மரண அறிவித்தல்




திருமதி தங்கம்மா தியாகராசா


யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்  Epping, Sydney இல் தற்போது வசித்து வந்தவருமான திருமதி தங்கம்மா தியாகராசா 13.08.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர், காலம் சென்ற வல்லிபுரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் அழகரத்தினம், பொன்னம்மா, அருளம்மா, செல்லம்மா, தில்லைநாதர், மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஓய்வுபெற்ற யாழ். பிரதம தபால் அதிபர் தியாகராசாவின் அன்பு மனைவியும் தயானி சிவச்சந்திரன் (Epping, Sydney), வரதன்(Greenford, UK), தயாளன்(New Jersey, USA) ஆகியோரின் அன்புத் தாயாரும் சிவச்சந்திரன், கௌரி, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆரபி, பூமிதா, தாமாரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவர்.

இவரின் பூதவுடல் Liberty Parlour, 101 South Street, Granville இல் வெள்ளிக்கிழமை (17.08.2012) மாலை 6:00 மணி தொடக்கம் 8:30 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கரியைகள் 41 Dorset Street, Epping இல் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (18.08.2012) முற்பகல் 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை இடம்பெற்று, தகனக்கிரியைகள் பிற்பகல் 12:30 மணி தொடக்கம் 1:15 மணி வரை South Chapel, Rookwood  Cemetery இல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு: சிவச்சந்திரன் 0417 064 847 அல்லது 0433 519 577 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்

மரண அறிவித்தல்

.               திரு.சிவசிதம்பரம் தில்லைராஜா 
                  (பரம் தில்லைராஜா)
                                 
            தோற்றம்: 14.11.1925  மறைவு : 11.08.2012

Viewing 
Tuesday 14.08.12
Time 6pm - 9pm
Venue - Strathfield Town Hall, Homebush Road
 
Funeral Ceremony
Wednesday - 15.08.12
Time 10 am - 12 pm
Venue - 41, Augusta Avenue, Strathfield
 
Funeral
Time 12.30pm - 2.30pm
Venue - South Chapel, Hawthrone Avenue, Rockwood Cemetery

சிட்னியில் திரு பரம் தில்லைராஜா அவர்கள் 11-08-2012ம் திகதி சனிக்கிழமை காலமானார்.

The Late Mr. Sivasithamparam Thillairajah


1925- 2012
The Late Mr. Sivasithamparam Thillairajah (popularly known as Param Thillairajah) was born on 14 November 1925 in Jaffna Sri Lanka to Sivasithamparam and Alagammah. He had 5 siblings, Param Thevarajah, Param Selvarajah, Param Singarajah, Thangamalar and Parameswary.

Mr. Thillairajah received his school education at St. Johns College Jaffna. At school Mr. Thillairajah took a keen interest in athletics and sports. He was the athletic captain of the House he belonged to and also was a school prefect. As a sports all-rounder he played foot ball, cricket and tennis and also he played billiards and became champion at a YMCA tournament.

சாதனைகளுடன் நிறைவடைந்தது லண்டன் ஒலிம்பிக் திருவிழா




By M.D.Lucias
13/08/2012
Alight: Fireworks explode into the London night sky as the Olympic closing ceremony comes to a spectacular endபிரிட்டனில் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கிய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது.

உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட்டின் சாதனை, அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸின் பதக்க சாதனை மற்றும் ஓய்வு, பல்வேறு உலக சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் சாதனைகளுடன் முடிவுக்கு வந்தது 30-வது ஒலிம்பிக் போட்டி.
  

ஸ்ரீ சிறுடி சாய் பாபாவின் கோவில் பூமி யாகம் 12/08/2012

 - கு கருணாசலதேவா
 சென்ற சனிக்கிழமை 11-08-2012ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலிற்கு அருகாமையில் அமைந்துள்ள காணியில் புதிதாக ஸ்ரீ சிறுடி சாய்  பாபாவின் கோவில் கட்டுவதற்கான ஆரம்பவேலை பூமி யாகத்தோடு ஆரம்பமாகியது. நியூ யோர்க்   கிலிருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ சைடன்யானந்தா நாதா சரஸ்வதி  Sri Chaitanyananda Natha Saraswati  (ஹரன் ஐயா) அவர்கள் இந்த யாகத்தை காலை 10 மணி தொடக்கம் மிகச்சிறப்பாக நடாத்தியிருந்தார்.  வருகைதந்துள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் அனைவரும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு புதிய கோயில் கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடாத்தி வைத்தார்கள். வாகன வசதியில்லாத பக்தர்களுக்கு லிட்கம் புகையிரத நிலையத்திலிருந்து பஸ் சேவை செய்யப்பட்டிருந்தது. பிறபகல் 1 மணியளவில் மதியஉணவோடு இந்நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
வீடியோ கீழே 

படங்கள் கீழே

படப்பிடிப்பு :   ஞானி



இசை என்ற இன்ப வெள்ளம் - சின்னப்பயல் -



எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப்பேசுவது போல  90களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா? இப்போதைய இசை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணம் செய்கிறதா? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் தங்கள் வாழ்வோடு இணைத்துப் பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா?
எனக்குத்தெரிந்து ரஹ்மானையும் யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இணையத்தில் விவாதிக்கிறார்கள். அவர்கள் கூட சில நாள்களுக்குப்பிறகு இளையராஜாவுக்கு தாவிவிடுகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரிஜினாலிட்டி தேடிப் போகும் இயல்பு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? இப்போதைய இசையமைப்பாளர்கள் பூர்த்தி செய்யத் தவறும் இடம் இதுதான். அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட (interlude) ரசித்தனர். இப்போது? இப்போதைய இசை பற்றியோ இசையமைப்பாளர்கள் பற்றியோ அவர்கள் நம்மீது செலுத்தும் தாக்கம் பற்றியோ ஏதேனும் விவாதங்கள் நடைபெறுகின்றவா?

இன்னொரு முகம்



- கே.எஸ்.சுதாகர்

முகம்:  ஒன்று
பதட்டமான நாட்கள். எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். புகைப்படங்களை எடுத்துக் கொண்டு 'போட்டோ குறோம் கலர் லாப்'பை விட்டு வெளியேறும்போது நேரம் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. காலிவீதியில் ஒரே சன நெரிசலாக இருந்தது. தெருவைக் குறுக்காகக் கடந்து மறுபுறம் இருக்கும்  'பஸ் ஸ்ரொப்'பை நோக்கி நடப்பதில் அவதானமாக இருந்தேன்.

            "சந்திரன்! சந்திரன்!!" எதிர்ப்புறமிருந்து யாரோ என்னைக் கூப்பிடுவது போலிருந்தது.
            "அட சிவநாதன்! இவன் என்னண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தான்?"

திடீரென்று அவனைக் கண்டதில் மனம் ஆடிப்போய் விட்டது. உடம்பு வியர்வையில் நனைந்து பதறத் தொடங்கியது. நேரடியாக என்னை அடையாளம் கண்டு கூப்பிடும்போது இனித் தப்ப முடியாது. சுருக்கமாகச் சொல்வதானால் அவன் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவன். பல கொலைகளைச் செய்தவன். வங்கிக் கொள்ளை, குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டவன். கழுத்திலே ஒரு கனமான 'பாக்'குடன், தூக்க முடியாமல் களைத்து விழுந்து வந்து கொண்டிருந்தான்.

செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய 'கியூரியோசிட்டி'



By Kavinthan Shanmugarajah
06/08/2012
செவ்வாய்க் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலமானது  வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.

இவ்விண்கலம் சுமார் 8 மாதங்கள் 352 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய்க்கிரகத்தை அடைந்துள்ளது.

'கியூரியோசிட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் விண்கலமானது இன்று அதிகாலை செவ்வாய்க்கிரகத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக நாசா அறிவித்துள்ளது.
Nasa3

உலகச் செய்திகள்


 சீனாவில் மண்சரிவு: 100 பேரைக் காணவில்லை

 அமெரிக்காவில் சீக்கிய கோயிலில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

ஈரான் மீது அமெரிக்க மேலும் பொருளாதாரத் தடை 

 சிரிய கிளர்ச்சியில் இணைந்து கொள்வதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிரதமர் 

இலக்கிய சந்திப்பு - 5 பற்றிய என் பார்வை - யசோ


.
அன்புள்ள இலக்கியத் தோழைமைகளே,

எல்லோரும் நலம் தானே? உள்ளங்களும் நலம் தானா?

கடந்த மாத இறுதி ஞாயிறில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு - 5 பற்றிய என் பார்வையை இத்துடன் அனுப்பி வைக்கிறேன். என் வலைப் பூவான 
www.akshayapaathram.blogspot.com என்ற வலைப்பக்கத்திலும் இது பிரசுரமாகி இருக்கிறது. இதில் தவற விடப்பட்ட அல்லது தவறாக எழுதப்பட்ட அல்லது மனதை நோகப்பண்ணும் ஏதேனும் இருந்தால் தயவு செய்து எனக்கு அதனை அறியத்தாருங்கள். 


மனைவி – என் மனைவி

மனமெங்கும் வியாபித்திருப்பதால்
மனைவியோ? – வாழ்வு முழுக்க
துணையாய் வருவதனால் துணைவியோ?

மனதுக்குள் எழுந்ததொரு
பட்டிமன்றம் – ஒவ்வொருவர்
மனதையும் படம் பிடிக்கவே
சோதரியினிந்த வட்டமன்றம்!

சிறுவர் இலக்கியமும் சிறுகதை இலக்கியமும்

.
முருகபூபதி

 சிறுவர் இலக்கியம் மேனாட்டு மொழிகளில் வளர்ச்சிபெற்ற அளவுக்கு தமிழில் வளரவில்லை. அல்லது வளர்க்கப்படவில்லை. முன்னொரு காலத்தில் எமது தாயகத்தில் பாட்டிமார் தமது பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் மரபு இருந்தது. ஆனால் இப்போது பாட்டிமாரும் பேரப்பிள்ளைகளும் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
 இன்றும் நாம் முன்னர் சிறுவயதில் படித்த அல்லது கேட்ட பாட்டிமார் சொல்லித்தந்த கதைகளை நினைவில் வைத்து போற்றுகின்றோம். எமது குழந்தைகளுக்கும் அவற்றை திருப்பிச்சொல்ல முயற்சிக்கின்றோம்.
 ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தற்காலத்திய வீடியோ கேம் எனப்படும் கணினி தொழில் நுட்பமும் அவர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்திக்கொண்டிருக்கின்றன. புகலிட நாடுகளில் வளரும் குழந்தைகளுடன் இந்த வீடியோ கேமும் நாளொரு வண்ணமும் பொழுதொரு கோலமுமாக வளர்ந்து எமது குழந்தைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

இலங்கைச் செய்திகள்


  சட்டவிரோதமாக ஆஸி. செல்லவிருந்த 93 பேர் கைது 

 வவுனியா சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு கைதி மரணம்

இம்மாத நடுப்பகுதிக்குள் எஞ்சியவர்கள் மீள்குடியமர்த்தப்படுவர் - கோத்தபாய

ஓமந்தை - காங்கேசன்துறை ரயில் பாதை மீள்கட்டுமானப் பணிகள் 2014 இல் முடிவடையும் - கோத்தபாய




Dr K J Yesudas Golden Jubilee Live in Concert 18-19/ 8. 12

.

முத்தமிழ் மாலை 2012

தமிழ் சினிமா

மாலை பொழுதின் மயக்கத்திலே


மழை, காபி ஷாப், பின்னணியில் இளையராஜாவின் இனிமையான பாடல், குறைவான கதாபாத்திரங்கள், பின்புலமாக அவர்களின் உணர்ச்சிகள், மழையின் சத்தத்தோடு இணைந்திருக்கிற இசை, எங்கேயும் உறுத்தாத தொழில்நுட்பங்களோடு ஒரு நல்ல சினிமா.
இரண்டு மணி நேரத்திற்குள் நடக்கிற நிகழ்வுகளை உரையாடல்கள் மூலம் இரண்டு மணி நேர சினிமாவாக்கிய தைரியத்திற்கே இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.
தன் முதல் திரைப்படத்தை இயக்க இருக்கும் அஜய், அதில் சின்ன சறுக்கலை சந்திக்கிறான். இதிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி ஷாப் வருகிறான்.
அதே காபி ஷாப்பில் மணவாழ்க்கையில் முரண்பட்ட தம்பதிகளான சதீஷ் - ரம்யாவும் இருக்கிறார்கள்.
இருவரின் முரண்பாடும் வளர்ந்து மண முறிவு செய்து கொள்ளலாம் என்று ரம்யா முடிவெடுக்கிறார். சதீஷ் தன் மனக்குமுறல்களை எல்லாம் அவனுக்கு சினேகமாயிருக்கும் காபி ஷாப் மேனேஜரிடம் கொட்டுகிறான். நிதானமாகவும், தீர்க்கமாகவும் முடிவெடுக்கும் அவரின் அறிவுரையில் ரம்யாவுடன் ஒத்துப்போக சம்மதிக்கிறான்.
இதற்கிடையில் காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் அஜய்யின் எதிரே வந்து அமர்கிறார் ஜியா. பார்த்தவுடன் வீழ்த்திவிடுகிற அழகு. மெல்ல மெல்ல விழும் மழை இருவரையும் சினேகமாக்குகிறது. அது அஜய்-க்குள் காதலாக மாறுகிறது.
அஜய் ஜியாவிடம் தன் காதலை சொல்கிறான். காதலில் தனக்கு நம்பிக்கையில்லை என்று சொல்லும் ஜியா, தான் மேல் படிப்புக்காக நாளை அவுஸ்திரேலியா செல்ல இருப்பதைச் சொல்லி பிரிகிறாள்.
அஜய் மழையில் நனைந்தபடி காபி ஷாப்பின் வெளியே வந்து நிற்க, கடந்த இரண்டு மணி நேர அஜய்யின் நினைவுகள் ஜியாவுக்குள்ளும் காதலை உண்டாக்குகிறது.
சின்னப் பிரிவுக்கு பின், ஜியா திரும்பி வருகிறாள். மழையில் நனைந்து கொண்டிருக்கும் அஜய்யிடம் தன் காதலை சொல்கிறாள். முடிவு ஒரு அழகான கவிதையாக முற்று பெறுகிறது.
கதாநாயகன் அஜய்யாக ஆரி. உணர்வுகளுக்கும் வசனங்களுக்கும் அதிக வேலை என்பதால் இயல்பாக நடித்திருக்கிறார். லேசான சிரிப்போடு, அழகான கண்களோடு எட்டிப் பார்க்கும் கதாநாயகி ஜியா அழகான புதுவரவு.
நடுத்தர வர்க்க தம்பதி சதிஷ்- ரம்யாவாக, பாலாஜி- தேஜஸ்பினி. பொருத்தமான பாத்திர தேர்வு. பாலாஜி, பஞ்சு சுப்புவிடம் தன் மனவலியை ஒரு கதையோடு ஒப்பிட்டு புலம்புவது நல்ல நடிப்பு. பஞ்சு சுப்பு படத்தில் அவரது குணநலன்களுக்காகவே மனதில் நிற்கிறார். யதார்த்தமான வடிவமைப்பு அவரது கதாபாத்திரம்.
கதையோடு ஒட்டி நிற்கும் சதீஷ், சிவாஜி, கருணா ஆகியோரின் நகைச்சுவை இயல்பை மீறாமல் படமாக்கியது மனதில் நிற்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் இசையும், ஒளிப்பதிவும். இசையமைப்பாளர் அச்சுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் நம்மை உணர்வோடு ஒன்ற வைத்திருக்கிறது. பின்னணி இசையில் எங்கேயும் அளவை மீறவில்லை. ‘என்னுயிரே’ பாடல் மனதை வருடும் அருமையான மெலடி.
ஒளிப்பதிவு கோபி அமர்நாத். முழுக்க முழுக்க ஒரு காபி ஷாப்புக்குள்ளே கதை நகர்வதால் அதற்குள்ளாகவே அழகாக படம் பிடித்திருக்கிறார். ‘ஏன் இந்த தீடீர் மாற்றம்’ பாடல் படம் பிடித்த விதம் அருமை. எடிட்டர் தியாகராஜன் மெதுவான கதையோட்டத்திற்கு ஏற்ப கட் செய்திருக்கிறார்.
‘லைஃப்பே நம்மள சீரியஸா எடுத்துக்கல. நாம ஏன் லைஃப்பை சீரியஸா எடுத்துக்கணும்’. ‘கல்விதான் கடைசி வரை கூட வரும்’ என்பது மாதிரியான தோழமையான வசனங்களும், குறும்பான வசனங்களும் படம் முழுக்க வந்து படத்தை முழுவதுமாக பளிச்சிட வைக்கிறது.
படத்தை இயக்கியிருக்கும் நாராயண நாகேந்திர ராவ் தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்த முயற்சித்ததற்காகவே நல்ல சினிமாவுக்கான நம்பிக்கை தருகிறார்.
படத்தின் பலவீனம் மிக மெதுவாக நகரும் காட்சிகள்தான். உரையாடலை வைத்து நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பொறுமை தேவை. ஆரோக்கியமான மாற்று சினிமாவை முன் வைத்திருப்பவர் இன்னும் கவனத்தோடு செயல்பட்டிருக்கலாம்.
மற்றபடி மாலை பொழுதின் மயக்கத்திலே அதன் இயல்பான உணர்வுகளுக்காகவே ரசிக்கலாம்.
நடிகர்: ஆரி.
நடிகை: சுபா.
இயக்குனர்: நாராயண் நாகேந்திர ராவ்.
இசை: அச்சு.
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்.
  நன்றி விடுப்பு