இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

.
தமிழ் முரசு வாசகர்களுக்கு ஆசிரியர் குழுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

Image result for நத்தார் வாழ்த்துக்கள்

அன்பு உலையைத் தேடிய அவன் - மு பொன்னம்பலம்

.


அன்பு வார்க்கப்படும் உலைதேடி அலைந்தான் அவன்.
அன்பு எங்கே வார்க்கப்படுகிறது?
எப்படிப்பட்ட உலை அது?
என்ன உலோகங்கொண்டு அன்பு வார்க்கப்படுகிறது?
என்ன உலோகமோ?
தங்கத்தைக் கொண்டுதான் என்றனர் பலர்
ஆனால் ஒரு தட்டுத் தட்டினாலே தகர்ந்து போகுமே இந்தத்தங்கம்
அன்பு அப்படிப்பட்டதா? இல்லையே.
உண்மையில் அன்பு ஒரு இரும்பு வார்ப்பு, இல்லையா?
இல்லை, இடி விழுந்தால் அந்த உலோகமும் ஒடிந்து போகுமே, தெரியுமா?
இது ஒரு வித்தியாசமான உலோகம்,
பஞ்சைவிட மிருதுவானது, பாலைவிட இனிமையானது
ஆயினும் எந்த இயற்கை உற்பாதங்களாலும்
அசைத்திட முடியாத ஓர் அற்புத தொழில்நுட்ப ஆயுதம்!

இது எங்கே உற்பத்தியாகிறது?
இது உற்பத்தியாகும் உலை எங்கே இருக்கிறது?
அவன் கேட்டுக் கொண்டே அலைந்தான்
ஈற்றில்,
இந்த அன்பை செயற்கையாக உற்பத்தி செய்த கொல்லர்கள் இருவரை அவன் சந்தித்தான்
அவர்களில் ஒருவர் மகாத்மாகாந்தி
மற்றவர் மண்டேலா
இவர்களிடமும் அவன் தன் வழமையான கேள்வியைக் கேட்டான்
அவர்கள் அவனை அழைத்துச் சென்றனர்,
அன்பு வார்க்கப்படும் உலையைக் காட்ட!
‘இதோ பார்’ என்று அன்புலையைக் காட்டினர் அவர்கள்.
அங்கே பிள்ளை ஒன்றுக்கு பாலூட்டித் தாலாட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு தாய்!
இங்குதான் அந்த அன்புலை மூட்டப்படுகிறது என்றனர் அவர்கள்.
தாய்மைதான் அன்பின் உலை.
தாய்மைதான் அன்பின் உலோகம்
தன் குஞ்சை இறாஞ்சிக் கொண்டு பறக்கும் பருந்தைத் தாக்கி
மீட்டு வரும் தாய்மையின் அன்பு வேகம் அற்புதமானது!
தன் குழந்தைக்கு பால் புரையேற, உடம்பின் அத்தனை நாளங்களும்
ஒருங்கிணைய துள்ளிக்குதித்து உச்சிமோந்து உடல் குலுங்கி பதறும் அந்த தாய்!
வளர்ந்தபின் பள்ளிக்குப் போன பிள்ளைகள் வீடுவரும் வரை
வீதிக்கோடிவரை விழியோட விட்டுப் பார்த்திருக்கும் அந்தத்தாய்!

எங்கோ ஒரு சிறிசின் அழுகுரல் கேட்டால் அது தன்பிள்ளையின்
குரலாய் எண்ணி விம்முவதும் அவள் தான்.
வீட்டில் பிள்ளைகள் இல்லாதபோது றோட்டில் வரும் பிள்ளைகளில்
உடல் ஒன்றி ஆறுவதும் அந்தத் தாய்தான்!
அன்பு இப்போ வீட்டை விட்டு வெளியே விரிகிறது.
நாட்டில் பாழாட்சி நிலவும் போது கொலைபடும் அத்தனை இளைஞரும்
தன் தனையராய் விரிகிறது அவள் நெஞ்சு!
விரியத் தொடங்கிய நெஞ்சின் பாய்ச்சலுக்கு தடையாய் நிற்கும்
அனைத்தையும் வீழ்த்தி, அவள் விழிவிரிய எங்கும் விடுதலையாய் அவள்!
அன்பு விரிய விரிய ஓர் தாயானவள் இப்பிரபஞ்சத்தையே
தன்மடியில் வைத்து தாலாட்டுகிறாள், விடுதலை மகவாய்!

மு.பொ.

மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் கிறிஸ்மஸ் நாளன்று பிறந்த தினம் பாடசாலை பருவத்திலிருந்து நான்கு தசாப்த காலமாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் இலக்கியவாதி - முருகபூபதி

"யேசுபாலகன் அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக இருப்பவர்கள்" என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார்.
சிலவேளை நான் பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில்  பிறந்து,  பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும் வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன்.
அந்த வரிசையில் ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.
வடமராட்சியில் பல இலக்கியவாதிகளை குடும்ப உறவினர்களாக கொண்டிருக்கும் இரத்தினவேலோன், தனது இலக்கியவாழ்வில் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புலோலியூரையும் இணைத்துக்கொண்டவர்.

பெரும் பேறாய் போற்றுகின்றோம் ! - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியாimage1.JPG               முண்டாசுக்   கவிஞனே   நீ
                   மூச்சுவிட்டால் கவிதை வரும் 
              தமிழ் வண்டாக நீயிருந்து
                      தமிழ் பரப்பி நின்றாயே 
              அமிழ் துண்டாலே வருகின்ற 
                     அத்தனையும் வரும் என்று 
               தமிழ் உண்டுமே பார்க்கும்படி
                      தரணிக்கே உரைத்து நின்றாய் 

              ஏழ்மையிலே நீ   இருந்தும்
                    இன் தமிழை முதலாக்கி
              தோள் வலிமை காட்டிநின்று 
                    துணிவுடனே உலவி வந்தாய் 
              வாய்மை கொண்டு  நீயுரைத்த
                     வரமான வார்த்தை எல்லாம்
               மக்களது  மனம் உறையின்
                      வாழ்வு வளம் ஆகிடுமே 

              அடிமை  எனும்  மனப்பாங்கை 
                   அழித்துவிட  வேண்டும் என்றாய் 
              அல்லல்  தரும்  சாதியினை 
                     தொல்லையென  நீ  மொழிந்தாய் 
               பெண்மைதனை  சக்தி  என்று 
                        பெருங்குரலில் நீ  மொழிந்தாய் 
               பெரும் புலவா உனையென்றும்
                         பெரும்  பேறாய் போற்றுகின்றோம் 
                       

                      


                     அமரர் எஸ்.பொ. - அங்கம் 05 இலக்கியச் செல்நெறியில் எஸ்.பொ. வின் வகிபாகம் குறித்த விரிவுரைகளை நடத்தவேண்டும் - முருகபூபதி


எஸ்.பொ.வின் மகன் மருத்துவர் அநுர,   சென்னையில்  மித்ர  பதிப்பகத்தின் சார்பில்  முழுநாள்  இலக்கிய விழாவை   வெகு  சிறப்பாக  நடத்தி  முடித்த  பின்னர்  சிட்னியிலும் ஒரு    பெரு விழாவை   28-08-2004   ஆம்   திகதி  சிட்னி   ஹோம்புஷ் ஆண்கள்    உயர்நிலைக்கல்லூரியில்  நடத்தினார்.
இவ்விழாவில்   மூத்த  கவிஞர்  அம்பியின்  பவள  விழா நிகழ்ச்சிகளும்   இடம்பெற்றன.  அன்றைய  விழாவில்  மித்ர வெளியீடுகளான    ஆசி. கந்தராஜாவின்   உயரப்பறக்கும்   காகங்கள்,  தமிழச்சி   சுமதி  தங்கபாண்டியனின்  எஞ்சோட்டுப்பெண்,   நடேசனின் வண்ணாத்திக்குளம்,   கவிஞர்  அம்பியின்  அந்தச்சிரிப்பு,  எஸ்.பொ.வின்     சுயசரிதை    வரலாற்றில்    வாழ்தல்  - இரண்டு பாகங்கள்,     எஸ்.பொ.    ஒரு  பன்முகப்பார்வை,  மற்றும்  பூ   ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
மண்டபம்   நிறைந்த  இலக்கிய  சுவைஞர்கள் . அனைவருக்கும்  அன்று இராப்போசன   விருந்தும்    வழங்கினார்    அநுர.
இந்த   நிகழ்விற்கு  முருகபூபதி  தலைமை   ஏற்க,  .கருணகரன்,  பேராசிரியர்  பொன். பூலோக சிங்கம்,   திருநந்த குமார்,   டொக்டர் ஜெயமோகன்,    மா. அருச்சுணமணி,  தனபாலசிங்கம்,  குலம்  சண்முகம் ஆகியோருடன்   இலங்கையிலிருந்து  வருகை  தந்த  ஞானம்  ஆசிரியர்  மருத்துவர்   தி.ஞானசேகரன்  தமிழகத்திலிருந்து  வருகை  தந்த  தமிழச்சி  சுமதி  தங்கபாண்டியன்  ஆகியோரும்  உரையாற்றினர் என்பது    குறிப்பிடத்தகுந்தது.
இந்நிகழ்வின்   நிகழ்ச்சிகளை   ஒருங்கிணைத்து  அறிவித்தார்  ஓவியர் ஞானத்தின்   புதல்வன்  ஞானசேகரம்  ரங்கன்.
பொன்னுத்துரையின்   வாழ்வில்  என்றும்  பக்கபலமாக  விளங்கிய திருமதி   பொன்னுத்துரை  அவர்களை   மேடைக்கு  அழைத்து அவருக்கு   பூச்செண்டு  வழங்கினார்  முருகபூபதியின்  மகள் பிரியாதேவி.
இந்நிகழ்வில்  நன்றியுரையை   நிகழ்த்தியவர்  மாத்தளை   சோமு அவர்களினால்   எஸ்.பொ.வுக்கு  1989  இல்  சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்ட    பத்திரிகையாளர்    சுந்தரதாஸ்.

உறவுச்சங்கிலி - செல்வன்


Image result for nanbargal

.
அலுவலகத்துக்கு செல்கிறீர்கள். அங்கே வழக்கமாக ஜோக் அடிக்கும் ஆபிஸ் நண்பருடன் ஐந்து நிமிடம் பேசுகிறீர்கள். மதியம் அனைவருடனும் சேர்ந்து உணவு உண்கிறீர்கள்.
மாலை மகளின்/மகனின் டியூசன் வகுப்புக்கு சென்று அங்கே இருக்கும் பிற குழந்தைகளின் தாய்,தந்தையருடன் உரையாடுகிறீர்கள். அதன்பின் வாக்கிங் போகையில் வழக்கமாக அங்கே வாக்கிங் வரும் நண்பருடன் பேசியபடி நடந்து செல்கிறீர்கள்.
ஆழமற்ற இத்தகைய காஷுவல் நட்புகள், உரையாடல்கள் கூட உங்கள் இதயநலன், மனநலனை வலுப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. முன்பெல்லாம் ஆழமான நட்புகள், உறவுகள் தான் இதயநலன், மனநலனை வலுப்படுத்தும் என நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது "சோஷியல் இன்டெக்ரேஷன்"- அதாவது பலவித நட்புகள்/உறவுகள் கொண்ட ஒருவரின் உறவுச்சங்கிலியின் ஒவ்வொரு இணைப்பும் நம் இதயநலன், மனநலனை வலுவாக்கும் என கண்டறிந்து வருகிறார்கள்.
நீன்ட ஆயுள், நோய்நொடியற்ற வாழ்க்கை வாழும் பெரும்பகுதியினர் இப்படி ஒரு பெரிய நட்பு/உறவு வட்டத்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். வாரம் ஒரு கல்யானம், மாதம் ஒரு வளைகாப்பு என நாம் அலுத்துக்கொன்டாலும் அங்கே அத்தனை உறவுகள், நட்புகளை சந்திக்க முடிவது, திருவிழாக்கள், விசேசங்களில் உரையாட முடிவது அனைத்துமே நம் இதயநலன், மனநலனை வலுவாக்குகின்றன.

'நட்ட கல்லும் பேசுமோ?' - சிவன்மலைக்கு வித்திட்ட சிவவாக்கியர்


Image result for siddhar sivavakkiyar

.“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர்தான் சிவவாக்கிய சித்தர். சிவவாக்கியர் சித்தியடைந்தது கும்பகோணத்தில் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஆனால், அவர் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் வாசம் செய்து மூலவர் வள்ளி சுப்பிரமணியரை அன்றாடம் பூஜித்து வந்திருக்கிறார் என்பது அந்நூல்கள் சொல்லாத செய்தி.
ராமாயண காலத்தில் ஆஞ்சனேயர் ராமலட்சுமணரை காக்க வேண்டி சஞ்சீவி மூலிகை பர்வதத்தை தூக்கிச் சென்றபோது சிந்திய சின்னத்துண்டுதான் சிவன்மலை என்ற ஐதீகம் உண்டு. இங்கு வள்ளியுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியரை துதித்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். கிடைக்காத பிள்ளைப்பேறுகள் கிடைக்கும். இம்மூலவரின் வலது பக்கத்தில் தனி அறையில் சிவவாக்கியருக்கும் சன்னதியுண்டு. இந்த சன்னதியிலிருந்து பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுரங்க வழியாக சென்று பூஜித்து வந்ததாகவும், அதன்பிறகே வள்ளி, சுப்பிரமணியருக்கு ஆராதனைகள் செய்து இறைவன் திருவடியிலும் மெய்யுருகி நின்றார் சிவவாக்கியர் என்கின்றனர் கோயில் குருக்கள். இன்றும் அந்த அற்புத சித்தரின் அமானுஷ்யம் இங்கே உலாவி ஆண்டவனுக்கு அருள்பாவிப்பதாகவும் நம்புகின்றனர் பக்தர்கள். எனவே மூலவருக்கு பூஜைகள் நடக்கும் காலங்களில், இந்த சிவவாக்கியருக்கும் பூஜை புனஸ்காரங்கள் உண்டு. இவரை நினைத்து பாடல்களை பாடி, தியானங்கள் நிகழ்த்தினால் வாழ்வில் நடக்காத அற்புதங்கள் நடப்பதாகவும் ஐதீகம் உண்டு.

ரோபோ சங்கர் வேண்டாம்னு ஒத்தக்கால்ல நின்னேன்: தனுஷ்.தனுஷ் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) ரிலீஸாக இருக்கும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், “முதன்முதல்ல ‘மாரி’ பண்ணும்போது மிகப்பெரிய சேலஞ்சிங்கா இருந்தது. நான் எந்தப் படத்துக்குமே அவ்வளவு ஹோம் ஒர்க் பண்ணது இல்ல. ‘உங்ககூட ரெண்டு பேர். ரெண்டு பேரையும் அடிச்சிக்கிட்டே இருப்பீங்க. அதுல ஒருத்தர் ரோபோ சங்கர்’னு பாலாஜி மோகன் சொன்னார்.

‘நான் அடிச்சா வாங்குற மாதிரி சைஸ்ல ஒரு ஆள் பாருங்க’னு சொன்னேன். பாலாஜிதான் ரோபோ சங்கர் வேணும்னு விடாப்பிடியாக நின்னார். இவ்வளவு பெரிய உருவத்தை அடிச்சா ஆடியன்ஸுக்கு கன்வின்ஸிங்கா இருக்க வேண்டும் என்பதற்காக, தனியா அதுக்கு ஹோம் ஒர்க் பண்ணேன்.‘அவர் சைஸ் என்ன, என் சைஸ் என்ன... நான் எப்படிங்க அவரை அடிச்சிக்கிட்டே இருக்குறது? திரையில் பார்க்கும்போது அதை ஜனங்க நம்பணும்ல...’னு சொல்லி, ரோபோ சங்கம் வேணாம்னு ஒத்தக்கால்ல நின்னேன். இதுதான் உண்மை.

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க!

.
Written by London swaminathan
Date: 8 August 2018
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 
திரைப்படம்: எங்க ஊர் ராஜா 
இயற்றியவர்: கவிஞர் கண்தாசன் 

குருட்டுக் கவிஞர் மில்டனும் செவிட்டு அறிஞர் எடிசனும் சமாளித்த விதம்!

உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் பலர் கண்பார்வையற்றவர்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் அருமையான கவிகளைப் பொழிந்தவர் தீர்க்கதமஸ் (நீண்ட இருள்). கண்பார்வையற்றதால் ஏற்பட்ட காரணப் பெயர் இது. கிரேக்க மொழியில் முதல் காவியத்தை இயற்றிய ஹோமரும் அந்தகரே. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பாரடைஸ் லாஸ்ட் காவியத்தை உருவாக்கிய மில்டனும் கண்பார்வை இழந்தவரே. தமிழ் கூறு நல்லுலகில் அந்தகக் கவி வீர ராகவ முதலியார், இரட்டைப் புலவரில் ஒருவர் இப்படிப் பலர் அந்தகர்களே! கிருஷ்ண பக்தர் சூர்தாஸும் அந்தகரே! கண்ணில்லை; ஆனால் புகழ் கொடி கட்டிப் பறந்தனர்.
மில்டனை குருட்டுக் கவிஞர் என்று அவருடைய இலக்கிய எதிரிகள் குறைகூறினர். அதற்கு மில்டன் அளித்த பதில் மிகவும் உருக்கமானது: