வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995
ஐக்கிய தேசியக் கட்சி - 855
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813
இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

துர்கைஅம்மன் ஆலய சமய அறிவுப்போட்டி 2013

.

துர்கைஅம்மன் ஆலயத்தில் சென்ற 15.09.2013 அன்று இடம் பெற்ற சமய அறிவுப்போட்டியில் கலந்து கொண்ட சிறார்களில் ஒரு பகுதியினரையும் நடுவர்களில் சிலரையும் போட்டியை நடாத்திய குழு உறுப்பினர்களையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.
சமய அறிவுப்போட்டி  வருடம் தோறும் துர்கைஅம்மன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற போட்டி என்பது குறிப்பிடத் தக்கது.

Hartley கல்லூரியின் நான்காவது கலைச்சுவை 2013- Ramesh Nadarajah

.Hartley கல்லூரியின் நான்காவது கலைச்சுவை 2013 நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை 14/09/2013 Bhai centre இல் நடை பெற்று முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கும் ஒரு ரசிகனாக இம்முறையும் சென்றிருந்தேன்.

நேர்த்தியான, தரமான நிகழ்சிகளையும், மிக முக்கியமாக எமது சமூகத்தினரின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் என்பதற்க்காகவே Hartley பழைய மாணவர்கட்கு ஒரு சபாஷ் போடலாம்.

மேலும் பழைய மாணவர்கள் suit அணிந்து பார்வையாளர்களை வரவேற்ற விதம், இந்த நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்தி நின்றது.

சிட்னியில் நாதம் (இசைச் சங்கமம் ) 29 Sep 13

.


வழக்குத் தவணைக்கு வரமாட்டேன்! -(சிறுகதை)-                                                                           பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம். வழமைபோல மக்கள் அங்கும் இங்கும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். சட்டத்தரணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். கட்சிக்காரர்களும், பார்வையாளர்களும் அமர்ந்திருக்கும் இடத்தில் பெரும் பகுதி நிறைந்திருந்தது. சிலர் தங்கள் சட்டத்தரணிகளோடு பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். அன்று கூப்பிடப்படவிருக்கும் வழக்குகளின் கோப்புக்களைச் சுமந்தவாறு நீதிமன்ற ஊழியர் உள்ளே வந்தார். நீதிமன்ற முதலியார் மற்றும் அலுவலர்கள் அவரவருக்குரிய இடங்களில் நின்றுகொண்டும்ää அமர்ந்த கொண்டும் இருந்தார்கள். நீதிமன்றக் கட்டிடத் தொகுதியின் மறு பக்கத்தில் உள்ள மேல்நீதிமன்ற அலுவலகத்தில் வழக்கொன்றிற்கான பதிலுரையைச் சமர்ப்பிக்கவேண்டியிருந்ததால் அந்த வேலையை முடித்துவிட்டு, சற்றுத் தாமதமாக நான் வந்தபோது வழமையாக நான் அமரும் இருக்கையில், கல்முனையில் கடமையாற்றுபவரும்,மாதத்தில் இரண்டொரு தடவைகள் மட்டும் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வருகைதருபவருமான மூத்த முஸ்லிம் வழக்கறிஞர் அமர்ந்திருந்தார். அவரைப்பார்த்து மரியாதை கலந்த புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு, அவருக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரத்தில் வழமைபோல நீதிமன்ற ஊழியரின் “நீதிமன்றம் அமைதி” என்ற குரல் ஒலியைத் தொடர்ந்து நீதிபதி தனது இருக்கையின் பின்னால் உள்ள கதவின் வழியாக வந்தபோது எல்லோரும் எழுந்து நிற்க அவர் மன்றை வணங்கித் தனது கதிரையில் அமர்ந்தார். அவரைத்தொடர்ந்து எல்லோரும் தத்தமது இருக்கைகளில் அமர்ந்தார்கள்.  வழக்குகள் ஒவ்வொன்றாகக் கூப்பிடப்பட்டன. சிறிது நேரத்தில் சரசாவின் தாபரிப்பு வழக்கு கூப்பிடப்பட்டது. வழக்காளி சரசா வரவில்லை.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் -2013 பரிசளிப்பு 29.09.2013

.

கதிர்காமக் கந்தனிடம் போன கதை --கானா பிரபா

.

இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி 
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே! குகனே! சொற் குமரசா!
கறையானைக் கிளையோனே! கதிர்காமப் பெருமாளே!

என்று அருணகிரி நாதரால் திருப்புகழில் சிறப்பிக்கப்பட்ட தலமாக விளங்குகின்றது கதிர்காமம்.
என் நினைவு தெரிய நான் போனதில்லை. என் சின்ன வயசியில் எப்போதாவது கூட்டி வந்திருக்கலாம் என்று அப்பா சொன்னார். என் அப்பாவும் அம்மாவும் மலையகத்தில் ஹட்டன் என்ற இடத்தில் ஆசிரியர்களாக இருந்ததால் அங்கிருந்து பஸ் மூலம் கதிர்காமத்துக்கு வந்திருக்கிறார்களாம்.
கடந்த வருடம் கதிர்காமத்துக்குப் போயிருக்க வேண்டியது, கொழும்பிலிருந்து ஆறு மணி நேரம் வரை பயண நேரம் பிடிக்கும் இந்தப் பயணத்துக்குத் தனியே செல்லவேண்டாம் என்று வீட்டாரின் எச்சரிக்கை, அதையும் மீறி ஏதாவது பொது பஸ் சேவையில் கூட்டத்தோடு கூட்டமாகப் போகலாம் என்று நினைத்து பொதுப் பேரூந்து நிலையம் சென்று விசாரித்தால் கதிர்காமம் போகும் பாதையில் கடும் மழை காரணமாக மண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஆதலால் பஸ் ஓட்டம் இல்லை என்றார்கள். எனவே கடந்த ஆண்டு கதிர்காமம் போகும் கொடுப்பினை இல்லை அடுத்த முறையாவது கண்டிப்பாக முருகனிடம் செல்லவேண்டும் என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன். 

இலங்கைச் செய்திகள்சிராணி வெளிநாட்டுக்கு செல்ல நீதிமன்றம் தடை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம்

ஜனாதிபதி – கே.பி சந்திப்பு

களனி பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி: போக்குவரத்து பாதிப்பு

உயரம் குறைந்த முன்னாள் போராளி உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பதுமன் விடுதலை

தொண்டமானாறு பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

 கிளிநொச்சியில் பூசாரி கொலை
----------------------------------------------------------------------------------------------------------


சிராணி வெளிநாட்டுக்கு செல்ல நீதிமன்றம் தடை

16/09/2013  முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜராகியுள்ள நிலையிலேயே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் பதவிவகித்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி  

மாநாடும் மாணவர்களும் -- அன்பு ஜெயா

.
                                                                                                                        


ஆஸ்திரேலியாவின் அழகுமிகு நகரமான சிட்னியில் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6, 7, 8 தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் முக்கியக் நோக்கங்களில் ஒன்று தமிழின் தொன்மையையும் அதன் சிறப்பினையும் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதாகும். இதற்கான முதல் முயற்சியாக மாணவர்களிடமிருந்து சங்க இலக்கியங்கள் பற்றி சிறிய அளவிலான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்று உற்சாகப்படுத்த வேண்டுமென்று முடிவு செய்யப் பட்டது.  அதற்காக சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் ஒவ்வொன்றின் மூலமும், மற்ற இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு  இணையத்தின் மூலமும், வானொலி மூலமும் அழைப்புகள் விடப்பட்டன.

"திரையில் புகுந்த கதைகள்" #100YearsOfIndianCinema --Kana Praba

.ஆறு வருஷங்களுக்கு முன்னர் நான்"திரையில் புகுந்த கதைகள் என்ற வானொலிப்படைப்பை வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை முன்னர் என் வலைப்பதிவிலும் கொடுத்திருந்தேன். இந்திய சினிமா நூற்றாண்டின் தொடர் சிறப்புப் பகிர்வுகளில் ஒன்றாக அதை மீளவும் பகிர்கின்றேன். மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இதோ:

1. 47 நாட்கள் திரைப்படம்
மூலக்கதை: 47 நாட்கள்
எழுதியவர்: சிவசங்கரி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: சிரஞ்சீவி, ஜெயப்பிரதா

2. உதிரிப்பூக்கள்
மூலக்கதை: சிற்றன்னை (படத்தில் பல மாற்றம் செய்யப்பட்டது)
எழுதியவர்: புதுமைப்பித்தன்
இயக்கம்: மகேந்திரன்
நடிப்பு: அஸ்வினி, விஜயன்

திரும்பிப்பார்க்கின்றேன் -08 இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துலகம்

.
                                                                                                                      முருகபூபதி

உச்சிவெய்யிலில்   காய்ந்து    மழையில்   நனைந்தோம்
இந்திரா  பார்த்தசாரதியின்   எழுத்துலகம்புகலிடத்துக்கு   வந்து   கால்  நூற்றாண்டுகாலத்தின்    பின்னர்    எனக்கு   ஒரு  உண்மை   தெரிந்தது.    தாயகத்தின்   போர்  அநர்த்தங்களினால்  அதிலிருந்து  தப்பிவந்தவர்கள்,   ஓடி  ஓடி  உழைத்து  தேட்டங்கள்   தேடினார்கள்.   பிள்ளைகளை  படிக்கவைத்து   பட்டங்கள்   பெறுவதற்கும்  தொழில்  வாய்ப்பு  பெறுவதற்கும் கடினமாகப்பாடுபட்டார்கள்.   ஊரிலிருக்கும்   உறவுகளுக்கும்   உதவினார்கள்.   கார்,  வாகனங்கள்,   வீடுகள்   என்று   சகல   சௌகரியங்களும்    பெற்றார்கள்.   விடுமுறை   காலங்களில்   விமானங்களில்  உலகை   வலம்  வந்தார்கள்.   விருந்துகளிலும்  ஒன்றுகூடல்களிலும்    குதூகலமாக   பொழுதை   கழித்தார்கள்.   அதே  நேரம்  ஓடி   ஓடி  இயந்திர  கதியில்   உழைத்தார்கள்.   எல்லாம்  இருந்தும்  எதனையோ  இழந்துவிட்ட   சோகம்  அவர்களை  வாட்டிக்கொண்டுதான்   இருக்கிறது.
இழந்தது   என்ன?   மகிழ்ச்சியா…?  ஓய்வா…?   நட்புகளா…?  உறவுகளா…?  வாழ்க்கையா…?   எல்லாம்   தேடிவிட்டு    மகிழ்ச்சியைத்தொலைத்தவர்கள்   நம்மில்   எத்தனைபேர்?


உலகச் செய்திகள்

மீண்டும் அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

மரதன் ஓட்டம் மூலம் 20 மதாங்களில் உலகை சுற்றிய நபர்

இந்தோனேசிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

அக்னி 5 ஏவுகணை: மறுபடியும் வெற்றிகரமாக பரிசோதனை

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நிமிர்த்தப்பட்ட இத்தாலிய கப்பல்
---------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள கடற்படை தளமொன்றுக்குள் நுழைந்த நபரொருவர் நேற்று காலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள், பொலிஸார் என 15 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இத்தாக்குதலை மேற்கொண்ட நபரை அமெரிக்க சிறப்பு ஆயுதப்படை பிரிவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
குறித்த நபரின் பெயர் அரோன் எலக்ஸிஸ் எனவும் அவர்  முன்னாள் கடற்படை வீரர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


இராமநாத பாதமே நிழல் என்று அஞ்சலி - SRIVIDYA INDRASARMA SYDNEY

.

பாலூட்டி வளர்த்த பாட்டி எமையெல்லாம் உறவுக்குள் காட்டி
பலருக்கு உன் அன்பைப் பூட்டி அமைதியாய் பாசத்தைக் கொட்டி எம் 
நெஞ்சில் நிறைந்த இமயப்பெட்டியே கொஞ்சிக்குலாவியஇராசம்மாவே
பஞ்சு நிறைந்த தலையணையில் துஞ்சலுற்றிரோ!

பேரன் பேத்தி பெயரளவில் பலராகி பூட்டன் பூட்டி பெரிதாகப் பரந்து
கொள்ளுப்பேரன் பேத்திஎனஅள்ளி வளர்ந்த ராசம்மா விழுது
என்றென்றும் நினைவில் இருந்து மீளாது மனம். 
தானுண்டு தனக்குண்டு எனத் தனியாகத்தான் நடந்து-பிறர்
தவிக்கவிடாது உணவூட்டி பாச உணர்வூட்டித்தந்த உத்தமி

இதயங்கள் பல இருந்தாலும் தன் இருப்பிடம் இணுவில்
என இராமநாத பாதமே நிழல் என்று இறைபதம் பெற்றீரோ!

உலகத்தமிழ் இலக்கிய மாநாடு


சிட்னியில் 6ம் 7ம் 8ம் திகதிகளில் சிட்னி தமிழர் மண்டபத்தில் நடந்த உலகத்தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி தமிழர்களை மட்டுமல்லாது உலகத்தமிழர்களை ஒன்றுகூட்டியிருந்தது. விஜிபி உலகத்தமிழ்ச்சங்கமும் தமிழ்இலக்கிய கலைமன்றம் ஒஸ்ரேலியாவும் சேர்ந்து இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.


காலை மாலை என்று மூன்று நாட்களும் நடந்த இந்த தமிழ் மாநாட்டிற்கு பிரபல தொழிலதிபரான செவாலியர் டாக்டர் வி ஜி சந்தோசம் பிரதம நீதியரசர் வள்ளிநாயகம் கவிக்கோ அப்துல் ரகுமான் முனைவர் அவ்வை நடராஜன் முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலஸ்மி ராமசாமி ரிகே எஸ் கலைவாணன் முனைவர் பத்மநாதன் இப்படி மாபெரும் அறிஞர்கள் பேச்சாளர்கள் என்று மேடையில் தமிழ்முழக்கம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாகவும் கிடைத்தற்கரிய ஒரு தமிழ் விழாவாகவும் இருந்தது.13 வது வருடமாக நடைபெறவுள்ள Taste Of India 29.09.2013

.


மெல்பேர்னில் வருடந்தோறும் நடைபெறும் Taste Of India  நிகழ்ச்சி இம்முறை 13வது வருடமாகக் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஸ்ரீமதி.சிவகங்கா சகாதேவன் அவர்களின் நெறியாள்கையில் ஒழுங்கமைக்ப்படும் இந்த நிகழ்ச்சியில் பரத்தாலயா அக்கடமி மாணவ, மாணவியரின் வாய்ப்பாடல், வீணை, மிருதங்கம் என பல்வேறு தரப்பட்ட தரம்மிக்க படைப்புக்கள் நடைபெறவுள்ளன.
இம்முறை விஷேசமாக தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரபல பாடகி, நடிகை, படத்தயாரிப்பாளருமான ஸ்ரீமதி.சைலஜா, மற்றும் பல பங்கு பற்றி சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த வருடம் Taste Of India நிகழ்ச்சியில் மேடை நிகழ்ச்சிகள், பரீட்சைப் பட்டறைகள் என 9 நாடகள் நடைபெறவுள்ளன. 
Darebin Arts & Entertainment Centre
Cnr Bell St & St.Georges Rd, Preston
Taste Of India வின் இரண்டாவது பகுதியாக Darebin Arts & Entertainment Centre. Preston ல் குறும் படத்தயாரிப்புகள், சித்திரம் வரைதல், வாய்ப்பாட்டு, வீணை, பியானோ, நடிப்புக்கலை, கதை சொல்லுதல், பேசுத்திறனை வெளிப்படுத்துதல் ஆகிய துறைகளில் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறவுள்ளது. 

ஈழத்திற்குப் பெருமை சேர்த்த இசையரசன் குலசீலநாதன்..!

.
                                                          வி. ரி. இளங்கோவன்.


அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது..!
1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் 'குத்துவிளக்கு" என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே.." என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் 'ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…" என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது..!

ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன்.
பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு - நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த 'கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா.." போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம்.
அவர் எங்கள் அன்புக்குரிய 'பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதைää பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்டää இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..!

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் - 2013

.
வி ண் ணப்ப  முடிவு திகதி 28 ஜூலை 2013


தமிழ் சினிமா

ஆதலால் காதல் செய்வீர்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்றாங்க அனைவரும், இது தான் ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஒரு வரி விமர்சனம்.
நாயகி மனிஷாவிடம் நண்பனாக பழகிவரும் நாயகன் சந்தோஷ், மனிஷாவை ஒருதலையாய் காதலிக்கிறார்.
ஒருகட்டத்தில் தன் காதலை மனிஷாவிடம் நாயகன் சொல்ல, முதலில் மறுக்கும் மனிஷா பிறகு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இவர்களுடைய காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது.
மாமல்லபுரம் சென்று ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள். இதனால், மனிஷா கர்ப்பமாகிறாள்.
இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் அந்த கருவை கலைக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால், அது முடியாமல் போகவே இருவருடைய பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது.
இவர்கள் ஒன்று சேர முதலில் சந்தோஷின் சாதியும், அவனுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் தடையாக வருகிறார்கள்.
சந்தோஷின் அப்பா அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருப்பதால் மனிஷாவின் பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இதிலிருந்து தப்பித்து, இவர்களின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? மனிஷாவின் வயிற்றில் உருவான கரு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
சந்தோஷ், இன்றைய சூழலில் வாழும் யதார்த்தமான வாலிபனுக்குரிய தோற்றத்தில் அழகாக இருக்கிறார்.
நாயகி மனீஷா யாதவ், ஸ்வேதாவாக தனது அறிமுகப்படமான ‘வழக்கு எண் 18/9’-ல் நடித்ததை விட பிரமாதமாக நடித்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.
மனிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகள் களங்கப்பட்டு நிற்கும் போது கண்கலங்கி நம்மையும் கண்கலங்கச் செய்கிறார்.
சந்தோஷின் அம்மாவாக வரும் பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே.
அதேநேரத்தில் மனிஷாவின் அம்மாவாக நடித்துள்ள துளசி அன்பு, ஆவேசம் என இரண்டும் கலந்த கலவையாக நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்.
அந்த ஐடியா நண்பர் அர்ஜூன், நமக்கு இப்படி ஒரு நண்பர் இல்லையே என ஏங்க வைக்கிறார்.
முதல்பாதியில் கல்லூரி காதல், நகைச்சுவை என படம் ஆரம்பித்து, படிப்படியாக தமிழகத்தின் சாதீய காதலை கையில் எடுத்து, படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
ஆனால், கிளைமாக்ஸில் நாம் நினைத்ததைவிட வேறுவிதமாய் முடித்திருப்பதில் சிகரம் தொடுகிறார் இயக்குனர்.
படத்தின் தலைப்பை வைத்து இயக்குனரை எடைபோட முடியாது.
சமூக அவலங்களை நையாண்டியுடன் குண்டூசியால் குத்திக் காட்டி, இன்றைய கால சூழலில் வாழும் காதலர்களுக்கு பாடம் புகட்டுகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் தாலாட்ட வைக்கிறது.
மறைந்த கவிஞர் வாலி எழுதிய ‘தப்புத்தண்டா’ பாடல் வரிகள் துள்ளல் போட வைக்கிறது.
சூர்யாவின் ஒளிப்பதிவு, படத்துக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இவருடைய ஒளிப்பதிவில் மெருகு ஏறியிருக்கிறது.
ஆக மொத்தத்தில், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ - ‘காமம் செய்யாதீர்’ எனும் மெஸேஜ் சொல்லும் ப(பா)டம்!!

நன்றி விடுப்பு