மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது


29/04/2015 மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 கைதிகளின் மரண தண்டனையை இந்தோனேஷிய அரசாங்கம்  அந் நாட்டு நேரப்படி  இன்று அதிகாலை 12.25 மணிக்கு  நிறைவேற்றியுள்ளது.

மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு பேரினதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா, பிறேசில், நைஜீரியா ஆகிய நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


கடிதம் எழுதிட ஆசை - ராபியா குமாரன்

.          
         
 உயிரிருக்கும் வரை
நினைவிலிருக்கும்
என் பள்ளிப்பருவது…

தொலைதூரம் சென்ற
உறவுகள் கடிதங்களால்
உறவாடிய காலமது…

வேலை வேண்டி,
கடல் தாண்டி,
துபாயில் வசித்த
தாய்மாமாவிடமிருந்து
தவறாமல் கடிதங்கள்
வந்த நேரமது…

தபால்காரர் ‘தபால்’ என்று
வீட்டு முற்றத்தில் வீசிய
மறுகணமே என் பாட்டியின்
கரங்களில் தவழும்
அந்தக் கடிதம்…

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் "பாலித் தீவு" நூல் வெளியிடும் - கானா பிரபா

.
ஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015  TheRedgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க இனிதே நிகழ்ந்தது.  இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட முழுமையான நிதி ஈழத்தில் இயங்கும் "சிவபூமி" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.

"கானா பிரபாவையும் ஆறு திருமுருகன் அவர்களையும் சந்திக்க வேணும்"  ஒரு மூதாட்டியின் குரல், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி நேரம் இருக்கும் தறுவாயில் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த சிவா அண்ணர் "இவர் தான் கானா பிரபா" என்று கை காட்ட, அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே 
"உங்கட வானொலி நிகழ்ச்சிகளைப் பல வருஷமாகக் கேட்கிறேன், இன்று தான் உங்களைக் காணுறன் நான் நினைத்தேன் இன்னும் பெரிய ஆளா இருப்பியள் எண்டு,
மன்னிக்க வேணும், கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் உங்களைக் காண வேணும் எண்டு தான் வந்தனான் நிகழ்ச்சியை பார்க்க முடியாத சந்தர்ப்பம்" 
என்றவாறே கையில் இருந்த பண நோட்டு அடங்கிய கடித உறையை என்னிடம் தந்தார். 
நெகிழ்ந்து போனேன் நான். இந்த மாதிரி அன்பான நெஞ்சங்களை விட வேறு எந்தப் பெறுமதியான சொத்தை இந்த நாட்டில் என்னால் ஈட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். கையைக் கூப்பியவாறே அவருக்கு விடை கொடுத்தேன்.

அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் ஒழுங்கு செய்துள்ள UMAT மற்றும் விஞ்ஞான விபர நாள் 03 05 15

.


அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் UMAT மற்றும் விஞ்ஞான விபர நாள் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அதற்கு 10ம், 11ம், 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இதில் UMAT பற்றிய விளக்கங்களும், மருத்துவ. பல்மருத்துவ, மற்றும் விஞ்ஞான பட்டப்படிப்புகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டலும், விபரங்களும் வழங்கப்படும்.
நேரம்: பி.ப. 2 – 5 மணிவரை
திகதி: 3ம் திகதி மே மாதம்
இடம்: Reg Byrne Community Centre Wentworthville

மேலரிக விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விபரத் தாளை பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.


படித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி

.
மீண்டும்  தட்டிவேனில்  பயணிப்போமா...?
ராஜாஜி  ராஜகோபலன்  என்ற  வழிப்போக்கனின்  வாக்குமூலம்
  
                                           
வாழ்க்கையில்  நாம்  சந்திக்கும்  மனிதர்கள்  அனைவரையும் தொடர்ந்து  நினைவில்  வைத்திருப்பது  சாத்தியமில்லை. இலங்கையில்   இலக்கிய  உலகிலும்  ஊடகத்துறையிலும்  நான் நடமாடிய   1970 - 1987   காலப்பகுதியில்   நான்  சந்தித்த  கலைஞர்கள், படைப்பாளிகள்,   பத்திரிகையாளர்கள்  ஏராளம்.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்த  பின்னர்  அந்த  வரிசையில் சந்தித்தவர்களும்    ஏராளம்.  எனது  எழுத்துக்களை   படித்த  ராஜாஜி ராஜகோபாலன்   என்பவர்  முதலில்  என்னுடன்  மின்னஞ்சலில் தொடர்புகொண்டபொழுது -  அவர்  தமிழ்நாட்டிலிருக்கும் தமிழகத்தவர்   என்றுதான்  முதலில்  நம்பினேன்.
பின்னர்  - அவரது  தொடர்ச்சியான  தொடர்புகளில்  கனடாவிலிருக்கும் இலங்கையர்   என்றும்,  ஒரு  சட்டத்தரணி  என்றும் அறிந்துகொண்டேன்.   கொழும்பில்  நான்  பணியாற்றிய  காலத்தில் சட்டவரைஞர்   திணைக்களத்திலிருக்கும்  நண்பர்களை பார்க்கச்சென்றவேளையில்   ராஜாஜி   ராஜகோபாலனும் என்னைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார்.

Pink Saree Mother's Day 02 05 15


என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர்: தஸ்லிமா

.

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார்.
நாத்திகரான எழுத்தாளர் தபா பாபா என்ற பிரபல இணையப் பதிவர் கடந்த 2013-ல் நடந்த ஷபாக் போராட்டத்துக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க வாழ் வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராய் (42) தனது சொந்த நாட்டில் நடந்த புத்தக கண்காட்சிக்கு பங்கேற்க சென்றபோது சந்தேக அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாத்திக கருத்துகளையும் தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வந்தவர். தனது எழுத்துக்களுக்காக பல முறை அச்சுறுத்தல்களை சந்தித்தவரும் ஆவார். வங்கதேசம் இஸ்லாமியச் சமூக்த்தை சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமாவுக்கு மட்டுமல்லாமல், மற்ற மாற்றுச் சிந்தனை எழுத்தாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நாடாகவே திகழ்கிறது.

இலங்கைச் செய்திகள்


பசில் ராஜபக்ஸ கைது

ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்

கோத்தபாய வெளியேறினார் : அரை மணித்தியாலம் விசாரணை

 பஷிலை பார்க்கச்சென்றார் கோத்தா

 பாராளுமன்றில் பகலிரவு ஆர்ப்பாட்டம்: மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ராஜித

சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

பசில் ராஜபக்ஸ கைது

22/04/2015   முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ்  நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.


சங்க இலக்கியக் காட்சிகள் 48- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
அரசே இது சரியா? அவள் வாடுதல் முறையா?
அவன் நாடாளும் மன்னவன். எல்லோருக்கும் நல்லவன். குடிமக்கள் யாவரும் குறையின்றி வாழும் வகையில் செங்கோலோச்சி வருகின்றான். இருளைப் போக்கி உலகிற்கு வெளிச்சத்தைத் தருகின்ற பகலவனைப் போல, தீயவர்களை நீக்கி, தன்னை நாடிவருபவர்களுக்கு நிழல்போல ஆதரவு தருகின்றான். நீதி வழுவாதவன் என்று எல்லோரும் அவனைப் போற்றுகின்றனர். பொய் என்பதை அறியாது, உண்மையையே பேசுகின்ற உயர்ந்தவனாக அவன் திகழ்கின்றான். எப்படிப்பட்டவர்களின் துன்பங்களையும் களைந்து எல்லோருக்கும் நல்லதையே செய்கின்றான். இவ்வாறு குடிமக்கள் அனைவரையும் முறை செய்து காப்பாற்றும் அந்த மன்னனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். மன்னனும் அவனின் காதலியும் ஒருவரையொருவர் உளமாரக் காதலிக்கிறார்கள். அவள் மன்னனிடம் தன் உள்ளத்தை மட்டுமன்றித் தன்னையே ஒப்படைத்து விட்டாள். அடிக்கடி அவளின் இருப்பிடம் சென்று அவளோடு இன்புற்று வந்த மன்னவன் இப்போது சிலநாட்களாக அவளிடம் செல்வதில்லை. அதனால் அவள் துன்பமடைகின்றாள். காரணம்


குப்பைத்தொட்டியா விண்வெளி?

.
பூமியை மட்டுமல்ல; விண்வெளியையும் நாம் மாசுபடுத்திவிட்டோம்.


விண்வெளி, ஆதி காலத்திலிருந்தே மனிதர் களுக்குப் புரியாத புதிராக விளங்குகிறது. புதிருக்கு விடை காணவும் மனித இனத்துக்குப் பயன்படும் வகையிலும் செயற்கைக் கோள்கள் ராக்கெட் உதவியுடன் விண்ணுக்குள் செலுத்தப்படுகின்றன.
புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி (ஸ்பேஸ்) எனப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் தொலையுணர் செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன. இவை நிலத்தையும் கடற்பரப்பையும் படம் பிடிக்க உதவுகின்றன. இந்தியத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம், ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி போன்றவை இயங்குவதும் இந்தச் சுற்றுப்பாதையில்தான். விண்வெளி வீரர்கள் விண்வெளி நடை நிகழ்த்துவதும் இங்குதான்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 18,000 முதல் 22,000 கி.மீ. தொலைவில் வழிசெலுத்தும் செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன. ஒருவரோ, ஒரு வாகனமோ இருக்கும் இடத்தைத் துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கைக் கோள்கள் பயன்படுகின்றன. புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) செயற்கைக் கோள்கள் இதற்குச் சிறந்த உதாரணம்.

காலத்தை வென்ற கலைஞர் நாகூர் ஹனீபா - -ராபியா குமாரன்

.
    இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை...
    பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை..


         என்ற பாடல் வரிகளை அறியாதவர் விரும்பாதவர் யாரும் தமிழகத்தில் இருக்க முடியாது. தமிழில் எத்தனையோ பக்திப் பாடல்கள் இருந்தாலும் எந்தப் பாடலுக்கும் இல்லாத  தனிச்சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு. ஜாதி, மத. இன வேறுபாடுகள் கடந்து அனைவராலும் விரும்பி, பாரட்டப்பட்ட பாடல் இப்பாடல். எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் என கிருபானந்த வாரியாரால் புகழப்பட்ட இப்பாடலையே மூத்த மதுரை ஆதினம் அருணகிரி நாதர் தனது ஓய்வு நேரங்களில் விரும்பிக் கேட்பார். சோமசுந்தர தம்பிரான்,குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் மடங்களில் ஒலிக்கும் பாடலாகவும் இப்பாடலே இருந்தது.

உலகச் செய்திகள்

.
மத்­தி­ய­தரைக் கடலில் 700 குடியேற்றவாசிகளுடன் படகு மூழ்கியது :பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை

யேமனிய தலைநகரில் ஏவுகணை களஞ்சியசாலை மீது வான் தாக்குதல்; 38 பேர் பலி; 532 பேர் காயம்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதியோப்பியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

மத்­தி­ய­தரைக் கடலில் 700 குடியேற்றவாசிகளுடன் படகு மூழ்கியது :பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நேபாள நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு, இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

.


நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவாகியுள்ளது. உயிர்பலி பெரிய அளவில் இருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்த பூகம்பத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக முதல் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பூகம்பம்தானா இது என்று ஆராயப்பட்டு வருகிறது.

இந்திய-யூரேசிய கண்டத் தட்டுகள் (டெக்டானிக் பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதற்குக் காரணமாகும் ஒரு முக்கிய ஃபால்ட் நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான வரலாற்று சாட்சியங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பெரிய பூகம்பங்களுக்கு இந்த ஃபால்ட் பகுதி முக்கிய காரணமாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

துளிர் - "சிறுகதை" -



.

அந்த ஒற்றையடிச் செம்மண் பாதைக்குள் சைக்கிளைத் திருப்பிய குமாரசாமிக்கு 65 வயதுக்கு மேலிருக்கலாமென்று அவருடைய தோற்றம் சொன்னது. உழைப்பினால் உரமேறிய தேகம்இ இந்த வயதிலும் மிதிவண்டியிலேயே எங்கும் சென்றுவரும் கடின உழைப்பாளி.
குமாரசாமி அந்தக் கிராமத்தின் விவசாயி. பரம்பரையான விவசாய நிலம் அவருக்கு இருந்தது. ஆணும்இ பெண்ணுமாய் இரு பிள்ளைகள். 
பெண்ணைப் பக்கத்து ஊரில் திருமணம் செய்துகொடுத்துவிட்டார். மகன் மோகனுக்கு சிறுவயதிலிருந்தே விவசாயத்தில் ஈடுபாடில்லை.
சேறுஇ சகதிக்குள் நான் வேலை செய்யமாட்டேன் என்று பிடிவாதமாய்ப் படித்து முடித்த கையோடு சிங்கப்பூரிலும் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு சென்றுவிட்டான். 

மகனிடம் தன்னுடைய ஆசையைக் கூற மனமில்லாமல் பேசாது இருந்துவிட்டார் குமாரசாமி.
இப்போது அவரால் முன்னைப் போல் அதிகமாக கழனியில் வேலைசெய்ய முடியவில்லை. தள்ளாமைஇ யாருக்கு உழைக்கவேண்டுமென்ற வெறுமை அவரை நிலத்தை விற்றுவிடலாமென்ற முடிவுக்கு வரவைத்தது. மனைவியின் கெஞ்சலையும் பொருட்படுத்தாமல் டவுனிலிருந்த ரியல் எஸ்டேட்காரரிடம் நிலத்தை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுத் தான் இப்போது திரும்பிக்கொண்டிருக்கிறார்.
அந்தச் செம்மண் சாலைக்குள் திரும்பியதும் கண்ணில்படுவது அவரின் வயல்தான். அறுப்பு முடிந்த வயல் அடுத்த நடுதலுக்காய்க் காத்துக்கிடந்தது. கரகரவென்று கண்ணில் நீர் சொரிய ஆரம்பிக்கஇ சைக்கிளை விட்டிறங்கி மேல்துண்டால் கண்களைத் துடைத்துவிட்டுஇ வயலைப் பார்த்தபடியே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


சமுதாய வளர்ச்சிக்கேற்ப நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம்

.
சமுதாய வளர்ச்சிக்கேற்ப நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம்
               - வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு -



             வந்தவாசி.ஏப்.25. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தகத் தின விழா சிறப்பு நிகழ்வில், கால மாற்றத்திற்கேற்ப வளர்ந்துவரும் சமுதாயத்தோடு சேர்ந்து நூலக இயக்கமும் வளர வேண்டியது அவசியம் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்   பேசினார்.

          மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும்  வரவேற்றார். வந்தவாசி வேளாண்மை அலுவலர் தே.முருகன், உமா டிம்பர்ஸ் உரிமையாளர் ஞா.பன்னீர்செல்வம், ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.    
       

உளங்களில் ஒளிர்வான்! - க. கணேசலிங்கம்

.
அண்மையில் அமரரான மலேசியா அறிஞர் முனைவர் உலகநாதன் அவர்கள் தமிழ், சைவம், தத்துவம் என்று பல துறைகளில் அரும் பணிகள் செய்தவர். முதல் தமிழ்ச் சங்கம், சுமேருத் தமிழ் முதலியவற்றை  ஆய்ந்து அறிஞருலகை ஈர்த்தவர்.  ‘மெய்கண்டார் குரூப்ஸ்’ (Meykandargroups) எனும் இனைய தளத்தை நடத்தி அறிவுச் சுடர் ஏற்றியவர். அவர் பற்றிய அஞ்சலிக் கவிதை கீழே தரப்படுகிறது.]
உளங்களில்  ஒளிர்வான்!
பலதுறை அறிந்த பல்கலை வேந்தன்!
பைந்தமிழ் சைவம்  சிறப்புற ஆய்ந்து
அவற்றின் பெருமையை விளக்கிய அறிஞன்!
அகிலம் கண்டநல் அறிவின் மணிகளை
‘மெய்கண் டார்’எனும் அவனின் இணையத்
தளித்தவன்! பலரின் கருத்தையும் ஏற்றவன்!
தர்க்க நெறியினில் எவரும் மறுத்திடா
வகையினில் தனது முடிவினைத் தந்தவன்!  
சைவசித் தாந்த தத்துவம் உலகின்
தலைசிறந்  திட்ட தத்துவம் என்று
சான்றுக ளோடு சாற்றிய சான்றோன்!
புத்தம் கிறித்துவம் சமணம் சாக்தம்
வேதாந்தம் என்று பலதையும் அவற்றின்
தத்துவ நிலையையும் ஆய்ந்து அறிந்தவன்!  
அவனே முனைவர் உலக நாதன்.
அனைவர் நெஞ்சிலும் அறிவுரு ஆனவன்!

தொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.

.
மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் சிலைகளை வைத்திருந்ததாகச் சொல்லுவார்கள்.
                         
   
அவை குறிப்பிடுபவை என்னவென்றால், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதிகும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
மனதனாகப்பட்டவன் நல்லவனாக வாழ இந்தப் பழக்கங்கள் வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்.
ஆனால் இன்று தமிழ்நாட்டில் நடப்பது என்ன? (மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லையாதலால் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை)
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெண்கள் குடும்பத்தலைவிகளே. அதாவது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்பவர்களே. இவர்களுக்கு காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு மதியச் சாப்பாட்டையும் செய்து விட்டால் பகல் 11 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வேறு வேலை இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள் வராத காலத்தில் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுடன் ஏதோ பேசுவார்கள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதோ வேலைகளைச் செய்வார்கள்.

வாட்ஸ் அப் கலாட்டா‏ - ரத்னம்டா... மணிரத்னம்டா'..

.
'ரத்னம்டா... மணிரத்னம்டா'... இது வாட்ஸ் அப் கலாட்டா தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கல்ச்சர் பற்றி ’ஓ காதல் கண்மணி’ படத்தில் அலசியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இப்போது, தாலி தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, மணிரத்னம் எடுத்துள்ள படம் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

மணிரத்னம் தாலியை பற்றி இப்போது அவர் சொல்லவில்லை. காலம் காலமாக சொல்லி வருகிறார் என்று மணிரத்னம் குறித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைகளில் மெஸேஜ் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் மணிரத்னத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து ஒரே வரியில் கூறியுள்ளனர். 


தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம் 

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா 

தாலி கட்டாம அடுத்தவன் வீட்டில் வாழ்ந்தால் - ஓகே கண்மணி 

தாலியே கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தால் ...ஒ.கே. கண்மணி ...

தாலிக்கட்டாமல் நோயினால் இறந்தால் - கீதாஞ்சலி

முஸ்லீம் பொண்ணுக்கு தாலி கட்டினால் - பம்பாய்.

தாலிகட்டாமல் தீவிரவாதியை கட்டிக் கொண்டு செத்தால் - உயிரே

வியாபாரத்திற்க்காக தாலி கட்டினால் - குரு

ரமணாவ கொன்னுட்டு அவன் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி

தாலி கட்டாமல் பிள்ளை பெற்றால் - தளபதி 

குழந்தையை தத்தெடுத்துகறதற்கு தாலி கட்டுனா அது கன்னத்தில் முத்தமிட்டால்..!

தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா

ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா 

இப்படி ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் பரவி வருகிறது வாட்ஸ் அப்பில். இப்படியும் ஒரு ட்ரெண்டா பாஸ்.

-

தமிழ் சினிமா ஓ காதல் கண்மணி





ஓ காதல் கண்மணி கண்டிப்பாக அலைபாயுதேவின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். என்ன அதில் திருமணம் செய்துகொண்டு எப்படி ஒன்றாக வாழ்கிறார்கள் என்பது கதை, இதில் ஒன்றாக வாழ்பவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா? மாட்டார்களா? என்பது கதை.
மும்பையில் சந்தித்து கொள்ளும் துல்கர், நித்யா இரண்டாம் சந்திப்பிலேயே நெருக்கம் ஆகிறார்கள். ’திருமணத்தில் நம்பிக்கை இல்லை’ என்ற ஒற்றை புள்ளியில் ஒருவருக்கொருவரை பிடித்துப்போக காதலில் விழுகிறார்கள். துல்கருக்கு அமெரிக்கா செல்வது தான் லட்சியம் அதேபோல நித்யாவுக்கு பாரிஸ்.
இவர்களின் லட்சியம் நிறைவேறும் வரை துல்கர் தங்கியிருக்கும் பிரகாஷ்ராஜ் வீட்டிலேயே Living Together ஆக வாழலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். (இதனால் தான் மணிரத்னம் மும்பையை தேர்வு செய்தார் போலிருக்கிறது). ஒருகட்டத்தில் இருவீட்டாரும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்த துல்கர், நித்யா இருவரும் அதை மறுக்க, கடைசியில் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு:
தன் துள்ளலான நடிப்பில், குறும்பான பார்வையில் சுறுசுறுப்பான வசனங்களின் மூலம் அனைவரையும் கவர்கிறார் துல்கர். ஒரு சாக்லெட் பாய்யாக, ரொமாண்டிக் ஹீரோவாக சிக்சர் அடிக்கிறார் துல்கர். நித்யா மேனன் தாராவாக வாழ்ந்தே இருக்கிறார், முக பாவனைகளுக்கு பஞ்சமே இல்லாத முகம். துல்கரிடம் ‘அம்மாவை வரசொல்லட்டுமா’ என்று கலாய்க்கும் போதும் ,Pregnancy Test க்காக மருத்துவமனை வந்ததுபோல் நடிக்கும் போதும் கைதட்டல் வாங்குகிறார்.
பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன் ஜோடி காதலுக்கு முன்னுதாரணம்! Alzheimer ( நியாபகமறதி) நோயால் பாதிக்க பட்டவராக லீலா சாம்சன் தூள் கிளப்ப மறுபுறம் பாசமிகு கணவனாக பிரகாஷ்ராஜ் பட்டையை கிளப்புகிறார்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். மணிரத்னத்தின் வசனங்களும், கதாபாத்திரங்களை கையாளும் விதமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. படத்தின் மிகப்பெரிய பலம் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு ஃபிரேமிலும் பி.சி. ஸ்ரீராம் கைவண்ணம் மிக அழகு!
கிளாப்ஸ்
பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு, துல்கர் - நித்யாவின் துள்ளலான நடிப்பு! படத்தின் இரண்டாம் பாதி!
பல்ப்ஸ்
நீளமான முதல் பாதி, இலக்கே இல்லாமல் நகரும் திரைக்கதை!
மொத்தத்தில் மணிரத்னம் போட்டு வைத்த காதல் திட்டம் "டபுள்" ஓகே கண்மணி!

Rating 3.5/5

நன்றி cineulagam