காதலே வா வா - இசா

.

கண் இமைக்கமல் பார்த்தவனுக்கு.. கண்ணோரம் கண்ணீரை பரிசளித்தாய்....!
Nantri tamilkavithai11.

யோகம் தரும் யோகா ! - ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )


image1.JPG    மண்ணிலே நல்லவண்ணம் வாழ்ந்திடவே எண்ணுகின்றோம்
    மனத்தினிலே மகிழ்ச்சியது நிலைத்திடவே நினைக்கின்றோம்
    உள்ளமெலாம் உத்வேகம் ஊற்றெடுக்க விரும்புகின்றோம்
    உயர்யோகம் கடைப்பிடித்தால் உய்ந்திடலாம் வாழ்வினிலே !

    உடலற்றோர்கு உலகில்லை  திடனற்றோர்குச் சுகமில்லை
    உடலினை ஓம்பாதார்க்கு உயிரிருந்தும் ஏதுபயன் 

    திடமுடனே உடல்பெறவும் தீமையிலா மனம்பெறவும்
    உலகிடையே வாழ்வதற்கு உற்றதுணை யோகமன்றோ !

    அலைபாயும் மனமடங்கின் ஆனந்தம் தேடிவரும்
    அதையெமக்கு அளிக்கின்ற அருமருந்து யோகாவே
    யோகமெனும் கலையெமக்கு மூப்புப்பிணி போக்கிவிடும்
    ஆதலால் யோகமது அமிர்தமென விளங்குதன்றோ !

     உடல்நலத்தின் பேறாக உளத்தெளிவு அமைந்துவிடின்
     அறிவுவளம் பெறுவதற்கு அதுதுணையாய் அமைந்துவிடும்
     இதைநல்கும் யோகாமதை எல்லோரும் கடைப்பிடித்தால்
     எல்லோர்க்கும் பெருவரமாய் இருந்துவிடும் யோகமது !

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 11 கிராண்ட்பாஸ் கலைஞர்களும் மஞ்சள் குங்குமம் திரைப்படமும் - ரஸஞானிகளனி கங்கைக்கு சமீபமாக இருக்கும் கிராண்ட்பாஸ் பிரதேசம் மூவின மக்களும் செறிந்துவாழும் இடம் என்று முன்னைய அங்கத்தில் தெரிவித்திருந்தோம்.
அயல்நாடான இந்தியாவிலிருந்து விஸா கெடுபிடிகள் இன்றி எவரும் வந்துசெல்லக்கூடிய ஒரு பொற்காலம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர்  இருந்தது.
பிரிட்டிஷாரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள், மலையகத்தை செப்பனிட்டு தேயிலை, இரப்பர், கொக்கோ பயிரிடுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர், மலையாளிகள் வேலைவாய்ப்புத்தேடி கடல் மார்க்கமாக இலங்கை வந்து தலைமன்னாரிலிருந்து தலைநகரத்தில் வந்து குவிந்தனர். அதேபோன்று வட இந்தியாவிலிருந்து  இஸ்லாமியரும், அவர்களது மதத்தை பின்பற்றும் பாய் சமூகத்தினரும் வரத்தொடங்கினர்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதலில் புகலிடம் வழங்கிய பிரதேசம் களனி கங்கை தீரம்தான். கிராண்ட்பாஸில் தொடங்கப்பட்ட வீரகேசரி நிறுவனத்தில் பல இந்தியத்  தமிழர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 9 – ச சுந்தரதாஸ்காமினியைப் போலவே சிங்களத் திரை வானில் நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜயகுமாரணதுங்க. இவருடைய வெற்றிக்கும் லெனினின் பங்களிப்பு கணிசமாக வழங்கப்பட்டுள்ளது. அபிரஹச படத்தில் வில்லன் பாத்திரத்திலான கதாநாயகனாக நடித்த விஜய்க்கு ஹித்துவொத் ஹித்துவமய் படத்தில் இரட்டை வேடம் வழங்கினார். அதே போல உனெத்தஹாய் மலத்தஹாய் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். லெனினின் கடைசிப் படமாக அமைந்த படம் யுகென் யுகெயட்ட (யுகம் யுகமாய்). இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் டைரக்டராகவும் மட்டுமன்றி  இணைத்தயாரிப்பாளராகவும் லெனின் பொறுப்பேற்றிருந்தார். இந்தப் படம் 1987ம் ஆண்டு வெளிவந்தது. இந்த காலகட்டத்தில் இலங்கையின் அரசியல் நிலவரம் கலவரங்களைச் சந்தித்து சகதியாக காட்சியளித்துக் கொண்டு இருந்தது. விஜய்யும் தீவிர அரசியலில் குதித்து பல சங்கடங்களையும் பிரச்சனைகளையும் சந்திந்துக் கொண்டிருந்தார். ஆனாலும் லெனினுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் யுகென் யுகயட்ட படத்தில் இலவசமாக நடித்திருந்தார் விஜய் குமாரதுங்க. 

யுகென் யுகயட்ட படம் வெளிவந்து சில காலத்தினுள் நான் கடும் நோயுற்றேன். அந்த நேரத்தில் விஜேய் எனக்கு பல விதத்திலும் உதவினார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி எனக்கு கால் முறிவு ஏற்பட்ட போதும் நேரில் வந்து ஆறுதல் சொன்னார். அப்போது வேடிக்கையாக நாங்கள் படங்களிலும் நடிக்கிறோம் எங்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை நீங்கள் மட்டும் விபத்தில் எப்படி சிக்கினீர்கள் என்று விஜேய் என்னிடம் கேட்டார். ஆனால் அதற்கு அடுத்த சில தினங்களிலேயே அவர் சுடப்பட்டு இறந்தார் என்று கேள்விப்பட்டவுடன் நான் இடிந்து போய்விட்டேன். 

வாழ்வை எழுதுதல் - அங்கம் -02 அரசியல் தலைவர்களுக்கும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நடத்துவோம்! மெல்பன் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவில் தோன்றிய சிந்தனை! - முருகபூபதி


" நாடாளுமன்ற உறுப்பினர்களும்   மாகாண சபைகளின் உறுப்பினர்களும், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மாதம் ஒரு புத்தகம் படித்து, அது பற்றிய தங்களது வாசிப்பு அனுபவத்தைப்பற்றி பேசவேண்டும், அல்லது எழுதவேண்டும் "
இப்படி ஒரு தீர்மானத்தை யாராவது முன்மொழிந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆவனசெய்யவேண்டும் என்ற யோசனை கடந்த சிலநாட்களாக வந்துகொண்டிருக்கிறது.
அவ்வாறு வருவதற்கு சில செய்திகளும்  காரணம்தான்.
இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து, தேசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதனால், தற்போதைய நல்லாட்சி அரசு, போதைவஸ்து கடத்தல் முதலான சட்டவிரோத செயல்களில் கைதுசெய்யப்படுபவர்களுக்கு அதியுயர் தண்டனையாக மரணதண்டனை விதிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது முதலாவது செய்தி!
" எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இதுவிடயத்தில் மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தில் பின்வாங்கமாட்டேன்"  என்று மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது ஒரு முக்கிய செய்தி!
அவ்வாறு மரணதண்டனையை எதிர்நோக்கவிருப்பவர்களில் ஒரு சிலர் பெண்கள் என்று வருந்தியிருப்பவர் நீதியமைச்சர் திருமதி தலதா அத்துகோரளை என்பது மற்றும் ஒரு செய்தி!
இது இவ்விதமிருக்க, சிறைச்சாலைகளில் "தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை

ராத்திரியின் சொந்தக்காரா... - எழுத்து நெ செ

.மைண்ட் வாய்ஸ் ஓட தான் கதை ஆரம்பிக்கனுமா என்று சொல்லியவாரே ஆனந்த விகடனின் பக்கங்களை திங்கள் முன்பகல் 11 மணிக்கு புரட்டினான் வின்சென்ட்.
இதை வைத்து இவன் வெட்டி ஆபிசர் என்று முடிவு பண்ணிடீங்களா அங்க தான் ட்விஸ்டு . வின்சென்ட் நைட் ஷிப்ட்டில் வேலை செய்யும் BPO Employee. சொந்த ஊரான தூத்துக்குடியை விட்டு சென்னைக்கு வந்து வருடங்கள் 6 ஆகின . இத்தனை ஆண்டுகளில் இவன் அடைந்த ஒரே வளர்ச்சி - ஹிப் சைஸ் 30-இல் இருந்து 36 ஆனது தான். (என்ன ஒரு இமாலய வளர்ச்சி !!).  28 வயது ஆன வின்சென்டுக்கு பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் பொறுப்பில்லாதவர்களாக தெரிய ஆரம்பித்தவுடன, அய்யய்யயோ நமக்கு வயசாயிடுச்சு போல என்று அடிக்கடி மொபைல் பிரென்ட் கேமரா வாயிலாக தன தலையில் உள்ள வெள்ளி கம்பிகளை "எண்ணி" பார்த்தான்
நைட் ஷிபிட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பி மதியம் 12 மணிக்கு மேல் கண்முழிப்பவனுக்கு இன்றைய 10 மணி பள்ளி அரை எழுச்சி புதிது தான்.
அதனால் தான் செய்வதறியாத இந்த Android வீட்டு கன்னுகுட்டி இன்று ஆனந்த விகடன் பக்கம் வந்தது. 
ஆனந்தத்தை முழுதாய் பெறுவதற்குள் இவனின் அலைபேசியில் உசிப்பியது ஒரு குரல் ,

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

.
(i)
அவருக்கு இவரைப் பிடிக்காது;
அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார்
ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _
கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு
இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில்.
இவருக்கு அவரைப் பிடிக்காது
அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார்
அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன்
அதே யதே நுண்வெளிகளில்…..
அவர்கள் செய்வது சமூகப்பணி;
அவர்கள் காட்டுவது மனிதநேயம்.
அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள்
அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே.
(ii)
மெத்தப்படித்தவர் அவர் _
சத்தம்போட்டுத் தூற்றிக்கொண்டேயிருக்கிறார்
இந்த நாடு நாசமாய்ப் போகட்டும் என்று.
போனால் நானும் அவரும் என்னாவது என்று கேட்டால்
என்னைப் போன்ற சுயநலவாதியும் இருக்கமுடியுமோ?
இவருக்கு முன் இன்னொருவர்
’இந்த நாடு நாசமாய்ப்போகட்டும், இருக்கும் ஆறுகளெல்லாம்
வறளட்டும்’
என்று அடுக்கிக்கொண்டே போய், இறுதியில்
’குழந்தைகள் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கட்டும்’ என்றார்.
அதெப்படி முடியும் என்று எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை எனக்கு
அன்றும் இன்றும்.
ஆகச்சிறந்த அறிவிலி நான் என்று
ஏகமாய் துக்கம் சூழ்ந்ததுதான் மிச்சம்.

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்! ச.நாகராஜன்


லெப்டினண்ட் கர்னல் சிஷிர் கோகலே ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் பல்லாண்டு பணியாற்றிய மூத்த டாக்டர். விஞ்ஞான மனப்பான்மை கொண்ட அவர் ஆதிவாசிகளின் “தாழ்ந்த” நிலைமையைக் கொண்டு வருத்தம் அடைந்தார்.
அவர்களை எப்படியேனும் “முன்னேற்ற” வேண்டும் என்று கங்கணம் பூண்ட அவர் தனது “நல்ல காரியத்தை” அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தார்.
நடந்தது என்ன?
அவரே தனது அனுபவத்தை ஒரு கட்டுரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அந்தமானில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளின் குடிசைகள் மிக மோசமாக இருந்தன.அவை மரத்தால் ஆனவை. ஓலைகள் வேயப்பட்டவை. திடீர் திடீர் என்று பெய்யும் கனமழையாலும் வெயிலாலும் பழங்கால முறையிலான கற்களை அடுப்பாக வைத்து விறகை வைத்து சமைக்கும் முறையினாலும் குடிசைகள் பார்க்கச் சகிக்க முடியாதவையாக் இருந்தன.அதனால் அங்கு வாழ்பவரின் கண்கள் சிவந்திருந்தன; சுவாசக் கோளாறுகள் வேறு இருந்தன.

இலங்கைச் செய்திகள்


தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

திருப்பதியில் ரணில் ; கருணாநிதியின் குசலமும் விசாரிப்பு

கத்திமுனையில் இரு சிறுமிகள் கடத்தல் ; சித்திரவதை, அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்பு

யாழில் தொடரும் குள்ளர்களின் அட்டகாசம் ; வேலிக்கு  தீ வைப்பு ; மக்கள்மத்தியில் பெரும் அச்சம் !

யாழில் வாள்வெட்டு  ; இருவர் காயம்

சீனாவின் முதலீடுகள் இலங்கையில் அதிகரிப்பு- இந்தியா கவலைதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

30/07/2018 தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் இன்று  கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிட்னி துர்க்கா ஆலயத்தில் தேர்த் திருவிழாவும் (12/08/2018) ஆடிப்பூர திருவிழாவும் (13/08/2018)
உலகச் செய்திகள்


வடகொரியா புதிய ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம்

ஜப்பானில் ஒரே மாதத்தில் 300 பேர் பலி

எழுந்து  அமர்ந்தார் கருணாநிதி

இம்ரான்கானின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பில்லை; இம்ரான்கான்


வடகொரியா புதிய ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

31/07/2018 கடந்த காலத்தில் ஏவுகணைகளை தயாரித்த அதேபகுதியில் வடகொரியா ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக வாசிங்டன் போஸ்ட்டிற்கு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா - ஜுங்கா திரை விமர்சனம்விஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நடித்து தானே தயாரித்தும் இருக்கிறார். சரி வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி கலக்கியிருக்கும் ஜுங்கா எப்படி இருக்கிறது, பார்ப்போம்.

கதைக்களம்

ஜுங்கா (விஜய் சேதுபதி) தாத்தா, அப்பா இருவருமே கேங்ஸ்டர்கள். தங்களை பெரிய தாதாவாக நினைத்து தங்களிடம் இருக்கும் பணம், சொத்து, தியேட்டர் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். கண்டக்டராக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தன் அப்பா, தாத்தா பற்றிய கதையை அறிகிறார். அவர்கள் இழந்த தியேட்டர் குறித்து அறிகிறார். உடனே அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஜுங்கா.

நடுவில் வரும் பிரச்சனைகளை சமாளித்து ஜுங்கா தன் அப்பா இழந்த தியேட்டரை மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

எல்லா படம் போல தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளார். அதோடு யோகி பாபுவின் கூட்டணியில் வரும் காட்சிகள் எல்லாம் அசத்தல், காமெடிக்கு பஞ்சமே இல்லை. சரண்யா-பாட்டி காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.
அந்த தியேட்டரை மீட்க காமெடி கேங்ஸ்டராக நிறைய விஷயங்கள் செய்கிறார். ஒரு சில பார்க்க ஏற்றதாக இருந்தாலும் சில விஷயங்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைக்கிறது, ஆனால் காமெடி கலந்து இருப்பதால் தவறாக தெரியவில்லை.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதி கெட்டப். பாட்டி, யோகி பாபு காமெடி காட்சிகள்
வசனங்கள் மூலம் வைத்த காமெடி காட்சிகள் அசத்தல்.
பிரான்சில் இருக்கும் பாரிஸ் என்று கூறினால் சென்னையில் உள்ள பாரிஸில் போய் உட்காருவது என சின்ன சின்ன காமெடி காட்சிகளுக்கு தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி சொதப்பல்
கிளைமேக்ஸ் காட்சிகள் முன் பாடல்கள் வைத்தது
கதையின் கதைக்களம் அவ்வளவு ஆர்வமாக இல்லை.
டுவிஸ்ட் என்று எதுவும் இல்லை, வில்லன் வில்லனாக இல்லை.
மொத்தத்தில் சுமார் மூஞ்சி குமாரை எதிர்ப்பார்க்காமல் விஜய் சேதுபதி ரசிகராக வந்து படத்தை வேறொரு கோணத்திலிருக்கும் ஜுங்காவை ரசிக்கலாம்.  நன்றி CineUlagam