புத்தாண்டு வாழ்த்துக்கள்

.
              வருக வருக புத்தாண்டே 2011


மலர இருக்கும் புத்தாண்டில் அனைத்து மக்களும் மகிழ்வோடும் சுதந்திரமாகவும் வாழ தமிழ் முரசு ஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது.

"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"                                                                 சிகாகோ பாஸ்கர் -

"பாலனவன் பிறந்ததனால் பாவங்கள் பறந்தோடும்"
பைபிளது வழிகாட்ட வருடங்கள் காத்திருந்தோம்
கடல்கடந்த பலமதங்கள் கண்கலங்கி நின்றிடவே
உலகெங்கும் பாவங்கள் பலவாகப் பெருகியதேன்?

சொல்லுக் கடங்காத கொடுமைகள் தலைதூக்க
பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச
தள்ளாடும் மனித இனம் தவறான வழி போக
இன்றிங்கு உன்கருணை இல்லாததேன் தேவா?

கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு: ஸ்ரீதரன்

.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.


1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 48


.

கடல் சீற்றத்தால் பாறையில் மோதி உடைந்து தத்தளிக்கும் அகதிகள் படகுஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அருகே பாறைகளில் மோதி அகதிகளின் படகு நொறுங்கி நீரில் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.
இரான், இராக் மற்றும் குர்து அகதிகளை ஏற்றிய படகு சீற்றம் கொண்ட கடலில் கடந்த புதன்கிழமையன்று விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டவர்களில் 30 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
இரானியர்கள், இராக்கியர்கள் மற்றும் குர்து இனத்தவர்களுமாக அந்தப் படகில் 90 பேர் வரை இருந்திருக்கலாம் என்று ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.
ஆஸ்ரேலியக் கரைகளுக்கு அகதிகளை கடத்தி வருபவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான டொனி அபொட் கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகே கடலில் நீரின் அடியில் உள்ள குகைகளில் பொலிஸ் சுழியோடிகள் தேடுதல் நடத்திவரும் நிலையில் இந்த தகவலை ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
Nanri- BBC

ஸுப்ரபாதம் - பாரதியார் பிறந்த நாள் சிறுகதை -

.
டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை - மலர்மன்னன்


கவிஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’
அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில் மடுவின் உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில் மூழ்கி முக்குளிக்கும் சுகானுபவ ருசியைக் கவிஞருக்கு முதன் முதலில் ஊட்டியது அவர் பாசம் பொங்கப் பொங்கக் ‘குவளைக் கண்ணன்’ என்று குறிப்பிடுகிற பொல்லாத குவளையூர் கிருஷ்ணமாச்சாரி தான்..

ஸ்ரீ ஆண்டாள் வைபவம் (தொடர்ச்சி)

.


சென்ற வாரம் கோதையின் பிறந்த வைபவத்தை பற்றி பார்த்தோம். இந்த வாரம் உன்னத கோதையின் பக்தியும், பகவான் மீது கொண்ட அன்பும் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.
துளசி  மாடத்தில் அவதரித்த கோதையை விஷ்ணுசித்தர் எடுத்து பாராட்டி சீராட்டி கிருஷ்ண கதைகளை ஊட்டி வளர்த்தார் என்று பார்த்தோம் . கோதையின்  கிருஷ்ண பக்திக்கு காரணம் வேறு யாராக இருக்க முடியும், அந்த விஷ்ணு சித்தர்(பெரியாழ்வார்)  பற்றி சில வாரங்களுக்கு முன்பே பார்த்தோம், பகவனுக்கே கண் திருஷ்டி பட்துவிடுமோ  என்று "பல்லாண்டு பல்லாண்டு " என்று பிரபந்த பாசுரம் பாடியவர் ஆயிற்றே! அவருடைய புதல்வி கேட்க வேண்டுமா!

“இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார்.
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட“ஈழத்துப் பூராடனார்” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கலாநிதி கே. ரி. இராஜகோபால் கடந்த 20ம் திகதி கனடா மிசிசாகா நகரில் காலமானார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையை 1995ம் ஆண்டு ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு அச்சாணிகளாய்த் திகழ்ந்தவர்களுள் அறிஞர் ஈழத்துப் பூராடனாரும் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தி;ன் காப்பாளராக பணியாற்றி பல சேவைகளைச் செய்தவர் இவர் என்பதும் முக்கியமாக கருதப்பட வேண்டியதாகும்.

நூற்றுக்கும் அதிமான நூல்களை எழுதியுள்ள “இலக்கியமணி” ஈழத்துப் பூராடனார் அவர்கள் தமிழ் இலக்கியம் வரலாறு மற்றும் கிறிஸ்த்தவ இலக்கியம் போன்ற நூல்களைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகம் இவரை அங்கு அழைத்து கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியமை கனடா வாழ் தமிழர்களுக்கு பெருமையை தேடித் தந்த கௌரவம் என்பதும் கவனிக்கத்தக்கது.

தனது 82 வது காலமான கலாநிதி ஈழத்துப் பூராடனார் அவர்களின் மறைவு குறித்து சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் 


Nanri: tamilwin.com

கம்பன் காட்டும் விதி

.

                                                                                   எஸ் ஜெயலட்சுமி

மனிதர்கள் தாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்த போதிலும் தாங்கள் நினைத்தபடி ஒன்று நடக்க வில்லை யென்றால், “எல்லாம் என் தலை விதி” என்று நொந்து கொள்வ தைப் பார்க்கிறோம்.

”நமது வாழ்நாளில் நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகிறது” என்கிறான் கதே.

தலையெழுத்தும் நம் கண் ணுக்குத் தெரியவில்லை. தலை விதியும் கண்ணுக்குப் புலனாவதில்லை. நல்ல விஷயங்கள் நம் முயற்சி யில்லாமலே, எதிர்பாராமல் நடக்கும் பொழுது நாம் தலையெழுத்து என்றோ தலைவிதி என்றோ சொல்வதில்லை. மாறாகத் துன்பம் வந்தபோது விதி என்கிறோம்.

அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கிறார் லேகா

.


பவர்’ என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கிறார் லேகா வாஷிங்டன். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘வ குவார்ட்டர் கட்டிங்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் ப்ளஸ் டூ மாணவியாக நடித்துள்ளேன். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நான் இரண்டு பேரை சந்தித்த பிறகு எப்படி மாறுகிறேன் என்பது கதை. இந்தியில் நடித்துள்ள ‘பீட்டர் கயா காம்ஸே’ இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்கிறார்கள். ‘பீட்டர் கயா காம்ஸே’ படத்தில் எனது நடிப்பை கேள்விபட்டு ராஜ்குமார் சந்தோஷி ‘பவர்’ படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

நல்லூர் பதியில் நடனமாட ஆசை

.

சர்வதேசப் புகழ்பெற்ற நடனக்கலைஞர், நடனநெறியாள்கையாளர் ரவிபந்து வித்யாபதியின் ஆசைகள், அனுபவங்கள், கற்றவைகள் ஆகியவற்றை கலைக்கேசரி உடன் பகிர்ந்து கொள்கிறார்.நாட்டியம் மனிதனின் உணர்வுகளை, அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்படுகின்றது. கிறிஸ்துவிற்கு முன்பு இந்தியாவில் தோற்றம் பெற்ற நாட்டியக்கலைகள் அழகியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறன. நாட்டியக் கலையில் ராகம், பாவம், தாளம் என்ற மூன்று அம்சங்களை அவதானிக்கலாம்.

தமிழ் மொழி பெயர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

. விக்ரோறியப் பல்லினக்கலாச்சாரச் சபையின் கோரிக்கைக்கிணங்க விக்ரோறிய மானில அரசினால் தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான பட்டயப் புலமைப்பரிசில்(diploma scholarship)அறிவிக்கப்பட்டு மெல்பேர்ண் RMIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்றமை அனைவரும் அறிந்ததே.


தரமான, தகுதிபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும்நோக்கத்துடனும், தமிழ்ச்சமூகத்தின் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கு முகமாகவும் அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக வழங்கப்பட்ட புலமைப்பரிசில் கற்கைநெறி தற்போது நிறைவு பெற்று 4 பெண்களும் 6 ஆண்களுமாகப் 10 தமிழர்கள் DIPLOMA வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NAATI என்று சுருக்கமாகக் கூறப்படுகின்ற NATIONAL ACCREDITATION AUTHORITY FOR TRANSLATORS AND INTERPRETERSஇற்கான தகைமையையும் பெற்றிருக்கிறார்கள். இவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:-

1) A. அமிர்தநேசன்
2) R. அருள்நாவலன்
3) ஒன்னப்பன் அசோகராஜன்
4) லக்க்ஷ்மி பாலகிருக்ஷ்ணன்
5) பத்மபிரியதர்க்ஷினி குகன்
6) றஜனி சோமசுந்தரம்
7) சாந்தினி புவனேந்திரராஜா
8) க்ஷண் குமரன்
9) நடேசன் சுந்தரேசன்
10) முகமது சலீம்
.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் விசாரணை

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்திய பாதாள உலகக் குழுவான தாவூத் இப்ராகிமின் குழு உறுப்பினரிடம் மும்பாய் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மே 8 ம் திகதி தாவூத் இப்ராகிம், குழு உறுப்பினர் மிர்சா முகைதீன்பெய்க் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மலை ஏறுதல்

.

ஒரு தொழிலதிபர் ஜென் குருநாதரைப் பார்க்க வந்திருந்தார். அவர் முகத்தில் பெரும் குழப்பம்.

‘கொஞ்ச நாளாவே எனக்கு ஒரு பெரிய கவலை சாமி’ என்று அவர் பேச ஆரம்பித்தார். ‘என் பையன் ப்ளஸ் டூவிலே நல்ல மார்க் வாங்கியிருக்கான். அவனை டாக்டருக்குப் படிக்கவைக்கணும்ன்னு எனக்கு ஆசை. அதுக்காக எவ்வளவு செலவானாலும் கொடுக்கத் தயாரா இருக்கேன்!’

தமிழ்ப் பரீட்சையில் 24 மாணவர்கள்

.

செல்வன் அஸ்வின் சண்முகலிங்கம் நியூசவுத்வேல்ஸ் மானிலத்தில் 91 புள்ளிகளைப்பெற்று தமிழ்ப் பாடத்திற்கான அதி கூடியபுள்ளிகளை பெற்றவர் 

உயர்தர வகுப்புக்கான பரீட்சை முடிவுகள் சென்றவாரம் வெளிவந்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ்சில் தமிழை ஒரு பாடமாக உயர்வகுப்பில் எடுத்து சித்தியடைந்தது மட்டுமல்லாது 90இற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்று பாண்ட் 6 இல் தேறியுள்ளார்கள் தமிழ் மாணவர்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
செல்வன் பிரணவன் சிவக்குமார்


                                                                                
                                                                                               செல்வி அஞ்சனா பாஸ்கரன் 

வன்னி நிலம் கண்ணீர் வடிக்கிறது. செ.பாஸ்கரன்

.

வன்னிநிலமெங்கும் வாழ்விழந்த பெண்கள்
தேச மீட்பிற்காய் தேடிப்பிடித்ததினால்
பக்குவப் பட்டதும் படாததுமாய்
அவசரக் கல்யாணம்
குழந்தைகளே குழந்தைக்கு தாயான பெரும் துயரம்
காலிழந்து கையிழந்து கட்டியவன்தனை இழந்து
வாழ்க்கை வெறுமையிலே வாழுகின்ற பரிதாபம்
யார் எவரைத் தேற்றுவது.
சோகக் கதைகேட்டால் சொட்டுகின்ற கண்ணீரில்
வன்னி நிலம் நனைகிறது

படகில் தப்ப முயன்ற இலங்கை அகதிகள்

.
ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் உள்பட 5 பேர் கைது
நீலாங்கரை அருகே படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உள்பட 5 பேர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி கடற்கரையோரம் ஒரு வேனில் 10 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டு இருப்பதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். அடையாறு துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்


பகுதி 4

;.குறிகாட்டுவானில் கடற்படையினர் வாகன போக்குவரத்து ஒழுங்குகளையும் கார்ப்பார்க்  ஒழுங்குகளையும் பார்க்கின்றார்கள். 25 இல் இருந்து 30 கடைகள் வரை காணப்படுகின்றது. இதில் 20 கடைகள்வரை தகரத்தால் கட்டப்பட்டிருக்கும் கடைகள் பெரும்பாலான அல்லது அனைத்துக்கடைகளுமே சிங்களவர்களினால் நடாத்தப்படுகின்றன. இனிப்பு வகைகள் புளுக்கொடியல் தொதல் போன்றவைதான் அதிகமாக காணப்படுகின்றது. இன்னும் 7 கடைகள்வரை நிரந்தரக் கட்டிடங்களால் ஆன கடைகள். இதிலும் இரண்டு கடைகள் தமிழர்களின் கடைகளாகவும் மற்றயவை சிங்களவர்களாலும் நடாத்தப்படுகின்றது. இதில் ஒரு கடை புங்குடுதீவில் பிரபல வியாபாரியாக இருந்த மணியம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுடையது. நான் 83 க்கு முன்பிருந்த நிலையை பார்க்கிறேன். திருநாவுக்கரசு அவர்களின் ஒரு கடையும் இரண்டு மூன்று கடலைக்கடைகளுமே இருந்த இடம் இன்று இப்படி இருக்கிறது.
அநுத்தமா — அரவிந்த்

.
அநுத்தமா காலமாகியதை முன்னிட்டு இந்த கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது

அநுத்தமா மனம் தளர்ந்தார். அநாயாச மரணம் கிட்டவேண்டும் என்பது அவர் பிரார்த்தனை. டிசம்பர் 3 இரவு 8.44 வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், 8.45 க்குக் காலமாகிவிட்டார். கேட்ட வரம் எழுதியவருக்குக் கேட்ட வரம் கிடைத்துவிட்டது.

பரமாச்சாரியார் பாராட்டிய நாவல்! — திருப்பூர் கிருஷ்ணன்

பத்மநாபனை 12 வயதிலேயே கைப்பிடித்து புகுந்த வீடு வந்துவிட்டவர் ராஜேஸ்வரி. மாமனாருக்கு அவர் மகள் மாதிரி. மாமனாரிடம் முதல் சிறுகதையைப் படிக்கக் கொடுத்தார். தலைப்பு: ‘ஒரே ஒரு வார்த்தை’. கதையைப் படித்த மாமனார் சொன்ன ஒரே வார்த்தை: ‘பலே!’ லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்து அநுத்தமா என்ற பெயரைச் செல்ல மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டினார். அதன்பின் அநுத்தமா எழுதிக் குவிக்கலானார்.வெளிச்ச வீடு --கவிதையும் படமும்-

.
பருத்தித்துறைக் கடற்கரை
அலை மேவி கடல் கடந்து
உலகளந்த கடலோடி
திசை மயங்கப்
புகல் தேடும் கணமதில்
வழி காட்டி மனம் குளிர்விக்கும்.


திருவெம்பாவைச் சிறப்பு

.

                                                                                            பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

இது மார்கழி மாதம். திருவெம்பாவைக் காலம்.

மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள். சைவசமயத்தவர்களைப் பொறுத்தவரை உடலும் உள்ளமும் ஒருவகைத் தூய்மையை உணர்கின்ற மாதம். காரணம் அது திருவெம்பாவைக்காலம். அதிகாலைவேளையில் அயலவர்களோடும் உறவினர்களோடும் கூடி,  ஆலயத்தை நாடி, திருவெம்பாவை பாடி, பக்தியிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கியிருக்கும் மாதம். மணிவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கே ஒரு தனித்துவமான பண்பாட்டுக் கோலத்தை உருவாக்கிவிட்டது. சைவர்களின் பண்பாடாக மட்டுமன்றித் தமிழர்களின் பண்பாடாகவே அது வழங்குகின்றது, தமிழர்களிடையே இலங்குகின்றது.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்கள். அவ்வாறு கல்நெஞ்சத்தையும் கசிந்துருகவைக்கும் கனிவாக பாடல்களே திருவாசகப்பாடல்கள். அத்தகைய திருவாசகத்திற்கே மணியாக விளங்குவது திருவெம்பாவையாகும். திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.

அவுஸ்ரேலிய செய்திகள்


வியாழன், டிசம்பர் 16, 2010

கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழப்புஇலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அவுத்திரேலியாவின் கிறிஸ்மசு தீவுக்கு அருகில் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் குறைந்தது 28 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


42 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்----திலகபாமா-

ஸ்ரீ ஆண்டாள் வைபவம்


 .


சென்ற வாரம் திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தை பார்த்தோம். இந்த வாரம் ஆழ்வார்களின் கடைசி ஆழ்வாரும், பெரியாழ்வரின் செல்ல பெண்ணும் ஆன
கோதை” என்னும் “ஆண்டாளின்” மஹிமையை பற்றி காண்போம்.
பூதேவி நாச்சியார்  ஸ்ரீமன் நாராயணானிடம், ஸ்வாமி! பூலோகத்தில் தாங்கள்  யார் மீது மிக்க அன்பு கொள்வீர்?  என்று வினவினாள்.  அதர்க்கு பகவான்  மனம் மகிழ்ந்து "யார் அழிவிர்க்கு உரிய உடலில் பற்று  வைக்காமல், நம் மீது பக்தி கொண்டு   பாமாலை பாடி பூமாலை சூட்டி வணங்குகிறானோ அவன் மேல் மிக்க ப்ரீதி என்று கூறுகிறார்.

வைகுண்டம் ரங்கமந்திரம் - ஷைலஜா

.

ஸ்ரீரங்கம்!

நினைத்தாலே இனிக்கும் பெயர்!

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்வன் கேண்மினோ

என்று ஆழ்வார் பெருமான் அருளியதுபோல யார் என்ன நினைத்துக்கொண்டாலும்   சொல்லத்தான்  வேண்டும் ஆம், அரங்கன் என்றபெயரைக்கேட்கும்போது உடலில் மி(இ)ன் அலைகள்  பாய்வதை உணரமுடிவதுபோல  வேறெந்தப்பெயரும் தாக்குவதில்லைதான்!
திரும்பத்திரும்ப திருவரங்கம் போகிறாயே அலுக்கவில்லையா  என்று சிலர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் அரங்கன் புதிதாய் நம்மை  பிறக்கவைக்கிறானே !
நமக்காக  அவன் சொர்க் கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு  அதை வழிகாட்டித்தருகிறானே?

முரண் ---- சிறுகதை

.
                                                                                            -  ஸ்ரீ -ஸ்ரீஸ்ரீஸ்ரீ ச்ப்டக்ப்ப்கஹ்ஹ்க்

"ஸ்... ஆ ஆ!" மெலிதாய் கூவினாள் கவிதா.       

ஹாலில் முகச்சவரம் செய்துகொண்டிருந்த ரமேஷ், அவளது குரல் கேட்டு பதட்டமாய்ச் சமையலறைக்கு விரைந்தான்.

"என்ன ஆச்சு கவி?!"

"ஒண்ணுமில்லேப்பா, இட்லி குக்கர் திறக்கும்போது ஆவி கைல பட்டுடுச்சி" விரலை ஊதியவாறே சொன்னாள் கவிதா.

"ஹையோ, என்னம்மா இது, பார்த்து வேலை செய்யக் கூடாதா? இனிமே நீ சமையல் வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம ஒரு ஆளைப் போட்டுக்கலாம். முதல்ல கையைக் காட்டு, பர்னால் போட்டு விடறேன். சாயந்திரம் சரியாகலைன்னா டாக்டர் கிட்ட போகலாம். பரபரத்தான் ரமேஷ்.

ஷங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியன் விருது!

.


இயக்குனர் ஷங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். 

இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சென்ற பெருமைக்காக (எந்திரன் படத்திற்கு) இயக்குனர் ஷங்கருக்கு அதிக வாக்குகள் கிடைத்து, இந்த ஆண்டின் பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருது கிடைத்தது.

உண்மையான விசா இல்லாத இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவினுள் பிரவேசம்; தடுக்கப்பட்டுள்ளது

மிகவும் அபாயகரமான படகுகளில் தமது உயிர்களையும் ஜீவ சேமிப்புக்களையும் பணயம் வைத்து பயணிக்க மனிதக் கடத்தற்காரர்கள் இலங்கையரை பிழையாக வழிநடத்துகின்றனர்.

உலகச் செய்தி

.
"விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு லேப்-டாப் வசதி இல்லை : ஆனால், கைதிகள் அவருக்கு முழு ஆதரவு
லண்டன் : "விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு லேப்-டாப் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவை மறுக்கப்பட்டதாக, அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அசாஞ்ச் தற்போது, லண்டனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள "வேண்ட்ஸ்வொர்த்' சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் தேதி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வரும் 14ம் தேதி மீண்டும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

வெளிச்சம் --அ. அத்துலிங்கம்

.


சிலர் செல்பேசியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் பேனாவை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் சாவியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். நான் ஒருமுறை என் காரை தொலைத்தேன்.
அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.

செல்வி-------- சிறுகதை எம்.ஆர்.நடராஜ‎ன்-

.
இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட்.

துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும்.

ATBC மெல்பேர்ண் கலையக ஒன்றுகூடல் - சௌந்தரி -

.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2010 ம் ஆண்டுக்கான மெல்பேர்ண் கலையக ஒன்றுகூடலும் இராப்போசனமும் சனிக்கிழமை மார்கழி 4 ம் திகதி மெல்பேர்ண் Preston மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த நேயர்களோடும் ஆதரவாளர்கள் அபிமானிகளோடும் அந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொள்வதற்கு சிட்னியில் இருந்து பல அறிவிப்பாளர்கள் ஒன்றாக சென்றிருந்தோம். எமது பயணம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பெருமைப்படக்கூடியதாகவும் அமைந்திருந்தது.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
யாழ் நோக்கி பிரயாணிக்கும் பிரயாணிகள் தாண்டிக்குளத்தில் சோதனையிடப்படுகின்றார்கள். நாங்கள் தாண்டிக்குளத்தில் காரை நிறுத்தியபோது பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள் இராணுவத்தினர். உடுப்புக்கள் என்றதும். ஓகே யண்ட மாத்தயா என்றார்கள். அந்த இடத்தில் மட்டும் ஏ9 வீதியால் போக விடாது பைபாஸ் போன்று முகாமின் பின்புறமாக இருக்கும் மண் றோட்டால் வந்து மீண்டும் ஓ9 வீதியில் ஏறவேண்டும்.ஏறக்குறைய ஒரு 500 மீற்றர் தூரம் இருக்கும் என நினைக்கிறேன்


ஆன்மிகம்

.


சென்ற வாரம் திருப்பா ண் ஆழ்வாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் அடுத்த ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீமன் நாராயணன் கோவில் கொண்டு இருக்கும் “திருவாலி என்னும் புனித தலத்திர்க்கு அருகில் உள்ள “திருக் குறையலூர்என்னும் ஊரில் கள்ளர் மரபின் தலைவனும், சிவபிரானின் பக்தனும் ஆன ஆலிநாடாருக்கும் அவரது துணைவிக்கும் அருமை புதல்வானாய் திரு மங்கை ஆழ்வார் அவதரித்தார்.

பேஸ்புக் ஸ்தாபகரின் கொடை உள்ளம்
பிரபல சமூகவலையமைப்பான பேஸ்புக்கின் ஸ்தாபகரும், குறுகிய காலத்தில் கோடிகளை தொட்டவருமான மார்க் ஷூக்கர்பேர்க் அவரது சொத்தில் பெரும் பகுதியினை தர்ம காரியங்களுக்கு வழங்கவதற்கு இணங்கியுள்ளார். 

26 வயதான ஷூக்கர் பேர்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம்

.

ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் கோலாகலமாக நடந்தது. ரஜினி-லதா திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.

சீமான் விடுதலை

.

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்டார் சீமான். சிறையிலிருந்து வெளியே வந்தவரை வரவேற்க அவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்களும், டைரக்டர் பாலா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் திரண்டிருந்தார்கள். பட்டாசு வெடிக்க, தொண்டர்களின் பரவசக்குரல் முழங்க சிறையிலிருந்து வெளியே வந்தார் சீமான்.

த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன்

.

த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் விஜய். ஆனால் அது அதிரடி அல்ல. வழ வழா!
நான் பெரிதும் மரியாதை வைத்திருக்கிற இயக்குனர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனைதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய். பேச்சோடு பேச்சாக அவர் சொன்ன விஷயம், நம்மை போல எக்ஸ்க்ளுசிவ் செய்திகளை வெளியிடும் அவசரக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

மைனா விமர்சனம்

.
காட்டில் பூவாய் மலரும் ஒரு காதல், நாட்டில் எப்படி கசக்கி எறியப்படுகிறது என்கிற கதைதான் மைனா. ஹீரோயின் மைனாவின் குடும்பம் அநாதையாக நிற்கும்போது உதவிக்காக நீள்கிறது ஹீரோ சுருளியின் கரம். பள்ளி பருவத்து பரிவு, பருவ காலத்தில் காதலாகிறது. திருமணக் காலத்தில் மைனாவின் அம்மா, படித்த பிள்ளைக்கு படித்த பையனை தேடுகிறார். விளைவு சுருளி வெகுண்டு எழ, காட்டுக்குள் காக்கி சட்டை கால் பதிக்கிறது. காவல்துறையும், காதலும் துரத்த காட்டுக்குள் ஓடுகிறது காதலும், காவலும். ஒன்றை விட்டு ஒன்று பிரிய முடியாத சூழ்நிலையில் அவர்களுக்குள் அன்பும், பரிவும், காப்பாற்றுதலும், நன்றியுமான உணர்வுகள் மாறி மாறி வருகிறது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான தீர்வு என்ற பாடத்தை காடு கற்றுக் கொடுத்து நாட்டுக்கு அனுப்புகிறது. ஆனால் நாடு அதை புரிந்து கொள்ளாமல் காதலர்களை கசக்கிப் போடுகிறது. 

சிவநாயகம் காலமாகிவிட்டார். .

.

ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 


வது அகவையில் 29.11.2010ல் காலமாகிவிட்டார்.
இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது.


எனது இலங்கைப் பயணம் .

.
                                                                                       செ.பாஸ்கரன்

இடத்தை விட்டு நகர்ந்து ஏ9 பாதையில் செல்லும்போது இன்னுமொரு குடிசையின் முன் நிறுத்துகின்றேன். இதுவும் இராணுவத்தின் அருகிலேயே இருக்கிறது. குடிசை என்ற பெயரில் மரநிழலிலே பல பொருட்களை கலந்து போடப்பட்டிருக்கும் ஒரு தடுப்புத்தான். கற்கால மனிதர்களின் வாழ்நிலை ஏனோ என் மனதில் தோன்றி மறைகிறது.


கோழைச் சோழன்....! சிறுகதை..

.
                                                                                    சாண்டில்யன்
                                          கோழைச் சோழன்தித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப்  பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை ஆண்ட தித்தன் அன்று 'நாம் என் இந்தப் பிறவி எடுத்தோம்?' என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். 

நிசப்த இரவுகள் - சங்கர்

.
ழுது அழுது நனைந்த கன்னங்கள்
உலர்த்தி வைத்த விழியோரங்கள்
ஒட்டி வைத்த புன்னகையென போலியாய்
தினம் தினம் நீள்கிறது இரவுகள்
தழ் சொல்லாத பிரியங்கள்
உன் விழிகளில் கசிகிறது கண்ணீராய்...
விம்மி விம்மி நிசப்தம் கிழிக்கும்
சிறு அழுகை சத்தம் என்னை
முழுவதுமாய் சிறை பிடிக்கிறது .

நூல்வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்

.
மெல்பேணில் நடைபெற்ற
நூல்வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்
                                                                                               தேவி திருமுருகன்

மனிதநேய எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய “வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்”, மலேசிய எழுத்தாளர் திருமதி. மாக்கிறட் செல்லத்துரை எழுதிய “போதும் உங்கள் ஜாலமே” மற்றும் “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே” ஆகிய மூன்று நூல்களினதும் வெளியீட்டுவிழாவும் குறும்பட விழாவும் கடந்த நொவம்பர்மாதம் 20 ஆம் திகதி மெல்பேணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.


உலகக் கோப்பையை நடாத்தும் உரிமையை இழந்தது ஒஸ்ரேலியா


.
கால்பந்து கால்பந்து உலகக் கோப்பையை நடாத்தும் உரிமையை இழந்தது ஒஸ்ரேலியா. வாக்களிப்பின் போது ஒஸ்ரேலியா ஒரு வாக்கை மட்டுமே பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.இதன் மூலம் ஒஸ்ரேலியா மிக விசனம் அடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பை 2018 ஆம் ஆண்டில்உருசியாவும்இ 2022 ஆம் ஆண்டில் கத்தாரும் முதல் முறையாக பெற்றுள்ளன.

Srilanka :Witness to History -நூல் விமர்சனம்

.
                                                                                                                          பராசக்தி சுந்தரலிங்கம்


'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்ற ஆங்கில நூலைப் பார்த்தபோது பல எண்ணங்கள் மனதிலே வந்தன.

எழுபதுகளிலே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கில வார இதழான Saturday Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்து வாசகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்ற " Saturday Review சிவநாயகம்" என்று அன்போடு அழைக்கப்பட்ட முதுபெரும் பத்திரிகையாளர் ஒருவரால் இது எழுதப்பட்டுள்ளது.
திருப்பாண் ஆழ்வார்

.
இந்த வாரம் அடுத்த ஆழ்வாரான திருப்பாண் ஆழ்வாரை பற்றி காண்போம். இவர் பகவானின் ஸ்ரீ வத்ஸதின் அம்சம் ஆவார். இவர் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு ஒன்றின் மூலமாக பாணரின் பக்தியை நாம் புரிந்து கொள்ளலாம்.
இவர் அரங்க நகரமாம் ஸ்ரீ ரங்கம் என்று அழைக்கப்படும் ஊர் அருகில் உள்ள உறையூர் என்னும் சிற்றூரில் கலியுகம் 342 ஆம் ஆண்டு செந்நெல் வயலுக்கு இடையில் அவதரித்தார். அப்போது அந்த வழியே சென்ற பாணர் குலத்தை சேர்ந்த பக்தன் ஒருவன் குழந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டிற்க்கு எடுத்து சென்றான். பகவத் அம்சமாக தோன்றிய பாணர் சிறு வயதிலேயே சகலகலைகளில் வல்லாவறாக திகழ்ந்தார். பகவான் அந்த ஸ்ரீ ரங்கநாதன் மீது தீராத பக்தியும் அன்பும்  கொண்டு இருந்தார்.
இவர் தினம்தோறும் வீணாகாணத்தோடு பகவானை பாடிய வண்ணம் பக்தி பெருவெள்ளத்தில் மூழ்கி இருப்பார்.

படித்து சுவைத்தது

.


ஒரு புத்துணர்ச்சிக்காக, கொஞ்சம் மாறுதலுக்காகவும் கவிதை 

முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதைகொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி 
ருக்கிறார்கள்  என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள்  பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?
மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

.
Melb 2010 Maveerar Naal 17.jpgஅவுஸ்திரேலியாவின் மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள், விக்ரோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மிகவும் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை(28.11.2010) நான்கு மணிக்கு ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் வயதுவேறுபாடின்றி எண்ணூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.  இவர்களுடன் அவுஸ்திரேலியா பல்லின சமூகத்து பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

கருணாநிதி கணக்கு காட்டியிருப்பது சிறந்த நகைச்சுவை:

.
கருணாநிதி கணக்கு காட்டியிருப்பது சிறந்த நகைச்சுவை: ஜெயலலிதா
jeyalalithaென்னை, டிச.3: முதல்வர் கருணாநிதி தனது சொத்து குறித்து கணக்கு காட்டியிருப்பது கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக  எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.  இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.  இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சினிமா

.
  • அக்ஷராவின் காதல்...அப்பா கமல் செய்யப் போவதென்ன?
  • மன்மதன் அம்பு 17 டிசம்பர் அன்று வெள்ளித்திரையில்
  • தமிழ் நடிகர்களை தரக்குறைவாக பேசவில்லை: ஆர்யா விளக்கம்

 அக்ஷராவின் காதல்...அப்பா கமல் செய்யப் போவதென்ன?

வீணைக்கு பிறந்தது விறகாகுமா? யானைக்கு பிறந்தது எறும்பாகுமா? நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் கலையுலகத்தையே வியக்க வைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு காதல் மன்னன் என்றொரு பட்டமும் உண்டல்லவா? அவரது மகள்கள் இருவரும் அப்பாவின் கலையுலக வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் சேர்த்து வியத்தகு வாரிசுகளாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

நியுசிலாந்து சுரங்க வெடிவிபத்தில் 29பேர் பலி

.

நியுசிலாந்து நிலக்கரிச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 29பேர் பலியாகியுள்ளனர்.

புதன்கிழமை  கிரேமவுத் என்ற இடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகேயுள்ள நிலக்கரிச்சுரங்கம் ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்பணியாளர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும் இங்கு வேலை செய்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.


எனது இலங்கைப் பயணம்

.
                                                                                         செ.பாஸ்கரன்

எல்லோரும் போய் வருகின்றார்கள் பல ஆண்டுகளுக்குப்பின்பு வடக்கு நோக்கி செல்லும் பயணம் என் மனதிலும் துளிர் விட்டது. அரசியல் கட்சிகளும் அதன்பின் ஆயுதக் குழுக்களும் ஆட்சிபுரிந்த பிரதேசம் இன்று ஆமிக்காரர்கள்கையில். ஆனையிறவில் இலங்காபுரியை ஆமிக்காரர்கள் தாங்கி நிற்கும் சிலை காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருப்பதை பத்திரிகைகளில் பார்த்தபோது. ராணுவத்தின் கைக்குள்தான் இலங்கை போகப்போகின்றது என்பதற்கான தீர்க்க தரிசனம்தானோ என என் மனம் ஒரு போது எண்ணியதுண்டு அது நடவாது என்பதற்கு இன்னும் எந்த உத்தரவாதமும் யாரும் தரவில்லை. இந்த நிலையில் ஏதாவது நடப்பதற்கு முன்பு ஒருமுறை போய்விட்டு வந்து விடலாம் என்று தொடங்கிவிட்டேன் எனது பயணத்தை.

கவிதைகள்

.


                                                      சாட்சிகளேதுமற்ற மழை
                                                                                                 எம்.ரிஷான் ஷெரீப்கதவு யன்னல்களிலிருந்து
வழிகின்றன முகங்கள்
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல

கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல்


 .
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல்                                                                          
                                                                                                                    

அவுஸ்திரேலியார  நியுசிலாந்து நாடுகளில் 24 மணிநேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எட்டாவது வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் திரளான நேயர்களில் நானும் ஒருவன்.


நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்பனையாகும் வண்ணம் ஆதரவாளர்கள் அமைந்தது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியின் வளர்ச்சியை மேலும் உலகிற்கு பறைசாற்றுகின்றது.

மெல்பேர்ணில் இரண்டாவது நிலையக்கலையகம் வானொலிகளுடன் உறவுப்பாலம்ரூபவ் தாயக மக்களுடன் நேரடித் தொடர்பாடல் இணையத்தளத்தின் ஊடாக இந்தியா இலங்கை கனடா  நோர்வே போன்ற நாடுகளில் இருந்தும் நேயர்களின் நேரடிப் பங்களிப்பு  சர்வதேச ரீதியில் செய்திக் சேகரிப்புகள் மற்றும் வானொலிகளின் இணைப்புகள் என்று வெற்றி நடைபோடும் ATBC வானொலியின் மற்றுமோர் வெற்றிகரமான ஒன்றுகூடல் நிகழ்வுபற்றி என் பார்வையின் கண்ணோட்டமிது.