சிட்னி முருகன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி

.
சிட்னி முருகன் கோவிலில்  விநாயகர் சதுர்த்தி 1-09-2011 ம் திகதி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.

படப்பிடிப்பு ஞானி



அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக சாடுகிறார் ஜுலியா

Thursday, 01 September 2011

 மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானதென அவுஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை அந்நாட்டு பிரதமர் ஜுலியா கிலார்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீதிமன்றின் தீர்ப்பினால் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறியுள்ள கிலார்ட் குடியகல்வு சட்டத்தினை நீதிமன்றம் திருத்தி அமைக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

1991 ஆகஸ்ட்டு 30 : கவிஞர் செல்வியின் நினைவில் : ஏழு கவிதைகள் -



20 வருடங்களின் பின்.....1991 ஆகஸ்ட்டு 30 : கவிஞர் செல்வியின் நினைவில் : ஏழு கவிதைகள் -

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கவிஞர் செல்வி விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாடகமொன்றை அரங்கேற்றத் தயராகிக் கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. செல்வி தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கியப் பங்கினை வகித்தார் செல்வி. 1993 டிசம்பரில் வெளியான கொழும்பு சரிநிகர் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. பிற்பாடு செல்வி கொல்லப்பட்டதனை இலண்டன் அம்னஸ்டி இன்டர்நேஷனல் செவிவழிச் செய்தியொன்றில் உறுதிப்படுத்தியது. தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம். அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்ட 20 ஆண்டுகளின் நினைவில் உலகின் மிகச் சிறந்த பெண்கவிஞர்களின் தொகுப்பு ஒன்றினை வாசகர்கள் முன்பு வைக்கிறோம்.

யாழ் இந்துக்கல்லூரியின் கீதவாணி விருதுகள் 2011

.

இலங்கைச் செய்திகள்

*  உயிர்வாழ்வு இல்லாமல நீதியென்று ஒன்றில்லை

*  போர்க் குற்றச்சாட்டு விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்


*  முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி'

*  கவலைக்குரியதாக விட்ட தமிழ்ச் சமூகத்தின் புரிதலும் அக்கறையும்

     - அரவிந்தன்



இலங்கை தமிழ் நாவலாசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வீரகேசரி முன்னாள் முகாமையாளர் பாலச்சந்திரன் நினைவுகள் - முருகபூபதி

.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு (அவுஸ்திரேலியா நேரம்) கனடாவில் வதியும் நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரனுடன் தொலைபேசியில் உரையாடியபோதுதான் எமது விPரகேசரி முன்னாள் முகாமையாளர் பாலச்சந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எனக்குக்கிடைத்தது. உடனடியாகவே. இலங்கையில் அமரரின் தொலைபேசி இலக்கம் பெற்று எனது ஆழ்ந்த அனுதாபங்களை திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரனுக்கு தெரிவித்து அவரது துயரத்தில் பங்குகொண்டேன்.

உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள்

 .
மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 7


.
                                                                      பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


 பெற்றமனம் நோதல்


காதல் வயப்பட்டுவிட்ட பெண்ணொருத்தியின் நிலைமை, அதனை உணர்ந்துகொண்ட பெற்றோரின் கவலை, அக்கறை, அறிவுரை போன்ற விடயங்கள் சம்பந்தமான சில பாடல்கள் இப்பகுதியில் தொகுத்துத் தரப்படுகின்றன.

வயதுக்கு வந்துவிட்ட பெண்பிள்ளை ஏதாவது தப்புத் தண்டாவுக்கு ஆட்பட்டுவிடக் கூடாதே என்கிற கவலை எல்லாத் தாய்மாருக்கும் இருப்பதுண்டு.  அதிலும் தன்பிள்ளை அழகாகவும் இருந்து விட்டால் அந்தக் கவலை ஒரு பயமாகவே மனதில் நிலைகொண்டிருக்கும். நல்லவன் ஒருவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கும்வரை அந்தப் பயம் நீடிக்கும்.  கிராமத்தில் வாழ்கின்ற தாய்மாருக்கு இந்தக் கிலி பண்பாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.

கவிதை - நட்புக் காலங்கள்

.
நட்புக் காலங்கள்............



பள்ளி முடிந்த பின்னும்
வீடு திரும்பாமல்
நண்பர்களுடன்
மாலை ஆறு மணிவரை
வியர்க்க வியர்க்க
ஓடிப்பிடித்து
விளையாடிய போது
வியர்வையை
விட அதிகமானது நட்பு
கல்லூரியில் சேர்ந்தபின்
வீடுதிரும்ப
தாமதமானால்
நண்பன் வீட்டில்
நானும் ஒரு பிள்ளையாய்
தங்கிய போது பாசத்தை விட
உயர்ந்தது நப்டு
வேலை தேடி
அலையும் போது ஒன்றாய்
நேர்முகத்தேர்வுக்கு
சென்று கிடைக்காத
வேலையை திட்டிக்கொண்டே
தோழர்களுடன் சினிமா
சென்றபோது
சுமைதாங்கியானது நட்பு.
வேலை கிடைத்து ஒவ்வொருவரும்
வேறு வேறு ஊர்களுக்கு
சென்று விட்டபின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ-மெயிலிலும்
நண்பர்களுக்குள் கொடுக்கும்
missed call லுமாக
மாறிப்போனது இன்றைய நட்பு

நன்றி நிலாரசிகன்









புகலிடம் கோரியுள்ளோரை மலேசியாவுக்கு அனுப்ப முடியாது அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு

Thursday, 01 September 2011

courtsபுகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்ப முடியாது என்று அவுஸ்திரேலிய நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பினால் அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டத்துக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் வறிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருந்தது.

ஈகைப் பெருநாள்!

.
31/8/2011

ஏழை மக்களுக்கு உணவளிக்குமாறு வலியுறுத்துகிறது ஃபித்ரா கடமை!
நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறிய போது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளைக் கொண்டாடி வந்தனர். அதிலொன்றை வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி,

"நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள்" என்றார்கள். இந்த நபிமொழி அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்

.
* கடாபி குடும்பத்தினர் அல்ஜீரியாவுக்குத் தப்பியோட்டம்! _

* அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை

* லிபியாவில் ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

*  கடாபியின் எழுச்சியும் வீழ்ச்சியும் -என்.கிருஷ்ணராஜா




மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம் - வித்யாசாகர்!

.
மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை


30/8/2011
இந்திய முன்னாள் பிரதமர் ரவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்ததுள்ளதாக எமது சென்னை அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சாதிவெறியின் தீவினை பேசும்; நஞ்சுபுரம் (திரைவிமர்சனம்) வித்யாசாகர்!

படம் பார்த்து வெளியே வருகையில் வளைந்து நெளிந்து திரும்பும் பாதையை கண்டாலும் பயம் வருகிறது பாம்பின் நினைவு எழுகிறது. வீட்டில் கால் கழுவ தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கரைந்து கீழே போகும் நெளிவில் கூட பாம்பின் அசைவு தெரிகிறது. திரும்பினால் நீர் வரும் குழாய், கொடியில் வளைந்து கிடக்கும் புடவை, கீழே அறுந்துக் கிடக்கும் கொடிக்கயிற்றை கண்டால்கூட பாம்பும் நஞ்சுபுரம் திரைப்படத்தின் நினைவும் வருவதை தடுக்கவே முடிவதில்லை.

தமிழ் சினிமா

உயர்திரு 420

வெறும் 420தாக இருக்கிற ஒருத்தன் எப்படி உயர்திரு 420 ஆகிறான்ங்கிறதுதான் கதை.

திருடர்களிடமே லூட் அடிக்கும் தில்லாலங்கடி திருடன் சினேகன். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வங்கிக் கடனை நம்பி இருக்கும் வசீகரனின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜெனரல் மேனேஜராய் போலி சர்ட்டிபிகேட்டுகளை கொடுத்து சேர்கிறார் சினேகன். ஹோட்டல் தொழிலில் முத்திரை பதிக்க ஆசைப்படும் வசீகரனுக்கு, தமிழின் முன்னணி நடிகையுடன் காதல்.