சிவநாயகம் காலமாகிவிட்டார். .

.

ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 


வது அகவையில் 29.11.2010ல் காலமாகிவிட்டார்.




இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது.


எனது இலங்கைப் பயணம் .

.
                                                                                       செ.பாஸ்கரன்

இடத்தை விட்டு நகர்ந்து ஏ9 பாதையில் செல்லும்போது இன்னுமொரு குடிசையின் முன் நிறுத்துகின்றேன். இதுவும் இராணுவத்தின் அருகிலேயே இருக்கிறது. குடிசை என்ற பெயரில் மரநிழலிலே பல பொருட்களை கலந்து போடப்பட்டிருக்கும் ஒரு தடுப்புத்தான். கற்கால மனிதர்களின் வாழ்நிலை ஏனோ என் மனதில் தோன்றி மறைகிறது.


கோழைச் சோழன்....! சிறுகதை..

.
                                                                                    சாண்டில்யன்
                                          கோழைச் சோழன்



தித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப்  பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை ஆண்ட தித்தன் அன்று 'நாம் என் இந்தப் பிறவி எடுத்தோம்?' என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். 

நிசப்த இரவுகள் - சங்கர்

.
ழுது அழுது நனைந்த கன்னங்கள்
உலர்த்தி வைத்த விழியோரங்கள்
ஒட்டி வைத்த புன்னகையென போலியாய்
தினம் தினம் நீள்கிறது இரவுகள்
தழ் சொல்லாத பிரியங்கள்
உன் விழிகளில் கசிகிறது கண்ணீராய்...
விம்மி விம்மி நிசப்தம் கிழிக்கும்
சிறு அழுகை சத்தம் என்னை
முழுவதுமாய் சிறை பிடிக்கிறது .

நூல்வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்

.
மெல்பேணில் நடைபெற்ற
நூல்வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்
                                                                                               தேவி திருமுருகன்

மனிதநேய எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய “வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்”, மலேசிய எழுத்தாளர் திருமதி. மாக்கிறட் செல்லத்துரை எழுதிய “போதும் உங்கள் ஜாலமே” மற்றும் “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே” ஆகிய மூன்று நூல்களினதும் வெளியீட்டுவிழாவும் குறும்பட விழாவும் கடந்த நொவம்பர்மாதம் 20 ஆம் திகதி மெல்பேணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.


உலகக் கோப்பையை நடாத்தும் உரிமையை இழந்தது ஒஸ்ரேலியா


.
கால்பந்து கால்பந்து உலகக் கோப்பையை நடாத்தும் உரிமையை இழந்தது ஒஸ்ரேலியா. வாக்களிப்பின் போது ஒஸ்ரேலியா ஒரு வாக்கை மட்டுமே பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.இதன் மூலம் ஒஸ்ரேலியா மிக விசனம் அடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பை 2018 ஆம் ஆண்டில்உருசியாவும்இ 2022 ஆம் ஆண்டில் கத்தாரும் முதல் முறையாக பெற்றுள்ளன.

Srilanka :Witness to History -நூல் விமர்சனம்

.
                                                                                                                          பராசக்தி சுந்தரலிங்கம்


'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்ற ஆங்கில நூலைப் பார்த்தபோது பல எண்ணங்கள் மனதிலே வந்தன.

எழுபதுகளிலே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கில வார இதழான Saturday Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்து வாசகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்ற " Saturday Review சிவநாயகம்" என்று அன்போடு அழைக்கப்பட்ட முதுபெரும் பத்திரிகையாளர் ஒருவரால் இது எழுதப்பட்டுள்ளது.




திருப்பாண் ஆழ்வார்

.
இந்த வாரம் அடுத்த ஆழ்வாரான திருப்பாண் ஆழ்வாரை பற்றி காண்போம். இவர் பகவானின் ஸ்ரீ வத்ஸதின் அம்சம் ஆவார். இவர் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு ஒன்றின் மூலமாக பாணரின் பக்தியை நாம் புரிந்து கொள்ளலாம்.
இவர் அரங்க நகரமாம் ஸ்ரீ ரங்கம் என்று அழைக்கப்படும் ஊர் அருகில் உள்ள உறையூர் என்னும் சிற்றூரில் கலியுகம் 342 ஆம் ஆண்டு செந்நெல் வயலுக்கு இடையில் அவதரித்தார். அப்போது அந்த வழியே சென்ற பாணர் குலத்தை சேர்ந்த பக்தன் ஒருவன் குழந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டிற்க்கு எடுத்து சென்றான். பகவத் அம்சமாக தோன்றிய பாணர் சிறு வயதிலேயே சகலகலைகளில் வல்லாவறாக திகழ்ந்தார். பகவான் அந்த ஸ்ரீ ரங்கநாதன் மீது தீராத பக்தியும் அன்பும்  கொண்டு இருந்தார்.
இவர் தினம்தோறும் வீணாகாணத்தோடு பகவானை பாடிய வண்ணம் பக்தி பெருவெள்ளத்தில் மூழ்கி இருப்பார்.

படித்து சுவைத்தது

.


ஒரு புத்துணர்ச்சிக்காக, கொஞ்சம் மாறுதலுக்காகவும் கவிதை 

முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதை



கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி 
ருக்கிறார்கள்  என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள்  பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?




மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

.
Melb 2010 Maveerar Naal 17.jpgஅவுஸ்திரேலியாவின் மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள், விக்ரோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மிகவும் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை(28.11.2010) நான்கு மணிக்கு ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் வயதுவேறுபாடின்றி எண்ணூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.  இவர்களுடன் அவுஸ்திரேலியா பல்லின சமூகத்து பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

கருணாநிதி கணக்கு காட்டியிருப்பது சிறந்த நகைச்சுவை:

.
கருணாநிதி கணக்கு காட்டியிருப்பது சிறந்த நகைச்சுவை: ஜெயலலிதா
jeyalalithaென்னை, டிச.3: முதல்வர் கருணாநிதி தனது சொத்து குறித்து கணக்கு காட்டியிருப்பது கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக  எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.  இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.  இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சினிமா

.
  • அக்ஷராவின் காதல்...அப்பா கமல் செய்யப் போவதென்ன?
  • மன்மதன் அம்பு 17 டிசம்பர் அன்று வெள்ளித்திரையில்
  • தமிழ் நடிகர்களை தரக்குறைவாக பேசவில்லை: ஆர்யா விளக்கம்

 அக்ஷராவின் காதல்...அப்பா கமல் செய்யப் போவதென்ன?

வீணைக்கு பிறந்தது விறகாகுமா? யானைக்கு பிறந்தது எறும்பாகுமா? நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் கலையுலகத்தையே வியக்க வைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு காதல் மன்னன் என்றொரு பட்டமும் உண்டல்லவா? அவரது மகள்கள் இருவரும் அப்பாவின் கலையுலக வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் சேர்த்து வியத்தகு வாரிசுகளாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.