உ

   சிவமயம்

சிவத்திரு நாவலர் பெருமான் 'பிறந்திரலேல் சொல்லு தமிழெங்கே? சுருதி எங்கே? சிவாகமங்கள் எங்கே? ஏத்தும் புராணங்கள் எங்கே? பிரசங்கங்கள் எங்கே? ஆத்தனறிவு எங்கே?' என்று பாராட்டப் பெற்றதுடன் 'வைதாலும் வழுவின்றி வையாரே நாவலனார்' எனப் போற்றப்பெற்று வந்த சிவத்திரு ஆறுமுக நாவலனாரின் நினைவு நாளை(7 - 12 - 2020) ஒட்டியே இந்தக் கவிதை இடம் பெறுகிறது. ......


சிவப்பழமாய்ச் சிவனார் ஈய்ந்த செந்தண்மை அந்தணன் நாவலன் தாள் தொழுவாம்!.


      ............ பல்வைத்திய கலாநிதி  பாரதி இளமுருகனார்.


படையெடுத்து மதம்மாற்றிய 'பறங்கியர்' செயலும்

       பண்பற்ற ஆரியர்செய் வடமொழிக் கலப்பும்

இடையினிலே தாக்கியதால் நலிவுற்ற தமிழை

       எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தி னாலும்

நடைமாற்றிச் சீர்செய்து நறுந்தூய தமிழாய்

       நம்மவர்க்குப் புதுப்பித்து அளித்த செம்மல்!

கிடைத்ததோர் சிவப்பழமாய்ச் சிவனார் ஈய்ந்த

       செந்தண்மை அந்தணன் நாவலன் தாள் தொழுவாம்!.

படித்து சுவைத்த "கவிதையும் ரசனையும்" செ பாஸ்கரன்

ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர்.  ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும். 

          அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ழ என்ற சிற்றேட்டிலும், பின்னால் நவீன விருட்சம் இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.

          ‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது. 

          அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும்.  அடிப்படையில் வாழ்க்கையில் நிதர்சன உண்மையைக் கிண்டலாகப் பார்க்கும் தன்மை  இருக்கும்.

          மரணத்தைப் பற்றிய சிந்தனை ஆழமாக அவர் கவிதைகளில் ஓடிக்கொண்டிருக்கும்.  இப்போது அவர் கவிதை ஒன்றிரண்டு பார்க்கலாம்.

“பாடைக் காட்சி”

நான்கு பேர் சுமக்க 

கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது 

பேசியபடி நண்பர்கள் சிலர் 

பாடையை தொடர்ந்தார்கள் 

யாருடைய முகத்திலும் வருத்தமில்லை 

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள் 

பாடையைத் தூக்கிச் சென்றவர்கள் 

மிகவும் நிதானமாக நடந்தார்கள் 

பாடை குலுங்காமலும் 

அதிகம் அசையாமலும் 

கவனித்துக் கொண்டார்கள் 

நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள் 

சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் 

விவாதித்தார்கள். 

காலமும் கணங்களும் பேராசிரியர் கைலாசபதி - இன்று டிசம்பர் 06 நினைவு தினம் “ கைலாசபதியை மீள வாசிப்போம் “ இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் பன்னாட்டு கருத்தரங்கு முருகபூபதி


நம்மிடத்தில் நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு.

அவருக்கு    கடிதம்    எழுதினேன் -  பதிலே இல்லை.

கடிதமா ? ஐயோ எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம்.

கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி.

இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    பார்த்திருக்கின்றோம்.

எப்பொழுது?

மி.மு.   காலத்தில்.     அதென்ன   மி.மு?    மின்னஞ்சலுக்கு   


  முன்னர்   நாம் வாழ்ந்த     காலத்தில்.     தற்பொழுது    மி.பி.  காலத்தில்    வாழ்கின்றோம்.  அதாவது    மின்னஞ்சலுக்கு   பிற்பட்ட    காலத்தில்.      மின்னஞ்சல்  தந்த  கொடைகள்    முகநூல்  -   டுவிட்டர்  -  ஸ்கைப்.   இனிவரும்    காலத்தில்   மேலும்    புதிய    சாதனங்கள்  வரலாம்.

ஆனால்  -   இந்த மென்பொருள்    சாதனங்கள்    எல்லாம்    வருவதற்கு   முன்பே   இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட   சமாதானங்களைக்  கூறி  தப்பிப் பிழைக்காமல்,  தனக்கு   வரும்   கடிதங்களுக்கெல்லாம்   தளராமல்   பதில் கடிதம்   எழுதிய   ஒருவர்   நம்   மத்தியில்   வாழ்ந்து   மறைந்தார்   என்பதை எத்தனை பேர்   அறிந்திருப்பார்கள்?.

அவர்தான்    பேராசிரியர்   கைலாசபதி.

கடிதம்     எழுதுவதும்   ஒரு   கலைதான்   என   உணர்த்திய   இலக்கிய வாதியாக   அவரை   நான்   இனம்   காண்கின்றேன்.

தனக்கிருந்த   பல  முக்கிய  பணிகளில்  ஒன்றாக  கடிதங்கள் எழுதுவதையும்  அவர்  கருதியிருக்க வேண்டும்.  பல  வருடங்களுக்கு முன்னர்  கைலாசபதி  எழுதிய  கடிதங்கள்  பலவற்றை  மிகவும்   பத்திரமாக பாதுகாத்து  ஒரு   கோவையில்   பிணைத்து   வைத்திருந்த    கவிஞர்    முருகையனிடம்தான்    கைலாசபதியைப் பற்றிய   இந்த   உண்மையை   அறிந்து கொண்டேன்.

இதுவரையில்    கைலாசபதி    தமது    நண்பர்களுக்கு    இலக்கிய   நயத்துடன் எழுதிய  கடிதங்கள்   நூலாக   வெளிவரவில்லை.   கைலாஸின்   நண்பர்கள் இணைந்தால்    இப்படியொரு   முயற்சியிலும்   இறங்கிப் பார்க்கலாம்.

எழுத்தாளர்களுக்கு   ஆலோசனை   கூறும் ,  அபிப்பிராயம்  தெரிவிக்கும் கருத்துக் கருவூலங்களான   அவை   எதிர்காலத்தில்   தொகுக்கப்படலாம்  என்ற   எதிர்பார்ப்பும்   எனக்குண்டு.

நாவலர் பெருமான் - 'தங்கத் தாத்தா' நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அருளியது

 


நாவலர் பெருமான்



'தங்கத் தாத்தா' நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அருளியது.









திருவருள் செய்த தமிழ்வள நாடு

           செய்ய தவப் பயனே!

செந்தமிழ் மக்கள் புந்தியி னிக்குந்

         தெள்ளமு தேதேனே!

வரமருள் சைவத் திருநெறி யுய்ய

     வந்தருள் தேசிகனே!

  வாடிய பழைய தமிழ்மொழி தழைய 

     மழைபொழி கலைமுகிலே!

பரமத திமிரக் குரைகடல் சுவறப்

     பருகிடு தவமுனியே!

   பரனருள் நீறுஞ்சிவமொழி வீறும்

      பரவிட வருள்குருவே!

அருவளர் மதுரத் தமிழுரை நடைசெய் 

    ஐயா அடிபோற்றி

  அறுமுகப் பெரும நாவல நாமத் 

      தரசே யடிபோற்றி!

துணிச்சலும் தீர்க்கதரிசனமும் நீண்டகாலத் திட்டங்களும் தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டா? நிலாந்தன்


 விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதனால் அதன் தியாகிகளை நினைவு நினைவுகூர்வது தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே கடந்த திலீபன் நினைவு நாள் மாவீரர் நாள் என்பவற்றைப் பொதுவெளியில் கொண்டாடத் தடைகள் விதிக்கப்பட்டன.

இது விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மனோ கணேசன் சுட்டிக் காட்டியது போல புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட முயற்சிகளில் இறங்குவது. இரண்டாவது நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமைக்காக மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது. இவை இரண்டையும் சற்று விரிவாக பார்க்கலாம்.

ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைவு கூர முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. எனவே அந்த இயக்கத்தின் தடையை நீக்குவதற்கு வழக்கறிஞர்களாக உள்ள தமிழ் அரசியல்வாதிகள் போராடலாம். ஆனால் இந்த போராட்டத்தை அவர்கள் ஏற்கனவே செய்திருந்திருக்க வேண்டும்.

நாடகமேடையில் பாண்டியன் செழியனாக கனல் கக்கும் வசனம் பேசிய செல்வி அக்கா - முருகபூபதி முருகபூபதி


எங்கள் குடும்பத்தின்  மூத்த சகோதரி செல்வி அக்கா திருமதி சண்முகவடிவம்பாள் இம்மாதம் ( டிசம்பர் ) 01 ஆம் திகதி இலங்கையில் நீர்கொழும்பில் திடீரென மறைந்துவிட்டார்.  எனது எழுத்துலக வாழ்வில்,  தொடர்ந்தும் கலை, இலக்கிய, கல்வி சார்ந்த ஆளுமைகள் மறைந்தவேளைகளில் அவர்தம் நினைவுகளை பதிவுசெய்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவந்திருக்கும் நான்,  முதல் தடவையாக எனது உடன்பிறப்பு குறித்து எழுதநேர்ந்துள்ளதும் விதிப்பயன்தான்.

அக்காவுக்கு பேச்சாற்றல் எழுத்தாற்றல், வாதிடும் திறமை இருந்தது. ஆனால், திருமணத்தோடு இல்லறத்தை நடத்தும் ஆற்றலை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அக்காவின் இயற்பெயர் சண்முகவடிவம்பாள்.  வீட்டில் செல்லமாக செல்வி என அழைக்கப்பட்டு,  அதுவே ஊரிலும் உறவினர் மத்தியிலும் நிலைத்தபெயராகியது.

எங்கள் பாடசாலைக்கு ஒரு தடவை தமிழ்நாட்டிலிருந்து


வருகைதந்த குன்றக்குடி அடிகளார், அக்காவின் பேச்சாற்றலை வியந்து பாராட்டிவிட்டு,  “   உனது பெயரின் தமிழ் அர்த்தம்  - அறுவதன எழிலரசி –  “ என்றார்.

அக்காவுக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தபோது நான்தான் மாப்பிள்ளைத்தோழன்.  அக்காவின் திருமணம் பேசித்தான் நடந்தது.  பரஸ்பரம் மணமக்களின் படங்கள் காண்பிக்கப்படாமல் ஒருவரோடு ஒருவர் பேசாமல்  நடந்த அக்காலத்தைய திருமணம்.

வீட்டில் நடந்த பதிவுத்திருமணத்தின்போதும்,  அதன்பிறகு சில மாதங்கள் கழித்து நீர்கொழும்பு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடந்த திருமணத்தின்போதும்கூட, அக்கா, தனக்கு வரப்போகும் மணமகனை  ஏறிட்டும் பார்க்கவில்லை. பேசவில்லை !

முதலிரவில்தான் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருப்பார்கள்.

அக்கா திருமணமாகியதும், மச்சான்   Field Officer ஆக பணியாற்றிய பலாங்கொடையில் அமைந்த அல்ஃபா எஸ்டேட்டிற்கு சென்றுவிட்டா.

நல்லைநகர் நாவலர் பெருமான் நமக்கென்றும் வழிகாட்டி !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா - 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 


உலகிலே பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதும் இல்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப் படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு  விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச்  சிக்கல் ?  ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு  முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

போராளிகளுக்கு ஒரு சமர்ப்பணம் ! ஒருவரலாற்றுக் கண்ணோட்டம் ! சட்டத்தரணி செ. ரவீந்திரன்


  இந்தியா -  ஜாலியன் வாலாபாக் படுகொலையின்  பின்னணியில்  வன்முறையும் அகிம்சையும் !!   
உரிமைக்கோ அன்றில் விடுதலைப்  போராட்டத்திற்கோ வன்முறை நியாயமானதுதானா..?  ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…?  என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது.

 

அப்படியான போரில் நின்ற ஒருவனை விடுதலை வீரன் என்று ஒரு பக்கம் பார்க்கும் அதே சமயம், அதன் மறுமுனையில் அவனை தீவிரவாதி என்று பட்டம் சூட்டுவது சாதாரணம்.


இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது.  தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்  நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும்

ஐரோப்பிய நாடுகள் அன்று மௌனம் சாதித்தன.

 

தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு அவர் விடுதலை கோரினார் என்பது பிழை என்பதனால் அல்ல,  அவரது அரசியல் இயக்கம் தீவிரவாதத்தால் அரசை பணிய வைக்க முயன்றது என்பதனாலேயே.


ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி,   தன்னை முன்னர் தடை செய்த எல்லா நாடுகளாலும்  ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார்.


அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக  மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அவர்கள் வன் முறையாளராக பார்க்கப்படவில்லை.


இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன. ஆனால்,  வழிமுறைகள் நோக்கத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. ( End Justifies the means )

 

குட்டிமணி, ஜெகன்


கைலாசபதி இயல் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் பேராசிரியர் கைலாசபதியை மீள வாசிப்போம் டிசம்பர் 06 முதல் 10 வரை ( ஐந்து நாட்கள் )



 

ஆறுமுக நாவலர் குருபூசை (7/12/2020) முன்னிட்டு "ஆறுமுக நாவலர் வாழ்கின்றார்"* எனும் தலைப்பில் மறவன் புலவு க.சச்சிதானந்தன் ஐயா இணையத்தினூடாக சிறப்புச் சொற்பொழிவு




அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 43 – பாண்டில் அல்லது தாளம் – சரவண பிரபு ராமமூர்த்தி


பாண்டில் அல்லது தாளம் – கஞ்சக்கருவி


உலோகங்களால் வார்க்கப்படுபவை கஞ்சக்கருவிகள். ஜால்ரா, சிங்கி,


மணி, ஜாலர் என பல பெயர்களால் அழைக்கப்படும் தாளம், கஞ்சக்கருவிகள் வகையைச் சேர்ந்தது.  இசையின் கால அளவுகளை சீர்படுத்தி நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்வதே தாளம். இசையும் தாளமும் உடலும் உயிரும் போன்றது. பிரித்தால் இரண்டுமே இறந்துபோகும். நாதசுரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, ஆகிய எல்லா லய வாத்தியங்களையும் தாளம் தான் கட்டுப்படுத்துகிறது. பழங்குடி மக்களின் நாட்டியத்தில் இருந்தே தாளம் பிறந்ததாகச் சொல்கிறார்கள் இசையறிஞர்கள். வேட்டையாடிக் கிளர்ந்த மகிழ்வு அதிர அவர்கள் ஆடும் நடனத்தில், பாடலுக்குத் தகுந்தவாறு பாதங்களைக் கொண்டு செய்த கணக்கீடே 'தாளம்’ என்றானதாம். ஆஸ்திரேலிய பழங்குடிகள் ஒரு சிறிய கல்லில் கட்டைக்கொண்டு தட்டி தாளமிடுகிறார்கள்.

 

காலப்போக்கில், தாளத்திற்கென ஒரு இசைக்கருவி வடிவமைக்கப்பட்டது. இரண்டு உலோகத் துண்டுகள் அல்லது கட்டைகளே முதலில் தாளமாக பயன்படுத்தப்பட்டன. அதன்பின் இலக்கண சுத்தியோடு நவீன தாளக்கருவிகள் வந்தன. இலைதாளம், குழிதாளம் என தரத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப பெயர்களும் உருவாயின.  ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் என இசையோடு தொடர்புடைய பலரும் தாளக்கருவியைப் பயன்படுத்துகிறார்கள். தெருக்கூத்து, கோலாட்டம், வில்லுப்பாட்டு, கனியான் கூத்து, எருதுகட்டு மேளம், பழங்குடியினர் இசை


, கொங்கு நாட்டின் கொட்டுத்தவுல் சாமி அழைப்பு, நாடகங்கள் போன்றவற்றிலும் இது முதன்மை பெற்றிருந்தது. திரிபுடை தாளம் முழங்க, நாதசுரக்காரர் இசைக்கும் மல்லாரி ராகத்தை வைத்தே பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் வசிக்கும் மக்கள், இறைவன் வீதியுலா தொடங்கியதைத் தெரிந்து கொள்வார்கள். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்சார இசைக்கருவிகள் வந்துவிட்டதால், மரபுரீதியான இந்த நிகழ்வுகள் மறைந்து விட்டன.

 

தாளம் இசைக்கும் சிவ பூதகணங்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் தனி சிற்பங்களையும், தோரண சிற்பங்களையும் நாம் தமிழ்நாட்டில் பல கோவில்களில் காணலாம். மிகப் பழமையான வெட்டுவான் கோவில் குடவரையில் தாளம் இசைக்கும் பூதகண சிற்பம் உள்ளது. "மத்தளி மூன்றும் கரடிகை ஒன்றும் தாளம் ஓரணையும்" என்பது சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில் கல்வெட்டுத் தொடர். வேள்விக்குடி அருள்மிகு சொன்னவாறு அறிவார் கோவில்(கல்யாணசுந்தரேசுவரர் தற்காலப் பெயர்) கல்வெட்டில் அக்கோவிலில் வழிபாடு நடக்கும் நேரங்களில் பறை ஒன்று, மத்தளம் நான்கு, சங்கு இரண்டு, காளம் இரண்டு, செகண்டிகை ஒன்று, தாளம் ஒன்று, கைம்மணி இரண்டு இவைகள் ஒலிக்கப்பெற்று வந்த செய்தியைக் கூறுகிறது.

 

செம்பு மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும். தாளம் வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச் சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள். அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த அச்சு தயார். பின்பு  அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக் கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள். 10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால் கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத் தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ் போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை போகிறது.

 

‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில் நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.

நாதஸ்வரமும் சங்கீதமும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .

நாதஸ்வர இசை என்பது நம் எல்லோரையும் இன்றும் கவர்வது. இந்த வாத்தியத்தின் மகிமை என்னவென்றால் அது கோயிலிலோ அல்லது கல்யாணத்திலோ வாசிக்கப்பட்டால் சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்கு இந்த இசையைக் கேட்டு மகிழலாம்.


இந்துக் கோயில்களிலே இதை வாசிப்பது வழமை.  ஆனால் இந்த வாத்தியத்தை இசைப்பதிலே மன்னராக விளங்கியவர் ஷேக். சின்ன மெளலானா என்ற முஸ்லீம். இவர் மட்டுமல்ல, தெலுங்கு தேசத்திலே பல முஸ்லீம் குடும்பங்கள் இதை வாசிப்பதுண்டு. இவரின் வாசிப்பைப் பலர் கொழும்பு வேல் விழாவிலே கேட்டிருக்கலாம்.


நாதஸ்வரத்தை வாசிப்பதிலே தன்னிகரில்லாது திகழ்ந்த இன்னொருவர் திருவாவடுதுறை.இராஜரட்னம் பிள்ளை அவர்கள். அந்த நாளிலே திரு இராஜரட்னம் பிள்ள அவர்கள் கல்யாணத்துக்கு வாசிக்க வருகிறார் என்றால் திருமண ஊர்வலத்திலே அயல் ஊர் மக்கள் எல்லாம் கூடி வந்து கச்சேரியை இரசிப்பார்களாம். ஊர்வலத்திலே ஒளி ஊட்டுவதற்கு கூலி ஆட்கள் தலையிலே Gas Light ஐத் தூக்கிச் செல்வார்களாம். இவர்களை ‘மண்டை விளக்கு’ என அழைப்பார்கள்.

வாசகர் முற்றம் – அங்கம் 13 கெக்கிராவையிலிருந்து மற்றும் ஒரு பெண் படைப்பாளி ரஞ்சிதா ! சிங்களப்பிரதேசத்திலிருந்து சிறகடிக்கும் தமிழ்குயில் !! முருகபூபதி


லங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு அப்பால், மேற்கிலங்கை, தென்னிலங்கை ,  வடமத்திய மற்றும்  வடமேற்கு பிரதேசங்களிலும்   தமிழ் இலக்கியவாதிகளும் கலைஞர்களும்  உருவாகிவருவதை இனம்கண்டுகொண்ட மல்லிகை ஆசிரியர்  டொமினிக்ஜீவா, அவர்களை  மல்லிகையில் அறிமுகப்படுத்தி களம் அமைத்துக்கொடுத்து ஊக்கமளித்தார்.

1970 களில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து  புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள்  புற்றீசலாக புறப்பட்டனர்.  திக்குவல்லையிலிருந்து கமால்

, நீள்கரை நம்பி   உட்பட பல எழுத்தாளர்களும் புத்தளத்திலிருந்து சோலைக்குமரன் என்ற ஜவாத் மரைக்காரும்,  தில்லையடிச்செல்வனும் உடப்பிலிருந்து வீரசொக்கனும், அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவர்ஷா, கெக்கிராவையிலிருந்து சஹானா,   சுலைகா  நீர்கொழும்பிலிருந்து முருகபூபதி, தேவா, செல்வரத்தினம், தருமலிங்கம், மினுவாங்கொடையிலிருந்து  நிலாம் , கொழும்பிலிருந்து மேமன்கவி ஆகியோரும் இலக்கிய உலகில் அறிமுகமானார்கள்.

இவர்கள் அறிமுகமான அதே காலப்பகுதியில் மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரும் இலக்கியத்துறையில் பங்களிப்பு வழங்கினர்.   இந்தப்பின்னணிகளிலிருந்துதான், எனது வாசகர் முற்றம் தொடரின் 13  ஆவது அங்கத்தில் ஒரு புதிய இளம்தலைமுறை வாசகராகவும்,  வளர்ந்துவரும் எழுத்தாளராகவும் ஒருவரை அடையாளம் காண்பிக்க முன்வந்துள்ளேன்.

கடந்த மாதம் லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜாவின்  ஈழத்தின்  தமிழ் நாவல் இயல் – ஓர் ஆய்வுக்கையேடு நூல் வெளிவந்தபோது, அதுபற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை  “ படித்தோம் சொல்கின்றோம்  “ என்ற தொடரில் எழுதியிருந்தேன்.

நல்லைநகர் பெருமானார் எல்லையிலாப் புகழடைந்தார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


அன்னியமாம் பேரிருளில் அகப்பட்ட சைவமதை
முன்னின்று பேரொளியாய் காத்திடவே வந்தமைந்த 
நல்லைநகர் நாவலராய் நல்வரமாய் ஆறுமுகம் 
எல்லோரும் மதித்திடவே பிறந்தனரே ஈழமதில் 

கருவினிலே சமயநெறி நிறைந்தவராய் பிறந்தமையால்
கருதியது அத்தனையும் சமயநெறி ஆகியது
குறைகளைய புறப்பட்ட குறையில்லா பெருமகனாய்
நிறையறிவாய் விளங்கினரே நிமலனருள் நாவலரும்  

நீறணிந்த மேனியராய் நெஞ்சமெலாம் சிவனினைவாய்
ஆறுமுக நாவலரும் ஆசாரம் பேணினரே 
தந்தையினைக் குருவாக்கி தாம்கற்றார் பலவற்றை
ஐயமின்றி கற்பதிலே அவர்கவனம் நின்றதுவே   

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 25- மாட்டுக்கார வேலன் - சுந்தரதாஸ்

.


திரைப்படங்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு சுந்தரதாஸ் அவர்களின்  "பொன்விழா ஆண்டில் இந்தப்படங்கள் " இவ்வாரம் 25வது வெள்ளிவிழா வாரமாக வெளிவருகின்றது. இயந்திர மயமான இந்த புலம் பெயர் வாழ்வில் நேரம் ஒதுக்கி எழுதிக்கொண்டிருக்கும் இவரை தமிழ்முரசு அவுஸ்ரேலியா வாழ்த்துகின்றது . இவர் இலங்கையில் தினகரன், வீரகேசரி , தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தவர் என்பதும் இங்கு வந்தபின்பும் எழுதிக் கொண்டிருப்பதும்  பெருமையான விடயமே . அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள். 

ஆசிரியர் குழு .  




1970ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் 5 படங்கள் வெளிவந்தன இவற்றுள் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்ட மாபெரும் வெற்றிப்படம் தான் மாட்டுக்கார வேலன். படத்தயாரிப்பில் நிதி உதவி செய்பவராக விளங்கிய கனகசபை செட்டியார் இப்படத்தை தயாரித்தார். இவருடைய நிதி உதவியினால் புதிய பூமி படத்தை எம்ஜிஆர் நடிப்பில் தயாரித்த கே ஆர் மூவி சாருடன் இவருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டதால் கே ஆர் மூவி சார் தங்கள் அடுத்த தயாரிப்பை இவரிடம் நிதி உதவி பெறாமல் ஏ வி எம் உதவியுடன் சிவாஜி நடிப்பில் தயாரித்தார்கள் அந்தப் படம்தான் எங்க மாமா. இதனால் எம்ஜிஆரை அணுகிய கனகசபை தனது ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் மாட்டுக்கார வேலன் தயாரித்தார். வேலனும் மாமாவும் ஒரேநேர த்தில் பொங்கலன்று வெளியானது.

சுமிதா எனும் நடன மங்கை - செ பாஸ்கரன்




அவள் அழகி 
அழகி என்பதை விட 
இளைஞர்களின் மனதில் 
இடம்பிடித்தவள் 
கண்கள் கவிதை பேசும் 
உதடுகள் புன்னகைக்கும் 
எவரும் ரசிக்கும்படி 
அழகாய் பிறந்திருந்தாள் 
ஆதரவற்று நின்றவளை 
காமுகர்கள் விரட்டலும்  
வறுமையின் துரத்துதலும் 
அவள் ஆடைகளைக் குறைத்தது 
அவள் சினிமாவில் நடித்தாள் 
சினிமா அவளிடம் நடித்தது 
உயரத்திற்கு கொண்டுசெல்வதாய் 
உறுதியளித்தது 
வழமை போலவே 
அவளும் வஞ்சிக்கப்  பட்டாள் 
தற்கொலை முடிவானது 
கண்களால் பேசிய அழகி 
சில்க் சுமிதா 
கண்கள் மூடிக்கொண்டது 
சினிமா கொன்றுபோட் ட 
பெண்கள் பட்டியலில்  
அவள் பெயரும் 
சேர்ந்து கொண்டது 
சினிமாவை மாற்றிப் போட்ட
ஒரு நடன மங்கையை 
சினிஉலகம் மறந்து கொண்டது 
அவள் ஆட்டக்காரியல்ல 
அப்பாவி மட்டுமே. 

அவரின் பிறந்தநாள் 2 டிசம்பர் 1960 

இலங்கைச் செய்திகள்

 தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை அணுகும் டக்ளஸ்

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் கிண்ணியா விஜயம்

யாழில் 240 இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில்

புரவி சூறாவளி: அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

பிரசாந்தனின் பதவிக்கு ஜெயராஜ் நியமனம்

அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறக்கப்படும்

புரவி: 13,368 குடும்பங்களைச் சேர்ந்த 44,848 பேர் பாதிப்பு

புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு தயார்

வௌ்ளை மாளிகையின் உயர் பதவிக்கு யாழ். பெண்


 தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை அணுகும் டக்ளஸ்

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அமெரிக்க துாதுவர் பாராட்டு

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்க்ைகத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் (Alaina B. Teplitz) அலெய்னா பி ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.

உலகச் செய்திகள்

 அணு செயற்பாட்டை பலப்படுத்த ஈரானிய பாராளுமன்றம் அழைப்பு

தொலை இயக்க தொழில்நுட்பம் மூலம் ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை

பிரிட்டனில் அடுத்த வாரத்தில் தடுப்பூசி பயன்படுத்த வாய்ப்பு

ரொஹிங்கிய அகதிகளை ஆபத்தான தீவுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பம்

பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட பைடன் திட்டம்

ஆப்கான் அமைதி பேச்சில் முதல் கட்ட உடன்படிக்கை


 அணு செயற்பாட்டை பலப்படுத்த ஈரானிய பாராளுமன்றம் அழைப்பு

ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டின் அணு நிலையங்கள் மீதான சர்வதேச கண்காணிப்பை நிறுத்தும்படி ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அது ஒரு நிலாக்காலம் (அனுபவக் கதை) .


உஷா ஜவகர்  ( அவுஸ்திரேலியா)     


அது 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதற் கிழமையில் ஒரு நாள். அன்று என் மாமா என்னையும் என் தங்கையையும் யாழ்ப்பாணத்தில் கச்சேரி பகுதியில் இருந்த ஒரு ஹாஸ்டெலில் சேர்த்து விட்டார்.21 வருஷங்கள் ஹாஸ்டல் பக்கமே தலை வைத்துப் படுக்காத எனக்கு ஹாஸ்டெலில் போய் சேர பயமாக தானிருந்தது. மனமெங்கும் பீதி நிறைந்து இருந்தது.

கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த நான் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் வெடித்த இனக்கலவரத்தால் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர நேர்ந்தது.

 

கொழும்பில் சரஸ்வதி ஹாலில் அமைக்கப்பட்ட அகதி முகாமில் தங்கிவிட்டு கப்பலில் பயணித்து காங்கேசன் துறைமுகத்தை அடைந்தேன்.சிறிது காலம் என் சின்னம்மா வீட்டில் தங்கிவிட்டு CIMA படிப்பதற்காக ஹாஸ்டெலுக்கு சென்றேன்.

உள்ளமெங்கும் பீதி நிறைந்திருக்க ஒரு கையில் என் உடைகளும் புத்தகங்களும் நிறைந்த சூட்கேஸ் ஒன்று இருந்தது.மறு  கையினால் என்னை விட இரண்டு வயதே குறைவான என் தங்கையின் கையை இறுகப் பற்றியிருந்தேன்.எங்கள் இருவரது கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன.அவளும் தன மற்றக் கையினால் ஒரு சூட்கேஸை காவிக் கொண்டு நின்றாள்.

 

அப்போது அந்த ஹாஸ்டெலுக்கு பொறுப்பான கன்னியாஸ்திரி அங்கு வந்தார்.அவரை 'மதர்' என்றே எல்லோரும் அழைத்தார்கள்.அவர் எங்களின்ர மாமாவுடன் கதைத்துவிட்டு எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.அவரோடு உள்ளே போகும் வழியிலே என் கண்கள் அங்கும் இங்கும் அசைந்து நோட்டம் விட்டன.