கண்ணதாசன் அலை - ருத்ரா இ.பரமசிவன்

.


கோப்பைக்கவிஞனென
கொச்சைப்படுத்துவார்
கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும்.
இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு.
எழுத்துக்கள் எழுந்துவந்தால்
அத்தனையும் சுநாமிகளே

அதர்மக் கரையுடைக்கும்
ஆவேச அலைகள் தான்.
துலாபாரத்தின்
"துடிக்கும் ரத்தம் பேசட்டும்"
இன்னும் இந்த தேசத்தின்
செங்கொடிகளில்
நரம்போட்டங்களை காட்டுகின்றன.

தத்துவம் என்பது தனியாக இல்லை.
வீடு வரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இந்த இரண்டு வரிகளில்
மனிதனின் தேடல் பற்றிய‌
கேள்வியின் கூர்மை நங்கூரம்
பாய்ச்சி நிற்கிறது.



அவுஸ்ரேலிய கம்பன் விழாவில் முதல் நாள் நிகழ்வில் 21 10 2016 கவியரங்கு


இவ்வாண்டுக்கான தீபாவளி 29.10.2016 சனி அமைகிறது

.


இவ்வாண்டுக்கான தீபாவளி 29.10.2016 சனி அமைகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம்,பொறாமை தலைக்கனம்  போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்

அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2016 - 24 - 26/ 10/ 2016.

.

பேரன்புடையவர்களுக்கு வணக்கம்,
இறையருளாலும் உங்கள் ஆதரவாலும் 
பத்தாவது அகவை நிறைவில் அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்.
உளம் மகிழ்கின்றோம்.
உவகையுடன் மீண்டும் ஒரு கம்பன் விழா கைகூடுகின்றது.
கரிய செம்மலை மண்தொடவைத்து,
தமிழை விண்தொடவைத்த
கம்பநாடனின் கம்பரசத்தை,
சிங்கார சிட்னியில் பருக வருக! என 
அனைவரையும் பணிவன்போடு அழைக்கின்றோம்

http://online.pubhtml5.com/kryv/kbrz/#p=1


பார்த்தோம் சொல்கின்றோம் புங்குடுதீவு - சிதைவுறும் நிலம் முருகபூபதி

.
 தங்கேஸ் பரம்சோதியின்   அரிய ஆவண முயற்சி:
புங்குடுதீவு - சிதைவுறும் நிலம்
புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடம் புலம்பெயரா மக்கள் பேசும் ஆவணப்படம்

                                                                  தெய்வங்கள்  தூணிலுமிருக்கும்  துரும்பிலும்  இருக்கும்  என்றுதான் எமது  முன்னோர்கள்  எமது  பால்யகாலத்தில்  சொல்லிவைத்தார்கள்.
  அந்தத்தெய்வங்கள்  கனவில்  வந்தால்  நாம்தான் வரம்கேட்போம்  என நம்பியிருந்தேன்.  ஆனால்,  தெய்வங்கள்  தங்களுக்கு  வரம்  கேட்குமா ....? நாம் தூணிலும் துரும்பிலும் மாத்திரம் .இருந்தால் போதாது  எங்களுக்கென்று  கோயில்கள்  கட்டு  எனச்சொல்லும் தெய்வங்களும் - எனக்காக  பத்து  முட்டை  அடித்து  என்பசி  போக்கு என்று  அம்மன்களும்  கனவில்  வந்து   சொல்லும்  கதைகளை கேட்கத் தொடங்கியிருக்கின்றோம்.


இலங்கைச் செய்திகள் )


இலங்கைக்குத் தேவையான எந்த உதவியையும் செய்யத் தயார் : ரஷ்யா

இலங்கையின் மாற்றங்களுக்கு ஆன் சாங் சூகி ஜனாதிபதிக்கு பாராட்டு

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு 120 மில்லியன் இராணுவ உதவி : சீனா

கிளிநொச்சியில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம்

இராணுவ புலனாய்வாளர் தற்கொலை : தொலைபேசி மூலம் முக்கிய தகவல்கள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.!

யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை

யாழ். தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு

இலங்கைக்கு 34 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க  ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை

சிறுபான்மை சமூகங்களுக்கு  சரியான இடம்கொடுக்கப்படவில்லை 

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும்  முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது :   ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

மலையக மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் : ரீட்டாவிடம் த.மு.கூ. வலியுறுத்தல்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஆரம்பம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கொலை : தம்பி தொடர்பில் அக்கா கூறும் பரிதாப உண்மைகள் : கண்கலங்க வைக்கும் காணொளி

கிளிநொச்சியில் பெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.! (படங்கள் இணைப்பு


திருமதி உஷா ஜவாகர் அவர்களின் நூல் வெளியீடு 29.10. 2016

.

திருமதி உஷா ஜவாகர் அவர்களின் நூல் வெளியீடு  29 10 2016 சனிக்கிழமை  மாலை 5 மணிக்கு திரு திருநந்தகுமார் அவர்களின் தலைமையில்  Homebush Public School  ( Corner of Rochester st and Burlington Rd ) மண்டபத்தில் இடம் பெறுகின்றது .
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ( சிறுகதைகள் )
ஒரு கடல் கன்னியின் சாகசக் கதை
அதிசய உயிரினங்கள் பற்றிய செய்திகளும் கதைகளும்



கம்பன் கழகத்தின் 3ம் நாள் கம்பன் விழாவில் ஒருசில காட்சிகள்

.
சீதையை  குற்றக் கூண்டில் வைத்து வழக்காடு மன்றம்



JCC Old Boys Association Dinner Dance 29 .10. 2016




சிட்னி முருகன் ஆலயத்தில்

.


உலகச் செய்திகள்


தமிழக ஆட்சி கலைக்கப்படும் : நீதிபதி

அதிபர் தேர்தலால் அமெரிக்கர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பு

காத­ல­ருடன் நெருக்­க­மாக நின்­ற­மைக்கு பெண்­ணுக்கு கசை­ய­டித்­தண்­டனை

குருதிப்பணம் ஏற்க மறுப்பு : சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்

கெமரூனில் ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு


தமிழக ஆட்சி கலைக்கப்படும் : நீதிபதி


முருகன் ஆலயத்தில் தீபாவளி 29 10 2016

.

முற்றுப்புள்ளி ! எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.


   மதச்சண்டை மறைவதற்கு
   வைக்கவேணும் முற்றுப்புள்ளி
   இனச்சண்டை ஒழிந்தழிய
   இடவேணும் முற்றுப்புள்ளி
   துரைத்தனத்தால் மனமொடியச்
   செய்துநிற்கும் நிலையகல
   துணிவுடனே முற்றுப்புள்ளி
   வைத்திடுவோம் வாருங்கள் !

   மதுவரக்கன் ஒழிவதற்கும்
   விபசாரம் மடிவதற்கும்
   தெருச்சண்டை தீர்வதற்கும்
   வைத்திடுவோம் முற்றுப்புள்ளி
    நிதிநீதி தனிலெங்கும்
    நீண்டுவரும் ஊழலுக்கும்
    நிச்சயமாய் முற்றுப்புள்ளி
    வைத்திடுவோம் வாருங்கள் !

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2016. 30 10 2016

.

யாழ் இந்து மகளிர் கல்லூரி சிட்னி பழைய மாணவிகள் பெருமையுடன் வழங்கும் ஏழாவது மலரும் மாலை 2016.
இந்நிகழ்வு யாழ் இந்து மகளிர் கல்லூரியின் மூன்று மாடிக் கட்டிடம் கட்டுவதற்காக நிதி சேகரிக்கும் நோக்கத்துடன் நடாத்தப்படுகின்றது. அது மட்டுமின்றி இந்த நிதியின் ஒரு பகுதி வன்னி நிலத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
சுப்பர் சிங்கர் புகழ் சோனியா, சத்தியப்பிரகாஷ் மற்றும் உள்ளுர் இசைக் கலைஞர்களடங்கிய சக்தி இசைக் குழுவினர் கலந்து கொள்ளும் மாபெரும் இசை நிகழ்வு.
இந்நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை 30ம் திகதி ஒக்டோபர் மாதம் 2016 மாலை 5:30 மணிக்கு, 21-23, Rose Crescent, Regents Park, NSW 2143 இல் அமைந்துள்ள ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.
நன்றியுடன் தங்கள் அனைவரின் வரவையும் எதிர்பார்க்கும்,
யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் - சிட்னி

தொடர்புகளுக்கு:- 0403 003 191

28 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்

.
அவுஸ்திரேலியாவில்  -  28 ஆண்டுகளை  பூர்த்திசெய்யும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின்  அவசியத்தை  வலியுறுத்திய  வருடாந்த   ஒன்றுகூடல்

" அவுஸ்திரேலியா  மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது.
இதுவரை காலத்தில் இலங்கையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய  இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால்  அனுப்பி  பட்டதாரிகளாக்கியுள்ளது.  எனினும் இலங்கையில்   நீடித்த   போரினால்  பாதிப்புற்ற  தமிழ் மாணவர்களின்  தேவைகள்  நீடித்துக்கொண்டே  இருக்கின்றன."


நடைமுறைக்கு பொருத்தமான இலங்கையின் அரசியல் தீா்வை நோக்கி

.
      அவுஸ்த்திரேலியாவிலிருந்து,     எஸ்.பி.வசந்தராஜா   M.Sc, M.Ed                (முன்னாள் UNESCO ஊழியர், முன்னாள் விரிவுரையாளர், அன்னை திரேசாவுடன் சேவை செய்தவர்,சிட்னியில் சமூகசேவைவிருதுபெற்ற தற்போதய முனைவர்பட்டதாரிமாணவன்)

நாம் அனைவரும் சமாதானப்பிரியர் என்ற உணர்விலும், இலங்கை ஆசியாவின் ஓரு முத்து என்ற ரீதியிலும், எமக்கு ஒவ்வொருவரும் அருள்ளப்பட்ட இந்த சொர்க்க நாட்டை, எமது காலத்தில் ஒரு சுபீட்சமுள்ள தன்னியக்கமும், தன்னாதிக்கமும், பொருளாதார வளர்ச்சியுடைய ஒரு புதிய சிங்கப்பூராக உருவாக்க முடியும். இனங்களிடையே எவ்வித சந்தேகமும், பயமும், பொறாமையும் அற்ற ஒரு சூழ்நிலையை அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும், பல்லின மக்கள் தங்கள் திறன்க ளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, வாழக்கூடிய ஒரு பக்குவமான நல்ல போட்டியில் ஓடக்கூடியதான ஒரு காலத்தை வருகின்ற அரசியல் அமைப்பு மாற்றத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும் இதனை வரைகின்றேன். தற்போதய சூழ்நிலையில்அதன் பிரதான மூன்று  அடிப்படை தேவைகளை உங்கள் அனைவரினது கவனத்திற்கு அன்புடன் கொண்டு வர விரும்புகிறேன்.
1. எதிர்கால சுபீட்சமுள்ள இலங்கையின் அநாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில் சிறிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்  ஒன்பது மாகாணங்களை, இணைப்பின் மூலமாக நான்கு மாகாணங்களை கொண்ட ஒரு கட்டமைப்பாக மாற்றுதல். அதாவது தெற்கு மாகாணம் (South), மத்திய மாகாணம் (Central), வட மத்திய மாகாணம்(North Central), வட கிழக்கு மாகாணம்(North East) என்ற நான்கு மாகாண சபைகள், அங்கு மேல்  மாகாணம் (Western Province) மத்திய அரசாங்கத்துடன் (இந்தியாவில் உள்ள டெல்கியை போல,  அவுஸ்திரேலியாவிலுள்ள கான்பேரானவப் போன்றதாக) இருக்கின்ற ஒரு ஆரம்ப அமைப்பாக இருத்தல்.

குழந்தைக்காக ஒரு நிமிடம்!----மணிமுத்து

.

எழுத தெரியாத
ஏதோ ஒரு குழந்தை வரைந்த மிச்சம் தான்
இந்த மேகங்களா!

எவ்வளவு
கடினமான கேள்விகளுக்கும்
மிக எளிதான
பதில் கிடைத்துவிடுகிறது
குழந்தைகளிடம் மட்டும்!

காரணமில்லாமல் சிரிக்க
மட்டுமல்ல,
விசாரிக்காமல் விட்டுக் கொடுக்கவும்
சொல்லிக் கொடுத்த ஒரே ஆசான் குழந்தை தான்!

குழந்தையின்
கள்ளமற்ற சிரிப்பை பார்க்கும் போது
என்னுள்
என்னையுமீறி
தோன்றும் பொறாமை
நான் வளர்ந்துவிட்டேனே என்று!

தமிழ் சினிமா

ரெமோ

ரெமோ பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டிய படம். சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். போஸ்டர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடிக்க, இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது இந்த ரெமோ.
அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என நட்சத்திரக் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த ரெமோ சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

தமிழ் சினிமாவின் தொன்று தொட்டு வரும் கதைக்களம் தான், ஹீரோயினை ஹீரோ எப்படி காதலிக்க வைக்கின்றார் என்பதே ஒன் லைன். இதில் கொஞ்சம் அவ்வை சண்முகியை அடித்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
சிவகார்த்திகேயன் ரஜினி போல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்ய, அந்த தருணத்தில் கீர்த்தி சுரேஷை பார்க்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு டாக்டர், ஒரு ஆடிஷன் முடிந்து சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வரும் போது இவரை உண்மையாகவே கீர்த்தி நர்ஸ் என்று நம்புகிறார்.
அதே நேரம் கீர்த்திக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் எப்படி கீர்த்தி மனதில் சிவகார்த்திகேயன் இடம்பிடிக்கின்றார் என்பதை செம்ம கலகலப்பாக கூறியுள்ள படம் தான் இந்த ரெமோ.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன் ஒன் மேன் ஷோ என்றே கூறிவிடலாம். அதிலும் நர்ஸ் கெட்டப்பில் ஆண்களே ஜொல்லு விட்டாலும் ஆச்சரியம் இல்லை, குரல் கூட மாற்றி பேசியிருக்கிறார், ரசூல் பூக்குட்டிக்கு தான் இந்த பாராட்டு.
கீர்த்தியை காதலிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் செம்ம கலாட்டா. சிவகார்த்திகேயன் தனக்கு எது வரும் என்பதை மிகவும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். எத்தனை சீரியஸாக சென்றாலும் தன் ஒன் லைன் காமெடி மூலம் அதை ஈடுக்கட்டி சிரிக்க வைத்துள்ளார். ஆடல், பாடல், ஆக்‌ஷன் என அனைத்து ஏரியாவிலும் கலக்கிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் இதுவரை வந்த படங்களிலேயே மிக அழகாக இருக்கின்றார். என்ன தமிழ் சினிமாவின் பாரம்பரிய ஹீரோ எது சொன்னாலும் நம்பி ஏமாறும் ஒரு கதாபாத்திரம் தான்.
யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் காமெடியில் கலக்கியுள்ளனர். அதிலும் யோகிபாபு நர்ஸ் சிவகார்த்திகேயனை துரத்தி துரத்தி காதலிக்கும் இடம் மற்றும் கிளைமேக்ஸில் நர்ஸை காணவில்லை என்று PK ஸ்டைலில் அலையும் இடமெல்லாம் செம்ம ரெஸ்பான்ஸ்.
அனிருத் பாடல்களை விட பின்னணி இசையில் மயக்குகிறார். PC ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு ஏதோ பாலிவுட் படங்கள் பார்த்தது போல் உள்ளது. ஆனால், கொஞ்சமாவது லாஜிக் என்பதை பார்த்திருக்கலாம். இரவு 12 மணிக்கு வந்தால் கூட சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வருவதெல்லாம் ஓவர் சார். மேலும், இன்னும் ஆண்கள் நாங்க இப்படி, அப்படி என தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் வசனங்கள் வருவதை கொஞ்சம் மாற்றலாம்.

க்ளாப்ஸ்

சிவகார்த்திகேயன் முன்பே சொன்னது போல் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கிறார்.
யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் காமெடி கலாட்டா.
அனிருத்தின் இசை, மற்றும் PC ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு.

பல்ப்ஸ்

லாஜிக் அத்துமீறல், ஒரு மிடில்கிளாஸ் பையன் காதலுக்காக எப்படி இத்தனை செலவு செய்வான் என்று தெரியவில்லை. கதையில் முக்கியத்துவம் இல்லை, பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில் இந்த ரெமோ விட்ட அம்பு சரியாக பாக்ஸ் ஆபிஸ் மீது பாய்ந்துள்ளது.

நன்றி   cineulagam