விடைபெற்ற எங்கள் விமல் அண்ணா ! 🎙️கானா பிரபா

 தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு"


மேசையில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பி விடும் அப்பாவின் குரல்.

வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் தருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக் காந்திகள்.

போர் மையம் கொண்ட மின்சாரமில்லா இரவுகளில் ஜாம் போத்தல் விளக்கைப் போட்டு விட்டு அந்தக் குறு வெளிச்சத்தில் குந்தி இருக்கும் அயலவர் சூழ, சைக்கிள் டைனமோவில் மின்சாரம் பிறப்பித்து பிபிசி கேட்ட காலம்,
ஓ அந்த உலகம். அங்கே உருவமற்ற குரல்கள் நம் சொந்தக்காரர்களாகி விட்ட பிரமை. அவர்கள் சொல்லே “வேதவாக்கு”. அங்கே ஒரு கம்பீரக் குரல் விமல் சொக்கநாதன் என்று ஒலிக்கிறது.

விமல் சொக்கநாதனின் கம்பீரக்குரல் ஓய்ந்தது!

 August 3, 2023 6:00 am

இலங்கை வானொலி ஊடாக தமிழ் ​பேசும் மக்களை வசீகரித்த மாபெரும் கலைஞனின் மறைவினால் அபிமானிகள் பெருந்துயர்!

உலகப் புகழ்பெற்ற லண்டன் பி.பி.சி வானொலியின் ஒலிபரப்பாளரும், தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும், சட்டத்தரணியுமான விமல் சொக்கநாதன் லண்டன் மாநகரில் அகால மரணத்தைத் தழுவினார் என்ற செய்தி ஏராளமான மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் எண்பதுகளில் போர் உக்கிரமடைந்த காலத்தில் பி.பி.சி தமிழோசை பிரபல்யம் மிக்கதாக விளங்கியது. போரின் நெருக்கடிகளிலும், மின்சாரமின்மை, மின்கலங்களுக்கு (பற்றரி) தடை என்பனவற்றுக்கு மத்தியிலும் சைக்கிள் டைனமோக்கள் மூலம் வானொலியை இயக்கி பி.பி.சி வானொலியை தமிழ் மக்கள் கேட்டுவந்தனர்.

தமிழோசையின் அப்போதைய பொறுப்பாளர் ‘சங்கர் அண்ணா’ என அன்பாக அழைக்கப்படும் சங்கரமூர்த்தி, ‘ஆனந்தி அக்கா’ என அன்பாக அழைக்கப்படும் மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் மற்றும் விமல் சொக்கநாதன் ஆகியோர் அக்காலத்தில் மக்களின் பேரபிமானம் பெற்ற ஒலிபரப்பாளர்களாக இருந்தார்கள். இவர்களது குரலைக் கேட்க இரவு 9 மணிக்கு வானொலியை சிற்றலை வரிசைக்கு திருப்புவது இலங்கைத் தமிழர்களது வழக்கமாகவிருந்தது.

மூத்த படைப்பாளி விமல் சொக்கநாதன் நினைவைப் போற்றும் வானொலிப் பெட்டக நிகழ்ச்சி

 


https://www.youtube.com/watch?v=TlIV99oQNN8&t=6s

மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேர்ண் ….அவுஸ்திரேலியா கருவினைத் தாங்கும் பெருமையை இறைவன் 
புவியிலே பெண்ணுக்கே வரமென வழங்கினான்
உயிரினுக் குள்ளே உயிரினைத் தாங்கும்
உயரிய பிறப்பே பெண்ணவள் ஆவாள் 

உணவினை மறப்பாள் உறக்கத்தை துறப்பாள்
கனிவெனும் உணர்வை உளமதில் கொள்வாள்
நினைவெலாம் பாசம் நிறைத்துமே நிற்பாள் 
உலகிலே என்றும் உன்னதம் பெண்ணே 

பூமியும் பெண்ணே சாமியும் பெண்ணே


ஓடிடும் நதியெலாம் பெண்ணே என்போம் 
சக்தியும் பெண்ணே சித்தியும் பெண்ணே
எத்திசை பார்க்கினும் பெண்ணே தெரிவாள்

சாமியாய் பார்க்கும் பெண்ணைச் சமூகம்
சகதியில் வீழ்த்துதல் முறையே அல்ல
தாலியைக் கட்டி தர்மத்தை உடைத்து
மாதர்க்கு மாவலி கொடுப்பது முறையா

கட்டிய மனைவியை எட்டியே உதைப்பதும்
வீட்டினை விட்டு விரட்டியே விடுவதும்
வீதியில் வைத்து வைதுமே நிற்பது 
சாதனை அல்ல சண்டாளம் ஆகும் 

மகிழுந்தில் பேருந்தில் மாதரை வதைக்கின்றார் 

தொடருந்தில் தொழிலகத்தில் துப்பியே உமிழுகிறார்
மாதர்தமை சீரழிக்க வக்கிரமாய் எண்ணுகிறார்
மாதவமாம் மாதர்தமை வதைத்திடுதல் முறையாமோ 

உயிரைச் சுமக்கும் உன்னத நிலையை
உலகில் பெற்றவள் பெண்ணே ஆவாள்
அவளால் பிறந்து அவளால் வளர்ந்து
அவளுக்கே துன்பம் கொடுப்பது அடுக்குமா

தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்
நோயில் எமக்கு மருந்துமாய் மாறுவாள் 
வேராய் இருப்பாள் நீராய் இருப்பாள்
வீழ்ந்து விடாமல் தாங்கியும் நிற்பாள் 

பேசிடும் மொழியினைத் தாய்மொழி என்போம்
பிறந்திடு நாட்டையும் தாய் நாடென்போம்
தாய்மையே உலகிலே உயர்ந்ததும் என்போம்
தாய்மையைக் கீழ்மையாய் பார்ப்பது முறையா 

எங்கே காணோம் - கண்ணன் செல்வராஜ்

 .

மாடி வீட்டு தோட்டமுண்டு

மாசகற்ற ஆட்கள் உண்டு
மதிய விருந்து படையலுண்டு
மந்திரி போல் வாழ்க்கையுண்டு

கஷ்டம் வந்து கதறி அழுது
கண்ணீர் வெள்ளம் வருகையிலே
கை பிடித்து கண் துடைத்த
கந்தல் சேலை எங்கே காணோம்

கட்டிலுண்டு மெத்தையுண்டு
கஸ்டமில்லா வாழ்க்கையுண்டு
பஞ்சு மெத்தை விரிப்புமுண்டு
பால் சோறோ நிதமுமுண்டு

ஆழ்மனதில் யாரும் அற்ற
அச்ச எண்ணம் தோனையிலே
அள்ளி தூக்கி அரவணைத்த
அப்பாவின் கை எங்கே காணோம்

தங்கமுண்டு வெள்ளியுண்டு
டைட்டன் வாட்சும் கையிலுண்டு
ஐந்து பென்ஸ் காருமுண்டு
ஆடி காரோ அருகிலுண்டு

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 75 பிரான்ஸிலிருந்து எழுதப்படும் பதிவு ! இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒரு சிறுகதை ! ! முருகபூபதி

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.


எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இந்த 75 ஆவது அங்கத்தை பாரிஸ் மாநகரில் அமைந்த B & B Hotel அறையிலிருந்து எழுதுகின்றேன்.

கனடா – கட்டார் – இலங்கை பயணங்களை நிறைவுசெய்துகொண்டு,  வந்த களைப்பு நீங்குவதற்கு முன்னர்  மற்றும் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகிய நிலையில் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாரிஸ் வந்து சேர்ந்திருக்கின்றேன்.

வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருது விழாவுக்காக வரநேர்ந்திருக்கிறது.

இந்த அறக்கட்டளையின் நிருவாக இயக்குநர் வென்ஸிலாஸ் அநுராவும் எனது பால்ய கால தமிழ் ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் மகன் மகேசானந்தனும் பாரிஸ் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்று அழைத்துச்சென்று மேற்குறித்த B & B Hotel இல் தங்க வைத்தனர்.

எங்கேயிருந்தாலும் இந்தத் தொடரை எழுதவேண்டிய கடப்பாடு எனக்கிருக்கின்றமையால், மீண்டும் உங்களை இந்த 75 ஆவது அங்கத்தின் ஊடாக சந்திக்கின்றேன்.

கடந்த 74 ஆவது அங்கத்தில்  கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த் துறை மாணவர்களுடனான சந்திப்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?   அந்தப் பதிவு தொடர்பாக சிலர் தங்கள் முகநூலில் கருத்துக்களை தெரிவித்திருந்ததாக தகவல் வந்தது.

மாணவர் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும், அவர்களிடத்தில்  சுயமாக சிந்தித்து  கேள்வி கேட்கும் துணிவை வளர்க்கவேண்டும் என்பது பற்றியும் சிலர் சொன்னார்கள்.

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருந்த கிழக்கு பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில்  ஒரு மாணவி மாத்திரம் விரிவுரையாளர்களின் வற்புறுத்தலையடுத்து எழுந்துவந்து அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்  பணிகள் – தமிழ்க்கல்வி  பற்றிக் கேட்டார்.  அவருடைய கேள்விக்கு விரிவாக பதில் சொன்னேன் எனவும், அதுபற்றி அடுத்த அங்கத்தில் குறிப்பிடுவேன் எனவும் சொல்லியிருந்தேன் அல்லவா..?

இலங்கைச் செய்திகள்

 ‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும்

 வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு பெற முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

 பல்வேறு துறைகளிலும் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா உறுதியளிப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

பொலிஸ் அதிகாரப் பகிர்வு விடயம் பாரதூரமானது


‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும்

August 4, 2023 6:00 am

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் ‘யாழ்நிலா’ விசேட குளிரூட்டப்பட்ட சுற்றுலா ரயில் இன்று 04 ஆம் திகதி முதல் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பில் தெரிவிக்கையில்,

கட்டுரை இப்படியும் நடக்கிறது July 31, 2023

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு


தெரியும்.

விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடைபெற்ற ஒரு மாவீரர் தின விழாவில் பேசுகையில் ‘ரணில் ஒரு நரியன்’
என்று சொன்னது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.
அதனால்தானோ என்னவோ, இரண்டாயிரத்து ஐந்து ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் சமஷ்டி அரசமைப்பு ஒன்றைக் கொண்டுவருவேன் என்று ரணில் கூறிய போதிலும் அவர் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர்.
அதுபற்றி பல்வேறு வகையிலும் கூறப்பட்டாலும் ரணில் வெற்றிபெறுவதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெரிந்ததே.
ஆனால், இன்று நிலைமை வேறு.
இருக்கின்ற தலைவர்களில் ஒப்பீட்டடிப்படையில் தமிழர் பிரச்னையை ஓரளவேனும் புரிந்துகொண்டவர்.
மேற்குலகு நம்புகின்ற ஒரு தாராளவாத அரசியல்வாதி.
அவர் இதுவரை ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் வெற்ற பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.
அவர் சிங்கள தேசியவாதிகளின் ஆதரவைப் பெற முடியாமல் போனதுதான்.
இதனை அவரோடு தேர்தலில் எப்போதும் கூட்டுவைத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு தடவை பகிரங்கமாகவே கூறியிருந்தமை ஞாபகம்.
நடக்கவிருக்கும் தேர்தலில் ரணில், சிங்கள தேசியவாதிகளின் வாக்குகளை பெறமுடியாது போனால் அவரின் வெற்றி சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
அதனை அவரும் தற்போது உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

உலகச் செய்திகள்

தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி: ட்ரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு

 பாகிஸ்தான் அரசியல் பேரணியில் குண்டுத் தாக்குதல்: 44 பேர் பலி

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும் ஜப்பானும் திருப்தி

பிரதமரை பதவி விலகுமாறு பங்களாதேஷில் கடும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்

உக்ரைனுடன் அமைதிப் பேச்சு பற்றி ரஷ்ய ஜனாதிபதி சூசகம்

இம்ரான் கானுக்கு 3 வருட சிறை; 5 வருட அரசியல் தடை


தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி: ட்ரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு

August 3, 2023 6:01 am 

2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக, முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 1, 2023

 சில தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் ஆளும்தரப்பு எம்.பி.


சுரேன் ராகவன் உரையாற்றியபோது, தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்பவில்லை என்றும் வடக்கில் ஆளுநராக இருந்தவன் என்றவகையில் தான் இதனை கூறுவதாகவும் தெரிவித்திருந்தது வாசகர்கள் அறிந்ததுதான்.

தான் ஆளுநராக இருந்தபோது ஏதோ தமிழ் மக்களுடன் நெருங்கி பழகியது போலவும், அவர்களின் மனநிலையை தான் அறிந்து வைத்திருப்பவர் போலவும் சுரேன் ராகவன் பேசியமை ஆச்சரியத்துக்குரியதல்ல.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட அவர் முயற்சி செய்ததாக அப்போது சில செய்திகள் வெளிவந்திருந்தன.
அதற்காக தனது நண்பர் சுமந்திரனுடன் அவர் பேசி வந்ததாகவும் அப்போது அந்தச் செய்திகள் தெரிவித்திருந்தன.
தமிழ் மக்களின் மனநிலையை தெரிந்து வைத்திருந்ததாலேயே அவர் கூட்டமைப்பில் போட்டியிட விரும்பியிருக்கலாம்.
அவரது இந்த பேச்சுக்கு பதிலளித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுநாள் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, ‘துணிவு
இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்புகிறார்களா இல்லையா என்று வாக்கெடுப்பு ஒன்றை நடத்துங்கள்’ என்று சவால் விடுத்திருந்தார்.
அவ்வாறு அவர் சவால் விடுத்து ஆற்றிய உரையின் காணொலி ஒன்றை நண்பர் ஒருவர் நேற்று பகிர்ந்திருந்தார்.
என்ன ஒருபேச்சு.
தனக்கே உரிய பாணியில் கஜேந்திரகுமார் பேசினார் என்பதை விட கர்ஜித்தார் என்று சொல்வதே பொருத்தமானது.
ஒரு காலத்தில் அவரது தந்தையார் குமார் பொன்னம்பலத்தை ‘சிங்கத்தின் கோட்டையில் கர்ஜிக்கும் புலி’ என்று கூறப்படுவதுண்டு.
எந்தவித தயக்கமும் இன்றி, தனக்கு சரி என்று பட்டதை துணிச்சலுடன் தெற்கில் கூறுபவர் குமார் பொன்னம்பலம்.
கஜேந்திரகுமாரின் பேச்சைக் கேட்டபோது குமார் மனக்கண்ணில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை.
அதுவல்ல நாம் இன்று சொல்ல வருவது.
இந்த காணொலியை அனுப்பியிருந்த அந்த நண்பர் கூடவே தனது யோசனையையும் எழுதியிருந்தார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 74 கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களுடன் ஒரு பொழுது ! இலங்கையில் கேள்வி கேட்கும் கல்வித்திட்டம் எப்போது தோன்றும்..?! முருகபூபதிஎனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, கனடா பயணம் குறுக்கே வந்தமையால்,  அந்தப் பயண அனுபவங்களையும் எழுத நேர்ந்தது.

எனினும்,  கனடா அனுபவங்களை முழுமையாக நான் எழுதவில்லை.  கனடாவில்  நண்பர் மூர்த்தி Tamil Entertainment Television இற்காக என்னுடன் நடத்திய  கலந்துரையாடல் நேர்காணல் காணொளிப்பதிவு, அவுஸ்திரேலியாவுக்கு நான் திரும்பிய பின்னர்தான் கிடைத்தது.

கடந்த ஐம்பது வருடகால எழுத்துலக அனுபவத்திலிருந்து நான் சில


புத்திக்கொள்முதல்களை பெற்றிருக்கின்றேன்.

வானொலிகள் – தொலைக்காட்சிகள் – பத்திரிகைகள் – இதழ்கள் ஆகியன பேட்டி காணும்போது எச்சரிக்கையுடன்தான் இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. முடிந்தவரையில் எம்மை,  எமது பணிகளை  நன்கு தெரிந்தவர்கள் எம்மிடம் கேள்வி கேட்டால், பதில் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்.  உள்நோக்கங்களுடன் கேள்வி கேட்பவர்களிடமிருந்து சாதுரியமாக தப்பிக்கொள்ளவேண்டும்.

சிண்டு முடிந்துவிடும் கேள்விகள் குறித்து எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.

இலங்கையை விட்டு புறப்படுவதற்கு முதல்நாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது இலங்கையில் எத்தனை வானொலிகள் ஒலிக்கின்றன என்பது எனக்குத் தெரியாது.

நான் இலங்கையில் நின்ற சமயம் சில வீடுகளில் வானொலிகள் ஒலிப்பதைக்  கேட்டேன். பல வீடுகளில் தமிழகத்தின் தொலைக்காட்சி நாடகங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தன.

அவற்றின் தரத்திற்கும் தகுதிக்கும், சிங்கள மொழியிலும் Sub Title  ஓடுகிறது.  அதற்காக தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் உழைப்பினையும் நேரத்தையும் செலவிடுவது ஆச்சரியமாக இருந்தது.

மாமியார் – மருமகள்  சண்டை சச்சரவு – பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை -  ஆளுக்கு ஆள் துரோகம் முதலான  சின்னத்தனமானதும் சில்லறைத்தனமானதுமான  தமிழக தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே சிங்கள Sub Title  எழுதி பதிவேற்றுகிறார்களே என்று ஆச்சரியமடைந்தேன்.

இலங்கையில்  முன்னர் நான்  இருந்த காலப்பகுதியில் பல தரமான சிங்கள தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து ரசித்திருக்கின்றேன். அவற்றைப்பார்த்து தமது ரசனையை வளர்த்துக்கொண்ட சிங்கள மக்களுக்கு தமிழக  தமிழ் தொலைக்காட்சி நாடகங்கள் ஏன் இவ்வாறு வஞ்சனை செய்யவேண்டும் என்பதுதான் தெரியவில்லை.

சொல்லத்தான் நினைக்கிறன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


நாவலாசிரியராகவும்,பயணக் கட்டுரையாளராகவும் தமிழ் வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவர் இதயம் பேசுகிறது மணியன். கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் , ஜோதிடராகவும் திகழ்ந்தவர் வித்துவான் வே . லக்ஷ்மணன். இவர்கள் இருவரும் எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமாக இருந்ததினால் திடிரென்று படத்தயாரிப்பாளர் ஆகும் யோகம் இவர்களுக்கு கிட்டியது. எம் ஜி ஆர் நடிப்பில் இதய வீணை படத்தை தயாரித்து நாலு காசு பார்த்த இவர்கள் அடுத்து கே பாலசந்தர் டைரக்சனில் படம் ஒன்றை தயாரித்தார்கள். மணியன் ஆனந்த விகடனில் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே படமானது. படத்துக்கு சொல்லத்தான் நினைக்கிறன் என்று பெயரிடப்பட்டது.

மனைவியை இழந்து , பின்னர் தொழிலையும் இழந்து கல்யாண

வயதில் மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் சிவராமன். அவருடைய மூத்த மகளின் வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது. சிவராமன் வேலை செய்த அலுவலகத்திற்கு புதிய மானேஜராக வருகிறான் ராகவன். சிவராமன் குடும்பத்துடன் அவனுக்கு ஏற்படும் அறிமுகத்தைத் தொடர்ந்து தனது வீட்டின் ஒரு பகுதியில் அவர்களை வாடகைக்கு குடியமர்த்துகிறான் அவன். மூத்த இரு பெண்களும் அவனை மானசீகமாக காதலிக்க, இளைய பெண் புஷ்பாவை மானசீகமாக காதலிக்கிறான் ராகவன். இதனிடையே ராகவனின் பணக்கார நண்பன் கமல் கண்களில் காணும் இளம் பெண்களை எல்லாம் தன் படுக்கையறைக்கு விருந்தாக அழைப்பவன் . அவனுக்கும் புஷ்பாவுக்கு ஏற்படும் மோதல் சவாலாக உருமாறுகிறது. கமலை திருத்துவதாக சவால் விடும் அவளை தன் படுக்கைக்கு விருந்தாக்குவதாக சபதம் செய்கிறான் கமல். அதே சமயம் ராகவன் உதவியுடன் மூன்று பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முனைகிறார் சிவராமன். காதலை வெளியே சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் இவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் மீதிக் கதை.

சென்னையில் ஒரு சராசரி குடும்பத்தில், ஏழ்மையோடு போராடும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை அப்படியே கண் முன் காட்டியிருந்தார் சிவராமனாக வரும் எஸ் வி சுப்பையா. அடிக்கொரு தடவை காட்டும் முகபாவங்கள் சூப்பர். மூன்று பெண்களுக்காகவும் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தப் படும் போது எழுந்து சென்று லாட்டரி சீட்டுகளை கொண்டு வைத்து வீசி எரியும் போதும், பெண் பார்க்க வந்தவர்களை பார்த்தும் எழுந்து போங்கடா முண்டங்களா என்று வெடித்து சிதறும் போதும் , பெண்ணாகாப் பிறக்கவே கூடாது என்று பச்சாதாபப் படும் போதும் நடிப்பில் உச்சம் தொடுகிறார் சுப்பையா.

நூல் வெளியீட்டு விழா - நல்லூர், யாழ்ப்பாணம் - 12/08/2023

 


கட்டுரை இப்படியும் நடக்கிறது August 2, 2023

 தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்


இப்போதெல்லாம் ஒருவரையொருவர் விமர்சிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.

ஒருவர் ஊடகர்களைச் சந்தித்து மற்றவர் பற்றி பேசினால், மறுநாள் மற்றவர் இவரைப்பற்றி புகார் சொல்வதே நடந்துகொண்டிருக்கின்றது.
அதற்கு இந்த பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும் அவர்களுக்கு நன்றாகவே உதவிவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் கட்சிகளை பேச்சுக்கு அழைக்கின்றபோது, அந்தப் பேச்சுக்களில் பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், பொலிஸ் காணி அதிகாரம் மாத்திரமன்றி, பதின்மூன்றிலிருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்களையும் மீண்டும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற தமிழ் கட்சிகள், கடைசியாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருப்பது இருக்கட்டும் முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள் என்று
கோரிக்கை வைத்தன.
கடைசியாக நடைபெற்ற தமிழ்க்கட்சிகளுடனான பேச்சுக்களில் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து மற்றைய விடயங்களை அமுல்செய்ய தயாராக இருப்பதாக
ஜனாதிபதி ரணில் கூறியபோது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன தமிழரசுக்கட்சி, பின்னர் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,
பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவதை பின்னர் பார்ப்போம், அதற்கு முன்னர் மாகாணசபைகள் இயங்கியபோது எத்தகைய அதிகாரங்களுடன்
இயங்கியதோ அதே போன்று இப்போதும் இயங்கும் வகையில் உடனேயே மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
(அப்படி கோரிக்கை வைத்துவிட்டு யாழ்ப்பாணம் வந்து பதின்மூன்றை ஏற்றுக்கொள்ள முடியாது, சமஷ்டிதான் எமது கொள்கை என்று கதையளந்தது வேறு விடயம்.)

அஷ்ட லக்ஷ்மி மஹா யாகம் - ஞாயிறு 13 ஆகஸ்ட் 2023 @8:30 AM - சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம்

 


கட்டுரை இப்படியும் நடக்கிறது August 3, 2023

 இலங்கையில் தமிழர்கள் ஆதிக் குடிகள் என்பதை தனது


எழுத்துக்களாலும் ஆய்வுகளின் சான்றாதாரங்களாலும் நிறுவிய பெருமைக்குரியவர் பேராசிரியர் பத்மநாதன்.

தமிழையும் இந்து மதத்தையும், அவற்றின் தொன்மைகளையும் நிறுவும் பணிக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அவர்.
அவர் இதுவரை தமிழர்களின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்திருந்தாலும் நேரடியாக அரசியல் பேசியதில்லை.
ஆனால்இ அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் கவனத்திற்குரியவை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டன என்று அந்த ஊடகர் மாநாட்டில் ஆதங்கப்பட்ட அவர், ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணம் இல்லை எனக் கூறும் நிலை மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களே பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர்.
அவ்வாறு மாறியதற்கு காரணம் என்ன? அது நடந்தது எதனால் என்பதை ஒரு கல்வியாளராக- பல்கலைக்கழகத்தின் வேந்தராக சொல்லவேண்டிய அவர், அதனை சர்வசாதாரணமாக கடந்துசென்று வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அதுவும் ஐந்து வருடங்களில் நடந்துவிடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 4, 2023

 பொதுஜன பெரமுனவிலிருந்து ஓர் அணியை பிரித்து எடுத்து


அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள ரணில் தயாராகிவருவது குறித்து இந்தப்பத்தியில் சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார இதற்கான முன்னெடுப்புகளைச் செய்துவருவது குறித்தும் அந்தப் பத்தியில்
எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதுவரை நாற்பதுக்கும் அதிகமான எம்.பி.க்கள் – பெரும்பாலும் இளையவர்களைக் கொண்ட இந்த அணி பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தேன்.
ஆனால், அந்த அறிவிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்கு பின்னுக்குப் போயிருக்கின்றது.
எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டாலும் ஏன் இந்த தாமதம் என்று தெற்கில் இந்த அணியோடு சம்பந்தப்பட்ட சிலருடன் பேசியபோது தான் ஜனாதிபதி ரணிலின் திட்டம் தெரியவந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பு செய்யாமல் அதன் தலைமையில் மற்றைய கட்சிகளை ஒன்றிணைப்பதால், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஐ. தே. க. தரப்பிலிருந்து ரணிலுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனாலேயே அவர் கட்சியை மறுசீரமைத்து தலைமைத்துவ சபை ஒன்றை நியமித்து கட்சியை புதுப்பொலிவுடன் நகர்த்திச் செல்ல திட்டமிட்டிருக்கிறாராம்.
அந்த மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்தாலும் இன்னுமொரு சிக்கல் அவருக்கு இருக்கின்றது என்கின்றன விசயமறிந்த வட்டாரங்கள்.
அடுத்த வருடம் முதல் காலாண்டிலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விரும்பும் ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் தொடங்கியிருக்கிறார்.
அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம்கட்ட உதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 5, 2023

 குதிரை பந்தயத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க


வாய்ப்பிருப்பதையறிந்த இரு நண்பர்கள் ஆளுக்கு ஒரு ‘ரேஸ்’ குதிரையை வாங்கினர்.

ஒருவர் கேட்டார், ‘நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே, என்ன செய்யலாம்?’.
அதற்கு மற்றையவர் சொன்னார், ‘என் குதிரைக்கு மட்டும் வாலை சிறிதாக வெட்டி எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்’ என்றார்.
அதுபோல் ஒரு குதிரையின் வால் வெட்டப்பட்டது.
ஆனால், அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குறும்புக்கார பையன் ஒருத்தன், மற்றைய குதிரையின் வாலையும் அதேபோல வெட்டிவிட்டதால், அடுத்த
நாள் இருவரும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர்.
இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும்வரை தொடர்ந்தது.
இப்போது குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக்கொண்டு நின்றன.
இதைப் பார்த்து கவலைப்பட்ட நண்பர்களில் ஒருவர் சொன்னார்: ‘சரி இனி சிவப்பு குதிரை உன்னுடையது, வெள்ளை என்னுடையது’.
இந்தக் கதைதான் இப்போது அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்றது.
தையிட்டியில் விகாரை குறித்து சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அந்த விகாரை தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் காணி உரிமையாளர்களின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டது பற்றி பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு அந்த விகாரைக்கு அப்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரே அடிக்கல் நாட்டிய செய்திகள் அப்போது அநேகமாக எல்லா ஊடகங்களிலுமே வெளிவந்திருந்தன.

சினிமா ‘கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’

 August 4, 2023

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் நடிகை கயல் ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்க, நடிகரும், தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். 

வி. இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோகன் ஷெவனேஷ் இசையமைத்திருக்கிறார். 

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ரஞ்சனி தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மை சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர்  கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். 

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண பெண் இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் சிக்கிக் கொண்டு பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார். என்பதை உச்சகட்ட காட்சி வரை பல எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய சைக்காலஜிக்கல் திரில்லராக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.    நன்றி ஈழநாடு கட்டுரை இப்படியும் நடக்கிறது August 6, 2023

 நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள அதற்காக


தனியாக படிக்கவேண்டும் போல இருக்கின்றது.

அரசமைப்புச் சட்டத்தில் இருப்பவற்றை ஒரு நிறைவேற்று ஜனாதிபதியாக அமுல்படுத்த வேண்டியது தனது கடமை என்றும், அரசமைப்பிலுள்ள பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்றத்தில் அறிவித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இவ்வாறு அறிவித்தபோது, பதின்மூன்றுக்கு நீங்கள் ரெடியா? என்று ஒவ்வொருவராக விழித்து கேட்டது நேற்றுப்போல இருக்கின்றது.
பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் ஆற்றிய அந்த வரலாற்று சிறப்புமிக்க கருத்தை பலரும் விதந்துரைத்தனர்.
அரசமைப்பில் உள்ள அந்த பதின்மூன்றை தான் அமுல்படுத்தப்போவது போலவும், யாராவது அதனை விரும்பவில்லை என்றால் அரசியலமைப்புக்கு திருத்தத்தைக்கொண்டு வந்து பாராளுமன்றில் நிறைவேற்றலாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அப்படி யாரும் திருத்தத்தைக் கொண்டுவரப்போவதில்லை என்ற துணிச்சலில் அவர் அப்படி சொல்வதாக பலரும் அப்போது நினைத்துக்கொண்டனர்.
ஆனால் அப்படியல்ல, யாராவது திருத்தத்தைக் கொண்டு வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்ததாகவே இப்போது புரிந்துகொள்ள முடிகின்றது.
சில மாதங்கள் அவ்வவ்போது தமிழ்க் கட்சிகளுடனும் தமிழரசுடன் தனியாகவும் சந்தித்த பின்னர், கடைசியாக இந்தியாவுக்கு செல்வதற்கு ஓரிரு தினங்களுக்கு
முன்னதாக பொலிஸ் அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் தரமுடியாது என்று அறிவித்ததுடன், அரசியலமைப்பிலுள்ள அந்த பதின்மூன்றை அமுல்படுத்துவதற்கும் பாராளுமன்றமே முடிவு செய்யவேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.
இப்போது கடைசியாக, பதின்மூன்றை அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடமும், தனித்தனியாக யோசனை கேட்கப்பட்டிருக்கின்றது.