இரண்டாயிரத்து இருபத்தைந்து இன்பம் கொடுத்து நிற்கட்டும் !

 




 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 




நல்லன நடக்க வேண்டும்

நாடெலாம் சிறக்க வேண்டும்
வல்லமை பெருக வேண்டும்
வாழ்வது உயர வேண்டும்  

தொல்லைகள் தொலைய வேண்டும்

தோல்விகள் அகல வேண்டும் 
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்

போரெனும் எண்ணம் மண்ணில்

பொசுங்கியே போதல் வேண்டும்
மாசுடை  ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஒழிய வேண்டும் 

மார்கழி என்றுமே மாண்புடை மாதமே !


 



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

மார்கழி என்பது மாண்புடை மாதம்

தேவர்கள் விரும்பும் சிறப்புடை மாதம்
பூதலம் பூஜைகள் பொலிந்திடும் மாதம்
சீதளம் நிறையும் சிறப்புடை மாதம்  

ஆலயம் அனைத்தும் அடியவர் நிறைவார்

அரனை வணங்குவார் ஐயப்பன் துதிப்பார்
தீப ஒளியில் ஆலயம் யாவுமே
தேவ லோகமாய் பொலிந்துமே நிற்கும்

மக்களின் மனத்தில் மார்கழி மாதம்

மங்கலம் அற்றது என்னும் எண்ணம்
இருப்பது என்பது பொருத்தம் அல்ல
மார்கழி என்றுமே மங்கல மாதமே 

சிட்னி பொங்கல் விழா 14/01/2025

 






















நல்வினைகள் ஆற்றிடுவாய் அன்பு ஜெயா (எழு சீர் குறள்வெண் செந்துறை)

  

பெற்றதில் சிறிதுமே பகிர்ந்துநீ அளித்திடில்

    பெரிதுமே மகிழ்வரே பயனடைவோர்,

உற்றவர் என்றிலை உறவினர் என்றிலை

    உவந்துடன் எவர்க்குமே பகிர்வாயே!

 

உண்பதில் ஓர்பிடி மற்றவர் மகிழ்ந்திட

    உள்ளமும் நிறைந்திட அளித்திடுவாய்

உண்ணநீ வைத்தவர் உள்ளமும் மலர்வதை

    உணர்வினால் காண்பதும் உறுதியன்றோ!

 

பசியினால் வாடுவோர் பக்கமே இருக்கையில்

    பகிர்ந்துமே அளித்திடே உன்னுணவே!

பசித்தவர் அறிவரே பசிதனின் கொடுமையை

    பசிப்பிணி நீக்குதல் நல்வினையே!

மகாலிங்கம் பத்மநாபன் : வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் வரலாற்றை எழுதி வரலாறாய் ஆனார்


பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும்

நனி சிறந்தனவே…”

தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து கழித்த எங்கள் அப்பா தன் இறுதிக்காலம் வரை மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருப்பார்.

 “அது ஒரு அழகிய நிலாக்காலம்”

மகாலிங்கம் பத்மநாபன் எழுதி வழங்கிய

வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் கதை

என்ற இந்த நூலைப் படித்து முடித்த போது அப்பேர்ப்பட்ட உணர்வு தான் எழுந்தது. தன் மண்ணை, தன் மக்களை நேசித்த மண்ணின் மைந்தனின் மன உணர்வுகளை அச்சொட்டாக எழுத்தில் கவர்ந்தால் எழும் வரலாற்றுப் பெரு நூல் இது.



 அதனால் தான் 432 பக்கங்களோடு பின்னிணைப்பாக அந்த மூன்று கிராமங்களின் கதையின் நாயகர்கள் வாழ்ந்து கழித்த தலங்கள், கோயில்கள் எல்லாம் நிழற்படங்களாக அந்த வரலாற்றோட்டத்தில் நம் மனக் கண்ணில் உருவகித்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது.

தைப்பொங்கல் விழா - கம்பலாந்து தமிழர் கழகம்

 .



சைவமன்றம் வழங்கும் இசை நடன நிகழ்வு


 

நின்றேனும் கொல்லும் தீங்கு (02):​ (திகில் தொடர்)





- சங்கர சுப்பிரமணியன்.






அந்த ஒளி அப்படியே என் கண்ணில் பாய அவளைப் 

பார்த்த அதிர்ச்சியில் உரைந்துபோய்,

 

"ஊர்மிளாஊர்மிளா!!" என்று என் உதடுகள் 

என்னையும்அறியாமல் முனுமுனுத்தன.

 

அவள் கண்களின் ஒளி என் கண்களில் பாய பயத்தில் காரின் ஆக்ஸிஏட்டரை ழுத்தினேன். ஆனால் கார் 

நகர மறுத்ததுஎஞ்சினும் நின்று போனதுபயம் 

அதிகமாக காரின் ஞ்சினைவேக வேகமாக

யக்கினேன்அதற்குள் அவள் மரத்தைவிட்டு அகன்று காரின் முன் வந்து நின்றாள்என் முகத்தை 

நேருக்கு நேர்பார்த்தாள்இப்போது அவள் கண்களில் 

அந்த பிரகாசம் இல்லை. ஆனால் அந் கண்கள்

வசீகரமாக மிகவும் அழகாக இருந்தாள்


முன் பற்களால்கீழுதட்டைக் கடித்தபடி அதே பழைய ஊர்மிளாவாக காரின் முன்னிருந்து நகர்ந்து என் 

பக்கமாகக் கண்ணாடிக் கதவருகே வரவும் இதுவரை 

தகராறுசெய்த எஞ்சின் ஓட ஆரம்பித்ததுஉயிரைக் கையில் பிடித்தபடி ஆக்ஸிலேட்டரை வேகமாக 

அழுத்தியதில் கார் ஓடத் தொடங்கியதுகார் ஓடவும் 

காரின்பின் அவளும் வேகமாக ஓடி ந்தாள்


கண்ணாடி வழியாகஅவளைப் பார்த்தபடியே வேகமாகக்கார் ஓட்டியதில் எதிரே இருந்த ரவுண்ட் எபௌட்டில் 

கூட  நிற்காமல் சென்ற கார் ரவுண்ட் எபௌட்டின் 

மத்தியில் நின்ற சைன்போர்டு கம்பத்தில்மோதி அடுத்த தெருவில் திரும்பியதுகண்ணாடி வழியாக பின்புறம்

பார்த்தேன்காரின் பின் புறமாக ஓடி வந்தவளைக் காணவில்லைஎப்படி காரை ஓட்டி வீடு வந்து

சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லைகாரை 

கராஜில் நிறுத்திவிட்டு படுக்கையில் வந்து விழுந்தேன்.இதெல்லாம் கனவா?அல்ல நனவாஎன்று ஒன்றுமே 

புரியாமல் பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்து நடு

நடுங்க

புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !! முருகபூபதி

 “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் 


எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால்,  எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும்  எழுத்தாளர் ஒருவரை  உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில்  நான் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும். “

எனச்சொல்லியிருப்பவர்தான்  இங்கிலாந்தில் நீண்டகாலம் வதியும் புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்.

இவருக்கு ஜனவரி 01 ஆம் திகதி பிறந்த தினம்.  எங்களால் ராஜேஸ் அக்கா என அன்புடன் அழைக்கப்படும் இவரை வாழ்த்துகின்றோம்.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு திருப்பூர் கனவு இலக்கியப்பேராவை மெய்நிகரில் நடத்திய நிகழ்வில், ராஜேஸ் அக்கா நிகழ்த்திய உரையின் தொடக்கத்தையே இந்த பதிவின் ஆரம்பத்தில் பார்த்தீர்கள்.

ராஜேஸ் அக்கா மேலும் இவ்வாறு சொல்கிறார்.

 “ எனது இளவயதில் எங்கள் வீட்டில் எனது தகப்பனார் திரு


குழந்தைவேல் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். சிறுவயதில்,எங்களுக்குத் தெரிந்த தேவார திருவாசக புத்தகங்களில் எனது 'புத்தகப்படிப்பு' ஆரம்பித்தது. அக்.காலகட்டத்தில அப்பா வாங்கி வரும் கல்கி கலைமகளுடனும் வாசிப்பு தொடர்ந்தது. அந்த அனுபவங்கள், பல விதமான எழுத்துக்களைப்; படிக்கும் உணர்வையும் எழுத்தை ரசிக்கும், பூசிக்கும் உணர்வையும் எனது இளவயதில் எனக்குத் தந்தது என்று நினைக்கிறேன்..அந்த அனுபவங்களால்,எனது அடிமனதில் எழுத்தாளராக வரவேண்டுமென்ற உந்துதல் பிறந்திருக்கும். 

இயற்கை எழில் கொஞ்சும்  கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.


படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும்  அயராது பங்காற்றியவர்     இவரது வாழ்வும் பணிகளும் குறிப்பிடத்தகுந்தன. விதந்து போற்றுதலுக்குரியன.

அத்துடன் எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடிதான் இவர்..

பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து குடும்பக் கடமைகளைப் பார்த்தால் போதும் என்றும் – அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றும் சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு காலம் முன்பிருந்தது.

சமையல்கட்டு வேலை , பிள்ளைப் பராமரிப்புடன் கணவனின் தேவைகளை பூர்த்திசெய்யும் இயந்திரமாகவும் பெண்ணின் வாழ்வு முடக்கப்பட்டிருந்த காலம் மலையேறிவிட்டது என்று இன்னமும் சொல்ல முடியாதிருக்கிறது.

குடும்ப படங்களில் காவியம் தீட்டிய பீம்சிங் நூற்றாண்டு ! ச . சுந்தரதாஸ் ஆஸ்திரேலியா

 தமிழ் திரை புராண, சரித்திர படங்களில் இருந்து விடுபட்டு சமூக,


குடும்பக் கதைகளில் அக்கறை காட்டத் தொடங்கிய 50ம் ஆண்டுகளின் நடுப் பகுதிகளில் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நூற்றாண்டு நாயகரான ஏ . பீம்சிங். 1924ம் வருடம் அக்டோபர் 15ம் திகதி பிறந்த பீம்சிங் பிரபல டைரக்டர்களான கிருஷ்ணன், பஞ்சு இருவரிடமும் இயக்கம், படத்தொகுப்பும் இரண்டையும் கற்று விட்டு இயக்கிய முதல் படம் சரித்திர கதையான அம்மையப்பன். கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுத , எஸ் எஸ் ஆர் கதாநாயகனாக நடிக்க இவர் இயக்கிய இந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கருணாநிதி, எஸ் எஸ் ஆர் இவர்களோடு சிவாஜி, பத்மினி சேர்ந்து கொண்ட ராஜா ராணி படமும் காலை வாரியது. அதன் பின்னர் பீம்சிங் ஒப்பந்தமான படம் செந்தாமரை. இந்தப் படம் ஆறாண்டுகளாக தயாரிப்பில் இருந்து இழுத்தடித்தது. இடையில் வந்த திருமணம் படமும் மங்களகரமாய் அமையவில்லை. 


தொடர்ந்து ஐந்து படங்களின் தோல்வி, திரையுலகை விட்டே

விரட்டப்படக் கூடிய சூழ்நிலை. ஆனால் பீம்சிங் அசரவில்லை. இதுவரை காலமும் இயக்குனராக மட்டும் இயங்கியவர் இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். புத்தா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பீம்சிங், ஜி . என் வேலுமணி, விசுவநாதன் ராமமூர்த்தி கூட்டில் உருவாகி பதிபக்தி படம் தயாரானது. சிவாஜி, ஜெமினி, பாலையா,தங்கவேலு, சந்திரபாபு, சாவித்ரி, எம் என் ராஜம், விஜயகுமாரி, என்று ஒரே நட்சத்திர பட்டியல். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடிக்க படம் வெற்றி படமாகி பீம்சிங்கின் ப வரிசைப் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. 

பதிபக்தியின் வெற்றி ஜி .என் . வேலுமணியை தயாரிப்பாளராக்கி, சரவணா பிலிம்ஸ் உருவாக அச்சாரமானது. அவர்களின் முதல் படம் பாகப்பிரிவினை. சிவாஜிக்கு ஜோடி புதுமுக நடிகையாக அடியெடுத்து வைத்துள்ள சரோஜாதேவி. திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த எம் ஆர் ராதா மீண்டும் முழு வீச்சில் திரையில் பவனி வர இந்தப் படம் காரணமானது. இந்தப் படத்தோடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்கை எய்து விட , சிவாஜியை விட்டு சில காலம் விலகி இருந்த கண்ணதாசன் மீண்டும் சிவாஜியுடன் ஐக்கியமானார். பாகப்பிரிவினையென்ற நெகட்டிவ் பெயர் பீம்சிங்கிற்கு பாசிட்டிவ் ஆனது.
 
ஜுபிடர் பிலிம்ஸ் அதிபர் சோமசுந்தரம் கருணாநிதி கதைவசனத்தில் , ஜெமினி நடிப்பில் எல்லாரும் இந்த நாட்டு மன்னர் படத்தை பீம்சிங் இயக்கத்தில் ஆரம்பித்தார். ஏவி எம் அதிபர் மெய்யப்ப செட்டியார் டி . பிரகாஷ்ராவ் டைரக்சனில் அதே ஜெமினி நடிப்பில் களத்தூர் கண்ணம்மா படத்தை ஆரம்பித்தார். சம்பள விஷயத்தில் ஜுபிடர் சோமுவுக்கும் , பீம்சிங்கிற்கும் முரண்பாடு ஏற்படவே பீம்சிங் ஒதுங்கி கொண்டார். டைரக்ட் செய்த வகையில் ஏவி எம்முக்கு திருப்தி இல்லாமல் போகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் இருந்து பிரகாஷ் ராவ் விலகிக் கொண்டார். ஆனால் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. அதன் பிறகு எல்லாரும் இந்நாட்டு மன்னர் படத்தை பிரகாஷ் ராவ் இயக்கினார். களத்தூர் கண்ணம்மாவை பீம்சிங் இயக்கி படம் வெற்றியடைந்தது.

சத்யராஜ் நடிக்கும் ' பேபி & பேபி ' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

 

23 Dec, 2024 | 04:36 PM
image

த்யராஜ் -யோகி பாபு- ஜெய் -ஆகிய மூன்று நட்சத்திர நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'பேபி & பேபி ' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேபி & பேபி 'எனும் திரைப்படத்தில் சத்யராஜ் ,யோகி பாபு, ஜெய், கீர்த்தனா, சாய் தன்யா,  பிரக்யா நாக்ரா , இளவரசு, ஸ்ரீமன், ஆனந்தராஜ் ,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி. பி. சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை மன்னன்' டி. இமான் இசையமைத்திருக்கிறார். 

நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. யுவராஜ் தயாரித்திருக்கிறார்.

இலங்கைச் செய்திகள்

வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்றிலிருந்து நீக்கம்

வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் - சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !

இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவையின் தலைமையில் நீடிப்பதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடு  



வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்  

23 Dec, 2024 | 04:46 PM
image

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இன்றய பெற்றோரும் பிள்ளைகளும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

இன்றய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.  இவ்வாறாக இவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை, பிள்ளைகள் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்து விடுமோ என சிறுவர் மனோதத்துவ நிபுணர்கள் ஐயப்படுகிறார்கள். 12 வயது பையன் தன் இஷ்டத்திற்கு நண்பர்களுடன் ஊரை சுற்றி அலைந்து விளையாடுவது அன்றய யதார்த்தம்.  இவ்வாறு சுற்றி வரும் பையன் தன்னை சுற்றி உள்ள உலகத்தையும்,மனித உறவுகளையும் புரிந்து கொள்கிறான்.  இது அவனது வருங்கால வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகிறது. அவனது சுதந்திர மனோ வளரச்சியை உருவாக்குகிறது.  அவன் சமுதாயத்தை தன் சுய சிந்தனையுடன் எதிர்கொள்கிறான்.

மண் விளையாடி, வெறுங்காலுடன் புளுதியிலும் சேற்றிலும் அலைந்து வளர்ந்தவர்க்கு இருக்கும் நோய் தடுப்பு சக்தி இன்று மண்ணை தொடாமல் காலணி போட்டு விளையாடும் பிள்ளைகளிடம் காண முடியவில்லை. இதை நான் கூறவில்லை Autrilion வைத்தியர்கள் கூறுகிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போது பற்றாகுறை உணவு தட்டுப்பாடு இவற்றுடன் வாழ்ந்தவர்க்கு உள்ள நோய் தடுக்கும் சக்தியயை இளய சமுதாயத்தில் காண முடியவில்லை என்கிறார்கள். அன்றய பிள்ளைகள் காலணி இல்லாது அழுக்கான கைகளுடன் விளையாடி திரிந்தனர், அவர்கள் உடலும் இயற்கையாக நோய் தடுப்பு சக்தியை,உருவாக்கியது. இன்றுபோல எதற்கெடுத்தாலும் கை கழுவும் பளக்கம் எவரிடமும் இல்லை. ஏன் சவர்காரத்திற்கு தட்டுப்பாடு நிலவிய காலமது. பிள்ளைகளின் பசியை போக்க போதிய அளவு உணவு தட்டுபாடுடன் கிடைபதே கடினம். இருந்தும் அவர்கள் இயற்கையுடன் விளையாடி போதிய சூரிய ஒளியையும் சுத்தமான காற்றையும் சுவாசித்தனர்.  ஒஸ்ரேலிய அய்வாளர் கூறுவது இன்று நோய்கு முக்கிய காரணம் அதிக கொழுப்பு மற்றும்

 

உலகச் செய்திகள்

கொங்கோவில் மீண்டும் படகு விபத்து 38 பேர் பலி

ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் காரை செலுத்திய சவுதி வைத்தியர் : இருவர் உயிரிழப்பு, 60 பேர் காயம் !

கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல்

காசாவில் ஓயாத போரால் பெத்லகேமில் 2ம் ஆண்டாக களையிழந்த கிறிஸ்துமஸ்: வெறிச்சோடி கிடக்கிறது மேங்கர் சதுக்கம்

தென்கொரிய விமான விபத்து - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம் 



கொங்கோவில் மீண்டும் படகு விபத்து 38 பேர் பலி 

22 Dec, 2024 | 10:59 AM
image

கொங்கோவில் படகுவிபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.