பேராசிரியர் கைலாசபதியின் அன்றைய தினகரன் பத்திரிகை பணி குறித்து வெளியான ஒரு
பதிவை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
இலங்கை
தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம், பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப்
போக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில்
ஒன்றாகும்.
தேசிய இலக்கிய செல்நெறி
காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சினைகளும்
இலக்கியத்தின் பாடுபொருள்களாயின. அந்தவகையில் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து
இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரிகையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு
முக்கிய பங்குண்டு.
பேராசிரியர் தினகரன்
வாரப் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக
பதவியேற்ற காலத்தில்
பலதரப்பட்டோரை தன்னோடு
இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன்
மாத்திரமின்றி மாறுப்பட்ட கருத்துக்
கொண்டவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தார்.
செ. கணேசலிங்கன்,
சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா,
சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி
சரவணபவன், தேவன், அ. முத்துலிங்கம், ,
என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்ற்பாலன்,
நீர்வை பென்னையன், ஏ. இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சி.வி.
வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு,
எல்லைப்புறம், பார்வதி, முதலியன தொடர்கதையாக வெளிவந்தன. இது தொடர்பில் பேராசிரியர்
சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.