தமிழ்முரசு நேயர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் 2017

.


கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!

.

தோ..
இப்போதுதான்
நீ இங்கிருந்துச் செல்கிறாய்,
வேறென்ன செய்ய
நான்வந்த கால்தடத்தையும்
உனக்கென விட்டுச்செல்கிறேன்,
நாளை இங்கு மழை வரலாம்
காற்று வீசலாம்
காலங்களும் மாறிப்போகலாம்,
நமக்கு மட்டும்
நீ அங்கு இருந்ததாகவும்
நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை
நம் மனதிரண்டும் –
சுமந்துக்கொண்டே திரியும்...
மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்
மோகினி என்பார்கள்
நம் பேச்சைக் கேட்டு -
அசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,
அந்தக் கால்தடங்களிலிருக்கும் நம்
மனதை மட்டும் யாருக்குமே தெரியாது..
--------------------------------------------------------------------

படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு' விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள் முருகபூபதிஇலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார்.
இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது.
அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன.
இந்தப்பதற்றம்,  நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும்,  பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை.
ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான்  நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும்.
அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.
நடேசய்யரிலிருந்து, சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, மல்லிகை சி. குமார், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன்  உட்பட சில தலைமுறைகளின் வரிசையில், இலங்கை மலையக இலக்கியத்தின் நான்காவது தலைமுறைப்படைப்பாளியாக அறிமுகமாகி எழுதிக்கொண்டிருப்பவர்தான் சிவனு மனோஹரன். இவரது எழுத்திலும் அம்மக்களின் ஆன்மா பேசுகிறது. பதற்றம் தொனிக்கிறது.
ஈழத்து இலக்கிய உலகில்  சிவனு மனோஹரன்,  1990 களில் மலையகப்பக்கமிருந்து அறிமுகமானவர். ஏற்கனவே ' ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்' - 'கோடங்கி' ஆகிய தொகுப்புகளை வரவாக்கியிருப்பவர்.
" மலையகத் தமிழ் இலக்கியம், பாட்டாளி வர்க்கச் சிந்தனை மிகுந்த இலக்கியமாகும். அந்தச் சிந்தனையில் அனைவருமே நிலைப்பாடு கொண்டிருந்தபோது, சிவனு மனோஹரன் சற்று விலகி, அனைவருமே எழுத மறந்த... எழுதுவதற்கு அக்கறைப்படாத... சமூகவிழுமியங்களைப் பற்றி எழுத முன்வந்தவராகின்றார்." என்று மு. சிவலிங்கமும் -
" அண்மைக்காலமாக மலையக சிறுகதை போக்கில் காணப்படும் வரட்சிக்கு செழுமை சேர்க்கும் விதமாக இத்தொகுப்பின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. ஒரு வட்டத்தில் சுழன்று திரியும் மலையக இலக்கியத்தின் எல்லை தாண்டும் கட்டுடைப்புக்கும், அதன் செழுமைக்கும் சிவனு மனோஹரனின் இப்பயணம் தொடர வாழ்த்துவதோடு, ஒரு வாசகனாய் மிகுந்த நம்பிக்கையோடு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று சுதர்ம மகாராஜனும்-
" சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக இவரது எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன." என்று 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனும் இந்த நூல் பற்றிய தமது எண்ணப்பதிவுகளை  முன்வைக்கின்றனர்.
" ஒரு படைப்பாளன் சமூக அக்கறையும், அவதானமும் கொண்டு இயங்கும்போதுதான் மக்கள் இலக்கியங்களை படைக்க முடியும் என நம்புபவன் நான். ஏனெனில் தன் நமூகத்தை அக்கறையோடு, கூர்மையாக அவதானிக்கும் போதுதான் யதார்த்த பூர்வமான படைப்புகளை வெளிக்கொணர முடிகிறது என்பது உறுதி. இத்தொகுப்பில் வரும் கதை  மாந்தர்கள் அதியற்புதங்களை நிகழ்த்தும் சாகசக்காரர்களாய் இல்லை. சமூக யதார்த்தங்களை மீறிக்கொண்டு, புரட்சி நெருப்பை தன் தலையில் சுமப்பவர்களாகவும் இல்லை. மாயக்கண்ணாடியும், அரிதாரமும் பூசிக்கொண்டு சமூகத்தில் உலவித்திரியும் வேடதாரிகளும் இல்லை. தன் அரசியல் உரிமைகளை புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களாயும், வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளை இதுவரையும் கண்டடையாதவர்களாயும் நெறி பிரழ்வின் காரணமாக தன் வன்மங்களை அத்துமீறி பிறர்மீது திணிப்பவர்களாயும் உள்ளனர். இத்தகைய தனிமனித உளநெருக்கீடுகளையும், அதன் சமூக விளைவுகளையுமே பேசுபொருளாக்கியிருக்கிறது இத்தொகுப்பு" என்று சிவனு மனோஹரன்  தன்னிலை விளக்கமும் தருகிறார்.

மௌனித்துவிட்ட கலகக்குரல் கவிஞர் ஏ. இக்பால் ( 1938 - 2017 ) நினைவுகள் கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி முருகபூபதி


           
நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள்,  பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த  கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
அதனால் இத்தகைய  படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.
அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.
இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பரும் பத்திரிகையாளருமான தெய்வீகன் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்.
அதனை பொருத்தம் கருதி இங்கு குறிப்பிடுகின்றேன்.
" As we look ahead into the 21st century, leaders will be those who empower others. "

 – Bill Gates, co-founder of Microsoft
 
21 ஆவது நூற்றாண்டை எதிர்நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில், சிறந்த ஆளுமை பண்பெனப்படுவது சிறந்த ஆளுமைகளை உருவாக்கும் வெற்றியிலேயே தங்கியிருக்கிறது

Bill Gates, co-founder of Microsoft

"  Before you are a leader, success is all about growing yourself. When you become a leader, success is all about growing others. "  – Jack Welch, former GE chairman and CEO.

" நீங்கள் சிறந்த ஆளுமை மிக்கவராக உருவாகுவதற்கு முன்னர் உங்களது வெற்றியெனப்படுவது உங்களை ஆளுமையை வளர்த்துக்கொள்வதிலேயே தங்கியிருக்கிறது. நீங்கள் சிறந்த ஆளுமை மிக்கவராக உருவான பின்னர், உங்கள் வெற்றியெனப்படுவது நீங்கள் எத்தனை ஆளுமை உள்ளவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதிலேயே தங்கியிருக்கிறது"  Jack Welch, former GE chairman and CEO
கிழக்கிலங்கையில்  அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில்  இக்பால் கல்வி கற்ற காலத்தில்,  அங்கு கடமையாற்றிய  ஆசிரியர்களான படைப்பாளிகள்  எம்.வை.எம். முஸ்லிம், மற்றும்  ..அப்துஸ்ஸம்மது ஆகியோரால் நன்கு இனங்காணப்பட்டு எழுத்துலகிற்கு அறிமுகப்படத்தப்பட்டவர்.  அங்கு "கலாவல்லி" என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராக இயங்கியிருக்கும் இக்பால், பிற்காலத்தில்  தென்னிலங்கையில் தர்கா நகர்  சாஹிராக்கல்லூரியில் ஆசிரியப்பணி ஏற்றதும் அங்கு படிப்பு வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி சில மாணவர்களை இனங்கண்டு எழுத்துலகத்திற்காக வளர்த்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திக்குவல்லை கமால், தர்காநகர் ஸபா ஆகியோர்.
இந்தத்தகவல்களிலிருந்து  எம்மவர் மத்தியில் நடந்திருக்கும் இலக்கியத் தொடர் அஞ்சல் ஓட்டத்தை  அவதானிக்க முடியும்.
கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் 1938 இல் பிறந்து தென்னிலங்கையில் தர்கா நகரில்  2017 இல் இறுதி மூச்சை விட்டவர்தான் கவிஞர் ஏ. இக்பால்.
எனது இனிய நண்பரும் ஆசிரியரும் கவிஞரும் ஆய்வாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் பன்முக ஆளுமைகள் கொண்டவருமான ஏ. இக்பால் அவர்கள் மறைந்தவுடன் கனடாவில் வதியும் நண்பர் கிரிதரன் நடத்தும் பதிவுகள் இணையத்தில் தரப்பட்டிருந்த தகவலில் அவரது பிறந்த ஆண்டு தவறாக பதிவாகியிருந்ததை கண்டவுடன் தாமதமின்றி  தொடர்புகொண்டு அதனை திருத்துமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதனைத்திருத்தினார்.
நாட்கள் கடந்த நிலையில் ஏ. இக்பால் அவர்களின் பிறந்த திகதி 11-02-1938 என்பதை நண்பர் மேமன்கவி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் (109 ஆவது இதழ்- ஐப்பசி 2017) பதிவுசெய்துள்ள அஞ்சலிக்குறிப்பில் காணமுடிகிறது. எனினும் ஏ. இக்பால் . 1953.12.11 ஆம் திகதிதான் பிறந்தவர் என்ற தவறான தகவல்தான்  நூலகம் இணையத்தில் தற்போதும் இருக்கிறது.

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! பகுதி 2


 .
   இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்.

 

பகுதி 2
தட்சணாமூர்த்தி அவர்களின் இளமைக்காலமும் தவில் உலகப் பிரவேசமும்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரைää  இசை வேளாளர்கள்ää அண்ணாவிமார், நடிகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரையும்ää இணுவை மக்களையும் நெறிப்படுத்தியவர்களான,
சின்னத்தம்பிப்புலவர் - இவரது புலமை பற்றி அறிஞர் மு. வரதராசனார் தனது இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ நடராசஐயர்- இவர் ஆறுமுகநாவலரின் பிரதம சீடர். காசிவாசி செந்திநாதையர் உட்படப் பலர் இவரிடம் பாடம் கேட்டுள்ளனர்.
அம்பிகைபாகப்புலவர்- இவருக்கும் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கும் மிகுந்த நட்புண்டு, “இவரிடத்து யாம் தணிகைப் புராணத்துக்குப் பொருள் கேட்டு அறிந்துள்ளோம்” எனப் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஈழநாட்டுத் தமிழப் புலவர் சரித்திரத்திற் குறிப்பிடுகின்றார்.


வைகுண்ட ஏகாதசி - 29/12/2017


உலகச் செய்திகள்


அமெரிக்க ரயில் விபத்து ; மூவர் பலி, பலர் காயம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி விடுதலை!!!

ஜெருசலேமை தலைநகராக்கும் அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி

பிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி

ஐ.நா. விசா­ரணை அதி­காரி மியன்­ம­ாருக்குள் நுழையத் தடை


அமெரிக்க ரயில் விபத்து ; மூவர் பலி, பலர் காயம்

19/12/2017 அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.இலங்கைச் செய்திகள்


மலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம்

விசேட அதிரடிப் படையினரால் சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்பு

பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை மீட்பு.!

சிங்­கப்பூர் பிர­தமர் இலங்கை விஜயம்

விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி
மலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம்

18/12/2017 மலேசியா - இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், இலங்கையில் முதலீட்டை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை அமைக்கவும் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா

அருவி

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பணம், பிஸினஸ் தாண்டி கலைக்காக படம் எடுப்பவர்கள். அப்படி தொடர்ந்து ஜோக்கர், தீரன் என தரமான படத்தை கொடுத்து வரும் Dream Warriors நிறுவனத்தின் அடுத்த படைப்பு தான் இந்த அருவி, அருவியும் தரமான படமாக வந்துள்ளதா? பார்ப்போம்.

அருவி திரை விமர்சனம்கதைக்களம்

அருவி முதல் காட்சியிலேயே தீவிரவாதி என்று விசாரணை நடத்தப்படுகின்றாள். அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அருவி யார் என்று சொல்ல ஆரம்பிக்க அப்படியே கதை தொடங்குகின்றது.
அருவி சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக வளரும் ஒரு பெண், அப்பா கொடுத்த முழு சுதந்திரத்தோடு வளரும் அவளுக்கு மிகப்பெரும் ஒரு துன்பம் வர, வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகின்றது.
அதன் பிறகு இந்த சமூகத்தின் மீதுள்ள கோபம், தான் வாழ்க்கையில் சந்தித்த சோகம் என்று அனைத்தையும் சொல்ல ஒரு தொலைக்காட்சிக்கு வர அங்கு பல அதிர்ச்சிகரமான தகவலை அருவி சொல்ல, அதை தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சுவாரஸ்யமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அருவி யாருடா இந்த பெண்? என்று ஒவ்வொருவரையும் புருவம் உயர்த்த வைக்கின்றார். முதல் படம் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள், அதிதி பாலன் தமிழ் சினிமாவிற்கு ரெட் கார்பெட் போட்டு வரவேற்கலாம். அதிலும் இந்த உலகத்தில் வாழ பணம் மட்டும் தான் தேவை என்று பேசும் காட்சிகள் விஜய், அஜித் படத்திற்கு சமமாக கைத்தட்டல் பறக்கின்றது. தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்தே படம் சுற்றி வருகின்றது. நம் கண்களுக்கு தெரியாத பல உண்மைகளை இயக்குனர் அருண் பிரபு உடைத்து வெளியே கொண்டு வந்துள்ளார். அதிலும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோரை பற்றி காட்டியுள்ளார்கள் பாருங்கள், திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ எந்த நிகழ்ச்சி என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.
படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் என்றாலும் வெறுமென புரட்சி மட்டும் பேசாமல் அதை காட்சிகளாக அருண் எடுத்த விதம் சபாஷ். அதிலும் இரண்டாம் பாதியில் அனைத்து ஆண்களையும் அழ வைத்து அருவி சிரிக்கும் காட்சி செம்ம கிளாஸ்.
படத்தின் வசனம் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும், படம் முழுவதும் அருவிக்கு உதவியாக ஒரு திருநங்கை வருகின்றார். அவரும் மிகவும் யதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ‘உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள்’ என கேட்கும் காட்சி இன்றைய சமுதாயத்திற்கு சவுக்கடி.
இசை ஆரம்பத்தில் பாடல்களாகவே தான் பல காட்சிகள் வருகின்றது, ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை, Shelley Calist ஒளிப்பதிவு ஏதோ நாமே அந்த இடத்தில் இருப்பது போல் அத்தனை லைவ்வாக படம் பிடித்துள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதை மற்றும் அதை அழகாக கொண்டு சென்ற திரைக்கதை.
அருவி மற்றும் படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் பல காட்சிகள் அதிலும் ஒரு பணியார கிழவி கதை சொல்வார், அதை சொல்லும் விதம் என மிக உணர்ச்சிகரமாக உள்ளது.

பல்ப்ஸ்

சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
மொத்தத்தில் அருவி தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்.

நன்றி  CineUlagamமரண அறிவித்தல்

.
கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன்
                  மலர்வு; 12-01-1941                     உதிர்வு; 18-12-2017

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும், திருமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், சர்வோதய நிறுவனம் ஆகியவற்றின்  முன்னைநாள் கணக்காளருமான ,கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன் அவர்கள் சிட்னியில் 18/12/17 திங்கட்கிழமையன்று இறைபதம் அடைந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், இராசமாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகளும்பஞ்சாட்சரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சடாட்சரன் (செல்வன் - சிட்னி), சிவகடாட்சரன் (பவன்கனடா), சோமாட்சரன் (லவன்கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்யந்தி, சுபந்தினி, பராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி மனோரதியின் (இலங்கைஅன்புச் சகோதரியும்,
சோவிகா, பவிநாஸ் ஆகியோரின்  அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 20/12/17ம் திகதி புதன் கிழமையன்று முற்பகல் 9:30 மணியிலிருந்து 12:30  மணி வரை  South Chapel ,Memorial Avenue,Rookwood.ல் பார்வைக்கு வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்களுக்கு;
சடாட்சரன் _ அவுஸ்திரேலியா:  +61 402 040 415
சிவகடாட்சரன் (பவன்) – கனடா: +1 416 827 1636

சோமாட்சரன் (லவன்) – கனடா;  +1 416 930 9091     

பார்வை ! ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )     அம்மாவின் பார்வை அப்பாவுக் கிருக்காது
          அக்காவின் பார்வை அண்ணாவுக் கிருக்காது
     ஆசிரியர் பார்வை மாணவர்க் கிருக்காது
          ஆனாலும் பார்வைகள் அர்த்தத்தை அளித்துவிடும் !

    கற்றறிந்தார் பார்வை கருத்தாக அமைந்துவிடும்
        கசடர்களின் பார்வை கண்ணியத்தைக் குலைத்துவிடும்
   நற்றவத்தார் பார்வை நானிலத்தைக் காத்துவிடும்
           நம்பார்வை ஒன்றே நமையறியச் செய்துவிடும் !

   ஆணவத்தார் பார்வை அனைத்தையுமே அழித்துவிடும்
           அலைபாயும் பார்வை நிலைகுலைய வைத்துவிடும்
    ஞானமுள்ளார் பார்வை நற்கருணை ஆகிவிடும்
            ஈனமுடை பார்வை எல்லோர்க்கும் இடைஞ்சலன்றோ !

      காளையரின் பார்வை காதல்கதை பேசிநிற்கும்
             கன்னியரின் பார்வை நாணமதைக் காட்டிநிற்கும்
      கணவர்களின் பார்வை மனைவிமீது பதிந்திருக்கும்
            மனைவியரின் பார்வை மாங்கல்யம் தனைநோக்கும் ! 

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இரபோசன விருந்து நிகழ்வு

.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நத்தார் இராபோசன விருந்து  சென்ற சனிக்கிழமை (09.12.2017) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11 மணிவரை கோலாகலமாக இடம்பெற்றது . அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நூற்றுக்கு மேற்பட்ட  குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும்  ஒன்று கூடி விருந்தை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்ச்சியை திரு சிவசம்பு பிரபாகரன் வரவேற்று ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திரு .விஜய்விஜயரட்ணம் பாடல் இசையை ஒழுங்கு படுத்தி காதுக்கினிய பழைய புதிய பாடல்கள் பாடப்பட்டது.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்  அங்கத்தவர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் மிக இனிமையாக பாடினார்கள். தொடர்ந்து மெல்பேர்னில் இருந்து வருகை தந்திருந்த அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நிஷாம் அவர்கள் பல  குரலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பல  அறிவிப்பாளர்கள் போல்   அவர் செய்து காட்டியும் நடித்துக் காட்டியும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.

படித்தோம் சொல்கின்றோம்:


17 ஆம் நூற்றாண்டில்  நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை  சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)
                                                                                      முருகபூபதி

சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன்.
எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன்.
அவ்வப்போது அவரது படைப்புகள் குறித்தும் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். எஸ்.ரா. படைப்பிலக்கியவாதி மாத்திரமில்லை. அவர் திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. சூப்பர்ஸ்டாரின் பாபா படம் உட்பட சில படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கும் அவர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புவேளையில் வந்து சுமார் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் என்பதும் பின்னர்தான் தெரியவந்தது.
அவ்வேளையில் எங்களையெல்லாம் சந்திக்கமுடியாமல் போனமை குறித்தும் அவர் வருந்தியிருக்கிறார்.
இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர்  ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம்.
இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் இந்தியாவில் தென்னாட்டில் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய காலம் பதிவுசெய்யப்படவில்லை. வடக்கே பல மொகாலய சக்கரவர்த்திகள் பற்றிய வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதனால் அவற்றை உசாத்துணையாகக்கொண்டு எஸ்.ரா.வும் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
எஸ்.ரா. எழுத்தாளர் மட்டுமல்ல  ஒரு யாத்ரீகனும்தான். நாடோடியாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதும் அவரது படைப்புகளின் வரிசையில் இந்த இடக்கை எமது கரத்திற்கு வந்துள்ளது.
இதனைப்படித்துக்கொண்டே மதன் எழுதியிருக்கும் வந்தார்கள் வென்றார்கள் என்ற அரிய தொகுப்பு நூலையும் சமகாலத்தில் படித்தேன்.
வந்தார்கள் வென்றார்கள் விகடனில் தொடர்ந்து வெளியாகி வாசகரின் அமோக ஆதரவினால் தனிநூலாகவும் பதிப்பிக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.
அதனை விகடன்குழுமம், தமது  விற்பனையில் ஏறு முகம் எனச்சொல்லியிருக்கிறது.
ஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆனந்தவிகடன் மதன், அங்கிருந்து வெளியேறும் துர்ப்பாக்கியமான சூழல் தோன்றியது. அதுபோன்று சமூக நாவல்களும் சரித்திர நாவல்களும் ஏராளமான கதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கும் எஸ்.ரா.வும் இதுவரைகாலமும் எந்த பதிப்பகத்தின் ஊடாக தமது நூல்களை வெளிக்கொணர்ந்தாரோ அந்த உயிர்மைப்பதிப்பகத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது.

பயணியின் பார்வையில் - அங்கம் 26-->

 " வாழ்ந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம். நடந்துதான் நமது பயணத்தை முடிக்கலாம்"
பேராசிரியர் மெளனகுருவின்  ஆளுமைப்பண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மட்டக்களப்பு 'மகுடம்'  சிறப்பிதழ்
                                                                              முருகபூபதி
கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது.  இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன்.
சுநாமியின்போது மௌனகுரு - சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில்  கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார். அந்த நினைவுகளுடன் அங்கு பிரவேசித்தபோது முற்றத்தில் அமர்ந்து ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்.
எம்மைக்கண்டதும் அவர் தமது குரலைத்தாழ்த்தினார். "வேண்டாம். தொடருங்கள்"  எனச்சைகையால் சொன்னதும் தொடர்ந்தார். பாடல் நின்றதும் அந்தக்கலைஞரை எமக்கு மெளனகுரு அறிமுகப்படுத்தினார்.
அவரது பெயர் கந்தப்பு மயில்வாகனம். வயது 76. இவரது கண்டி அரசன் என்னும் நாடகம் மட்டக்களப்பில் 1965 இல்  மேடையேறியபோது மெளனகுருவும் பேராசிரியர் வித்தியானந்தனும் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
அக்காலப்பகுதியில் வித்தியானந்தன் நாடகக்குழுவின் தலைவராகவும் மௌனகுரு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். கந்தப்பு மயில்வாகனத்தின் குரல்வளத்தில் ஈர்ப்புற்ற மௌனகுரு 1968 இல் தாம்  தயாரித்து அரங்காற்றுகை செய்த சங்காரம் நாடகத்தில் கதையை நகர்த்திச்செல்லும் பிரதான எடுத்துரைஞராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.       

"சுழல்கின்ற சூரியனின் துண்டு பறந்ததுவே"  என்ற கந்தப்பு மயில்வாகனத்தின் கணீர் குரலுடன் திரை திறக்குமாம்.  சங்காரம் தீண்டாமை  ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாடு கொழும்பில் லும்பினி அரங்கில் நடந்தவேளையில் அரங்கேறியிருக்கிறது.  தலைமை வகித்தவர் கி. இலக்‌ஷ்மண அய்யர். இடதுசாரித்தோழர் என். சண்முகதாசன்,  பேராசிரியர் கைலாசபதி ஆகியோரும் இந்நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.
அன்று நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், நுஃமான், முருகையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். சங்காரம் நாடகத்தின் ஒளியமைப்பு ந. சுந்தரலிங்கம்.  அன்று நாடகத்தில் ஒலித்த கலைஞர் கந்தப்பு மயில்வாகனத்தின் அசாதாரணமான குரல் அனைவரையும் வெகுவாகக்கவர்ந்துவிட்டதாக மெளனகுரு அவரை எமக்கு அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டு நனவிடைதோய்ந்தார்.
பரந்த கடற்பரப்பில் கத்திக்கத்திப்பாடி தனது குரல்வளத்தை வளர்த்துக்கொண்டவர்தான் கந்தப்பு மயில்வாகனம் என்று தெரிவித்தார் மெளனகுரு. அன்றைய உரையாடலில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவருடன் தனக்கிருந்த உறவை மெளனகுரு சொன்னபோது, அந்தக்கம்பீரம் சற்றும் குலையாமல் மீண்டும் அந்த முற்றத்திலிருந்து அவர் பாடியதைக்கேட்டு சிலிர்த்தோம்.
மௌனகுருவுக்கு கலைஞர் கந்தப்பு மயில்வாகனம் அறிமுகமானது 1965 இல். எனக்கு மெளனகுருவும் சித்திரலேகாவும் அறிமுகமானது 1972 இல். அக்காலப்பகுதி முதல் கடந்த 45 வருடகாலமாக இவர்கள் இருவரதும் கலை, இலக்கிய  மற்றும் கல்வி, சமூகப்பணிகளை அவதானித்துவருகின்றமையால் அவர்களின் கடின உழைப்பு குறித்து எனக்கு மரியாதையிருக்கிறது.
எனது கலை, இலக்கிய நட்புவட்டத்தில் இவர்களுக்குரிய இடம் முக்கியமானது. அதனால் இலங்கைப்பயணங்களில் இவர்களையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்வது எனது இயல்பு.

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும்; சொல்லாத செய்திகளும்!!

.
இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்.

பகுதி 1


25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் “லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி”  ஆவணப்படம், இசைத்தொகுப்புää “தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்” நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும், கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும், சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ் பரிஸ் ஆகிய இடங்களிலும், யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.
ஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை நிறைகளை ஆய்வு செய்வதும் மிகவும் அவசியமாகின்றது. இந்தவகையில் தமிழ் உலகும்ää இசை உலகும் வியந்து போற்றிய  இந்த அற்புதக் கலைஞனை அவர் வித்துவத் திறமையினை உலகம் முழுவதிற்கும் இளம் சந்ததியினருக்கும்  நாற்பது வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி அவர் கச்சேரியை நேரிலே பார்ப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்கவில்லையே! என்று ஏங்கவைத்த  இசைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பாராட்டுக்கு உரியவர்கள். அவை மிக மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆயினும்


அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

.
20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா கௌர் எனப் பிறந்தவர். அப்பா பள்ளிஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் வாழ்க்கை நடத்தினார். கொஞ்சம் கவிதையும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அப்பாவை விட்டுவிட்டு மகளைப் பிடித்துக்கொண்டுவிட்டாளோ கவிதாதேவி? தன் 11-ஆவது வயதில் அம்மாவை இழந்தார் அம்ரிதா. அப்பா தன் மகளைக் கூட்டிக்கொண்டு லாகூருக்கு இடம் மாறினார். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலையே அம்ரிதாவுக்கு சரியாக இருந்தது. தோழியரில்லை; போக்கிடம் தெரியவில்லை. தனிமையின் நிழல் எப்போதும் அவர்மீது படிந்திருந்தது. ஏகாந்தச் சிந்தனைகள் அவரிடம் எழுத்துவடிவம் பெற்றன. கவிதை புனைய ஆரம்பித்தார் அம்ரிதா. 16-ஆவது வயதில் அவரது முதல் கவிதைத்தொகுப்பு ‘அமிர்த அலைகள்’ வெளியானது. தன் 17-ஆவது வயதிலே, ப்ரீத்தம் சிங் என்பவரை திருமணம் செய்ய நேரிட்டது. அம்ரிதா ப்ரீத்தம் என்கிற பெயரில் எழுதுவதைத் தொடர்ந்தார். முதல் ஏழெட்டு வருடங்களுக்குள் சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.
இரண்டு குழந்தைகள் தந்த மணவாழ்வு இனிக்கவில்லை அம்ரிதாவுக்கு.

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர்.