பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை






பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

சிட்னியில் சித்திரைத் திருவிழா






மெல்பேர்ன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் கோவிலில் மகோற்சவத் திருவிழா - 2013.




மெல்பேர்ன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் கோவிலில் சிறப்புடன் நடந்து நிறைவு பெற்ற மகோற்சவத் திருவிழா - 2013.
மெல்பேர்னில் மலையும,; மலை சார்ந்த பிரதேசமாக இருக்கும் அழகிய கிராமம் தான் பேசின் என்ற கிராமம். அந்த அழகிய கிராமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர். பேசின் ஸ்ரீவக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் மகோற்சவத் திருவிழா நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

சைவசமய அறிவுத் திறன் தேர்வு - 2013




இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு




02/05/2013 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளார். 


கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றிய சரியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.நன்றி வீரகேசரி 

தமிழ் அரங்கு வெளியிடும் உடல் - ஓர் அறிமுகம் முருகபூபதி






சிட்னியில் கடந்த மாதம் நடந்த  13 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்குசென்றிருந்தவேளையில் நண்பர் கருணாகரன் எனக்குத்தந்த உடல் என்னும் காலாண்டிதழ் கனதியான உள்ளடக்கத்துடன் அமைந்திருந்ததை கண்ணுற்றேன். இந்த இதழையும் விழாவில் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது.
அவுஸ்திரேலியாவில் பல கலைஞர்கள் கூத்து, இசைநாடகம், நாடகம் என்பனவற்றுடன் ஈடுபாடுள்ளவர்கள். இனிவரும் விழாக்களில் குறிப்பிட்ட துறைசார்ந்தும் இதழ்களை நூல்களை வெளியிட்டு இந்தக்கலைத்துறைகள் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தலாம் என்று பரிந்துரைக்கவிரும்புகின்றேன்.
‘கூத்து பாரம்பரியமிக்க எமது கலை, அதைப்பேணிக்காப்பது மிக அவசியம். தமிழில் புதிய கலைவடிவங்களைத் தோற்றுவிப்பதற்கான ஒரு முன்னெடுப்பு. கலைகளினூடாக தமிழ்த்தேசியத்தை வளர்க்கவும் எமது உரிமைகளை மீட்டெடுக்கவும் முடியும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் காலாண்டுக்கு ஒரு முறை வெளியாகிறது உடல் இதழ்.
பிரான்ஸில் வதியும் கலைஞர் எம். அரியநாயகம் இந்த இதழின் ஆசிரியர். பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, அவுஸ்திரேலியா முதலான நாடுகளில் உடல் இதழுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
2013 தை-மாசி-பங்குனி இதழ் ஈழத்து கூத்துக்கலைஞர் மறைந்த வி.வி.வைரமுத்து அவர்களுக்கான சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது.
வைரமுத்து அவர்களைப்பற்றி இதழ் ஆசிரியர் தமது ஆசிரியதலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-
‘வீறு , கனிவு, கவர்;ச்சி மூன்றும் ஒருங்கிணைந்து மலரும் ஒரு கலைமுகம். ஆயிரம் ஆயிரமாய் மக்களுள் ஒருவனாக அவரது இசையோடு இணைந்த நடிப்பைக்கண்டு, கேட்டு கண்கள் பனிக்க சுவைத்த எனக்கு அவரைப்பக்கமாய் நின்று பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட அந்த இனிய உணர்வை வெளிப்படுத்துவதற்கு அப்போது மட்டுமல்ல, எப்போதும் என்னிடம் சொற்கள் இல்லை.’

மெல்பனில் தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை நிகழ்வு எஸ்.கிருஷ்ணமூர்த்தி






அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும்   இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன.
இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை.

இலங்கைச் செய்திகள்


வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரர் பலி

மாணவர்கள் வேடிக்கை பார்க்க அதிபரும் ஆசிரியரும் மோதல் : சங்கானையில் சம்பவம்

அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பல் கைது

‘உதயன்’ பத்திரிகையின் பிந்தியதொரு விசமத்தனம்!

அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை

அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

''முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்'': அக்குறணையில் ஆர்ப்பாட்டம்

 அசாத் சாலியை பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

=====================================================================
வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை


 30/04/2013 வவுனியா நகர சபையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில தீயில் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தகமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த நிலையில் பதிவேட்டுப் புத்தகத்தின் சில பகுதிகள் மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் ஓசையின் சங்கதமிழ் விழா 12 .05 .2013

.


உலகச் செய்திகள்

இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் பலி

மத்திய பிரதேசத்தில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 5 வயது சிறுமி மரணம்

நெதர்லாந்தில் புதிய மன்னராக வில்லெம்-அலெக்ஸாந்தர் பதவியேற்பு

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: வழக்கறிஞர் சவுத்ரி சுல்பிகார் அலி சுட்டுக் கொலை



========================================================================

இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் பலி

29/04/2013 இத்தாலிய பிரதமர் அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இத்தாலியில் நீண்ட நாள் அரசியல் குழப்பத்துக்கு பின், பிரதமராக என்ரிகோ லெட்டா தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று இவரது அவரது தலைமையிலான அமைச்சரவை ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்றது. அந்த நேரத்தில் ரோம் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் மீது  ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார்.
http://www.virakesari.lk/image_article/Suspected-gunman-held-dow-016.jpg

தமிழ் சினிமா



உதயம் NH4 

"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குனர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பிலும், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் உதயம் NH4.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு படிக்கப் போகிறார் சித்தார்த். அதே கல்லூரியில் அஷ்ரிதா ஷெட்டியும் படிக்கிறார்.
ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் ஒரு கால கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இவர்கள் காதல் விடயம் அஷ்ரிதா ஷெட்டியின் அப்பாவான அவினாஷூக்கு தெரிந்துவிடுகின்றது. அவினாஷ் பெங்களூரில் மிகப்பெரிய அரசியல்வாதி. தனது மகளின் காதலை பிரிப்பதற்காக அஷ்ரிதாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்.
இந்த விவகாரம் காதல் ஜோடிகளுக்கு தெரியவர, இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அஷ்ரிதா ஷெட்டிக்கு 18 வயது பூர்த்தியடைய ஒருநாள் இருக்கும் பட்சத்தில் இருவரும் பெங்களூரை விட்டு சென்னைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
தனது பண பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து இருவரையும் பிடிக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பொலிஸ் அதிகாரியான கே.கே.மேனனை ரகசியமாக நியமிக்கிறார் அவினாஷ்.
சித்தார்த் - அஷ்ரிதா ஜோடி பெங்களூர்-சென்னை நேஷனல் ஹைவேயில் போய்க் கொண்டிருப்பதை மொபைல் சிக்னல் மூலமாக கண்டறியும் கே.கே.மேனன், அவர்களை பிடிக்க துப்பாக்கியும், கையுமாக பின் தொடர்கிறார்.
இறுதியில் சித்தார்த்-அஷ்ரிதா ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? அஷ்ரிதா 18 வயது பூர்த்தியடைவதற்குள் கே.கே.மேனன் பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தாரா? என்பதே மீதிக்கதை.
இதுவரை சாக்லேட் நாயகனாக ரசித்து வந்த சித்தார்த் இந்த படத்தின் மூலம் தனக்கு ஆக்ஷன் கதைக்களத்திலும் அதிரடி காட்டமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
புத்திசாலித்தனமாக இவர் செய்யும் ஒவ்வொரு நகர்வும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரொம்பவும் ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பாக நடித்துள்ளார். படத்தில் தமிழ் பேசும் ஒரே நபர் இவரே.
அஷ்ரிதா ஷெட்டி குடும்ப பாங்கான தோற்றத்தில் அழகாக இருப்பதோடு, நடித்திருக்கவும் செய்திருக்கிறார். இவர் காதல் செய்யும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சித்தார்த்தோடு இணைந்து ஓடுவதில் நன்கு தெரிவுப் பெற்றிருக்கிறார்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் கே.கே.மேனன் தமிழுக்கு புதுசு என்றாலும் படத்தில் ரசிக்கக்கூடிய கதாபாத்திரம் இவருடையதுதான். சில இடங்களில் பார்வையாலேயே மிரட்டுகிறார். மேலும் இவருடைய செய்கைகள் பல இடங்களில் கைதட்டல் பெறுகின்றன.
சித்தார்த்தின் நண்பர்களாக வருகின்ற அஜய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்கள் பணியை அழகாக செய்திருக்கின்றனர்.
சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொன்ன இயக்குனர் மணிமாறனை பாராட்டியே ஆகவேண்டும். இருப்பினும் இந்த படத்தில் இவருக்குன்னு தனி முத்திரை இல்லை. தனியாக படம் பண்ணும்போதுதான் இவருடைய முழு திறமையை கண்டறிய முடியும் என்பது நம் எண்ணம்.
படத்திற்கு மிக முக்கிய பலமே வெற்றிமாறனின் திரைக்கதையும் வசனம்தான். பெங்களூர்காரர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை ஆராய்ந்து அதை அப்படியே படத்தில் வசன மழையாக அள்ளி தெளித்திருக்கிறார் வெற்றிமாறன்.
படத்தில் அங்கங்கே சில சஸ்பென்ஸ் வைத்து படத்தை நகர்த்துவதால் படம் பார்க்கும்போது சளிப்பு ஏற்படவில்லை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாரோ இவன்’, ஓரக்கண்ணாலே’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் சித்தார்த் ரயிலில் தப்பிப் போகும் காட்சியும், கடைசிக் காட்சியும் பேசக்கூடியவை.
படத்தில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், இடையிடையே வரும் பாடல்கள், சகிக்க முடியாத காதல் காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடை போடுகின்றன.
மொத்தத்தில் ‘உதயம் என்.ஹெச் 4’ குடும்பத்தோடு பயணிக்கலாம். ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்".
நன்றி விடுப்பு