தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

ஓயாது உழைத்து நின்ற ஒரு கலைஞன் ஓய்ந்துவிட்டான் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ...

.     

              ஓயாது உழைத்து நின்ற
              ஒரு கலைஞன் ஓய்ந்துவிட்டான்
              வாழ் நாளை பயனாக்கி
              வாழ்ந்து நின்றான் போய்விட்டான்
              தேடி நின்ற செல்வமாய்
               செந் தமிழே வசமாச்சு
               ஓடியாடி உழைத்த அந்த
               உயர் மனிதன் ஓய்ந்துவிட்டான்    !

               கணிதம் தனைப் பார்த்தாலும்
               கன்னித் தமிழ் கைப்பிடித்தான் 
               இனிமையுடன் இன் தமிழை
               இறுகவே அணைத்து நின்றான்
               தனிமை தனில் இருந்தாலும்
               தமிழை அவன் விடவில்லை
               உயிர் பிரியும் தருணம்வரை
               உவந்தேற்றான் தமிழ் மொழியை  ! 

                வயது சென்று விட்டதென
                வதங்கி அவன் போகவில்லை
                இளமை எனும் எண்ணமதை
                இதயத்தில் இருத்தி நின்றான் 
                தள்ளாத வயது வந்தும்
                தமிழை அவன் காதலித்தான்
                காதலித்த தமிழ் இப்போ
                கலங்கிப் போய் அழுகிறது ! 

மேகலா – அஷ்விதா இணந்த பரதக் கச்சேரி - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

.


 


  அபினய சரஸ்வதி என கலை உலகு போற்றும் பாலசரஸ்வதி அம்மையார் தனது ஐம்பது வயதையும் கடந்தபின் கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரிதத்தில் வரும் “நந்தி விலகாதோ” என்ற பாடலுக்கு ஆடினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன் கோயிலுனுள் போக முடியாது. நந்தியோ மலை போல் படுத்து வழி மறிக்கிறது. பாலசரஸ்வதி அபினயித்தார். நந்தன் சிவ தரிசனம் பெறப் பட்டப் பாட்டையெல்லாம் பார்வையாளரைக் கவர வைத்தார். பார்வையாளராக மண்டபத்தில் அமர்ந்திருந்த நான் ஓடிப்போய் நந்தியை விலக்க மாட்டேனோ என பதைபதைத்தேன். மேடையில் நந்தியும் கிடையா, தில்லை சிதம்பர நாதரின் உருவ அமைப்பும் கிடையா. ஆனால் பார்வையாளரை அத்தனையும் அங்கே உள்ளதாக உணரவைத்தார், பாலசரஸ்வதி என்ற நர்த்தகி. இதுதான் பரதக் கலையின் சிறப்பு. இவ்வாறு மக்கள் மனதில் உணர்வை ஏற்படுத்த முடியும் என்றால் அந்தக் கலைஞருக்கு வயது ஒரு வரன்முறையா?

  73 வயதில் தனது இரு பெண்களுடன் இணைந்து ஆடியும் தனித்தாடியும் மக்களை மகிழ்விக்கிறார் ஹேமா மாலினி.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 6 - கொக்கரை

.


கொக்கரை/கொக்கறை – காற்றுக்கருவி


அமைப்பு
கொக்கரை இருவகைப்படும் - சிவவாத்தியமான கொக்கரை மற்றும் பழங்குடி காணிக்காரர்களின் கொக்கரை. நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை. அடி, நுனி, இடைப்பகுதியில் பித்தளைப் பூண் போட்டு அலங்கரித்து, நுனிப்பகுதியை சற்று சீவி ஊதும் வடிவம் செய்திருக்கிறார்கள். எக்காளத்தை விட சற்று சன்னமான ஒலியெழுப்பும்.
மற்றொரு கொக்கரை தமிழக பாபநாசம் மற்றும், கேரள மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளான காணிக்காரர்களின் கொக்கரை. சிவவாத்தியமான கொக்கரைக்கு முற்றிலும் வேறு வடிவிலானது. ஒன்றரை அடி நீளம் கொண்ட இரும்புக்குழல். இதன் மேல்பகுதியில் குறுக்குவாட்டத்தில் பல கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கும். அக்குழலோடு சங்கிலியால் ஒரு இரும்புக்கம்பி பிணைக்கப்பட்டிருக்கும். குழலை கையில் பிடித்துக்கொண்டு அந்த கம்பியால் கோட்டுப்பகுதியை உரசும்போது ஒருவித மெய்சிலிர்க்கும் இசை எழும்புகிறது. இந்த இசைக்கு தாளக்கட்டுப்பாடுகள் இல்லை. இக்கருவியை அகத்தியர் இவர்களுக்கு வழங்கியதாக நம்புகிறார்கள்.

குறிப்பு
தமிழ்த்திணையில் பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை. கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி. இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள். கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன. திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை இடம்பெறுகிறது.  கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன. நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.  நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில், ”கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர்போலும் என்றொரு வரி இடம்பெற்றுள்ளது. கொக்கரை இசைக்குத் தகுந்த கூத்தாடும் ஈசன் என்று பொருள்படும் இவ்வரியே இதன் பழமைக்குச் சான்று. மேலும் சிவபெருமான் கொக்கரையின் இசைக்கேற்ப பாடுவதாகவும் நாவுக்கரசர் குறிப்பிடுகிறார் – ”கொக்கரை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா”. ”கொக்கரையன் காண்என்பது ஆறாம் திருமுறை. கொக்கரையை சிவபெருமான் விருப்பமுடன் சேகரித்து வைத்து இருப்பதாக குறிப்பிடுகிறார் அப்பரடிகள். சங்கரநாராயணக் கோலத்தை வருணிக்கும் 11ஆம் திருமுறை சிவ பாகமான வலப்புறம் கொக்கரை ஆட்டம் நடப்பதாகவும் திருமால் பாகமான இடப்புறம் குடமாட்டம் நடப்பதாகவும் குறிக்கின்றது. திருமாலுக்கு குடமாடுக்கூத்தன் என்கிற பெயரும் உண்டு (திருஅரிமேயவிண்ணகரம், திருநாங்கூர்,தமிழ்நாடு).

சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 
                

21-02-2020 Fri: Maha Shivaratri  மகா சிவராத்திரி 

29-02-2020 Sat:    Vembadi Girls High School Old Girls Association Sydney 
                              proudly presents   "Pattimantram" 
                              with popular artists from India and local artists

29-02-2020 Sat:   சிட்னி துர்க்கா கோவில் கொடியேற்றம் 

08-03-2020 Sun :  சிட்னி துர்க்கா கோவில் தேர் 

09-03-2020 Mon  :  சிட்னி துர்க்கா கோவில் மாசி மக தீர்த்த  உற்வம் 


14-03-2020 Sat:   JCC Musical Event MADHURA GHANAM @5.30 pm Revirside Theatre Parramatta

15/03/2020 Sun:  The Tamil Women's Development Group (TWDG) is hosting afternoon 
                               tea and a fashion show for a cause - celebrating International Women's 
                               Day to raise funds for their sister organisation SIRAKUKAL (சிறகுகள்) based 
                               in Kilinochchi at 3pm at Castle Grand Pioneer Room, Castle Hill.


15/03/2020 Sun:  ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி 
                                    சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் 
                                    பிற்பகல் 2 மணி

15/03/2020 Sun:  சிட்னி இலக்கிய கலை மன்றம் நடாத்தும்  
                                 திருக்குறள் மனனப் போட்டி
                               சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் அமைந்துள்ள தமிழர்                                        மண்டபத்தில்   பிற்பகல் 2: 15 மணி
                       
15/03/2020 Sun:  குயீன்ஸ்லாந்தில்  இன்னிசை மாலை 2020 

29-03-2020 Sun : சிட்னி முருகன் கோவில் கொடியேற்றம் 

04-04-2020 Sat:  Anbaalayam Program

06-04-2020 Mon : சிட்னி முருகன் கோவில் தேர் 

07-04-2020 Tue  : சிட்னி முருகன் கோவில் தீர்த்தம் 

25-04-2020 Sat:  வருடாந்த நிகழ்ச்சி  - அபயகரம்   2020 


படித்ததில் பிடித்தது - Siva Murugupillai

.


மாணவர்களை....., மக்களை,,,,,
முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.
தற்போது உலகெங்கும் பேசு பொருளாக மாறியிருப்பது கொறனா வைரஸ் என்ற ஆரம்பிக்கப்பட்டு இன்று கோவிட் 19 (COVID-19) என உலக சுகாதார நிறுவனத்தால் புதிய பெயரிடப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.
இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயாக உலாவரும் இது சீனாவில் மையம் கொண்டிருப்பது பலரும் அறிந்த செய்தி. மனித உடம்பில் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தி தான் இன்று வரை இந்த நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொது விதியாக இருக்கின்றது.
நோய் தொற்றாளர்களின் அளவும், இறப்பு வீதமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனாலும் இதனைக் கட்டிற்குள் கொண்டு வர திருப்திகரமான முன்னெச்சரிகை நடவடிக்கைகளை சீனாவும், உலகும் எடுத்திருப்பது மகிழ்ச்சியான நம்பிகை தரும் விடயங்கள்.
ஆனால் சீனாவிலேயே கிட்டத்தட்ட 100 வீத அளவில் இதன் தாக்கம் இருப்பதுவும் இது ஒரு சீன நோய் என்பது போலவும் இதன் அடிப்படையில் சீன மக்களை வெறுத்து விலகி நடப்பதும், அவர்களின் தொழில்சார் இடங்களைத் தவிர்ப்பதுவும் வருத்தத்திற்குரியது, சரியானதும் அல்ல.
இது எச்சரிகையான செயற்பாடுகளுக்கு அப்பால் வெறுப்பிற்குள்ளாக்கும் செயற்பாடாக இன்று பல இடங்களில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது
இதற்கு ஒருபடி மேலே போய் மரணங்களின் எண்ணிக்கையை கண்டு '......உவர்களுக்கு உது வேண்டும். இலங்கையிற்கு குண்டு கொடுத்தவர்கள்... கம்யூனிஸ்ட்டுகள் என்ற வெறுப்புப் பேச்சுகள் சரியானதும் அல்ல நாகரீகமற்றவை, மனிதாபிமானம் அற்றவை ஏன் கண்டனத்திற்குரியவை.
என் படலையைத் தட்டாதவரை இந்த நோய்த் துன்பங்களை, மரணங்களை கொண்டாடும் மனநிலை ஒருவகை மனித நேயத்திற்கு எதிராக மனநோயின் வெளிப்பாட்டாக தவிர வேறு எப்படி பார்க்க முடியும். இங்கு சீனப் பொருளாதாரத்தின் சரிவு நிலையைக் கண்டு தனது மனதிற்குள் சிரித்துக் கொள்ளும் மனநிலையில் சீனாவை விரும்பாத நாடுகள் இருக்குமாயின் இதனைவிட கேவலமான ஒரு நிலைப்பாடு இருக்க முடியாது.
இன்று காலை எனது யோகா வகுப்பில் என்னைத் தவிர மற்றயவர்கள் யாவரும்(சிலர் மௌனம் மூலம் ஆமோதித்தனர்) இதே மனநிலையைக் கொண்டிருந்தது எனக்கு ரொம்பவும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், கவலையும் ஏற்படுத்தியிருந்து. அதுவும் இதில் அனேகர் தமது 50 களை கடந்தவர்கள். பிள்ளை குட்டிகளைக் கண்டு தற்போது வசதி வாய்புகளுடன் வாழும் மத்தியதர மேற்தட்டு வர்க்கத்தினர். ஓரளவிற்கு அறிவியல்? சமூகத்தினர். தமது கருத்திற்கு வலு சேர்க்க 'ராஜபக்ஷ" கதைகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.
சீன மக்களோ, சீன தேசமோ, ஏன் சீன அரசோ இந்த நோய் துன்பங்களை, மரணங்களை தாமாக தமக்குள் வரிந்து கட்டிக் கொண்டு மகிழ்ந்திருப்பவர்கள் அல்ல. அல்லது இதன் ஊற்றுவாயை வேணும் என்றே தமக்குள் உருவாக்கியவர்கள் அல்ல.
மாறாக இன்று உலகெங்கும் தமது விடாப்பிடியான உழைப்பால் பல பொருட்களையும் உற்பத்தி செய்து விநியோகம் செய்பவர்கள். அது உணவுப் பண்டங்களில் இருந்து உயர் தொழில் நுட்பக் கருவிகள் வரை. மாறாக பொருளாதார அழிவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும் மேற்குலகு போல் பிளாஸ்ரிக் அரிசியை ஏற்றுமதி செய்பவர்கள் அல்ல.

கவிஞர் அம்பி 17.02.2020 இல் அகவை 91 இல் காலடி எடுத்து வைக்கிறார்.

.


சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் ஈழத்தின் மூத்த ஆளுமை கவிஞர் அம்பி 17.02.2020 இல் அகவை 91 இல் காலடி எடுத்து வைக்கிறார். அவரை மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு வருகை தந்த எழுத்தாளர் லெ,முருகபூபதி அண்ணாவுடன் இன்று சந்தித்தோம். 
கவிஞர் அம்பியின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது பற்றிய பேச்சு வ்ந்த போது 2004 இல் கன்பராவில் நடந்த எழுத்தாளர் விழாவில் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்ததைப் பேசிய போது நினைவில் வைத்து ஆட்களைக் குறிப்பிட்டார். முருகபூபதி அவர்களின் "இலங்கையில் பாரதி" நூலை அம்பி அவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கினார். அம்பி தனது "கொஞ்சும் தமிழ்" நூலை எனக்குத் தரும் போது மறவாமல் பெயரை ஞாபகம் வைத்து கானா பிரபாவுக்கு என்று எழுதி ஆச்சரியப்படுத்தினார்.

கவிஞர் அம்பி ஐயா நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறோம்.
எழுத்தாளர் லெ.முருகபதி, கவிஞர் அம்பியோடு நிகழ்த்திய உரையாடலின் சிறு பகுதியோடு, படங்களையும் இத்தால் பகிர்கிறேன்.


அமரத்துவம் எய்திய “கலைவளன்“ சிசு. நாகேந்திரன் அய்யாவுக்கு அஞ்சலி

.

   கல்வி நிதியத்தின் உறுப்பினர் அமரத்துவம் எய்திய   “கலைவளன்“ சிசு. நாகேந்திரன் அய்யாவுக்கு அஞ்சலி


                             
       இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில்  கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மெல்பனை தளமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நீண்ட கால உறுப்பினரான அன்பர் கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்கள் சிட்னியில் கடந்த திங்கட் கிழமை மறைந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து எமது நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது கல்வி  நிதியம்  இலங்கையில் நீடித்த உள்நாட்டுப் போரில் தமது தந்தையை அல்லது குடும்பத்தலைவரை இழந்து  வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு முதல் உதவி வழங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
இந்த அமைப்பில் , இதன் தொடக்க காலத்திலிருந்து இற்றைவரையில் இணைந்திருந்தவர் சிசு நாகேந்திரன் அய்யா அவர்கள். இந்த நிதியத்தின் ஊடாக சில மாணவர்களுக்கு தங்கு தடையின்றி உதவி வந்தவர் அய்யா.

கொரோனா வைரஸ் பற்றி சீனாவின் பணிவான வேண்டுதல்

.Edit profile picture


Tube tamilmurasu
https://www.youtube.com/channel/UC9x04iSiKxbLBQ7YC5wf57g


மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 23 - முருகபூபதி முருகபூபதி

.அபிதா வீதிக்கு இறங்கி நடந்துகொண்டிருந்தபோது, அவள் வேலைசெய்யும் வீட்டைப்பற்றி   நன்கு தெரிந்தவர்கள் சிலர் அவளைக்  கடந்து , அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச்சென்றனர்.
அவர்களில் ஒருத்தி, தனது மகள் போன்ற தோற்றமுள்ள யுவதியிடம்  “ அது,  ஜீவிகா வீட்டில் வேலைக்கிருப்பவள்தானே..?  “ என்று தனக்குத் தெரிந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
 “ யார்… எங்கே  வேலைக்கிருந்தால் , உங்களுக்கு என்னம்மா..? பேசாமல் வாங்க.. “
அவர்கள் மெதுவாகப்பேசிக்கொண்டு சென்றது அபிதாவுக்கு தெளிவாகக் கேட்டது. அபிதாவுக்கு காது மிகவும் கூர்மை. சின்னவயதில் வீட்டில் அவளை எலிக்காது என்றும் அழைப்பார்கள். எலிகளுக்கு பூனையின் அரவம் நன்கு கேட்குமாம் என்பது அபிதாவுக்கு பின்னர்தான் தெரியவந்தது.
அந்தப்பெண்ணின் சந்தேகத்திற்கு தான் அன்று வெளியே வரும்போது  அணிந்திருக்கும் ரோஸ் கலர் சாரியும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைக்காரிகள் சாரி அணிவது தவறா!?  அபிதா தனக்குள் சிரித்தவாறு விரைந்து நடந்தாள்.

வீதியோரத்தில் இரண்டு தெருநாய்கள், ஒரு வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கழிவு பேக்குகளை பாகம் பிரிப்பதற்கு சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
மாநகர சபை சுத்திகரிப்பு வாகனம் வருவதற்கு தாமதமானால், நாய்களும், பூனைகளும்,  காகங்களும் அழுக்கு கழிவுகளுக்காக போர்க்களத்தில் இறங்கிவிடும்.


குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி

.

சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி


தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை, புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை அவை.
அந்தப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த உணர்வுகள் சமகால வாழ்வில் பிரதிபலிப்பதுபோல் ஒரு சிறுகதை எழுதுங்களேன். உலகில் எந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்
 உங்களுக்கு உதவ 25 சிறந்த சங்கப்பாடல்களை, அவற்றின் விளக்கத்தோடு www.konrai.org/kumudam என்ற இணைய தளத்தில் கொடுத்துள்ளோம்
போட்டிக்கு வரும் கதைகளில் சிறந்தவற்றைத் தமிழ்ச்சான்றோரைக் கொண்ட நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். அவை குமுதத்தில் பிரசுரமாகும்.
சிறந்த சிறுகதைக்கு முதல்பரிசாக
ரூ 3 லட்சம்
இரண்டாவது சிறந்த கதைக்கு
ரூ 2 லட்சம்
மூன்றாவது சிறந்த கதைக்கு
ரூ 1 லட்சம்
மேலும் 15 சிறுகதைகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம்
பரிசாகக் காத்திருக்கின்றன
சிறுகதைகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31 2020  

மகிமை பொருந்திய மகா சிவராத்திரி - வசுந்தரா பகீரதன்

.


சைவசமயத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் முழுமுதற் கடவுளாக சிவபெருமானையே வழிபடுவர். சிவனே முதற் கடவுள். இறைவன் ஒன்றானவன். உருவில் இரண்டானவன் உமாதேவியாரை தன் இடப்பக்கத்திலே கொண்டவர்.  தன்னுடலில் சரிபாதியை தன்தேவிக்கு தந்ததால் சிவனை அர்த்தநாரீஸ்வரர் என்றும் கூறுவர்.
சிவபெருமானின் முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் மேன்மையான விரதமாகும். மாசி மாதத்தில் வருகின்ற சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிவராத்திரி தினமாகும். சிவராத்தியில் முறைப்படி விரதமிருந்து சிவனை வணங்கியவர்களுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அவர்களைப் பீடித்திருக்கும் பாவங்களும் விலகியோடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
உலகமெங்கும் உள்ள ஆலயங்கள் யாவற்றிலும் இந்த சிவராத்திரி தினம் முக்கியத்துவம் பெறும். எல்லா ஆலயங்களிலும் இரவுமுழுவதும் சிவமந்திரங்களும் வேத பாராயணங்களும் ஓதப்படும்.
பொதுவாக விரதமிருப்பவர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் விரதம் எந்தவிதத் தடையுமின்றி நிறைவேறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வார்கள். எவ்வாறு கோவிலில் திருவிழாக்கள்ää மற்றும் உற்சவங்கள் யாவும் எந்தவித தடையுமின்றி நடைபெறவேண்டும் என முதலில் பிள்ளையாரை வேண்டிக்கொள்வார்கள். அதுபோல எந்தவிரதத்தையும் மேற்கொள்ளும்போது முதலில் பிள்ளையாரிடம் அந்த விரதம் தடையின்றி நிறைவேறவேண்டும் என வேண்டிக்கொண்டே விரதத்தை ஆரம்பிப்பார்கள்.


தமிழ் விடுதலை ஆகட்டும் ! - சி. ஜெயபாரதன், கனடா

.


புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …
சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!
மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)
தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)

சமூக அக்கறைக்கு புத்தக வாசிப்பே அடித்தளமிடும்

.

நூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு


வந்தவாசி.09. வந்தவாசியை அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய குக்கூவென...’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை
இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும்
படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார்.
வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும்
இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப்
புத்தகத்தில் இடம்பெறுவதற்கான குக்கூவென...’  4.8 செ.மீ உயரமும், 4.5 செ.மீ அகலமும் கொண்ட
மிகச் சிறிய ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழா வந்தவாசி நூலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் .மு.உசேன் தலைமையேற்றார்.நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்நூலினை மேனாள் மருத்துவ இணை இயக்குநரும்
ரோட்டரி சங்க சமுதாய சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ்.குமார் வெளியிட,தொழிலதிபர் இரா.சிவக்குமார் மற்றும் ரோட்டரி சங்கப் பயிற்சியாளர் ..இஷாக் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர்நூலை வெளியிட்ட டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “வரலாற்றுப் பெருமையுடைய
வந்தவாசியில் இன்றைக்கு படைப்பிலக்கியத்தில் பல சாதனைகளைப் படைக்கும் எழுத்தாளர்களும்
கவிஞர்களும் இருப்பது பெருமையளிக்கிறதுபுத்தகங்கள் எழுதுவதோடு நில்லாமல் தமிழகம் அறிந்த
பேச்சாளர்களாகவும் பயிற்சியாளராகவும் அவர்கள் வளர்ந்து வருகிறார்கள்செல்பேசிதொலைக்காட்சிகளில்
அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்துஅன்றாடம் செய்தித்தாட்களைப் படிக்க வேண்டும்நாட்டு நடப்புகளை
அறிந்துகொள்ள வேண்டும்நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்இவையே ஒரு மனிதனின்
சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்.கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 40-க்கும் மேற்பட்ட கதைகட்டுரைகவிதை நூல்களை எழுதியிருந்தாலும்
இந்த நாள் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத்தக்க மிகச் சிறிய கையடக்க நூலாக வெளிவந்துள்ளது