.
கம்பன் விழாவின் இறுதிநாள் (05/11/2017) மாலை நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல், மங்கல ஆரத்தி, கடவுள் வாழ்த்து , தொடக்கவுரை என்பவற்றுடன் மங்கலமாக ஆரம்பமாகி, அடுத்த நிகழ்வாக கலை தெரி அரங்கத்தில் வில்லுப்பாட்டு நிகழ்வு ஆரம்பமானது. திரை திறக்கப்பட்ட்தும், மேடையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் "தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட வந்தோம்" என வில்லுப்பாட்டினை ஆரம்பித்தனர்.
கம்ப ராமாயணத்தில், கிட் கிந்தா காண்டத்தில், நட்புக்கோள் படலத்தில், இராமனிடம் சுக்கிரீவன் சரணடைந்த நிகழ்வை "உன்னைச் சரணடைந்தேன்" என்ற தலைப்பில் தொடர போவதாக கூறினர் கம்பன் கழக உயர்தர வகுப்பு மாணவர்கள். இரண்டு மங்கைகள் கதை சொல்பவர்களாகவும், இரண்டு ஆண்கள் நகைச் சுவையுடன் கேள்வி கேட்பவர்களாகவும், முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே அழகிய வில்லு வைக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் மிருதங்கமும், அதனை வாசிப்பவரும், மறுபக்கத்தில் ஹார்மோனியமும், அதனை இசைப்பவரும் இருந்தனர். பின்வரிசையில் நடுவில் பாடகர்களும் , ஒரு முனையில் கடமும் வாசிப்பவரும், மறு முனையில் மோர்சிங்க் இசைப்பவரும் என வில்லிசைக் குழுவினர் மேடையை அலங்கரித்தனர்.
காப்புப் பாடலின் பின், வந்திருந்த அனைவரையும் வணக்கம் கூறி, வரவேற்று, சொற்பிழை, பொருட் பிழை ஏற்படுமிடத்து, தங்களை மன்னிக்குமாறு சான்றோரிடம் வேண்டி, அவையடக்கம் கூறி, கதைக்குள் சென்றனர். கிட் கிந்தை நாட்டின் வளம், வாலி, சுக்கிரீவனின் பிறப்பு,