800 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் முரளி.

.

உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 800 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். காலியில் நடைபெறும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஓஜாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது 800 ஆவது விக்கெட்டை முரளி வீழ்த்தினார்.

232 தமிழர்களுடன் கனடாவை நோக்கி கப்பல்

.

232 தமிழ் குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கப்பலொன்று மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவுக்கு அருகில் வைத்து  அவதானிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 59 மீற்றர் நீளமான, 'எம்.வி. சன் ஸீ' எனும் இக்கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும் 12 இந்திய தமிழர்களும் இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தை நோக்கி இக்கப்பல் சென்றுகொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில் கனேடிய அதிகாரிகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ளவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூறாவளியின் பாடல்:- எம்.ரிஷான் ஷெரீப்,

.


பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

ஜீவகானங்கள்

.



மனதில் பதிந்த வைரவர் சாமி - செ.பாஸ்கரன்

.

வைரவர் சாமியை பார்க்கும்போது பக்தியைவிட ஒரு பயம் தோன்றுவது தான் என் சின்ன வயசில் நான்கண்டுகொண்டது. பள்ளிக்கு செல்லும்போது வளியில் இருக்கும் பனங் கூடலுக்குள் ஒரு பனையின் கீழ் தன்னந்தனியாக வைரவர் சூலம் இருக்கும். சற்று எட்டி நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓட்டம். என்ன வேண்டி கும்பிட்டாய் என்று கேட்டால் வைரவரே என்னை ஒன்றும் செய்து போடாதே என்பது மட்டும் தான். அந்த அளவிற்கு வைரவர் கோபமானவர் என்று விளையாடப்போகும் போது பெரியவர்கள் சொல்லிவைத்தது என் மனதில் பதிந்து கிடந்தது.

சற்று இருட்டான பின்பு அந்தப்பாதையால் போக வேண்டி வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.காற்றில் சலசலக்கும் காவோலைச் சத்தம், வைரவர் சூலத்தை தூக்கிக் கொண்டு ஓடிவருவது போன்ற பிரமை, சத்தம்போட்டு வைரவரின் நாமங்களை சொல்வோமென்றால் வைரவர் என்ற பேரைத்தவிர வேறு நாமங்களே அவருக்கு கிடையாதிருந்ததால் திரும்பத் திரும்ப வைரவரே வைரவரே என்று கூறியபடி தாண்டிச் செல்வதென்பது ஒரு மலையைப் பிரட்டும் முயற்சிபோல் இருக்கும். தாண்டிவிட்டோம் என்று அப்பாடா என்று பெருமூச்சு விடுவோமென்றால் அதுவும் முடியாது.

இலங்கையின் பொருளாதார நகர்வும் சவால்களும்

                                                                                             முன்தஸர் அஸ்ஸஅதி



பொருளாதார அபிவிருத்தி என்பது ஒவ்வொரு இலங்கைய னினதும் கனவாக காணப்படு கின்றது. 30 வருட யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள், பாதிப்புகள், பின்னடைவுகளிலிருந்து விடுபட்டு பாரிய பொருளாதார அபிவிருத்தியொன்றை காண்பதற்கு அனைத்து இலங்கையர்களும் ஆவலாய் உள்ளனர்.

தமிழ் படங்கள்தான் பிடிக்கும்: நடிகை சுனைனா

                                                               நடிகை சுனைனா
காதலில் விழுந்தேன் படத்தின்மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை சுனைனா. இவரது அண்மைய படம் வம்சம். பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறார் என வம்சம் பார்த்தவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வம்சத்தின் வெற்றியில் சொக்கிப்போயிருக்கும் சுனைனாவின் அடுத்தபடம் பற்றி அவரிடம் கேட்டபோது…

தமிழ் சினிமா பாரம்பரியம் மிக்கது. இப்போதைக்கு எனக்கு தமிழ் சினிமா மட்டுமே போதும். வேறு எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்திய

தாலாட்டும்(டிய) பலாமரம்

.

அந்த‌ பெரிய‌ ப‌லாம‌ர‌ம் என‌து வீட்டின் எல்லையில் தான் இருந்த‌து. த‌டித்த‌ த‌ண்டில் கீழ்நோக்கி கிள‌ந்த‌ வேர்க‌ள் த‌ன் நீட்சியை ம‌ண்ணில் புதைத்திருந்த‌து. மேல்நோக்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌ கிளைக‌ள் நான்கு ப‌க்க‌மும் த‌ன்னுடைய‌ ஆதிக்க‌த்தை செலுத்தியிருந்த‌து. எந்த‌வொரு ப‌ருவ‌ நிலையிலும் அத‌ன் ப‌சுமை ம‌றைவ‌தில்லை.


என‌க்கு அப்போது நான்கு வ‌ய‌து. ம‌ழை "சோ" என்று கொட்டிய‌து, இடியும் மின்ன‌லும் வேறு சேர்ந்து கொண்டு ப‌ய‌முறுத்திய‌து. "உர்" என்ற‌ ச‌ப்த‌த்துட‌ன் காற்று ப‌ல‌மாக‌ அடித்த‌து.



இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார்

.
இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார் : பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

லண்டன் : இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள "தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. மொத்தம் 4,500 பெட்டிகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அரசு சார்ந்த ஆவணங்களும், தனிநபர் கடித போக்குவரத்து தொடர் பான ஆவணங்களும் இதில் அடங்கும்.

புகைப்படபிடிப்பாளரின் பிரச்சினைக்கு தீர்வு

.
.
பொதுவாக புகைப்படக் கலைஞர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை விரைவில் பற்றரி விரையமாவதாகும். அவசர நேரத்தில் இந்த பற்றரிகள் தொல்லை கொடுப்பது புகைப்பட கலைஞர்களுக்கு பெரும் பிரச்சினையாகவே இருந்துவந்துள்ளது. ஆகையினால் இதற்கு மாற்றுவழி பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள்


சீன நாட்டின் கண்டுபிடிப்பாளர் 'வெங் ஜீய்' இந்தப்பிரச்சினைக்கு புதிய தீர்வொன்றை கண்டறிந்திருக்கிறார். அதாவது கமெராவின் பட்டியில் சூரிய சக்தியை சேமிக்கும் தகட்டினைப் பொருத்தி அதன் மூலம்

திருமுறை முற்றோதல்

.

                                         01.08.10 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 01.08.10 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஐந்தாம் திருமுறையிலுள்ள திருவாய்மூர் பதிகத்திற்கு பொருள் கூறப்பட்டு பின்னர் ஐந்தாம் திருமுறை அறுபத்தைந்தாவது பதிகம் (திருபுவனூர்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

யாருக்கும் நான் பயமில்லை:நடிகை காஜல்

.

பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆனாலும் 'பழனி' படத்தின் மூலமாகத்தான் பிரபல்யமடைந்தார். இப்பொழுது நடிகர் கார்த்தியுடன் 'நான் மகான் இல்லை' படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்துவருகிறார்.

சைவ உணவின் மகத்துவம்

.

ஹரே கிருஷ்ணா ! மீண்டும் உங்களை இந்த வாரம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில இதழ்களில் நான்கு விதிமுறைகளை பற்றி கண்டோம், இன்று அதில் முதன்மையான மாமிசம் உண்ணாமை பற்றியும், சைவ உணவின் முக்கியத்தை பற்றி காண்போம்.


மாமிசம் உண்ணுவதன் மூலம் நமக்கும் நாம் இயற்கைக்கும் எத்தனை கேடு என்பதை பற்றி பார்க்கலாம். இதோ ஒரு சிறு ஆய்வு

நாம் எத்தனை மரங்களை வெட்டுகிறோம் தெரியுமா? எத்தனை மண் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? எவ்வளவு நீரை அசுத்த படுத்துகிறோம் தெரியுமா? இத்தனை பற்றின உண்மைகளை காண்போம்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

Australian Tamil Literary & Arts Society (Inc) 

திரு,திருமதி,செல்வி,கலாநிதி..............................................................

அன்புடையீர் வணக்கம்,

அனுபவ பகிர்வு

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் இரண்டாவது “அனுபவ பகிர்வு நிகழ்ச்சியும்; கலந்துரையாடலும்” ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விலும் தேநீர் விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள்.

                                                                                                                 நடேசன்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 346 முன்னாள் புலி உறுப்பினாகளுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் நிதியம் உதவுகிறது . அவுஸ்திரேலியாவில் உள்ள டாக்டர் நடேசன் சமீபத்தில் இலங்கை சென்றபோது புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை பத்தாருமுல்லைலையில் உள்ள அவரது கரியாலயத்தில் சந்தித்த போது அடுத்த மாதம் 09 ஆம் திகதி ஆரம்பமாவூள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 346 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோறற உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு அவசரமான பறிற்சி வகுப்புகளை (Private Tuition).. ஆரம்பிக்க முடிடியுமா என கேட்டு;கொண்டதற்கிணங்க நடேசன் அவர்கள் மெல்பேணில் எழுத்தாளர் முருகபூபதியின் ஒருங்கமைப்பில் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இலங்கை மாணவர் நிதித்தை தொடர்புகொண்டார். அதற்கிணங்க தற்போது இந்த நிதியத்தால இதற்காண ஒழுங்குகள் செய்யப்ப்ட்டு தற்போது வகுப்புகள வவுனியாவில் நடைபெறுகியது.

மண்குதிரையும் மரக்குதிரையும்- முருகபூபதி

.
                                           உருவகக்கதை




அந்த நதிக்கரையோரக்கிராமம் அமைதியானது. பசுமை நிறைந்த ஒரு புல்வெளிதேசத்தில் ஒதுக்குப்புறமாக இயற்கை அழகுடன் துலங்கியது. அங்கே ஒரு குடிசையில் அந்தக்கிராமவாசி ஒரு குதிரையுடனும் மிக இளம் வயது மகனுடனும் வாழ்ந்து வந்தான். குதிரைக்கென தனியாக ஒரு சிறிய லாயமும் அமைத்திருந்தான். குடிசையைச்சுற்றியிருந்த சிறிய நிலத்தில் பயிர்செய்து விளைபவற்றை ஒரு வண்டியில் ஏற்றி குதிரையின் துணையுடன் நதியைக்கடந்து அடுத்த கிராமத்து சந்தையில் விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது மகனை பராமரித்து வளர்த்து வந்தான்.

எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்

 .

சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்பதோடு எரிபொருள் சிக்கனமாகவும் பாரத்தில் குறைந்ததுமான எதிர்கால விமானத்தினை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 2050ஆம் ஆண்டளவில் வானில் பறக்கவுள்ள இந்த விமானத்தின் மாதிரியினை எதிர்கால விமான வரைபடங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

.

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.
அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கு

.
விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கக் கூடாது - அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை


அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் தீவிரவாதப் போக்கு இயக்கங்களோ அல்லது இனப்பிரச்சினையைத் தூண்டும் அமைப்புகளோ இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து வருகின்றது.

அவுஸ்திரேலிய சமூக வானொலி

.

வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் நான்காவது ஆண்டின் நிறைவையொட்டி

மெல்போர்ண் மணி எழுதிய
கவிதைத் துளிகள்

வானமுதம் அது மேன்மையுறு சிறப்பை
பெயரிலே கொண்டுளது.
வானுயர்ந்த தேன் போன்ற அமுதம் தனை
ஊனும் உயிரும் உவக்கும் வண்ணம்,
ஊட்டும் வானமுதமே ! நீடூழி வாழ்கவே!
நான்காவது ஆண்டு பூர்த்தியாகி
வெற்றி நடை போடும் வானொலியே ! நீ வளர்கவே
பற்றிப் பிடித்தோம் வானமுதமே!
அற்றைப் பொழுதிலும் செவ்வாய் மாலை
இற்றைவரை உனது சேவை கேட்க
உற்றார் உறவினருடன் சேர்ந்து
கற்றோர் மற்றோர் புகழும்
நற்றவத்தால் கிடைத்த வானமுதமே!
நிற்கின்றோம் வானொலிப் பெட்டியருகே
பற்றுக் கொண்டோம் உன்மேலே
பெற்று மகிழ்கின்றோம் உந்தன் பயனதனை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்றை
சொல்லத் தேவையில்லை இனிமேல்
நல்ல சேவை செய்யும் வானமுதம்
இல்லம் தோறும் மழலைகள்
கல்வியில் தமிழையும் பயின்று
பல்லினக் கலாச்சாரம் பேணும் அவுஸ்திரேலியாவில்
வல்லோரினும் வல்லவராய் திகழும் - நம் பிள்ளைகளை
பல்லோர் போற்ற இவ் ஊடகம்
உறுதுணை ஆகின்றது மிகவே
பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகமென
அரங்கேற்றும் நல்ல கருவி வானமுதம்
இன்பத் தமிழ் ஒலியிலும் கேட்டு மகிழலாம்
இன்னும் பெரியோரின் சங்கத் தமிழ் ஆய்வுகள்
செய்திகள் எனப் பலவாகும்.
தென்புறு விசேட நிகழ்ச்சிகள்.
மாண்புடன் மலர்ந்து கீர்த்தி பெருகி
ஆண்டு பலவாயிடினும் புகழுடன்
ஈண்டு சிறந்து மிளிர்கவே!
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!!

சத்திரசிகிச்சை செய்யும் ரோபோ

.

மனிதனின் குறைவான கட்டளையில் சத்திரசிகிச்சை செய்யும் ரோபோ..!

மருத்துவ உலகில் பல கண்டுபிடிப்புகள் வியக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அன்றாடம் புதிது புதிதாக ஏதாவதொரு கண்டுபிடிப்புகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. அதற்கிணங்க அண்மையில் அமெரிக்க மருத்துவ பொறியியலாளர்களால் பரிசீலிக்கப்பட்ட சத்திரசிகிச்சை ரோபோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

மனிதனின் குறைந்தளவிலான கட்டளையினை மாத்திரம் உள்வாங்கி வான்கோழி ஒன்றின் நெஞ்சுப்பகுதியை மிகையொளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக சத்திரசிகிச்சையினை செய்து முடித்திருக்கிறது இந்த மருத்துவ ரோபோ கருவி.