேற்று (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் பல டஜன் கட்டடங்கள் சோதமடைந்திருப்பதோடு 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

" வெளிச்சம்" - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல் அறிமுகம் 03.12.2022


முத்தமிழ் மாலை 2022 Australian Medical Aid Foundation (AMAF) 03/12/2022