சுட் டெரிக்கும் நினைவுகள் - செ .பாஸ்கரன்

.


காட்டுப் பூவிற்கும் வாசமுண்டென்று 
 காட்டியவள் நீ 
கடைக்கண்ணால் கதை பேசினாய் 
கலகலத்துச்  சிரித்தாய் 
உளவியல் படிக்கும் மாணவிபோல் 
உள்ளும் வெளியும் எனைத் தேடினாய் 
நான் நீயாகவும் நீ நானாகவும் 
கடல் மடியில் மிதக்கும் படக்கானோம் 
கண் மூடிச் சிரிக்கும் சிறு பிள்ளைபோல் 
உலகை ரசித்தாய் 
வள்ளுவன் திருக் குறளுக்கும் 
ஒளவையின் ஆத்திசூடிக்கும் 
அர்த்தம் கேட்டாய் 
தொடர்பில்லாத இசைபோல 
அறுந்தறுந்து  வந்தது உன் பேச்சு 
மழைக்கால விட்டில் பூச்சிகளாய் 
நினைவுகளை தூவிவிட்டு தூரம் சென்றாய் 
மல்லிகைப் பூவை மணந்து பார்க்கிறேன் 
சொல்லிவைத்தாற்போல்   உன்வாசம் தருகிறது 
வேடன் அம்புபட்ட புறாவாய் 
மனம்  துடிதுடிக்கிறது 
நீ காட்டிச் சிரித்த நிலா 
இன்று அழுதுவடிகிறது
நுரையெறிந்த கடலலையும் 
குமுறிக்கொண்டிருக்கிறது 
உன்னை காணவில்லை என்ற குறைபோலும் 
எவ்வளவு தூரம் சென்றாலும் 
புறப்பட்ட இடத்தில் திரும்பவந்து 
தரித்து நிற்கிறது மனச்சங்கிலி 
நீளம் தொடர்கிறது நினைவுத் திரையில் 
நீலம்  கவிகிறது  வானவெளியில் 
சுட்டெரிக்கும்  நினைவுகளை 
சுமந்து நிற்கிறேன். 

படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி “ யின் ஆளுமையைப்பற்றி பேசும் ஆவணம் - முருகபூபதி


சமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம்,  மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.
தற்கால மின்னியல் ஊடகத்தில் வலிமையான தொடர்பாடலாக விளங்கும் முகநூலில் அத்தகைய சிறு குறிப்புகளை  பதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்ற கலாசாரம்  வளர்ந்திருக்கிறது.
அவை பெரும்பாலும் எழுதப்படுபவருக்கும் மறைந்தவருக்கும் இடையே நிலவிய உறவு குறித்தே அதிகம் பேசும்.
ஆனால், மறைந்துவிட்டவர் அவற்றை  பார்க்காமலேயே நிரந்தர உறக்கத்தில் அடக்கமாவார். அல்லது தகனமாவார்.
இந்தத்  துர்ப்பாக்கியம் காலம் காலமாக எல்லா சமூக இனத்தவர்களிடமும் நிகழ்ந்து வருகிறது.
ஒரு இலக்கிய படைப்பாளி மறைந்துவிட்டால், அதுவரையில் அவர் எழுதிய எழுத்துக்களை படிக்காதவரும் அவற்றைத்  தேடி எடுத்துப்படிக்கச்செய்யும் வகையில் சிலரது அஞ்சலிக்குறிப்புகள் அமைந்துவிடும்.
ஒரு ஆளுமையை  வாழும் காலத்திலேயே கனம் பண்ணி போற்றி பாராட்டி விழா எடுப்பதையும் அதற்காக சிறப்பு மலர் வெளியிடுவதையும் மேற்குறித்த பின்னணிகளிலிருந்துதான் அவதானிக்கவேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியா -  சிட்னியில் சுமார் மூன்று தசாப்தகாலமாக வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் ஆசிரியராகவும் பாட விதான அபிவிருத்தியில் நூலாக்க ஆசிரியராகவும் படைப்பிலக்கியவாதியாகவும் ஆய்வாளராகவும் தமிழ் உலகில் அறியப்பட்டவர்.
அகவை தொன்னூறை நிறைவுசெய்துகொண்டு, ஏறினால் கட்டில் இறங்கினால்,  சக்கர நாற்காலி என வாழ்ந்துகொண்டு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்தவாறு சிட்னியில் வசிக்கின்றார்.
அவருக்கு 90 வயதாகிவிட்டது என அறிந்ததும், சிட்னியில் வதியும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழா எடுத்தனர்.
விழாவில் காற்றோடு பேசிவிட்டுச்செல்லாமல்,  ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டு, கவிஞர் அம்பியின் பன்முக ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்துள்ளனர்.
இச்செயல் முன்மாதிரியானது. ஒருவர் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவை சமூகத்தில் விதைக்கும் பண்பாட்டினையும் கொண்டிருப்பது.

அலமந்தே நிற்கின்றார் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


          காரானாய் ககனமதில் 
image1.JPG                நீரானாய் நீள்தரையில்
          பார்மீது உனைக்காணா
                பலரிப்போ தவிக்கின்றார்
          மோர்விற்கும் ஆச்சியரை
                 கண்டுவிட முடியவில்லை
           பீர்விற்கும் கடைகளைத்தான்
                    காணுகிறோம் தெருவெல்லாம்  !

               பயிருக்கு உயிர்கொடுத்தாய்
                       பசிபோக்க  துணையானாய்
               பாலோடும் நீகலந்தாய்
                      பழச்சாறாய் வெளியும்வந்தாய் 
               நிலவாராய்ச்சி செய்கின்றார்
                        நினைத்தேடி அலைகின்றார் 
                நிறம்நிறமாய் நீமாறி 
                      நிற்கின்றாய் குடிவகையாய்  !

               அரசுகட்டில் அமர்வதற்கு 
                     அடிப்படையாய் நீயமைந்தாய் 
              அரசியலார் உன்பெயரால் 
                       ஆட்சியினைத் தொடருகிறார் 
              அவரமர துணைநின்ற
                      அப்பாவி மக்களெலாம் 
               அருந்துதற்கு உனைக்காணா
                     அலமந்தே நிற்கின்றார்  !

2019 சிட்னி இசைவிழாவில் நடைபெற்ற ஆடல் நிகழ்ச்சிகள் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


சிட்னி இசைவிழாவில் வழமையாக ஆரம்ப நாள் அன்று பிரபல ஆடற்கலைஞர் முரளீதரன் சிட்னி கலைஞர்களுடன் இணைந்து நாட்டிய நாடகத்தை நடத்தி வந்தார். இம்முறை வழமைக்கு மாறாக இசை விழா நடந்த மூன்று நாட்களுமே காலை நிகழ்வு ஆடலாகவே அமைந்தது.

இந்த மூன்று நிகழ்வுகளிலும் மிக முக்கியமான ஒரு கலை நிகழ்வாக அமைந்தது சக்தி என்ற இரண்டாம் நாள் நிகழ்வு. கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது பெண்மையின் சக்தி. 'ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே' என ஆரம்பிக்கும் சரஸ்வதியதுதியுடன் ஆரம்பமானது. காவியா முரளீதரனுடன் இணைந்து நாலு பெண்கள் ஆடினார்கள். அத்தனைவரும் வயது 13 தொடக்கம் 16 வரை மதிக்கத் கூடிய சிறுமிகள் அனைவரும் அபாரமாக ஆடினார்கள். இவர்கள் முரளீதரன், சித்திரா முரளீதரன் மாணவியர் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்தனர்.  

இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்த வானம், நாம் மேடையில் பார்க்கும் பத வர்ணத்திற்கான அத்தனை அம்சங்களும் இருந்தது. ஆனால் பாடல் புராண புருஷனா போற்றுவதாக அல்ல. சாதாரண வாழ்வில் காணும் பாத்திரமான பெண், வாழ்வில் அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பாடலாக தலை நிமிர்ந்து நில்லடி' சுரங்கள் ஜதிகள் யாவரும் இணைந்து அற்புதமாக ஆடினார்கள். அபினயம் வேறுபட்ட பிரச்சனையை வெவ்வேறு பெண்கள் எதிர் கொண்டு நிலைகுலையும் போது 'காவியா' அவர்களை தேற்றி 'தலை நிமிர்ந்து நில்லடி' என சக்தி ஊட்டுவதாக அமைந்தது.
அடுத்த பாடல் வயதுக்கு வந்த ஒரு பெண்ணுக்கு வீட்டில் போடும் கட்டுப்பாடுகள் உரக்கப் பேசாதே அதனை நடவாதே. இந்தியாதி அவளோ தனது உடல் மாற்றம் மன மாற்றம் மற்றவருக்கு புரியவில்லையே என்ற ஏகத்தை அழகாக பாடலாக அமைத்திருந்தார் முரளி. ஆடலும் அற்புதமாக அமைந்தது.


அடுத்து காவியா பெண்களை பார்த்து 'நீ ஒரு தலையாட்டிப் பொம்மையா' என கேட்பதாக பாடல். பெண் சந்தையிலே ஒருமாதிரி விற்கப்படுகிறாள். கணவனை தெரிவதில் இருந்து அவள் கருத்திற்கு இடம் கிடையா. திருமணத்திப் பின்னும் கணவனுக்கு தலையாட்டும் பெண்ணாகவே வாழ்ந்து முடியும் வாழ்வை காட்டினார். தில்லானுடன் இனியே நிறைவேறியது. கலைஞரை கௌரவிக்க என்னை மேடைக்கு அழைத்தார்கள். முரளீதரனிடம் 'பரத நாட்டியத்திற்கு ஒரு புதிய அர்த்தம் கற்பீத்தீர்கள்' என கூறி மகிழ்ந்தேன்.

போரின் முடிவுக்குப் பிறகு ஒரு தசாப்தம் கடந்தும் கூட நிலையான வாழ்விடம் இல்லை


தி.ராமகிருஷ்ணன் 
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 65 இலங்கை அகதிகளை இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில்  பிறப்பித்த உத்தரவு நீண்டகாலப் பிரச்சினை ஒன்றுக்கு இரு நாடுகளும் தீர்வுகாணவேண்டிய தேவை மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது.
இலங்கையில்  இருந்து 1983 -- 2012 காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பியோடிவந்த சுமார் 95 ஆயிரம் அகதிகள் சம்பந்தப்பட்டதே இந்த பிரச்சினையாகும். அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் மத்திய அரசாங்கத்தின் கணிசமான நிதியுதவியுடன் மாநில அரசாங்கத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற 107 முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்று மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது மீதிப்பேர் முகாம்களில் வசிக்காத அகதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். தங்கள் சொந்தச் செலவில் வாழ்கிகின்ற அவர்கள் ஒரு காலமுறைப்படி உள்ளூர் அதிகாரிகள் முன்னிலையில் சமுகமளிக்கவேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுமபோது மிகப்பெரிய எண்ணிக்கையான அகதிகளுக்கு இடமளித்திருப்பது தமிழ்நாடு தான்.
நாடற்ற 65 பேர் 
1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடளாவிய வன்முறையைத் தொடர்ந்து 1983 -- 1985 காலகட்த்தில் தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்த பிறகு திருச்சியில் உள்ள அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்ட  " நாடற்ற நபர்கள் " 65 பேர் சம்பந்தப்பட்டதே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை முன்னால் உள்ள வழக்காகும். (இவர்களின் மூதாதையர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவில் இருந்து கூட்டிச்செல்லப்பட்டவர்கள். ) இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் 1964 ஆம் ஆண்டிலும் 1974 ஆண்டிலும் கைச்சாத்திட்ட  இரு தரப்பு உடன்படிக்கைகளின் கீழ் வருகின்ற தாயகம் திரும்பியவர்களுக்கு சமதையாக தங்களைக் கணிக்கவேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழ் அகதிகளுடன் தங்களைச் சேர்த்து நோக்குவதை இவர்கள் விரும்பவில்லை.
ஆனால், இவர்கள் செல்லுபடியாகக்கூடிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் பிரவேசித்தவர்கள் என்பதால் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் " சட்டவிரோத குடியேற்றவாசிகள் " என்றே நாமகரணஞ்சூட்டியிருக்கின்றன. குடியுரிமைக்கான தகுதிப்பிரமாணங்களை இவர்கள் நிறைவுசெய்திருந்தாலும் கூட  ஒரு உரிமையாக குடியுரிமையைக் கோரமுடியாது என்று மத்திய அரசாங்கம் கூறியிருக்கிறது.ஆனால்,  அகதிகள் வலுக்கட்டாயமாக நாடுதிருப்பியனுப்பப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு 1990களின் முற்பகுதியில் அதிகாரிகள் உறுதியளித்தார்கள்.

புதிய அரசியல் வியூகத்தின் அவசியம்


06/07/2019 இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் அனைத்தும் முளையில் கருகிப் போயுள்­ளன. பய­னுள்ள வகையில் அவற்றை வளர்த்­தெ­டுத்து, முன்­னோக்கி நகர்த்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரால் போதிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதே­வேளை, அர­சியல் தீர்வு காணப்­ப­டு­வதை விரும்­பாத சக்­தி­களின் ஆதிக்கச் செயற்­பா­டு­களும் இந்த முயற்­சி­க­ளுக்குத் தடைக்­கற்­க­ளாக அமைந்­தி­ருப்­பதை மறுக்க முடி­யாது.
அர­சியல் தீர்­வென்­பது, நாட்டின் ஒட்­டு ­மொத்த நலன்­சார்ந்த தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தொரு விடயம் என்ற கண்­ணோட்­டத்தின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது. இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இரு கூர்­க­ளாகப் பிரிந்து செயற்­ப­டு­கின்ற தமிழ்த்­தரப்பும், சிங்­களத் த­ரப்பும் மேலாண்­மை­யு­டைய தனித்­து­வ­மான இன அடை­யாளம் அல்­லது தனித்­து­வ­மான அர­சியல் அடை­யா­ளத்தைத் தீவி­ர­மாக முதன்­மைப்­ப­டுத்திச் செயற்­ப­டு­கின்ற போக்கே அர­சியல் தீர்­வுக்­கான பெரும் முட்­டுக்­கட்­டை­. 
இன அடை­யா­ளமும், அர­சியல் அடை­யா­ளமும் அர­சியல் தீர்வில் தற்­போது வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்ற ஐக்­கிய இலங்கை என்ற பரந்­து­பட்ட கொள்­கையில் ஆதிக்கம் செலுத்தும் வரையில் அர­சியல் தீர்வு சாத்­தி­ய­மா­காது என்­பதை ஆழ­மாக மனதில்; கொள்ள வேண்­டி­யது அவ­சியம். 
தனித்­துவம் என்­பது நல்­லி­ணக்கம், விட்டுக் கொடுப்பு, இணக்­கப்­பாடு, அர­சியல் ரீதி­யான சகிப்புத் தன்மை என்­ப­வற் றின் அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்த தேசிய நலன்­களைக் கவ­னத்திற் கொண்­ட­தா­கவும், அந்த நலன்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் அமைய வேண்­டி­யதும் அவ­சியம். 
தேசியம் என்­பதும் இந்த நாட்டில் வாழ்­கின்ற அனை­வ­ரு­டைய அர்ப்­ப­ணிப்­புடன் கூடிய பங்­கேற்றல், பங்­க­ளிப்பு என்­ப­வற்றால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். நாடு சிறி­யதோ பெரி­யதோ அது முக்­கி­ய­மல்ல. நாட்டில் வசிக்­கின்ற குடி­மக்கள் அனை­வ­ருக்கும் அது உரித்­து­டை­யது என்ற பரந்த சிந்­த­னையே முக்­கியம்.

மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு


தமிழ் மக்கள் மீண்­டு­மொ­ரு­முறை தென்­னி­லங்கை அதி­கா­ரத்த­ரப்­பி­னரால் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர். வர­லாறு முழு­வதும் தமிழ் பேசும் மக்கள் தமக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள்,  தீர்­வுத்­திட்­டங்கள் தொடர்பில் எவ்­வாறு தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­னரோ அதே­போன்று மீண்டும் ஒரு­முறை ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்­பி­லி­ருந்த தமிழ் மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்­த­வர்­க­ளா­கவும் எதிர்­பார்ப்பு அற்­ற­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருக்­கின்­றனர். 
2015ஆம் ஆண்டு உரு­வா­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் முடி­வ­டை­யப் ­போ­கின்­றது. இன்னும் சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றப் ­போ­கி­றது. ஆனால் அதே­போன்று தமிழ் மக்கள் தீர்­வுத்­ திட்டம் தொடர்பில் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையும் சித­றி­போகும் தறு­வா­யி­லே காணப்­ப­டு­கின்­றது. எதிர்­பார்ப்­புகள், நம்­பிக்கை, என்­பன வீழ்ச்­சிப்­பா­தையை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. தீர்­வுத்­ திட்டம் கிடைக்கும் என்று எந்­த­ள­வு ­தூரம் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் நம்­பிக்கை வைத்­த­னரோ, அதே அளவு தற்­போது நம்­பிக்­கை­யின்மை ஏற்­பட்­டு­ விட்­டது. 
கடந்த 2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­ய­போது தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் பாரிய எதிர்­பார்ப்­புகள் காணப்­பட்­டன. தமது நீண்­ட ­கால கோரிக்­கை­யான அர­சி­யல் ­தீர்வுத் திட்டம் நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்­க­ வேண்­டிய வகையில் முன்­வைக்­கப்­படும் என தமிழ் பேசும் மக்கள் கடந்த 2015ஆம் ஆண்டு வெகு­வாக எதிர்­பார்த்­தனர். அதற்­கான சூழலும் அப்­போது உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­படும் என்ற நம்­பிக்கை அனைத்து தரப்­பி­ன­ருக்கும் காணப்­பட்­டது. அதற்­கான சாத்­தி­ய மும் அப்­போது மிக அதி­க­மாக காணப்­பட்­டது. இதற்கு பல கார­ணங்­களும் இருந்­தன. தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு திட்­ட­மொன்றை வழங்­க ­வேண்டும் என்ற தேவையை அப்­போது ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் உணர்ந்­தி­ருந்­தன. 

பயணியின் பார்வையில் - அங்கம் 13 இலங்கை வடபுலத்தில் சந்தித்த எழுத்தாளுமைகள் மணிவிழா நாயகன் வித்தியாதரனுக்கு வாழ்த்துக்கூறும் பதிவு - முருகபூபதி



சில வருடங்களுக்கு முன்னர் ( 2016 ஒக்டோபர் மாதம் ) மெல்பனில் வதியும் எழுத்தாளர் தெய்வீகன், என்னிடம்                         யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புதிய தமிழ்ப்பத்திரிகை காலைக்கதிர்  வரவிருக்கிறது. அதன் முன்னோட்டமாக விடியல்  வீச்சு என்ற சிறப்புமலரை  வெளியிடவிருக்கிறார்கள். அதற்கு ஒரு கட்டுரை தரமுடியுமா ?  “ எனக்கேட்டார்.

உதயதாரகையிலிருந்து காலைக்கதிர் வரையில் என்ற தலைப்பில்  ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன்.
எனினும் மனதில் தயக்கங்கள் இருந்தன.

இலங்கை வடபுலத்திலிருந்து  முன்னர் சில பத்திரிகைகள், இதழ்கள் வெளிவந்தவண்ணமிருந்தன.  கால வெள்ளத்தாலும்  காவல் காக்க வந்தவர்களினாலும் சில பத்திரிகைகள் மறைந்தன.  சில  ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். தடுத்துவைக்கப்பட்டனர்.

வடபுலத்திலிருந்து முதலில் வெளிவந்த உதய தாரகையிலிருந்து புதிதாக வெளிவரவிருக்கும் காலைக்கதிர் வரையில் நேர்ந்த மாற்றங்கள் குறித்து அக்கட்டுரையில் அலசியிருந்தேன்.

அக்கட்டுரை கிடைத்ததும் தனக்கு வந்த மின்னஞ்சல் பதிலை தெய்வீகன் எனக்கு அனுப்பியிருந்தார். அக்கடிதம்:

நூல் அறிமுகம்: முருகபூபதியின் "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள் -- கான்பரா யோகன் -



நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ  முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து  இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே  அறிந்தவன் நான்.  தொடர்ந்து  அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின்  பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும்  இதழ்களிலும்  நான் வாசித்திருக்கிறேன். 
பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட  அவரது  எழுத்துலக அனுபவங்கள்,   அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச்  சொல்லத் தவறிய கதைகள்  என்ற புனைவு சாரா இலக்கியத்திலும்  இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.     
20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல்  நினைவுகளின் தொகுப்பாக   அல்லது  நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின்  தொகுப்பாக பார்க்கலாம். இதனைப்  பிரசுரித்ததன் மூலம் அவர் தன்  நினைவுச்  சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா? அல்லது,  உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா? அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும்  படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா? இம்மூன்று சந்தேகங்களும் நியாயமானவைதான்.
இனி இந்நூலில் உள்ள  சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில்  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
முதலாம் அத்தியாயத்தில்  புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய  குறிப்புகளை தந்திருக்கிறார்.  லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட,  அது ஏற்படுத்திய விபரீதங்கள்  அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் சத்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து  வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.
 “ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம்   என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார்.
ஈழத்து முன்னணிக்  கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட,  ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது.
கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.

தமிழ் விழா - கருத்தரங்கம் 13/07/2019








ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


அவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவித்த இலங்கை!

ஒரே சதத்தால் விராட்டை பின்னுக்குத் தள்ளிய அவிஷ்க!

மெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது!

பதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா பங்களாதேஷ்!

இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே !

300 ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து!

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து!

வெற்றிபெற்றாலும் சாத்தியமற்றுப் போயுள்ள பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு!

312 ஓட்டத்தை இலக்காக நிர்ணயித்த மே.இ.தீவுகள்

வெற்றியுடன் விடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்!

315 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான்

உலகக் கிண்ண வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த அப்ரிடி

கைகொடுத்த மெத்தியூஸ் - திரிமான்ன இணைப்பாட்டம்!

இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க

7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா


அவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவித்த இலங்கை!

01/07/2019 அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதத்துடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 338 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைச் செய்திகள்


கடமைகளை பொருப்பேற்றார் வட மாகாண ஆளுநரின் செயலளார் 

வட - கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆரப்பாட்டம்

"அஸ்கிரியபீட மாநாயக தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்"

 சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும் ; ஜனாதிபதி

இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை - அமெரிக்கா

பூஜித்த, ஹேமசிறியை நீதிமன்றில் ஆஜர்செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை! 

ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

ஹேமசிறி பெர்னாண்டோவை தொடர்ந்து பூஜிதவும் வைத்தியசாலையில் அனுமதி

ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!

திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை

பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை  - அர்ஜூன ரணதுங்க 

இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா? 

நீராவியடியில் பொங்கலுக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸார்



உலகச் செய்திகள்


ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : ட்ரம்ப் 

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அரை  மணி நேரத்தில் இஸ்ரேல் அழிக்கப்படும்

 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில்

ஆயுதக் களைவு குறித்து அமெ­ரிக்­கா­வுடன்  பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ளது

ஈரானால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அந்நாட்டை நோக்கியே திரும்பும்

இலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்

சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி




ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : ட்ரம்ப் 

02/07/2019 ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

INTERNATIONAL CONFERENCE ON PEACE AND HARMONY THROUGH LITERATURE - 31/07/2019




பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் 1969 - 2019 பகுதி 2 - ச. சுந்தரதாஸ்

அன்பளிப்பு

கிராமங்களில் இருக்கும் விசசாய நிலங்கள் எல்லாம் மெல்ல மெல்ல தொழிற்சாலைகளாகவும் குடியிருப்புகளாகவும் மாறி வருவதை பார்த்து வருகிறோம். இந்தப் பிரச்சனையை அடிப்படையாக வைத்து 69ல் உருவான படம் தான் அன்பளிப்பு.
இதில் சிவாஜியுடன் ஜெய்சங்கரும் இணைந்து நடித்திருந்தது ஒரு சிறப்பாகும். சிவாஜியின் ஜோடியாக சரோஜாதேவி நடித்தார். ஜெய்சங்கருக்கு ஜோடியாக அண்மையில் மறைந்த விஜயநிர்மலா நடித்திருந்தார். குழந்தை நடிகையாக அறிமுகமான விஜயநிர்மலா கதாநாயகியாக நடித்த முதற்படம் எங்க வீட்டுப் பெண். இதில் அவர் நடித்த முதற்படப்பிடிப்பு நடந்த போது அவருடன் நடித்த எஸ். வி. ரங்கராவ், விஜயநிர்மலாவின் நடிப்பு சரியில்லை என கூறி சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். தயாரிப்பாளர் நாகிரெட்டி அசரவில்லை. ரங்கராவை படத்திலிருந்து நீக்கி விட்டு எம்.ஆர்.ராதாவை அந்த வேடத்திற்கு ஒப்பந்தம்  செய்து விஜயநிர்மலா நடிப்பால் படத்தை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்த விஜயநிர்மலா 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி கின்னஸ் சாதனையாளரானார்!

அன்பளிப்பு படத்தில் சிவாஜியின் தங்கையாக விஜயநிர்மலா தோன்றினார். விவசாய நிலங்கள் சுரண்டப்படக் கூடாது என்பதை உணர்த்தும் இப்படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். வள்ளி மலைமான்குட்டி. எங்கே போறே தேரு வந்தது போலிருந்து நீ வந்தபோது போன்ற பாடல்களை கொண்ட இந்தப்படம் சுமாராகவே போனது.

தமிழ் சினிமா - ராட்சசி திரை விமர்சனம்


ஜோதிகா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் வெறும் பெண்கள் என்றும் மட்டுமில்லாமல் இந்த முறை வளரும் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு பள்ளி குழந்தைகளுக்காக குறிப்பாக அவர்களின் பெற்றோர்களுக்கான ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார், இதில் ஜோதிகாவின் மாணவர்கள் மட்டுமின்றி அவரும் பாஸ் செய்தார்களா? பார்ப்போம்.

கதைக்களம்

ஜோதிகா பெரும் பதவியில் இருந்து எத்தனையோ நிறைய சம்பளம் கிடைக்கும் வேலைகள் இருந்தும், இந்த வேலை தான் வேண்டும் என்று வாங்கி வருகின்றார், ஒரு அரசு பள்ளி டீச்சராக.
ஆனால், அந்த பள்ளிக்கூடத்தில் எதுவுமே சரியில்லை, இருக்கின்ற விதிமுறைகளை கூட யாரும் ஒழுங்காக கடைப்பிடிப்பது இல்லை, இதற்கெல்லாம் முக்கிய காரணம் சாட்டை படத்தில் வரும் தம்பி ராமையா போல் ஒரு கதாபாத்திரம் இந்த படத்திலும் வருகின்றது.
இதற்கிடையில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் வேற, இவை அனைத்தையும் முறியடித்து அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை எப்படி சீர்த்திருத்தி, அவர்களின் தரத்தை உயர்த்தி நல்வழிக்கு கொண்டு வருகின்றார் ஜோதிகா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜோதிகாவின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட் இந்த கதாபாத்திரம் என்று சொல்லி விடலாம், அதை விட அவர் சமீபத்தில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்ததில் இது தான் நம்பர் 1, பெர்ப்பாமன்ஸாகவே கலக்கியுள்ளார். படத்தில் எந்த ஒரு இடத்திலும் இவர் முகத்தில் ஒரு பெரிய சிரிப்பை பார்த்துவிட முடியாது.
படம் முழுவதும் அட்வைஸ், நீண்ட வசனங்கள் இருந்தாலும் எங்குமே அலுப்புத்தட்டவில்லை, இதில் குறிப்பாக ‘கணக்கு பாடத்தில் ஒரு பையன் 100 மார்க் எடுத்து, சயின்ஸில் தோல்வி பெற்றால், அவன் மக்கு பையனா, கல்வி சிஸ்டம் சரியில்லை’ என யோசிக்க வைக்கும் பல வசனங்கள் கவர்கின்றது.
ஒரு பையன் என்னை பாக்கின்றேன் மிஸ், என கூறும் பெண்ணிடம் ஜோதிகா சொல்லும் கதை, அரசாங்க பள்ளியில் இருக்கிற ரூல்ஸை ஒழுங்காக கடைப்பிடித்தாலே நன்றாக இருக்கும் என்று காட்டிய விதம் என காட்சிக்கு காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.
அதிலும் ஜோதிகா தன் தந்தை இழப்பில் கூட அழாமல், பள்ளிக்கு சென்று உருகும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைக்கின்றது, சூப்பர் ஜோதிகா. ஜோதிகாவிடம் காதலை சொல்லும் குட்டிப்பையன் கூட, ஓவர் ஆக்டிங் இல்லாமல் யதார்த்தமாக கியூட்டாக கடந்து செல்கின்றார்.
இப்படி பல அழகிய காட்சிகள் படம் முழுவதும் வருகின்றது, இப்படம் வெறும் மாணவர்களுக்காக படம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு பெற்றோர்களுக்கான படமாகவும் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு அப்படியே அரசாங்க பள்ளியை பார்த்த அனுபவம், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

க்ளாப்ஸ்

ஜோதிகா மற்றும் நடிகர், நடிகைகள் அனைவரின் நடிப்பு.
எடுத்துக்கொண்ட களம், பெற்றோர்கள் எல்லாம் தனியார் பள்ளியை நோக்கி ஓடும் நேரத்தில், அரசாங்க பள்ளியை பற்றி பேசிய விதம்.
இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
ஜோதிகா ஒரு காட்சியில் சண்டை எல்லாம் போடுகின்றார், அட என்னடா இது என்று நினைக்க, அதற்கு ஒரு பின்கதை வைத்தது செம்ம.

பல்ப்ஸ்

கண்டிப்பாக சாட்டை படத்தை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் இந்த ராட்சசி கீதா ராணி மேடத்தை.   நன்றி CineUlagam