மரண அறிவித்தல்

 

திருமதி.புவனேஸ்வரி தர்மலிங்கம்

இலங்கை யாழ்ப்பாணம் மூளாய் ரோட் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.புவனேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் கடந்த 24.10.2021 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேணில் இறைபதம் அடைந்து விட்டார். .

அன்னார் காலஞ் சென்ற திரு.திருமதி.நடராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி.சின்னத்தம்பி நாகரட்ணம் தம்பதிகளின் மருமளும், காலஞ்சென்ற திரு.சின்னத்தம்பி தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பத்தினிபிள்ளை, செல்வராஜா, சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும், காலஞ்சென்ற வில்லவராயன்(மெல்பேண்), சரோஜினிதேவி(மெல்பேண்), தேவராயன்(கொழும்பு),நிர்மலாதேவி(மலர்-மெல்பேண்), சிவயோகராயன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், புஸ்பராணி(மெல்பேண்), ஸ்ரீபாலச்சந்திரன்(மெல்பேண்), ரவீந்திரி(கொழும்பு), சந்திரசேகரன்(மெல்பேண்), யசோதை(சிட்னி), ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரசன்னா, ரியானா, ஸ்ரீசங்கர், ஸ்ரீஷியாம், அபிராமி, அர்ச்சனா, அஜந்தன், சுரேஷ், ஜெனனி, கிரிஷான், சாயீஷன், Adel, Chi, ரம்யா, Sumit, கஜமுகன், கஜன், சரண்யா, ஆரணி ஆகியோரின் பேர்த்தியும், Aiva, Ari, Ella, Zane, Mihira, Adhira ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை தய்வு செய்து உற்றார் உறவினகள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் -

மகள் - மலர் (மெல்பேண் ) - + 61 422 357 894

மகன் - சிவா  ( சிட்னி ) - + 61 417 492 057

பேரன் - சுரேஷ் ( மெல்பேண் ) - + 61 423 065 523

பேர்த்தி - ஜெனனி ( மெல்பேண் ) - + 61 402 758 666

ஶ்ரீ சிட்னி சக்தி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் / ஆஸ்திரேலியா

 "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக வுலகமெல்லாம்"


முழுமையாக காண்பதற்கு:-

தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும் ! [ தேடல் ஒன்று ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 


தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் - தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா ! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

           
             காதொளிரும் குண்டலத்தாள்

            கனிமொழியாள் வாழ்க

            கைக்கு வளையாபதி கொள்

            கன்னிகையாள் வாழ்க

            மேதகு மென்மார்பிடைச்

            சிந்தாமணியாள் வாழ்க

           மின்னுமணி மேகலை சூழ்

           மெல்லிடையாள் வாழ்க

           சீதமலர்ப் பாதமொலி

           சிலம்புடையாள் வாழ்க

விடை பெற்ற இசையமைப்பாளர் இனியவன்

 


இன்று காலை இசையமைப்பாளர் இனியவன் இவ்வுலகை விட்டு மறைந்து போனார் என்ற சோகச் செய்தியை விதைத்தது நண்பர் கல்லாறு சதீஷ் அவர்களது ஃபேஸ்புக் இடுகை.

இனியவன் குறித்து முன்பும் சிலாகித்து எழுதியிருக்கின்றேன். அவரைத் திரையுலகம் வீரியமாகப் பயன்படுத்தியிருந்தால் தொண்ணூறுகளில் முக்கிய இசை ஆளுமையாக விளங்கியிருப்பார்.
இசையமைப்பாளர் இனியவன் அற்புதமான இசையாற்றல் கொண்டவர் என்பதை அவரின் “கெளரி மனோகரி” படம் பறையும்.
அருவி கூட ஜதி இல்லாமல்
சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல்
சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை
சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே .......
லயம் ஒன்றே .........

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 64 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ! “ கடந்து வந்த பாதையை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும். “ முருகபூபதி


1985 ஆம் ஆண்டு நடுப்பகுதி. ஒருநாள் மதிய நேரம்.  வீரகேசரி ஆசிரிய பீடத்திலிருந்து ஒரு செய்தியை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

எனக்கொரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் நண்பர் இராஜகுலேந்திரன். அவர் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவிலிருந்து தொடர்புகொண்டு,   “ பூபதி…. அலுவலகத்தில் மூன்று வாரங்கள் லீவு எடுக்க முடியுமா..? மாஸ்கோவில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக மாணவர் இளைஞர் விழாவுக்கு செல்லும் இலங்கைக்குழுவில் உமது பெயரையும் இணைக்கவிருக்கின்றோம்.  “ என்றார்.

இந்த அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.

அவருக்கு யாதவன் என்றும் புனைபெயர் இருக்கிறது. மல்லிகையில் அந்தப்பெயரில் எழுதுபவர். எனது இனிய நண்பர்.

 “ யாதவன்… என்னிடம் பாஸ்போர்ட்  இருக்கிறது. ஆனால், அது இந்திய பயன்பாட்டுக்கு மாத்திரம். மாஸ்கோ செல்வதானால், அதனை சர்வதேச பயன்பாட்டுக்கு மாற்றவேண்டும்     என்றேன்.

   தாமதிக்காமல் அதனை  மாற்றப்பாரும்.  உமது பெயர்


தெரிவாகிவிட்டது  “ என்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்துவிட்டார்.

அதற்கு சில வருடங்களுக்கு முன்னர்  11 ஆவது  அனைத்துலக விழா கியூபாவில் நடந்தபோது,  அதற்குச்சென்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் ரோகண விஜேவீராவை வழியனுப்புவதற்கு விமான நிலையம் சென்றிருந்தேன்.

அவர் 1977 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் மேற்கொண்ட  முதலாவது வெளிநாட்டுப்பயணம். விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சிலர் ஆங்காங்கே நின்றனர்.

அன்று அங்கே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டு செய்தி எழுதி வீரகேசரிக்கு கொடுத்திருந்தேன்.  அச்சமயம் நான் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தேன்.

கியூபாவுக்கு விஜேவீரா சென்றபோது,  தமிழ்நாட்டிலிருந்து தமிழரசுக்கட்சியின் சார்பில் கவிஞர் காசி . ஆனந்தன் அனுப்பிவைக்கப்பட்டார்.

1985 இலும் அவர் சென்னையில்தான்.  விஜேவீரா  1983 நடுப்பகுதியிலிருந்து தலைமறைவாகியிருந்தார். மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்டிருந்தது.

ராஜகுலேந்திரன் அன்று தகவல் சொல்லி சில மணி நேரங்களில்  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அபுயூசுப் தொடர்புகொண்டார்.

அவரை ஏற்கனவே நன்கு அறிவேன். அவர் கட்சிப்பணிகளுடன் அரசாங்க பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஆங்கிலத்திலும் அரசியல் கட்டுரைகள் எழுதும் ஆற்றல் மிக்கவர். சில நூல்களை எழுதியிருந்தார்.

பாரதி தரிசனம் - அங்கம் 07 கண்ணன் பாடல்களை இயற்றிய கவிஞர்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிய பாரதி ! முருகபூபதி


இலங்கையின் மேற்கு கரையில் இந்து சமுத்திரத்தாயின்  அலையோசையுடன் எங்கள் நீர்கொழும்பூர் விழித்தெழும்போது, எமது வீட்டருகிலிருந்து பாரதியாரின் கண்ணன் பாட்டு ஒலிக்கும்.

ஆசிரியை திலகமணி தில்லைநாதன் எமது வித்தியாலயத்தில்  தமிழ், சமய  பாடங்களை கற்பித்தவாறு மாணவிகளுக்கு பாடலும் ஆடலும் பயிற்றுவித்தவர்.

இத்தனைக்கும் அவர் முறையாக சங்கீதமோ, நடனமோ பயின்றவர் அல்ல. அனைத்தும் கேள்வி ஞானம்தான். அவரிடமிருந்த கற்பனை வளத்தினால் தனது மாணவிகளை கலைத்துறையில் ஈடுபடுத்தி  பயிற்றிவித்து வந்தவர்.

        அக்காலப்பகுதியில்  எமது பாடசாலையில் ( முன்னர் விவேகானந்த வித்தியாலயம்,  பின்னர் விஜயரத்தினம்  இந்து மத்திய கல்லூரி )  நடந்த மாணவர் இலக்கிய மன்ற நிகழ்ச்சிகள், பெற்றோர் தின விழாக்களில்  ஆசிரியை திலகமணி எமக்கு சிறுவர் நாடகமும் மாணவிகளுக்கு நடனமும் பயிற்றுவித்தார்.

அவரது வீடு எங்களுக்கு  சமீபமாக இருந்தது.  அவரது வீட்டிலிருந்து அடிக்கடி நாம் கேட்கும் பாடல் பாரதியாரின் தீராத விளையாட்டுப்பிள்ளை.

எனக்கு ஒன்பது வயதாகவிருக்கும்போது, திலகமணி ஆசிரியையின் வீட்டில்  அந்தப்பாடலுக்கு அவர் அபிநயம் பிடித்து ஆடியதை பார்த்தேன்.

ஈழத்து நாடக நெறியாளர் க.பாலேந்திரா பேசுகிறார் - கானா பிரபா


b.jpg
ஈழத்து மேடை நாடக இயக்கத்தின் மிக முக்கியமானதொரு செயற்பாடாக 48 ஆண்டுகளாக இயங்கி வருபவர் நாடக நெறியாளர் க.பாலேந்திரா அவர்கள். தமிழ் அவைக்காற்றுக் கழகத்தை நிறுவிய வழியே இந்த நாடக இயக்கம் ஈழம் கடந்து இன்று புலம் பெயர் சமூகத்திலும் அவர் குழுவோடு பல்வேறு நாடுகளுக்கும் சென்று நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கின்றது.

ஈழத்து நாடக நெறியாளர் அவர்களோடு வீடியோஸ்பதி தளத்துக்காகவும், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும் நிகழ்த்தியிருந்த பேட்டியின் மூன்று பாகங்களை இங்கே தருகின்றேன். இந்தப் பேட்டியின் வழியே ஈழத்தின் நாடக இயக்க வரலாற்றின் ஒரு பகுதி பதியப்பட்டிருக்கின்றது.

மனமும் உடலும் ஆரோக்கியமும் _ நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .


எமது உடலுக்கு வயதாகி விட்டதா? அல்லது எமக்கு வயதாகி விட்டதா?

ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால் எம்மில் சிலர் வயதானாலும் மனதில் இளமையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் உடல் மட்டும் வயதானவர் என்று கூற முடியும்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு வயதான இளைஞரை பாடசாலை வாசலில் சந்தித்தேன். பேரனை வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருந்தார். 10 வயதான பேரன் பாடசாலை விட்டு வந்ததும் தாத்தாவைப் பார்த்து,  Hi, Tom என அழைத்தான். ஆமாம்; பேரன் தாத்தாவை அப்படித் தான் அழைத்தான்.

அவர்கள் வழக்கப் படி Pop அது தான் தாத்தா என அழைப்பது அவருக்குப் பிடிக்காத விஷயமாம். அப்படி அழைப்பதால் தான் வயதாகி விட்டதாக உணர்கிராறாம். அதனால் வயதாகி விட்டதாக உணர்ந்தாலேகிழம் தட்டி விடும்.’ அதனால் பேரன் தன்னைப் பேர் சொல்லி அழைப்பதே மேல் என்றார் இந்த மனதால் இளைஞரானவர்.

இதைக் கேட்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் அவரது மனோபாவத்தை இரசித்தேன். இப்பொழுது எமது கீழைத்தேயக் கலாசாரத்தை எண்ணிப் பார்த்தேன். பிரம்மச்சாரியம், அதையடுத்து இல்லறம் பின் வானப்பிரஸ்தவம் இறுதியாக சன்னியாசம்.

ஆமாம் இல்லறத்தில் குழந்தைகளைப் பெற்று முறையாக வளர்த்து ஆளாக்கி விட்டால் சன்னியாசத்தை நோக்கி, கடவுளைச் சிந்தித்து, தியானம் பூஜை இவற்றில் ஈடுபட்டு, மோட்ச வழிக்கு புண்ணியம் தேடுவதே நம் இலக்காகி விடும்.


பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ரிக்ஸாக்காரன் - ச. சுந்தரதாஸ் - பகுதி 17

 .

தமிழ் திரை உலகில் உச்ச நடிகர்களாக திகழ்ந்த புரட்சி நடிகர் எம் ஜீ ஆரும் நடிகர் திலக சிவாஜி கணேசனும் 1971ம் ஆண்டு ரிக்ஸாக்காரன் வேடத்தில் இரண்டு படங்களில் நடித்தார்கள் .சிவாஜி நடித்த பாபு படம் கருப்பு வெள்ளையாக சிவாஜியின் குணச்சித்திர நடிப்புக்கு தீனி போடும் படமாக வெளிவந்தது .எம் ஜீ ஆரின் நடிப்பில் வெளிவந்த ரிக்ஸாக்காரன் ஈஸ்ட்மென் கலரில் பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு ஜனரஞ்சக முத்திரையோடு திரைக்கு வந்து கலக்கியது.

எம் ஜீ ஆரின் மானேஜராக பல ஆண்டுகள் பணியாற்றிய ஆர் எம் வீரப்பன் எம் ஜீ ஆரின் அனுசரணையோடு அவர் நடிப்பில் சில படங்களை தயாரித்தார் அந்த வரிசையில் முதல் தடவையாக கலரில் தனது சத்யா மூவிஸ் சார்பில் அவர் தயாரித்த படம் தான் ரிக்ஸாக்காரன்.இப் படம் உருவான கால கட்டத்தில் எம் ஜி ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா ஆனால் ஆரம்ப காலம் தொட்டே வீரப்பனுக்கு ஜெயலலிதாவுக்கும் இடையே சுமுக உறவு இருந்ததே இல்லை.குறிப்பாக தான் இதற்கு முன் தயாரித்த கண்ணன் என் காதலன் படம் எதிர் பார்த்த வெற்றியைப் பெறாததற்கு அப் படத்தில் ஜெயலலிதா பிடிவாதம் பிடித்து பெற்று நடித்த கதாபாத்திரமே காரணம் என்று வீரப்பன் நம்பினார் அதே சமயம் எம் ஜி ஆர் மீது ஜெயலலிதா செலுத்தி வந்த செல்வாக்கையும் அவர் வெறுத்தார் . இந்த நிலையில் ரிக்ஸாக்காரன் ஆரம்பிக்கப் பட்ட போது அதில் ஜெயலலிதா நடிக்க மாட்டார் என்பதில் திடசங்கற்பம் பூண்ட வீரப்பன் அப்போது தான் திரை உலகில் நுழைந்து துணை நடிகையாக விளங்கிய மஞ்சுளாவை படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.இதனால் ஏற்றப்பட்ட மன வடு பிற்காலத்தில் அரசியலில் ஈடுபட்டு முதல்வர் ஆன பின்பும் ஜெயலலிதா மனதில் நீங்காதிருந்து வீரப்பனின் அமைச்சர் பதவி பறி போவதத்கு ஒரு காரணமாக அமைத்தது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யார்..? சர்வதேச சமூகத்தை நாடும் பேராயர் ! அவதானி


இலங்கையில் எது நடந்தாலும், இறுதியில் சர்வதேச சமூகத்திடம் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு முறையிட்டுவரும் காட்சிகள்தான் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

வன்னி பெருநிலப்பரப்பில் தமிழ்மக்கள் கொன்றழிக்கப்பட்டபோதும்  இந்த முறையீடு நடந்தது. இன்றுவரை இந்தக்குரல் ஓயவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட  கோரிக்கையையும்  சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்தல் வேண்டும் எனவும் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது.

தென்னிலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட வேளையிலும் இதுபோன்ற குரல்கள் உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகளை நோக்கி எழுந்தன.

இலங்கை அரசிடம் சொல்லிச்  சொல்லிக்களைத்துப்போனவராக கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,   கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்களை கண்டறிவதற்கு சர்வதேச சமூகம் உதவவேண்டும்   என்று  தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதின்மூன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

   


தென்னையும் பனையும் உருவத்தால்
பயன்பாட்டால் வேறுபட்டாலும் எங்களின் வாழ்வியலோடு இணைந்தே வந்திருக்கிறது. மென்மையாய் தென்னையும் வன்மையாய் பனையும் இருந்த போதும் - இரண்டுமே இனிப்பானவற்றை எங்களுக்குக் கெல்லாம் தந்தபடியேதான் இருக் கிறது..என்பதையும் மறந்துவிடல் முடியாது.பனையைப் பற்றிப் பார்க்கும் வேளை - தென்னையும் வருவது தவிர்க்க முடியாதாகவே இருக்கிறது எனலாம். குடியிருக்கும் வீட்டின் கூரையாய் இரண்டின் ஓலைகளும் இருக்கிறது. வீட்டைச் சுற்றி பாதுகாப்பாய் அமைக்கப்படும் வேலியாயும் இரண்டின் ஓலைகளும் இருக்கிறது.மென்மையா வன்மையா  ? என்று வரும் வேளை வன்மையே முன்னிலை வகிக்கும் நிலைக்கு வந்து விடுவதையே காணமுடி கிறது.மென்மையும் அதனை ஏற்று தனக்குரிய நிலையில் அமைதியாகி விடுவதையும் காணமுடிகிறது என்பதும் நோக்கத்தக்கதே.

கடல்கடந்தும், கம்பனைச் சென்னிமீது தாங்கிநிற்கும் கங்காரு தேசத்துக் கம்பன் விழா!

 

மொழியுரிமை விடயத்தில் தமிழர் தரப்பு அலட்சியம்

 Thursday, October 21, 2021 - 8:06pm

மொழியுரிமை விடயத்தில் தமிழர் தரப்பு அலட்சியம்-13A-Tamil Language

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தமிழுக்கும் உரிமை 1965 ஆம் ஆண்டுகளில் உருவாக்குவதற்கு இணங்கப்பட்ட மாவட்ட சபைகள் யோசனை குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டது. இதுவே உண்மை வரலாறு. மறுக்கவோ மறைக்கவோ முடியாத தெளிவான வரலாறு.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் பல அடிப்படை உரிமைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாததால் அவற்றை அடையும் பகீரதப் பிரயத்தனத்தில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் பிரச்சினைகள் முடிவுறாது தொடர்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுவதைத் தடுப்பதும், உள்ளவற்றைப் பறிப்பதுமான ஒரு தரப்பு. மற்றது தமிழர் தரப்பு. தமிழர் பிரச்சினைகள் எவை? அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்பது பற்றி உரியபடி சிந்தித்துச் செயற்படாத தரப்பு இந்த யதார்த்தத்தை ஏற்க வேண்டும்.

புதர்க் காடுகளில் ( சிறுகதை ) முருகபூபதி

( முன்கதைச்சுருக்கம் :   வீரகேசரியில் 1988   ஆம் ஆண்டு


வெளியான  இச் சிறுகதை,  சிங்கப்பூர்  தமிழ் முரசுவிலும் மறுபிரசுரமானது.  அவுஸ்திரேலியா,  விக்ரோரியா மெல்பன்
3 E A வானொலி ,  குவின்ஸ்லாந்து பிரிஸ்பேர்ண்  தமிழ் ஒலி வானொலி ஆகியவற்றில்  ஒலிபரப்பப்பட்டது.

 இலங்கையில் The Island பத்திரிகையில் Bush walk என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது. மொழிபெயர்த்தவர் திருமதி ரேணுகா தனஸ்கந்தா )

 புதர்க் காடுகளில்   

 நெடிதுயர்ந்த பைன் மரங்கள் செறிந்து வளர்ந்து வாழும் புதர்க்காடுகளுக்குள் நுழையும்போது மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது. 

வசந்த காலத்தை விரட்டியடித்துக் கொண்டு முன்னே

வந்த கோடை காலத்தினால் ஆறு மணியாகியும் சூரியன்

இன்னமும் உறங்கப்போகவில்லை.

புஷ்வோர்க் செல்வதற்கு இதுவே உகந்த நேரமென்று பிரேம்குமார் சொன்னதை நான் முதலில் நம்பவே இல்லை.

சிட்னி துர்கா கோவிலில் சண்டி ஹோமம் 31/10/2021

 


இந்த ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021 அன்று சிறப்பு மங்கள சண்டி ஹோமம் செய்யப்படுகிறது.  இந்த நிகழ்வு விநாயகர் ஹோமத்துடன் தொடங்குகிறது. சண்டி ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்த சடங்கு மற்றும் சிட்னியில் உள்ள துர்கா கோவிலில் பெரிய அளவில் நடக்கிறது.  சண்டி ஹோமம் ஒரு முக்கிய ஹோமம் மற்றும் அனைத்து முயற்சிகளிலும் ஒட்டுமொத்த வெற்றியைப் பெறுவதற்கும், ஒருவரது வாழ்க்கையில் அனைத்து வகையான தோஷங்கள் மற்றும் தடைகளை அகற்றுவதற்கும் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.  தேவி சண்டியின் வடிவத்தில் உள்ள துர்கா அன்னை இந்த ஹோமத்தின் முதன்மையான தெய்வம் மற்றும் அவளுடைய ஆசீர்வாதம் உங்கள் வெற்றி மற்றும் புகழுக்கான பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் தடைகளையும் நீக்கும்.  

மகா சண்டி ஹோமம் நிகழ்த்துதல் 

சண்டி பாதை ஒரு நபரை அனைத்து வகையான தடைகள், எதிர்மறை ஆற்றல்கள், அவருக்கு எதிரான தீய செயல்களில் இருந்து விடுவிக்கிறது மற்றும் நபர் நீண்ட கால ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்.  

இந்த ஞாயிற்றுக்கிழமை சண்டி ஹோமத்தில் பங்கேற்பதன் பலன்கள்:

சிறந்த ஆரோக்கியம், செழிப்பு, நீண்ட ஆயுள், உணவு, செல்வம், சந்ததி, புகழ், வெற்றி, வலிமை போன்றவற்றை அடைய சண்டி ஹோமம் செய்யப்படுகிறது. 

சண்டி ஹோமம் வாழ்க்கையில் தடைகள் மற்றும் தடைகளை சமாளிக்க உதவுகிறது

இலங்கைச் செய்திகள்

புனித பகவத் கீதையின் முதற்பிரதி பாரத பிரதமரிடம் வழங்கி வெளியீடு

ஸ்ரீலங்கா - கனடா பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக சுரேன் ராகவன்

யாழ். வைத்தியசாலை படுகொலை; நினைவுத்தூபி விரைவில்

முகமாலையில் 316 ஏக்கர் காணிகளை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை

ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வரவேற்றுள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்

மகிந்தவின் கோட்டையிலும் வெடித்தது போராட்டம் அதிரும் இலங்கை


புனித பகவத் கீதையின் முதற்பிரதி பாரத பிரதமரிடம் வழங்கி வெளியீடு

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்வுக்காக நேற்று அங்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இலங்கையில் மும்மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பகவத் கீதையின் முதற்பிரதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கிவைத்த போது...

உலகச் செய்திகள்

 கொலின் பவல் காலமானார்

வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசி சோதனை

சீனா தாக்கினால் தாய்வானை பாதுகாப்பதற்கு பைடன் உறுதி

மிக மோசமான பொருளாதார, அகதி பிரச்சினையில் ஆப்கான்

சிரியாவில் காட்டுத் தீ வைத்த 24 பேருக்கு மரண தண்டனை

பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரம்: கட்டுப்பாடுகளை கொண்டுவர அழுத்தம்

வெள்ளம், நிலச்சரிவால் இந்தியா நேபாளத்தில் 200 பேர் வரை பலி


கொலின் பவல் காலமானார்

 Wednesday, October 20, 2021 - 6:00am

கொலின் பவல் காலமானார்-Colin Powell Passed Away

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் கொவிட்-19 நோய்த்தொற்றால் தனது 84 ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் முதல் கறுப்பின இராஜாங்கச் செயலாளர் பதவி வகித்தவர் பவல் ஆவார். “பவல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர், அவரை அன்புடன் கவனித்து சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவரது குடும்பம் பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.

தமிழ் க் கலை மற்றும் பண்பாட்டு க்கழகம் - 2011 - 2021 நன்றி

 

“ விநோதய சித்தம் “ --- தமிழ்த் திரைப்பட விமர்சனம் .


நாயக நடிகர்கள் :              தம்பி ராமையா, P. சமுத்திரகனி.

கதை :                                   ஸ்ரீவத்சன்

திரைக்கதை, வசனம் :     ஸ்ரீவத்சன், விஜி, சமுத்திரகனி.

இயக்கம் :                             P. சமுத்திரகனி.    

 

நீண்ட கால வரலாற்றைக் கொண்டு நடைபோடும் தமிழ்த் திரைப் படங்களின் வரிசையில் எத்தனையோ தரமான திரைப்படங்களைக் கண்டு களித்திருக்கிறோம். அவ் வரிசையில் தற்போது வெளிவந்துள்ள மிகச் சிறந்ததொரு தரமான திரைப்படமே “ விநோதய சித்தம் “ என்ற திரைப்படமாகும்.

 

எப்பேர்ப்பட்ட கதையமைப்பைக் கொண்ட திரைப்படமாக இருந்தாலும் வழமையானஒரே பாங்கில் அமைந்த திரைப்படங்களையே அதிகமாகப் பார்த்து வருகிறோம்.  ஒரே மாதிரியான கதைவன்முறைஅறநெறி தவறிய அரசியல்காதல்இயல்பான வாழ்வின் நடைமுறைகளுக்கு ஏற்பில்லாத கருத்துகள்இளையவர்களையும் சமுகத்தையும் தப்பான வழிக்கு இட்டுச் செல்லும் காட்சிகள் என்றுஅரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கின்ற செயலாகவே பெரும்பாலான திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன என்ற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை.

 

அவ்வகைக்குள் அகப்படாமல்முற்றிலும் மாறுபட்டபுதியதொரு கதைக் கருவுடன்சிந்தனையைத் தூண்டிவிட்டு “ இதுதான் மனித வாழ்க்கை “ என்று உணர வைக்கின்றபுரட்சிகரமான ஒரு தமிழ்ப் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது என்று தைரியமாகப் பெருமையோடு சொல்லக் கூடியதாக வுள்ளது.

 

மாறுபட்ட கதை என்று சொல்லும் போதுஇத் திரைப் படத்தின் கதையானது புதியதொரு கதைக்கரு என்பதையும்கற்பனை என்றாலும் முழுக்க முழுக்க மனித வாழ்வில் அன்றாடம் நடைபெறுகின்ற உண்மையான சம்பவங்களை அப்படியே எந்தவிதமான பொய்க் கலப்புகளுமின்றி எடுத்துக் காட்டுகின்ற ஒரு புதுமையான விளக்கம் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

 

மனித வாழ்வுக்குத் தேவையான கணக்கற்ற தத்துவ விளக்கங்களும்வழிகாட்டல்களும் சைவசித்தாந்தத்தில் நிறைந்துபுதைந்து கிடக்கின்றன. இவற்றில் இரு தத்துவ உண்மைகளையே இத்திரைப்படக் கதைக் குழுவினர் மையப் பொருளாக எடுத்துக் கொண்டுஇதன் கதைக் களத்தை அமைத்திருக்கிறார்கள் என்பது சைவசித்தாந்தம் அறிந்தவர்களுக்கு உடனே புரிந்து விடும் என்தில் ஐயமில்லை. இதற்கான விளக்கங்களைப் படத்தை நுணுக்கமாகப் பார்க்கும் போது புரிந்து கொள்ளலாம் .

 

சைவசித்தாந்தத்தில் முப்பத்தாறு ( 36 ) தத்துவங்கள் தெளிவாகப் பேசப் படுகின்றன. இவற்றுள் “ வித்தியா தத்துவங்கள் ஏழு “ எனக் கூறப் பட்டுள்ளது. காலம்நியதிகலைவித்தைஅராகம்புருடன்மாயை ஆகியவையே அவையாகும்.

அவற்றுள் முதலாவதான “ காலம் “ என்ற தத்துவத்தின் விளக்கமாகவே இத்திரைப் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளமை  சுவையானபுதுமையானவியப்பான செய்தியாகும். சைவசித்தாந்தக் கருத்துகளை மையமாகக் கொண்டும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதற்கு இத் திரைப் படமே தக்க சான்றாகும்.

 

கதைக் களத்துள் நுழைவதற்கு முன்பு“ காலம் “ என்ற தத்துவத்தை மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்டாலே திரைப்படத்தின் கதையை விளங்கிக் கொள்ள முடியும்.

 

“ இவ்வுலகில் ஓரான்மா மனிதப் பிறப்பெடுத்து, போகங்களை நுகருகின்ற போதுஅப் போகங்களைக் கால பேதங்களினால் வரையறை செய்வதே காலம் என்ற வித்தியா தத்துவமாகும் “ என்பது சைவசித்தாந்தம் தருகின்ற விளக்கமாகும். அதாவது மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும்மிகச் சிறிய அசைவுகளையும் காலம் என்ற ஆற்றல் நடாத்திச் செல்கின்றதே யொழிய. மனிதன் தானாகச் செய்யக்கூடிய செயல்கள் ஏதுமில்லை என்பதே இத் தத்துவத்தின் பொருளாகும். இக் கருத்தினை மிகத் தெளிவாக,சுவையாக விளக்கமாகஅழகாகஆழமாக இத்திரைப்படம் எடுத்து விளக்குகின்றமை மிகச் சுவாரசியமாகவுள்ளது.

 

இப்போது திரைப்படத்திற்குள் நுழைவோம். கதாநாயகனாக ‘ பரசுராம் ‘ (தம்பி ராமையா) என்பவரும்இணைக் கதாநாயகனாக, காலம் ( TIME ) என்று தன்னைத் தானே அறிமுகஞ் செய்து கொள்ளும் சமுத்திரகனியும் வருகிறார்கள்.

 

பரசு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர். வீடுகார்நல்ல சம்பளம் என்பன போன்ற வசதிகளோடு வாழ்பவர். அவருக்கு நல்ல மனைவியும்ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். தனது வேலைஉழைப்புகுடும்பத் தலைவன் என்ற நிலைகளில் மேலான எண்ணமுடையவர். தனது சிறந்த வாழ்வுக்கு முழுக்க முழுக்கத் தானும்தனது கடின உழைப்பும்தனது திறமைகளும் சிந்தனைகளுமே காரணம் என்று நம்பிக் கொண்டிருப்பவர். தனது விருப்பப் படியே மனைவிபிள்ளைகள் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

 

இத்தகைய குணாதிசியங்கள் கொண்ட பரசுகார் விபத்தொன்றில் உயிரிழந்து விடுகிறார். அப்போது அவரது உயிர் (அவரது உடலே தான் என்ற  எண்ணப்படி ) காராக்கிருக இருளில் கிடந்து தவிக்கிறது. பரசு தான் இறந்தவிட்டதாக எண்ணவேயில்லை. தன்னிலை புரியாமல் புலம்புகின்ற போது ஒருவர் வந்து பேசுகிறார். பரசுவுக்கு நடந்ததைக் கூறிஅவர் மருத்துவமனையில் பிணமாகக் கிடப்பதையும் காட்டுகிறார். “ யார் நீ ? “ என்ற பரசுவின் வினாவிற்கு “ எப்போதும் Time இல்லை என்று சொல்வீர்களே, அந்த Time, காலம் நான்தான் “ என்று அவர் விடையளிக்கிறார்.

 

இதனால் மேலும் குழம்பிப்போன பரசு “ முடியாது, இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நான் நன்றாகவே, திடமான உடலோடு இருக்கிறேன் “ என்று அலறுகிறார். அதற்கு காலம் “ அது உங்களுக்கு ! எங்களைப் பொறுத்தவரை நீங்கள் வெறும் ஆன்மாதான் “ என்று காலம் ( சமுத்திரகனி) பதிலளிக்கிறது . அதற்குப் பரசுராம் “ இல்லை, எனக்குப் பல கடமைகள் பாக்கியிருக்கின்றன. நான் இல்லையென்றால் என் மனைவி பிள்ளைகளின் நிலை என்ன ? மனைவி நோயிலிருந்து எப்படிச் சுகமடைவாள் ? எனது பிள்ளைகளுக்கு யார் திருமணம செய்து வைப்பார்கள் ? “ என்று அங்கலாய்க்கிறார். அதற்குக் காலம் “ அவற்றைச் செய்ய நீங்கள் தேவையில்லை, அவை தானாகவே நடக்கும். இந்த உலகில் ஒருலருக்காக இன்னொருவரில்லை “ என்று சொல்கிறது.

 

இன்னும் திருப்தியடையாத பரசுராம் “ எனக்கு ஏன் இப்படி நடந்தது ? என் மனைவி பிள்ளைகளின் காரியங்கள் எப்படி நடக்கும் ? என்று விழிக்கிறார். அதற்குக் காலம் அமைதியாகப் பதில் சொல்கிறது,

“ அது கணக்கு ! அவரவர் காரியங்கள் அவரவர் கணக்கின்படி நடக்கின்றன “

( இங்கு “ கணக்கு “ என்றது சைவசித்தாந்தம் கூறும் “ நியதி “ என்ற தத்துவத்தையே குறித்து நிற்கிறது )

 

பிறகு பரசுராம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கிணங்ககாலம் அவருக்கு 90 நாட்களுக்கு வாழ்வதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கிறது. அதனால் பரசுராமின் பூதவுடல் மீண்டும் உயிர் பெற்று எழுகிறது.

 

மீண்டும் வாழ்க்கையை வாழத் தொடங்கிய பரசுராம்தனது வழமையான அலுவல்களைத் தொடர்ந்து செய்கிறார். அவர் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களையும் அவர் செய்ய முயன்றாலும், காலத்தின் கட்டளைகளின் படியே அவரது வாழ்க்கை நிகழ்வுகள் நடைபெறுகின்றனவே தவிரஅவரது விருப்பத்தின்படி எதுவும் நடைபெறவில்லை என்பதைப் படத்தின் பிற்பகுதி சிறப்பாகக் காட்டிக் கொண்டு செல்கிறது. அதற்குச் சான்றாகப் பரசுராமுடனேயே காலம் ( சமுத்திரகனி ) ஒரு நண்பரைப் போல எப்போதும் கூடவே இருக்கிறார் என்பதாகக் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

 

பரசுராம், தன்னாலேயே நிறைவேற்றி வைக்கப்பட வேண்டும் என்று நினைத்திருந்த கருமங்கள் யாவும் ---  அவருடைய பதவியுயர்வுமனைவியின் உடல் நலம்பிள்ளைகளின் திருமணங்கள் போன்றன --- அவரது சொந்த முயற்சிஉழைப்பு ஏதுமின்றித் தானாகவே நடந்தேறுகின்றன. அவற்றை அவரவர் கணக்கின்படி காலமே நடத்தி வைத்து விடுகின்றது. அவர் நினைத்தது போலஎந்தக் காரியங்களையும் அவர் நடாத்தி வைக்கவே இல்லை.

இதனூடாகமனித வாழ்வின் அனைத்து நிழ்வுகளும் காலம்நியதி ஆகிய கண்ணுக்குத் தெரியாத தத்துவங்களினால் நடாத்தி வைக்கப்படுகிறன என்ற பேருண்மையும்சைவசித்தாந்தம் கூறும் காலம்நியதி ஆகிய வித்தியா தத்துவங்கள் இத்திரைப் படத்தின் கதைக் களமாக அமைந்துள்ளன என்ற தகவலும் பெறப்படுகின்றன.

 

இறுதியாக, 90 நாள்கள் நிறைவடையும் போதுபரசுராம் மரணமடைகிறார். அவரொடு காலமும் பேசிக் கொண்டு வருகிறது. வாழ்வின் மர்மங்களை எல்லாம் உணர்ந்து கொண்ட பரசுராம் காலத்திடம் தஞ்சமடைகிறார்.

“ நான் பரிசுத்தமாயிட்டன், நாம போகலாம்  “ என்று பரசுராம் சொல்ல, “ இப்ப நாம போயிட்டுத்தானே இருக்கம் “ என்று காலம் சொல்வது நெகிழ வைக்கிறது.

மேலும் தான் சொர்க்கம் போவதாக எண்ணிய பரசுராம் “ அங்க நான் தமிழ்ல பேசுறன், நீங்க மொழி பெயர்த்துச் சொல்லுங்க என்ன ! “ என்று கூற, அதற்குக் காலம் சொல்லும் பதில் சிந்தனையைத் தூண்டி, சொர்க்கம் எப்படியிருக்கும் என்பதை எமது மனக்கண் முன்னால் கொண்டு வந்து விடுகிறது.

“ சொர்க்கத்தில மொழியே கிடையாது. அங்க சாதிமத பேதம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு எல்லாமே ஒண்ணுதான் “

 

உடனே பரசுராம் “ அப்ப நரகத்தில ? “ என்று கேட்கஅதற்குக் காலம் மிக அமைதியாகப் பதில் சொல்கிறது இப்படி,

“ நாம அங்கிருந்துதானே வர்றோம் ! “

 

இத்துடன் படம் நிறைவடைகிறது. அருமையானஆரவாரமில்லாதபடிப்பினை ஊட்டுகின்ற, குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். தவறாமல் பார்த்து விடுங்கள் !

 

நன்றி

சைவப்புலவர் கல்லோடைக் கரன்.

24/10/2021.