அவரடியைத் தினம்பரவி அவராசி பெற்றிடுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....... அவுஸ்திரேலியா

            

அன்னையும் தந்தையும் காட்டிடுவார் ஆசானை


ஆசானோ அசடகற்றி ஆண்டவனைக் காட்டிடுவார்
அகமிருக்கும் அழுக்கனைத்தும் அகற்றிடுவார் ஆசானும்
அவரடியைத் தினம்பரவி அவராசி பெற்றிடுவோம் 

கற்பவற்றைத் தேர்ந்தெடுத்து கருவாக்கி நின்றிடுவார்

கற்றவற்றை மனமமர்த்த கண்ணியமாய் உழைத்திடுவார்
கற்றபடி நடந்துவிட கைகாட்டி ஆகிடுவார் 
கற்றுத்தந்த ஆசானின் கழல்பணிந்தி நின்றிடுவோம் 

அறவழியில் நடப்பதற்கு அவர்துணையாய் ஆகிடுவார்


புறவழியில் மனமதனைப் போகாமல் செய்திடுவார்
துணிவுடனே நடப்பதற்கு துணையாக அமைந்திடுவார்
அவனிதனில் ஆசானின் ஆசியினைப் பெற்றிடுவோம்

ஏணியாய் இருந்து எமையேற்றி விட்டிடுவார் 

ஞானியாய் மலர்ந்து நல்லுரைகள் நவின்றிடுவார்
ஈனமாம் நினைப்பை இல்லாமல் செய்திடுவார்
எல்லோரும் குருவினது திருவடியைப் பணிவோமே

தோழமை உணர்வுடனே தொட்டுமே அனைத்திடுவார்

ஆழமாம் உரிமையுடன் அவரெம்மைக் கடிந்திடுவார்
கோழையெனும் நினைப்பதனைக் குழியிட்டுப் புதையென்பார்
குவலயத்தில் ஆசானைக் கொண்டாடி மகிழ்வோமே

வாய்மைதனை மனமிருத்தி வாழுவென்று உரைத்திடுவார் 

கீழ்மைதனை மனமிருந்து கிழித்தெறிந்து விடுவென்பார்
தாய்மையுடன் அனைவரையும் தழுவியே நடவென்பார்
தரணியிலே ஆசாற்கு தலைவணங்கி நிற்போமே

எங்கள் திருநாடே! - --- மெல்போர்ன் அறவேந்தன்

 வண்டுறை தண்டுடை செந்தாமரைப் பூம்பொழில்

பண்ணுடை பாட்டிசை குயிலுறைத் தோப்பு

மயிலுறை விண்தொடு கொம்புடை வனம்

பலமிகு மதிலுடை அகழிசூழ் கோட்டை

தேருறை அருளுடை இறையுறை கோயில்

பெரும்கரை சுற்றுமுடை வற்றிடா நீர்நிலை

உறுமீனுடை அவைதேடு கொக்குநாரை பட்சிப்படை

விரிபுல்தரை மேய்ந்திடு எண்ணிலா கால்நடை

நெல்வாழை கரும்புவிளை மஞ்சள்தரு நன்செய்

நல்துவரை சோளமொடு கம்புவிளை புன்செய்

தகையுடை நிதியொடு கொடையுள மாந்தர்


கொடியிடை அன்னநடை வலம்வரு மகளிர்

திணவெடு தோளுடை வலிமிகு வாலிபர்

குணமுடை மதிமிகு கனிவுடை முதியோர்

பணிவுடை துணிவொடு பண்புடை சிறுவர்

கனிவொடு னமொடு செயலதில் இணைந்து


ஒருமையொடு வளமது தன்னிடை பகிர்ந்து

பெருமையொடு வாழுமுறை புவியிடை படைக்கும்

இத்தகு சீருடை வளமிகு ஊர்பல தானுடை

இதற்கிணை ஏதுமிலை வாழியென் திருநாடே!


 

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை இலங்கைத் தலைநகரின் அரசியல் – பொருளாதார – சமூக மாற்றத்தை களனி கங்கையின் தீரத்தில் சித்திரிக்கும் நூல் ! வாசிப்பு அனுபவம் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா ( கனடா )


நீர் இன்றி அமையாது உலகு 
என நீரின் சிறப்பை எடுத்துரைக்கிறது திருக்குறள். நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த பண்டைய காலத்து மன்னர்கள் இயற்கை நீர்நிலைகளைப் பாதுகாத்ததுடன் ஏரிகள், குளங்கள் போன்ற செயற்கையான நீர்நிலைகளையும் உருவாக்கினர்.

 நாட்டின் பொருளாதாரத்தையும் சூழல் சமநிலையையும் மேம்படுத்த உதவுகின்ற இத்தகைய நீர்நிலைகள் விலங்குகளினதும் பறவைகளினதும் வாழிடமாக இருப்பதுடன்,  மனிதர்களின் குடிநீர்த் தேவைகளையும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத் தேவைகளையும்கூடப் பூர்த்திசெய்கின்றன.

 வையை நதியின் சிறப்புப் பற்றியும், அது பெருக்கெடுத்துப்பாயும்போது


கரைபுரண்டோடும் மக்களின் மகிழ்ச்சி பற்றியும் சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் எடுத்தியம்புகிறது. அத்துடன், அந்தக் கால மக்களின் பண்பாட்டையும் அவை பறைசாற்றுகின்றன. அவ்வாறே நடந்தாய் வாழி காவேரி என காவேரி ஆற்றின் சிறப்பைக் கூறி அதனை வாழ்த்தும் பாடல்கள், அகத்தியர் என்ற திரைப்படத்திலும், சிலப்பதிகாரத்தில் மாதவி பாடும் கானல்வரிப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

 வானம் பொழியும் மழையை உள்வாங்கி சமவெளிகளினூடாகப் பாயும் ஒரு நதியின் பயணம் என்பது, அந்த நாட்டின் நாகரீகத்தின் பயணமாகவும், புராதனங்களின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. அவ்வகையில் சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்து, முகத்துவாரம் என்ற இடத்தில் இந்து சமுத்திரத்துடன் கலக்கின்ற, இலங்கையின் நான்காவது பெரிய ஆறான களனி கங்கைக்கும் ஒரு சரித்திரம் உள்ளது.

 


களனி கங்கையுடன் இணைந்து பயணிக்கும் நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் மாற்றங்களைப் பற்றி, அரங்கம் என்ற வார இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் தொடராக எழுதியிருந்தார். நடந்தாய் வாழி களனி கங்கை என்ற தலைப்பிலான அந்தத் தொகுப்பு, பின்னர் குமரன் பதிப்பகத்தினரால் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. இப்போது அதனைக் களனி கங்கையின் மர்மங்கள் The mystique of Kalani River என்ற பெயரில் நூர் மஃரூப் முகம்மட் அவர்கள்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

இந்த நூலை வாசிக்கும்போது, எந்த மனிதனும் முழுமையாகக் கெட்டவனும் இல்லை, நல்லவனும் இல்லை என வியாசர் குந்திதேவிக்குக் கூறிய தேற்றுதல் தனக்கு நினைவுவந்ததாக மொழிபெயர்ப்பாளர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களில் நல்ல குணங்களுடன் கெட்ட குணங்களும் காணப்படுகின்றன என்பது சரி, ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும் என்றும், துக்கத்திற்கு வழிவிடக் கூடாதென்றும் கூறப்படும் அந்தத் தேற்றுதல் வேண்டுமென்றே கட்டியவிழ்க்கப்பட்ட பிரச்சினைகளை அனுபவித்த எம் நாட்டவர்களுக்கு நிச்சயமாகப் பொருத்தமானதல்ல.

உடமைகளை மட்டுமன்றி, உயிர்களையும் இழந்தவர்களுக்கு, அது அவர்களின் செயலின் விளைவெனலாமா?

 ஆனால், நமது கடந்த காலத் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை இந்த நூலும் எங்களுக்கு நினைவுபடுத்துகிறது எனலாம்.

அரை நூற்றாண்டுக்கு முன்னர், மல்லிகை ஜீவா அவர்களால் இலக்கியவுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட முருகபூபதி அவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். இரண்டு தடவைகள் தேசிய சாகித்திய விருது பெற்ற இவர்,  எனது பெற்றோரின் ஒரு மாணவர் எனக் கூறுவதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு.

இனி நூலை நோக்கினோமெனில், கௌதமபுத்தர் இரண்டு தடவைகள் விஜயம் செய்த பெருமையையும், மகாத்மா காந்தியின் அஸ்தியை தனக்குள் வாங்கிக்கொண்ட சிறப்பையும் கொண்ட களனி கங்கைப் பகுதியிலிருந்து வந்த அரசியல்வாதிகளான,

ஜே. ஆர். ஜெயவர்த்தனா, சிறில் மத்யூ போன்றவர்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் காறி உமிழ்ந்த வெறுப்பின் விளைவினால் உயிர்களை இழந்த மனிதர்களின் உடல்களையும்கூடக் காவிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் களனி கங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் இந்த நூல் ஆதாரங்களுடன் கூறுகிறது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 34 எங்கள் ஊரில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1997 இல் நடந்த மல்லிகைஜீவா விழா ! முருகபூபதி

 மெல்பனில்  1997 ஆம் ஆண்டு இலக்கியப் பிரவேச வெள்ளிவிழாவை


நடத்திவிட்டு, இலங்கை செல்லத் தயாரானேன்.

1987 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மெல்பனுக்கு வந்தபின்னர், 1990 ஆம் ஆண்டுதான் நாடு கடந்தேன்.

அந்தப்பயணத்தில் தமிழகம் சென்றவேளையில்,  அங்கு நடந்த நிகழ்ச்சிகள், சம்பவங்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.

அவ்வேளையில் மல்லிகை ஜீவா,   “ எப்போது இலங்கை வரப்போகிறீர்…?  உமது நண்பர்கள் பலர் உமக்காக காத்திருக்கிறார்கள்  “ என்றார்.

97 ஆம் ஆண்டுவரையில் பொறுத்திருங்கள்.  நிச்சயம் வருவேன் என


அவருக்கு வாக்கு கொடுத்திருந்தேன்.

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அவர்.  மெல்பனில்  நான்கு கலை, இலக்கிய ஆளுமைகளை எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவில் பாராட்டி கொண்டாடியதையடுத்து,  மல்லிகை ஜீவாவையும் எங்கள் ஊருக்கு அழைத்து பெருவிழா நடத்தவேண்டும் என்ற எண்ணத்திலிருந்தேன்.

அதனை ஒரு கனவாகவே வைத்திருந்தேன்.

எந்தவொரு நோக்கமும் வெற்றியடையவேண்டுமாயின்,  அப்துல்கலாம் சொன்னதுபோன்று நாம் கனவு காணவேண்டும். அதன்பிறகு அந்தக்கனவை நனவாக்க உழைக்கவேண்டும்.  இறுதியில் வெற்றி  நிச்சயம்.

இந்தச்செய்தியை மெல்பனில் அக்காலப்பகுதியில் நடந்த ஒரு நடனநிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டேன். அந்த நடனக்குழுவிலிருந்த அனைத்து ஆண் – பெண் கலைஞர்களும் இளம் தலைமுறையினர்.  அவர்களுக்கு கண் பார்வையில்லை. தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர்.

அவர்களை அழைத்துவந்த மற்றும் ஒரு மூத்த கலைஞர்தான், கனவு – உழைப்பு – வெற்றி பற்றிய செய்தியை சொன்னார்.

1997 இல் இலங்கை சென்றபோது எனது மகன் முகுந்தனையும் அழைத்துச்சென்றேன். அப்போது அவனுக்கு பதினொரு வயது பிறந்துவிட்டது.  அவனுக்கு சிங்கப்பூரை பார்க்கவேண்டும் என்ற ஆசை. அத்துடன், இலங்கையை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற ஆவல்.

அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.   சிங்கப்பூரில் குடும்ப நண்பர் கட்டிட பொறியிலாளர் கலாநிதி சற்குணராஜா வீட்டில் தங்கினோம். அவரது மனைவி பத்மினி கலை, இலக்கிய ஆர்வலர். இவரது தம்பி கவிஞர் காவியன் முத்துதாசன் விக்னேஸ்வரன் எனது நீண்ட கால ஊர் நண்பர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில்  படித்தவாறே திநகரிலிருந்த கண்ணதாசன் பதிப்பகத்தில் பகுதிநேரமாக பணியாற்றிக்கொண்டிருந்தவரை, 1991 ஆம் ஆண்டு ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கிருந்த பதட்ட சூழ்நிலையினால்,  அக்கா பத்மினி  சிங்கப்பூருக்கு அழைத்து வந்துவிட்டார்.

தமிழ்த் திரையில் அதிர்வுகளை ஏற்படுததியுள்ள பொன்னியின் செல்வன் - ச . சுந்தரதாஸ்

 


சோழ சாம்ராஜ்யத்தின் பெருமையை விளக்கும் விதத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பல்லாண்டு கால முயற்ச்சியில் பின் திரைக்கு வந்துள்ளது.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது என்பது போல் நவீன தொழில் நுட்ப வசதிகளை பயன் படுத்தி பிரம்மாண்டமான படமாக இதனை இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.


1950 ம் ஆண்டுகளில் கல்கி வார இதழில் இந்த தொடர் வெளிவந்த போது பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பை அது பெற்றுக் கொண்டது.தொடர்ந்து இன்றும் வாசகர் மத்தியில் ஆதரவை பெற்ற நூலாக திகழ்கிறது.அத்தகைய கதையை திரைப் படமாக்கும் போது அதனை மிக லாவகமாக கையாளவேண்டும்.அந்த சவாலையே மணிரத்னம் இந்தப் படத்தின் சந்தித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே மூலக் கதை அமரர் கல்கி என்று காட்டப்படுகிறது.அத்துடன் படத்தின் சுவாரசியம் கருதி கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சொல்லிவிடுகிறார்கள்.இதனால் படத்தின் வரக் கூடிய கதை மாற்றங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தாத வண்ணம் முன்னெச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

ஓரு கல்கி எழுதிய கதைக்கு மணிரத்னம்,ஜெயமோகன்,குமரவேல் என்று மூவர் அடங்கிய குழு திரைக்கதை எழுதி அதுவே படமாகியுள்ளது.ரசிகர்கள் இந்த மாற்றங்களுக்கு உடன் பட்டாலே படத்தை உள்வாங்க முடியும் என்பதே நிதர்சம்.

நாவல் ஆடி 18ல் வந்தியத்தேவன் தனது பிரயாணத்தை தொடங்குவதுடன் ஆரம்பமாகிறது.ஆனால் படமோ ஆதித்த கரிகாலன் யுத்தத்தில் வெற்றி பெறுவதுடன் ஆரம்பமாகிறது.திரையுலகுக்குரிய சென்டிமென்டல் காரணமோ என்னவோ!கரிகாலனாக வரும் விக்ரமன் வேடத்துக்கு பொருந்துகிறர்.கார்த்திக் தான் வந்தியத்தேவன்.
பொன்னியின் செல்வனாக நடிப்பவர் ஜெயம் ரவி .இவர்கள் மூவரும் அளவுடன் நடிக்கிறார்கள்.அவர்களின் நட்சதிர செல்வாக்கு தலை தூக்க வண்ணம் கதாபாத்திரத்துக்குள்ளேயே அவர்களை அடக்கி வைத்துள்ளார் இயக்குனர்.

நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் இன்றும் இளமையுடன் கட்சியளிப்பது அவர் ஏற்ற இரட்டை வேடத்தை நியாயப்படுத்துகிறது.குந்தவையாக வரும் திரிஷா கரிகாலனுடன் சீறும் காட்சியில் நிறைவாக செய்கிறார்.இவர்களுடன் சரத்குமார்,ஜெயராம்,பிரகாஸ்ராஜ்,பிரபு,ரஹ்மான்,ஐஸ்வர்யா லக்ஷ்மீ,ஜெயசித்ரா,என்று பலர் நடித்துள்ளனர்.

அரசியல் அலைப்பறையில் மூழ்கிவிடும் அறிவுலகம் !? நிருவாகங்களில் புரையோடும் காயங்கள் ! அவதானி


வடக்கில் தற்போது எத்தனை அரசியல் கட்சிகள்?  என்று எவரேனும் கணக்குப் பார்த்தார்களா..?

ஆனால், இக்கட்சிகளின் அலைப்பறைகளை மாத்திரம் ஊடகங்களில் பார்த்து வருகின்றோம். அவை பற்றி விவாதித்து வருகின்றோம்.

வருடந்தோறும் ஜெனீவாவில் கொடியேறியவுடன் அங்கே பறக்கும் எம்மவர்களின் அறிக்கைகளையும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வருகின்றோம்.

இத்தனைக்கும் மத்தியில்தான், வடக்கில் போதை வஸ்து பாவனையும் விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது.  தமிழர் மானமும்


பறக்கிறது.

இவ்வேளையில் யாழ். பொது நூலகத்தில் இயங்கிக்கொண்டிருந்த சிற்றுண்டிச் சாலையை சீல் வைத்து மூடுமாறு நிதிமன்றத்தின் உத்தரவு வெளிவந்து, அவ்வாறே நடந்தும் இருக்கிறது.

1981 ஆம் ஆண்டு தென்னிலங்கையிலிருந்து வந்த சீருடையினரால் தீவைத்து கொளுத்தப்பட்டு,  உயிர் மீண்ட சீதையாக காட்சியளித்த  பொதுநூலகத்தினை தினம் தினம் பயன்படுத்தி வருபவர்கள் பலர்.

 வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள் தமது தேவைக்காக செல்லுமிடம்தான் பொது நூலகம்.

அவ்வாறு செல்பவர்கள் அங்கிருக்கும் சிற்றுண்டிச்சாலையையும் பயன்படுத்துவார்கள்.  அதனை நிருவகிப்பவர் எவ்வாறு நூலக நிருவாகத்தினால் தெரிவுசெய்யப்படுகிறார்? என்பது இங்கு முக்கியமில்லை.

ஆனால், அவர் எவ்வாறு அதனை நடத்துகிறார்? என்பதை கவனிக்கவேண்டியது பொது நூலகத்தின் தலையாய கடமை.

அந்த சிற்றுண்டிச்சாலையில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததும், யாழ். பொது சுகாதார பரிசோதகர் உடனடியாகவே நேரில் சென்று பார்த்துவிட்டு எச்சரித்துள்ளார். 

கடந்த மாதம் 09 ஆம் திகதி குறிப்பிட்ட சுகாதார பரிசோதகர் அங்கே அது இருந்த கோலத்தை கண்டுவிட்டு, துரிதமாக அதனை நடத்துபவர் அக்குறைபாடுகளை முற்றாக களையவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பிள்ளையோ பிள்ளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பது


தெரிந்த விஷயமே!ஆனால் சில படங்கள் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டதும் உண்டு.அந்த வகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் தான் பிள்ளையோ பிள்ளை.

வசனகர்த்தாவாகவும்,அரசியல்வாதியாகவும் திகழ்ந்து பின்னர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர் மு கருணாநிதி.இவரின் மூத்த மகன் மு க முத்து.கருணாநிதியின் முதல் தாரமான பத்மாவதியின் ஒரே மகனான முத்து சிறு வயதிலே தாயை

இழந்தவர்.தாய்மாமனான பிரபல பாடகர் சிதம்பரம் எஸ் ஜெயராமனின் மகளை மணந்தவர்.1972ல் அரசியலில் உச்சம் தொட்டிருந்த கருணாநிதிக்கு தன் மகனை நடிகனாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்டபட்டது.அதன் விளைவாக தன்னுடைய தாயின் பெயரில் அஞ்சுகம் பிச்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.அதிலும் முதல் படத்திலேயே இரட்டை வேடம்!ஈஸ்ட்மேன் கலரில் படம் உருவானது.

தி மு க வில் சக்திவாய்ந்த பிரமுகராகத் திகழ்ந்த எம் ஜீ ஆரின் திரை வாரிசாக முத்துவை உருவாக்க காரியங்கள் நடந்தன.55வயதாகி விட்ட எம் ஜீ ஆருக்கு மாற்றீடாக தன் மகன் உருவாவதே பொருத்தமானது என்று நினைத்த கருணாநிதி அதற்கு ஏற்றாற் போல் படத்தின் கதை வசனத்தை எழுதினார்.தன் நெருங்கிய நண்பர்களான கிருஷ்ணன் பஞ்சு இருவரையும் படத்தின் இயக்குனராக அமர்த்தினார்.வாலியும் கண்ணதாசனும் பாட்டெழுத எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார்.

படத்தின் ஆரம்ப பூஜையின் போது எம் ஜீ ஆர் அதில் கலந்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.இவ்வளவு வேலையும் நடந்த போதும் படத்தில் நடிக்க கதாநாயகனாக உருவாக முத்து ஆர்வம் காட்டினாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.இதனால் படப்பிடிப்பின் போது அலட்சியமாகவே முத்து செயற்பட்டார்.அவரின் முழு ஒத்துழைப்பை பெற இயக்குனர்கள் சிரமப்பட்டார்கள்.ஆனாலும் நல்லவிதமாக படம் பூர்த்தியானது.

இலங்கைச் செய்திகள்

 யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத்தூதரகத்தினால் நிதியுதவி

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னார் விஜயம்

தேசிய பேரவையின் உப குழுவொன்றுக்கு நாமலுக்கு தலைமை பதவி

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதியுடன் பேச்சு


யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத்தூதரகத்தினால் நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத்தூதரகத்தினால் ரூபா 43இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  

சீனத்தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை நேற்றுமுன்தினம் (02) பிற்பகல் 4.00மணியளவில் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். 

உலகச் செய்திகள்

 மேற்குலகின் கடந்த காலம் குறித்து புட்டின் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

ஜப்பானுக்கு மேலாக வட கொரியா ஏவுகணை வீச்சு: பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்கா: இயன் புயலால் உயிரிழப்பு 80 ஐ தாண்டியது

தென்கொரியா, அமெரிக்கா வடகொரியாவுக்கு பதிலடி


 மேற்குலகின் கடந்த காலம் குறித்து புட்டின் குற்றச்சாட்டு

“உண்மை, சுதந்திரம் மற்றும் நீதிப் பெறுமானங்களுக்கு எதிராக மேற்குலகம் இந்தியா போன்ற நாடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 23 “பாமாவின் எழுத்துலகம்”


நாள்:
         திங்கட்கிழமை 10-10-2022       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM, Facebook

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

 

நாவல்கள்:

 

கருக்கு  - பேராசிரியர் இரா பிரேமா

சங்கதி - கவிஞர் மனுஷி

வன்மம்  - பேராசிரியர் அரங்க மல்லிகா

மனுசி  - பேராசிரியர்  ஏ.இராஜலட்சுமி

 

சிறுகதைத்தொகுப்புகள்: - பேராசிரியர் இரா.பிரபா

 

கிசும்புக்காரன்

கொண்டாட்டம்

ஒரு தாத்தாவும் எருமையும்

 

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

       இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும்,


ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அன்புடன் அழைக்கின்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:   

சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.

மெய்நிகர் இணைப்பு:

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84185296033?pwd=Nk42STFLeTFRY04wTlNhYWNweWN1QT09
Meeting ID: 841 8529 6033
Passcode: 677724

அவுஸ்திரேலியா நேரம்  இரவு 8-00 மணி  

இலங்கை – இந்திய நேரம் :  பிற்பகல்  2-30 மணி.

இங்கிலாந்து  நேரம் :  முற்பகல் 10– 00 மணி.

ஜேர்மனி – பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.

நியூசிலாந்து :  இரவு 10-00 மணி.

கனடா : காலை 5.00 மணி.

பண்பாட்டுப் பெட்டகம் நூல் வெளியீட்டு விழா


 

ஆன்மீகம் வருகிறது !  அருமைத் தமிழ் வருகிறது ! 

 சமூகத்தில் சிறந்துவிளங்கிய ஆளுமைகளும் வருகிறார் ! 

 48 தலைப்புகள்…. 322 பக்கங்கள்….
                     
  அத்தனையும் பெட்டகத்தினுள் !


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும், அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2022