நல்லூர் பிறந்த நாவலர் பெருமான் !
திரைச்சீலையூடே தெரிந்த அம்முகம்!
….சங்கர சுப்பிரமணியன்.
நண்பனை நாடி அவன் வீடு வந்த எனக்கு
பக்கத்து வீட்டிலேதோ நகர்வது தெரிய
பார்த்தாலே தெரியும் அருகிருந்த வீடதில்
காற்றால் சாளரத்தில் ஏதோ நகர்ந்திட
கூர்ந்து பார் என என் மனமும் சொல்லிட
உண்மை அறிந்திட நானும் முயன்றேன்
சாளரத்தை விட்டு திரைச்சீலை விலகியது
உடலை மூடிய ஆடை விலகுவதுபோல்
இயல்பான அனிச்சைசெயல் தூண்டலால்
என்னை அறியாது கண்கள் நகர்ந்தன
நகர்ந்தது சாளரத்தின் திரைச்சீலைதான்
காற்றால் நகர்ந்ததை உணர்ந்தேன்
மீண்டும் அங்கே திரைச்சீலை நகர்கிறது
ஆவலால் என் கண்களும் நகர்கின்றன
தங்கப் பதக்கம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தமிழ் சினிமாவில் விபரீத முடிவுகளை கொண்ட பல படங்கள்
வந்துள்ளன. கட்டிய கணவனை மனைவி கொல்வது ( அந்த நாள் , மந்திரிகுமாரி ) மகனை தாய் கொல்வது (நான் ) அண்ணன் தம்பியை கொல்வது ( உத்தம புத்திரன் ) அக்காள் தம்பியை கொல்வது ( திரும்பிப் பார் ) கணவன் மனைவியை கொல்வது ( கவரிமான் ) என்ற வரிசையில் தந்தை மகனை கொல்வதாக அமைத்த படம்தான் தங்கப் பதக்கம்.
தீவிரமாகாத காலகட்டத்தில் பல நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருந்தன. திரைப்படக் கதாசிரியராகவும், துக்ளக் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான மகேந்திரன் , நடிகர் செந்தாமரையின் வேண்டுகோளுக்கு இணங்கி இரண்டில் ஒன்று என்ற நாடகத்தை எழுதி அது அடிக்கடி மேடையேறிக் கொண்டிருந்தது. நாடகத்தை எஸ் ஏ கண்ணன் நெறியாள்கை செய்திருந்தார். இந்த கண்ணன் சிவாஜியின் மிக நீண்ட கால நண்பர் ஆவார். இளம் வயதில் இவர் சிவாஜியுடன் பல மேடை நாடகங்களிலும், பின்னர் படங்களிலும் நடித்திருந்தார். அதே போல் செந்தாமரையும் சிவாஜி நாடக மன்றத்தின் நிரந்தர நடிகராவார்.
திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் `யாழினி` நூல் வெளியீடு - ஒரு கண்ணோட்டம் சிட்னியில் இருந்து திருமதி திலகா பிரபாகரன்
திருமதி தேவகி கருணாகரன் அம்மாவின் `யாழினி` உட்பட மேலும்
சில சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீடு கடந்த நவம்பர் மாதம் 2 ஆந் திகதி சனிக்கிழமை மாலை, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநிலத்தின் ஸ்றத்பீல்ட் நகரத்தில் அமைந்துள்ள கரிங்ரன் மண்டபத்திலே நடைபெற்றது. இந்தியாவின் ஸீரோ டிகிறி பதிப்பகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான முதற் பரிசை `யாழினி` குறுநாவல் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
திருமதி கருணாகரனின் அன்பான அழைப்பையேற்று நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். மண்டப வாசலிலே ஏற்றப்பட்டு இருந்த குத்துவிளக்கு நிறைகுடம், எம் தமிழரின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றிக் கொண்டு இருந்தது. அங்கு வருகை தந்த அன்பர்களை திருமதி கருணகரன், தனது குடும்பத்தாரோடு சேர்ந்து வரவேற்றார்.
சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த விழாவினை தலைமை
தாங்கி நடாத்துவதற்காக சிட்னியில் புகழ்பூத்த வைத்திய கலாநிதி பொன் கேதீஸ்வரன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார். விழாவின் ஆரம்ப நிகழ்வாக அவுஸ்திரேலிய ஆதிக் குடிமக்களான அப்பொற்ஜினல் Aboriginal இனத்தவருக்கான மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் ஆ.சி கந்தராஜா, திருமதி சத்தியா கந்தராஜா, வைத்திய கலாநிதி சாந்தினி தவசீலன் ,திருமதி சரோ சுந்தரலிங்கம், மற்றும் பல் வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர். அடுத்தபடியாக தொடர்ந்து வர்ஷ்னி கேஷ்னி கேதீஸ்வரன் சகோதரிகள் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தார்கள்.
முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத புதுமை!
November 21, 2024 6:25 am
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இதுவரையிலான 76 வருட அரசியல் பாதையில் இப்போது புரட்சிகரமானதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒருசில பாரம்பரிய அரசியல் கட்சிகளே இதுவரையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறி வந்திருக்கின்றன.
தனிக்கட்சியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ அல்லது ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஒரு கட்சியை சார்ந்தவர்கள் புதிய கட்சியை அமைத்து அதனூடாக அரசியல் பிரவேசம் செய்தோ ஆட்சி நடத்தி வந்திருப்பது கடந்தகால அரசியல் நிகழ்வுகளாகும்.
இலங்கையில் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்ற ஆட்சி மாற்றங்களை ‘மோதகம், கொழுக்கட்டை’ ஆகியவற்றுக்கு உவமானமாகக் கூறுவதுண்டு. ஏனென்றால் மோதகம் அல்லது கொழுக்கட்டை ஆகியவற்றின் தோற்றம்தான் வித்தியாசமானது. ஆனால் உள்ளீடுகள் ஒன்றுதான்.
மேற்படி உவமானக் குறிப்பை இன்னும் விரிவாகச் சொல்வதானால், கடந்த காலத்தில் ஆட்சிபீடம் ஏறி இறங்கிய சகல அரசுகளும் அரசியல் கட்சிகளும் மோதகம், கொழுக்கட்டை என்பனவற்றுடன், சிலவேளைகளில் பிடிகொழுக்கட்டையாகவும் அமைந்திருந்தன என்று குறிப்பிடலாம்.
மோதகம், கொழுக்கட்டை என்பனவற்றுக்கு உள்ளே வைக்கப்படும் பயறு, தேய்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றை மாவுடன் சேர்த்து பிசைந்தெடுத்து கையில் வைத்து விரல்களால் பிடித்துச் செய்யப்படுவதுதான் பிடிகொழுக்கட்டை. இந்தவகையில் மோதகம், கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை என்பனவெல்லாம் ஒரே ரகம்தான்.
ஜனாதிபதி அநுரவும் இனவாதமும்
November 22, 2024
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நேற்றைய தினம் காலை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தனது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்களை ஜனாதிபதிகள் ஆரம்பித்து வைக்கும் போது அந்த நிகழ்வுகளை ‘சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தல்’ என்றே அழைப்பதுண்டு. ஆனால் ஜனாதிபதி திஸநாயக்க எந்தவிதமான பழைய சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் – படை அணிவகுப்புகளோ அல்லது வீண் செலவில் ஆரவாரங்களோ எதுவுமின்றி எளிமையான முறையில் வந்து கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது.
அவரது இந்த செயல் முன்னுதாரணமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். அவரது அரசாங்கத்தின் வருங்கால நடவடிக்கைகளில் இவ்வாறாக பல்வேறு முன்னுதாரணங்களை எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தனது உரையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்கிக்கூறியிருக்கிறார். அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் அல்லது கணக்கு வாக்கெடுப்பும் அடுத்த வருடம் முழுமையான வரவு – செலவு திட்டமும் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற பிரகடனத்தையும் அவர் சபைக்கும் அதன் ஊடாக நாட்டுக்கும் அறிவித்தார். அதுவும் வரவேற்கப்பட வேண்டியதே. இனவாத அரசியலும் மதவாதமும் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை நன்குணர்ந்தவராக அவர் அந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். இதுகாலவரையில் ஓர் இனத்தை இன்னோர் இனத்துக்கு எதிராக தூண்டிவிட்டு பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்து நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் எவரும் தாங்கள் செய்வது இனவாத அரசியல் என்று சொன்னதில்லை.
உக்ரைன் போரில் அமெரிக்க முரண்நகை: ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி; போர் உதவியை நிறுத்தும் ட்ரம்ப்!
November 21, 2024 8:26 am
எதிர்வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், உக்ரைனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார்.
பிரேஸிலில் ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றும் போது, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய படைகள் களமிறக்கப்பட்ட பின்னர் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும், உக்ரைனுக்காக பைடனின் இறுதி முயற்சி இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்மறையாக அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆதரவைக் குறைப்பார் அல்லது நிறுத்துவார் எனத் தெரிவிக்கபடுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்க அரசே முன்னணியில் உள்ளது.
மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கப்படாது எனக் கூறியமை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியது.
ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி:
உக்ரேன் அரசு ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வடகொரிய வீரர்களை உக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது என்று சில அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும்
November 22, 2024 7:54 am
எண்ணிக்கையில் குறைவான ஒரு தேசிய இனம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாயுள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறு வகையான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்கள், மாயமான்களைக் கண்டு ஏமாந்த மக்கள் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.
தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைக்கான உத்தரவாதம் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த காலத்திலேயே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்
நான் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவை என அவரும் அவரது கட்சியும் எடுத்த நிலைப்பாடு சார்ந்துமே அவரை ஆதரித்தேன். பின்னர் அவர் நிலைமாறிப் போனது வரலாற்றுத் துயரம்.
என்னைப் பொறுத்தவரை எனது அரசியல் முடிவுகளில் கொள்கை நிலைப்பாடே முன்னிலைப்படும். இதில் இன, மத, சாதி, பால் வேறுபாடுளுக்கு இடமளிப்பதில்லை. அந்த தார்மீக உணர்வுடன்தான் இதனை எழுதுகிறேன்.
நான் போர் காரணமாக புலம்பெயர்க்கப்பட்டு நோர்வே வந்தடைந்தவன். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து, போர் நெருக்கடி உந்தித்தள்ள தாயக மண்ணை விட்டு வெளியேறியவன். இவ்வெளியேற்றம் தந்த குற்ற உணர்வுடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு தனிமனிதனாக, எனது உணர்வின் நிலை நின்று இப்பதிவை எழுதுகிறேன். என் போன்ற உணர்வைக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.
புலப்பெயர்வு வாழ்க்கை எம்மை புதியதொரு நாட்டின் குடிமக்கள் ஆக்கினும், நான் பிறந்து வளர்ந்த மண்ணை எனது தாயகமாக உணர்கிறேன். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் தேசத்தின் அங்கமாக என்னை இனங்கண்டு, நாடு கடந்த சமூகவெளியில் தாயகத்துடன் உறவுகளைப் பேணிய வண்ணம் வாழ்ந்து வருகிறேன். இதனால், ஏற்படும் ஈடுபாடு, அக்கறையின் காரணமாகவே இம்மடலை எழுதுகிறேன்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2024
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 2024
21 ரோஸ் கிரசண்ட் ரீஜண்ட்ஸ் பார்க் NSW2143
30- 11 - 2024 Sat: முத்தமிழ் மாலை 2024 - மாலை 6 மணி
at Bowman Hall, 35 Campbell Street, Blacktown NSW 2148
01-12- 2024 Sun: 3வது சிலப்பதிகார மாநாடு
இலங்கைச் செய்திகள்
பாராளுமன்ற முதல்நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி
ரூ. 2 கோடி காசோலை மோசடி: டக்ளஸுக்கு பிடியாணை
புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
அம்பாறை மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பதற்கு மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
பாராளுமன்ற முதல்நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி
- விடாப்பிடியாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்வு
– இருமுறையும் வேறு ஆசனத்தில் மாறி அமர்ந்த சஜித்
– பாராளுமன்ற ஊழியரின் பணிப்பையும் மீறி செயற்பாடு
உலகச் செய்திகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மீது ‘பிடியாணை’
ரஷ்யா மீது முதல் தடவையாக நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்
காசா சென்ற நெதன்யாகு ஹமாஸுக்கு எதிராக சூளுரை: பணயக்கைதிகளை விடுவிக்க சன்மானம்
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி 6 சுற்றுலா பயணிகள் பலி
மேற்கத்திய நாடுகளுக்கு புட்டின் எச்சரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மீது ‘பிடியாணை’
-காசாவில் உயிரிழப்பு 44,000ஐ தாண்டியது
போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதன்போது ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தெயிப் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் ‘வாத்தியார்’ சிறுகதை நூல் வெளியீடு
November 23, 2024 12:53 pm
சிட்னியில் கந்தையா நாகேந்திரத்தின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் இன்று மாலை 05. 30 மணிக்கு பிளாக் டவுன் உயர்தர (Black town High school) பாடசாலையில் வெளியாகவுள்ளது.
இந்நூல் வெளியீட்டின் தலைமை உரையை திரு. ஆசி கந்தராசா வழங்குகின்றார். இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களும் பங்குபற்றி உரையாடவுள்ளனர்.
‘வாத்தியார்’ சிறுகதை தொகுப்பு வெளியீடும் கருத்து பகிர்தல் நிகழ்ச்சியில் சிவத்திரு குணரத்தினம் பார்த்தீபன், திருமதி துசியந்தி பார்த்தீபன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பர். தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி அஸ்வி சிவச்சந்திரன் வழங்குவார். வரவேற்புரையை அனுஜன் நாகேந்திரம் மற்றும் அர்ச்சனா நாகேந்திரம் ஆகியோர் வழங்குவர். வாத்தியார் சிறுகதை நூல் அறிமுகத்தை திருமதி. சௌவுந்தரி கணேசன் ,புனைகதைகளும் ஆவணப்படுத்தலும் பற்றி முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் ஆகியோர் உரையாற்றுவர். எழுத்தாளரின் கருத்துகள் பற்றி ஐங்கரன் விக்கினேஸ்வரா உரையாடுவர்.
சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டி - பரிசளிப்பு நிகழ்ச்சி- 30/11/2024
November மாதம் 30ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவிருக்கும் சிலப்பதிகாரமாநாட்டில் மாலை 7:00 மணிக்கு பெரும் திரளான மக்கள் முன்னிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறியத் தருகின்றோம்
நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை,
தமிழ் இலக்கிய கலை மன்ற திருக்குறள் மனனப் போட்டிகள், சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 01/12/2024 மாலை 5:30 மணி
December மாதம் 1ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவிருக்கும் சிலப்பதிகாரமாநாட்டில் மாலை 5:30 மணிக்கு பெரும் திரளான மக்கள் முன்னிலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை,